வியாழன், 29 மார்ச், 2018

கரு. இராம. கரியமாணிக்கம் அம்பலம் (KR. RM. Kariya Manickam Ambalam),




இந்திய அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

கரு. இராமசாமி அம்பலம் என்ற நிலக்கிழாரின் மகனான கரிய மாணிக்கம் அம்பலம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கப்பலூர் நாட்டில் பிறந்தவர். இவரது மகன் கரு. ரா. இராமசாமி அம்பலம் தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினர்களின் தலைவராக உள்ளார்.

முத்தூற்கூற்றத்து கப்பலூர் உடையான் கருமாணிக்க தொண்டையர் கோன். ஆரம்பத்தில் சோழர்களின் தளபதியாக இருந்தாலும், பிற்காலத்தில் பாண்டியர்களின் முதன்மை அமைச்சராகவும், தளபதியாகவும் இறுதிவரை பாண்டியர்களின் தீவிரவிசுவாசியாகவும் இருந்துள்ளார்.



மிகச்சிறந்த வள்ளல் தன்மை உள்ள இவரை பற்றி ஒரு மன்னர்களுக்கே உரித்தான கோவை எனப்படும் கப்பற்கோவை என்ற நூலும் உள்ளது.

கிபி16ஆம் நூற்றாண்டிற்கு பின்பு பாண்டிய பேரரசு வீழ்ந்த பிறகு, மன்னராக இருந்த இவர் பிற்காலத்தில் கப்பலூர் கள்ளர் நாட்டின் அம்பலமாக சுருங்கி இன்றும் அதே கம்பீரத்துடனும், அதிகாரத்துடனும், கொடைத்தன்மையுடனும் மக்கள் செல்வாக்கோடு வாழ்ந்து வருகிறார்.



பாண்டிய தளபதியான முத்தூற்கூற்றம் கப்பலூர் உடையான் கருமாணிக்கன் தொண்டையர் கோன் வாரிசுகள் தான் கரு. இராம. கரியமாணிக்கம் அம்பலம் (KR. RM. Kariya Manickam Ambalam), 

மதிப்பிற்குரிய கரியமாணிக்கம் அம்பலத்தின் உதவியோடு தான் இராகவ அய்யங்கார் கப்பற்கோவை ஓலைச் சுவடியை கண்டறிந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய 5தலை முறையின் பெயரே சாட்சியாக உள்ளது.

கரு இராமசாமி அம்பலம்
கரு இராம கரியமாணிக்கம் அம்பலம்
கரிய இரமசாமி அம்பலம்
கரு இராம கருமாணிக்கன்
கரு கருமாணிக்கன்

என்று தனது கடைசி பேரன் வரை கருமாணிக்கன் என்கிற பெயரையே தாங்கி வருகின்றனர்.

இவர்கள் கள்ளர்களில் உள்ள பிரிவான ஏழுகிளை கள்ளர் பிரிவை சேர்ந்தவர்கள். கப்பற்கோவையில் வரும் கப்பலூர் இன்றும் அதே பொழிவுடன் காட்சியளிக்கிறது.


இன்றும் மக்கள் இவரை நடமாடும் நீதிமன்றம் என்றே அழைக்கிறார்கள்.

இவரது ஊரில் உள்ள பெருமாள் கோவிலிலும் கருமாணிக்கன் என்கிற கல்வெட்டு உள்ளது.

இராசாசியின் நண்பரான கரியமாணிக்கம் அம்பலம், முதலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் செயல்பட்டவர். பின்னர் இராசாசி 1959-இல் சுதந்திராக் கட்சி நிறுவிய போது அக்கட்சியில் இணைந்தார். இவர் திருவாடானை (சட்டமன்றத் தொகுதி)யிலிருந்து நான்கு முறை வென்றவர். இவர் 1957-இல் திருவாடானை சட்டமன்றத் தொகுதியிலிருந்து சுயேட்சை வேட்பாளாரகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1962 மற்றும் 1967 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் சுதந்திராக் கட்சியின் வேட்பாளராக திருவாடனை தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றவர்.

1977-இல் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக திருவாடனை சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கரியமாணிக்கம் அம்பலம், பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப் பிரபலமான காங்கிரஸ் தலைவர். நீண்ட நெடிய காங்கிரஸ் பாரம்பரியப் பெருமை கொண்டவர் கரியமாணிக்கம் அம்பலம். திருவாடானை தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். இதில் முதல் முறை சுயேச்சையாக வெற்றி பெற்றவர். 2 முறை ராஜாஜியின் சுதந்திராக் கட்சி சார்பிலும், ஒருமுறை காங்கிரஸ் சார்பிலும் வெற்றி பெற்றவர்.

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு