திங்கள், 6 நவம்பர், 2017

கள்ளர் குல அரையர்கள்


அரசன் - அரைசன் - அரையன் – ராயன். அரையன் என்பது அரசனை (சிற்றரசர்களை) குறிக்கும்.

(அரையனா யமருலக மாள்வதற்கு – தேவாரம்)

“ தென் சிறுவாயி நாட்டாரும் இந்நாட்டு அரையர்களும்
தென்மலை நாட்டு வந்தாண்டார் கோட்டை அரையர்களில்
வாரப்பூர் அரையர்களில் ஒட்டையன் வாரப்பூர் நாடாழ்வான் “
என நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் அரையர் என்ற சொல்லைக் காணுகின்றோம்.

புதுக்கோட்டை அரசர்களும் அவர்கள் முன்னோர்களும் அரையர் மக்கள் எனப்பட்டனர். தொண்டைமானால் குறிக்கப்ட்டுள்ள பல தாம்பிர சிலாசாசனங்களில், அவர்கள் தற்காலூரில் (அம்புநாட்டில்) நிலங்களை யுடைய இந்திரகுல அரையர் என்று குறிப்பிட்டிருக்கிறது.

கொங்கரையர், ஈழத்து அரையர், பல்லவரையர், விழுப்பரையர், கங்கரையர்,கலிங்கரையர் என அரசியல் தலைவர்களும் அரசர்கள் அளித்த பட்டப் பெயர்களிலும் அரையர் என்ற பெயரைக் காணுகின்றோம்.

அரையர் என்பார் சோழ பாண்டிய நாடுகளில் தன்னாட்சி புரிந்திருப்பதையும்,அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த வகுப்பினர் என்றும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலில் கூறியுள்ளார்.

சோழ ஆட்சி நிலைதளரந்த பின்பு கள்ளர்கள் இந்நாட்டைக்கூற்றங்களாகவும், நாடுகளாகவும் பிரித்துத் தன்னரசுகளாக இருந்து ஆண்டிருக்கின்றனரென்பதும்,அங்ஙனம் ஆண்டவர்கட்கு அரையர், நாடாள்வார் என்னும் பெயர்கள் வழங்கின. சர்க்கரைப் புலவரின் வழித்தோன்றலாய திருவாளர், சர்க்கரை இராமசாமிப் புலவரவர்களின் வீட்டில் இருந்த தொரு மிகப்பழைய ஏட்டில் ஏழு கூற்றமும்,பதினெட்டு நாடும், ஏழு கூற்றத்திற்கும் ஏழு ராயரும் கூறப்பட்டுள்ளன, கூற்றமும்,நாடும் பின்காட்டப் பெறும். 


ராயர் எழுவராவார்: சேதிராயர், கலிங்கராயர்,பாணாதிராயர், கொங்குராயர்,விசையராயர், கனகராயர், கொடுமளூர்ராயர் என்போர். இந்த பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் சிறப்பு பெற்று வாழ்ந்து வருகின்றனர்.


அரையர்களில் அவர்கள் இருந்த இடம் பற்றி, சுருக்காக் குறிச்சிராயர் வாணாதிராயர் (வாணாதிராயன் கோட்டை), கடம்பராயர் (புலவயல் அரசர்), ஆலங்குடி நாட்டு இரண்டுவகை அரையர், அம்புகோயில் ஐந்து வீட்டரையர், இரும்பாலியரையராகிய கடாரத்தரையர், குலோத்துங்க சோழதரையர், (குன்றையூர் அரசர்) எனப் பல பிரிவுகள் இருந்தன. சோழ, பாண்டியர்களின் அதிகாரம் இவ்விடங்களில் மிகுதியும் பரவவில்லையெனத் தெரிகிறது.

