திங்கள், 10 ஜூலை, 2023

பட்டுராசு களப்பாடியார்



அப்போதெல்லாம் ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் கீழத்தஞ்சை அறிவது இரண்டே சாதிகள்தான். சடங்காகக் காலையில் குளிக்கும் ஆண்டைகள். சேற்றிலிருந்து கரையேறி, உடம்பில் படிந்திருக்கும் சேடையைக் கழுவிக்கொள்ள அந்தியில் குளிக்கும் பண்ணையாட்கள்.

ஆண்டையை மிராசுதார் என்பார்கள். அவருக்குச் சில கிராமங்களே சொந்தமாக இருக்கலாம். அவர் குடும்பம் இருக்கும் கிராமம் உள்கிராமம். கிராமத்தில் இருக்கும் மற்றவர்கள் குடிபடைகள். வெண்ணாறு பகுதியில் மன்னார்குடிக்குக் கிழக்கே ஒரு மிராசுதாரருக்கு உள்கிராமம் மட்டும் மூவாயிரம் ஏக்கர் என்பார்கள். ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பாசனமுள்ள கோரையாறு எட்டே குடும்பத்துக்கு இருந்ததாகச் சொல்வ துண்டு. மூன்று ஏக்கரானாலும், மூவாயிரம் ஏக்கரானாலும் அவர் மிராசுதாரர்தான். மன்னனாகவே இருந்தாலும் தஞ்சையை ஆண்டவர்களை ராஜா மிராசுதார் என்று சொல்வதுண்டு.

அந்தக் கால மொழியில் சொல்வதானால், கீழத்தஞ்சை யின் வெண்ணாறு பகுதியில் முக்காலே மூணு வீசம் (பதினாறில் பதினைந்து) ஆட்கள் தாழ்த்தப்பட்டவர்கள். இந்த நிலைமையோடு பண்ணையாட்களாக இருந்ததும் சேர்ந்துகொண்டு அவர்களின் இன்னல் நமது அன்றைய சமுதாயத்தில் உச்சத்தை எட்டியது.


பண்ணையாட்களுக்கு நெல்லாகக் கூலி கிடைக்கும். நடவாட்கள் ஆண்டை வீட்டு மாட்டுக் கொட்டிலைப் பெருக்கிச் சாணி அள்ள வேண்டும். பண்ணைக்கு நடவு நட வேண்டும். நடுவது இடுப்பு ஒடியும் வேலை. நாள் முழுவதும் தண்ணீரிலும் சேற்றிலும் நிற்க வேண்டும். குனிந்த முதுகு சுட்டெரிக்கும் வெயிலில் கொப்பளித்துவிடும். பிறகு களையெடுக்க வேண்டும். வளர்ந்த பயிராக இருந்தால் குனியும்போது கண்ணைக் குத்தும்.

உடம்புக்கு வந்தால் மருத்துவம் கிடைக்காது. தவித்துத் தண்ணீர் கேட்டால் பிடித்துக் குடிக்கச் சொல்லிக் கையில் தண்ணீர் ஊற்றுவார்கள். அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றிக்கொண்டு ஆண்டை வீட்டுக் குழந்தைகளை நடவாளிடம் தருவார்கள். பிறந்த மேனிக்குக்குத் தீட்டு இல்லை; துணிக்குத்தான் தீட்டு என்பது சாதிய சமூகத்தின் நம்பிக்கை.

ஆட்கள் உட்கார்வதற்கு அங்கே நீளமாக மண்ணால் மேடை கட்டியிருக்கும். சுவரில் இருக்கும் சிறிய ஜன்னல் வழியாக டீ வாங்கிக்கொள்ளலாம். கடைக்கு உள்ளே ஆண்டைகள் உட்கார்வதற்கு மட்டும் விசுப்பலகையும் மேசையும் கிடக்கும். குளிக்கும் நேரம் போலவே, புழங்கும் பாண்டங்களும் வர்க்கத்தை அடையாளப் படுத்தியது. தண்ணீர் குடிக்க வாழை மட்டை, கணவன் மனைவி தகராறு என்றால் ஒருவர் சிறுநீரை மற்றவரை குடிக்க வைத்தல், இருவரையும் இரு தூண்களிலும் கட்டி வைத்து சவுக்கால் அடித்தல், பண்ணையார் நிலத்தில் நூற்றுக்கணக்கான தென்னம்பிள்ளை நடவேண்டும் என்றால் சேரியிலிருந்து ஒருவரை வரவழைத்து, அவர் எதிர்பார்க்காதபோது மூளை சிதறும் அளவிற்கு ஒரே அடியில் வீழ்த்தி குழியில் போட்டு தென்னம் பிள்ளை நடுதல், சாணிப்பால் கொடுத்தல், (சாணிப்பால் என்பது உடம்பை இளைத்து சுருக்கி, கொஞ்சம் கொஞ்சமாக உயிரை கொள்ளும் ஒன்றாகும்) தலைக்கு எண்ணை வைப்பதை அவர்கள் கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாது. கால்நடைகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர்.

