செவ்வாய், 30 ஏப்ரல், 2019

முக்குலத்தோர்


கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சமூகத்தினரான இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் பொதுவாக ராஜகுலத்தினர் என்று பொருள்படும் சமசுகிருத சொல் “தேவர்” என்று அழைக்கபடுகிறார்கள். 

தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போர்க்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர், ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து, அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள்.

மூவேந்தர்களின் ஆட்சிக்குபின் அவர்களின் வழி வந்த முக்குலத்தோர்  சிற்றரசர்களாக இருந்தனர். இவர்களிடம் ஒற்றுமையின்மையால், விசயநகர ஆட்சிக்காலத்தில் பாளையக்காரர்களா  மாற்றப்பட்டனர். பின்பும் ஒற்றுமையின்மையால் ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் ஜமீன்களாக ஒடுக்கப்பட்டனர். இங்கே படையெடுத்து வந்த முகமதியர், விசயநகர மன்னர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், டச்சு, பிரஞ்சு மற்றும் ஆங்கிலேயருக்க எதிரான போர்களில் ஈடுபட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் 70% க்கு மேலாக ஆதாரங்கள் முக்குலத்தோருக்கே உள்ளது. 

மூவேந்தர்களுக்கு பிறகு இங்கு இருந்த தமிழ் மன்னர்களில் சேதுபதி மன்னரும், தொண்டைமான் மன்னரும், மருது பாண்டியர்களும் முக்கியமானவர்கள். 

கிழவன் சேதுபதி மன்னரே சிறந்து விளங்கியவர்.  

 ஸ்ரீ ராவ்பகதூர் சாமிநாத விஜயதேவர் வாரிசான ஸ்ரீ ராஜப்பா விஜயதேவர் 



முக்குலத்தோர் பற்றிய 18 ஆம் நூற்றாண்டு பாதரியாரின் குறிப்புகள்:-

பாதிரியார் பவுச்சே என்பவர் கிபி 18 ஆம் நூற்றாண்டில் கிழக்கு ராம்நாட்டில் இருந்து கிறிஸ்துவ மதம் பற்றிய பரப்புரைகளை செய்து வந்தவர். சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவர் காலம் முதல் மருதுபாண்டியர் காலம் வரை தான் நேரில் கண்ட நிகழ்வுகளை குறித்து வைத்திருந்தார். இவர் முக்குலத்தோராகிய கள்ளர், மறவர், அகமுடையாருக்குள் இருந்த தொடர்புகள் பற்றி பல தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அவற்றின் தொகுப்பை காணலாம்.( உள்ளது உள்ளபடியே)

' மறவர்களைப்போலவே அவர்களது மற்றொரு பிரிவினரான கள்ளர்களும் பாலை நிலப்பண்புகளை பெற்றிருந்தனர். இவர்கள் தங்களை கட்டுப்படுத்த நினைப்பவர்களை எதிர்க்க எப்போதும் தயங்கியது இல்லை"



" மறவர்களும் கள்ளர்களும் போர்க்குணம் கொண்டு காணப்பட்டனர். கள்ளர்களைப்போலவே அவர்களின் உறவினர்களான மறவர்களும் தங்களை தேவர் என அழைத்துக்கொண்டனர்." ( பாதிரியார் கள்ளர்களையும் மறவர்களையும் Cousins என குறிப்பிட்டுள்ளார், அதாவது தமிழில் ஒரு மூதாதையர் வழி வந்தவர்கள் என பொருள்படும் )


"அகம்படியர் அல்லது சேர்வைக்காரர்கள் மறவர் மன்னர்களிடத்தில் மிகவும் கௌவரமிக்க பொறுப்புகளை வகித்தவர்கள். சிறுவயல் அகம்படியர்கள் சிவகங்கை சமஸ்தான குடும்பத்தோடு மிக நெருங்கிய உறவு கொண்டவர்கள்"




"அகம்படியர்கள் வேறுபட்ட பல பட்டங்களை பயன்படுத்தி வந்தாலும், கள்ளர் மற்றும் மறவருடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு வலுவாகவே உள்ளது , இம்மூவரும் ஒரே வகுப்பினர் என்பதை உணர்ந்தே இருந்தனர்"




" தமிழ் சமூகத்தில் ஒரு வீட்டில் தலைவர் இறந்துவிட்டார், அவரது இறுதி சடங்குகளை அந்த வீட்டில் அவருக்கு அடுத்தப்படியான முக்கியத்துவம் கொண்ட மூத்த பிள்ளை செய்வது வழக்கம், இதே நடைமுறையில் செம்பி நாட்டு மறவர் மன்னர் இறந்துவிட்டால் அவருக்கு அடுத்தப்படியாக அனைத்து பொறுப்புகளையும் ஏற்று இறுதிச்சடங்கு முதலியவற்றில் மூத்த மகன் எனும் இடத்தில் இருந்து செய்வது அகம்படியர்களே. மறவர்களுக்கும் அகமுடையார்களுக்கும் தந்தை மகன் போன்ற நெருங்கிய உறவு நிலவுகிறது "

" இராமநாதபுரம் மறவர் மன்னர்களை தங்களது ஆதி மூதாதையர் என அகம்படியர்கள் கூறுகின்றனர், மறவர் மன்னர்களின் விசுவாசமிக்க தளபதிகளாக விளங்கிய அகம்படியர்கள் கல்வியில் சிறந்தும், சமஸ்தான கணக்கு வழக்குகளை கையாளும் திறமை பெற்றும் இருந்தனர்"

" மறவர் மன்னர்களின் மிகத்திறமை வாய்ந்த அமைச்சர்களான துரைசாமி தாண்டவராயப்பிள்ளை, வெள்ளையன் சேர்வை ஆகியோரும் அகம்படியர்கள் என குறிப்பிடத்தக்கது "



" ஒரே மூதாதையரில் இருந்து பிரிந்த கள்ளர் மறவர் அகமுடையார்கள் திருமண உறவுகளை கொண்டுள்ளனர், இன்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, இராம்நாடு சமஸ்தானங்கள் மண உறவில் இணைந்துள்ளதை அறிய முடிகிறது "



"செம்பி நாட்டு மறவர் தலைவர்கள் அகம்படிய பெண்ணை மணப்பது வழக்கமாக இருந்தது, இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை தாய் வழியை பின்பற்றி அகம்படியரில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும், மறவரில் திருமணம் செய்ய இயலாது. ஒரு வேளை பெண் பிள்ளை பிறந்தால் அந்த பெண் தந்தை வழியில் அதாவது மறவரில் திருமணம் செய்யலாம், ஆனால் அகம்படியரில் திருமணம் செய்ய இயலாது "




இவற்றின் மூலம் 18 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்திலேயே கள்ளர் மறவர் அகமுடையார்கள் ஒரே சமூகமாக நெருங்கிய உறவுடன் வாழந்து வந்ததை அறியமுடிகிறது. தமிழர்களை பிரித்து ஆள சூழ்ச்சி செய்ய வந்த வெள்ளையர்கள் ஏன் மூவரும் ஒரே வகுப்பினரான முக்குலத்தோர் என குறிப்பிட வேண்டும்? முக்குலத்தோர் அனைவரும் ஒரே மூதாதையரில் இருந்து பிரிந்தவர்களே என்பதை பாதர் பவுச்சேயின் குறிப்புகள் எளிமையாக நமக்கு உணர்த்துகிறது.


Marudhu pandiyan ( The fateful 18th century) Rev. Father baauche 


(pg 38-50)



சேதுபதி மன்னர் கூற்று:

இராமநாதபுரம் மன்னர் மாட்சிமைதங்கிய இராஜராஜேஸ்வர சேதுபதி அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது ஆண்டுவிழாவில் தலைமை உரை ஆற்றினார். அத்தலைமை உரையில் அவர் பேசியதாவது ”சோழர்களுக்கு முன், இப்போதுள்ள மறவர், கள்ளர் சாதியினரின் முன்னோர்கள், நாகர் என்ற பெயரில் இச்சோழநாட்டை ஆட்சி புரிந்தனர். அப்போது அவர்களின்(நாகர்களின்) தலைநகரமாக காவிப்பூம்பட்டிணம்,தஞ்சை, திருக்குடந்தை விளங்கின என்பதை சரித்திரங்கள் வாயிலாக அறிகிறோம்.”

ராஜாளியார் கூற்று:

மேன்மைபொருந்திய வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் அவர்கள், இந்திரகுலாதிபர் சங்கத்தின் நான்காவது ஆண்டுவிழாவில் தலைவர் உரை ஆற்றினார். அவ்வுரையில் அவர் பேசியதாவது ”இந்நாட்டை ஆண்ட அரசர் பெருமக்களுள் சோழரைக் கள்வர் என டாக்டர் பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஐயங்கார் கூற்று:

திருவாளர் ம.சீனிவாச அய்யங்கார் அவர்கள், சோழர் சாதியில் கள்ளரென்றும், பாண்டியர் சாதியில் மறவரென்றும் ஒரு சாரார் கொள்கை” என்றார். (செந்தமிழ் தொகுதி-2, பக்கம் 175)


வரலாற்று அறிஞர் எட்கர் தர்ஸ்டன், கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்று அழைக்கப்படுகிறார்கள்.