இராஜராஜ வளநாட்டுச் செங்காட்டு நாட்டு இரண்டு வகையில் அரையர்கள் இந்தநாட்டுக் குளக்குடி (களக்குடி)க் கள்ளர் பற்றில் சிவப்பிராமணர்க்கு நிலக்கொடை வழங்கியுள்ளனர் (425). செங்காட்டு நாட்டில் வாழ்ந்த இரு கள்ளர் பிரிவுகளின் தலைவர்களான அரையர்களே இங்கு இரண்டு வகையில் அரையர்கள் எனக் கூறப்படுவதாகப் பொருள் கொள்ளலாம். கள்ளரின் கூட்டுரிமையான கள்ளர்பற்றில் இக்கள்ளர் தலைவர்களால் பிராமணர்க்கு நிலக்கொடை வழங்கப்பட்டுள்ளது. 13 ஆம் நூற்றாண்டிற்குரிய அம்புக் கோவில் கல்வெட்டில் (522) அழும்பில் அஞ்சுக்குடி அரையர் எனும் குறிப்புக் காணப்படுகிறது. இங்கு அஞ்சுக்குடி அரையர் எனும் குறிப்பு  அம்பு நாட்டு கள்ளர் சமூகத்தின ஐந்து உட்குழுக்களின் அரையர்களை குறிப்பதாகும்.

இரண்டாம் இராஜராஜனின் குடுமியான் மலைக் கல்வெட்டில் (135 ) சுட்டப்படும் சார் அரையன் இராஜேந்திரனான குலோத்துங்க சோழக் கடம்பராயனும் மூன்றாம் குலோத்துங்கனின் காரையூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்படும் (157 ) தந்நன் தெங்கனான குலோத்துங்க சோழக் கடம்பராயனும் ஒரே குடும்பத்தவர் என அறிய முடிகிறது.



நான்குபட்டி  வட்டத்திலுள்ள (மடத்துக்கோவில் ) மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டில் (௧௬௯) காணப்படும் " இந்தநாட்டுச் சார் அரையர்களில்" எனும் தொடரைக் கவனத்திற்கொண்டால் கடம்பராயன் எனும் குடும்பப் பெயரைப் பெறும் மேற்கூறிய மூன்று அரையர்களும் கோனாட்டில் சார் அரையர்களாகப் பணிபுரிந்தனர் . சோழரின் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றிய இவ்வரையர்கள் தம்மை உயர் தகுதி பெற்றவராக காட்டிக் கொள்ள முனைந்தனர். அரசர்கள் அஞ்சப்பிறந்தான் (178 ), வயலக நாட்டுப் புல்வயல் அரசு தேர்பொலிய நின்றாரான கடம்பராயன் (479 ) எனும் பெயர்கள் இவ்வரையர்கள் தன்னாட்சி பெற்ற குற்றரசுகளாகச் செய்ல்பட்டுள்ளதை உணர்த்துகின்றன. 


தஞ்சை மாவட்டம் கும்பகோனம் வட்டம் திருக்கோடிக்கா என்னும் ஊரில் மகாதேவர் கோயிலில் விளக்கு எரிக்க பேரையூர் நாட்டு பனையூரை சார்ந்த அரையன் கள்வன் என்பர் கொடை தந்துள்ளார்.


"பெரையூர் நாட்டு பனையூர் அரையன் (அரசன்) கள்வன்"




கள்ளிக்குடி என்பதனை கள்ளர் இனக்குழுச்சமூகம் வாழ்ந்த இடமாகக் கருத வாய்ப்புள்ளது.  கள்ளர் இனச்சமூகம் வாழ்ந்த பகுதி களைக் குறிக்க கள்ளப்பால் என்ற சொல் பிற்காலத்திய கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டுள்ளன. 

