வியாழன், 12 டிசம்பர், 2019

வெண்கலக்குரல் வித்தகர் ஓ ஏ கே தேவர் (O.A.K. தேவர் வரலாறு)



மதுரை மாவட்டம் #உசிலம்பட்டி அருகில் உள்ள #ஒத்தப்பட்டி கிராமம்தான் ஒ.ஏ.கே. தேவரின் பூர்வீகம். பெற்றோர் இட்ட பெயர் #கருப்புத்தேவர். பள்ளிக்கூடத்தில் மற்றொரு கருப்பு இருந்ததால் ‘#ஒத்தப்பட்டி #ஐயத்தேவர் மகன் கருப்புத் தேவர்’ என்பதைச் சுருக்கி ஆசிரியர் வைத்த பெயர்தான் ஓ.ஏ.கே. தேவர். மதிய உணவு இடைவேளையில் நாடகப் பாடல்களைப் பாடுவதிலும் நீளமான வசனங்களைக் கணீர்க் குரலில் பேசுவதிலும் சிறந்து விளங்கினார்.

இதைக் கருப்புத் தேவரின் தந்தையிடம் பள்ளி வாத்தியார் பெருமையாகச் சொல்லிவிட்டுப்போக, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார் ஐயத் தேவர். “இவனை இப்படியே விட்டா கூத்தாடிப் பயலா போயிடுவான். நாட்டுக்கு எந்தப் பிரயோசனமும் இருக்காது” என்று கூறி, பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஊர் வழக்கப்படி மகனை ராணுவத்தில் சேர்த்துவிட்டார் ஐயத் தேவர்.

தந்தையின் சொல்லை மதித்து 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவர், அங்கேயும் பாட்டுப் பாடி, நடித்துக்காட்டி சக ராணுவ வீரர்களைச் சந்தோஷப்படுத்த, ஓ.ஏ.கே. வேலை செய்த சவுத் பட்டாலியன் முழுவதும் பிரபலமானார். நான்கு ஆண்டுகள் ராணுவச் சேவையை முடிந்திருந்த நிலையில் தந்தையார் இறந்த செய்தி தந்தியாக வர, அப்போது ஊருக்கு வந்தவர், திரும்பவும் தனது முகாமுக்குத் திரும்பவில்லை. நாடகம் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டது.



சக்தி நாடக சபாவின் மாணவர்


திருச்சியில் முகாமிட்டிருந்த ‘சக்தி நாடக சபா'வின்’ ‘கவியின் கனவு’ நாடகத்துக்குச் சென்றார் தேவர். நாடகம் முடிந்ததும், சபாவின் முதலாளி, சீர்திருத்த நாடகங்களின் சிற்பியாகக் கொண்டாடப்பட்ட ‘சக்தி’ டி.கே. கிருஷ்ணசாமியைச் சந்தித்தார்.

‘கவியின் கனவு’ நாடகத்தை தேவர் பார்ப்பது இது முதல்முறையல்ல; 25-வது முறை. சர்வாதிகாரியை எதிர்த்துக் கதையின் நாயகன் பேசும் வசனங்களை, கிருஷ்ணசாமியின் முன்னால் அட்சரம் பிசகாமல் கணீர்க் குரலில் தேவர் பேசிக்காட்ட, “ உன் ரத்தத்தில் நடிப்பு ஓடுகிறதடா!” என்று கிருஷ்ணசாமியிடமே பாராட்டு பெற்றார். கையோடு தனது சபாவிலும் சேர்த்துக்கொண்டார். எந்த நாடகத்தை நேசித்தாரோ அதே நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் தேவர். அப்படிப்பட்ட சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா உள்ளிட்ட பலர் நடிகர்களாக இருந்தனர்.

‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுருவாக நடித்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார்.




நாடக சபாவிலிருந்து மாடர்ன் தியேட்டர்


சக்தி நாடக சபாவில் சில ஆண்டுகளைக் கழித்த தேவருக்கு, அதன் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகிவந்த நிலையில், தனது சக நடிகர்களைப் போல் தனக்கும் சினிமா வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுகொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார்.

