திங்கள், 13 நவம்பர், 2017

சோழ நாடாள்வான் கள்ளன்



நாட்டாள்வார் அல்லது நாடாள்வார் என்பது முற்காலத்தில் சிற்றரசர்களையோ அல்லது அந்த பகுதியின் தலைமையையோ குறிக்கும் மற்றும் பேரரசுக்கு கட்டுப்பட்ட அரசின் அதிகாரிக்கு வழங்கப்பட்ட பட்டமாகும். இது பிற்பாடு நாட்டார் என்றும் நாட்டு அம்பலம் போன்ற பதவி பெயராக மறுவியது இது.



வெள்ளாற்றின் வழக்கிலுள்ள கோனாடானது உறையூர்க் கூற்றம், ஒளியூர்க்கூற்றம் , உறத்தூர் கூற்றம் என மூன்று கூற்றங்களாகவும் வெள்ளாற்றின் தெற்கிலுள்ள கானாடானது மிழலைக் கூற்றம், அதழிக் கூற்றம் என இரண்டு கூற்றங்களாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. இக்கூற்றங்களை 10,11-வது நூற்றாண்டுகளில் அரையர் அல்லது நாடாள்வார் என்னும் தலைவர்கள் ஆண்டு வந்தனரென்று கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது.

கள்ளர் அரையர் பட்டத்தை போலவே நாடாழ்வான் பட்டங்களில் அதிமாக காணப்பட்டனர் .

முடிகொண்ட சோழ நாடாள்வான், குலோத்துங்க சோழ நாடாள்வான், அம்புகோவில் நாடாள்வான்,  அதளையூர் நாடாள்வான், அரசு மிகா நாடாள்வான், ஏழகபடை மிகா நாடாள்வான், கன்னிறைந்தான் இராசசிங்க நாடாள்வான், கல்வாயில் நாடாள்வான், சோணாடு கடலாண்ட நாடாள்வான் என பல கல்வெட்டுகள் உள்ளன.

நாடு பாதி நாட்டார் பாதி என்பதற்கு ஏற்ப கள்ளர்களின்

நாட்டாள்வார்
கரைய நாட்டாள்வார்
சக்கரப்பநாட்டாள்வார்
நாட்டார்
அருமைநாட்டார்
அருவாநாட்டார்
பாலைநாட்டர்
ஏனாதிநாட்டர்
கங்கநாட்டார்
சோழகங்கநாட்டார்
நாட்டரையர்

என்ற பட்டமுடைய கள்ளர்கள் சோழநாட்டில் சிறப்புடனும் , பெருமையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.





கள்ளப்பால் கவிற்பா இவ்வூர் கள்ளன் சேந்தன் குலோத்துங்க சோழ மங்கல நாடாள்வான்


கள்ளப்பால் நாடு

1868 ஆம் ஆண்டு ஆவணம்..... மருங்கை சிங்க நாடாழ்வார்



தஞ்சையில் கள்ளர் பண்பாட்டு விழா  பத்திரிகை


நாட்டாழ்வார் இல்ல திருமண பத்திரிகை

சக்கரப்பநாட்டார்

இன்றும் நாட்டார்களாக நாட்டம்பலங்களாக, நாட்டாண்மைகாரர்களாக உள்ள தலைவர்களுக்கு சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, இராமநாதபுரம் முதலிய மாவட்டங்களில் அந்த அந்த கோயில்களில் பல கரைக்காரர்கள் (கரையாளர்கள்) கரை அம்பலக்காரர்கள் முன்னிலையில் அவர்களுக்கு நாட்டு அரசு கட்டி, பரிவட்டம், வாள் முதலிய சின்னம் வழங்கி எந்த கோவிலில் நாட்டு அரசு கட்டுகிறார்களோ அந்த இறைவனின் திருநாமத்தை நாட்டார்(நாடாள்வார்)களுக்கு சூட்டி மரியாதை செய்வது வழக்கம். இதில் அவர்கள் பணக்காரர் ஏழை என்று பார்ப்பதில்லை, பரம்பரையாக வரும் வழக்கம்.

கள்ளர் குடியை சேர்ந்த இராமசாமி நாடாள்வார் நினைவாக அவரது மகன் பழனியாண்டி நாடாள்வாரால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறது. சோழர் காலக் கல்வெட்டுகளில் தோற்றம் தரும் நாடாள்வார்களின் தொடர்ச்சியாக இந்நாடாள்வார்கள் தண்ணீர்ப்பந்தல் சத்திரம். இன்று இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.








