ஏழூர் நகரத்தார், மோளையத் தேவன் வகையறாவிடம் மனையை வாங்கி, மடம் கட்டினார்கள். பிள்ளையார் கோயில் வகுப்பு முத்தப்பன் எனும் செட்டிப் பண்டாரம் . பாப்பாபட்டி நாட்டின் மூத்த பங்காளிதான் மோளையத்தேவன் கூட்டம்.
சிவப்பட்டி எனும் ஊரில் இருந்த முருக பக்தன். இவன் பழனிக்கு எடுக்கும் காவடியை வீட்டில் வைத்து வெள்ளிக்கிழமை தோறும் பூசித்து வந்தான். அவன் முருகனருள் பெற்று பலருக்கும் குறி சொல்லி அது பலித்துக் கொண்டிருந்தது,
இதை தொண்டைமான் ராஜா பழனிக்கு அருகில் வேட்டையாட வந்திருந்த நேரத்தில் கேள்விப்பட்டு, அவன் வீட்டிற்கு வந்து, "பழனியாண்டவரிடம் நான் நினைத்த காரியத்தை கேட்டுச் சொல்" - என்றார்.
அதற்கு அவன், ஆண்டவருடைய கிருபையால் இன்றைய தினம் இரண்டு மானும், ஒரு மிருகமும் கிடைக்குமா என்று கேட்க நினைத்திருக்கிறீர்கள். இன்று 15 நாழிகைக்குள் மூன்று மிருகங்கள் வரும். அதில் முதலிரண்டு மிருகமும் கிடைக்கும். அடுத்தது 2 மான்கள் வரும். அதில் ஒன்று குத்துப்பட்டு கிடைக்கும். மற்றொன்று குத்துப்படாமல் கிடைக்கும் என்று கூறினான்.
அதுபோலவே வேட்டையில் விலங்குகள் கிடைக்கவே ராஜா மகிழ்ச்சி கொண்டு, தனது பல்லாக்கை அனுப்பி முத்தப்பனை அரசவைக்கு வரவழைத்து அவனுக்கு சால்வை அணிவித்து, வளைதடி, குத்தீட்டி கொடுத்து, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவன் எனக்கு கோயில் வீட்டிற்கு தாமிர வேல் வேண்டும். அதை நேமங் கோயில் பழனியப்பன் வேலாயுதத்துடன் சேர்த்து வைத்து பூஜிக்கும் உத்தரவு வேண்டும் என்றான். உடனடியாக பழனியப்பனை வரவழைத்து அவனுக்கு மரியாதை அளித்து அந்த வேலை வாங்கி அதனுடன் முத்தப்பனுக்குத் தந்த வேலையும் கொடுத்து, அதைப் பழனி கோயிலில் பூஜிக்க வருஷம் 5 பணம் தந்ததை பழனி மடாலய தர்ம சாசனம் கூறுகிறது.
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.