திங்கள், 6 நவம்பர், 2017

கள்ளர் குல பட்டங்களும் விளக்கங்களும்


1. அங்கராயர்

முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் அங்கம் என்ற நாட்டை வென்று கங்கையில் நீர் எடுத்த வீர பரம்பரையினர். அங்கதேசம் மகாபாரத கர்ண மகா ராஜவின் நாடாகும்.

2. அச்சிராயர்

சோழப் படையில் குதிரை வீரர்களின் தலைமை ஏற்று வெற்றி வாகை சூடிய வீர பரம்பரையினர். அச்சுவவாரியார் என்பது மருவி அச்சிராயர் என வழங்கப்படலாயிற்று.

3. அண்டங்கொண்டார்

சோழப்பேரரசன் அண்டசோழன் வம்சாவழியினர். அண்டபுரம், அண்டகுடி, அண்டக்குளம், அண்டத்துரை என்னும் ஊர்கள் இப் பட்டங்களின் அடியாகப் பிறந்தவைகளாகும். அண்டமாண்டார், அண்டப்பிரியர், அண்டமாளியார், அண்ணூண்டார், அண்ணூத்திப்பிரியர், அண்ணுப்பிரியர் என்னும் பட்டங்களும் இவர்களை சார்ந்தவையே.

4. அதிகமார்

அதிகமான் நெடுமானஞ்சி என்னும் கடையெழு வள்ளல்களில் ஒருவனான மன்னரின் பரம்பரையினர். அதியமான் நெடுமான் அஞ்சி என்ற இயற்பெயர் கொண்ட இம் மன்னன் இன்றைய தர்மபுரியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தான். முதன் முதலாக கரும்பினை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய மன்னனும், கருநெல்லிக் கனியை ஔவைக்கு அளித்து பெருமை பெற்றவனும் இவனே. இவனது வம்சாவழியினர் பிற்காலச் சோழர்கள் காலத்தில் தகடூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்கள்.

5. அதிகாரி

சோழஅரச ஆணைகளை தலைமையேற்று செயல் படுத்திய நிர்வாகிகள். இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இவர்களின் பட்டப்பெயர்கள் அதிகமாக கானப்படுகின்றன.

6. அச்சமறியார்

சோழர் படையில் தற்கொலைப் படைப்பிரிவினராக இருந்தவர்கள். அரசர்கள் போர்க்களம் புகுமுன் காளிக்கோயிலின் முன் வைக்கப்பட்டிருக்கும் சூலாயுதங்களின் மீது மோதி தங்கள் தலையை துண்டித்துக்கொள்ள, இவர்களின் குருதியை திலகமிட்டு அரசர் முதல் போர்வீரர்கள் அனைவரும் களம் புகுவார்கள்.மரணபயமே இல்லாத இவர்கள் அச்சமறியார் என பட்டம் சூட்டப்பட்டனர்

7. அரியப்பிள்ளை

அரியசந்திர சோழன் மரபினர். இவன் அரிப்பிரியன் என்னும் இன்னொரு பெயரால் அழைக்கப்பட்டமையால் இவனது மரபினர் அரியப்பிள்ளை, அரியப்பிரியர் எனவழைக்கப்பட்டார்கள். அரியசந்திரபுரம், அரியலூர், அரியமங்கை, அரியக்குடி என்னும் ஊர்களையும் அரிசிலாறு, அரியசந்திரநதி என்னும் ஆறுகளையும் உண்டாக்கியவர்களும் இவர்களே.

8. அரசாண்டார்

அரசதேவன் என்னும் சோழ மன்னனின் சந்ததியினர். அரசதேவன் அரசாண்டான், அரசுக்குடையான் என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்பட்டமையால் இவனது மரபினர் அரசாண்டார், அரசுக்குழைத்தார், அரசுக்குடையர் என்னும் பட்டங்களை பெற்றனர். அரசதேவன் அரசூர், அரசங்குடி, அரசமங்கலம், அரசங்குளம், அரசபட்டு என்னும் ஊர்கள் இவர்களால் உருவாக்கப்பட்டவை.

9. அம்மாலைத்தேவர்

செம்பியர் மரபில் வந்த அம்பன் என்னும் மன்னனின் சந்ததியினர். அம்பராயன்பேட்டை, அம்பத்தூர், அம்புக்கோயில் என்னும் ஊர்களை உண்டாக்கியவர்கள்.

10. அருவாநாட்டார்

அருவாநாட்டை ஆண்ட சங்ககால சிற்றசன்அருவன் என்னும் ஆதி அருமனின் மரபினர். அருவாநாடு இன்றைய கொள்ளிடத்திற்கு வடக்கே தென்னார்க்காடு மாவட்டதின் பெரும் பகுதியில் பரவிக்கிடக்கும் இடமாகும். குறுந்தொகைப் பாடல் 293ம் நற்றிணைப் பாடல் 367ம் இதனை உணர்த்துகின்றன.அருவாத்தலைவர், அருமைநாடர், அருமைநாட்டர், அருமைநாடார் என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

11. அழும்புள்ளார்

மானவிறல் வேள் என்னும் குறுநில மன்னனின் மரபினர். புதுக்கோட்டை மாவட்ட அழும்பில் என்னும் ஊரை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டதால் இவனும் இவனது மரபினரும் அழும்பில்லார் என்றும் பின்னர் மருவி அழும்புள்ளார் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

12. அன்னவாசல்ராயர்

அன்ன சோழ மன்னனின் சந்ததியினர். அன்னசோழன், அன்னவாயில், அன்னப்பன் பேட்டை, சித்தன்னவாசல் போன்ற பகுதிகளை ஆண்டவர்கள்

13. அமரகொண்டார்

சோழ மன்னர்களின் இறுதிவெற்றிக்கு வித்திடும் வித்தகர்களின் மரபினர். பகைவர் முனையிடத்தே போரினை மேம்படுப்பார் சிலர்க்குப் படைக்கலம் வழங்கும் முறைமையும் உண்டு. (சிலப்பதிகாரம்). அமரண்டார், அமராண்டார் என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

14. அகத்தியர்

பொதிய மலையை தமது இருப்பிடமாக கொண்டு தமிழ் சங்கம் நடத்தி வந்தவர் தொன்முதுக் குடி சார்ந்த அகத்திய முனிவர். சங்ககாலத்தில் தலைச்சங்கம், இடைச்சங்கம் என்பவற்றிக்கு தலைமை தாங்கி தமிழ் வளர்த்த பெருமை பெற்ற அகத்திய முனிவரின் வம்சமே அகத்தியர். அகத்தியர்அகத்தியார் எனும் பட்டங்களை சுமந்த கள்ளர்களும் இவர்களே. காவிரி ஆற்றின் உற்பத்திக்கு வித்திடவரும் அகத்தியர் என்று மணிமேகலை உரைக்கிறது. தொல்காப்பியர் முதலான பன்னிரு பெரும் புலவர்கட்கு ஆசிரியராகவும் அகத்தியர் இருந்தார் என இலக்கிய வரலாறு முதல் பாகம், பக்கங்கள் 43,44 கூறுகின்றன.

15. அசையாத்துரையர்

சோழ அரச மரபினர். அம்மையபுரம், அம்மையப்பன், அம்மளூர் என்னும் ஊர்களும், அம்மாணியாறு என்னும் பேராறும் இப் பட்டங்களுக்கு பெருமை சேர்ப்பவை. அசையாத்துரையார், அம்மைத்துரையர் என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்

16. அச்சித்தேவர்

முதலேழு வள்ளல்களில் ஒருவரான செம்பியன் மரபில் வந்த அச்சுத மன்னனின் வம்சமே அச்சித்தேவர். இவர்கள் அமைத்த ஊர்கள் அச்சுதமங்கலம் மற்றும் அச்சுதன் குடி என்பனவாகும்.
அச்சுத்தேவர், அச்சுதர், அச்சுதராயர், அச்சுதபண்டாரம் என்னும் பட்டங்களும் இவர்களை சார்ந்தவையே.

17. அடைவளைஞ்சார்

அடைவளை சோழன் இவர்களின் மூதாதையாவான். அடைக்கப்பட்டு மற்றும் அடையாறு (சென்னை) இவர்களின் நகரமாகும். அடவளைஞ்சார், அடவளைந்தார், அடைவளைந்தார், அடைக்கப்பட்டார், அண்டம்வளைந்தார் என்னும் பட்டங்களும் இவர்களை சார்ந்தவையே.

18. அண்ணாகொண்டார்

அண்ணா என்றழைக்கப்படும் திருவண்ணாமலையை வெற்றி கொண்டு ஆண்ட சோழ மன்னர் பரம்பரையினர். (அண்ணா திருவண்ணாமலை பக்கம் 21 கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்)

19. அத்தணியார்

திருவோலக்க மண்டபத்திற்கு உரிய அரச மரபினர். அரசன் போர்க்களம் புகுந்தபோது திருவோலக்க மண்டபத்தை காத்து, அரசன் நாடு திரும்பும்வரை நிர்வாகப் பொறுப்பை ஏற்று செயல் பட்டவர்கள்

20. அத்தியரையர்

அத்தி என்னும் சிற்றரசனின் வழிவந்தவர்கள் (அகநானூறு) அத்தங்குடி, அத்திக்கரை, அத்திப்பட்டு, அத்திப்புலியூர், அத்திச்சோழமங்கலம், அத்திக்கடை, அத்திப்பேட்டை, அத்தியூர், அத்திப்பாக்கம், அத்திவெட்டி, அத்திக்குடி என்னும் ஊர்களும் கோயில் தலங்களும் இவர்களின் பட்டப் பெயர்களின் அடிப்படையில் ஏற்பட்டவையே. அத்திஅரையர், அத்திரையர், அத்திராயர், அத்தியாக்கியார், அட்திரியாக்கியார், அத்திரிமாக்கியார், அத்திப்பிரியர், அத்தியாளியார்,அத்திரியர் என்னும் பட்டங்களிளும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

21. அயிரப்பிரியர்

அய்வசோழனின் (ஐவசோழன்) மறு பெயரான அயப்பிரியன் வழி வந்தவர்கள். அய்யப்பிரியர் என்றும் அழைக்கப்படுவர். அய்யம்பேட்டை, ஐயனாபுரம், ஐவூர், ஐவனல்லூர் என்னும் ஊர்களையும் ஐயனாறு, ஐயவையனாறு என்னும் ஆறுகளையும் உண்டாக்கியவர்கள்

22. அம்பர்கொண்டார்

சோழ நாட்டின் நன்னிலம் வட்டத்தில் அம்பர் என்னும் ஊரை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பரம்பரையினர். சங்கச் சான்றோரை ஆதரித்தஅம்பர்கிழான் அருவந்தை இவர்களின் மூதாதைகளில் ஒருவனாவான். அம்பர் நாடு உய்யக்கொண்டார் வளநாடு என்றும் அழைக்கப்பட்டது. இன்றைய வட ஆர்க்காடு மாவட்டம் வேலூர் வட்டத்திலுள்ள ஆம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட அரச பரம்பரையினர் அம்பர்கொண்டார் என்று உரைப்பாரும் உண்டு. இவை ஆய்வுக்கு உட்பட்டவை. அம்பர்த்தேவர், அம்பராண்டார் என்னும் பட்டங்களிளும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

23. ஆச்சராயர்

ஆச்சன் என்னும் அரசனின் மரபினர். இவனின் மறு பெயர்கள் ஆச்சராயன், ஆச்சாபிரியன், ஆட்சிப்பிரியன், இராசாப்பிரியன் என்பனவாகும். ஆச்சாபுரம், (பெருமண நல்லூர்) ஆச்சாமங்கலம், ஆச்சனூர், ஆச்சங்குடி, ஆச்சான்பட்டி என்பன இப் பட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஊர்களாகும். ஆச்சாப்பிரியர், ஆட்சிப்பிரியர், இராச்சாப்பிரியர் என்னும் பட்டங்களிளும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

24. ஆர்சுற்றியார்

சோழ மரபினர். ஆர் என்னும் ஆத்தி மாலை சூடியவர்கள். ஆத்தி மலர், பட்டை, இலை, வேர், மரம் போன்றவை மிகுந்த மருத்துவ குணம் உடையவை. சோழ மன்னர்களின் மலரும் ஆத்தி மலாரே. போர் காலங்களில் போர் வீரர்கள் அனைவரும் ஆத்தி மாலை அணிந்தே போர்க்களம் புகவேண்டும். போரில் ஏற்படும் காயங்களுக்கு இம் மாலையே மருந்தாகும். இம் மலர் தோட்டங்களை வளர்ப்பதும், மலர் மாலைகள் தொகுப்பதும், போர்வீரர்களை மாலை அணிய பணிப்பதும் இவர்களே. ஆத்திக்கோட்டை, ஆரம்பூண்டான் பட்டி, ஆத்தூர், ஆத்தங்குடி, ஆத்தமங்கலம், ஆர்சுற்றிப்பட்டு என்பன இப் பட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஊர்களாகும். ஆரம்பூண்டார், ஆரக்கண்ணியார், ஆரமுண்டார், ஆர்சுத்தியார், ஆரிச்சுற்றியார், மாலையிட்டார் என்னும் பட்டங்களிளும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

25. ஆலங்கொண்டார்

சோழ மரபினர். ஆலங்கோட்டை, ஆலங்குடி, ஆலந்துறை, ஆலம்பொழில், ஆலம்பாக்கம், ஆலம்பள்ளம், ஆலம்பாடி என்னும் ஊர்கள் இப் பட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஊர்களாகும். ஆலத்தரையர், ஆல்த்தொண்டமார், ஆலம்பிரியர், ஆலமாண்டார், ஆவத்தியார், ஆவாத்தியார் என்னும் பட்டங்களிளும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்

26. ஆய்ப்பிரியர்

கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனின் மரபினர். ஆயின் மறு பெயரான ஆளற்பிரியன் என்னும் பெயரால் ஆளற்பிரியர் என்றும் அழைக்கப்படனர். மேலும் ஆய் அண்டிரன், அண்டிரன் எனும் பெயர்களும் இவனுக்குண்டு. ஆய் பொதியமலையின் தலைவன். அதிசிறந்த பேர்வீரன். ஆய் குடி என்னும் ஊரைச் சார்ந்தவன்.சுரபுன்னை பூமாலை அணிந்தவன். பாணர்களுக்கும் இரவலர்களுக்கும் யானைகளையும், பொன், பொருள் என பரிசுகள் அளித்தவன். யாதொரு பயனையும் கருதாது இரவலர்களுக்கு கொடுத்து மகிழ்வித்தலையே கடமையாகக் கொண்டவன். (புறநானூற்றுப் பாடல்கள் 127, 136,240, 241,374, 375)

27. ஆரூரார் (ஆரார்)

சேழா வம்சத்தினர். திருவாரூரைத் (ஆரூரைத்) தலைநகராகக் கொண்டு ஆண்ட மனுநீதி சேழானின் பட்டமே இது. ஆரூண்டார், ஆரூராளியார், ஆராளியார் என்றும் இவர்கள் அழைக்கப்படுவர்.

28. ஆவணத்தார்

சேழா மரபினர். ஆவணம் என்னும் பகுதியை அரசாண்ட அரச குலத்தினர். தஞ்சை, திருவரூர் மாவட்டங்களில் ஆவணம் என்ற பெயரில் பல ஊர்கள் உண்டு.

29. ஆதித்தர்

ஆதித்தசேழானின் வசாவழியினர்.ஆதித்தசேழான் இலங்கையை வென்றவன். கொங்கு நாட்டையும் வென்று பொன் கொணர்ந்து தில்லை சிற்றம்பல கூரையை பொன்னால் வேய்ந்தவன். ஆதிவாத்தார், ஆதியார் என்ற பட்டங்களும் இவர்களுக்குண்டு.

30. இடங்காப்பிறந்தார்

இடைமச் சோழனின் மரபினர். இடைமச் சோழனின் வேறு பெயரான இடங்காப்பிறந்தார் என்னும் பெயரில் இவனது மரபினர்கள் இடங்காப்பிறந்தார் எனஅழைக்கப்பட்டார்கள். முல்லை நில மக்களுக்கு இடையர் என்ற பட்டத்தை வழங்கியவனும் இடைமச் சோழனே. இடங்கான் கோட்டை, (எட மேலையூர்) இடை மருதூர், இடையாறு, இடைவாய் (விடைவாய்) இடைக்குலம், இடைப்பள்ளம், இடையாத்தி மங்கலம், இடைக்கோரை, இடையூர், இடையகாடு, இடைக்குடி என்னும் ஊர்களை உண்டாக்கியவர்களும் இவர்களே

31. இரட்டைப்பாடியார்

முதல் இராஜெந்திர சோழன் காலத்தில் மேலைச்சாளுக்கிய நாட்டின் நடுப்பகுதியாக இருந்த இரட்டைப்பாடியை வெற்றிக்கொண்டு ஆண்ட அரசமரபினர். இவர்களை இரட்டப்பிரியர் என்றும் அழைப்பதுண்டு.

32. இராசாளியர்

சோழ மரபினர். இராயசோழன் இவர்களின் மூதாதையாவான். இராயன்பேட்டை, இராயபுரம், இராயநல்லூர் (இராயந்தூர்) இராயமங்கலம், இராயங்குடி, இராயன்பட்டி (இராங்கியன்பட்டி) என்னும் ஊர்கள் இப்பட்டங்களின் அடிப்படையில் தோன்றியவைகளாகும். இவர்களை இராசாபிரியர், இராங்கியர்,இராயளியார், இராயர், இராயங்கொண்டார், இராயமுண்டார் என்றும் அழைப்பதுண்டு.

33. இருங்களர்
கடடைச்சங்க காலத்தில் வாழ்ந்த இருங்கோவேள் என்ற மன்னனின் மரபினர். இருங்களார், இருங்கள்ளர், இருங்கோ இளர் (இருக்கோளர்) என்றும் இவர்களை அழைப்பதுண்டு. சோழமண்டலத்திற்கும் பாண்டிமண்டலத்திற்கும் இடைப்பட்ட கொடும்பாளூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டவர்கள். இருங்கோவேளனின் மகள் வானவன் மாதேவி உத்தமசோழனின் மனைவியாவாள் ( பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி 1 பக்கங்கள் 7, 94)

34. ஈங்கொண்டார்

சோழ மரபினர். ஈசசோழனின் வம்சாவழியினர். ஈங்கை, ஈங்கோய்மலை (திருவீங்கோய்மலை) ஈங்கூர், ஈஞ்சூர், ஈசனூர் என்னும் ஊர்கள் இப் பட்டப் பெயர்களின் அடிப்படையில் அமைந்தவையாகும்.  ஈங்கு என்பது சந்தனத்தை குறிக்கும் மேலும் பாலை வழிநெடுக ஈங்கைக்கொடி பரவிக் கிடக்கின்றன என்று சங்க பாடல் மூலமும் மேலும் மருதத் திணை கருப்பொருள் ஈங்கை என்பதை கொண்டு ஈங்கைக்கொடி பற்றியும் நாம் அறியலாம்.

35. ஈழங்கொண்டார்

சோழ மரபினர். இலங்கை மேல் படை எடுத்து வேற்றி கொண்டவர்கள். ஈழத் தரைகளையும், திரைகளையும், கட்டியாண்டதால் ஈழத்தரையர், ஈழத்திரையர், ஈழங்கொண்டார் என்றும் இலங்கை அரசனின் கோட்டையையும் முடியையுங் கொண்டதால் கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டார், முடிகொண்டார் என்றும் அழைக்கப்பட்டனர். பிற்காலச் சோழர்களில் அனபாயசோழன் என்றழைக்கப்படும் குலோத்துங்கசோழன் ஈழத்தரையன், ஈழங்கொண்டான், கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டார், முடிகொண்டார் என்னும் பட்டப்பெயர்களை தன் சிறப்புப் பெயர்களாகக் கொண்டிருந்தான் என கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

36. கருப்பட்டியார்

கரும்பைப் பிழிந்து காய்ச்சிச் சர்க்கரை செய்து திருக்கோவில்களுக்கு பூசனை பொருள்களாகச் சர்க்கரை, கருப்பட்டி, கரும்புச்சாறு, கரும்பு போன்றவற்றை வழங்கியவர்கள். புதுக்கோட்டை, கருப்பட்டிவிடுதி, கருப்பட்டிப்பட்டி, மடிகை, ஒரத்தநாடு முதலிய ஊர்களில் இவர்கள் அதிகமாக வாழ்கின்றனர்.

37. கருடியார்

போர்ப்பயிற்சி செய்கின்ற மறவர் கூட்டம் கருடிக்கூட்டம் என்றழைக்கப்ப்டும். எனவே இப்பட்டம் கள்ளர்களில் படைப்பயிற்சியை வழங்கியவர்களுக்குரியதாகும். நாட்டாட்சியோடும், போர்களங்களோடும் இவர்கள் நெருங்கிய தொடர்புடையவர்கள்

38. கோதண்டப்பிரியர்

சோழர் படையில் வில் ஏந்தி போர்புரிந்தோர். வில் வித்தையில் சிறந்த போர்த் தளபதிகளாக விளங்கியவர்கள். ஒரத்தநாடு, சூரக்கோட்டை போன்ற ஊர்களில் இவர்கள் அதிகமாக வாழ்கின்றனர்.

39. சங்காத்தியார்

போர்க்களங்களில் போரின் தொடக்கத்தையும் வெற்றியையும் சங்கொலி எழுப்பி அறிவிக்கும் உரிமை கொண்ட மரபினர். இவர்கள் பெயரில் திருத்துறைப்பூண்டிற்குப் பக்கத்தில் சங்கேத்தி என்னும் ஊரும் உண்டு.

40. கண்டியர்

இராசகண்டியன், இராசராச சோழனின் சிறப்புப் பட்டங்களில் ஒன்றாகும். இராசகண்டியன், இராசகண்டியர் என்று உருமாறி இன்று கண்டியர் என்று அழைக்கப்படுகின்றனர். செம்பியன் மரபில் வந்தவர்கள். கண்டியூரென்னும் (தேவாரம் பெற்ற) சிவதலத்தையும், கண்டியூர், கண்டியன்பட்டு (இன்றைய கண்டிதம்பட்டு) கண்டியன் காடு என்னும் ஊர்களையும் உருவாக்கி ஆண்டவர்கள். இவர்க ளின் கண்டியூர் அரண்மனை சோழநாட்டு நித்தவிநோத வளநாட்டு கிழார்க் கூற்றத்து ஆயிரத்தளி அரண்மனை என்ற பெயருடையது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1244) சோழர்களை வென்று இந்த அரண்மனையில் தான் முடிசூடிக்கொண்டான் என்பது வரலாறு. இராசராச சோழன் ஈழத்தை வென்று பண்டைய தலைநகரான அணுராதபுரத்தை அழித்த பின் சனநாதமங்கலம் என்ற புதிய ( இன்றைய பொலன்னருவா) தலைநகரை உருவாக்கினான். நாக நாடு, வன்னி, திரிகோணமலை, பொலன்னருவா மற்றும் அணுராதபுரம் போன்ற இடங்களே சோழ
ஆட்சிக்கு உட்பட்டிருந்தது (மகாவம்சம்) இக் கால கட்டத்தில் இலங்கையின் தென்பகுதி சோழனின் ஆட்சிக்கு உட்படவில்லை. தொடர்ந்து சிங்கள மன்னர்களின் ஆட்சியில் இருந்ததால் இடையூராக இருந்தது. இந்நிலையை மாற்றி இலங்கை முழுவதும் சோழனின் ஆட்சி அமைய போர் படை அமைத்து தலைமை தாங்கி வெற்றி கண்டவன் கண்டியூர் இளவரசன் இராசகண்டியன். இதன்பின் இலங்கையின் மையப்பகுதியில் புதிய தலைநகரை உருவாக்கி இராச கண்டியன் மாநகரம் என்று பெயரும் சூட்டப்பட்டு சோழனின் பிரதிநிதியாக ஆட்சி ஏற்றான். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராச கண்டியன் மாநகரம் கண்டி என்ற பெயருடன் ராஜதானியகவே திகழந்தது. இன்றும் சிங்கள மக்கள் கண்டியை மாநுவர என்ற பெயர் கொண்டே அழைக்கின்றனர். மாநுவர என்றால் சிங்கள மொழியில் தலைநகரம், மாபெரும் நகரம் அல்லது ராஜதானி என்று பொருள் படும். உலக நாடுகளில் முதன் முதலில் சோழனின் ஆதிக்கத்தை ஏற்படுத்திய பெருமை இராசகண்டியனுக்கே உரியது. இதனை பெருமைப்படுத்தவே இராசராச சோழன் இராசகண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தை தான் ஏற்றான் என்பதும் வரலாறு.

