மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் 2019 ஆம் ஆண்டு 120-வது அசைவ அன்னதான விழா நடைபெற்றது. இதனை கரும்பாறை பூசை என்று அழைப்பார்கள். மதுரை மாவட்டத்தில் நன்கு ஐந்து ஊரில் இதுபோல் நடைபெறும்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கரும்பாறை முத்தையா சுவாமி கோவில் மார்கழி மாத அன்னதான விழா ஆண்டுதோறும் நடைபெறும். இவ்விழாவில் பக்தர்கள் காணிக்கையாக கடந்த ஆண்டு வழங்கிய ஆடுகளை வெட்டி சாமிக்கு படைத்து அன்னதான விழா நடைபெறும்.
சமைத்த சாதத்தை மலைபோல் குவித்து, சமைத்த கறியை அன்னத்தில் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன் பிறகு 10 க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சமைக்கப்பட்ட கறிகளை எல்லாம் மொத்தமாக இலைகளில் கொட்டி அவற்றை ஒன்றாக்கி அதன் பிறகு கோவிலுக்கு வந்த ஆண் பக்தர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பரிமாறப்பட்டு அன்னதான விழா நடைபெறும்.
இந்த விழாவிற்கு 1 வயது பெண் குழந்தைகள் கூட பங்கேற்க கூடாது என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் இந்த விழாவில் சாப்பிட்டு கீழே போடப்பட்ட இலைகள் வாடும்வரை இந்த பகுதிக்கே பெண்கள்வரக்கூடாது என்பது அப்பகுதி மக்களின் வழக்கமாக உள்ளது.
2016 இல் நடந்த