'ராஜராஜ வளநாடு தென்கவி நாட்டு கள்ளபால் கல்குறிச்சி மகாதேவருக்கு இவ்வூர் கள்ளன் பாப்பான் சொந்தனான குலோத்துங்க சோழ நாடாள்வான் இவ்வூர் கள்ளன் அமராபதி குப்பையை சாத்தி திருகற்றளி மகாதேவருக்கு வைத்த திரு நந்தா விளக்கு ..' (முதலாம் குலோத்துங்க சோழனின் 48 வது ஆச்சி ஆண்டு ,கிபி 1118,IPS-232,புதுகோட்டை ஆலங்குடி தாலுகா ). கள்ளர் வாழும் பகுதியே கள்ளர்பால் என்னும் கருத்தை உறுதிப்படுத்தும் கற்குறிச்சியும் சிங்கமங்கலமும் படைபற்றுக் குடியிருப்புக்கள்  எனக் கூறப்படுகின்றன. இவை கள்ளர் படைகள் நிலை பெற்றிருந்த குடியிருப்புக்ககள் என கூறலாம்.



காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் களத்தூரில் கிடைத்தை கல்வெட்டு
கால்ம்:9-ஆம் நூற்றாண்டு வாசகம்:

“ ஸ்ரீய் யாண்டு கொங்கரையர் கள்ளப்பெருமகனார்
தேவியர் கொங்கச்சியார் களத்தூரில் செய்வித்த தூம்பு” என்று உள்ளது.


திருவானைக்காக் கல்வெட்டு ஒன்று பின்வருமாறு கூறகின்றது:

‘ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு4107-வது பாண்டி குலாசனிவள நாட்டு மீகோழை நாட்டுத் தேவதான பிரமதேயம் திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் அமர்ந்தருளிய திரிபுவன பதிக்கு மூலப்பிருத்தியனாகிய சண்டேசவரன் உள்ளிட்ட தேவகன்மிகள், ஜயசிங்ககுல கால வளநாட்டு மீசெங்கிளிநாட்டு வளம்பகுடி அரையன் மகன் முனையன் அருமொழி தேவனான வில்லவராயனுக்கு நாம் விற்றுக்கொடுத்த நிலமாவது…………..(தென்னிந்திய சாசன புத்தகம் தொகதி 3, பகுதி 2 , பக்கம் 168).

இதிற் குறித்துள்ள வளம்பகுடி என்பது பூதலூருக்குத் தெற்கில் ஐந்தாறு நாழிகையளவில் உள்ளதோர் ஊர். இவ்வூர் அந்நாட்டுக் கள்ளர்கள் நாட்டுக் கூட்டம் கூடுதற் குரிய பொது விடமாகும். வில்லவராயன் பட்டி என்பதோர் ஊரும் பூதலூருக்குத் தெற்கில் ஒரு நாழிகையளவில் உள்ளது. வளம்பகுடியில் இருந்த கள்ளர் குலத்தவனாகிய வில்லவராயனை ‘ அரையன் மகன்’ என்று கூறியிருப்பது காண்க. இக் கல்வெட்டில்‘இவன்’ உடையார் திருவானைக் காவுடைய எம்பெருமான் கோயிலில் இடங்கை நாயகரென்று எழுந்தருளவித்த இடப வாகன தேவர்க்கும் நம் பிராட்டியாரக்கும்’என்று வருதலால் இவனது பிரதிட்டைத் திருப்பணியும் புலனாம்.

கி.பி.14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலிக்காபர் (மாலிக்கபூர்) முதலிய மகம்மதியர் தென்னாட்டின் மேற் படையெடுத்துக் கோயில்களை இடித்துப் பல கொடுமை விளைத்தனர். அப்பொழுது மக்களெல்லாரும் அரையர்களைச் சரண் புகுந்து ஊர்க்காவலை அவர்களிடம் ஒப்புவிக்கவே அவர்கள் அனைவரையும் பாதுகாத்தனர் என்று கல்வெட்டுக்களால் தெரிகிறது. குடிகளுக்குள் உண்டாகும் வழக்குகளையும் அரையர்களே விசாரித்துத் தீர்ப்பளித்து வந்தனர். அதற்காக அரசு சுந்தரம் என்ற ஒரு வரி அவர்களால் வாங்கப்பட்டு வந்தது. அரசு சுந்தரம் என்பது விளையும் பொருள்கள் எல்லாற்றிலும் ஒருபங்கை அரையருக்குக் கொடுப்பது. இவர்களில் சூரைக்குடி அரையர்கள் 300 வருடங்கள் வரையில் ஆண்டு கொண்டிருந்தனரென்று தெரிகிறது. அரையர்களுக்கு அரசு என்றும்,நாடாள்வார் என்றும் பட்டமுண்டு. அரையர்களிற் பலர் தேவர் என்ற பட்டமும் தரித்திருந்தனர்.