41. உத்தங்கொண்டார்

சோழ மரபினர். பிற்காலச் சோழர்களில் இரண்டாம் இராசேந்திர சோழன் இப்பட்டத்தை சிறப்பு பட்டமாக கொண்டிருந்தான். உத்தமுண்டார், உத்தமங்கொண்டார், உத்தமண்டார், உத்திமாண்டார், உத்தப்பிரியர், உத்தமப்பிரியர், யுத்தப்பிரியர் எனும் பெயர்களிலும் இவர்கள் அழைக்கப்ப்டுகிறார்கள்.

42. உய்யக்கொண்டார்

சோழ மரபினர். இராசராச சோழன் இப்பட்டத்தை சிறப்பு பட்டமாக கொண்டிருந்தான். உய்யக்கொண்டார் என்னும் பெயரில் இராசராச சோழன் காலத்தில் ஒரு வள நாடும் சோழநாட்டில் இருந்தது. உய்யக்கொண்டான் சோழபுரம், உய்யக்கொண்ட ராவியும், உய்யக்கொண்டான் ஆகிய ஊர்கள் இப்பட்டங்களில் அமைந்த ஊர்களாகும். உய்யக்கொண்டான் வாய்க்கால், உய்யக்கொண்டான் மலை என்பனவும் இப்பட்டங்கள் சார்ந்தவையாகும்.

43. உலகங்காத்தார்

தமிழ்கூறு ந்ல்லுலகத்தைக் காத்தவர் மரபினர். சோழர்களில் உலகநாத சோழன் இப் பட்டத்தை பெற்றிருந்தான். உலகுண்டம், உலகங்காத்தான்பட்டி ஆகிய ஊர்கள் இப்பட்டங்களில் அமைந்த ஊர்களாகும். உலகுகாத்தார், உலகாண்டார், உலகுடையர், உலகுடையார், உலகுய்யர், உலயர் எனும் பெயர்களிலும் இவர்கள் அழைக்கப்ப்டுகிறார்கள்.

44. உழுக்கொண்டார்

அரச மரபினர். பகை அரசர்களை வென்றபின் அவர்களுடைய கோட்டைகளை அழித்து ஏர் பூட்டி யானை, கழுதை, மாடு கொண்டு உழுதவர்கள்.இவர்களுக்குரிய வேறு பட்டங்கள் உழுப்பிரியர், உழுவாண்டார், உழுவண்டார், உழுவாட்சியார், உழுவாளர் உழுவடையர், உழுவுடையார் என்பன

45. உறந்தைகொண்டார்

உறையூர் சோழ மரபினர். உறந்தை ஊர்களுக்கெல்லாம் தலை சிறந்த ஊராக திகழ்ந்தது. உறந்தைப்பிரியர், உறந்தையர், உறந்தையாண்டார், உறந்தையாளர், உறந்தைராயர், உறயர், உறியர் எனும் பெயர்களிலும் இவர்கள் அழைக்கப்ப்டுகிறார்கள்..

46. ஊணர்

போர் வெற்றிக்குப் பின் பகை அரசர்களின் முடிதலைகளை அடுப்பாக கொண்டு பேய்களுக்கு உணவு படைத்த வீரர்களின் மரபினர்.

47. மண்வெட்டிக்கூழ்வாங்கியார்

கூழைமன் என்ற அரசனின் மரபினர். கூழைமன் காலத்தில் பூமியில் சுரங்கம் வெட்டி பொன் எடுக்கும் வழக்கம் உண்டாயிற்று. மண்ணை வெட்டிப் பொன்னை எடுத்ததாலும் கூழ் என்றால் பொன் என்பதனாலும் மண்வெட்டி க்கூல்வாங்கியார் என்ற பட்டம் உண்டாயிற்று. மண்வெட்டியில் கூழ்வாங்கியார், மண்வெற்றிக்கூழ்வாங்கியார், மன்வெற்றிக்கூழ்வாங்கியார், கூழாக்கியார், கூழாளியார்,கூழாணியார், கூழையர் என்ற பட்டங்களும் இவர்களையே சார்ந்தவை.

48. மாள்சுத்தியார்

அரண்மனைகளையும், மாளிகைகளையும் காவல் காத்து நின்ற காவல் மரபினர். போர்க்கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள்.மாளிச்சுத்தியார், மாளிச்சுற்றியார், மாளிகைசுத்தியார், மாளுசுத்தியார், மாளுசுற்றியார், மாளுவராயர் என்றும் அழைக்கப்பட்டனர்.

வெள்ளாளரைப் பற்றிய சாசனங்களெல்லாம் அவர்களை 'நிலத்தரசு' என்றே குறிப்பிடுகின்றன. சோழ பாண்டியரைப்போல் முடியரசாக இல்லாமை பற்றியே நிலத்தரசு என்று குறிப்பிட்டடிருக்கவேண்டும். நெடுங்காலம் வெள்ளாளர் நலத்திலும் பலத்திலும் மிக்கு வாழந்தனர். அதன் பின், கோனாடானது சம்மதிராயர் கடம்பராயர், மாளுவராயர், என்ற தலைவர்களிடம் கீழ்ப்பட்டிருந்தது. “குடகக் கொங்கரு மாளுவ வேந்தரும் (சிலப். 30, ௧௫௯)”, இவர்கள் மாளுவ நாட்டை வென்றவர்களாக இருக்கலாம்.


49. விசயத்தேவர்

முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சியில் ஸ்ரீ விசயம் என்ற நாட்டை வென்றவர்கள். ஸ்ரீ விசயநாடு இன்றைய சுமத்ரா நாடாகும்.ஸ்ரீவிசயத்தேவர் என்று அழைக்கப்பட்ட இவர்கள் ஸ்ரீ தவிர்த்து விசயத்தேவர் மற்றும் விஜயதேவர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.


50. விஞ்சைராயர்

வாஞ்சி சோழன் இவர்களின் மூதாதையாவான். வாஞ்சியாறு, வாஞ்சியூர், வாஞ்சிமங்கலம், வாஞ்சிகுடி என்னும் ஊர்கள் இவர்களின் கோட்டைகளாகும். வீர தீர செயல்களுக்கு பெயர் பெற்றவர்கள்.விண்னையும் மண்னையும் விஞ்சியவர்கள் என்பது இவர்களின் சிறப்பு.வஞ்சிராயர், விஞ்சிராயர், வாஞ்சிராயர்,விஞ்சிரார் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

51. விசுவராயர்

விசயாலய சோழன் இவர்களின் மூதாதையாவான். சோழ சாம்ராஜியத்தை மீண்டும் நிலை நாட்டியவன். விசராயர், விசுவரார், விசயராயர், விசையராயர்
என்றும் பட்டங்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

52. தொண்டைமான்

தொண்டை நாட்டு அரச மரபினர். கரிகால சோழனின் இளைய மகன் தொண்டைமான் கிழக்கே கடலையும், தெற்கே பொண்ணையாற்றையும், மேற்கே பவள மலையையும் வடக்கே திருவேங்கிடமலையையும் எல்லைகளாகவும் காஞ்சிபுரத்தை தலைநகராகவும் கொண்டு ஆண்டவன்.

தொண்டைமான் இளந்திரையன்,சோழன் நெடுமுடிக்கிளிக்கும், நாகநாட்டு இளவரசி பீலிவளைக்கும் பிறந்தவன். தலை சிறந்த வீரமும் கொடை நலமும் வாய்க்கப்பெற்றவன். கவி பாடும் திறமை பெற்றவன், புறநானூற்றிலும், நற்றிணையிலும், பெரும்பாணாற்றுப்படையிலும் அவ்வையார் பாடலிலும் இடம் பெற்றவன். பொன்னம்பலநாத தொண்டைமான் இலங்கையை ஏழு நாட்களில் அழித்தவன் தொண்டைமான் ஆவுடைரகுநாத தொண்டைமான் இவர்கள் எல்லாம் தொண்டைமான் வம்சம் சார்ந்தவர்கள். தொண்டைமார், தொண்டையார், தொண்டைபிரியர், தொண்டைமான் கிளையர் என்றும் பட்டங்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

53. நந்தியர், நந்திராயர், நந்தியராயர்

சோழ மரபினர், நந்திசோழன் இவர்கள் மூதாதையாவான். நந்திசோழன் காலத்தில் தோல் காசுகள் முதன் முதலில் புழக்கத்திற்கு வந்தது.தஞ்சை மாவட்டம் உத்தமர்குடியில் இவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்

54. நல்லப்பிரியர், நல்லிப்பிரியர், நள்ளிப்பிரியர்

கடையெழு வள்ளல்களில் ஒருவரான நள்ளியின் மரபினர். நள்ளியின் வேறுபெயரான நள்ளிப்பிரியர் என்னும் பெயரால் இவனதுமரபினர் இப்பட்டப் பெயர்களைப் பெறுவாராயினர். நள்ளி வலக்கையால் கொடுப்பதை இடக்கை அறியாது கொடுத்த வள்ளலாவான்.

55. மழவராயர், மழுவாடியார்

பிற்காலச் சோழ மன்னர்களின் கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் குடியில் பிறந்தவளாவாள். விசயாலய சோழன் மனைவிமழவராயர் குடியிலும், உத்தம சோழன் மனைவி மழுவாடியார் குடியிலும் பிறந்தவர்களாவர். மழவராயர் குடி சார்ந்தாவர்கள் அனைவரும் வீரத்தில் சிறந்து இருந்தனர். இவர்களின் குடியிருப்புப் பகுதிகள் மழ நாடு என்று அறியப்படுகிறது. அதியமான், சேரன், சோழன் போன்ற மன்னர்களுக்கு மெய்காப்பாளராக இருந்து சேவை செய்துள்ளனர்.

56. கோபாலன் :


ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவலூர் என்ற இன்றைய திருக்கோவலூர் மலையமான் என்னும் கள்ளர் குல மன்னர்களால் ஆளப்பட்டது. திருமுடிக்காரி இக்குடியில் பிறந்த வள்ளலாவான். கோவலூரை ஆண்டவர்கள் கோவலராயன் என்றுமழைக்கப்பட்டனர். இக்குடியினரின் மருவிய பட்டப்பெயரே இன்று கோபலர் என்று அழைக்கப்படுகிறது.

57. கோனேரிகொண்டான், கொன்னமுண்டான்,கோனேரிபிரியன், கோனேரிராயன், கோதண்டபிரியன், கோனேரியாண்டான், கோனேரியாளி:

15ஆம் நூற்றாண்டின் இறுதியில் விசயநகரப் பேரரசின் திருச்சி – தஞ்சைப் பகுதிகளின் அலுவலனாகப் பணியாற்றிய கோனேரிராயன் என்பவன் பேரரசிலிருந்து விடுவித்துக்கொண்டு தன்னாட்சியுடன் செயற்பட்டான்.

மூரியர்

மூரிய தேர்வல்லான் - வலிய தேரைஓட்டுதலில்
வல்லவனாகிய - 


மூரியர் - வலியர்



அம்மையத்தரையன், அசையாத்துரையன்

செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அம்மையன். அம்மையபுரம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அம்மையப்பன், அம்மளூர் என்னும் ஊர்களையும், அம்மணியாறு என்னும் பேராற்றையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் அம்மையத்தரையன், அசையாத்துரையன் என்ற பட்டங்களை பெற்றனர்.

அம்பராண்டான், அமரண்டான், அமராண்டான், அம்பர்த்தேவன், அம்மலத்தேவன், அம்மானைத்தேவன், அம்பானைத்தேவன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அம்பன். அம்பர்,அம்பர்மாகாளம் என்னும் இரண்டு சிவதலமுடைய அம்பர் என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அம்பராயன்,அம்பராண்டான்,அம்பர்த்தேவன் எனவும் வழங்கும். அம்பராயன்பேட்டை(அம்பராசன்பேட்டை) அம்பத்தூர்(அம்பகரத்தூர்) அம்புக்கோவில் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் அம்பராண்டான், அமரண்டான், அமராண்டான், அம்பர்த்தேவன், அம்மலத்தேவன், அம்மானைத்தேவன், அம்பானைத்தேவன் எனும் பட்டங்களை கொண்டனர்

அடைக்கப்பட்டான், அடைவளைந்தான், அடவளைந்தான், அடைவளஞ்சான், அண்டம்வளைந்தான்.

அண்டசோழன் மரபில் வந்த மன்னன் அடைவளைசோழன். அடைக்கப்பட்டு என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அடைக்கப்பட்டான், அடைவளைந்தான் எனவும் வழங்கும். அடைப்பாறு என்னும் ஆற்றையும் உருவாக்கி அரசாண்டவன். அடை என்பது நிலம் என்றும், வளைவதாவது சுற்றி வருவது என்றும் பொருள்படும். இதன் மூலம் இவர்கள் நிலத்தை சுற்றி அதன் எல்லைகளை வகுத்து மானியமாக நிலங்களை அளித்தவர்கள் (தினந்தோறும் திருக் கோவில்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு மற்றும் பூசனப்பொருட்களை வழங்குபவர்களுக்கு) என்றும் அறியப்படுகிறது. அடைக்கப்பட்டான், அடைவளைந்தான், அடவளைந்தான், அடைவளஞ்சான், அண்டம்வளைந்தான் என்னும் பட்டமுடைய கள்ளர்கள் திருவையாறு வட்டம் திருச்சினம்பூண்டி, திருச்சி மாவட்டம் கிளியூர் ஆகிய இடங்க்களில் அதிகமாக வாழுகின்றனர்.

அரசாண்டான், அரசுக்குடையான், அரசுக்குழைச்சான், அரச்சுக்குழைச்சான்
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் அரசதேவன், அரசபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அரசரிற் சிறந்தவன் என்று போற்றப்பட்டவன். இவன் அரசாண்டான், அரசுக்குடையான் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டான். அரசிலி, அரநெறி,அரதைப்பெரும்பாழி என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதலங்களையும், அரசூர், அரசங்குளம், அரங்குளம், அரசமங்கலம், அரசங்குடி என்ற ஊர்களையும் உண்டாக்கி ஆட்சிபுரிந்தான்.இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.

அரியதன், அரிப்பிரியன்,அரியப்பிள்ளை,
பஞ்சநதிசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி அரியசந்திரசோழன். அரிசந்திரபுரம் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அரியதன், அரிப்பிரியன் அன்வும் வழங்கும். காவிரி ஆற்றிலிருந்து அரிசிலாறு என்னும் பேராற்ரையும், முள்ளியாற்றிலிருந்து அரியசந்திர நதியையும் உருவாக்கினான். அரியலூர், அரியமங்கை,அரியக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் அரியதன், அரிப்பிரியன்,அரியப்பிள்ளை என்னும்பட்டங்களை கொண்டனர்.

அருவாநாட்டான், அருவாத்தலையன்.
கரிகால் சோழன் வழி வந்தவர்கள். காவிரியின் கழிமுகப் பகுதிக்கு வடக்கேயுள்ள பொண்ணையாற்று பள்ளத்தாக்கு அருவாநாடு என்று அழைக்கப்பட்டது. அதனை ஆண்டவர்கள் அருவாளர் எனப்பட்டனர். கரிகால் சோழன் இந் நாட்டை வெற்றி கொண்டு ஆண்டான் என்றும் வரலாறு கூறுகிறது.(30 கல்வெட்டுகள் வை.சுந்தரேசவாண்டையார்) அருவாநாட்டான், அருவாத்தலையன் என்னும் பட்டங்கள் அருவாநாட்டு வெற்றிகளோடு சம்பந்தப்பட்டுள்ளது. அருவா நாட்டின் வடபால் உள்ள பகுதி அருவாவடதலை நாடாகும். இதனை ஆண்டவர்கள் அருவாவடதலையான் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் திரிந்து அருவாத்தலையர் என்று வழங்கிவருகிறது. இப் பட்டமுடைய க்ள்ளர் குடியினர் மன்னார்குடி பைங்காநாடு என்ற ஊரில் வாழுகின்றனர்.

அதியமான், அதிகமான்.
அதிகமான் நெடுமானஞ்சி என்னும் கடையெழு வள்ளல்களில் ஒருவனான மன்னரின் பரம்பரையினர். அதியமான் நெடுமான் அஞ்சி என்ற இயற்பெயர் கொண்ட இம் மன்னன் இன்றைய தர்மபுரியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தான். முதன் முதலாக கரும்பினை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய மன்னனும், கருநெல்லிக் கனியை ஔவைக்கு அளித்து பெருமை பெற்றவனும் இவனே. இவனது வம்சாவழியினர் பிற்காலச் சோழர்கள் காலத்தில் தகடூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்கள்.

அத்திப்பிரியன், அத்திரியன், அத்திரிமாக்கி
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அத்திசோழன். அத்திக்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அத்திகொண்டான், அத்தியாண்டான், அத்திப்பிரியன், அத்தியாளி, அத்தியுடையான் எனவும் வழங்கும். அத்தங்குடி, (அதங்குடி) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தையும், அத்திப்புலியூர் என்னும் சிவதலத்தையும், அத்திக்கரை, அத்திப்பட்டு எனும் திருப்புகள் பெற்ற சுப்பிரமணிய தலங்களையும், அத்திசோழமங்கலம், அத்திக்கடை, அத்திப்பேட்டை, அத்தியூர், அத்திப்பாக்கம், அத்திவெட்டி, அத்திக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினருக்கு அத்திப்பிரியன், அத்திரியன், அத்திரிமாக்கி என்னும் பட்டங்கள் வழங்குகின்றது. அத்திரி என்பது கோவேறு கழுதையை குறிக்கும். பெருங்குடி மக்கள் அத்திரியை பயன்படுத்தி பிரயானம் செய்தனர். பெருங்குடி வணிகனாகிய கோவலன் அத்திரியில் சென்றதை சிலம்பு குறிப்பிடுகிறது. சங்க காலங்களில் தலைவன் கோவேறு கழுதையில் பயனித்ததை சங்க பாடல்கள் செப்புகின்றன.
இதன் மூலம் இப்பட்டங்கள் சங்ககாலம் முதல் வழக்கத்தில் உள்ளது என்பது தெரிய வருகிறது.இப்பட்டமுடையோர் அதிகமாக வாழும் ஊர்கள் தெரியவில்லை.

அங்கராயர்
முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் அங்கம் என்ற நாட்டை வென்று கங்கையில் நீர் எடுத்த வீர பரம்பரையினர். அங்கதேசம் மகாபாரத கர்ண மகா ராஜவின் நாடாகும்.

அச்சிராயர்
சோழப் படையில் குதிரை வீரர்களின் தலைமை ஏற்று வெற்றி வாகை சூடிய வீர பரம்பரையினர். அச்சுவவாரியார் என்பது மருவி அச்சிராயர் என வழங்கப்படலாயிற்று.

அதிகாரி
சோழஅரச ஆணைகளை தலைமையேற்று செயல் படுத்திய நிர்வாகிகள். இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இவர்களின் பட்டப்பெயர்கள் அதிகமாக கானப்படுகின்றன.

அச்சமறியார்
சோழர் படையில் தற்கொலைப் படைப்பிரிவினராக இருந்தவர்கள். அரசர்கள் போர்க்களம் புகுமுன் காளிக்கோயிலின் முன் வைக்கப்பட்டிருக்கும் சூலாயுதங்களின் மீது மோதி தங்கள் தலையை துண்டித்துக்கொள்ள, இவர்களின் குருதியை திலகமிட்டு அரசர் முதல் போர்வீரர்கள் அனைவரும் களம் புகுவார்கள்.மரணபயமே இல்லாத இவர்கள் அச்சமறியார் என பட்டம் சூட்டப்பட்டனர்

அம்மாலைத்தேவர்
செம்பியர் மரபில் வந்த அம்பன் என்னும் மன்னனின் சந்ததியினர். அம்பராயன்பேட்டை, அம்பத்தூர், அம்புக்கோயில் என்னும் ஊர்களை உண்டாக்கியவர்கள்.

அச்சுதன், அச்சுதபண்டாரம், அச்சுததேவன், அச்சுத்தேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அச்சுதன். அச்சுதபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் அச்சுதராயன், அச்சுததேவன் எனவும் வழங்கப்பட்டது. அச்சுதங்குடி, அச்சுதமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் அச்சுதன், அச்சுதபண்டாரம், அச்சுததேவன், அச்சுத்ேத்வன்.என்ற பட்டங்களை பெற்றனர்.

அயிரப்பிரியன், ஐரைப்பிரியன், அய்யப்பிரியன், ஐயப்பிரியன்,
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் அய்வசோழன்(ஐவசோழன்) ஐயனாபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர்
ஐயங்கொண்டான், ஐயாண்டான், ஐயப்பிரியன், ஐயுடையன், ஐயாளி எனவும் வழங்கப்பட்டது. ஐவூர், ஐயூர், ஐவனல்லூர், ஐயன்பேட்டை ( அய்யம்பேட்டை) என்னும் ஊர்களையும் உருவாக்கியரசாண்டவன். ஐயனாறு, ஐயவையனாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கியவன். இவன் மரபோர் அயிரப்பிரியன், ஐரைப்பிரியன், அய்யப்பிரியன், ஐயப்பிரியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

அருண்மொழிதேவன், அருமொழிதேவன், விருதராசபயங்கரன், விருதலான், உய்யக்கொண்டான், கொங்கணன், நாடன், நாடான், நாடாள்வான், நாட்டரையன், நாட்டரசன்,நாட்டான்,

அண்டங்கொண்டான், அண்ணுண்டான், அண்டப்பிரியன்,அண்ணுப்பிரியன்,அண்ணுத்திப்பிரியன், அண்ணமாண்டான், அண்டமாளியன்,
பஞ்சநதிசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி. அண்டபுரம் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அண்டங்கொண்டான், அண்டமாண்டான், அண்டப்பிரியன், அண்டமாளி எனவும் வழங்கலாயிற்று. அண்ணாமலை என்னும் தேவார சிவ தலத்தையும்,அண்டக்குடி(அண்ணுகுடி) அண்டக்குளம், அண்டத்துறை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். சுவர்க்கம், அந்தரம், பூமி என்னும் உலகங்களையும் வென்றவன் என புகழப்பட்டவன்.
மேலனைத்துலகு மிவ்வகில லோகமெலாம் வென்றுகொண்டவனு மென்றிவர்கள் கொண்ட விறலும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது.இவன் மரபோர் அண்டங்கொண்டான், அண்ணுண்டான், அண்டப்பிரியன்,அண்ணுப்பிரியன்,அண்ணுத்திப்பிரியன், அண்ணமாண்டான், அண்டமாளியன் என்னும் பட்டங்களை கொண்டனர். இப்பட்டங்கள் சங்ககாலத்தில் வழங்கப்பட்டவை என உறுதி செய்யப்படுகிறது

அன்னவாயில்ராயன், அன்னவாசல்ராயன், 
அன்னசோழன்,அன்னவாயில் என்னும் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அன்னவாயில்ராயன் எனவும்வழங்கும். சோற்றுத்துறை எனும் தேவார சிவ தலத்தையும், அன்னப்பன்பேட்டை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் அன்னவாயில்ராயன், அன்னவாசல்ராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

ஆக்காட்டரையன், ஆக்காட்டியன்.
அழிசிசோழன், ஆக்காடு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் ஆக்காட்டுராயன், ஆக்காட்டரையன், ஆக்காடுகொண்டான், ஆக்காடாண்டான், ஆக்காடுடையான், ஆக்காட்டுப்பிரியன், ஆக்காடாளி என்வும் வழங்கலாயிற்று. சிறந்த வீரமும் கொடையுமுடையவன். நக்கண்ணையார் முதலிய புலவர்களால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல்கள் நற்றிணையில் 87,169ம் பாடல்களாக உள்ளன. ஆக்கூர் என்னும் தேவார சிவ தலத்தையும்,ஆக்குடி என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டான்.இவன் மரபோர் ஆக்காட்டரையன், ஆக்காட்டியன். என்னும் பட்டங்களை பெற்றனர்.