நண்பரைப் பிரிந்த தேவர், சென்னையில் எங்கே சென்று தங்குவது என்று தெரியாமல் பகல் முழுவதும் கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோக்களில் சுற்றித்திரிந்துவிட்டு, இரவில் மெரீனா கடற்கரையில் படுத்துறங்குவதை வழக்கமாகக் கொண்டார். கடற்கரையில் உறங்கினாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகாலையில் எழுந்து குஸ்தியும் சிலம்பமும் விளையாடுவார்.

இதனால் தேவருக்குக் கடற்கரையில் நண்பர்கள் கிடைத்தார்கள். தினசரி கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு வரும் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்தித்தார். தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் வரச்செய்து மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே 100 ரூபாய் மாதச் சம்பளம் பெறும் துணை நடிகராக உயர்ந்தாலும் உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி வெளியே வந்தார் தேவர்.

மீண்டும் சென்னைக்கு வந்தவரை அரவணைத்துக்கொண்டார் உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் கதவெண் 10-ல், ஐந்து ரூபாய் வாடகைக்கு ஒர் அறையை எடுத்துத் தங்கிக்கொண்டு, சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருடனும் மூன்றாவதாக இதே அறையில் வந்து சேர்ந்தார் ஓவியர் ராமச்சந்திரன்.















மறைத்தி௫ ஓ.ஏ.கே தேவ௫க்கும் மக்கள் கவிஞா் பட்டுக்கோட்டைக்கும் ஓவியா் ராமச்சந்திரனுக்குமான பந்தம் என்பது சொல்லில்
அளவிட்டுவிட முடியாது பட்டுக்கோட்டையும்
ராமச்சந்திரன் அவா்களும் ஒரே ஊா்க்காரர்கள் பட்டுக்கோட்டைக்கு அ௫கிலுள்ள தாமரங்கோட்டை கிராம ஊராட்சியிலுள்ள சிற்றூா் செங்கப்படுத்தான்காடு கிராமம்தான் கவிஞாின் ஊா் ஓவிய௫க்கு தாமரங்கோட்டைதான் சொந்த
ஊா். உசிலம்பட்டி நடிப்பு செங்கப்படுத் தான் காடு கவிதை தாமரங்கோட்டை ஓவியம் நடிகா் தேவா், கவிஞா் காா்காத்த வேளாளா், 
ஓவியா் செட்டியாா் மூவ௫மே மாபெ௫ம் திறமை சாலிகள் மட்டுமல்ல வறுமையிலும் நோ்மையும் தன்மானமும் காத்து போற்றும் நட்போடு புகழ் பெற வாழ்ந்தவா்கள் .


ரோஷத்துடன் மார்டன் தியேட்டரை விட்டு, வந்துவிட்டாலும் உடனடியாகத் துணை நடிகர் வாய்ப்பு கூட கிடைக்காத நிலை. பட்டுக்கோட்டைக்கும் வாய்ப்புகள் இல்லாமல் சாப்பாட்டுக்கே திண்டாடினார்கள். தேர்ந்த ஓவியரான ராமச்சந்திரன், சினிமா செட் வேலைகளுக்குப் போய் வந்துகொண்டிருந்தார். அவர் வாங்கிவரும் வாரக் கூலிதான் நடிகரையும் கவிஞரையும் காப்பாற்றிவந்தது. ஒரு சூழ்நிலையில் ஓவியருக்கும் சம்பள பாக்கி விழ, பல நாட்கள் பட்டினியாகவே ஓடியிருக்கின்றன.

பசி தாள முடியாத நண்பர்கள், வீட்டு உரிமையாளரின் துணைவியாரிடம் சட்டைக்குக் கஞ்சி போட வேண்டும் என்று கூறி அரிசிச் சோறு வடித்த கஞ்சியை வாங்கிவந்து உப்பு போட்டுப் பருகிப் பசி தீர்த்திருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலை ஓவியர் ராமச்சந்திரன் மூலம் கலைவாணருக்குத் தெரிய, தேவரை உடனே அழைத்துவரும்படி ஆள் அனுப்பினார்.