திருமந்திரவோலை வானவன் பல்லவ தரையன் எழுத்து’ திருமந்திரவோலை நாயகம் இராஜராஜனான தொண்டைமான் எழுத்து. அரையன் இராஜராஜனான வீரராஜேந்திர ஐயமுரி நாடாள்வான் எழுத்து. வீரராஜேந்திர மழவராயன் எழுத்து’ (தென்னிந்திய சாசன புத்தகம் தொகுதி 3,பகுதி1, பாகம் 40) என்று இங்ஙனம் பல விடங்களில் வருகின்றன. திருமந்திரவோலை என்பது அமைச்சர்க்கும், திருமந்திரவோலலை நாயகம் என்பது முதலமைச்சர்ககும் உரிய பெயர்களாகும் இது சாசன ஆராய்ச்சியாளரின் துணிபு.

அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள் என்பதை அறிவோம். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன் ), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை.. இவை ஓன்று இருந்தாலே அநியாயத்துக்கு தம்பட்டம் அடிக்கும் சாதிகள் இருக்கும் தமிழகத்தில் இணையில்லா தஞ்சை கள்ளர் குலத்தின் பட்டங்களை பாருங்கள் 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்.

1 பாண்டியராயர்,
2 பல்லவதரையர்,
3 பல்லவராயர்
4 சேதிராயர் (சோழனின் கிளைக்குடி)
5 பழுவேட்டரையர்(சோழன் பெண் எடுத்த சேரன் குலம்)
6 தஞ்சைராயர்
7 பழையாற்றரையர்(பறையாறு சோழர்களின் தலைநகரம் )
8 கொடும்பாளுர்ராயர் (மாமன்னன் ராஜராஜன் மனைவியின் குலம்,ராஜேந்திர சோழன் தாய்
9 வல்லத்தரையர்
10 முத்தரையர்
11 கொல்லத்தரையர்
12 கலிங்கராயர்
13 கொங்குராயர்
14 செம்பியதரையர்
15 கேரளராயர்
16 ஈழ்த்தரையர்
17 கச்சியராயர்
18 காடவராயர்
19 கடாரத்தரையர்
20 கச்சைராயர்
21 கோழிராயர் (கூழி என்றால் கரிகாலன் தலைநகர் உறையூரை குறிக்கும்)
22 கலிங்கராயதேவர்
23 களப்பாளராயர்
24 குறும்பராயர்
25 சோழகன்னகுச்சிராயர்
26 காலிங்கராயர்
27 செம்பியமுத்தரையர்
28 சம்புராயர்
29 சோழரையர்
30 சேதுராயர்
31 செம்பியரையர்
32 சோழதரையர்
33 சீனத்தரயைர்
34 சோழதிரையர்
35 சிங்களராயர்
36 தஞ்சிராயர்
37 செழியதரையர்
38 சிந்துராபாண்டிராயர்யர்
39 தேவராயர்
40 தமிழுதரையர்
41 தெலிங்கராயர்
42 தென்னதிரையர்
43 தென்னரையர்
44 தென்னறையர்
45 தென்னவராயர்
46 பாண்டுராயர்
47 மூவரையர்
48 மூவேந்த்ரையர்
49 மானமுத்தரையர்
50 மீனவராயர்
51 மலையராயர்
52 மழவராயர்
53 முனைதரையர்
54 மலையராயர்
55 மலையரையர்
56 வங்கத்தரையர்
57 வங்கராயர்
58 வடுகராயர்
59 நாகராயர்
60 வாணாதிராயர்
61 வல்லவராயர்