திருமந்திரவோலை வானவன் பல்லவ தரையன் எழுத்து’ திருமந்திரவோலை நாயகம் இராஜராஜனான தொண்டைமான் எழுத்து. அரையன் இராஜராஜனான வீரராஜேந்திர ஐயமுரி நாடாள்வான் எழுத்து. வீரராஜேந்திர மழவராயன் எழுத்து’ (தென்னிந்திய சாசன புத்தகம் தொகுதி 3, பகுதி1, பாகம் 40) என்று இங்ஙனம் பல விடங்களில் வருகின்றன. திருமந்திரவோலை என்பது அமைச்சர்க்கும், திருமந்திரவோலலை நாயகம் என்பது முதலமைச்சர்ககும் உரிய பெயர்களாகும் இது சாசன ஆராய்ச்சியாளரின் துணிபு.



கள்ளர்களில் நாட்டாள்வார் அல்லது நாடாள்வார் என்னும் பட்டந்தரித்தோர் பல இடங்களில் பெருந்தொகையினராக இருக்கின்றனர். நாடாள்வார் என்னும் இப்பெயர் முதல் குலோத்ததுங்கன் மகனாகிய விக்கிரம சோழனுக்கு வழங்கியுள்ளது.



சிவகங்கை நாட்டைச் சேர்ந்த திருக்கோயில்களின் நடைமுறைகளில் நாட்டார் நகரத்தார்களின் ஈடுபாடும் பங்கும் பெருமைபடக் கூடிய அளவில் அமைந்திருப்பதைக் காணலாம்.  நகரத்தார்களைப் போன்றே நாட்டார்களும் ஆலயம் சார்ந்த திருப்பணிகளில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கின்றார்கள்.  நாட்டார்கள் என்று அழைக்கப்படுபவர் பெரும்பாலும் கள்ளர் சமூகத்தினரே ஆவர்.  மறவர், அகம்படியார் போன்ற பிறரும் நாட்டார் என்று அழைக்கப்படினும் பெரும்பாலும் இந்தப் பட்டத்திற்குத் தகுதியுடையோராய்த் திகழ்பவர் கள்ளர் சமூகத்தினரே. 

குருபரம்பரைப் பிரபந்தம் என்னும் தமிழ்ச் செய்யுள் நூலில், இராமாநுசர் சரிதையில்,

‘சீராரு மரங்கத்துச் சிலபகல்கண் மன்னவந்நாட்
பாராளு மன்னவன் பாகவத ரிடத்திலென்றும்
ஆராத காதலனாம் அகளங்க நாடாள்வான்
ஏராரும் வைகுந்த நாடாள வேகினான் (794)
என்று கூறப்படுதல் காண்க. (செந்தமிழ் தொகுதி 3, பாக்கம் 347-351)

விக்கிரமனுக்குப் பின்னர் ஸ்ரீரங்கத்தில் சிற்றரசர்களாயிருந்தோர்க்கும் இப்பெயர் வழங்கிய செய்தி கல்வெட்டக்களால் வெளியாகின்றது. அது பின்பு காட்டப்படும். இவைகளிலிருந்து முடியுடை வேந்தராகிய சோழர்க்கு வழங்கிய நாடாள்வார் என்னும் பெயர் அவ்வழியினர்ககும் ஆட்சி சுருங்கிய பிற்காலத்தும் வழங்கி வந்திருப்பது புலனாம். இவ்வாறே மற்றும் பல பட்டங்கள் சோழர்க்குரியன கள்ளரிடத்திற் காணப்படுகின்றன.



ஸ்ரீரங்கத்திலுள்ள ஓர் கல்வெட்டிலிருந்து, அங்கிருந்த கைக்கோள முதலிகள் சிலர் அவ்வூர் தலைவராகிய அகளங்க நாட்டாள்வார் உயிர் துறக்க நேரும்பொழுது தாமும் உடன் உயிர் துறப்பதாகப் பிரதிஞ்ஞை செய்து கொண்டனர் என்னும் செய்தி வெளிப்படுகிறது. குருபரம்பரை, இராமநுஜ திவ்யசரிதை இவ்விரு பிரபந்தங்களிலும் அகளங்க நாட்டாள்வான் இராமாநுஜரது சீடனாகக் கூறப்படுகின்றான். திருச்சிராப்பள்ளியில் இன்றும் நாட்டாள்வார் என்று, கள்ளரில் ஒரு வகுப்பினர் இருக்கின்றனர். இப்பெயர் தற்காலம் நாடாவார் என மருவி நிற்கிறது. (செந்தமிழ், தொகுதி 3, பக்கம் 252) இங்ஙனம் எத்தனையோ பல சான்றுகள் இவர்களது பழைய ஆட்சி நிலையைக் குறிப்பனவாகவுள்ளன.

கோப்பரகேசரின் (முதற்பராந்தகனின்) திருக்கட்டளைக் கல்வெட்டில் வல்லநாட்டுக் கவிர்ப்பால் கள்ளப்பால் நாடாய் இசைந்த நாட்டோமும் எனும் குறிப்புக் காணப்படுகிறது. இதே இடத்தில் காணப்படும் முதற்குலோத்துங்கனின் கல்வெட்டில் தென்கவி நாட்டுக் கள்ளப்பால் கற்குறிச்சி எனும் செய்தி கூறப்படுகிறது.

இக்கல்வெட்டுக்களில் இடம் பெரும் கள்ளப்பால் எனும் சொல் கள்ளர் வாழும் பகுதி என விளக்கம் பெறும். மேற்குறிப்பிடப்பட்ட கல்வெட்டில் (232 ) இவ்வூர் (கற்குறிச்சி) க் கள்ளன் பாப்பான் சேந்தனான குலோத்துங்க சோழ நாடாழ்வான் எனும் கள்ளர் தலைவனின் பெயர் கூறப்படுவது.

ராஜராஜ வளநாடு தென்கவி நாட்டு கள்ளபால் கல்குறிச்சி மகாதேவருக்கு இவ்வூர் கள்ளன் பாப்பான் சொந்தனான குலோத்துங்க சோழ நாடாள்வான் இவ்வூர் கள்ளன் அமராபதி குப்பையை சாத்தி திருகற்றளி மகாதேவருக்கு வைத்த திரு நந்தா விளக்கு ..' (முதலாம் குலோத்துங்க சோழனின் 48 வது ஆச்சி ஆண்டு ,கிபி 1118,IPS-232,புதுகோட்டை ஆலங்குடி தாலுகா )



கள்ளர் வாழும் பகுதியே கள்ளர்பால் எனும் கருத்தை உறுதிப்படுத்தும். கற்குறிச்சியும் (711 ) சிங்கமங்கலமும் (683 ) படைபற்றுக் குடியிருப்புக்கள் எனக் கூறப்படுகின்றன. இவை கள்ளர் படைகள் நிலைபெற்றிருந்த குடியிருகள் எனக் கருதலாம்.







மாறன் சுந்தரனின் நெய்வாசற் கல்வெட்டில் (260 ) திருத்தியூர் முட்டத்தாரான வண்டாக்குடிக் கள்ளர் பக்கல் விலைகொண்ட வண்டாங்குடி எனக் கூறப்படுகிறது. இங்கு வண்டாங்குடி என்பது ( வெள்ளான் வகை போன்று ) கள்ளரின் கூட்டுரிமை நிலத்தைக் குறிப்பதாகும். கள்ளர் பற்று எனும் குறிப்பும் இதே பொருளைத் தரும்.

வெள்ளைநல்லூர் (வெள்ளனூர்)ச் சிவாலயத்தின் அர்த்த மண்டபத்தைக் கட்டிய சிறுவாயில் நாடன் முடிக்கொண்ட சோழ நாட்டாழ்வான் என்பான் ஆலியர் கோன் எனக் கூறப்படுகிறான் (115). ஆலி நாட்டுக் கள்ளர் குழுவின் தலைவனான (ஆலியர்கோன்) இந்நபர் புதுகைப் பகுதியில் சோழரின் உயர் அலுவலராகப் பணிபுரிந்துள்ளான் எனக் கருதலாம். கற்குறிச்சி வரகுணவதி அரையனான நக்கன் செட்டி என்பவன் பிச்சை எடுத்து (உஞ்ஞட்டு) திருவப்பூர் (திருக்கோகர்ண)ச் சிவாலயத்திற்க்கு அறக்கோடை வழங்கியுள்ளான் (239). கள்ளர் குடியிருப்பான கற்குறிச்சி அரையனான இவர் கள்ளர்க்குலத்தவர் எனவும் வணிகத்தில் ஈடுப்பட்டமையால் செட்டி எனும் பிற்சொல்லைப் பெருவதாகவும் கருதலாம்.

கிபி 1462 ல் புதுக்கோட்டையின் சில பகுதிகளை ஆட்சி செய்த ஸ்ரீரங்க பல்லவராயரின் கள்ளர் படைபற்று!! கள்ளப்பால் கற்குறிச்சி பற்று!!!! என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.


பல்லவர் வழியும் சோழர் வழியும் ஒன்றுபட்ட ஓர் வகுப்பு இஃது எனலும் பொருந்தும்.

நன்றி

திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்