"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
சனி, 3 மார்ச், 2007
வாண்டையார் கோவில் என்று அழைக்கப்பட்ட மலேசியா இராஜமாரியம்மன் கோவில்
கவரப்பட்டு வள்ளல் அய்யா ஶ்ரீ மான் மாரியப்ப வாண்டையார்.
தமிழரின் 169 நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் வாண்டையார்
டி. என். அனந்தநாயகி வாண்டையார்
பாபநாசத்தில் பள்ளிக்கல்வியும் இராணி மேரி கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உயர்கல்வியும் கற்றார். இவர் 1946 ம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராகவும் இரு முறை சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் இருந்தவர்.
ஒரு சிறந்த அரசியல்வாதி, சமூக சேவகர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மூன்றுமுறை - 1957, 1962 மற்றும் 1971ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ்தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் அருந்தொண்டுகள் ஆற்றியவர். உற்றார்,உறவினர் மற்றும் சுற்றத்தினர் அனைவருக்கும் பாகுபாடின்றி உதவிகள் பல செய்தவர். பண்புடன் பழகும் பண்பினை பெற்றவர். அழகு தமிழ் மேடைப் பேசுகளில் காங்கிரஸ் அவைகளை அலங்கரித பெருமை கொண்டவர். சட்டப்படிப்பு முடியும் முன்பே சென்னை மாநகராட்சியில் உறுப்பினராகி காங்கிரஸ் கட்சியை வலுப்பெற செய்த பெருமைமிக்கவர். மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினாராகி மக்களுக்கு அரும் பணியாற்றி மகிழ்வுற்றவர்.
1970-களில் அவர் முதல்வராக இருந்த போது சட்டப்பேரவையில் ஒரு விவாதம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் மசோதாவை ஆதரித்து கருணாநிதி பேசிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்க் கட்சி வரிசையில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர் டி.என்.அனந்தநாயகி, ‘‘எதற்காக இந்த சட்டம்? எங்கள் ஊரில் உள்ள பிடாரி கோயிலில் தாழ்த்தப்பட்டவர்தான் பூசாரியாக இருக்கிறார். எனவே, இந்த சட்டம் தேவையில்லை’’ என்றார்.
அதற்கு, மசோதாவின் நோக்கத்தை விளக்கிய கருணாநிதி, ‘‘தாழ்த்தப்பட்டவர் கள் அர்ச்சகராக இருப்பதை பிடாரிகள்கூட ஏற்கிறார்கள். சில அடங்காப் பிடாரிகள் ஏற்க மறுக்கிறார்கள்’’ என்று கூற, அவையே சிரிப்பில் ஆழ்ந்தது.
விடாமல் அடுத்த கேள்வி தொடுத்தார் அனந்தநாயகி. ‘‘சாமி நம்பிக்கை இல்லாத முதல்வர் கருணாநிதிக்கு, கோயிலைப் பற்றி என்ன கவலை?’’ என்றார். அசராத கருணாநிதி, ‘‘கொலை செய்தவர்கள் மட்டுமா நீதிமன்றம் போகிறார்கள். வழக்கில் வாதாடும் வக்கீல்களும், நீதிபதிகளும் கூடத் தான் நீதிமன்றம் போகிறார்கள்’’ என்றார். கேள்வி கேட்ட அனந்தநாயகி உட்பட சபையே அவரது சாதுர்யத்தை ரசித்தது
தேசிய பாரம்பரியத்தின் உணர்வோடு தேசிய இயக்கத்தை வளர்ந்த அம்மையாரால் சாதிய உணர்வுகளையும் அதன் உட்பூசல்களையும் சகிக்க முடியாமல் அப்பதவியை உதறினார். நாடும் சமுதாயமும் தான் வளர்த்த காங்கிரஸ் இயக்கமும் நலிந்து வருவதை கண்டு கவலையுற்று தானும் நலிந்து இறுதிக்காலத்தை தன் இல்லத்துக்குள்ளேயே முடித்துக்கொண்டார். தான் சார்ந்த இயக்கத்துக்கும் நாட்டுக்காகவும் உழைத்தாரே தவிர அந்த இயக்கத்தால் எந்த ஒரு பயனும் அடையாத புடம் போட்ட தியாகியாகவே வாழ்ந்து மறைந்தார்.