62 வில்லவதரையனார்
63 வில்லவராயர்
64 வெங்கிராயர்
65 வாணரையர்
66 வாண்டராயர்
67 வண்டைராயர்
68 வேங்கைராயர்
69 வெங்கிராயர்,
70 அங்கராயர்.
71 ஆக்காட்டரையர்.
72 அன்கராயர்.
73 ஆற்காட்டரையர்.
74 அனகராயர்
75 அங்கதராயர்
76 ஆச்சராயர்
77 ஆச்சாண்டார்
78 உழுவாண்டார்.
79 அச்சிராயர்
80 அச்சுதராயர்
81 உமத்தரையர்
82 அத்திராயர்
83 அத்தியரையர்
84 ஆலத்தரையர்.
85 அமராண்டார்
86 அம்பராண்டார்
87 ஆற்க்காடுராயர்
88 அம்மையத்தரையர்
89 இராதராயர்
90 இராமலிங்கராயதேவர்
91 இராலிங்கராயதேவர்
92 ஓந்திரையர்
93 ஓந்தரையர்
94 ஓமாந்தரையர்
95 ஓமாமரையர்
96 இருப்பரையர்
97 அண்ணவசல்ராயர
98 கொங்கரையர்
99 கொங்ககரையர்
100 கொங்குதிரையர்
101 கொடிராயர்
102 காசிராயர்
103 கொடிக்கிராயர்,
104 கொடிக்கவிராயர்
105 கஞ்சராயர்
106 கொடும்பராயர்,
107 கொடும்பைராயர்
108 கடம்பராயர்
109 கொடும்புராயர்
110 கடம்பைராயர்
111 கொடும்மளுர்ராயர்
112 கொடும்பிராயர்,
113 கொடும்பையரையர்
114 கார்யோகராயர்
115 கட்டராயர்
116 கொழுந்தராயர்
117 கொற்றப்பராயர்
118 கொத்தப்பராயர்
119 கொற்றரையர்
120 கண்டராயர்
121 கண்டவராயர்
122 கோட்டரையர்
123 கோட்டையரையர்
124 கண்ணரையர்
125 கரம்பராயர்
126 கீழரையர்
127 கைலாயராயர்
128 கையராயர்
129 கரும்பராயர்
130 குச்சராயர்
131 குச்சிராயர்
132 குச்சியராயர்
133 குமதராயர்
134 கலிராயர்
135 குருகுலராயர்
136 குழந்தைராயர்
137 கொழந்தைராயர்
138 கொழந்தராயர்
139 கொழுந்தைராயர்,
140 களப்பாள்ராயர்,
141 கனகராயர்
142 கூத்தப்பராயர்
143 கன்னகொண்டார்
144 கொத்தப்பராயர்
145 கன்னக்குச்சிராயர்
146 கன்னராயர்
147 கன்னிராயர்
148 கேளராயர்
149 சக்கரையர்
150 சாக்கரையர்
151 சக்கராயர்
152 செம்பரையர்
153 சக்காராயர்
154 சங்கரராயர்
155 சோழுதிரையர்
156 சோதிரையர்
157 செல்லரையர்
158 செனவராயர்
159 சன்னவராயர்
160 சனகராயர்
161 சன்னராயர்
162 சென்னிராயர்
163 சன்னவராயர்
164 சாணரையர்
165 சாத்தரையர்
166 சாமுத்தரையர்
167 சாமுத்திரையர்,
168 சேண்ராயர்
169 செனவராயர்
170 சிங்கராயர்
171 சேந்தராயர்
172 சிந்துராயர்
173 சிறுநாட்டுராயர்
174 சிறுராயர்
175 சேறைராயர்
176 சேற்றூரரையர்
177 சுக்கிராயர்
178 சுக்கிரபராயர்
179 சுக்கிரியராயர்
180 சுந்தரராயர்
181 சொரப்பரையர்
182 சோதிரையர்
183 தேசுராயர்
184 தனஞ்சராயர்
185 திருக்காட்டுராயர்
186 தம்பிராயர்
187 தனராயர்
188 தோப்பைராயர்
189 தலைசைராயர்,
190 துண்டராயர்
191 தனசைராயர்
192 துண்டுராயர்
193 துண்டீரராயர்
194 தனிராயர் ,
195 நண்டல்ராயர்
196 நந்திராயர்
197 நந்தியராயர்
198 நாட்டரையர்
199 நாட்டறையர்
200 நரசிங்கராயர்
201 நெடுந்தரையர்
202 நன்னிராயர்
203 நெல்லிராயர்
204 பகட்டுராயர்
205 பூழிராயர்
206 பூவனையரையர்
207 பங்களராயர்
208 பாச்சிராயர்
209 பேரரையர்,
210 பேதரையர்
211 பாண்டராயர்
212 பஞ்சராயர்
213 பஞ்சந்தரையர்
214 பஞ்சநதரையர்
215 பாப்பரையர்
216 பொய்ந்தராயர்
217 போய்ந்தராயர்
218 போய்ந்தரராயர்
219 பட்டுராயர்
220 பொன்னவராயர்
221 பாலைராயர்
222 பால்ராயர்
223 பிச்சராயர்
224 பதுங்கராயர்
225 பதுங்கரார்
226 பிரமராயர்
227 பிலியராயர்
228 பயிற்றுராயர்
229 பரங்கிலிராயர்
230 பரங்கிராயர்
231 பருதிராயர்
232 புள்ளராயர்
233 பிள்ளைராயர்
234 போதரையர்
235 பூராயர்
236 பனைராயர்
237 மாதராயர்
238 மாதைராயர்
239 மாதுராயர்
240 மாத்துராயர்
241 மங்கலராயர்
242 மாதவராயர்
243 மாந்தராயர்
244 மாந்தையரையர்,
245 மாந்தரையர்
246 மட்டைராயர்
247 மேனாட்டரையர்
248 மணிராயர்
249 மண்டலராயர்
250 மண்டராயர்
251 மாவாளியார்
252 மண்ணிராயர்
253 மணிக்கராயர்
254 மாளுவராயர்
255 மானத்தரையர்
256 மருங்கராயர்
257 பருங்கைராயர்
258 கைராயர்
259 விக்கிரமத்தரையர்
260 விசயராயர்
261 வங்கனராயர்
262 விசையராயர்
263 வங்காரமுத்தரையர்
264 விசராயர்
265 விசுவராயர்
266 வங்கானமுத்திரையர்
267 விசுவரார்
268 வஞ்சிராயர்
269 வாஞ்சிராயர்
270 விஞ்சிராயர்
271 விஞ்சைராயர்
272 வடுராயர்
273 விசலராயர்
274 வடுராயர்,
275 விசுவராயர்
276 வல்லவரையர்
277 விண்டுராயர்
278 வீண்டுராயர்
279 விருதுளார்
280 விலாடத்தரையர்
281 வில்லவதரையர்
282 வில்வராயர்
283 விழுப்பாதராயர்
284 விற்பன்னராயர்
285 வீணதரையர்,
286 வெட்டுவராயர்
287 வணதரையர்
288 வாணதிரையர்
289 வாணாதரையர்
290 வீணாதரையர்
291 வீனைதிரையர்
292 வெங்கிராயர்
293 வாலிராயர்
294 வேம்பராயர்
295 வாளுவராயர்
296 வேள்ராயர்
297 வாள்ராயர்
298 வைகராயர்
299 வையராயர்
300 வைராயர்
301 வயிராயர்
302 பிள்ளைராயர்
303 கழுத்திரையர்
304 செட்டரையர்
305 தழிஞ்சிராயர்

