திங்கள், 16 ஜூலை, 2018

பொ. ஆ. 1698-1700 இல் மதுரையை கைப்பற்றி ஆட்சி செய்த கள்ளர் நாட்டு அரையன்



மதுரையில் 17 ஆம் நூற்றாண்டில் மதுரையில் தங்கி கிறிஸ்தவ மதத்தை பரப்பி வந்த பாதரியார்கள், தங்களது மெசினரி ரெக்கார்டுகளில் அக்கால வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர்.

Father Peter Martin கிபி 1700 ல் அவர் எழுதிய குறிப்புகளில் மதுரை தேவர்கள் பற்றி குறித்துள்ளார்.

மதுரை கள்ளர்கள் மிகவும் பலம்பெற்று திகழ்கின்றனர். இவர்கள் மதுரை மன்னருக்கு கட்டுப்படாமல் தன்னாட்சி செய்து வருகின்றனர்.




சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு, கள்ளர்களின் தலைவர், மதுரை நகரை தாக்கி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

பிறகு இரண்டு வருடங்களாக மதுரையை, கள்ளர் தலைவர் ஆட்சி செய்து வந்தார்.

இதனால் நாட்டை இழந்த ராணி மங்கம்மாவின் தளவாய், பெரும்படையுடன் மதுரையை தாக்க தயாரானார். இரவில், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், மதுரையை தாக்கினார். கோட்டையின் ஒரு வாயிலை நான்கு யானைகளை கொண்டு தாக்கினார்.

கள்ளர்கள் போருக்கு தயாராகும் முன்பே பெரும்படையுடன் தாக்கியதால், கள்ளர்களால் சமாளிக்க இயலவில்லை. பல கள்ளர்களின் வீரர்கள்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையை ஆண்ட கள்ளர்களின் தலைவர் (Rebellious Prince), அங்கிருந்து தப்பி, அவரது கள்ளர் நாட்டுப்பகுதியில் வாழத்தொடங்கினார்.

இந்த கள்ளர் தலைவர் கீழக்குயில்குடி பகுதியை சேர்த்தவர். கீழக் குயில்குடி மதுரையின் வடகீழ்திசையில் சமண(அமண) மலை என்ற ஒரு குன்றின் சாரலில் இருக்கின்றது.

திருமலை நாயக்கர் தன்னுடைய ஆட்சி காலத்தில், கள்ளர்களுக்கு பட்டம் கட்டி, மரியாதைகள் அளித்து சுமுகமாக வாழ்ந்தார். ஆனால் அவருக்கு பின் வந்த நாயக்க மன்னர்களால், கள்ளர்களுடன் சுமூக உறவை மேற்கொள்ள இயலவில்லை என்பதற்கு சான்றாக இந்த தகவல் உள்ளது.

1801 இல், மதுரை ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் வந்த போதும் கீழகுயில்குடி கள்ளர்கள் எதிராகவே இருந்துள்ளனர். ஆங்கிலேயர்கள், நிலத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளை, உணவுப் பொருட்களைப் பயிரிடாமல், பணப் பயிர் என்று சொல்லப்படும், பருத்தியை விதைக்கச் சொன்னார்கள். அதற்கு விவசாயிகள் மறுத்தனர்.

அப்படி மறுத்த தங்களுக்கு உடன்படாத கள்ளர்கள் மீது, இந்தச் சட்டத்தை தேவையில்லாமல் ஆங்கிலேய அரசு ஏவியது. இதற்காக கீழக்குயில்குடியில் தனியாக நீதி மன்றம் ஒன்று உருவாக்கப் பட்டது. 1911 ம் ஆண்டே தமிழ்ப்பிரதேசத்தில் முதன்முதலாக „கீழக்குயில்குடி“ என்ற ஊரில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த ஊர் மதுரையின் காலனிய எதிர்ப்புச் சரித்திரத்தில் மிக முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. மதுரையில் எது நடந்தாலும் உடனே கீழக்குயில்குடிக்கு காவல்துறை விரைந்து வருவதற்கு வெலிங்கடன் வீதி என்ற பெயருள்ள வீதியே மதுரைப் பகுதியில் முதலில் போடப்பட்ட சீரான வீதியாகும். ஆங்கிலேயருக்கு எதிராக மதுரையில் எது நடந்தாலும், இந்தக் கீழக்குயில்குடி மக்கள் முதலில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவர்.

ஐயா ந.மு.வேங்கடசாமி நாட்டார் மதுரைக்கு மேற்கில் உள்ள கீழக்குடி நாடு பற்றி தனது கள்ளர் சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் "திருவாளர், துங்கன் சொக்கனாண்டித் தேவர் என்னும் ஓர் அன்பர் சேதுநாடு, கற்பகநாடு என்னும் இரண்டு நாடுகளைப்பற்றி எழுதியனுப்பினர். அவர் தெரிவித்தபடி சேதுநாடு என்பது 4 மாகாணமும், 25 ஊர்களும் உடையதாகும். கற்பக நாடு என்பது 7 மாகாணமும், 30 ஊர்களும் உடையதாகும். முன்குறித்த திருவாதவூர் நாடும் கீழக்குடி நாடுமே முறையே சேதுநாடு, கற்பகநாடு என்னும் பெயர்களால் தெரிவிக்கப்பட்டிருக்குமோ வெனக் கருதப் படுகிறது".


ஆய்வு : திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்