ஆதனழிசியன், ஆதாழியன்
ஆதனழிசிசோழன், ஆதனக்கோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் நன்பன். (பூதப்பாண்டியன் பாடிய புறநானூறு 71ம் பாடல் ஆதனழிசி பற்றி கூறுகிறது, புறநானூறு மூலமும் பழைய உரையும் பக்கம் 63, உ.வே. சாமிநாத ஐயர்) ஆதனக்குடி, ஆதமங்கலம், ஆதமழை, ஆதனப்பேட்டை, ஆதனூர் எனும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் ஆதனழிசியன், ஆதாழியன் எனும் பட்டங்களை பெற்றனர்.

ஆய்ப்பிரியன், ஆளற்பிரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஆய். ஆய்க்கோட்டை, ஆய்ப்பாடி என்னும் நகரங்களை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆய்ப்பிரியன் எனவும் வழங்கும். ஆய்மூர் என்ற தேவார சிவதலத்தையும், ஆய்மழை, ஆய்மங்கலம்,ஆய்ப்பட்டி,ஆய்க்குடி,ஆய்ங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் ஆய்ப்பிரியன், ஆளற்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.

ஆச்சாப்பிரியன், ஆட்சிப்பிரியன்.
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் ஆச்சன், ஆச்சாபுரம் (பெருமணநல்லூர்) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.ஆதிசைவர்களுக்கும், கம்மியர்களுக்கும் ஆச்சாரி என்று பட்டம் வழங்கி சிறப்பித்தவன். ஆச்சாப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். ஆச்சாபுரம் (ஆதிச்சபுரம்), ஆச்சாமங்கலம், ஆச்சனூர், ஆச்சங்குடி, ஆச்சான்பட்டி எனும் ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.

ஆரம்பூண்டான், ஆர்சுத்தி, ஆரஞ்சுற்றி, ஆரமுண்டான், ஆரக்கண்ணியன், மாலையிட்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஆத்திமன். ஆத்திக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் ஆரம்பூண்டான்,ஆரஞ்சுற்றி,மாலையிட்டான் என்வும் வழங்கலாயிற்று. இவன் காலத்தில் தான் மருத்துவ குணமிக்க ஆத்திமாலை அணியும் வழக்கம் ஏற்பட்டது. ஆத்தூர், ஆத்தமங்கலம், ஆரம்பூண்டான்பட்டி, ஆத்தங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் ஆரம்பூண்டான், ஆர்சுத்தி, ஆரஞ்சுற்றி, ஆரமுண்டான், ஆரக்கண்ணியன், மாலையிட்டான் என்ற பட்டங்களையும் பெற்றனர்.

ஆலத்தரையன், ஆவத்தயன், ஆவத்தியான், 
ஆவாத்தியான்,ஆலங்கொண்டான், ஆலத்தொண்டான், ஆலத்தொண்டமான், ஆலம்பிரியன், ஆளம்பிரியன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான்.
ஆலசோழன்,ஆலங்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆலத்தரையன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான், ஆலம்பிரியன், ஆலமாளி எனவும் வழங்கலாயிற்று. ஆலந்துறை, ஆலம்பொழில், ஆலங்குடி, ஆலங்காடு என்னும் தேவார சிவ தலங்களையும், ஆலத்தம்பாடி,ஆலத்தூர், ஆலத்தாங்குடி, ஆலங்காடு,ஆலம்பாக்கம், ஆலம்பள்ளம், ஆலம்பாடி,ஆலக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் ஆலத்தரையன், ஆவத்தயன், ஆவத்தியான், ஆவாத்தியான்,ஆலங்கொண்டான், ஆலத்தொண்டான், ஆலத்தொண்டமான், ஆலம்பிரியன், ஆளம்பிரியன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்.

இராயன்,இராங்கியன்,இராயங்கொண்டான், இராயமுண்டான், இராயாளி, இராசாளி, இராயப்பிரியன், இராசப்பிரியன், இராங்கிப்பிலியன்.
முசுகுந்த மரபில் வந்த மன்னன் இராயன், இராயபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் இராயங்கொண்டான்,இராயாளி, இராயப்பிரியன் என்றும அழைக்கப்பட்டான். இராயநல்லூர் ( இராயந்தூர்), இராயன்பேட்டை, இராயமங்கலம்,இராயங்குடி, இராயன்பட்டி (இராங்கியன்பட்டி) எனும் ஊர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மேற்கண்ட பட்டங்களை கொண்டனர்.

இளங்கொண்டான், இளமுண்டான்.
இளஞ்சேட்சென்னிசோழன், இளநகர் என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியகக் கொண்டவன். இவன் பெயர் இளங்கொண்டான், இளமுண்டான், இளம்பிரியன், இளமுடையவன், இளமாளி, இளநாடன் என்வும் வழங்கலாயிற்று. இளமர்( இளமதுக்கூர்) இளங்கடம்பனூர் என்னும் தேவார சிவதலங்களையும், இளமங்கலம், இளங்கார்குடி,இளங்காடு, இளவனூர்,இளையான்குடி என்னுமூர்கலையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இரபோரைப் பாதுகாத்தலையே நோன்பாகக் கொண்டவன். சேரனுடைய பாமுளூரை வெற்றி கொண்டு அதன் பக்கத்தில் இருந்த குன்றில் புலிக்கொடியை நாட்டி அதற்குச் சென்னிமலை என்றும் பெயரிட்டான். ஊன்பொதிபசுங்குடையார் என்னும் புலவர் இவனை புகழ்ந்து பாடியவை புறநானூற்றில் 10,2003ம் பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இவன் மரபோர் இளங்கொண்டான், இளமுண்டான் என்னும் பட்டங்கள் பெற்றனர்.

இறையாண்டான், இராரண்டான், இராயாண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இறையமன். இறையூர் (மாறன்பாடி) என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் இறையாண்டான் எனவும் வழங்கும். இறையனூர், இறையன்செரி என்னும் தேவார சிவதல நகரங்களையும், இறையாங்குடி, இறைமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் இறையாண்டான், இராரண்டான், இராயாண்டான் எனும் பட்டங்களை கொண்டனர்

இடங்காப்பிறந்தான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இடைமன். இடங்கான் கோட்டை என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். முல்லைநில மக்களுக்கு இடையர் என்னும் பட்டம் வழங்கியவன். இவன் இடங்காப்பிறந்தான் என்றும் அழைக்கப்பட்டான். முல்லை நில மக்களுக்கு இடையர் என்ற பட்டத்தை அளித்தவனும் இவனே.இடைமருதூர், இடைவாய் (விடைவாய்) இடைக்குளம்,இடைப்பள்ளி என்னும் தேவார சிவதலங்களையும், இடையாத்திமங்கலம், இடைக்கோரை, இடையூர், இடையகாடு, இடைக்குடி என்ற நகரங்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன்.இவன் வழி வந்தவர்கள் இடங்காப்பிறந்தான் என்ற பட்டம் பெற்றனர்.

ஈங்கொண்டான்.
ஈசசோழன் ஈங்கை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் ஈங்கொண்டான், ஈங்காண்டான் என்வும் வழங்கும். ஈங்க்கோய்மலை என்னும் தேவார சிவ தலத்தையும் ஈங்கூர், ஈஞ்சூர்,ஈசனூர், ஈசனக்குடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் ஈங்கொண்டான் பட்டத்தை பெற்றனர். மேலும் இப் பட்டம் ஈழநாட்டிற்கும், ஈழத்துரையன், ஈழமுண்டான் ஈழம்கொண்டான் என்ற பட்டங்களுக்கும் தொடர் கொண்டவை எனவும் அறியப்படுகிறது.

24. ஈழத்தரையன், ஈழங்கொண்டான், ஈழமுடையான், ஈழமுண்டான், ஈழத்திரையன், முடியைக்கொண்டான்,கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டான்,

உறந்தைராயன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் உறந்தைமன். உறையூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் உறந்தைராயன், உறந்தைகொண்டான், உறந்தைபிரியன் எனவும் வழங்கும். உறந்தூர் என்னும் ஊரையும் உருவாக்கியவன் இவன். இவன் வழிவந்தவர்கள் உறந்தைராயன் என்னும் பட்டம் சுமந்தனர்.

உலகுடையன்,உலகுடையான், உலகங்காத்தான், உலகுகாத்தான், உலகாண்டான், உலயன், உலகுய்யன்.
உலகநாதசோழன், உலகுண்டம்(உலயக்குண்டம்) என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் உலகாண்டான்,உலகங்கொண்டான்,உலகுடையான், உலகங்காத்தான் எனவும் வழங்கும். உலகங்காத்தான்பட்டி என்ற ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் உலகுடையன்,உலகுடையான், உலகங்காத்தான், உலகுகாத்தான், உலகாண்டான், உலயன், உலகுய்யன் என்னும் பட்டங்களை பெற்றனர்

ஐந்நூற்றுப்புரையர் 
செம்பிய சக்ரவர்த்தி காலத்தில் அவர்களுடைய பணிமக்களாக காவல் பணி புரிந்தமையால் இப்பட்டம் கிடைத்துள்ளது.

ஒற்றையன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஒற்றைமன். ஒற்றியூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.ஒற்றகுடி, ஒற்றன்காடு, ஒற்றனூர்,ஒற்றமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் ஒற்றையன் எனும் பட்டம் கொண்டனர்.

ஒளிராயன்,ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் (ஒண்டிப்பிளியன்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஒளிமன். ஒளிகோட்டை ( உள்ளிக்கோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அறிவிலும், புகழிலும், கொடையிலும் மிகச்சிறந்தவன். இவன் ஒளிராயன்,ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான்.
ஒளியூர், ஒளிமங்கலம், ஒளிக்குடி, ஒளிக்கடை (உள்ளிக்கடை) ஒளிமதி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் ஒளிராயன்,ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் (ஒண்டிப்பிளியன்) எனும் பட்டங்களை பெற்றனர்.

ஓடம்போகி, ஓட்டம்பிடுங்கி, ஓட்டம்பிடுக்கி, ஓட்டம்பிடிக்கி. 
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் ஓடம்போகிசோழன். ஓடம்போகி என்னுமாற்றையும், ஓடாசசேரி,ஓட்டப்பிடாகை, ஓட்டக்குடி, ஓட்டத்தட்டை,ஓட்டப்பிடாரம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் ஓடம்போகி, ஓட்டம்பிடுங்கி, ஓட்டம்பிடுக்கி, ஓட்டம்பிடிக்கிஎன்னும் பட்டங்களை பெற்றனர்.
ஓமாமரையன், ஓமசையன், ஓமனாயன், ஓமாந்தரையன், ஓந்தரையன்,ஓந்திரியன், ஓமாம்பிரியன், ஓயாம்பிலியன்.முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் ஓமாம்புலிமன், ஓமாம்புலியூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் ஓமாந்தரையன், ஓமாமரையன்,ஓமாம்பிரியன், ஓமாமுடையான் என்றும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் மேற்கண்ட பட்டங்களை பெற்றனர்.

ஓரி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஓரி.வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். ஓத்தூர் என்னும் தேவார சிவதலத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். ஓரியூர், ஓரிக்குடி, ஓரிமங்கலம், ஓரிச்சேரி எனும் ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன்.இவன் மரபினர்
ஓரி எனும் பட்டம் கொண்டனர்.

ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன்,
ஏனாதி திருக்கிள்ளிசோழன், ஏனாதி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஏனாதிகொண்டான், ஏனாதியாண்டான், ஏனாதிப்பிரியன், ஏனாதியுடையான், ஏனாதியாளி எனவும் வழங்கும்.சிறந்த வீரமும் கொடையுமுடையவன். ஏனாதிமங்கலம், ஏனங்குடி, ஏனனூர், ஏனாதிகுடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இச் சோழ மன்னன் கோனாட்டு எறிச்சிலூர் மாடவன் மதுரைக்குமரனார் என்னும் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல் புறநானூற்றில் 167ம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இவன் மரபினர் ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன், என்னும் பட்டங்களை பெற்றனர். மேலும் இப்பட்டங்கள் படைத் தலைவர்களுக்கு உரியதாக கருதப்பட்டுள்ளது.சங்க காலத்தில் ஏனாதி பட்டம் என்பது அரசன் தன் படைத்தலைவன் மீது கொண்ட நன்மதிப்பினை உணர்த்த வேண்டி தன் பெயர் பொறித்த கணையாளி ஒன்றை அளிப்பதாகும். சங்ககாலத்தில் மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்குட்டுவன் ஆகியோர் ஏனாதிபட்டம் பெற்ற அரசர்களாவார்கள். ஏனாதி சாத்தஞ் சாத்தனார் ஏனாதி பட்டம் பெற்ற புலவராவார். இதன் மூலம் இப் பட்டங்கள் சங்ககாலம் முதல் வழங்கிய பட்டங்கள் என்று அறியமுடிகிறது.

களப்பாளன் (கூற்றுவன்)  களமுடையான், களத்துவென்றான்,களப்பாளி, களப்பாளன், களப்பளான், களந்தையாண்டான், களப்பாடியன், களக்குடையான், கிளாக்கடையன், கிளாக்கட்டையன், கிளாக்கன், தெத்துவென்றான், இருங்களன், இருங்கள்ளன், களன், களாவன்.
கள்ளர் குல குறுநில மன்னன். ஆடிமாதம் திருவாதிரை நட்சத்தில் பிறந்தவன்.சிறந்த சிவ பக்தியும் வீரமும்,கொடைத் தன்மையும் கொண்டவன். முக்குல வேந்தர்களையும் போரில் வென்ற தேர்,யானை, குதிரை மற்றும் காலாட்படை என்ற நால்வகை சேனைகளையும் பெரிய போர்களத்தை உடையவன். தன் வசமிருந்த நாடுகளை கூற்றங்களாக பிரித்து நல்லாட்சி வழங்கியமையால் கூற்றுவன் என்னும் சிறப்புப் பெயர் கொண்டான். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவன். களப்பான்(களந்தை) என்னும் திருவிசைப்பா பதிகம் பெற்ற சிவதல நகரை இராசதானியாகக் கொண்டவன். களர் என்னும் தேவார சிவதலத்தையும், களமங்களம்,களக்குடி,களத்தூர், களமாவூர், களக்காடு, களஞ்சேரி முதலிய ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன். இவன் மரபோர் களமுடையான், களத்துவென்றான்,களப்பாளி, களப்பாளன், களப்பளான், களந்தையாண்டான், களப்பாடியன், களக்குடையான், கிளாக்கடையன், கிளாக்கட்டையன், கிளாக்கன், தெத்துவென்றான், இருங்களன், இருங்கள்ளன், களன், களாவன் என்ற பட்டங்களை கொண்டனர்.

கடம்பன், கடம்பையன், கடம்பராயன், கடம்பரான், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையான், கடம்பையாளியான், கடம்பசோழன், பெருங்கடம்பனூர் என்னும் தேவார சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் கடம்பன், கடம்பராய, கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையவன், கடம்பையாளி என்வும் வழங்கலாயிற்று. குழித்தண்டலை, கடம்பன்துறை, கடம்பூர், கடவூர், கடவூர்மயானம் என்னும் தேவார சிவ தலங்களையும்,கடம்பர்வாழ்க்கை, கடம்பன்குடி, கடலங்குடி என்னும் ஊர்களையும், கடலாழி என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் கடம்பன், கடம்பையன், கடம்பராயன், கடம்பரான், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையான், கடம்பையாளியான் எனும் பட்டங்களை பெற்றனர்.

கருக்கொண்டான் (கருப்பூண்டான்) கருப்பையன் (கருப்பட்டியன்) கருவூரான் (கருப்பூரான்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கருப்பைமன். கருவூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கருவூரான், கருக்கொண்டான் எனவும் வழங்கப்பட்டது. கருங்குலம், கருவாக்குரிச்சி, கருப்பூர், கருப்புக்களர், கருவிலி, கருப்பறியலூர், கருக்குடி, கருகாவூர், கருப்பட்டிமூலை, கருங்கண்ணி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் கருப்பூண்டான், கருப்பட்டியன், கருப்பூரான் எனும் பட்டங்களை பெற்றனர்.

கஞ்சராயன், கஞ்சன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கஞ்சமன். கஞ்சனூர் என்னும் தேவார சிவதல நகரையுண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கஞ்சராயன் எனவும் வழங்கப்பட்டது. இவன் மரபோர் கஞ்சராயன், கஞ்சன் எனும் பட்டங்களை பெற்றனர்.

கங்கைநாட்டான், கங்கநாட்டான், சோழகங்கநாட்டான், சோழகங்கதேவன், சோழங்கர்.
தென்னிந்திய சாசன புத்தகம் மூன்றாவது தொகுதி முதற்பகுதி 59ம் சாசனம் கூறும் சோழகங்கன் என்னும் பட்டம், இராசராச சோழன் தன் தம்பி மதுராந்தகனுக்கு வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. சோழகங்கன், பினனர் சோழங்கன் என்றும் சோழங்கர் என்றும் மருவி வந்துள்ளது. இராசராசன் வெற்றி கொண்ட நாடுகளில் கங்கபாடி, நுளம்பாடி, தடிகைபாடி என்பனவும் அடங்கும். கங்கபாடி மைசூர் நாட்டின் தென்பகுதியும், சேலத்தின் வடபகுதியும் இனந்த பரப்பாகும். இதனை ஆண்டவர்கள் குவாளாபுர பரமேசுவரர்களான மேலைக்கங்கர்களாவர். கங்கபாடி வெற்றியின் பின்னர் வெற்றி தந்த மறவர்களுக்கு இராசராசன் வழங்கிய பட்டங்கள் கங்கைநாட்டான், கங்கநாட்டான், சோழகங்கநாட்டான், சோழகங்கதேவன், சோழங்கர் என்பனவாகும். இப் பட்டங்களை கொண்ட கள்ளர் குல மக்கள் தஞ்சைமாவட்டம் அம்மாபேட்டை புத்தூர், சோழகன்பட்டி, முத்தாண்டிப்பட்டி, துண்டிராயன்பட்டி,திண்ணமங்கலம், திண்ணகுளம், தொண்டராம்படுகை, தொண்டைமான்பட்டி, நாகத்தி,கண்ணுகுடி, மன்னார்குடி நெடுவாக்கோட்டை, புதுக்கோட்டை இராப்பூசல், திருவப்பூர், திருச்சி கல்விக்குடி ஆகிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்.

கண்டியன், இராசகண்டியன், கண்டியர்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கண்டியன். கண்டியூர் என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். சின்னக்கண்டியூர், கண்டியன் காடு, கண்டியன்பட்டு (கண்டிதன்பட்டு) கண்டியன்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கண்டியன், இராசகண்டியன், கண்டியர்.எனும் பட்டங்களை கொண்டனர். கண்டியன் என்ற பட்டமுடைய கள்ளர் இனமக்கள் தஞ்சை மாவட்ட முத்துவீரக்கண்டியன்பட்டி, நந்தவனம்பட்டி,மனையேறிபட்டி, ஆவாரம்பட்டி,புங்கலூர், கக்கரை,பின்னையூர், மண்டலக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஆர்சுற்றிப்பட்டு, மன்னார்குடி பைங்காநாடு, தலையாமங்கலம்,எடமேலையூர்,வடுவூர், திருக்களர், பெருகவாழ்ந்தான், கருவாக்குறிச்சி, சொக்களாவூர், கீராலத்தூர்,சோழபாண்டி, பட்டுக்கோட்டை ஆவிக்கோட்டை, பெரியகோட்டை, அதிராம்பட்டிணம், திருவையாறு திருச்சின்னம்பூண்டி, மகாராசபுரம், புதுக்கோட்டை கீழக்கரைமீண்டார்கோட்டை, புதுக்கோட்டை விடுதி, பாச்சுக்கோட்டை,கீழாத்தூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்.
இராசகண்டியன், இராசராச சோழனின் சிறப்புப் பட்டங்களில் ஒன்றாகும். இராசகண்டியன், இராசகண்டியர் என்று உருமாறி இன்று கண்டியர் என்று அழைக்கப்படுகின்றனர். செம்பியன் மரபில் வந்தவர்கள். கண்டியூர், கண்டியன்பட்டு (இன்றைய கண்டிதம்பட்டு) கண்டியன் காடு என்னும் ஊர்களையும் உருவாக்கி ஆண்டவர்கள். இவர்க ளின் கண்டியூர் அரண்மனை சோழநாட்டு நித்தவிநோத வளநாட்டு கிழார்க் கூற்றத்து ஆயிரத்தளி அரண்மனை என்ற பெயருடையது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1244) சோழர்களை வென்று இந்த அரண்மனையில் தான் முடிசூடிக்கொண்டான் என்பது வரலாறு. இராசராச சோழன் ஈழத்தை வென்று பண்டைய தலைநகரான அணுராதபுரத்தை அழித்த பின் சனநாதமங்கலம் என்ற புதிய ( இன்றைய பொலன்னருவா) தலைநகரை உருவாக்கினான். நாக நாடு, வன்னி, திரிகோணமலை, பொலன்னருவா மற்றும் அணுராதபுரம் போன்ற இடங்களே சோழ ஆட்சிக்கு உட்பட்டிருந்தது (மகாவம்சம்) இக் கால கட்டத்தில் இலங்கையின் தென்பகுதி சோழனின் ஆட்சிக்கு உட்படவில்லை. தொடர்ந்து சிங்கள மன்னர்களின் ஆட்சியில் இருந்ததால் இடையூராக இருந்தது. இந்நிலையை மாற்றி இலங்கை முழுவதும் சோழனின் ஆட்சி அமைய போர் படை அமைத்து தலைமை தாங்கி வெற்றி கண்டவன் கண்டியூர் இளவரசன் இராசகண்டியன். இதன்பின் இலங்கையின் மையப்பகுதியில் புதிய தலைநகரை உருவாக்கி இராச கண்டியன் மாநகரம் என்று பெயரும் சூட்டப்பட்டு சோழனின் பிரதிநிதியாக ஆட்சி ஏற்றான். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராச கண்டியன் மாநகரம் கண்டி என்ற பெயருடன் ராஜதானியகவே திகழந்தது. இன்றும் சிங்கள மக்கள் கண்டியை மாநுவர என்ற பெயர் கொண்டே அழைக்கின்றனர். மாநுவர என்றால் சிங்கள மொழியில் தலைநகரம், மாபெரும் நகரம் அல்லது ராஜதானி என்று பொருள் படும். உலக நாடுகளில் முதன் முதலில் சோழனின் ஆதிக்கத்தை ஏற்படுத்திய பெருமை இராசகண்டியனுக்கே உரியது. இதனை பெருமைப்படுத்தவே இராசராச சோழன் இராசகண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தை தான் ஏற்றான் என்பதும் வரலாறு.

பராந்தகச் சோழனின் மனைவி கண்டியத் தேவர் வம்சத்தை சேர்ந்தவர். இந்தக் கண்டியத் தேவர்கள் இப்பொழுதும் தஞ்சாவூரில் வசிக்கின்றனர். (To be confirmed)

கன்னமுடையன், கன்னப்படையன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கன்னன். கன்னபுரம் என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். கன்ணாண்டான், கன்னகொண்டான்,கன்னமுடையான்,கன்னப்பிரியன், கன்னாளி எனும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். கன்றாப்பூர் (கன்னாப்பூர்) கன்னாரப்பேட்டை, கன்னந்தகுடி,கன்னக்கொடையான் எனும் ஊர்களையும், கன்னாறு என்னும் காட்டாற்றையும் உருவாக்கி ஆட்சி புரிந்தான். இவன் மரபு வம்சத்தினர் கன்னமுடையன், கன்னப்படையன் என்ற பட்டங்களை பெற்றனர்.

37. கன்னகுச்சிராயன், குச்சிராயன், திராணி

கண்டன், கண்டராயன், கண்டவராயன், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி, கண்டப்பிரியன், கண்டப்பிள்ளை, கடாப்பிள்ளை.
கண்டர்கிள்ளி சோழன், கண்டர்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கண்டன், கண்டராயன்,கண்டப்பிரியன் எனவும் வழங்கலாயிற்று. கண்டதேவி என்னும் தேவார சிவ தலத்தையும் கண்டமங்கலம், கண்டர்மாணிக்கம், கண்டனூர், கண்டராயன்பட்டி, கண்டர்குடி(கண்ணுகுடி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் கண்டன், கண்டராயன், கண்டவராயன், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி, கண்டப்பிரியன், கண்டப்பிள்ளை, கடாப்பிள்ளை.என்னும் பட்டங்களை பெற்றனர்.

கலயன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சாய்மன். சாயக்கோட்டை (கலயநல்லூர்) என்னும் தேவார சிவதலத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். மேலும் சாய்க்காடு, சாய்க்களூர் என்னும் சிவதலங்களையும் உருவாக்கியவன். இவன் மரபு வம்சத்தினர் கலயன் என்ற பட்டம் பெற்றனர்.
கலியன், கலியாட்சி,கலிச்சி, கலிச்சியன், கலிக்கொண்டார், கலிப்பிரியர், கலியனான், கலியராயன், கலியரையன், கலியாளியன், கலிவுடையான்.
கலிகாமசோழன் கலியாணபுரம் என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் கலியன், கலிராயன்,கலியரையன், கலியாண்டான், கலிகொண்டான், கலிப்பிரியன்,கலியுடையான்,கலியாளி,கலியாட்சி எனவும் வழங்கலாயிற்று. எதிரிகளுக்கு துன்பம் விளைவிக்கும் ஆற்றல் பெற்றவன்,கலிக்காமூர் என்னும் தேவார சிவ தலத்தையும் கலியாணோடை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் பலகாலம் தன்னை கலியன் என்று அழைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. துன்பம் நிறைந்த காலத்தை கலிகாலம், கலியுகம் என்பதும் தெறிந்ததே.கலிகாமசோழன் மரபோர் கலியன், கலியாட்சி,கலிச்சி, கலிச்சியன், கலிக்கொண்டார், கலிப்பிரியர், கலியனான், கலியராயன், கலியரையன், கலியாளியன், கலிவுடையானென்னும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டமுடையோர் தஞ்சை மாவட்ட நீடாமங்கலம், சித்தமல்லி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலியராயன்பட்டி, கரம்பக்குடி, கீரனூர், இலந்தைவாடி, பிலாவிடுதி, குலத்திரான்பட்டுஎன்னுமூர்களில் அதிகமாக வாழுகின்றனர்.

கரம்பையன், கரம்பைகொண்டான், கரமுண்டார்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன்.கரம்பைக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். கரவீரம், கரபுரம் என்னும் தேவாரசிவ தலங்களையும் கரம்பை,கரம்பையம், கரம்பைகுடி, கரஞ்சிப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கரம்பையன், கரம்பைகொண்டான், கரமுண்டார் எனும் பட்டங்களை சுமந்தனர்.

கச்சிராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கச்சிமன். கச்சி என்னும் தேவார சிவதல நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கச்சிராயன் எனவும் வழங்கும். கச்சூர், கச்சியூர், கச்சையூர் என்னும் தேவார சிவதலங்களையும், கச்சிக்குடி, கச்சிமங்கலம் (கச்சமங்கலம்) காஞ்சிப்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கச்சிராயன் எனும் பட்டத்தையும் சுமந்தனர். மேலும் கச்சி என்பது காஞ்சியின் மாற்றுப் பெயராகும். காஞ்சியை ஆண்டோர் தம்மை கச்சிராயன் என அழைத்துக் கொண்டனர் எனவும் தெரிகிறது. சோழர் கல்வெட்டுகளில் கச்சிராயன் என்ற பட்டமுடைய பல தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். அரசன் ஏழிசை மோகனாகிய சநநாதக் கச்சிராயன் என்பவன் பல்லவர் குலத்தில் பிறந்தவனாவான். திருமுனைப்பாடி நாட்டில் திருவதிகை, திருநாவலூர் முதலான ஊர்களை சார்ந்த நிலப்பகுதிகளில் நாடுகாவல் அதிகாரியாக விளங்கியுள்ளான். கி.பி 1171 ஆம் ஆண்டில் திருவதிகை வீரட்டனேசுவரர்க்கு திருவிளக்கு ஏற்ற நிவந்தம் அளித்துள்ளதாக ஒரு கல்வெட்டு உணர்த்துகிறது. இதன் மூலம் கச்சிராயன் என்னும் பட்டம் சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் உரிய பட்டம் என்பது தெரிகின்றது.

கத்தரிகொண்டான், கத்தூரிமுண்டான், கத்தரியன், கத்தூரியன், கத்தரிநாடன், கத்திநாடன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கத்தரிமன். கத்தரி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் கத்தரிகொண்டான், கத்தரிநாடன் எனவும் வழங்கும். கத்தரிமங்கலம், கத்தரிக்குடி, கத்தரிக்காடு, கத்தரிப்புலம், கத்தரிக்கொல்லை என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கத்தரிகொண்டான், கத்தூரிமுண்டான், கத்தரியன், கத்தூரியன், கத்தரிநாடன், கத்திநாடன்.என்ற பட்டங்களை பெற்றனர்.

காவலக்குடியன், காலாக்குடியன்,காவாளி, காவாலி, காவாடி, காலாடி,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காவலன். காவலகுடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் காவலகுடியன், காவாளி எனவும் வழங்கும்.காலம்(கைச்சினம்) என்னும் தேவார சிவதல நகரத்தையும், காவளூர்,கானூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் காவலக்குடியன், காலாக்குடியன்,காவாளி, காவாலி, காவாடி, காலாடி எனும் பட்டங்களை கொண்டனர்.

காரையாட்சி, காரைக்காச்சி
மாந்தாதா மரபில் வந்த மன்னன் கார்மன், காரைக்கோட்டை எனும் நகரத்தை இராசதானியாகக் கொண்டவன். காரைவாயில் (காராயில்), காரைமேடு(கழிப்பாழை), காரைக்காடு, காரைக்கால், காரைப்பாக்கம், காரைபட்டு, காரைப்பட்டி, காரைக்குடி, காரைப்பள்ளம், காரப்பன்காடு, காரைமங்கலம், என்ற ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.

காடவராயன்.
பல்லவ மரபு வழி வந்தவர்கள். தொண்டை மண்டலத்தில் காடுகளை அழித்து நாடு, நகரங்களை உருவாக்கி அரசாண்டவர்கள். சங்க இலக்கிய சான்றுகளால் அறியப்படும் முதல் காடவன் ஐயடிகள் என்னும் சைவ அடிகளாவார். இவரை சுந்தரமூர்த்தி நாயனார் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகிறார். நம்பியாண்டார் நம்பி இவரை பக்திக்கடல் ஐயடிகளாகின்ற நம்பல்லவனே என்று கூறுகிறார். சேக்கிழார் இவரை பல்லவர் தம்குலமரபின் வழித்தோன்றல் என்றும் கூறுகின்றனர். பிற்கால சோழர் அரசியலில் காடவச் சிற்றரசர்களின் பங்கு மிகப்பெரியதாக இருந்துள்ளது. எழிசை மோகன் ஆட்கொல்லியான குலோத்துங்கச் சோழக் காடவராயன் (கி.பி 1129), கடலூர் ஆளப்பிறந்தான் மோகனாகிய இராசராச காடவராயன்(1136), செஞ்சியர்கோன் காடவன்(1152) என்போர் அதிகாரிகளாகவும்,சிற்றரசர்களாகவும் சோழர் ஆட்சியில் பணிபுரிந்துள்ளனர். காடவராயர் என்ற பட்டம் எவ்வித திரிபும் இன்றி இன்றும் வழங்கிவருவது குறிப்பிடத் தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் காடவராயன்பட்டி, நமல்பட்டி, த்ஞ்சை மாவட்டம் பஞ்சநதிக்கோட்டை, கருக்காக்கோட்டை, ஈச்சங்கோட்டை, ஆழிவாய்க்கால், சாமிப்பட்டி, மருங்குளம், புதுவூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்,

காடுவெட்டி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காடுவெட்டி. காடுகளை வெட்டி அழித்து நகரங்களை உருவாக்கியவன். காட்டூர், மேலக்காட்டுப்பள்ளி,
கீழைக்காட்டுப்பள்ளி என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் மரபினர் காடுவெட்டி எனும் பட்டம் கொண்டனர். காடவராயன் என்ற பட்டத்துடன் தொடர்புடைய பட்டம் காடுவெட்டி என்றும், காடுவெட்டி என்பது பல்லவரது பெயராக சாசனங்களிலும் வருகிறது. கங்கவேந்தர்களின் செப்பேடுகள் காஞ்சி மாநகரத்தை காடுவெட்டிகள் ஆண்டதாக கூறுகின்றன. காடுவெட்டி பேரரையன், காடுவெட்டி தமிழ் பேரரையன், விடேல் விடுகு காடுபட்டித் தமிழ் பேரரையன் என்போர் பல்லவ பெரு வேந்தர்களின் கீழிருந்த பல்லவ சிற்ரசர்கள், தலைவர்களென்றும் சுட்டுகின்றன. பழைய திருவிளையாடல் புரானத்தில் பல்லவ குல காடுவெட்டி என்பவனின் பெருமையும் அவனது பக்திச் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. காடுவெட்டி பட்டமுடையோர் புதுக்கோட்டை அம்மாவட்டத்தில் காடுவெட்டிவிடுதி, பாலக்குடிப்பட்டி, உஞ்சைவிடுதி, அரிமளம் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். காடுவெட்டிகள் சோழர் மற்றும் பல்லவர் மரபினர் என்றும் அறிய முடிகிறது.

காங்கயன், காங்கியன், காங்கேயன்.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த காங்கமசோழ சக்ரவர்த்தி. காங்கயம்(காங்கயன்பட்டி) என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் காங்கயன் எனவும் வழங்கும். காலனுக்கு இது வழக்கென்று போதித்தவன் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்) இவன் மரபோர் காங்கயன், காங்கியன், காங்கேயன் எனும் பட்டங்கள் கொண்டனர். வீரசோழப் பெரிய காங்கேயன் என்பவன் சோழ வல்லரசில் பெரும் வீரனாக விளங்கியுள்ளான். இவன் பெரியகுலத் தலைவன், கங்கை முதல்வன் எனவும் அழைக்கப்பட்டுள்ளான். இவன் கொங்குசோழ மன்னர்களின் முதல்வனும் ஆவான். இவன் குடியோறிய இடம் காங்கேயம் எனவும் அழைக்கப்படுகிறது. நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் கோயில் கல்வெட்டு ஒன்றில் ஆதி சண்டிகேசுவரர் கோயிலுக்கு நிலம் விற்றுக்கொடுத்த தகவலும் அதில் கையெழுத்திட்டுள்ள அதிகாரிகளுள் ஒருவனாக காங்கேயன் இடம் பெற்றுள்ளான். இவன் வழி வந்தோர் சோழர் படைதலைவராகவும், அதிகாரியாகவும் கொங்குநாட்டில் பணியாற்றி உள்ளனர். இப்படம் முடையோர் தஞ்சை மாவட்ட காங்கேயன்பட்டியில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

காரி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காரி. வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன்.காரிக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். காரிக்கரை என்னும் தேவார சிவதலத்தையும் உண்டு பண்ணியவன். காரியூர், காரிபட்டி, காரிமங்கலம், காரிகுடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் காரி எனும் பட்டம் கொண்டனர்.

காசிராயன், காசிநாடான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காசிமன். காசாங்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். தென்காசி,சிவகாசி என்னும் பிரபலமான சிவதலங்களையும், காசாங்காடு என்னும் ஊர்களையும் உண்டு பண்ணி அரசாண்டவன்.இவன் மரபினர் காசிராயன், காசிநாடான் எனும் பட்டங்களை பெற்றனர்.

காவிரிநாடன்
சங்ககால சோழர்களுள் மிகவும் புகழ்பெற்றவன் கரிகால் சோழன். இவனது காலம் கி.மு 60 முதல் கி.மு 10 வரை என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சங்ககால இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் இடம்பெறும் பட்டினைப்பாலை, பொருநாற்றுப்படை ஆகிய இரண்டும் கரிகாலனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டவை. இச்சிறப்பினை வேறு சோழ அரசர்கள் எவரும் பெற்றதில்லை. வெள்ளப்பெருக்கால் ஏற்படும் சேதங்களைத் தவிர்கவும் வேளாண்மையை பெருக்கவும், நீர்பாசன வசதிகளை செய்து தரும் பொருட்டு தன்னுடன் போரிட்டு தோற்றுப்போன இலங்கை வேந்தனின் 12000 படை வீரர்களை பயன்படுத்தி திருச்சி திருவரங்கத்திற்கு மேற்கே காவிரி ஆற்றுக்கிடையே 1080 அடி நீளமும், 40 முதல் 60 அடிவரை அகலமும் கொண்ட கல்லணையும் கட்டி காவிரியின் கரைகளை உயர்த்திய பெருமையும் பெற்றவன் கரிகாலன். இச்செய்தியை பிற்கால இலங்கை நூள்களும், கலிங்கத்துப்பரணியும்,சிலப்பதிகாரமும்,தெலுங்குச் சோழன் புன்னியகுமாரனின் மேலப்பாடு கல்வெட்டும் குறிப்பிடுகின்றன.வேறு சங்ககால அரசர்கள் எவரும் வேளாண் விரிவாக்கத்திற்கு அணை கட்டியதாக சான்றுகள் இல்லை. வட இந்திய அரசுகளின் மீது போர் தொடுத்து மகத, வச்சிர, அவந்தி நாட்டு வேந்தர்களையும் வென்று இமயத்தில் புலிக்கொடியை பறக்கவிட்டு பின்பு வாகைப் பறந்தலையில் ஒன்பது வேளிர்குல அரசர்களையும், நாகப்படினம் பகுதியை சார்ந்த நாகர்களின் பன்றி நாட்டையும், பெண்ணை ஆற்றுக்கரை குறும்பர்களையும், ஆயர்தலைவன் இளங்கோ மற்றும் தொண்டை நாட்டையும் வென்று காடுகளை அழித்து வேளான் நிலங்களாகவும் மாற்றிய பெருமை உடையவன் கரிகால் சோழன். இவனது ஆட்சிக்காலத்தில் சோழ அரசு வடக்கே வடபெண்ணை,தெற்கே குமரிவரை பரவியிருந்தது. இதனால் இவன் கரிகால் பெருவளத்தான், காவிரிநாடன் எனும் சிறப்புப் பெயர்களை பெற்றிருந்தான். கள்ளர் குலத்தில் காவிரிநாடன் எனும் பட்டப்பெயர் இவன் சந்ததியினருக்கு வழங்கிவருவதையும் அறியமுடிகிறது. இப்பட்டம் தான் கள்ளர் குல பட்டங்களில் மிகவும் பழமை வாய்ந்தது என்று அறியவும் முடிகிறது.

கிள்ளி, கிள்ளியான், கிளாக்கன், கிள்ளிராயன், கிளிராயன், கிள்ளிகொண்டான், கிள்ளியாளி, கிளியிநார், கிளிகண்டான், கிள்ளியாண்டான், கிளியாண்டான்
கிள்ளிசோழன்,கிள்ளிகோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கிள்ளிராயன்,கிள்ளிகொண்டான், கிள்ளியாண்டான், கிள்ளிப்பிரியன், கிள்ளியாளி எனவும் வழங்கலாயிற்று. நிலத்தை கிள்ளி உழுதமையால் இவன் காலம் முதல் சோழர்களுக்கு கிள்ளி என்னும் பெயர் வழங்கலாயிற்று. கிள்ளிக்குடி என்னும் தேவார சிவ தலத்தையும் கிள்ளியனூர்(கிளியனூர்) கிள்ளியூர்(கிளியூர்) கிள்ளிபட்டி(கிளிப்பட்டி) கிள்ளிமங்கலம்(கிளிமங்கலம்) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். புறநானூறு கிள்ளி என்னும் பெயர்களுடைய ஏழு சோழ மன்னர்களை குறிப்பிடுகிறது.1. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, 2. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், 3. .சோழன் நலங்கிள்ளி, 4. சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற்கிள்ளி, 5. சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி, 6. சோழன் நெடுங்கிள்ளி,7. சோழன் நெடுமுடிக்கிள்ளி. இவர்களின் வழி வந்தோர் கிள்ளி, கிள்ளியான், கிளாக்கன், கிள்ளிராயன், கிளிராயன், கிள்ளிகொண்டான், கிள்ளியாளி, கிளியிநார், கிளிகண்டான், கிள்ளியாண்டான், கிளியாண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டங்கள் சங்க காலத்தவை என்பதும் புலனாகிறது.

கீரமுடையன்,கீருடையன், கீரரையன், கீரையன்,கீரைக்கட்டயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கீரமன். கீரநகரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர்
கீரங்கொண்டான், கீரமுடையன், கீரரையன் என்வும் வழங்கலாயிற்று. கீரக்களூர் என்னும் சிவதலத்தையும், கீரமங்கலம், கீரனூர், கீரங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கீரமுடையன்,கீருடையன், கீரரையன், கீரையன்,கீரைக்கட்டயன் என்ற பட்டங்களை பெற்றனர்.

கீழாண்டான், கிழண்டன், கீழுடையான், கீழாளி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கீழைமன் கீழக்கோட்டை என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவனை கீழ்கொண்டான், கீழுடையான், கீழ்ப்பிரியன்,கீழாளி, கீழாண்டான் என்றும் அழைத்தனர். வேளாளரில் ஒரு வகுப்பாருக்கு கிழார் என்ற பட்டமும் கொடுத்தவன்.
கீழையிலான் (கீழையூர்) கீழைவழி, கீழையம் என்னும் தேவார சிவதலங்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன்.இவன் வழி வந்தவர்கள் கீழாண்டான், கிழண்டன், கீழுடையான், கீழாளி என்ற பட்டங்களை பெற்றனர்.

குண்டையன், கொன்றையன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குண்டையன். குண்டையூர், குண்டூர், குண்டாகோயில், குண்ணூர், குண்ணலூர், குண்ணுவாரத்தி என்னும் நகரங்களை உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் குண்டையன், கொன்றையன் எனும் பட்டங்களை கொண்டனர்.

குழந்தைராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குழைமன். குழகு (குழகர்கோயில்) தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். குழையூர் என்னும் சிவதலத்தையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் குழந்தைராயன் எனும் பட்டம் பெற்றனர்.

குளந்தைராயன், கொழுந்தைராயன்.
கிள்ளிவளவ சோழன், உறையூரை இராசதானியாகக் கொண்டவன். குளத்தூர் என்னும் சிவ தலத்தையும், குளமங்கலம், குளக்குடி,குளப்பாடு,குளப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். வீரமும் கொடையுமுடையவன்.கருவூரை முற்றுகையிட்டு சேரனை தூங்கெயிலெறிந்து வென்றவன். அழகிய சோலை சூழ்ந்த குளத்தருகிள் துயின்ற காரணத்தினால் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் என்று பெயர் பெற்றவன். கவி பாடுவதிலும் வல்லவன். இவன் பாடிய பாடல்கள் புறநானூற்றில் 173ம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஆலந்தூர்கிழார், ஆவூர்மூலங்கிழார், கோவூர்கிழார், வேள்ளைக்குடி நாகனார், இடைக்காடனார், எருக்காட்டூர் தாயங்கண்ணனார், நல்லிறையனார், மானொக்கத்துநப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறைமாசாத்தனார், சல்லியங்குமரனார் என்னும் புலவர் பெருமக்கள் புகழ்ந்தும் இறந்தபின் வருந்தியும் பாடப்பெற்றவன். இப் பாடல்கள் புறநானூற்றில் 34,35,36,37,38,39,40,41,42,46,69, 70, 226, 227, 386,393, 397ம் பாடல்களாகவும்,நற்றினையில் 141ம் பாடலாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. இவன் மரபோர் குளந்தைராயன், கொழுந்தைராயன் என்ற பட்டங்களை பெற்றனர்.

குமாராண்டான், குமரண்டான்.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குமாரசோழன். குமாரபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் குமாராண்டான் என்வும் வழங்கப்பட்டது. குமாரமங்கலம், குமாரங்குடி, குமாரனூர் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் குமாராண்டான், குமரண்டான் என்ற பட்டங்களை கொண்டனர்.

குறுக்கையாண்டான், குறுக்கண்டான், குறுக்கையர்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குறுக்கைமன். குறுக்கை, குறுமானிக்குடி என்ற இரு சிவதலங்களை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வேளாளரில் ஒரு பிரிவினர்க்கு குறுக்கையர் என்னும் பட்டம் கொடுத்தவன். குறுக்கையாண்டான் என்ற பெயரும் பெற்றவன். குறுங்குடி, குறும்பூர், குறுங்களம், குறுங்குளம் என்னுமூர்களை உண்டாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபோர் குறுக்கையாண்டான், குறுக்கண்டான், குறுக்கையர் எனும் பட்டங்களை பெற்றனர்.

கூழையன்,கூழாக்கி, மண்வெட்டிக்கூழ்வாங்கி (மண்வெட்டியில்கூழ்வாங்கி)
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கூழைமன். பூமியில் மண்ணை வெட்டி, ஆராய்ந்து பொன்மணலைக் கண்டறிந்து உருக்கிப் பொற்கட்டி (பொற்பாளம்) செய்தவன். இவன் காலமுதல் பூமியில் சுரங்கம் அமைத்து தங்கம் எடுக்கும் வழக்கம் உண்டாயிற்று. மண்வெட்டி மூலம் பொன்மணலை அள்ளியதால் மண்வெட்டியில் கூழ்வாங்கி என்ற பட்டம் பெற்றான். (கூழ் என்றால் பொன் என்று அர்த்தம் உண்டு) இவன் மணலை அள்ளியதால் கூழையாறு என்ற ஒரு சிற்றாரும் உருவாயிற்று. மேலும் இவன் கூழையூர், கூழைக்குடி, கூழைமங்கலம்,கூழைப்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கூழையன்,கூழாக்கி, மண்வெட்டிக்கூழ்வாங்கி (மண்வெட்டியில்கூழ்வாங்கி) என்ற பட்டங்களை பெற்றனர்.

கூத்தப்பராயன், கொத்தப்பராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கூத்தமன். இவன் பெயர் கூத்தப்பராயன் எனவும் வழங்கும். கூத்தூர், கூத்தனூர், கூத்தன்குடி, கூத்தமங்கலம் கூத்தானல்லூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கூத்தப்பராயன், கொத்தப்பராயன் எனும் பட்டங்களை கொண்டனர்.

கூராயன், கூர்சான், கூராட்சி, கூராண்டான், கூரப்பிரியன், கூராளி, கூரையன்.
பெரும்பற்றசோழன் மரபில் வந்த கூரசோழன். கூராட்சிகோட்டை(கூப்பாச்சிகோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் கூரப்பிரியன், கூராளி, கூராயன்,கூராண்டான், கூராட்சி எனவும் வழங்கப்பட்டது. கூரூர் என்ற தேவார சிவதலத்தையும், கூரயாறு(கோரையாறு) என்னும் பேராற்றையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் கூராயன், கூர்சான், கூராட்சி, கூராண்டான், கூரப்பிரியன், கூராளி, கூரையன் என்ற பட்டங்களை பெற்றனர்.மேலும் கூரமென்பது பல்லவர் ஆண்ட தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள ஓர் ஊராகும். தமிழகத்தில் கட்டப்பெற்ற முதல் கற்கோயில் கூரம் நகரில் பரமேசுவரவர்மன் என்னும் பல்லவ மன்னனால் கட்டப்ப்ட்டது. இம் மன்னன் கூரம் ராயன் என்றும் அழைக்கப்பட்டான், பல்லவர் கால பட்டயங்கள் பல இவ்வூரில் வெளியிடப்பட்டுள்ளது. அவை கூரம் பட்டயங்கள் என்று பெயர் பெறுகின்றன. கூரம் ராயன் திரிந்து கூராயன் ஆயிற்று என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் பொதுவான பட்டமாக கூராயன், கூரையன் அறியப்படுகிறது. இப் பட்டமுடைய கள்ளர்கள் கூனம்பட்டி, வழங்கைமான், செம்மங்குடி ஆகிய ஊர்களில் வாழ்கிறனர்.

