திங்கள், 6 நவம்பர், 2017

யாழ் – கள்வர் – இராவணன்



வாள் கொண்டு சாயாத தலை எங்கள் தலை
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா!!!
வேல் கண்டு சாயாத படை எங்கள் படை
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா!!!

"ஆறு அலை கள்வர் படை விட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை" 


- பொருநராற்றுப்படை 
- கி.மு 4 ஆம் நூற்றாண்டு

பொருள்:
ஆறலைக் கள்வர் மறம் நீங்கி அன்பு கொள்ளத் தூண்டும் ஆற்றலுடையது யாழ்.


பண்டைய யாழ்ச் சிற்பங்கள் பல்லவர் காலக் கோயிலான காஞ்சி கைலாசநாதர் கோயில் (இராஜசிம்மன் மற்றும் சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம் கோயில் (பராந்தகன்), திருமங்கலம் கோயில் (உத்தம சோழன்) ஆகியவற்றில் காணப்படுகின்றன.


இராவணன் நாகர் வழி வந்தவன். சிவனின் கோவம் தணிக்க, தன் தொடை நரம்பினால் யாழ் ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாடினான்.


இராவணன்

கம்பர், கம்பராமாயணத்தில் இராவணன் வாழும் ஊரினை கள்வர் வாழும் ஊராக சீதை சொல்வதாக அமைத்திருப்பார். 


“ வருந்தல்இல் மானம், மா அனைய மாட்சியர்

பெருந் தவம்மடந்தையர் முன்பு,பேதையேன்,

“கருந் தனிமுகிலினைப் பிரிந்து, கள்வர் ஊர்

இருந்தவள், இவள்” என, ஏச நிற்பெனோ

விளக்கம் : இநத்ச் சீதை கள்வர்கள் வாழும் இலங்கையில் வாழ்ந்தவள் என்று பழித்துப்பேச அதுகேட்டு இருப்பேனோ ?


இராவணன் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவன், பல கலைகளில் வல்லமை பெற்றவன், நாட்டு மக்களை செல்வச் செழிப்புடன் வைத்திருந்தவன். இப்படி எத்தனையோ சிறப்புகளை அவன் பெற்றிருந்தாலும் அவனுக்குக் கடைசி வரை பெருஞ்சிறப்பைக் கொடுத்தது அவனது வீரமே.

இலங்கையை ஆட்சி செய்த தமிழ் அரசரும் இராவண காவியத்தின் காப்பியத் தலைவனும் ஆவான். இராவணன், தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்களின் இராவணன் அழைக்கப்பெறுகிறான்.

இராவணன் - இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருளாகும். இராவணன் - இராவண்ணன் (இரா=இருள்=கருமை) என இருளைப் போன்ற கருமை நிறமுடையவன் என்று பொருளாகும் வண்ணமும் உள்ளது.

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையில் விச்சிரவாவு என்ற மன்னர், தமிழகத்தினை ஆண்டுவந்தார். அவருடைய மனைவின் பெயர் கேகசி. இவர்கள் இருவருக்கும் இராவணன், கும்பகன்னன், விபீடணன் என மூன்று ஆண் பிள்ளைகளையும் காமவல்லி என்ற பெண் பிள்ளையும் பிறந்தனர். 


விச்சிரவாவின் மரணத்திற்கு பிறகு இராவணன் தமிழகத்தினை ஆண்டான். முல்லை நாட்டு மன்னன் மாயோனின் மகள் வண்டார் குழலியை இராவணன் காதலித்து திருமணம் செய்துகொண்டான். இருவருக்கும் சேயோன் என்ற மகன் பிறந்தான். 

இராவணன் காலத்து ஆலயங்கள் , இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. அக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று கூறப்படுகின்றது. திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.

இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம். இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள் - சயம்பன் - சயம்பனின் மருமகன் யாளிமுகன் - ஏதி - ஏதியின் மகன் வித்துகேசன் - வித்துகேசனின் மகன் சுகேசன் - சுகேசனின் மகன் மாலியவான் - மாலியவான் தம்பி சுமாலி - குபேரன்.

இராவணன் ஆட்சி அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி, வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும்.

சிவதாசனே இராவணன் என்றும்,
பரமனே கும்பகருணன் என்றும்
பசுபதியே விபீசணன் என்றும்
உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர்.

இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.

குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றால்.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்