திரிபுவன சக்ரவர்த்தின் ஸ்ரீ கோனேரி மெய்க்கொண்டான் குலசேகர தேவன் என்ற பாண்டியன் ஐடில வர்மன் 1475 ல் இத்தமிழ் மண்ணை ஆட்சி செய்தார்.
அது போல அரையன் மெய்க்கொண்டான் தஞ்சை நந்தவனம்பட்டியை 1662 ல் அரையனாக ஆட்சி செய்கிறார்.
கள்ளர்நாடுகளில் ஒன்று கீழத்துவாக்குடி நாடு - நந்தவனப்பட்டி.
கிராமத்தின் அம்பலகாரர் : கண்டியர் பட்டம்.
பொதுக்கோவில்: காமாட்சி அம்மன், முனியாண்டவர்.
மற்றப்பட்டப்பெயர்கள் கொண்ட கள்ளர்கள் :
கூழாக்கியார், கொடும்புரார், சோழங்கர் வாழ்கிறார்கள்.
நந்தவனப்பட்டி (கொற்கைநாடு) அன்னகாமாட்சி அம்மன் ஆலயத்தில் :
விசாத்தேவர்களின் அறப்பணிகள், கண்டியர்கள், கொடும்புறார்கள் மரபினர்களும் அடர்த்தியாக வாழும் ஊர்களில் ஒன்று.
கிபி 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் தங்கி கிறிஸ்தவ மதத்தை பரப்பி வந்த பாதரியார்கள், தங்களது மெசினரி ரெக்கார்டுகளில் அக்கால வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர்.
Father J Bertrand என்பவர் தனது காலத்தில் பதிவு செய்த நிகழ்வுகளை காணலாம்.
மெய்க்கொண்டான் தஞ்சை நந்தவனம்பட்டியை ஆட்சி செய்த கள்ளர் நாட்டின் அரையனாக விளங்கினார்.
அவரது வீரத்தின் சிறப்பை அந்த சீமையிலுள்ள அனைவரும் அறிவர். மெய்கொண்டான் வாள் சண்டையில் வல்லவர்.
அப்பகுதியில் ஒரு கிறிஸ்தவர் வாள் சண்டை பயிற்சி அளிக்கும், பள்ளியை நடத்தி வந்தார். அதை கேள்விப்பட்ட மெய்கொண்டான் , கிறிஸ்தவரை சந்திந்து, தன்னுடன் வந்து , வாள் சண்டையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால் , மெய்கொண்டானின் பெருமையை உணர்ந்த, கிறிஸ்தவர், அவருடன் சண்டையிட மறுத்தார்.ஆனால் மெய்கொண்டான் அவரை ஊக்குவித்து சண்டையிட அழைத்து, அவருடன் சண்டையிட அழைத்தார்.
அவரின் அழைப்பை ஏற்று, கிறிஸ்தவர், சண்டையிட்டார். அவர் மிகவும் நேர்த்தியாகவும், நேர்மையான முறையிலும் சண்டையிட்டார். கிறிஸ்தவரின் நேர்த்தியை,கண்டு வியந்த மெய்கொண்டான், கிறிஸ்தவரை வீழ்த்தினாலும், தன்னுடைய வாளை அவரிடம் அளித்து, அவரை தனது ஆலோசகராக ஏற்றுக்கொண்டார். அவரின் சார்பாக தேவாலயத்தை கட்டிக்கொடுத்தார். பாதிரியார்களிடம் மிகுந்த அன்பை காட்டியதாக குறிப்பிடுகிறார்.
Father Proenza என்பவர் கிபி 1662 ல் தனது வரலாற்று குறிப்பில் பின்வருவற்றை குறிப்பிட்டுள்ளார்.
பிஜப்பூர் சுல்தான்கள் தஞ்சையை தாக்கி சூரையாடினர். விஜயராகவ நாயக்க மன்னர் தப்பித்து ஒடினார். மக்கள் தஞ்சையை காலி செய்து விட்டு வேறு பகுதிகளுக்கு குடியேறினர். எங்கும் பஞ்சம் தொற்றிக்கொண்டது.
ஆனால் மெய்க்கொண்டானின் ஆளுகை பகுதிகள் மிகவும் பாதுகாப்புடன் இருந்தது. பெரும்பான்மையான மக்கள் மெய்கொண்டானிடம் தஞ்சம் அடைந்தனர்.
சுல்தான்கள் பல முறை இவரது பகுதிகளில் படையெடுத்தனர். ஆனால் மெய்க்கொண்டான் மிகவும் தீரத்துடன் போரிட்டு அவர்களை விரட்டினார்.
சுல்மான் ஆதில் ஷா பல முறை போரிட்டு தோல்வி அடைந்து ஒடினான்.
இவரது வீரத்தை கண்டு மெச்சிய, சுல்தான் இவரை " காட்டின் மன்னன்" என அறிவித்து, அப்பகுதியை விட்டு அகன்றனர்.
அவரை சரணடைந்த மக்களையும், உடைமைகளையும் காப்பாற்றினார்.
ஆனால் அவரது உதவியால் பிழைத்த பிற கள்ளர் தலைவர்கள் அவரது மேலாண்மையை எதிர்த்து அவரிடம் மோதினர். ஆனால் பல முறை மோதியும் மெய்கொண்டானே வெற்றி பெற்றார்.