கொற்றங்கொண்டான் (கொன்னமுண்டான்) கொற்றப்பிரியன் (கொத்தப்பிரியன்) 
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கொற்றமன். கொற்றங்குடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அறிவிலும், புகழிலும், கொடையிலும், வீரத்திலும், வெற்றியிலும் மிகச்சிறந்தவன். இவன் கொற்றங்கொண்டான், கொற்றப்பிரியன் எனவும் அழைக்கப்பெற்றான். கொற்றமங்கலம் (கொத்தமங்கலம்) கொற்றங்குடி (கொத்தங்குடி) கொற்றூர் (கொத்தூர்) எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் கொன்னமுண்டான், கொத்தப்பிரியன் எனும் பட்டங்களை பெற்றனர்.

கொல்லத்தரையன், கொல்லமுண்டார் 
கொல்லம் என்பது சேரநட்டின் ஒரு பகுதியாகும். இராசராச சோழன் படை எடுத்து கொல்லத்தை வென்றான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய மரபினர்களுக்கு அளித்த பட்டமே கொல்லத்தரையன், கொல்லமுண்டார் என்பதாகும். இராசமகேந்திரசோழன் கொல்லத்தரையன் என்னும் சிறப்புப் பட்டத்தை பெற்றிருந்தான் என்று கல்வெட்டுகள் உரைக்கிறன. கொங்குநாட்டு குடமலையை சோழ தளபதி மனிஜா பெருவீரத்தோடு போரிட்டு வெற்றி கொண்டான். போர் வெற்றிக்கு பின் இராசராச சோழன் அந்நாட்டை மனிஜா என்ற படைத்தளபதிகே அளித்து சத்திரிய சிகாமணிக்கொள்வான் என்ற பட்டத்தையும் அவனுக்கு வழங்கினான். அதுமுதல் மனிஜா மரபினர் நூறாண்டுக்காலம் அரசாண்டனர். இப் பட்டமுடைய கள்ளர்கள் திருவையாறு திருசென்னம்பூண்டி, தஞ்சை மாவட்டம் உஜ்ஜினி, உடுமலைப்பேட்டை காரத்தொழுவு, புதுகோட்டை திருக்களம்பூர்,செட்டிபட்டி, கண்டலூர் முதலிய ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்

கோட்டரையன்,கோட்டையாண்டான், கொட்டையாண்டான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கோட்டமன். கோட்டைபட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கோட்டைராயன்,கோட்டரையன், கோட்டைப்பிரியன், கோட்டையாண்டான், கோட்டைகொண்டான் எனவும்வழங்கப்பட்டது. கோட்டூர், கோட்டாறு என்னும் தேவார சிவதலங்களையும், கோட்டுக்காடு, கோட்டைப்பத்து, கோட்டுக்கா, கோட்டுச்சேரி, கோட்டாக்குடி என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் கோட்டரையன்,கோட்டையாண்டான், கொட்டையாண்டான் என்னும் பட்டங்கள் பெற்றனர்.

கோபாலன்

கோழியன், கோழயன்.
அண்டசோழன் மரபில் வந்த மன்னன் வீரவாதித்த சோழன். உறையூரை இராசதானியாகக் கொண்டவன். இவன் திருவுலாப் போகும் போது தான் ஏறியிருந்த யானையை தெய்வத்தன்மை பொருந்திய ஒரு கோழி போர் செய்து வென்ற காரணத்தினால் இவனுக்கு கோழியர்கோன், கோழிவேந்தன், கோழியன் என்ற பெயர்களும், அந்நகருக்கு கோழியூர், கோழிநகர் என்னும் பெயர்களும், அந்நகர திருக்கோயிலுக்கு குக்குடேசரம், முக்கீச்சரம் என்னும் பெயர்களும் வழங்கலாயிற்று. இவன் காலம் முதல் சோழர்களுக்கு கோழியன்,கோழியர்கோன், கோழிவேந்தன் என்னும்பெயர்களும் வழ்ங்கின.இவ்வரசன் காலமுதல் சோழர்களின் நாணயங்களில் கோழியின் உருவம் பொரிக்கப்பட்டது.இவன் மரபோர் கோழியன், கோழயன் என்ற பட்டங்களை பெற்றனர்.

கோனேரிகொண்டான், கொன்னமுண்டான்,கோனேரிபிரியன், கோனேரிராயன், கோதண்டபிரியன், கோனேரியாண்டான், கோனேரியாளி,

சக்கரன், சக்கரை, சக்கரராயன், சக்கராயன், சக்கரநாடன், சக்கரையப்பநாடாள்வான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சக்கரமன். சக்கரப்பள்ளி என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சக்கரராயன், சக்கரநாடன் எனவும் வழங்கும். சகரப்பேட்டை, சக்கரமங்கலம்,சக்கரக்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் சக்கரன், சக்கரை, சக்கரராயன், சக்கராயன், சக்கரநாடன், சக்கரையப்பநாடாள்வான் எனும் பட்டங்களை கொண்டனர்.

சந்திரங்கொண்டான், சந்திரதேவன்,சம்பிரதேவன், சந்திரப்பிரியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் சந்திரசோழன். சந்திரப்பாடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சந்திரங்கொண்டான், சந்திரதேவன்,சந்திரப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது.சந்திரலோக்கைப் பெருந்துறை(செந்தலை) என்னும் சிவதலத்தையும், சந்திரநதி என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் சந்திரங்கொண்டான், சந்திரதேவன்,சம்பிரதேவன், சந்திரப்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.

சமயன், சமயதேவன், சமயாளி, சவுளி, சவுட்டி, சமட்டி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சமயன். சமயபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். சமயனூர், சமயன் குடிகாடு என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் சமயன், சமயதேவன், சமயாளி, சவுளி, சவுட்டி, சமட்டி எனும் பட்டங்களை கொண்டனர்.

சாத்தயன், சாதகன், சாத்தரையன், சாமுத்தரையன், சாமுத்திரியன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சாத்தமன். இவன் பெயர் சாத்தயன், சாத்தரையன் எனவும் வழங்கும். சாத்தமங்கை (சாத்தமங்கலம்) என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். சாத்தனூர், சாத்தூர்,சாத்தங்குடி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் சாத்தயன், சாதகன், சாத்தரையன், சாமுத்தரையன், சாமுத்திரியன் எனும் பட்டங்களை பெற்றனர்.

சாளுவன், சாளுவராயன்.
சோழ மரபில் வந்த மன்னன் சாளுவசோழன். சாளுக்கிய வம்சத்தவராகவும் இருத்தல் கூடும். விஜயநகர அரசர்களின் காலத்தில் தென்நாட்டில் அவர்களின் பிரதிநிதியாக திருமலைராயர் சாளுவர் என்பார் இருந்தார் என்று சீரங்கத்தில் கிடைத்த சிலாசானம் குறிப்பிடுகிறது (இலக்கிய வரலாறுபாகம் 2 பக்கம் 369.கா.சு.பிள்ளை) சாளுவநாயக்கன் பட்டினம் சோழநாட்டு துறைமுகங்களுள் ஒன்றாகும். சாளுவன் பேட்டை, சாளுவனாறு என்பன இப்பட்டங்களின் அடிப்படையில் தோன்றியதாகும்.

சிங்களராயன், சிங்களான், சிங்களப்பிரியன், சிங்கப்பிலியன், சிங்களாளி, சிங்காரிக்கன், சிங்களாந்தகன்.

சிறுராயன்,சிறுநாட்டுராயன், சிறுநாடன், சிறுமாடன், சிறுப்பிரியன், சிலுப்பி, சிலம்பன், சிலுப்பன், செருமாடன், சிலுக்கியன், 
சிறுகிள்ளிசோழன், சிறுகோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சிறுராயன், சிருநாடன், சிறுப்பிரியன் எனவும் வழங்கலாயிற்று. சிறுகுடி, சிற்றேமம் என்னும் தேவார சிவ தலங்களையும், சிற்றம்பலம் என்னும் சிவ தலத்தையும், சிறுமங்கலம்,சிறுபாமணி, சிறுகளத்தூர், சிறுவயல்,சிறுவனூர், சிறுவளூர் என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் சிறுராயன்,சிறுநாட்டுராயன், சிறுநாடன், சிறுமாடன், சிறுப்பிரியன், சிலுப்பி, சிலம்பன், சிலுப்பன், செருமாடன், சிலுக்கியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

சித்தாட்சி, சிற்றாட்சி, சிட்டாச்சி.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் சித்தசோழன். சித்தலபாடிஎன்னும்நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சித்தாட்சி எனவும் வழங்கும். சித்தாறு என்னும் சிற்றாற்றையும், சித்தாமூர்( சித்தாம்பூர்) என்னும் விநாயக தலத்தையும், சித்தூர், சித்தாற்றூர், சித்தலூர்,சித்தரகுடி, சித்தகாடு, சித்தபத்து என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் சித்தாட்சி, சிற்றாட்சி, சிட்டாச்சி என்னும் பட்டங்களை கொண்டனர்.

சூரக்கோட்டையன்,சுரக்குடையன், சுரக்குடியான், சூரக்குடையன், சூரக்கொடையன், சூரப்பிலியன், சூரப்பிரியன்,சுரப்பிடுங்கியன், சுரைப்பிடுங்கியான்,சூரவாதித்தசோழன்,சூரக்கோட்டை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியகக் கொண்டவன். இவன் பெயர் சூரக்கோட்டையன், சூரங்கொண்டான், சூரமாண்டான், சூரப்பிரியன், சூரமுடையான், சூரமாளி எனவும் வழங்கும். சூரமங்கலம்,சூரக்குடி(சுரக்குடி) சூரனூர்,சூரயூர், சூரப்பள்ளம், என்னும் ஊர்களையும், கோளாலிஎன்னும் சிவ தலத்தையும், சூரனார்கோவில் என்னும் நவக்கிரக தலத்தையும் உருவாக்கி அரசு புரிந்தவன். ஆதிசேடன் மகள் காந்திமதியை மணந்தவன். தளவழிக்குகையி னிற்பொழி பிலத்த்ன்வழியே தனிந்ந்துரகர் த்ங்கண்மனி கொண்டவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. இவன் மரபோர் சூரக்கோட்டையன்,சுரக்குடையன், சுரக்குடியான், சூரக்குடையன், சூரக்கொடையன், சூரப்பிலியன், சூரப்பிரியன்,சுரப்பிடுங்கியன், சுரைப்பிடுங்கியான், என்னும் பட்டங்கள் பெற்றன

செம்பியன், செம்பன்,செம்பியரையன், செம்பரையன்,செம்படையன், செம்பியத்தரையன், செம்பியமுத்தரையன், செம்பியமுத்தரசு, செம்பியமுத்திரியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த சிபி சக்ரவர்த்தி. செம்பியபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். முதல் ஏழு வள்ளல்களில் ஒருவன். புறாவுக்காக பருந்துக்கு தன் சதையை கொடுத்தவன். கலிங்கத்துப் பரணியிலும், அகநானூறிலும் பாடப் பெற்றவன். செம்பியரையன், செம்பியத்தரையன் எனவும் அழைக்கப் பட்டவன். செம்பியன்பள்ளி(செம்பொன்பள்ளி), செம்பியங்குடி(செம்பன்குடி) என்னும் தேவார சிவதலங்களையும், செம்பியன்மங்கலம், செம்பியங்களர் எனும் ஊர்களையும் உருவாக்கி சம நீதி தர்மத்துடன் ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் செம்பியன், செம்பன்,செம்பியரையன், செம்பரையன்,செம்படையன், செம்பியத்தரையன், செம்பியமுத்தரையன், செம்பியமுத்தரசு, செம்பியமுத்திரியன் எனும் பட்டங்களை சுமந்தனர்.

சேண்ராயன், செனவராயன், சேணரையன், சன்னவராயன், சனகராயன், சாணரையன், சாணன், சாணையன், சேண்கொண்டான், சேனக்கொண்டான், சேனைகொண்டான், சேணாண்டான், சேணாடன், சேனைநாடன், சேனைநாட்டான், சேண்பிரியன், சேனைகொண்டான், சென்னாடான். சென்னண்டான், சாணூரான்.
நலங்கிள்ளி சேட்சென்னி சோழன், சேண்டாகோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சேண்ராயன், சேணரையன், சேண்கொண்டான்,சேணாண்டான், சேண்பிரியன், சேணாடன் எனவும் வழங்கும். மிக்க வீரமும் கொடையுமுடையவன், நீர்வாவி சூழ்ந்த சோலையில் துயின்ற காரணத்தினால் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளிசேட் சென்னி என்று பெயர் பெற்றவன். இவன் காலமுதல் சோழர்களுக்கு சென்னி என்ற பெயரும், சோழநாட்டிற்கு சென்னிநாடு என்னும் பெயரும் வழங்கலாயிற்று. இச் சோழ மன்னன் கோனாட்டு எறிச்சிலூர் மாடவன் மதுரைக்குமரனார் என்னும் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல் புறநானூற்றில் 61ம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இவன் மரபோர் சேண்ராயன், செனவராயன், சேணரையன், சன்னவராயன், சனகராயன், சாணரையன், சாணன், சாணையன், சேண்கொண்டான், சேனக்கொண்டான், சேனைகொண்டான், சேணாண்டான், சேணாடன், சேனைநாடன், சேனைநாட்டான், சேண்பிரியன், சேனைகொண்டான், சென்னாடான். சென்னண்டான், சாணூரான் என்னும் பட்டங்களை பெற்றனர்.

சேனாதிபதி, சேனாபதி,சேனாதி, தானாதிபதி,தானாதி, படையாட்சி, படையெழுச்சி, மாவெற்றி, மாவெட்டி, கங்கைராயன்,கங்கன், கங்கநாடன், கங்கைநாடன், கங்கைநாட்டான்.

சேய்ஞற்கொண்டான் ( செம்மைகொண்டான்) சேய்ஞலரையன் (செம்மைக்காரன்) சேய்ஞற்பிரியன் (சேப்பிளன்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சேய்ஞன். சேய்ஞலூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சேய்ஞற்கொண்டான், சேய்ஞலரையன், சேய்ஞற்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. சேயாறு என்ற ஆற்றையும், சேய்குடி, சேயூர், சேய்மங்கலம் என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் செம்மைகொண்டான், செம்மைக்காரன்,சேப்பிளன் எனும் பட்டங்களை பெற்றனர்.

சேந்தராயன், சிந்துராயன்
சேந்தசோழன் அழிசிசோழனின் மகன், உறையூரை இராசதானியாகக் கொண்டவன். அழகிலும்,வீரத்திலும்,கொடையிலும் சிறந்து விளங்கியபடியால் உருவப்பேரிளஞ்சேட் சென்னி என்று பெயர் கொண்டவன்.அழுந்தூர் வேளிர்குல மகளை மணந்தவன். கரிகால் பெருவளத்தான் சோழன் இவன் மகனாவான். பாணர், பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர் பெருமக்கள் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப் பாடல்கள் புறநானூற்றில் 4, 261ம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன.இவன் மரபோர் சேந்தராயன், சிந்துராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.


சேரவரையர், சேரர்பிரியர், சேர்வைக்காரர், சேர்வை
சேர அரச மரபினர்.சேரவரையர் (சேர அரசர்) என்பது காலப் போக்கில் உருமாறி சேரர்பிரியர், சேர்வைக்காரர், சேர்வை என வழங்களாயிற்று. சேரலர், சேரல், சேரமான் என்பன இவர்களின் சிறப்புப் பெயர்களாகும். இவர்கள் ஆண்ட நாட்டின் தலைநகரம் வஞ்சிமாநகர் என்றும், துறைமுக பட்டினமாக முசிறியும்,தொண்டியும் இருந்துள்ளன. கடல் சார் நிலமான சேரநாட்டை தொல் தமிழில் சேர்ப்பென்றும் அதனை ஆண்ட மன்னர்களை சேர்ப்பரென்றும் கூறுவது தமிழ் நூல் வழக்கு. சேர்ப்பர் சேரவரையராகி, சேரராகி அவர்களை சார்ந்து அரியணைகாக்கவும், நாட்டு விரிவாக்கத்திற்கும் பாடுபட்டவர்கள் சேரர்பிரியராகி இன்று சேர்வைக்காரர், சேர்வை என்றும் அறியப்படுகின்றனர்.இவர்களின் மூதாதரையர்கள் வானவரம்பன், வானவன், குட்டுவன், குடக்கோ என்போராவர். இவர்களின் கொடி விற்கொடியாகும், இப்பட்டமுடையோர் தஞ்சை காசாநாட்டு தென் பகுதியில் அதிகமாக வாழ்ந்துள்ளனர்.
பின் குறிப்பு
மதுரையை சார்ந்த பிரமலைக் கள்ளரில் ஒருபிரிவினர் சேருவார் என்றும் சேர்வை என்றும் அறியப்படுகின்றனர். இவர்களுக்கும் சேரர் பரம்பரையை சார்ந்த சேரவரையர், சேரர்பிரியர், சேர்வைக்காரர், சேர்வை என்பவர்களுக்கும் எதுவித குருதித் தொடர்புகளும் இல்லை.

சொக்கராயன், சுக்கிரன்.
சொக்கசோழன், சொக்கநாதபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சொக்கராயன் எனவும்வழங்கும்.சொக்கனாவூர்,சொக்கன்பட்டி என்னும் ஊர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் சொக்கராயன், சுக்கிரன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

சோணையன், சோணாடுகொண்டான், சோணாருண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சோணைமன். சோணாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.
இவன் பெயர் சோணையன், சோணாடுகொண்டான் எனவும் வழங்கப்பட்டது. இவன் மரபினர் சோணையன், சோணாடுகொண்டான், சோணாருண்டாண் எனும் பட்டங்களை பெற்றனர்.

சோழன், சோழவன், சோழரையன், சோழதரைய,சோழதிரியன்,சோதிரையன், சோழராசன், சோமராசன், சோநாயகன், சோழாட்சி, சோமாசி, சோழதேவன், சோமதேவன், சோழகோன், சோழகன், சோழப்பிரியன், சோழநாடன், சோமநாடான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த சக்ரவர்த்தி சுராதிராசசோழன். சோழபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். தன்னுடைய ஆளுகையில் அடங்கிய பூமிக்கு சோழமண்டலம் என்று பெயரிட்டவன். பிராமணர், வேளாளர், இடையர் போன்ற சில வகுப்பினர்களுக்கு சோழியர் என்ற பட்டத்தையும் வழங்கியவன். தன் மூத்த மகனுக்கு இராசகேசரி என்றும் இளைய மகனுக்கு பரகேசரி எனவும் பெயரிட்டவன். இதன் பின் அரியாசனம் ஏறிய சோழ மன்னர்கள் மாறிமாறி இராசகேசரி, பரகேசரி என்னும்பட்டந்தரித்தனர். (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது) சோழமங்கலம், சோழனூர், சோழன்பேட்டை, சோழன்பட்டி, சோழங்குடி, சோழன்குடிகாடு, சோழாட்சி(சோமாசி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டான். இவன் மரபினர் சோழன், சோழவன், சோழரையன், சோழதரையன்,சோழதிரியன்,சோதிரையன், சோழராசன், சோமராசன், சோநாயகன், சோழாட்சி, சோமாசி, சோழதேவன், சோமதேவன், சோழகோன், சோழகன், சோழப்பிரியன், சோழநாடன், சோமநாடான் என்ற பட்டங்களை பெற்றனர். சோழநாட்டவர் என்றும் சோழமண்ணுக்குரியவர் என்றும் பொருளில் இப்பட்டங்கள் அமைந்துள்ளன. முதல் பராந்தகன் சோழனின் 34ம் ஆட்சியாண்டின் கல்வெட்டில் இம்மன்னனின் படைத்தலைவன் சிறுகுளத்தூர் மாறன் பரமேசுவரனான செம்பியன் சோழியவரையன் சீட்புலி,நெல்லூர் முதலிய பகுதிகளை வென்று திருவெற்றியூர் கோயிலுக்கு விளக்கெரிக்க கொடை கொடுத்தான் என்றும் கூறுகின்றன. செம்பிய சோழியவரையன் என்பது அரசன் இவனுக்கு வழங்கிய விருதுப் பெயராகும். செம்பிய சோழியவரையன் என்ற இப் பட்டம் காலப்போக்கில் மருவி சோழியதரையன், சோழயதரையன்,சோழதரையன் என்று வழங்கி வருகிறது. இப்பட்டம் கொண்ட கள்ளர் இனமக்கள் புதுக்கோட்டை கரியாபட்டி, கீரனூர் மற்றும் திருச்சி செம்பட்டு முதலிய ஊர்களில் வாழுகின்றனர்.

சோழகங்கன், சோழகங்கதேவன், சோழகங்கநாடன், சோழங்கன், சோழங்கதேவன், சோழங்கநாடன்,

சோழபாண்டியன், பாண்டியன், போரிற்கொளுத்தி, போரைக்கொளுத்தி, சயங்கொண்டான், சேங்கொண்டான்,

சோழசனகராசன், சனகராயன், போரிற்பொறுக்கி, பொரிப்பொறுக்கி, கடாரத்தலைவன், கடாத்தலையன், கடாரந்தாங்கி, சீனத்தரையன்,பல்லவன்

தக்கோலன், தக்கோலாக்கியன்,தாக்கலக்கி, 
தக்கோலசோழன், தக்கோலம் என்னும் தேவார சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன்.தக்களூர், தகட்டூர் என்னும் தேவார சிவ தலங்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் தக்கோலன், தக்கோலாக்கியன்,தாக்கலக்கி, என்னும் பட்டங்ககளை கொண்டனர்.

தஞ்சைராயன், தஞ்சிராயன், தஞ்சைக்கோன்,

தில்லைராயன், தில்லையாண்டான், தில்லைபிரியன், தில்லையாளி,தில்லைகொண்டான்.
செம்பியன் சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் தில்லைமன். தில்லை (சிதம்பரம்) என்னும் தேவார சிவதல நகரையுண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். தில்லைவிடங்கன், தில்லையாளிநல்லூர், தில்லைவளகம், தில்லையம்பூர் எனும் ஊர்களையும் உண்டாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபோர் தில்லைராயன், தில்லையாண்டான், தில்லைபிரியன், தில்லையாளி,தில்லைகொண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.

துறையாண்டான், துறவாண்டான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் துறைமன். துறைக்கோட்டை ( துறையாண்டான்கோட்டை) என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் துறையாண்டான் எனவும் வழங்கும். துறையூர் என்ற தேவார சிவதலத்தையும், துறைப்பூண்டி எனும் சிவதலத்தையும் துறைமங்கலம்,துறைக்குடி, துறைப்பட்டி,துறைக்குரிச்சி(துவரைக்குரிச்சி) துறையாண்டான்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் துறையாண்டான்,துறவாண்டான் என்ற பட்டங்களை பெற்றனர்.

துண்டராயன், துண்டுராயன், துண்டயன், தொண்டயன், துண்டன், தொண்டன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் துண்டீரன். துண்டுராயன்பாடி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் துண்டராயன், துண்டயன், துண்டன் எனவும் வழங்கும். துண்டுராயன்பட்டு, துண்டுராயன்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் துண்டராயன், துண்டுராயன், துண்டயன், தொண்டயன், துண்டன், தொண்டன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

தெலிங்கராயன், தெலிங்கதேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் தெலிங்கமன். தெலிங்காபுரி என்னும்நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் தெலிங்கராயன், தெலிங்கதேவன் என்வும் வழங்கழாயிற்று. இவன் மரபோர் தெலிங்கராயன், தெலிங்கதேவன் எனும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டங்கள் இராசராச சோழனுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இராசராசனின் தெலுங்க வெற்றியை சிறப்பிக்கும் வகையில் தெலுங்க குலகாலன் என்ற பட்டமும் வழங்கிவந்தது.இப்பட்டமுடையோர் ஒரத்தநாடு,தெலுங்கன்குடிகாடு முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில்வாழுகின்றனர்.


