"பஞ்சவ மாராயன்......கொங்காள்வான்" எனபது கல்வெட்டில் வரும் தொடர். அரசன் பெறும் விருது. மாராயம் பெற்றவன் நெடுமொழி கூறுவான். சங்ககாலத்தில் அரசன் போரில் சிறந்து விளங்கிய வீரனை ‘மாராயம்’ என்னும் விருது வழங்கிப் பாராட்டுவது வழக்கம். இப்படி மாராயம் பட்டம் பெற்றவன் அரசனின் பெருமையை எடுத்துப் பேசுவதோடு மட்டுமன்றித் தன் பெருமையையும் எடுத்து கூறுவது வழக்கம். இதற்கு நெடுமொழி கூறல் என்று பெயர். வஞ்சிப் போரில் வெற்றியைத் தேடித்தந்த வீரனுக்கு மாராயம் பட்டம் வழங்கப்பட்டதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மாராயம் பெற்றவன் மாராயன். மாராயன் விருதை மன்னவன் தகைமை இல்லாத ஒருவனுக்கு வழங்காமல் இருப்பது நன்று என அறநூல் கூறுகிறது.
பண்டைய தமிழர் வரலாற்றில் தொழில், கலை, வீரம் முதலானவற்றில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டதைக் காணமுடிகிறது. இந்த விருதுகள் அரசவையில் வழங்கிப் போற்றப்பட்டன.
சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன. இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது.
முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது.
1) பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே சூடிக்கொண்ட பட்டங்கள். இராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.
2) பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம் உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள். கடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.
3) பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள். காலிங்கராயன், சேதிராயன், மழவராயன், நாடாள்வான் போன்றவை.
இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலே இன்னோர் பெயர்களிற் சிற்சில காணப்படுகின்றன. அவை:- கச்சியராயன், காடவராயன், காடுவெட்டி, காலிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான் , நந்தியராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன் முதலியன.
இவ்வாறே , வேறு சில பட்டங்களும் கல்வெட்டுகளில் உள்ளன. அவை:-
அனகராயன், களப்பாளராயன், குருகுலராயன், சம்புவராயன், தமிழதரையன், பங்களராயன், மன்றாடி, மீனவராயன், மூவராயர்கண்டன், மூவேந்தரையன், வங்கத்தரையன், வாளுவராயன், விலாடத்தரையன், விளுப்பாதராயன் முதலியன.
கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.
4) பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம் சார்பற்ற) வழங்கிய பட்டங்கள். கற்றளிப்பிச்சன், தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.
தஞ்சை வாழ் கள்ளர்கள் பல்வேறு வம்சங்களை தங்களுள் கொண்டுள்ளனர். இத்தகைய வம்சங்கள் பல்வேறு பட்டங்களால் அழைக்கப்படுகின்றது "
தஞ்சை கள்ளர்களின் பிரபலமான பட்டங்களில் சில :-
தஞ்சிராயர்
வன்னியர்
சேர்வைக்காரர்
மேனாட்டரையர்
சிறுநாட்டரையர்
சோழகர்
சோழங்கதேவர்
காலிங்கராயர்
வாண்டையார்
தென்கொண்டார்
அண்ணவிசாரர்
தொண்டைமான்
இராசாளியார்
பொன்னப்பூண்டார்
மழவராயர்
காடவராயர்
களாக்குடையார்
பல்லவராயர்
மாதுராயர்
பன்னிக்கொண்டார்"
சோழ தேச கள்ளர்கள் பல்வேறு வம்சங்களாக தங்களது பட்டங்களை சுமந்து பழங்கால பெருமைகளுக்கு சான்றாக வாழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு பட்டமுடையவர்கள் திருமண முறையில் இணைவதை காலங்காலமாக பின்பற்றி வருகின்றனர்.
கள்ளர்கள் பல்வேறு பட்டப்பெயர்களை சுமந்து வாழ்ந்து வருவதை 150 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களே தங்களது ஆவணங்களில் பதிவு செய்திருப்பது மிகச்சிறப்பிற்குரியது......
A manual of the district of tanjore in the madras presidency/ k venkasamy row / 1883
17) ஆழியான்
கல்வெட்டில் பட்டங்கள் கள்ளன் என்பதற்கு - கல்லன் என்று எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில் குறில் நெடில் என்று மாற்றி எழுதப்படும். அதைபோல் ‘ள’ கரம் ‘ல’ கரமாவது உண்டு . கல்லன் என்பதற்கு அகராதி தரும் விளக்கங்கள் தீயவன் என்று மட்டுமே. தீயவன் என்பது கல்வெட்டில் பொருந்தாது. ற-ர, ந-ண, ல-ள தவறுதலாக ஒன்றிற்க்கு ஒன்றை மாற்றி இலக்கண பிழையோடு எழுதியே வந்துள்ளனர். அதற்க்கான ஆதாரம் கீழே உள்ளன.
2) கடம்பராயன் கல்லன்
3) காங்கேயன் கல்லன்
4) மாகதராயன் கல்லன்
குருவித்துறைக் கோவில் கல்வெட்டு
