ஞாயிறு, 15 ஜூலை, 2018

பொ. ஆ. 1659 இல் பீஜப்பூர் சுல்தானுக்கு எதிராக கள்ளர்களின் கொரில்லா தாக்குதல்.


பீஜப்பூர் சுல்தான் முகமது அடில் ஷா (Mohammed Adil Shah) வடக்கே பீஜப்பூரைத் தலைநகராகக் கொண்டு இவர் ஆட்சி செய்தாலும் தென்னிந்தியாவில் இவன் தனது ஆளுகையைச் சில இடங்களில் நிறுவினான். கி.பி 1646 ல் விஜயநகரப் பேரரசின் அரசன் ஸ்ரீரங்கன் ஒரு மாபெரும் தோல்வியைச் சந்தித்தான். அவனது இந்த தோல்வி தமிழகத்தில் இருந்த அனைத்து நாயக்க அரசுகளையும் ஆட்டம் காண வைத்தது.


முக்கியமாக விஜய நகரப் பேரரசின் விசுவாசிகளான தஞ்சை நாயக்கர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு வந்தனர். தஞ்சை நாயக்கர்களின் இந்த நிலையை அறிந்த அடில்ஷா அவர்களை தனக்குக் கப்பம் கட்டும்படி செய்தார்.


மதுரை இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கன் 1659 ஆம் ஆட்சி ஆண்டில் தஞ்சாவூரை விஜயராகவ நாயக்கன் ஆண்டு வந்தான். கிபி 1659, ல் பீஜப்பூர் சுல்தானான " அலி அடில் ஷா II" , நாயக்கர்களின் வலுவின்மையை பயன்படுத்தி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் படையெடுத்து மிகுந்த நாசங்களை ஏற்படுத்தினான்.

கிபி1659 மார்ச் 19 ஆம் நாள் பிஜபூர் சுல்தான் அதில் ஷாவின் ஆனைக்கினங்க அவருடைய தளபதிகளான சகோசி, முலாவின் தலைமையில் ஒரு பெரும் படையை தஞ்சையை கைப்பற்ற அனுப்பி வைக்கிறார்.



அப்படைகள் திருச்சி வல்லம், மலைக்கோவில் போன்ற இடங்களில் நாயக்கர் படையை தோற்கடித்த பின்னர் தஞ்சையில் திடீர் தாக்குதலை மேற்கொள்கின்றனர்.

இதனால் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை பகுதிகள் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களையும், சோழ நாட்டின் வளமும் பொய்த்து போனது.


இந்நிலையில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை நாட்டு கள்ளர்கள் ஒன்றினைந்து கொரில்லா முறையில் தாக்குதல் நடத்தினர். 


தஞ்சை வந்த முகலாய பெரும் படைக்கு அப்போது தஞ்சை ஆண்ட நாயக்கர் படையை விட கள்ளர் படைப்பற்றை பார்த்து அஞ்சி நிலைகுலைந்து போகிறார்கள்.




அந்த நிகழ்வை அக்காலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார் “முகலாயப்படை நாயக்கர் படையை விட கள்ளர் படையை பார்த்து பயந்தனர்” என்று குறிக்கிறார்.


அதுமட்டு இல்லாமல் பிஜபூர் தளபதிகள் சகோசி, முலா செஞ்சி, திருச்சி, தஞ்சையில் கொள்ளையடித்து வைத்த செல்வங்களை கள்ளர் பெருங்குடிகள் அத்தனையும் கவர்ந்து செல்கின்றனர்.



மன்னார்குடி, வல்லம் பகுதிகளை இஸ்லாமிய படைகள் கைப்பற்றிய காரணத்தாலும் தஞ்சையை விட்டு நாயக்க மன்னர் வெளியேறுகிறார். அப்படி அவர் வெளியேறும் போது தனது படை வீரர்களுடன் அரச கருவூலத்தில் இருந்த அனைத்து செல்வங்களையும் (தங்கம்,வைரம் மற்றும் இதர பொருள்களை ) எடுத்துக்கொண்டு செல்கிறார்.

அப்படி அவரும் அவரது படையும் தஞ்சையை தாண்டி செல்லும் போது கள்ளர்படை பற்று நாயக்க மன்னரையும் அவரது படையும் வழிமறித்து அவர்களிடம் இருந்த செல்வங்களை கவர்ந்துவிடுகிறார்கள்.


நாயக்க மன்னரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நாயக்க அரசு கருவூல செல்வங்களை “ஏழை மக்கட்களுக்கு சரி சமமாக பிரித்து கொடுத்துவிடுகிறார்கள்”


இதனை வரலாற்று ஆய்வாளர் திரு.சத்தியநாத அய்யர் அவர்கள் கள்ளர்கள் பெருமக்கள் இந்த செயலை “நாயக்க மன்னரின் பேராசை செல்வங்கள் உழைக்கும் ஏழை மக்களிடம் கொடுத்து சேமிக்கப்பட்டது” என வர்ணிக்கிறார்.


கள்ளர் பெருங்குடிகள் நாயக்க மன்னரிடம் கொள்ளையிட்ட பெருமதிப்பு மிக்க செல்வங்களை தாங்களே வைத்துக்கொண்டு மிகவும் சொகுசாக ஆடம்பரமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்களின் மரபு வழி ஈகை தன்மை செல்வத்தை ஏழைகளுக்கு பகிந்தளித்து அதில் இறைவனை கண்டார்கள்.


இந்த வள்ளல் தன்மை சங்ககாலத்தில் வெட்சி போரில் ஆ நிரைகளை (அக்கால செல்வமாகிய மாடுகள்) கவர்ந்து வந்து தன் நாட்டு மக்களுக்கு கொடையளிப்பார்கள்.



கள்ளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத, சுல்தான்கள் தஞ்சை மற்றும் புதுகை பகுதிகளை விட்டு ஒடினர். கள்ளர்களின் இந்த மூர்க்கத்தனமான தாக்குதலாலும், தந்திரத்தாலும் பிஜபூர் தளபதிகள் சகோசியும், முலாவும் நாயக்கர் மன்னரிடம் கொஞ்சம் பணத்தை பெற்று தஞ்சையை விட்டு வெளியேறுகின்றனர்.


அது போல மீண்டும் கிபி 1660 ல் பீஜப்பூர் சுல்தான்களுக்கு எதிராக தஞ்சை குறுநில கள்ளர் நாட்டு தலைவர் போரில் ஈடுப்பட்டார்.



தஞ்சையை ஒவ்வொரு அந்நியபடையெடுப்பிலும் சோழ தேச காவலராக காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கு போல் கள்ளர் பெருங்குடிகள் தங்களுடைய குருதியை தஞ்சைகாவலுக்காக சிந்தியுள்ளனர்.

சுல்தான்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து தப்பித்து சோழநாட்டு பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியது. சோழ மண்டலத்தில் கள்ளன் தொண்டைமான், வடுக நாயக்கன், வடக்கத்திய மராட்டியன் ஆட்சி நடந்தாலும் கள்ளர்கள் நாடுகளில் அந்த அந்த கள்ளர் நாட்டு தலைவர்களால் ஆளப்பட்டது.


ஆய்வு : 

உயர் திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
உயர் திரு. சோழ பாண்டியன்,ஏழுகோட்டை நாடு

தகவல் : 



HISTORY OF NAYAKS by Mr.Sathiyanatha Aiyar

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்