இதனால் அவருடன் இருந்தவர்களின் உதவியால், அவர் தனிமையில் வைத்து சதியால் வீழ்த்தினார்கள்.
மக்களை பேரழிவில் இருந்து காத்த மாவீரன், கள்ளர்களாலேயே வீழ்த்தப்பட்டார் என பாதிரியார் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மெய்கொண்டானின் தம்பி
Father Andre கிபி 1666 ல் மெய்கொண்டானின் தம்பியை பற்றி குறித்துள்ளார்.
அவர் வீரத்தில் சிறந்து விளங்கி தஞ்சை நாயக்கருக்கு படையெடுப்புகளில் பங்கேற்று சாகசங்களை செய்துள்ளார். நாயக்கரின் கோட்டையை, எதிரிகள் தாக்கியபோது, தீரத்துடன் போரிட்டு விரட்டினர்.
சில துரோகிகளின் உதவியுடன் கோட்டைக்குள் நுழைந்த, எதிரிகளை கடைசி எதிரி இறக்கும்வரை போரிட்டு, வென்றார் என குறிப்பிடுகிறார்.
ஆட்சி செய்த கள்ளச்சி :
Father Britto என்பவர் கிபி 1683 ல் தன்னுடைய வரலாற்று குறிப்புகளில் மெய்கொண்டானின் அத்தை, மெய்கொண்டான் ஆட்சி செய்த பகுதிகளை ஆட்சி செய்தார் என்றும்.
வீரமான கள்ளர்களின், தலைவியாக ஒரு பெண் இருந்ததை கள்ளர்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
Father Proenza தன்னுடைய குறிப்புகளில் நந்தவனம்பட்டியை சுற்றி வாழ்ந்த கள்ளர்களை பற்றியும் எழுதியுள்ளார்.
தஞ்சை சீமையில் நடந்துவரும் தொடர்ச்சியான போர்களால் கள்ளர்கள் தங்களை பலத்தை இழந்து உள்ளனர். (தஞ்சை நாயக்கரிடம் இருந்து மராத்தியர் கைக்கு மாறிய குழப்பமான காலம்)
மாபெரும் பலத்துடன் எதிரிகளின் கிராமங்களை சூரையாடும் இந்த கள்ளர்களை யாரும் அடக்கமுடியாது.
கள்ளர்கள் வலுவிழந்தது ஒரு சில பிரிவினருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் மற்றொரு தரப்பினர் இதை துருதிஷ்டமாக கருதினர். ஏனெனில் போர் காலங்களில் கள்ளர்களின் உதவியே அவர்களுக்கு தேவைப்பட்டது. கள்ளர்கள் ஒரு வலிமையான போர்படைக்கு நிகராக திகழ்ந்தனர்.
தஞ்சையை துலுக்கர்கள் தாக்கிய போது , மன்னரின் சிப்பாய்களை சமாளிப்பதைவிட, கள்ளர்களின் தாக்குதலை எண்ணியே துலுக்கர்கள் அஞ்சினர்.
கள்ளர்களுக்கு நிகர் எவருமில்லை. கள்ளர்களின் ஒன்றினணயும் திறன், அவர்களின் போர்க்குணம், பல அணிகளாக பிரிந்திருந்தாலும் , நொடி நேரத்தில் ஒன்றினணந்து தாக்கும் திறன் கள்ளர்களின் சிறப்பியல்புகள்.
கள்ளர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னலைப்போல குதிரையில் பறிந்து சென்று தாக்குதலிலொ ஈடுபடும் திறனுடன் விளங்கினர்.
கள்ளர்கள் குதிரையை எந்த கடிவாளமும் இல்லாமல் கட்டுப்படுத்தும் திறனுடன் விளங்கினர் . கடிவாளம் இன்றி குதிரையை தாங்கள் விரும்பிய திசையில் செலுத்தும் வல்லமை பெற்றவர்கள். நொடிப்பொழுதில் நூற்றுக்கணக்கான குதிரைகளில் மின்னல் போல ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி விட்டு இடி போல் தோன்றி மறையும் வல்லமையுடன் திகழ்ந்தனர் கள்ளர்கள்.
தஞ்சை சீமையில் நாயக்கர் ஆட்சி முடிவுற்று மராட்டியர் ஆட்சி தோன்றிய காலத்தில் நந்தவனம்பட்டி சுற்று வட்டார பகுதி கள்ளர்களின் போர் உதவியையும் வல்லமையும் நேரில் கண்ட பாதிரியாரின் குறிப்புகள், கள்ளர்களின் வல்லமையையும், தஞ்சை நாயக்கர் காலத்திலும் அப்பகுதி கள்ளர்கள் தன்னாட்சியோடு விளங்கியதையும் எடுத்துரைக்கிறது.
(Source: Tamilaham in seventeenth century :c sathyanathaier)
வீரமுடன் போரிட்டு தஞ்சை மக்களை காத்த மாவீரன் மெய்கொண்டான் வீரத்தினை போற்றுவோம்.
ஆய்வு: திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார் , திரு. பரத் கூழாக்கியார்