தென்னவராயன், தென்னரையன்,தென்னன்,தென்கொண்டன், தெங்கொண்டான், தெங்கண்டான்,தெங்கிண்டான், தென்னப்பிரியன், தின்னாப்பிரியன், திண்ணாப்பிரியன்.
சோழ மன்னன் சுபதேவனுக்கும் கமலவதி என்பாளுக்கும் பிறந்தவன் சோழன் செங்கணான்.கமலவதி பிரசவ வேதனை கண்டபோது சோதிட வல்லுனர்கள் இன்னும் ஒரு நாளிகை கழித்து குழந்தை பிறக்குமானால் மூவுலகத்தையும் ஆளக்கூடிய மன்னனாவான் என்று கூறிய படியால் தன்னை கால் மேலாகவும் தலை கீழாகவும் இருக்கும்படி கட்டி ஒரு நாளிகை கடந்தபினர் கட்டை அவிழ்த்து விடும்படிகூறி குழந்தையை மாசி மாதம் சதய நட்சத்திரத்தில் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்த போது கண்கள் சிவந்து பிறந்தபடியால் செங்கணானென்று பெயரும் இட்டு தாய் மடிந்தாள். இக்குழ்ந்தையே பெயர் பெற்ற கோச்செங்கணாவான்.

இவன் சங்ககால சோழ அரசர்களில் ஒருவன்.கிள்ளி வளவனுக்கு பின்னர் ஆண்ட மன்னர்களில் மக்கள் மனதில் அழியா இடம்பெற்றவன்.இவன் எழுபது கோவில்களை காவிரிகரை ஓரத்தில் கட்டியதாக திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார். அம்பர், வைகல், நன்னிலம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களையும் கட்டியவன் இவனே. இவனுக்கு நல்லடிக்கோன் என்ற் மகனும் இருந்தான். புறநானூறு, களவழிநாற்பது என்ற சங்கனூல்களிலும், திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,திருமங்கை ஆழ்வார் ஆகியோறாலும் பாடப்பற்றவன் செங்கணான்

கோச்செங்கனானுக்கு தென்னவராயன், தென்னரையன்,தென்கொண்டான், தென்னாண்டான்,தென்னப்பிரியன், தென்னுடையான், தென்னாளி, என்ற பெயர்களும் உண்டு. இவன் தென்னவராய நல்லூர், தென்னவநாடு, தென்னங்குடி, தென்னம்புலம், தென்குடி, தென்பரை,தென்பாதி, தென்னங்குளம், தென்னவராயன் பேட்டை என்னும் ஊர்களை உருவாக்கி ஆட்சிபுரிந்தவன்.

செம்பியன் மரபில் வந்த செங்கண் சோழன், தென்னூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். கடைச்சங்கால இறுதியில் வாழ்ந்தவன், அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவனாவான். ஈசனுக்கு 70 மாடக்கோயில்கள் கட்டி அரசாண்டதாக திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.

இவன் கட்டிய ஆனைபுகாக்(மாட) கோயில்களிள் ஆனைக்கா, பெண்ணாகடம், சாய்க்காடு,மண்ணிப்படிக்கரை, செம்பிருப்பு, செம்பொன்பள்ளி, வடதலைச்சங்காடு, தெந்தலைச்சங்காடு, ஆக்கூர், பெருமுளை, தேரழுந்தூர், வைகல், நரையூர் (மணிமாடம்) துற்காட்சி, நாலூர், ஆவூர், பசுபதிமங்கை, மாத்தூர், குடவயில், இங்கண், மருகல்,அம்பர், நன்னிலம், பாம்புரம், மாதூர், கீழ்வேளூர், தேவூர், சிக்கல், களப்பாள், இராசசேரிபுரம், கீழைவழி, தண்டலை, நீணேறி, வலிவலம், கீழையிலரன், பழையாறுவடதளி, பழையாறுதென்றளி, பழையாறுகீழ்த்தளி, பெருவேளூர், நாகைமலையீச்சரம், இராமனதீச்சரம், பெரும்கடம்பனூர், சேய்ஞலூர், நாகை மேலைக்காயரோகணம், வீழிமிழலை,பனையூர், என்னும் 47 கோயில்கள் புலப்பட்டன.

மற்ற 23 கோயில்கள் புலப்படவில்லை. சேரமன்னன் கணைக்கால் இருபொறையைச் சிறைபிடித்துக் குடவாயில் கோட்டத்து சிறையில் வைத்தான்,பின்பு பொய்கையார் என்னும் புலவர் பாடிய களவழிநாற்பது படலைக் கேட்டு சேரமன்னன் சிறை நீக்கி அரசுரிமை அளித்தான். இவன் மரபோர் தென்னவராயன், தென்னரையன்,தென்னன்,தென்கொண்டன், தெங்கொண்டான், தெங்கண்டான்,தெங்கிண்டான், தென்னப்பிரியன், தின்னாப்பிரியன், திண்ணாப்பிரியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

தேவராயன்,தேகிராயன்,தேவாண்டான்,தேவண்டன், தேவன்
மனுசக்ரவர்தியின் மகனாகிய இக்குவாகு தேவூரெனும் (தேவாரம் பெற்ற சிவம்) நகரத்தை உருவாக்கி அரசு புரிந்தான். இதன்மூலம் இவனை தேவராயன், தேவாண்டான், தேவன் என்றும் அழைக்கப்பட்டான். இவன் உருவாக்கிய ஊர்கள் தேவன்குடி, தேவனூர், தேமங்கலம், தேவராயன் பேட்டை, தேவராயநல்லூர், தேவதானமென்பனவாகும். இக்குவாகு மரபு வழி வந்தோர் மேற்கூரிய பட்டங்களை கொண்டனர்.

தொண்டைமான்,தொண்டையன், தொண்டைப்பிரியன், தொண்டாப்பிரியன், தொண்டமார், தொண்டாயன்,தொண்டைமான் கிளையர்.
தொண்டை நாட்டு அரச மரபினர். கரிகால சோழனின் இளைய மகன் தொண்டைமான் கிழக்கே கடலையும், தெற்கே பொண்ணையாற்றையும், மேற்கே பவள மலையையும் வடக்கே திருவேங்கிடமலையையும் எல்லைகளாகவும் காஞ்சிபுரத்தை தலைநகராகவும் கொண்டு ஆண்டவன்.
தொண்டைமான் இளந்திரையன்,சோழன் நெடுமுடிக்கிளிக்கும், நாகநாட்டு இளவரசி பீலிவளைக்கும் பிறந்தவன். தலை சிறந்த வீரமும் கொடை நலமும் வாய்க்கப்பெற்றவன். கவி பாடும் திறமை பெற்றவன், புறநானூற்றிலும், நற்றிணையிலும், பெரும்பாணாற்றுப்படையிலும் அவ்வையார் பாடலிலும் இடம் பெற்றவன். பொன்னம்பலநாத தொண்டைமான் இலங்கையை ஏழு நாட்களில் அழித்தவன் தொண்டைமான் ஆவுடைரகுநாத தொண்டைமான் இவர்கள் எல்லாம் தொண்டைமான் வம்சம் சார்ந்தவர்கள். தொண்டைமார், தொண்டையார், தொண்டைபிரியர், தொண்டைமான் கிளையர் என்றும் பட்டங்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

நல்லுத்தரன்
இக்குவாகுவின் மகன் தேவூரை இராசதானியாகக் கொண்டவன். நல்லூர்,நல்லக்குடி, நல்லாற்றூர் எனும் நகரங்களை உருவாக்கியவன்

நன்னியன் ( நயினியன்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நன்னிமன். நன்னிபள்ளி என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் நன்னியன் என்றும் அழைக்கப்பட்டான். நன்னிலம் என்னும் தேவார சிவதலத்தையும், நன்னிமங்கலம், நன்னிகுடி, நன்னி (நயினான்)என்னும் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் நன்னியன்,நயினியன் எனும் பட்டங்களை பெற்றனர்.

நள்ளிப்பிரியன், நல்லிப்பிரியன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நல்லி. நள்ளிக்கோட்டை (நல்லிக்கோட்டை) என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். நள்ளாறு என்னும் தேவார சிவதலத்தையும், நள்ளி என்னும் ஊரையும் உருவாக்கி
ஆட்சி புரிந்தவன்.இவன் மரபு வம்சத்தினர் நள்ளிப்பிரியன், நல்லிப்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.

நரசிங்கன், நரங்கியன், நரசிங்கப்பிரியன், நரங்கிப்பிலியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நரசிங்கன். நரசிங்கபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். நரசிங்கமங்கலம், நரசிங்கம்பேட்டை என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் நரசிங்கன், நரங்கியன், நரசிங்கப்பிரியன், நரங்கிப்பிலியன் எனும் பட்டங்களை சுமந்தனர்.

நந்தியன்(நந்தியர்), நந்தன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நந்தியன். நந்திபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். நந்திமாகுடி, நந்தனூர், நந்திமங்கலம், நந்திவனம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் நந்தியன், நந்தன் என்ற பட்டங்களை பெற்றனர்.இவர்கள் பல்லவ குலத்தினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் அறியப்படுகிறது. பல்லவரின் இலச்சினை நந்தியாகும், பல்லவர் கொடிகளிலும், காசுகளிலும் நந்தியின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. பல்லவ அரசர்களும் முதலாம் நந்திவர்மன், இரண்டாம் நந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் என்ற பெயர்களில அழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இப்பட்டமுடையார் சோழர் மற்றும் பல்லவர் மரபினரென்றும் அறிய முடிகிறது. இப்பட்டமுடையோர் பொன்னாப்பூர், தும்பத்திக்கோட்டை, தென்னமநாடு, காட்டுக்குறிச்சி, தலையாமங்கலம்,பட்டவெளி,கண்டகிரயம், ந்ல்லிச்சேரி முதலிய ஊர்களில் மிகுதியாக வாழுகின்றனர்.

நாணசேவன், நாணசிவன்,ஞானசெவன்,ஞானியர், நானசேவர்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நாணசேவன். நாணலூர்,நாணமங்கலம் (நாரணமங்கலம்) முதலிய ஊர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் நாணசேவன், நாணசிவன்,ஞானசெவன்,ஞானியர், நானசேவர் என்ற பட்டங்களையும் பெற்றனர்.

நாக்காடி, நாவிளங்கி,நாகாளி
மாந்தாதா மரபில் வந்த மன்னன் நாகமன், நாகபட்டினம் என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நாகாளி என்றும் வழங்கப்பட்டான். சிவராத்திரி முதல் யாமத்தில் திருக்குடந்தையிலும்,இரண்டாம் யாமத்தில் திருநாகேச்சரத்திலும், மூன்றாம் யாமத்தில் திருப்பாப்புரத்திலும், நான்காம் யாமத்தில் திருநாகூரிலும் திருக்கோயிலமைத்து சிவலிங்கபூசை செய்த பெருமை படைத்தவன். நாகேச்சுரம், நாகன்பாடி, நாகன்குடி, நாகலூர், நாகலாபுரம், நாகமங்கலம், நாகபட்டினம், நாகளூர், நாகன்பேட்டை என்ற நகரங்களையும் ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.

நார்த்தேவன், நார்த்தவான், நாரத்தேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நார்த்தேவன். நாரையூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நார்த்தேவன்குடி (நார்த்தாங்குடி) நார்த்தேவன்மங்கலம் (நாரமங்கலம்) என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் நார்த்தேவன், நார்த்தவான் எனும் பட்டங்களை கொண்டனர்.

நிலங்கொண்டான், நெறிமுண்டான்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நீலமன். நீலப்பாடி நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நீலப்பிரியன், நீலங்கொண்டான் எனவும் அழைக்கப்பட்டவன். நீலக்குடி என்னும் தேவார சிவதலத்தையும், நீலவெளி என்னும் சிவதலத்தையும், நீலநல்லூர் (நீலத்தநல்லூர்)
நீலமங்கலம் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் நிலங்கொண்டான், நெறிமுண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.

நெல்லிப்பிரியன், நல்லிப்பிரியன்.
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் நெல்லிமன். நெல்லிக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.நெல்மலி, நெல்லூர், நெல்லி, நெல்லிச்சேரி, மற்றும் தேவாரத் தலங்கள் நெல்வாயில் (சிவபுரி) நெல்வாயிலாத்துறை, நெல்வெண்ணெய், நெல்லிக்கா மற்றும் மேலநெல்வேலி (மீனவல்லி) என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் நெல்லிப்பிரியன், நல்லிப்பிரியன். எனும் பட்டங்களை பெற்றனர்.

நெடுவாண்டான், நெடுவண்டான், நெடுங்கொண்டான், நெறிமுண்டான், நெடுவாளி, நெடுங்காளி, நெடுந்தரையன், நெடுத்தார்,
நெடுங்கிள்ளிசோழன், நெடுவாக்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் நெடுவாண்டான்,நெடுங்கொண்டான், நெடும்பிரியன், நெடுவாளி, நெடுந்தரையன் என்வும் வழங்கும். நெடுங்களம், நெடுவாயில் என்னும் தேவார சிவ தலங்களையும், நெடுங்காடு, நெடுங்குளம் என்னும் சிவ தலங்களையும், நெடுவூர், நெடுங்குடி, நெடுமங்கலம், நெடும்புலம், நெடுங்கரை, நெடுவயல், நெடும்பட்டி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் நெடுவாண்டான், நெடுவண்டான், நெடுங்கொண்டான், நெறிமுண்டான், நெடுவாளி, நெடுங்காளி, நெடுந்தரையன், நெடுத்தார் என்னும் பட்டங்களை பெற்றனர். இப் பட்டங்கள் கொண்ட கள்ளர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நெடுவாக்கோட்டையில் பெருமளவில் உள்ளார்கள்.

பழையாறுகொண்டான், பழையாற்றான், பழந்தான், மாம்பழத்தான், பழங்கொண்டான், பழங்கண்டான், பழையாற்றரையன்.
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் பழையன், பழையாறு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பழையாறு கொண்டான், பழையாற்றரையன் என்றும் இவன் அழைக்கப்பட்டான். பழையாற்றுவடதளி, பழையாற்றுத்தென்றளி, பழையாற்றுமேற்றழி, பழையாற்றுக்கீழ்த்தளி, பழையங்குடி, பழனம், பழையபுரம், பழையவலம், பழையாறு, பழையனூர், பழமங்கலம், பழங்களத்தூர், பழவனக்குடி எனும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய பட்டங்களை கொண்டனர்.

பனையன், பன்னையன், பனைகொண்டான், பன்னிகொண்டான், பண்ணிகொண்டான், பன்றிகொண்டான், பண்ணிமுண்டான், பணிகொண்டான், பணிபூண்டான், தாளியன், தாளிதியன்,
முசுகுந்த சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பனையமன், பனையக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் தாளியன்,பனைகொண்டான் என்றும் வழங்கப்பட்டான். பனந்தாள், பனங்காடு, பனங்காட்டூர், பனையூர் என்னும் சிவ தலங்களையும், பனையப்பட்டி, பனங்காடி, பனம்பாக்கம், பனங்குளம், பனமங்கலம்,பனம்பட்டி என்ற ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.

பருத்திகொண்டான்
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் பருதிமன், பருதி(பருத்தி) கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பருதிகொண்டான், பருதியாண்டான், பருதிப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். பருதீச்சரம் (பருதியப்பர் கோவில்),மிகைச்சூர் எனும் சிவ தலங்களையும், பருத்திக்கோட்டை, பருத்திகுடி, பருத்தியூர், பருத்திச்சேரி, பருத்திமங்கலம், பருத்திப்பள்ளம் என்னும் ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூறிய பட்டங்களை பெற்றனர்.

பரங்கிராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பரங்கிமன். பரகலக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் பரங்கிராயன் என்வும் வழங்கலாயிற்று. பரங்கிமலை, பரங்கிப்பேட்டை, பரங்கிவெட்டிகாடு, பரம்பைக்குடி, பரமந்தூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பரங்கிராயன் எனும் பட்டம் கொண்டனர்.

பயற்றுராயன், பதுங்கரான், பதுங்கிரான், பதுங்கியான், பதங்கன், பைதுங்கன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பயற்றமன். பயிற்றூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பயற்றங்குடி, பயற்றஞ்சேரி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பயற்றுராயன், பதுங்கரான், பதுங்கிரான், பதுங்கியான், பதங்கன், பைதுங்கன் எனும்
பட்டங்களை கொண்டனர்.

பத்தாளன், பத்தாட்சி, பெத்தாச்சி
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் பத்தாளன். பத்தாளன்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.பத்தூரென்னும் தேவார சிவதலத்தையும் பத்தமங்கலம்,பத்தகுடி, பத்தாளன்பட்டி என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் பத்தாளன், பத்தாட்சி, பெத்தாச்சி எனும் பட்டங்களை பெற்றனர்.

பட்டுராயன், பவட்டுரான்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பட்டிமன். பட்டுக்கோட்டை எனும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பட்டீச்சரம் என்னும் தேவார சிவதலத்தையும் பட்டம், பட்டவெளி, பட்டுராயன்பட்டி, பவட்டுரான்பட்டி, பட்டிமங்கலம் போன்ற நகரங்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். பட்டுகொண்டான், பட்டாண்டான், பட்டுராயன், பட்டாளி, பட்டுப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். இவன் வழி வந்தவர்கள் பட்டுராயன், பவட்டுரான் என்ற பட்டங்களை பெற்றனர்.

பஞ்சநதரையன், பஞ்சரையன், காவிரிவெட்டி, காவெட்டி
காங்கமசோழ சக்ரவர்த்தி மரபில் வந்த பஞ்சநதிசோழ சக்ரவர்த்தி. பஞ்சநதிக்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். காவிரி, கபிலை,பவானி, நொய்யல்,ஆன்பொருனை என்னும் ஐந்து ஆறுகளையும் ஒன்று சேர்த்து புகார் பட்டினத்தில் கடலிற் சேர்த்து பொன்னி என்று பெயரிட்டவன் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்) இவன் பெயர் காவிரிச்சோழன், காவிரிகண்டசோழன், காவிரிவெட்டியசோழன், பஞ்சநதரையன், பஞ்சநதிகொண்டான், பஞ்சநதியாண்டான், பஞ்சநதிபிரியன், பஞ்சநதியாளி எனவும் வழங்கிற்று. இவன் காலமுதல் சோழநாடு காவிரி நாடு, பொன்னிநாடு, புனனாடு என்னும் பெயர்களும், காவிரியின் வடபுறமுள்ள சோழ நாடு வடகரைநாடு என்றும் தென் புறமுள்ள சோழநாடு தென் கரைநாடு என்றும் பெயர் பெற்றது. சோழர்களுக்கு காவிரிநாடன், பொன்னிநாடன், பொன்னித்துறைவன், புனனாடன் என்னும்பெயர்களும் வழங்கழாயிற்று. ஐயாறு(பஞ்சநதீச்சரம்) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தையும், பஞ்சநதிக்குளம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசுபுரிந்தான்.இவன் மரபோருக்கு பஞ்சநதரையன், பஞ்சரையன், காவிரிவெட்டி, காவெட்டி என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டது.

பல்லவர், பல்லவராயர், பல்லவரையர், பல்லவாண்டார், பல்லவவாண்டார். பல்லமடையார்
பல்லவ சக்ரவர்திகளின் மரபினர். பல்லவர் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 9ஆம் நூற்றாண்டு வரையில் காஞ்சியை தலைநகரமாக கொண்டு தமிழகத்தை அரசாண்டவர்கள். இவர்களின் பூர்வீகம் இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவ தீவு (காரைத்தீவு) என்றும், மணி பல்லவமுடையார் என்ற பட்டம் திரிந்து பல்லமடையார் என்று ஆகி பின்பு பல்லவர் என்று வழங்கலாயிற்று என்று கூறுவதுண்டு. புகழ் பெற்ற மாமல்லபுரம் (மகாபலிபுரம்) சிற்பங்களையும், சித்தன்னவாசல் ஓவியங்களையும் உருவாக்கியவர்கள் பல்லவர்களே. பல்லவராயன் என்ற பட்டமுடைய குறுநில மன்னர்களும் அரசியலதிகாரிகளும் பிற்கால சோழப் பேரரசில் பெரும்புகளோடு விளங்கியுள்ளனர். ஈராயிரவன் பல்லவரையன் ஆகிய மும்முடிச்சோழபோசான், இவன் அரசூரில் வாழ்ந்தவன், இராசராச சோழனின் பெருந்தரத்து அதிகாரிகளிள் ஒருவன். இராசராசனுக்கு திருமந்திர ஓலை நாயகமாகவும் இருந்துள்ளான். இராஜேந்திர சோழன் காலத்திலும் பெரும் பதவிகளை வகித்துள்ளான். தண்டநாயகன் வெண்காடன் சங்கரனாகிய இராசாதிராசப் பல்லவராயன், இவன் உத்தம சோழ நல்லூரைச் சேர்ந்தவன். இராசாதிராசனின் படைத்தலைவன். கருணாகர சுந்தரத் தோளுடையயான் ஆகிய வளவன் பல்லவதரையன், இவன் விக்கிரம சோழனால் வளவன் பல்லவராயன் என்ற பட்டம் பெற்ற அதிகாரியாவான். பல்லவராயர்களில் கோனேரிப் பல்லவராயன், மஞ்சோலை பல்லவராயன், அச்சுத்ப்ப பல்லவராயன், இளையபெருமாள் பல்லவராயன், ஆவுடையப்ப பல்லவராயன், கந்தப்பப் பல்லவராயன், மல்லப்பப் பல்லவராயன், சிவந்தெழுந்த பல்லவராயன் என்ற கிளைகளும் காணப்படுகின்றன. பல்லவராயர்கள் புதுக்கோட்டை பிலாவிடுதி, மருதன்கோவில்விடுதி, காயம்பட்டி( திருமயம்) தஞ்சாவூர் மாவட்டம் சின்ன பொன்னாப்பூர், கண்ணுகுடி, தென்னமநாடு, மூவாநல்லூர், செயங்கொண்டசோழபுரம்,ரெங்கநாதபுரம் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர். பல்லவாண்டான் என்னும் பட்டமுடைய தலைவர்கள் இடைக்கால சோழர் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர். பல்லவர் என்னும் பட்டங்களின் ஒற்றுமை கண்டு இவர்கள் பல்லவர்களின் வழித்தோன்றல்கள் எனக்கொள்ள முடிகிறது.

பசுபதி, பசும்படி, பசும்பிடி.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் பசுபோகசோழன். ஆவூர் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பசுபதி என்றும்வழங்கலாயிற்று. ஆவடுதுறை, ஆப்பாடி, பசுபதிமங்கை (பசுபதிகோயில்) என்னுமூர்களையும், பசுபோக ஆறுஎன்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசு புரிந்தான். இவன் மரபினர் பசுபதி, பசும்படி, பசும்பிடி என்னும் பட்டங்களை கொண்டனர்.

பாப்பரையன், பாப்படையன், பாப்பிரியன், பாப்புவெட்டி, பாப்புரெட்டி.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பாப்பனசோழன். பாப்புநகரம் என்ற நகரத்தை உருவாக்கி தெற்குக்கோட்டை, வடக்குக்கோட்டை என்று இரு பகுதிகளாக பிரித்து இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாப்பரையன், பாப்புடையன், பாப்பிரியன், பாப்புவெட்டி எனவும் வழங்கும். பாப்புமங்கலம், பாப்பனசேரி, பாப்பாகோயில், பாப்பாகுடி, பாப்பூர், பாப்பரையன்பட்டி, பாப்புடையன்பட்டி, என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் பாப்பரையன், பாப்படையன், பாப்பிரியன், பாப்புவெட்டி, பாப்புரெட்டி என்னும் பட்டங்களை பெற்றனர். வேலூருக்கு அருகில் உள்ள பாப்புரெட்டிப்பட்டி, தருமபுரிக்கு அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊர்கள் இப்பட்டங்களின் அடியாகத் தோன்றியவைகளாகும்.இவர்களின் பட்டங்கள் பார்புரட்டியார் என்ற பட்டபெயரில் இருந்து திரிந்து பல்வேறு திரிபு பெயர்களை கொண்டுள்ளது. பார்புரட்டியார் என்றால் தம் வீரத்தால் பகைவரை தலைகீழாக புரட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்று பொருள் படும். இப்பட்டம் உடையவர்கள் திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, இளங்காடு, வானரங்குடி, திருச்சி, தஞ்சாவூர் முதலிய ஊர்களில் வாழுகின்றனர்.