கைகொடுத்த கலைவாணர்

திறமையானவர்களைக் கைதூக்கிவிடுவதிலும் கையில் இருக்கும் அனைத்தையும் அள்ளிக் கொடுப்பதிலும் பெயர் பெற்ற வள்ளலாக விளங்கிய கலைவாணர், அப்போது பிரபல எடிட்டர் ஆர்.எஸ். மணி தயாரித்து இயக்கிய ‘மாமன் மகள்’(1950) படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஓ.ஏ.கே. தேவருக்குப் பெற்றுக் கொடுத்தார். வீராசாமி என்ற அடியாளாக நடித்தாலும் அந்தப் படத்தின் மூலம் பளிச்சென்று அடையாளம் கிடைத்தது தேவருக்கு.

அந்தப் படத்தில் ஏற்ற கதாபாத்திரம் காரணமாக தேவருக்கு எதிர்மறைக் கதாபாத்திரங்களே அமைய, மறுபடியும் கலைவாணரிடம் வந்து நின்றார் தேவர். அப்போது ‘மதுரை வீரன்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொல்லி ‘மதுரை வீரன்’ படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடத்தை தேவருக்கு வாங்கிக் கொடுத்தார் கலைவாணர். திருமலை மன்னராக வெண்கலக் குரலில் தேவர் பேசி நடிக்க, மதுரை வீரனின் பெரிய வெற்றி தேவரைப் பிரபலப்படுத்தியது.

எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்பும் உருவானது. எம்.ஜி.ஆர் படங்களில் அடுத்தடுத்து இடம்பெறத் தொடங்கியதும் சிவாஜி நடிக்கும் படங்களுக்கும் அழைப்புகள் குவிந்தன. இருபெரும் கதாநாயகர்களின் படங்களில் மாறி நடிக்க ஆரம்பித்த தேவரின் நடிப்பு சிவாஜிக்குப் பிடித்துப்போக, தனது சொந்த நாடக மன்றமான சிவாஜி நாடக மன்றத்தில் மிகப் பெரிய இடம்கொடுத்தார் சிவாஜி. சிவாஜியுடன் திரையில் நடிக்கும் அதேநேரம் நாடகமேடையிலும் வெளுத்துக்கட்டினார் தேவர்.

அன்று இரக்கமில்லாத வில்லன் கதாபாத்திரங்கள் என்றால் எம். என். நம்பியார், பி.எஸ்.வீரப்பா, டி.எஸ். பாலைய்யா ஆகிய மூன்று நட்சத்திரங்கள்தான் ரசிகர்கள் மனதில் நின்றார்கள். அதை மாற்றிக்காட்டியது 1957-ல் வெளியான ‘மகாதேவி’. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். பி.எஸ். வீரப்பாவுடன் இணைந்து நடித்தார்.

“வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய்ச் சொல் இந்த வார்த்தையை” என்ற தேவர் பேசிய வசனமும் அவரது நவரச நடிப்பும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக மிரட்டலான வில்லன் நடிகராக எழுந்து நின்றார். 

