வெள்ளி, 14 ஜூலை, 2023

ஆம்பலாப்பட்டு ஆறுமுகம்

ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மாதுரார்

1943ல் ஆம்பலாப்பட்டில் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டது. புண்ணியம் கதிரேசன் (மாதுரார்)  தலைமையில் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞரான ஆறுமுகம் (மாதுரார்) தன்னையும் இணைத்துக்கொண்டு செயல்ப்பட்டார். ஆம்பலாப்பட்டு மதுக்கூர் ஜமீனுக்கு உட்பட்ட கிராமமாகும். 

ஆம்பலாப்பட்டு முதல் வெண்குழி வரையிலான மதுக்கூர் ஜமீன்தாருக்கு சொந்தமான 12 கிராமங்களில் நிலவிய நிலவுடைமைக் கொடுமைகளை எதிர்த்து ஆறுமுகம் போராடினார். விவசாயி களை மிரட்ட பயன்படுத்தப்பட்ட ஜமீனின் பிரம்சேரி நோட்டுகளை தீவைத்துக் கொளுத்தும் போராட்டத்தில் முன்னணியாக இருந்தவர் ஆறுமுகம்.

தியாக சீலர் தோழர் எஸ்.ஏ.முருகையன் மாதுரார் அவர்கள் கே ஜீவபாரதி அவர்களின்  நேர்காணலில்: 

பட்டுக்கோட்டை தாலுகா தாழ்த்தப்பட்டோர் லீகின் செயலாளராக 1947 ஆம் ஆண்டில் பொறுப்பு வகித்த ஆம்பலாப் பட்டு தோழர் பி. கோவிந்தசாமியைக் கொண்டு, அந்த அமைப்பின் மாநாட்டை ஆம்பலாப்பட்டு குடிக்காட்டில் நடத்த முடிவு செய்தது. இந்த மாநாட்டில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆறுமுகம், சி.கதிரேசன், ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன். இதை விரும்பாதவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியை வெறுப்பவர் களும், சாதிப்பித்துக் கொண்டவர் களும் ஒன்றிணைந்து தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்ட எங்களை ஊர்க் கட்டுப்பாடு என்ற போர்வையில் ஒதுக்கி வைக்க முயன் றனர். நம் கட்சிக்கும், விவசாய சங்கத் திற்கும் அன்று இருந்த செல்வாக்கால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

செம்பாளூர் நிலச்சு வான்தாரும், காங்கிரஸ் கட்சிக்காரரு மான சாம்பசிவ ஐயர் கம்யூனிஸ்டு களைக் காட்டிக் கொடுக்க முயன்றார். தோழர்கள் இரணியன், ஆறுமுகம், ரகுநாத வன்னியர் ஆகியோருடன் இணைந்து சாம்பசிவ ஐயரின் முயற் சியை முறியடிக்க நினைத்தோம். 

தோழர்கள் இரணியன், ஆறுமுகம், வெ.அ.சுப்பையன், டி.காசிநாதன் ஆகியோருடன் நானும் தலைமறைவானேன். இராணியன், ஆறுமுகம், மணலி கந்தசாமி ஆகியோருடன் நானும் ஆம்பலாப்பட்டில்தான் தலை மறைவாக இருப்பதாக நினைத்து எங்களை உயிருடனோ பிணமாகவோ பிடிக்கப் போலீசார் முயன்றனர். இதைச் செய்பவர்களுக்கு ரூபாய் 500 பரிசளிப்பதாகவும் அறிவித்தனர். தோழர்கள் வெ.அ.சுப்பையன் டி. காசி நாதன் ஆகியோர் வீட்டையும், என் வீட்டையும் போலீசார் தாக்கி இடித்துத் தள்ளினர்.

.


தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் (கம்யூனிஸ்ட்) டாக்டர் வே.துரைமாணிக்கம் அவர்கள் ச.சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் 'ஆம்பல் ஆறுமுகம்' என்ற புத்தகத்திற்கு கீழ்வருவன போல் வாழ்த்துரை வழங்கியுள்ளார்

'கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் ஏ.கே.கோபாலன்,மணலி கந்தசாமி, பி.இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தலைமறைவாக உள்ளனர்.அவர்களை காட்டிகொடுக்க செம்பாளூரை சார்ந்த மிராஸ்தார் ஒருவர் முயற்சி எடுத்தார். அவரின் முயற்சியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை கடுமையான வழக்காக மாற்றப்பட்டது .அதுதான் செம்பாளுர் வழக்கு.அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆம்பலாப்பட்ட சேர்ந்த வெ.அ.சுப்பையன், எஸ்.ஏ.முருகையன், டி.காசிநாதன், வாட்டாகுடி இரணியன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர். தேடுதல் வேட்டையில் இரணியனும், ஆறுமுகமும் வடசேரி என்ற ஊரில்காவல் துறையினரிடம் சம்பந்தம் என்கின்ற சதிகாரன் காட்டிகொடுத்ததால் அகப்பட்டுகொண்டார்கள். 05.05.1950 அன்று அதிகாலை சவுக்கு தோப்பில் மரத்தில் கட்டி வைத்து இரணியனை சுட்டு வீழ்த்தினார்கள். ஆறுமுகத்தை பார்த்து, மணலி கந்தசாமி இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு ஒடித் தப்பிதுகொள். உன் மீது வழக்கு இல்லை என்று ஏமாற்றுகிறார்கள். காக்கி சட்டைகாரர்களின் வஞ்சக எண்ணத்தை புரிந்து கொண்ட ஆறுமுகம், என்னை ஒடச்சொல்லி முதுகில் சுடப்பார்கிறாயா? ஓடினான் சுட்டேன் என்று கதை கட்டிவிட பார்க்கிறாயா? என் தலைவனை காட்டிக் கொடுக்கவும் மாட்டேன், முதுகு காட்டி ஓடவு மாட்டேன்.முதுகில் சூடுபட்டு சாக நான் கோழையல்ல.எனது கட்சிக்கும்,லட்சியத்திற்க்கும் நான் ஏற்றிருக்கும் மார்க்சிய,லெலினிய தத்துவத்திற்கும் இழக்கு ஏற்பட எள் முனையளவும் இடம் தரமாட்டேன்.கூலிப் பட்டாளமே எனது நெஞ்சில் சுடு என்று நெஞ்சை நிமிர்த்து காட்டினார்.துப்பாக்கி குண்டுகள்

நெஞ்சை துலைத்தன. திருமணமாகாத 22 வயதே நிரம்பிய அந்த புறட்சியாளன்,புரட்சி ஓங்குக! என்ற முழக்கத்துடன் பிணமானார்.அவரது உயிர் பிரிக்கபட்டது.அவரது உடல் அழிக்கபட்டது.அவரது லட்சியம் அழியவில்லை

வடசேரி கிராம சவுக்குத் தோப்பில் இரணியனும், ஆறுமுகமும் சந்தித்து விவாதித்தபோது துரோகியால் காட்டிக் கொடுக் கப்பட்டு ஆறுமுகமும், இரணியனும் போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட சிவராமன், இரணியன், ஆறுமுகம் ஆகியோரின் உடல் களை அவர்களது உறவினர்களிடம் ஒப்ப டைக்க மறுத்து 1950ம் ஆண்டு மே 5ம் தேதி பட்டுக்கோட்டை ரயில்வே கேட் அருகிலுள்ள மைதானத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர். அந்த தியாகிகள் விதைக்கப் பட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால்அவர்களது தியாகம் இன்றும் ஜொலிக்கிறது. செங்கொடி இயக்கத்தின் மகத்தான தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்