வியாழன், 7 மார்ச், 2024

உத்ராபதி விசுவராயர்





உத்ராபதி விசுவராயர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் அமைந்த அம்மாபேட்டை கிராமத்தில் கள்ளர் மரபில் 07-09-1909 இல் பிறந்தார். இவர் எழுத்தறிவு பெற்றவர், 1930 இல் உப்புச் சத்தியாகிரகம் இயக்கத்தில் சேர்ந்தார், அதே ஆண்டு வெளிநாட்டு துணி புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல் மற்றும் 1941 இல் தனிநபர் சத்தியாகிரகம் ஆகியவற்றில் பங்கேற்றார். இதில் கைது செய்யப்பட்டு ஆங்கிலேய அரசால் தண்டனை விதிக்கப்பட்டு 1933, 1941 மற்றும் 1942 இல் சிறைவாசம் அனுபவித்தார். நான்கு ஆண்டுகள் திருச்சிராப்பள்ளி, பெல்லாரி சிறைகளில் வைக்கப்பட்டார். 24 ஆண்டுகள் பாபநாசம் தாலுகா காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருந்தார். 09-2-1956 இல் இறந்தார்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்