நடுக்கல்லில் மற்றும் கல்வெட்டில் வரும் அரையர் :

1) தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கைலாவரம் எனும் ஊரில் முதல் வரி கிரந்தம் அடுத்த வரிகள் வட்டெழுத்தில் பொறிப்பு பெற்று உள்ள ஒரு நடுகல் கல்வெட்டு ( தரும. கல். 5/1973) உள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டு.

ஸ்ரீ கட்டிணை பருமற்கு யாண்டு முப்பத்தே / ழாவது கந்தவாணதிஅரையர் புறமலை நாடாள அருட்டிறையர் தொறுக் கொண்ட ஞா / ன்று அமர நீலியார் சேவகர் / பையச்சாத்தனார் தொ / று மீட்டு / பட்டார் கல்

கங்கரான பிரிதி கொங்கண அரசர் கட்டிணை அல்லது கட்டாணை பருமர் (வர்மர்) பேரரசராக தனி ஆட்சி நடத்தி வந்துள்ளார். அவருடைய முப்பத்தேழாவது ஆட்சி (757 AD) ஆண்டில் அவருக்குக் கட்டுப்பட்ட வாண அரசன் கந்தவாண் அதிஅரையன் புறமலை நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வேளையில் அருள் திறையன் என்பான் (இக்காலக் கைலாபுரப் பகுதியில்) ஆநிரைகளைக் கவர்ந்த பொழுது கைலாபுரப் பகுதியின் வேள் அமரநீலி என்பானுடைய படைவீரன் பையச்சாத்தன் என்பான் அவ் ஆநிரைகளை மீட்டான். அப்பூசலில் அவன் வீர சாவு எய்தியதன் நினைவில் நிறுவப்பட்ட நடுகல் என்பது செய்தி.

2) கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் சின்னட்டி என்ற ஊரில் முதல் வரி கிரந்தம் அடுத்த வரிகள் வட்டெழுத்தில் பொறிப்பு பெற்று உள்ள ஒரு நடுகல் கல்வெட்டு (நடு. பக். 498) உள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டு.

ஸ்வஸ்தி ஸ்ரீ கட்டிணை பந்மற்கு யாண்டைந்தாவது / வேட்டுவதி அரையர் சேவர் குமாரபம்மர் / மக்கள் மாகற்நாகஅவர் தம்பி இருவரும் / வேளூர் தொறு மீட்டுப்பட்டார்

கங்கரான பிரிதி கொங்கண அரசர் கட்டிணை அல்லது கட்டாணை பருமர் (வர்மர்) பேரரசராக தனி ஆட்சி நடத்தி வந்துள்ளார். அவருடைய ஐந்தாவது ஆட்சி (730 AD) ஆண்டில் அவருக்குக் கட்டுப்பட்ட வேட்டுவனான அதிஅரசன் எனும் பொறுப்பு கொண்ட வேளுக்கு படையாள் குமாரபம்மன் என்பவன் பெற்ற பிள்ளைகள் மாகற்நாகன் மற்றும் அவன் தம்பி இருவருமாக பகைவர் கவர்ந்து சென்ற வேளூர் கால்நடைகளை மீட்டு அப்பூசலில் வீர சாவு எய்தினர்.

தொறு எருமை, ஆடு, மாடு ஆகியவற்றை குறிக்கும். கட்டாணை பருமன் என்பவன் கங்க மன்னன் இரண்டாம் சிவமாற வர்மனின் தந்தையான ஸ்ரீ புருஷனே என்பர் அறிஞர். குமாரபம்மன் எந்த நாடன்,ஊரன் என்ற செய்தி இல்லை.