ஆங்கிலேயரில் இனவரைவியல் ஆய்வாளரான திரு.எட்கர்தர்ஸ்டன். , நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய மக்களின் சாதிகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து "தென்னிந்திய குலங்களும் குடிகளும்" என்ற நூலை பல தொகுப்புகளாக வெளியிட்டார். அவற்றில் கள்ளர் -மறவர் -அகமுடையார் பற்றியும் ஆய்வுக்குறிப்புகளை எழுதியுள்ளார்.

அகமுடையார் பற்றிய செய்திகள் 



"அகம்படியன் என்பதற்கு உள்ளே இருப்பவன் என்று பொருள். அவர்கள் அரசரின் அரண்மணைகளில் அல்லது கோயில்களில் வேலைபுரிவோர். தஞ்சாவூர் அகமுடையார் 'தெற்கத்தியார்" எனப்படுவர். அகமுடையானின் பட்டப்பெயர் சேர்வைக்காரர். "கள்ளர் -மறவர் -அகம்படியர்" என்னும் மூன்று வகுப்பினருக்கிடையே திருமணக்கலப்பு உண்டு. மறவ-அகம்படிய திருமணக்கலப்பினால் தோன்றியோர் அகமுடையர் என்று சொல்லப்படுகிறது " - என்கிறார்.

கள்ளர் பற்றிய செய்திகள் 



"கள்ளரில் தலைமைக்காரர் அம்பலக்காரர் எனப்படுவார்."

"கள்ளரில் 'தெற்கத்தியார்' எனப்படுவோர் புதுக்கோட்டையில் காணப்படுகின்றனர்."

"தஞ்சாவூரில் உள்ள கள்ளருக்கு 'மறவன்' 'அகமுடையான்' முதலிய பெயர்கள் வழங்கப்படுகிறது.

"கள்ளன்,மறவன், அகமுடையான்: மூவருக்கும் நெருங்கிய உறவுண்டு "

"கள்ளரின் வழக்கமான பட்டப்பெயர் 'அம்பலக்காரன்" அவரில்சிலர் "அகமுடையான்" சேர்வை' "தேவன்' எனவும் பெயர் பெறுவர். - என்றார்.

மறவர் பற்றிய செய்திகள் 



"கள்ளரின் உட்பிரிவில் மறவரும் காணப்படுகின்றனர் "

"ராமநாதபுரத்து செம்பியநாட்டு மறவர், அகம்படியாரைத் தமது வர்க்கமாக கருதுவர் "

"மறவருக்கு அகம்படியானே கொள்ளிக்குடம் சுமந்து சுடலைக்கு கொண்டு செல்வான் "

" மறவரின் பட்டப்பெயர். தேவன் -தலைவன்-ராயன்-கரையாளன் -ராஜன் என்பன"
- என்கிறார்.

பரிவாரம்



இதுவும் போக அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்று முக்குலத்தோரிலும் கரைந்துபோன "பரிவாரம்" எனும் பணியாளர்களையும் அவர் ஆய்ந்துள்ளார்.

"பரிவாரத்தில் மறவர் -அகம்படியாருள் ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் 'சின்ன ஊழியம்' 'பெரிய ஊழியம்' என இருவகையினர் என்கிறார்.

மேற்கண்டவற்றிலிருந்து நற்சிந்தனையுடையோர் அறியும் செய்தி என்னவென்றால் " முக்குலத்தோர்" என்பது வெறும் வாய்பேச்சுக்கான -அரசியலுக்கான - மூவரில் ஒருகுழுவின்சுயநலத்திற்கான கட்டமைப்போ அல்லது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அமைப்போ அல்ல, என தெளிவாக உணரலாம்.

நெல்சன் கூற்று! 

நெல்சன் எனும் ஆங்கில ஆய்வாளர் தனது"மதுரா கன்ரி மெனுவல்" எனும் நூலில் "மறவபடை"என்பது மறவர்கள் மற்றும் அவர்களது சகோதர இனம் அகம்படி ஆகிய இருவரும் இனைந்தது. ஒரே பொது மூதாதையரைக்கொண்டவர்கள். ஒரே ரத்தம் என்கிறார்.








{Various Tribes of Cullaries in the Countries of Madura, Shevaganga and co. Written 1817 T.Turnbull, a surveyor of the East Indian Company (Pudukkottai District Gazetteer)}



தொகுப்பு : 
திரு. கி.ச.முனிராஜ் வாணாதிராயர் 
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்