மேற்கத்திய கௌபாய் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பால், தமிழ் சினிமாவில் கௌபாய் ஜுரம் பரவிய 70-களின் காலகட்டம். கௌபாய் கதாநாயகனுக்கான இடத்தை மொத்தக் குத்தகை எடுத்துக்கொண்டவர் ‘தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட்’ எனப் புகழப்பட்ட ஜெய்சங்கர். கௌபாய் கதாநாயகனுக்கு சரியான சவாலாக அமையும் வில்லன் கிடைக்காவிட்டால், இந்த வகைப் படங்களுக்கே மவுசு கிடைத்திருக்காது. அந்தச் சவாலான இடத்தை நிரப்பியவர் ஓ.ஏ.கே. தேவர். ஜெய்சங்கரின் ‘கங்கா’ படத்தில் கொள்ளைக் கூட்டத் தலைவர்களில் ஒருவராக வந்து “அந்தக் கடவுளுக்கே நாங்க பயப்பட மாட்டோம்” என்று பகுத்தறிவு வசனம் பேசி நடித்தவர், கலைவாணர் மீது கொண்ட ஈடுபாட்டால் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கௌபாய் படங்களில் ஜெய்சங்கருக்கு உச்சமாக அமைந்த படம் ‘சி.ஐ.டி சங்கர்’. படம் தொடங்கியதும் வில்லனின் நிழல் உருவத்தையும் அந்த மிரட்டலான குரலையும் கண்டு மிரள ஆரம்பித்த ரசிகர்கள், யாரந்த வில்லன் என்று முகத்தைத் தேட ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்த காட்சிகளில் பார்த்துவிடலாம் என்று காத்துக்கொண்டிருந்தவர்களை அந்தக் குரல் மட்டுமே மிரட்டிக்கொண்டிருக்கும். படத்தின் இறுதிக் கட்டக் காட்சியில் வில்லனாகத் தோன்றினார் ஓ.ஏ.கே.தேவர். மிகவும் பிரபலமான தனது குரலை ரசிகர்கள் அடையாளம் கண்டுவிட முடியாத அளவுக்கு மாற்றிப் பேசிக் கதிகலங்க வைத்தார்.

அப்படிப்பட்டவர் ‘பூக்காரி’, ‘பட்டத்து ராணி’, ‘கங்கா கௌரி’ ‘நீயும் நானும்’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ உட்பட பல படங்களில் வில்லன் அல்லாத மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, தன் மீது படிந்த வில்லன் பிம்பத்தை மறக்கச்செய்தார். ‘சாது மிரண்டால்’ படத்தின் முதல் பாதி முழுவதும் ஆறு தோற்றங்களில் வரும் தேவர், இரண்டாம் பாதி முழுவதும் உறைந்த விழிகளோடு பிணமாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.

சமூகப் படங்களில் சாதனைகள் படைத்த கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் எல்லாப் படங்களிலும் இவர் தவறாமல் இடம்பெற்றுவிடுவார். கே.எஸ்.ஜி.யின் ‘குறத்தி மகன்’ படத்தில் கருத்து சொல்லும் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு அல்ல; தேவருக்குத்தான். ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் விபீஷணனாக நடித்துக் கண் கலங்கவைத்தவர், அதே ஆண்டில் வெளியான ‘விக்கிரமாதித்தியன்’ படத்தில் கதிகலங்க வைக்கும் மந்திரவாதியாக நடித்திருப்பார். எல்லா ஒப்பனைகளும் ஆடைகளும் பொருந்தக்கூடிய தோற்றம் கொண்ட கலைஞராக ஓ.ஏ.கே. தேவர் விளங்கினார்.

சிவாஜிக்கே சவால்

வீரசிவாஜி, வீரபாண்டிய கட்டப்பொம்மன் உட்பட சிவாஜி மன்றம் நடத்திவந்த புகழ்பெற்ற நாடகங்களில் சிவாஜி கணேசனுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்துவந்தவர் ஓ.ஏ.கே. தேவர். சிவாஜியுடன் நாடகங்களில் நடிக்கும்போது அடுத்த காட்சிக்கான ஆடையை மாற்ற மேடைக்குப் பின்புறமிருக்கும் ஒப்பனை அறைக்குச் செல்ல மாட்டாராம் சிவாஜி. மேடையின் பக்கவாட்டில் இருக்கும் மறைவான இடத்தில் நின்று தேவரின் நடிப்பைக் கவனித்துக்கொண்டே இருப்பாராம். “ஓ.ஏ.கே. கிட்ட கவனமா இருக்கனும்; எக்ஸ்ட்ரா டயாலாக் போட்டுக் கைதட்டல் வாங்கிடுவான். அடுத்த சீன்ல அதைவிட அதிகமா க்ளைப்ஸ் வாங்கணும்” என்று சிவாஜி பதற்றமடைவர் என குறிப்பிட்டுக்காட்டியிருக்கிறார் வானொலியாளர் கூத்தபிரான்.