பண்ணையாட்கள் ஆண்டைகளிடம் விசுவாசம் காட்டாமலில்லை. எப்போதாவது கோபம் வந்து விட்டால், பெயரோடு பட்டத்தையும் சேர்த்துக்கொண்டு, “இதெல்லாம் இந்த பிச்சை வாய்க்காரனிடம் பலிக்காது. எனக்கென்ன சுகந்தையா, சுதந்திரமா?” என்று குமுறிக் கொட்டிவிடுவதுண்டு. ‘சுதந்திரம்’ என்பது விடுதலையல்ல, அவர்களே நட்டு அறுவடை செய்துகொள்ளும்படி பண்ணை யாட்களிடம் விட்டுவைக்கும் நிலத்துக்குப் பெயர்தான் சுதந்திரம். தாங்களாகவே உரிமையோடு எடுத்துக்கொள்ளும் சில வரும்படிகளுக்கும் ‘சுதந்திரம்’ என்று பெயர். நாட்டின் விடுதலைப் போராட்டம் சுதந்திரத்தின் பொருளைச் சுருக்கிவிட்டது.

இங்கு ஆண்டைகளாக இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் கள்ளர்கள் என்றாலும் அனைவருமே கொடுமைக்காரர்கள் அல்ல. பண்ணையாட்களை கொடுமை செய்த சிங்கலாந்தி அய்யர், நல்லாவூர் பண்ணையார் மகாலிங்க அய்யர், விளாத்தூர் கிராமத்தில் நிலப்பிரபு சுப்பிரமணிய அய்யர் போன்றவர்கள் தான் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனர்.

இந்த பண்ணையாட்கள் உரிமைக்காக, நிலவிய கொடுமைகளுக்கு எதிராக போராடி தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை மீட்டு தந்தவர்கள் இங்கு ஆண்டைகளாக கோலாச்சிய, அதே கள்ளர் குடியில் பிறந்த எல்.இராமலிங்கம் , வெங்கடேச சோழகர், பட்டுராசு களப்பாடியார் போன்றவர்கள் தான்.

பட்டுராசு களப்பாடியார் இந்தப் பகுதி இளைஞர்களில் ஒரு பகுதியினரைப் போலவே அவரும் சிங்கப்பூர் செல்கிறார். வட்டக்குடி இரணியன் சிங்கப்பூரில் ரௌடிகள் அழித்தொழிப்பு நடவடிக்கையிலும் நேரடியாக ஈடுபடுகிறார். அவருக்குப் பட்டுராசு களப்பாடியார், துரைசாமி போன்ற தீரமிக்க இளைஞர்கள் உதவியாக இருக்கின்றார்கள்.

இரணியன் துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் பதவியை உதறிவிட்டு வந்த பிறகு, வீரசேனன் தலைவராகவும் பட்டுராசு களப்பாடியார் காரியதரிசியாகவும் இருந்தார்கள். ஆங்கிலேயே அரசாங்கத்தின் நெருக்குதல் தாங்க முடியவில்லையாம். ஒருநாள் அதிகாரிகள் மீது குண்டு வீசியிருக்கிறார்கள். துறைமுகத் தொழிற்சங்கத்தைத் தடை செய்துவிட்டார்களாம். வீரசேனனும் பட்டுராசுவும் தப்பித்து மலேசியாவுக்கு ஓடிவிட்டார்களாம். வீரசேனன் திரும்ப சிஙகப்பூர் வரும்போது, பிடித்து, ஆங்கிலேயே அரசாங்கம் சுட்டுக்கொன்றுவிட்டது. பட்டுராசு களப்பாடியார் மாறுவேடத்தில் தப்பி இந்தியாவந்துவிட்டார்.

தமிழகத்தில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அந்த காலகட்டத்தில் போராடிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுடன் இணைந்து போராடத் தொடங்குகிறார்.


பட்டுராசு களப்பாடியார் தனது கிராமமான நெம்மேலியில் பள்ளிக்கூடம் ஆரம்பித்து அதில் தன்னுடன் சிங்கப்பூரில் வேலை செய்த தாழ்த்தப்பட்ட ஆசிரியர்களைப் பணியமர்த்தினார். அனைத்து மாணவர்களையும் ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச்சென்று அதிர்வை ஏற்படுத்தினார்.

இவர் 70-களில் நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதிக்கு பொதுவுடைமை கட்சி சார்பாக போட்டியிட்டு தோற்றவர்.

தியாகி பென்சனுக்காக கேட்டபோது மக்களுக்காக போராடியதற்காக கூலி வாங்குவது தவறு என அதை மறுத்தவர். புகழைக்கூட கூலியாக பெற விரும்பாதவர்.

அவரை மதிக்கும் விதமாக மன்னார்குடி-யை அடுத்த கீழநெம்மேலி என்ற கிராமத்தில் பறையர் வாழும் பகுதிக்கு கே.பி நகர் என்று அவர்களே பெயர் வைத்துள்ளனர்.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்