பாச்சிலாளி, பிச்சாடி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பாச்சில்மன். பாச்சிற்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். பாச்சிலாச்சிராமம், பாசூர் (பாச்சூர்) என்னும் தேவார சிவதலங்களையும்உண்டு பண்ணி அரசாண்டவன். இவன் பாச்சிலாண்டான், பாச்சிற்பிரியன்,பாச்சிலாளி என்னும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் பாச்சிலாளி, பிச்சாடி எனும் பட்டங்களை கொண்டனர்.

பாம்பாளி, பம்பாளி, வம்பாளி,
பெரும்பற்றசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி பாம்பசோழன். பாம்புரம் என்ற தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாம்பு கொண்டான், பாம்பாண்டான், பாம்புடையன், பாம்புப்பிரியன், பாம்பாளி எனவும் வழங்கப்பட்டது. சோழ நாட்டிற்கும் சிங்களதீவுக்கும் கப்பல் வணிகம் நடைபெரும் பொருட்டு பாம்பன் கால்வாய் அமைத்து வங்காளக் குடாக்கடலையும் இனைத்து அதன் கரையில் பாம்பன் என்னும் நகரத்தையும் உண்டு பன்னியவன் இவன். புணரியொன்றிடை யொன்றுபுக விட்டவவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. பாம்புணியாறு என்னும் பேராற்றையும், பாம்பாறு என்னும் காட்டாறையும், பாம்புணி, பாம்பணி என்னும் தேவார சிவ தலங்களையும், பாம்பூர் முதலிய ஊர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபோர் பாம்பாளி, பம்பாளி, வம்பாளி என்ற பட்டங்களை பெற்றனர்.

பாண்டியன், பாண்டியராயன்
சோழ மன்னர்களுக்கும் பாண்டியமன்னர்களுக்கும் சோழப் பேரரசு தொடக்கம் முதல் இறுதி வரை பகைமை இருந்து கொண்டே இருந்தது. பாண்டியர்களோடு போரிடாத சோழ மன்னர்களே இல்லை என்ற அளவிற்கு அடிக்கடி போர் நடந்துள்ளது. இராசராச சோழன் தனது ஆட்சியில் படையெடுத்து பாண்டிய மன்னன் அமரபுயங்கனை வென்று பாண்டிய நாட்டை தன் ஆட்சிக்குட்படுத்தி தனக்கு பாண்டியன் என்ற பட்ட்த்தையும் சூட்டிக்கொண்டான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய மரபினர்களுக்கு அளித்த பட்டமே பாண்டியன்,பாண்டியராயன் என்பதாகும். இப் பட்டங்கள் பாண்டிய நாட்டு வெற்றி தொடர்புடையன. இப் பட்டங்களை உடைய கள்ளர்கள் தஞ்சையிலும்,சித்தமல்லி, புதுக்கோட்டை வடவாளம், இராயப்பட்டி, கும்பகுடி, அவ்வையார்பட்டி, திருச்சி அல்லூர் முதலிய ஊர்களிலும் உள்ளனர்.

பாண்டராயன். பாண்டுராயன். பாண்டுரார்
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் பாண்டுசோழன். பஞ்சநதிகோட்டயை இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாண்டராயன் என்று வழங்கழாயிற்று. பாண்டவாய் என்னும் ஆற்றையும், பாண்டூர் என்னும் சிவதலத்தையும், பாண்டுகுடி, பாண்டுமங்கலம்(பாண்டமங்கலம்) பாண்டராயன்பட்டி என்னும் ஊர்களையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் பாண்டுராயன், பாண்டாராயன், பாண்டுரார் என்னும் பட்டங்களில் அழைக்கப்படுகிறனர்.

பாலையன், பாலியன், பாலைராயன், பால்ராயன்,பாலையாண்டான், பாலாண்டான், பாலையுடையன், பாலுடையான், பாவுடையான், பாலைநாடன், பானாடன், பாலைநாட்டான், பானாட்டான்.
பாலையசோழன், பாலையக்கோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாலையன், பாலைராயன், பாலையாண்டான், பாலைகொண்டான், பலையுடையவன், பாலைப்பிரியன், பாலைநாடன்,பாலைநாட்டான்,பாலையாளி என்வும் வழங்கலாயிற்று. பழைய பாலாறு, பாலாறு என்னும் பேராறுகளையும், பாலைத்துறை, பாற்றுறை(பால்துறை) எனும் தேவார சிவ தலங்களையும், பாலையூர்,பாலைக்குடி, பாலைக்குரிச்சி, பாலைக்காடு,பாலைப்பட்டி,பாலைப்பட்டு, பாலாகுடி, பாலைவாய்,பாலாண்டான்பட்டி என்னும் ஊர்கலை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் பாலையன், பாலியன், பாலைராயன், பால்ராயன்,பாலையாண்டான், பாலாண்டான், பாலையுடையன், பாலுடையான், பாவுடையான், பாலைநாடன், பானாடன், பாலைநாட்டான், பானாட்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்.

பிரமன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பிரமன். பிரமபுரம் (சீகாழி) என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். பிரம்பில் என்னும் தேவார சிவதல நகரத்தையும், பிரம்பூர் என்னும் சுப்ரமணிய தலத்தையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பிரமன் எனும் பட்டம் கொண்டனர்.

புன்னாகன், புண்ணாக்கன், புன்னையன்,புனையன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் புன்னாகமன். புன்னையூர் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் புன்னையன் எனவும் வழங்கப்பட்டது. புன்கூர் என்னும் தேவார சிவதல நகரத்தையும், புன்னைவாயில், புன்னைத்தூர், புன்னையூர், புன்னைக்குடி, புன்னாக்கன்குடி, புன்னைமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் புன்னாகன், புண்ணாக்கன், புன்னையன்,புனையன் என்ற பட்டங்களை பெற்றனர்.

புள்ளராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் புள்ளமன். புள்ளன்பாடி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். புள்ளராயன் எனவும் அழைக்கப் பட்டவன். புள்ளமங்கை என்னும் தேவார சிவதலத்தையும், புள்ளமங்கலம், புள்ளங்குடி, புள்ளம்பட்டி, புள்ளராயன்பட்டி, புள்ளராயன் குடிகாடு என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் புள்ளராயன் எனும் பட்டத்தையும் சுமந்தனர். போருக்குச் செல்லும்முன் வெற்றி தோல்வியை அறிவதற்காக புள் சகுனம் பார்த்து செல்வதுண்டு. இச் செயலுக்கு புள்ளுவம் என்ற பெயருண்டு. புள்ளுவம் பார்பதில் வல்லமை கொண்டவர்கள் இப் பட்டங்களுக்கு உரிமை உடையவர்கள். இப்படம் உடையவர்கள் புள்ளவராயன்குடிகாடு, நெடுவாக்கோட்டை, காரக்கோட்டை, வடுவூர், ஒரத்தநாடு,தென்னமநாடு முதலிய ஊர்களில் அதிகமாக வாழுகின்றனர்.

புலிராயன், புலிகொண்டான், பிலிமுண்டான், பிலிராயன், புலிக்கொடியன், புலிக்குட்டியன்.
அண்டசோழன் மரபில் வந்த பெரும்பற்றசோழ சக்ரவர்த்தி. பெரும்பற்ற புலியூர் (சிதம்பரம்) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இந்திரனை தன் கொடியில் புலி என்று வைத்தவன். இதன் மூலம் புலிராயன், புலிக்கொடியன், புலிகொண்டான் என்வும் வழங்கப்பட்டான். இவன் கால முதல் சோழர்களுக்கு புலிக்கொடியும், புலிக்கொடியோன் என்ற பெயருமுண்டாயிற்று. பெரும்புலியூர், புலிவலம், புலிவனம் என்னும் தேவார சிவ தலங்களையும், புலிமங்கலம், புலிகுடி என்னுமூர்களையும் உண்டாக்கி அரசாண்டான். இன்றைய சித்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியும், கர்நாடகத்தின் ஒரு பகுதியும் இணைந்த புலி நாட்டையும் வெற்றி கொண்டு அரசாண்ட மன்னனும் இவனே.
புலியெனக்கொடியி லிந்திரனை வைத்தவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. இவன் மரபோர் புலிராயன், புலிகொண்டான், பிலிமுண்டான், பிலிராயன், புலிக்கொடியன், புலிக்குட்டியன் என்ற பட்டங்களை பெற்றனர்.

புறம்பயத்தான், பொறைபொறுத்தான், பொய்ந்தான், புறம்பயங்கொண்டான், பொய்கொண்டான்,பொறையன்.
புறஞ்சயன் சக்ரவர்த்தி, நல்லுத்தரனின் மகன், புறம்பயம் எனும் தேவாரம் பாடப்பட்ட சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். புறம்பயந்தான், புறம்பயங்கொண்டான், புறம்பயன் எனும் பட்டங்களையும் பெற்றவன். புறவம் (சீர்காழி) புறக்குடி எனும் சிவ தலங்களையும், புறவநதி எனும் சிற்றாற்றையும், புறவச்சேரி, புறங்கரம்பை, புறமங்கலம் என்ற ஊர்களையும் உருவாக்கியவன். இவன் மரபோர் மேற்கூரிய பட்டங்களை கொண்டனர். (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்)

புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான்.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் புத்திகழிச்சசோழன்( அறிவு மிகுந்தசோழன்) புத்திகழிச்சான்கோட்டை என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் புத்திகழிந்தான் எனவும் வழங்கும். புத்தூர் என்னும் தேவார சிவ தலத்தையும், புத்தபுரம், புத்தகுடி, புத்தமங்கலம், புத்தங்கோட்டம் என்னும் ஊர்களையும் புத்தாறு என்னும் சிற்றாற்றையும் உருவாக்கி அரசுபுரிந்தவன்.இவன் மரபினர் புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான் என்னும் பட்டங்களை கொண்டனர்.

பூவாட்சி, பூட்சி, திருப்பூட்சி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பூமன். பூவாளூர் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பூவாட்சி என்றும் அழைக்கப்பட்டான். பூந்துருத்தி, பூவானூர் என்னும் தேவார சிவதலங்களையும், பூங்குடி,பூங்குளம், பூண்டி,பூந்தோட்டம், பூவத்தூர், பூவத்தகுடி, பூவலூர் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் பூவாட்சி, பூட்சி, திருப்பூட்சி எனும் பட்டங்களை பெற்றனர்.

பூதரையன், போதரையன், போரையன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் பூதசோழன். பூதலூர் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பூதரையன், பூதராயன், பூதகொண்டான், பூதாண்டான், பூதப்பிரியன், பூதாளி எனவும் வழங்கலாயிற்று. பூதாறுஎன்னும் சிற்றாறை கூத்தாநல்லூருக்கருகில் முள்ளியாற்றில் பிரித்து அரிச்சந்திர நதியில் சேர்த்தவன். கூரயாற்றில் தட்டான் கோவிலுக்கருகில் இரண்டுகிளைகள் பிரித்து வடகிளையைஅரிச்சந்திர நதியிலும் தெங்கிளையை முள்ளியாற்றிலும் சேர்த்து கூத்தாந்ல்லூருக்கும் வெண்டுறைக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபத்தை சிதைத்தவன். பூதமங்கலம், பூதங்குடி, பூதனூர்,பூதராயநல்லூர் என்னும் ஊர்களையும் உருவாக்கி அர்சுபுரிந்தவன். இவன் மரபினர் பூதரையன், போதரையன், போரையன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

பூமியபிரான்,பூமியூரான், கலிங்கராயன், காலிங்கராயன், காளியங்கராயன்

பூக்கட்டி, சாளுக்கியன்,

பெரியாட்சி, பெரிச்சி, பெரிச்சியன், பெரிச்சியான், பெரிச்சிக்கணக்கன், பெரியசோழன்,பெரியகோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பெரியாட்சி, பெரியாண்டானென்வும் வழங்கும். பெரியகுடி,பெரியலூர் என்னுமூர்களையும் உருவாக்கியரசு புரிந்தவன். இவன் மரபோர் பெரியாட்சி, பெரிச்சி, பெரிச்சியன், பெரிச்சியான், பெரிச்சிக்கணக்கன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

பேரரையன், பேதரையன்.
பேர்சோழன், பேரையூர் என்னும் சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் பேரரையன் என்வும் வழங்கும். பேரூர்,பேராவூர், பேரெயில் எனும் தேவார சிவ தலங்களையும், பேராவூரணி எனும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் பேரரையன், பேதரையன் எனும் பட்டங்களை பெற்றனர்.

பொன்னங்கொண்டான், பொன்னமுண்டான், பொன்னாண்டான், பொன்னாரம்பூண்டான், பொன்னாப்பூண்டான், பொன்னாளியன், பொன்னானியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் பொன்ன சோழன். பொன்னவராயன்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பொன்னங்கொண்டான், பொன்னாண்டான், பொன்னப்பிரியன், பொன்னுடையான், பொன்னாளி எனவும் வழங்கும். பொன்னூர் என்னும் தேவார சிவதலத்தையும், பொன்னிறை,பொன்பற்றி, பொன்னக்குடி, பொன்னாப்பூர், பொன்னமங்கலம், பொன்னேரி என்னுமூர்களையும், பொன்னுகொண்டான், பொன்னாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கினான். தில்லை என்னும் தேவார சிவதலத்தில் சபாநாயகப் பெருமானுக்கு பொன்னம்பலம் என்னும் திருக்கோயிலும் உண்டாக்கியவன். இவன் மரபோர் பொன்னங்கொண்டான், பொன்னமுண்டான், பொன்னாண்டான், பொன்னாரம்பூண்டான், பொன்னாப்பூண்டான், பொன்னாளியன், பொன்னானியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

பொய்யண்டான், பொய்கையாண்டான்.
சோழ மண்டலத்திலுள்ள இராசேந்திர சிங்க வள்நாட்டில் அமைத்துள்ள 24நடுகளில் பொய்கை நாடும் ஒன்று. பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்த வேளான் என்பவன் இப் பொய்கை நாட்டின் தலைவனாவான். இவன் மரபினர் பொய்கையாண்டான் என்னும் பட்டம் கொண்டனர். திருவையாறு, திருமழபாடி, பெரும்புலியூர், கண்டராதித்த சதுர்வேதி மங்கலம் முதலிய ஊர்களை கொண்டது பொய்கை நாடாகும். அப்பரடிகள் பொய்கை தலத்தை பற்றியும் பாடியுள்ளார். இப் பட்டம் நாளடைவில் திரிந்து பொய்யண்டான் என்று வழங்கலாயிற்று. ஒரத்தநாடு பொய்யண்டார்கோட்டை, பொய்யண்டார்குடிகாடு ஆகிய ஊர்களில் இப் பட்டம் கொண்டோர் அதிகமாக வாழுகின்றனர்.

மணவாளன்
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் மணவாளன், மணவை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்,மணஞ்சேரி, மணற்கால் எனும் சிவ தலங்களையும் மணக்குடி, மணலி, மணப்பாறை, மணமேற்குடி, மணவாளன்பேட்டை, மணமங்கலம், மணவூர், மணங்காடு, மணவயல், மணம்பூண்டி,மணக்கரம்பை,மணக்கரை போன்ற பல ஊர்களையும் நகரங்களையும் உண்டாக்கி சிறப்பாக ஆட்சி புரிந்தவன். இவன் மரபு வழி வந்தவர்கள் மணவாளனெனும் பட்டத்தை கொண்டனர்.

மண்ணிராயன், மணிக்கராயன், மண்ணியன், மண்ணையன், மணியன்.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் மண்ணிசோழன். இவன் பெயர் மண்ணிராயன், மண்ணியன் என்வும் வழங்கலாயிற்று. மண்ணி எனும் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். மண்ணிப்படிக்கரை என்னும் தேவார சிவ தலத்தையும், மண்ணியாறுஎன்னும் ஆற்றையும், மண்ணிப்பள்ளம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மண்ணிராயன், மணிக்கராயன், மண்ணியன், மண்ணையன், மணியன் என்னும் பட்டங்களை கொண்டனர்.

மங்கலன், மங்கலதேவன், மங்கதேவன்
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் மங்கலன். திருமங்கலக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மங்கலக்குடி என்னும் தேவார சிவதலத்தையும் மங்கநல்லூர், மங்கலூர், மங்கலம் என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் மங்கலன், மங்கலதேவன், மங்கதேவன் எனும் பட்டங்களை பெற்றனர்.

மருங்கராயன், பருங்கைராயன், கைராயன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மருங்கமன். மருங்காபுரி நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மருங்கராயன் எனவும் வழங்கப்பட்டது. மருதூர், மருகல், மருத்துவக்குடி என்னும் தேவார சிவதலங்களையும், மருதவனம், மருதங்குடி, மருதங்காவளி, மருதம்பட்டி, மருவூர், மருங்கூர், மருங்குப்பள்ளம் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் மருங்கராயன், பருங்கைராயன், கைராயன்.எனும் பட்டங்களை பெற்றனர்.

மண்டலராயன், மண்டராயன், மண்கொண்டான், மங்கொண்டான், மங்கண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மண்டலன். மண்டலக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். மண்டளி என்னும் தேவார சிவதலத்தையும் மண்கொண்டான் என்னும் ஊரையும் உண்டு பண்ணி அரசாண்டவன். இவன் பெயர் மண்டலராயன்,
மண்கொண்டான் என்வும் வழங்கழாயிற்று. இவன் மரபினர் மண்டலராயன், மண்டராயன், மண்கொண்டான், மங்கொண்டான், மங்கண்டான்எனும் பட்டங்களை சுமந்தனர்.

மயிலாண்டான், மயிலண்டான்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் மயிலாடுசோழன். முன்னர் மயிலாடுகோட்டை என்னும் நகரத்தையும், பின்னர் திருமயில்கோட்டை என்னும்சிவ தல நகரையும் உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மயிலாண்டான் எனவும் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை, மயிலாப்பூர் என்னும் தேவார சிவ தலங்களையும், மயிலாடி என்னும் சிவ தலத்தையும், மயிலம் என்னும் திருப்புகழ் பெற்ற சுப்பிரமணிய தலத்தையும், மயிலடிபுரம், மயின்மங்கலம்,முதலிய ஊர்களையும் உண்டாக்கி அரசு புரிந்தவன். பைங்கா நாட்டின் தென்புறமுள்ள திருமயிலேறி (திருமேரி) இவனால் உண்டாக்கப்பட்டது. இவன் மரபினர் மயிலாண்டான், மயிலண்டான் என்ற பட்டங்களை பெற்றனர்.

மல்லிகொண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மல்லியன். மல்லிப்பட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மல்லிகொண்டான் எனவும் வழங்கப்பட்டது. மல்லியம் எனும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் மல்லிகொண்டான் எனும் பட்டம் பெற்றனர்.

மலைராயன், மலையரான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மலையன் சக்ரவர்த்தி. திருமலைராயன் பட்டினம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். மலையரையன், மலைராயன்,வரைராயன்,வரையன்,வரையரையன், வெற்பரையன்,பொருப்பரையன், இமவான், வெற்பரசு, க்ல்லரையன் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப் பட்டவன். பார்வதிதேவியை மகளாக பெற்று சிவபெருமானுக்கு தேவார சிவதலமாகிய திருமணஞ்சேரியில்
திருமணம் செய்து கொடுத்தவன் என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரமும், திருநாவுக்கரசுநாயனார் தேவாரமும், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரமும்,மணிக்கவாசக சுவாமிகள் திருவாசகமும் கூறுகின்றன. மலைமங்கலம், மலைக்குடி, மலைப்பட்டி, மலையன்குத்து, மலையனூர் என்னுமூர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தான். இவன் மரபினர் மலைராயன், மலையரான் எனும் பட்டங்களை கொண்டனர்

மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மழவன். மழவன்கோட்டை (மகழன்கோட்டை) என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மழவராயன், மழுவாளி, எனவும் வழங்கப்பட்டது. மழபாடி என்னும் தேவார சிவதல நகரத்தையும், மழவராயநல்லூர், மழவராயன்காடு, மழவரயன்குடிக்காடு, மழவராயன்பட்டி, மழவங்காடு (மழவனிக்காடு) மழவராயன்பேட்டை என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி என்ற பட்டங்களை பெற்றனர். மழவரென்ற சொல்லுக்கு வீரர்,இளையோர் எனப் பொருள். மழவும் குழவும் இளமைப் பொருள என்பது தொல்காப்பியம்.மழவர் சிலர் சேர அரசர்களுக்கும், அதியமாங்களுக்கும் பிற அரசர்களுக்கும் மெய்காப்பாளராக இருந்துள்ளனர். சேரமன்னன் மழவர் மெய்ம்மறை என அழைக்கப்ப்டுகிறான். எந்த அரசனின் ஆணைக்கும் அடங்கி நடக்கமுடியாத மழவர் தமிழ்நாட்டின் திருவேங்கடமலை வரை சுற்றி திரிந்தனர். பின்பு அமைதியடைந்து சோழ நாட்டில் தங்கி வாழத் தலைப்பட்டனர். இவர்கள் நிலையாக தங்கி வாழந்த பகுதி மழநாடு(மழபாடி) எனப்பட்டது. மழவராயர் என்னும் பட்டம்
வீரர்களுக்கு அரசர் அல்லது தலைவர் என்று பொருள்படும். இவர்கள் சோழகளுக்குப் பெண் கொடுக்கும் உரிமை கொண்டிருந்தனர். சோழர்களின் படைத்தலைவர்களாயிருந்து பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.
அடிகள் பழுவேட்டரையன் கண்டன் மழவன் என்பான் இராசராசசோழன் காலத்தில் அவன் கீழ் ஆண்ட குறுநில மன்னர்களில் முதன்மையானவன். இவன் பேரரசர் போன்று பெருந்தரம் அதிகாரிகளை நியமிக்கும் உரிமைபெற்றிருந்தான்.
கொல்லி மழவன் ஒற்றியூரன் பிருதிகண்டவர்மன் என்பான் இராசராசசோழனுக்கு கீழிருந்த குறுநில மன்னர்களில் ஒருவன். இவன் தந்தை இராசரரசசோழனின் தந்தை பராந்தகச் சோழனுடன் பங்கேற்று ஈழப்போரில் உயிர் துறந்தான். மும்முடிச் சோழன் பரமன் மழபாடியார். இவன் இராசராசசோழனுக்கு படைத்தலைவனாக சீத்புலி, பாகி நாடுகளை வென்று வெற்றியைத் தந்தவன் உதயதிவாகரன் கூத்தாடியான வீரராசேந்திர மழவராயன். இவன் இரண்டாம் இராசேந்திரசோழனின் அரசியல் அதிகாரியாவான். இவன் அரச ஆணைகளில் கையெழுத்திட்ட ஆவனங்களையும் அறியமுடிகிறது.
கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் மகளாவார்.
உத்தம சோழனின் மனைவி கிழானடிகள் மழவராயர் மகளாவார்.
இராசராச சோழனின் மனைவியரில் பஞ்சவன் மாதேவி மழவராயர் மகளாவார்.
மேற்கண்ட சான்றுகளால் பழமையான மழவர் குடியினர் சோழ மாமன்னர்களின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமானவர்களாக விளங்கினார்கள் என்றும் இன்று வாழும் மழவராயர்கள் இப் பெருமக்களின் வழித்தோன்றல்கள் என்றும் அறிய முடிகிறது. மன்னார்குடி வட்டத்தில் மழவராயர் நல்லூர் என்ற ஊரும், பாண்டியநாட்டில் மழவராயன் ஏந்தல் என்ற ஊரும் உள்ளது. பாண்டியநாட்டின் அரியனைக்கு மழவராயன் என்ற பெயரும் உண்டு. மழவராயர் பட்டம் தாங்கிய குடியினர் ஒரத்தநாடு வட்டம் நெல்லுப்பட்டு, பஞ்சநதிக்கோட்டை, தெக்கூர், காட்டுக்குறிச்சி, செல்லம்பட்டி, பொய்யுண்டார்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் கிள்ளுக்கோட்டை, மழவராயன்பட்டி, கீரனூர்,முதுகுளம், அரையன்பட்டி, மற்றும் தஞ்சை மாவட்டத்தில் கல்விராயன்பேட்டை, பீமன்பட்டி,புங்கனூர், தத்தனூர், சீதாப்பட்டி, கண்டலூர்,களமாவூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்

மன்னயன்,மன்னியன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மன்னயன். மன்னிப்பள்ளி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மன்னியன் எனவும் வழங்கப்பட்டது. முல்லை நில மக்களில் ஒரு வகுப்பாருக்கு மன்னாரிடையர் என்னும் பட்டம் வழங்கியவன்.மன்னார்குடி, மன்னனூர், மன்னகோட்டம், மன்னங்காடு, மன்னகுடி,மன்னமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மன்னயன்,மன்னியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
மாதரயன், மாதுராயன்,மாத்துராயன், மாதயன்,மாதயாண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மாதையன். மாதையபட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மாதராயன்,மாதயாண்டான் எனவும் வழங்கும். மாத்தூர் என்னும் தேவார சிவதலத்தையும், மாதூர் என்னும் மாடக்கோயில் சிவதலத்தையும்,மாதரையன் புதுக்கோட்டை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் மாதரயன்,மாதுராயன், மாத்துராயன், மாதயன்,மாதயாண்டான்.என்னும் பட்டங்களை கொண்டனர்.