3) நெடுங்களம் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமுன் வாயில் உத்திரத்தில் காணப்படும் முதற்குலோத்துங்கரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,இத்திருமுன்னுக்கு முன்னால் அமைந்துள்ள மண்டபத்தை எடுத்தவராக கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி அரையன் மகனார் ஆதித்தன் உலகனான விசையாலய முத்தரையனைச் சுட்டுகிறது. திருச்சுற்று மாளிகையின் மேற்கிலுள்ள தூண்கள் சிலவற்றில், அவற்றை அளித்தவர்களாக மாத்தூர் மடந்தை பாகன் குருகுலராயன், கீரனூர் வாசிதேவன் காலிங்கராயன், நுணாங்குறிச்சிச் சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,செங்கனிவாயன் ஆகியோர் பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன.

4) படைப்பற்று குடியிருப்பின் அரையர்களே ஊரவையராக செயல்பட்டனர். கீழக்குருந்தன்பிறை,மேலக்குருந்தன்பிறை ஆகிய ஊர்களில் மறவர்களே குடியிருப்புகளில் அரையர்களே மாறன் சுந்தர பாண்டியனின் ஆதனூர் கல்வெட்டில் குறிப்பிடபடுகின்றனர். அரையர்களின் பெரியானான அரசு மிகா நாடாள்வான்,கேரளன் கன்னிறைந்தனான அங்கராயன்,பெருமாள் அரசனான வென்றுமுடிகொண்ட நாடாள்வான் ஆகியோரும்,மேலக்குருந்தன் பிறை ஊரசைந்த சோண்டனான இலங்கேஸ்வர நாடாள்வான்,அரசன் கண்ணிறைந்தனான இராசசிங்க நாடாள்வான்,காளையக்காள நாடாள்வான் தேவன் வில்லியான நாடாள்வான் இவர்கள் அனைவரும் படைப்பற்றின் அரையர்களாக ஆதனூர் சிவன் கோயிலில் காரான் கிழமைக்கு நிலம் வழங்கியதாக கொடை விளங்குகிறது. மறவர்கள் இப்பகுதியில் படைபற்றுஅம்பலம், ஊரவையர்,நாடாள்வார், அரையர், பேரரையர், நாட்டரசு கட்டியவர்களாக கல்வெட்டுகளில் கானப்படுகின்றனர்
சுந்தரபாண்டிய பேரரையன்:
கல்வெட்டு என்: 33:12 ""இக்கால் பனையூர் மறவரில் எட்டி பொன்னனான சுந்தர பாண்டிய பேரரையன் தன்மம்"
பனையூர் மறவரில் பேரரையன் ஒருவன் கொடுத்த தூன் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.
கோனாட்டு பேரரையன்:
கல்வெட்டு என்: 33:13 : ""இத்திருநிலைக்கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்"


5) ஐராவதீஸ்வரர் திருக்கோயில், இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை
செய்ததாக ஐதீகம். இக்கோயில் கல்வெட்டுக்களில் இவ்வூர் ""ராசராசப் பாண்டி நாட்டு உத்தமச் சோழ வளநாட்டு நாஞ்சில் நாட்டுக் கோட்டானான் மும்முடிச்சோழ நல்லூர்'' என்று குறிக்கப்படுகிறது .இக்கோயிலைக் கட்டுவித்தவன் ""சோழ மண்டலத்து மண்ணி நாட்டு முழையூர் உடையான் அரையன் மதுராந்தகனான் குலோத்துங்க சோழ கேரள ராசன்'' ஆவான் (காலம் கி.பி.1253),
6) ராஜேந்திரன் சோழனின் அரசியல் ஆலோசகன் மாராயன் அருண்மொழி,காலாட்படை தலைவன் உத்தமச்சோழன் கோன், பிரதம அமைச்சர் உத்தமச்சோழ பல்லவராயன், கப்பல்படைத் தலைவன் ஜயமூரி நாடாள்வான், தலைமைத் தளபதி அரையன் ராஜராஜன்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்