சான்றோர்களின் பெயரில் நில அளவுமுறைகளை வைப்பது அக்கால நடைமுறை. இந்த காலத்தில் ஒருவரது பெயரில் நாணயம், ஸ்டாம்ப் போன்றவை வெளியிடுவது போல. இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக புதுக்கோட்டையில் பல்லவராயர்கள் பெயரில், பல்லவராயர் படி எனும் அளவுமுறை கிபி 16-18 ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்துள்ளது.
கிழக்கிடையான் என்பது கள்ளர் பட்டமாகும். கிழக்கடையான் எனும் பட்டமானது இன்று திரிந்து கிளக்கடையார், கிளாக்குடையார் என கள்ளர் இன மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற நடிகை மனோரமா கிளாக்குடையார் வம்சத்தில் உதித்தவர். இப்பட்டமுடையவர்கள் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் வடக்குக்கோட்டை எனும் பகுதியிலும், பாபநாசம் வட்டத்தில் புலவர் நத்தம் எனும் பகுதியிலும் வாழ்கின்றனர்.
நாயக்கர் பாளையம் சாவடி நாயக்கர்கள், நாயக்க மற்றும் மரட்டிய மன்னர்களுக்கு போர் உதவி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பல சாதிகள் வரலாற்றில் உயர்வான பட்டங்களை, அதாவது வன்னியன், உடையான், முதலியான், முத்தரையன், என்ற பட்டங்களை தங்கள் சாதி பெயராக மாற்றிக்கொண்டார்கள். பள்ளி சாதியினர் வன்னியன் என்றும், வலையர், முத்துராஜா போன்ற 29 பிரிவுகள் முத்தரையன் என்றும் , இந்த நூற்றாண்டில் தங்கள் சாதி பெயராக மாற்றிக்கொண்டார்கள்.
முக்குலோத்தோரை தேவர் என்ற ஒற்றை சாதியாக தமிழக அரசு மற்றம் செய்ய தஞ்சை கள்ளர்கள் மற்றும் சிவகங்கை அகமுடையார் எதிர்ப்பு தெரிவித்ததால் மாற்றவில்லை.
அம்பர் என்பது மிகவும் பழமையான சொல். அம்பர்த்தேவன் என்ற பட்டம் எதன் அடிப்படையில் கள்ளர்களுக்கு வந்தது என்று அறிய முடியவில்லை. ஆனால் இலக்கியங்களின் வரும் மிகவும் பழமையான சொல்லாகும்.
அம்பர் கிழான் அருவந்தை என்பவன் மிகவும் புகழ்பெற்றவன்.
"காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்”-சிலம்பு-1-5,6
திருச்சியில் இன்றும் காவிரியார், காவிரிநாடான் பட்டம் உள்ளவர்கள் உள்ளனர்.
பசும் (பொன்) + படி (உலகம்) + உடையார் = பசும்படியுடையார் (அ) பசும்படியார்.
திருக்குறளில் "படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும்" என்பதன் விளக்கமாக நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்
பசும்படியார் இன்றும் சோழமண்டலத்தில் சிறப்புடன் வாழ்கின்றனர். தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முதல்வர் அன்பு பசும்படியார் ஆவார். இவரது தலைமையில் தமிழக அரசின் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்த தங்கம் கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்து தரம் அறியும் முறை, அழிக்காமல் தரம் அறியும் முறை, உரைகல் முறையில் தங்கத்தின் தரம் கண்டறியும் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.
மிக பழமையான தமிழ் சொல்
மிக பழமையான தமிழ் சொல்
புறப்பொருள் வெண்பா மாலை, மூவேந்தருக்குரிய அடையாளப் பூக்கள் சூடுதலைப் பற்றிக் கூறுகிறது. அதில் "அலங்கல் அமர்அழுவத் தார் " காவிரி நாடனான சோழன் ஆத்திமாலை சூடுவான்.
ஆர் என்பது ஆத்திப்பூவைக் குறிக்கும். சோழனுக்குரிய அடையாளப் பூ ஆத்தி. இதனைப் போர்க்காலத்தில் சூடுதல்.
சுற்றியார் : சூடிக் கொள்வது
குடர் நெடுமாலை சுற்றி - குடல்களாகிய நெடிய மாலையைச் சுற்றி
சோழனின் போர்மறவர்கள் ஆர் (ஆத்திப்பூவை) சுற்றி ( சூடி) போர்க்களத்திற்கு போவார்கள். அந்த போர்மரபினரின் வழிவந்தவர்கள் ஆர்சுத்தியார்கள்.
அரசு: வாணாதிராயர், ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
இரண்டாவது கல்வெட்டில் குன்னாண்டார் கோவிலில் பொரிக்கப்பட்ட வாசகப்படி சோழவளநாட்டு வடகோனாட்டு பெரம்பூர் அரசு அடைக்கலங்காத்தவனான நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.
கள்ளர் பட்டங்களுளொன்று.
அச்சுதப்பண்டாரம் : அரிசி கருவூல தலைவர்
அச்சுதம் - அரிசி
பண்டாரம் - கருவூலம்
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| அச்சுதம் | கெடுதலின்மை ; அழிவற்றது ; அறுகும் அரிசியும் கூட்டி அணிவது ; அட்சதை . |
சியாம் சுந்தர் சம்பட்டியார்,
சிவம் சோழங்கராயர்,
பரத் கூழாக்கியார்
நன்றி : உயர்திரு. ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.



































_0171.jpg)























.jpg)
.jpg)





.jpg)

%20-%20Copy%20-%20Copy.png)