எதிரிகளுக்கும் உதவி செய்து சர்வகட்சித்தோழர் என்று புகழப்பட்டவர். ஒன்றியப்பெருந் தலைவர், மாவட்டச்செயலாளர், அமைச்சர் என் எந்த நிலையிலும் பிறந்த சமுதாயத்தை மறவாத இனப்பற்றாளர். கலைஞர் கருனாநியின் சட்டமன்ற நுழைவுக்கு 1957ல் குளித்தலை தொகுதியை வாயிலாக்கிய நாள் முதல் இறுதிமூச்சுவரை பிறருக்கு உதவி செய்தே புரவலர் எனப் போற்றப்பட்டவர்.
மொழி,நாடு, இயக்கம், இனம் என்ற பந்தங்களுக்கு குந்தகம் வராமல் பார்புகழ் மங்கையாக, தேசியவாதியாக இறுதிவரை வாழ்ந்து மறைந்த நம் குல செல்வியை எண்ணி நாம் பெருமையும் பாடங்களும் கற்றுக்கொள்ள வேண்டும். அறிவிற் சிறந்தோர், ஆற்றல்மிகு பெரியோராகிய அனந்தநாயகி என்னும் அற்புத மங்கையின் புகழ் விண்ணும் மண்ணும் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.
திங்கள், 1 ஜனவரி, 2007
முலக்கரம் / முலைவரி / Breast Tax / தோள் சீலைப் போராட்டம்
முலைவரி காட்டியதாக குறிப்படப்படும் சாதிகள் நாடார் , ஈழவர், காவேரி நாவிதர், பறையர், புலையர், சாம்பவர், வள்ளுவர், சேரமர்.
ஆனால் அகிலத்திரட்டு என்பது நாடார்களால் நாடார் களுக்கு எழுதப்பட்டவை. அதில் மறவர், இடையர், வாணியர், அருந்ததியர், பரதவர், துலுக்கர், கம்மாளர் எல்லாரும் தோள் சீலை போராட்டம் நடத்தியதாகவும், திருவிதாங்கூர் அரசர்கள் இவர்களை தாழ்த்தப்பட்ட மக்களாக நடத்தினர்கள் என்றும் ஆதாரமற்ற கற்பனையாக எழுதியுள்ளனர்.
‘முலக்கரம்.' இது பெண்களின் மீது விதிக்கப் பட்ட வரி. அன்றைய திருவிதாங்கூர் சமஸ் தானத்தின் (இன்றைய கேரளப் பகுதி) மன்னர் தான் வரியை விதித்தான். 1800-ம் ஆண்டுகளில் ஆடை, அணிகலன்கள் செல்வச்செழிப்பின் அடையாளமாகவும் உயர் சாதிக்காரர்கள் என்று தங்களை அழைத் துக்கொண்டவர்களுக்கே உரித்தானவை யாகவும் இருந்தன. வறுமையில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அவற்றை அணிய அனுமதி இல்லை. தாழ்ந்த சாதியினர் என்று சொல்லி பிறரால் ஒடுக்கப்பட்ட மக்களான சாணார் மற்றும் ஈழவ சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் உயர்சாதிக்காரர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள் முன்னிலையில் தங்கள் மார்பை மறைக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை.
திருவிதாங்கூரின் ‘பூர்வீக வாழ்க்கை’ என்ற நூலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப் பட்ட இதுபோன்ற இன்னல்கள் குறித்து விரிவாகவே எழுதியுள்ளார் எழுத் தாளர் சாமுவேல். அந்த மக்களின் மீது 110 விதமான வரிகள் விதிக்கப் பட்டிருந்தன என்றால்... அது எத்தகைய கொடுமை. வறுமையிலும் பசி, பட்டினியிலும் வாழ்ந்து கொண்டிருந்த அம்மக்களின் வாழ்க்தைத் தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, வரிகளை விதித்து கொடுங்கோன்மையை அரங்கேற்றி யிருக்கிறார் அந்த மன்னர். ஆடை களை அணியத் தடைவிதிக்கும் அளவுக்கு மதிகெட்டுப் போனவரை மன்னர் என்று சொல்வதற்கே மனது வரவில்லை.
சாமுவேல் எழுதியிருக்கும் புத்தகத் தில் மேலாடை ஏதுமின்றி, திறந்த மார்பகங்களோடு நின்றிருக்கும் அச்சமூக மக்களின் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அரசாங்கத்தின் ஆணையை மீறி ஆடை அணிந்த பெண்களுக்குத் தான் `முலக்கரம்' எனும் முலைவரி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரியை விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள், சம்பந்தப் பட்ட பெண்ணின் மார்பைத் தொட்டு அளவிட்டு, அதற்கேற்ப வரி விதிக்கும் கொடுமைகளும் அரங்கேறி யிருக்கின்றன.
தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லி ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமல்ல, உயர்சாதி என்று அழைக்கப்படும் நாயர் சாதியைச் சேர்ந்த பெண்களையும்கூட இத்தகைய கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள் அக்காலத்தில். அதாவது, பிராமணர்கள் முன்பாக நாயர் சாதி பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது என்கிற கட்டுப்பாடு இருந்திருக்கிறது. மற்ற சமயங்களில் சல்லாத் துணி போன்ற முண்டுடுத்தி மார்பை மறைத்திருக்கிறார்கள், நாயர் இனப் பெண்கள். இவர்கள், வரி கட்டத் தேவையில்லை என்பது மட்டுமே, இவர்களுடைய `உயர்சாதி’க்காக வழங்கப்பட்ட சலுகை.
கேரளாவின் மத்தியப் பகுதியில் உள்ள சேர்தலாவில், இன்றும் பாடப் பட்டு வருகிறது ஒரு நாட்டுப் பாடல். அந்தப் பாடலின் நாயகி... நங்கேலி.
மார்பில் துணிகொண்டு மூடுவதற்குத் தடை விதிக்கப்பட் டிருந்ததை ஏற்க மறுத்தார் நங்கேலி. உயர்சாதிக்காரர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட கொடூரர்களின் கண்களுக்கு, தன்னுடைய மார்பைக் காட்ட முடியாது என்று கொந்தளித்த நங்கேலி, ஆடைகொண்டு மறைத்தார். இந்த விஷயம், வரிவிதிக்கும் பர்வதியர் என்ற அரசு ஊழியனின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, சட்டத்துக்கு எதிராக நடப்பது சரியல்ல என்று நங்கேலியை எச்சரித் தான். அதையும் மீறி, மார்பை மறைத்துச்சென்றார் நங்கேலி.
வரி விதிப்பவரும், வரி வசூலிப்பவரும் நங்கேலியின் வீட்டுக்கே சென்று, முலை வரியைத் தீர்மானிப்பதற்காக, `உன் மார்பைத் திறந்துகாட்டு’ என்று நங்கேலிக்கு உத்தர விட்டார்கள். சட்டென்று வீட்டுக்குள் சென்ற நங்கேலி, ஒரு வாழையிலையைக் கொண்டு வந்து அவர்கள் முன் தரையில் விரித்து, விளக்கும் ஏற்றினார். கத்தியோடு வந்த நங்கேலி, சட்டென்று தன்னுடைய முலைகளை அறுத்து ரத்தம் சொட்டச்சொட்ட வாழை இலையில் வைத்தார். சற்றுநேரத்தில் அவருடைய உயிர் பறிபோனது. முலைக்கு வரி கட்டுவதைவிட, உயிர் துறப்பேன் என்று செயலால் உணர்த்தினார். அதிர்ந்துபோன அரசு ஊழியர்கள், பயந்தோடி பதுங்கினர்.
கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste
ஆங்கிலேயர்கள், கள்ளர்களை சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- கள்ளர் நாடுகள் (32)
- தொண்டைமான் மன்னர்கள் (20)
- தொண்டைமான் (14)
- பல்லவராயர் (10)
- மழவராயர் (8)
- சோழர் (3)
- கள்ளர் (1)
- பல்லவர்கள் (1)
என்னைப் பற்றி
- கள்ளர் குல வரலாறு
- Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)
வலைப்பதிவு காப்பகம்
-
▼
2025
(21)
-
▼
டிசம்பர்
(10)
- கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who ...
- கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்
- பல்லவராயர் வரலாறு - பல்லவராய மன்னர்கள் - பல்லவராயன்
- தேவர் மரபினர் (அ) தேவர் சாதி (அ) கள்ளர் மரபு (அ) ...
- வாண்டையார் வரலாறு
- வளரி ஆயுதம் : வளரி வரலாறு / Valari History In Tamil
- அம்பலகாரர் / அம்பலம் வரலாறு
- வரலாற்று பக்கங்கள் - I
- மறவர் மற்றும் கள்ளர்
- தொண்டைமான் சிலை
-
▼
டிசம்பர்
(10)
-
►
2024
(25)
- ► செப்டம்பர் (2)
-
►
2020
(156)
- ► செப்டம்பர் (2)
-
►
2019
(175)
- ► செப்டம்பர் (29)
-
►
2018
(148)
- ► செப்டம்பர் (7)








































