மாந்தையரையன், மாந்தரையன், மாந்தராயன்.
மாந்தைசோழன், மாந்தை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மாந்தைகொண்டான்,மாந்தையரையன், மாந்தையாண்டான், மாந்தைப்பிரியன், மாந்தையுண்டான், மாந்தையாளி எனவும் வழங்கும். கீழைமாந்துறை,மேழைமாந்துறை என்னும் தேவார சிவ தலங்க்களையும், மாந்துறை என்னும் சிவ தலத்தையும், மாந்தைகுடி என்னும் ஊரையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் மாந்தையரையன், மாந்தரையன், மாந்தராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்

மாங்காட்டான்
மாந்தாதா சக்ரவர்த்தி, புறஞ்சயன் மகன், மாங்கோட்டை (மாங்காடு) எனும் ஊரை ஒருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மானும்,புலியும் ஒரு துறையில் நீர் அருந்தும்படி செங்கோல் சிறக்க ஆட்சி புரிந்தவன். மாவூர், மாகுடி, மாம்பட்டி, மாங்குடி எனும் ஊர்களையும் உருவாக்கியவன்.இவன் மரபு வழி வந்தோர் மாங்காட்டான் என்ற பட்டம் பெற்றனர் ( கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்)

மாவலி

மின்கொண்டான், மின்னாளி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மின்னொளிமன். மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மின்கொண்டான், மின்னாளி எனவும் வழங்கும். மின்னூர், மின்னாத்தூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மின்கொண்டான், மின்னாளி எனும் பட்டங்களை கொண்டனர்.

முதலியான்
சோழர் ஆட்சியில் தலைவர்களையும், உயரதிகாரிகளியும் முதலி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. முதலி என்ற சொல்லுக்கு முதன்மையானவர் என்று பொருளாகும்.இவர்களுள் சேனைமுதலி, படைமுதலி, அகம்படிமுதலி என் மூவகை முதலிகள் உண்டு. தேவார ஆசிரியர்களை மூவர் முதலிகள் என்று அழைப்பதுமுண்டு. முதலியான் காலப்போக்கில் திரிந்து முதலியார் என்று வழங்கலாயிற்று. இப்பட்டம் சோழர் படையுடன் தொடர்பு கொண்டதாக அறியப்படுகிறது.இப்பட்டமுடைய கள்ளர் இனத்தவர் தஞ்சை குருங்குலம், சுந்தராம்பட்டி, குளிச்சப்பட்டு, வாகரைகோட்டை,ஒரத்தநாடு ஈச்சங்கோட்டை, மன்னார்குடி மூவரக்கோட்டை, பெருகவாழ்ந்தான், கீழ்க்கரம்பையம், நீடாமங்கலம்,திருவரங்கநல்லூர், பட்டுக்கோட்டை கிளாமங்கலம் முதலிய ஊர்களில் வாழுகின்றனர். ஒரத்தநாடு முதலிப்பட்டி என்னும் ஊரில் முதலியார் பட்டமுடையோர் முத்ன்மையானவர்களாகவுமதிகமாகவும் வாழுகின்றனர்.



மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மொட்டத்தேவன், மேனாடன், மெனக்கடன், மேல்கொண்டான், மேற்கொண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மேலைமன்.மேலைக்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மேனாடன்,மேல்கொண்டான்.எனவும் வழங்கப்பட்டது. மேனாங்குடி,மேல்கொண்டவெளி, மேலைவாயில், மேலைநத்தம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மொட்டத்தேவன், மேனாடன், மெனக்கடன், மேல்கொண்டான், மேற்கொண்டான். என்னும் பட்டங்கள் பெற்றனர். மேலும் சேரநாட்டின் ஒரு பகுதியாகிய வேணாடு என்னும் நாட்டை இராசராசசோழன் வெற்றி கொண்டு ஆண்டுள்ளான். ஒன்பதாம் திருமுறை பாடிய அருளாளருள் ஒருவர் வேணாட்டடிகள் என்பவராவார். வேணாட்டரையன் என்னும் பட்டமே மேனாட்டரையன் என்று திரிந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேனாட்டரையன் என்ற குறுநில மன்னன் நார்தாமலையில் மறைந்து கொண்டு முகமதிய அரசர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்து பின்னர் நட்புரிமை கொண்டதாகவும் தஞ்சை ஆட்சியரிடம் இருந்து பெறப்பட்ட செப்பேட்டில் குறிப்பு காணப்படுகிறது. இப் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் தஞ்சை பூண்டி, புனவாசல் முதலிய ஊர்களில் வாழுகின்றனர்.

வண்டன், வண்டயன், வாண்டயன்(வாண்டையார்)வண்டதேவன், வண்டப்பிரியன், வாண்டப்பிரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வண்டமன். வண்டைநகரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வண்டயன்,வண்டதேவன், வண்டப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது.வண்டூர், வண்டக்குடி, வண்டமங்கலம், வண்டுவாஞ்சேரி, வண்டலூர், வண்டைக்காடு என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வண்டன், வண்டயன், வாண்டயன்,வண்டதேவன், வண்டப்பிரியன், வாண்டப்பிரியன்.என்ற பட்டங்களை பெற்றனர். இப்பட்டமுடையோர் வாண்டையார் குடியிருப்பு, கீரனூர், மேலக்கரும்பிரான்கோட்டை, ஆற்றங்கரைப்பட்டி(புதுக்கோட்டை) வாண்டையாரிருப்பு (தஞ்சாவூர்) கண்ணுகுடி, மேல உழுவூர், புதுப்பட்டி, பட்டுக்கோட்டை, மேடைக்கொல்லை, கறம்பயம், மன்னார்குடி, பஞ்சவாடி, குன்னூர், இடையூர், அரிச்சயபுரம், மறவாக்காடு, செம்பியன்மாதேவி, சாந்தமாணிக்கம், சோலைக்குளம், பைங்காநாடு, காரக்கோட்டை, பேரையூர், பெருகவாழ்ந்தான், திருக்களர், திருமங்கலக்கோட்டை, பாபநாசம்,பூண்டி,கோனூர், திருபுவனம்,வலங்கைமான், சின்னகரம், சாத்தனூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.

வடுகராயன், வடுராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வடுகமன். வடுகூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வடுராயன் எனவும் வழங்கப்பட்டது. வடுகக்குடி, வடுகச்சேரி, வடுகத்தெருமேடு, வடுகமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வடுகராயன், வடுராயன்.என்ற பட்டங்களை பெற்றனர்.

வங்கன், வங்கணன், வங்கராயன், அங்கராயன், அங்கரான், வங்கத்தரையன், வங்காரமுத்தரையன், வங்காரமுத்திரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வங்காரமன். வங்கநகர் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர்
வங்கன், வங்கராயன்,வங்கத்தரையன் என்வும் வழங்கப்பட்டது. அதிகமான பொன்னையுடையவன் என்றும் வழங்கப்பட்டான். வங்கத்தான்குடி, வங்கமங்கலம், வங்காரம்பேட்டை, வங்காரம் பேரையூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வங்கன்,வங்கணன், வங்கராயன், அங்கராயன், அங்கரான், வங்கத்தரையன், வங்காரமுத்தரையன், வங்காரமுத்திரியன் எனும் பட்டங்களை கொண்டனர்.

வல்லத்தரையன், வல்லாளதேவன், வல்லமாண்டான், வல்லாண்டான்,வல்லாளி, வல்லாடி, வல்லடி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வல்லபன். வல்லம் என்னும் ேத்வார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வல்லத்தரையன்,வல்லமாண்டான், வல்லாளதேவன், வல்லாளி எனவும் அழைக்கப்பட்டது. வல்லூர், வல்லம்பாடு, வல்லம்படுகை என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் வல்லத்தரையன், வல்லாளதேவன், வல்லமாண்டான், வல்லாண்டான்,வல்லாளி, வல்லாடி, வல்லடி எனும் பட்டங்களை பெற்றனர்.

வன்னியன்,வன்னிகொண்டான்,வன்னிமுண்டான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வன்னிமன். வன்னி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.வன்னியூர், புகலூர் என்னும் தேவார சிவதலங்களையும், வன்னிமங்கலம்,வன்னிகுடி, வன்னிபட்டு,வன்னியன்குடிகாடு, வன்னிப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் வழி வந்தோர் வன்னியன், வன்னிகொண்டான், வன்னிமுண்டான் என்னும் பட்டங்களை கொண்டனர். தஞ்சை மாவட்ட முத்துவீரபட்டி, நந்தவனம்பட்டி,மனையேறிபட்டி, ஆவாரம்பட்டி, புங்கலூர், கக்கரை,பின்னையூர், மண்டலக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஆர்சுற்றிப்பட்டு, மன்னார்குடி பைங்காநாடு, தலையாமங்கலம்,எடமேலையூர்,வடுவூர், திருக்களர், பெருகவாழ்ந்தான், கருவாக்குறிச்சி, சொக்களாவூர், கீராலத்தூர்,சோழபாண்டி, பட்டுக்கோட்டை ஆவிக்கோட்டை, பெரியகோட்டை, அதிராம்பட்டிணம், திருவையாறு திருச்சின்னம்பூண்டி, மகாராசபுரம், புதுக்கோட்டை கீழக்கரைமீண்டார்கோட்டை, புதுக்கோட்டை விடுதி, பாச்சுக்கோட்டை,கீழாத்தூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்.

வளவன்,வளம்பன்,
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் வளவசோழன். வளவனாறு என்னும் சிற்றாற்றையும், வளவனூர், வளவநல்லூர்,வளவன்பட்டி, வளத்தாமங்கலம், என்னுமூர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் கால முதல் சோழர்களுக்கு வளவன் என்னும் பெயரும் சோழநாட்டிற்கு வளநாடு என்றும் பெயர் வழங்கலாயிற்று.இவன் மரபினர் வளவன்,வளம்பன் என்னும் பட்டங்களை கொண்டனர்.

வழுவாளி, வழுவாடி.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வழுவைமன். வழுவூர் என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வழுத்தூர் என்னும் ஊரையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வழுவாளி,வழுவாடி எனும் பட்டங்களை கொண்டனர்

வாட்டாட்சி, வாட்டாச்சி, வட்சி,வாச்சான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாட்டமன். வாட்டாட்சிகோட்டை (வாவாசி) என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வாட்டாட்சி எனவும் வழங்கும். வாட்டாகுடி,வாட்டார் என்னும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய வாட்டாட்சி,வாட்டாச்சி,வட்சி, வாச்சான் என்னும் பட்டங்களை கொண்டனர்.

வாளால்வெட்டி, வாள்வெட்டி
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் வாளமரன், வாளமரன்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வாட் போரில் சிறந்தவன், மிகுந்த வீரமுடையவன். இவன் பெயர் வாளால்வெட்டி எனவும் புகழ் பெற்றது. வாட்போக்கி, வாள் கொளிபுத்தூர் என்னும் தேவாரம் பெற்ற தலங்களையும்,வாள்மங்கலம், வாளையங்கண்ணி என்ற ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.

வாஞ்சிராயன், வஞ்சிராயன்,விஞ்சிராயன், விஞ்சிரான், விஞ்சைராயன்
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் வாஞ்சிசோழன். வாஞ்சியம் என்ற தேவார சிவதலநகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன்பெயர் வாஞ்சிராயன் எனவும் வழங்கலாயிறு. வாஞ்சியாறு என்ற சிற்றாற்றையும், வாஞ்சியூர், வாஞ்சிகுடி, வாஞ்சிமங்கலம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். வீரத்திலும், விவேகத்திலும்,வேகத்திலும் மன்னையும் வின்னையும் மிஞ்சியவன் என்று புகழப்பட்டவன். இவன் மரபோர் வாஞ்சிராயன், வஞ்சிராயன், விஞ்சிராயன் விஞ்சிரான், விஞ்சைராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

வாப்பிரியன்,வாப்பிலியன், வாயாளி, வாயாடி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாமன். வாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் வாகொண்டான்,வாயாண்டான், வாப்பிரியன், வாயாளி என்னும்பெயர்களிளும் அழைக்கப்பட்டான்.இவன் மரபு வம்சத்தினர் வாப்பிரியன்,வாப்பிலியன், வாயாளி, வாயாடி என்ற பட்டங்களை பெற்றனர்

வாணரையன், வாணதரையன், வாணதிரியன், வீணதிரியன், வீணதரையன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாணன். வாணரையன் பட்டினம் (வாணதரையன் பட்டினம்) வாணன்பாடி (வாணியன்பாடி) என்னும் நகரங்களை உண்டு பண்ணி இராசதானிகளாகக் கொண்டவன். இவன் பெயர் வாணராயன்,வாணரையன் எனவும் வழங்கும். வாணாதரை என்னும் சிவதலத்தையும்,வாணதரையன் குடிக்காடு என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தேர் வாணரையன், வாணதரையன், வாணதிரியன், வீணதிரியன், வீணதரையன் என்னும் பட்டங்கள் பெற்றனர்.

வாலிராயன், வாலியன், 
வாலிசோழன்,வாலிகொண்டபுரம் என்னும் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் குரக்கரையன்,குரக்கிராயன்,வாலிராயன்,வாலிகொண்டான், வாலியாண்டான், வாலிப்பிரியன், வாலியுடையவன்,வாலியாளி எனவும் வழங்கலாயிற்று. குரங்காடுதுறை, குரக்குக்கா,குரங்கணின்முட்டம் என்னும் தேவார சிவ தலங்களையும், வாலீச்சரம் என்னும் சிவ தலத்தையும், வாலிப்பட்டி, வாலியுடை, வாலிகுடி(லாலிகுடி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன் இவன் மரபினர் வாலிராயன், வாலியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

விக்கிரமத்தரையன், விக்கிரமத்தான்

விசல்கொண்டான், விசலுண்டான், விசலாண்டான், விசலண்டான், பிசலண்டான், பிசலுண்டான், வீசண்டான், விசலாளி, விச்சாடி
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் விசலமன், விசலூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் விசலாண்டான், விசல்கொண்டான், விசலாளி என்றும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.

வில்லவராயன், வில்வராயன், வில்லன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விலிமன். விற்குடி, விற்கோலம் என்னும் தேவார சிவதல நகரங்களையும் உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வில்லியனூர், வில்லிபாக்கம், வில்லிமங்கலம், விலியநல்லூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வில்லவராயன், வில்வராயன், வில்லன்.எனும் பட்டங்களை கொண்டனர். மேலும் சேரமன்னர்களின் இலச்சினை வில் ஆகும். வில்லவர் என்பது சேரனையும் குறிக்கும். வில்லவரை சோழன் வென்றதனால் வில்லவராயன் என்றும் வில்லவர்க்கு அரசன் என்றும் பொருள் படும். சயசிங்க குலகால வளநாட்டு மீசெங்கிளி நாட்டு வளம்பக்குடி அரையன் மகன் வில்லவராயன் என்பவனை பற்றிய குறிப்பு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் வில்லவராயன் பட்டி என்று இப்பட்டமுடைய பெயரால் அமைந்த ஊரிலதிகமாக வாழுகின்றனர்.

விளப்பன், விற்பனன்
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் விளப்பசோழன். விளநகர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். விளப்பாறு என்னும் ஆற்றையும், விளமர், விளத்தூர், விளத்தொட்டி என்னும் தேவார சிவதலங்களையும், விளக்குடி,விளாங்குடி, விளார்,விளாங்குளம், விளமங்கலம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் விளப்பன், விற்பனன் என்னும்பட்டங்களை கொண்டனர்.

விட்டுணன், விற்பனன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விட்டுணுமன். விட்டுணுபுரம் என்னும் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மாற்பேறு தேவார சிவதல நகரத்தையும், விட்டுணம்பேட்டை என்னும் ஊரை உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் விட்டுணன், விற்பனன் எனும் பட்டங்களை கொண்டனர்.

விசயராயன், விசுவராயன், விசயதேவன், விசாதேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விசயன். விசயபுரம் என்னும்நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் விசயராயன்,விசயதேவன் எனவும் வழங்கும். விசயமங்கை என்னும் தேவார சிவதலத்தையும், விசயமங்கலம் எனும் சிவதலத்தையும், விசயநகரம் என்ற பட்டினத்தையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வம்சத்தினர் விசயராயன், விசுவராயன், விசயதேவன், விசாதேவன் என்ற பட்டங்களை பெற்றனர். முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் இந்துமாக் கடலில் இருந்த ஸ்ரீவிசயம் (இன்றைய சுமத்திரா) என்ற நாட்டை சோழ கடல் படையினர் வெற்றி கண்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்து சோழ மண்டலத்துடன் இனைத்துக் கொண்டனர். இந்த வெற்றிக்கு பலம் சேர்தவர்கள் என்ற பெருமை விசயராயன், விசயதேவனென்ற பட்டம் சுமந்தோராவர். எனவே இப்பட்டங்கள் ஸ்ரீவிசய வெற்றியோடு தொடர்புடையதாகவும் உள்ளது. இப்பட்டமுடைய கள்ளர் இன மக்கள் பஞ்சந்திக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, விளார், வலங்கைமான், முனியூர், அவளிநல்லூர், மன்னார்குடி, சேரங்குளம், புதுக்கோட்டை மாவட்ட திருக்களம்பூர்,வாண்டாக்கோட்டை முத்லிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில்வாழுகின்றனர். இப்பட்டங்கள் விசுவராயர், விஜயதேவர் என்றும் திரிந்துள்ளது

வீரங்கொண்டான், வீரமுண்டான், வீரப்பிரியன், வீரப்பிலியன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வீரபோகன். வீரையன்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வீரங்கொண்டான்,வீரப்பிரியன் எனவும் வழங்கும். வீரபோகம் என்னும் தேவார சிவதலத்தையும் வீரபுரம், வீரமங்கலம், வீரனூர், வீரக்குடி,
வீரக்குரிச்சி, வீராக்கி, வீரப்பட்டி, வீரமாங்குடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் வீரங்கொண்டான், வீரமுண்டான், வீரப்பிரியன், வீரப்பிலியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

வெட்டுவராயன், வெட்டுவன், வெட்டுவான்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் வெட்டுவசோழன். வெட்டுவகோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வெட்டுவராயன், வெட்டுவாகொண்டான், வெட்டுவாண்டான், வெட்டுவாப்பிரியன், வெட்டுவாளி எனவும் வழங்கப்பட்டது. வெட்டாறு என்னும் பேராற்றை வெண்ணியாறின் ஒரு கிளையாக ( தென்பிரம்பூருக்கருகில்) பிரித்து (வேதகுடிக்கருகில்) முள்ளியாற்றில் சேர்த்து கொரடாச்சேரிக்க்ருகில் கிழக்கே திருப்பி நாகூருக்கருகில் கடலில் சேர்தவன். ( வெட்டாற்றை முள்ளியாறு என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 896ம் பாடல் கூறுகிறது.) பூந்துருத்திக்கும் வேதிகுடிக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபமும், கொரடாச்சேரிக்கும் வெண்ணிவாயிலுக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபமும் மறைந்து போயின. இவன் மரபோர் வெட்டுவராயன், வெட்டுவன், வெட்டுவான் என்னும் பட்டங்களை பெற்றனர்.

வெண்டன், வெண்டான், வென்றான், 
வெண்டசோழன், வெண்டாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் வெண்டன் எனவும்வழங்கும். வெண்காடு, வெண்டுறை, வெண்பாக்கம் எனும் தேவார சிவ தலங்களையும், உருவாக்கி அரசாண்டவன். போர்கலம் புகுந்து வெற்றி வாகை சூடிய இவன் மரபோர் வெண்டன், வெண்டான், வென்றானெனும் பட்டங்களை பெற்றனர்.

வெள்ளங்கொண்டான்
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் நீலசோழன். வெள்ளம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வெள்ளைராயன், வெள்ளப்பிரியன், வெள்ளாண்டான், வெள்ளுடையான், வெள்ளங்கொண்டான், வெள்ளரையன், வெள்ளாளி எனவும் வழங்கும். வெள்ளாம்பிரம்பூர் என்னும் சிவதலத்தையும்,வெள்ளைக்குடி,வெள்ளுகுடி, வெள்ளூர், வெள்ளங்கால், வெள்ளமங்கலமென்னும் ஊர்களையும், நீவாநதி என்னும் ஆற்றையும், வடவெள்ளாற்றையும், தென்வெள்ளாற்றையும், வெள்ளையாறு(வள்ளையாறு) என்னும் சிற்றாற்றையும் உருவாக்கி அரசுபுரிந்தான். இவன் மரபினர் வெள்ளங்கொண்டான் என்ற பட்டம் கொண்டனர்.

வேங்கைராயன்,வேங்கிராயன்,உழுவாண்டான், உழுவண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வேங்கைமன். வேங்கை (உழுவூர்) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன்
வேங்கைராயன், உழுவாண்டான் எனும் பெயர்களிலும் அழைக்கப்பட்டான். வேங்கூர் என்னும் தேவார சிவதல நகரையும், உழுவூர்,உழுமங்கலம், உழுந்தூர்பேட்டை என்ற நகர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தான்.இவன் மரபு வழி வந்தவர்கள் வேங்கைராயன்,வேங்கிராயன்,உழுவாண்டான், உழுவண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.

வேளூரன், வேளூரான், வேளூடையான், வேளூடையன்,
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் வேள், பெருவேளூர் எனும் தேவாரம் பாடப்பெற்ற சிவதல நகரை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். மருத நில மக்களுக்கு வேளாளர் எனும் பட்டத்தை வழங்கியவன். இதனால் இவன் வேளூரன், வேளூடையான் என்றும் அழைக்கப்பட்டான். வேளூர்
(வைத்தீஸ்வரன் கோயில்) கீழ்வேளூர், வேட்களம், வேள்விக்குடி, வேளாங்கண்ணி போன்ற நகரங்களையும் உருவாக்கியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் மேற் கூரிய பட்டங்களை பெற்றனர்.

வேலாளி, வேல்ராயன், வேலாண்டான், வேற்கொண்டான், வேற்பிரியன்,
செம்பியன் சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வேலமன். வேலூர் என்னும் திருப்புகழ் பெற்ற முருகதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வேற்காடு எனும் தேவார சிவதல நகரையும், வேலங்குடி, வேலங்காடு, வேற்குடி எனும் ஊர்களையும் உண்டாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் வழி வந்தவர்கள் வேலாளி, வேல்ராயன், வேலாண்டான், வேற்கொண்டான், வேற்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.

வேணுடையன்
பிரமன் மன்னன் மரபில் வந்த மன்னன் வேணு. இவன் காலம் முதல் பிரமபுரம் வேணுபுர என வழங்கலாயிற்று. இவன் பெயர் வேணுடையன் எனவும் வழங்கும்.இவன் மரபினர் வேணுடையன் எனும் பட்டம் கொண்டனர்.

வைகைராயன், வயிராயன், வயிரவன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வைகைமன். வைகாவூர் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வைகல் என்னும் தேவார சிவதலத்தையும் வைகளத்தூர், வைகைச்சேரி,வைகம்பட்டி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் வைகைராயன், வயிராயன், வயிரவன் எனும் பட்டங்களை பெற்றனர்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்