தலைமுறைகளைக் கடந்து இன்றும் கொண்டாடப்படும் ‘கர்ணன்’ படத்தில், கனக மகாராஜாவாக நடித்திருப்பார் ஓ.ஏ.கே. தேவர். தனது மருமகனான கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் என்று தெரிந்ததும் கோபம் தலைக்கேறி, கர்ணனைக் கேலி செய்து புறக்கணிக்கும் காட்சியில் சிவாஜியுடன் போட்டிபோட்டு நடித்திருப்பார். சிவாஜியைத் திட்டுவதுபோல் உள்ள கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று சிவாஜியிடமே கேட்டிருக்கிறார் இயக்குநர் பி.ஆர். பந்துலு. “ஓ.ஏ.கே தேவரைத் தவிர அந்த வேடத்தில் வேறு யாரைப் போட்டாலும் எடுபடாது” என சிவாஜி சொல்லியிருக்கிறார்.

விட்டுக்கொடுத்த எஸ்.எஸ்.ஆர்.

ஓ.ஏ.கே. தேவர் தனது குரு சக்தி வி. கிருஷ்ணசாமி எழுதிய ‘வீரபாண்டிய கட்டப்போம்மன் நாடகத்தில் சிவாஜியைப் போலவே வீரபாண்டிய கட்டப்பொம்மன், வெள்ளையத் தேவன், உமைத்துரை ஆகிய எல்லா முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படமாகத் தயாரானபோது அதில் தேவருக்கு வேடம் இல்லை. உமைத்துரை வேடத்தை எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு ஒதுக்கியிருந்தனர். அவரும் ஏற்றுக்கொண்டார். படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று எஸ்.எஸ்.ஆர். கேட்க, அதில் ஓ.ஏ.கே. தேவருக்கு இடமில்லை என்றதும் கோபமாகிவிட்டார். “என் கேரக்டரை அவருக்கு கொடுங்க. அவர் இல்லாமல் வீரபாண்டிய கட்டப் பொம்மனா?” என்று தனது கதாபாத்திரத்தை அவருக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்.

இளையராஜாவுக்கு நாடக வாய்ப்பு

எதிர்பாராமல் சிவாஜியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிவாஜி நாடக மன்றத்திலிருந்து பிரிந்து ‘தேவர் நாடக மன்ற’த்தை தொடங்கினார் ஓ.ஏ.கே. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘அன்பு வழி’ ‘சந்தனச் சிலை’ ‘காட்டு வழி’ உட்பட பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தினார். சென்னையில் தனது சகோதரர்களுடன் தங்கி, திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார் இளையராஜா.

ஆனால் வாய்ப்பு அத்தனை சீக்கிரம் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஓ.ஏ.கே. தேவர் தனது நாடக மன்றத்தின் புதிய தயாரிப்பன ‘மாசற்ற மனம்’ நாடகத்தைத் திருச்சியில் அரங்கேற்ற ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்துக்கு இசை அமைக்க தேவரிடம் ராசய்யாவை அறிமுகப்படுத்தினார் தேவர் நாடக மன்றத்தில் இருந்த சங்கிலி முருகன். பாவலர் சகோதர்களின் இசையை கம்யூனிஸ்ட் மேடைகளில் கேட்டிருந்த தேவர், உடனே சம்மதம் தெரிவித்தார். பாவலர் சகோதரர்களின் இசையுடன் அரங்கேறிய அந்த நாடகத்தின் பாடல்கள் பாராட்டுப் பெற்றன.

இந்த நாடகத்தில்தான் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்கள். பிற்காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களாகவும் ஆனார்கள்.

எம்.ஜி.ஆர். கண்ட ஆதித்த கரிகாலன்

எம்.ஜி. ஆருடன் ‘பறக்கும் பாவை’, ‘விக்ரமாதித்தியன்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘கண்ணன் என் காதலன்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தாய்க்குப் பின் தாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் தேவர். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆரே தயாரித்து, நடித்து, இயக்குவதாகத் திட்டமிடப்பட்டபோது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைத் தானே ஏற்க விரும்பியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதேபோல் குந்தவையாக வைஜெயந்திமாலா, அருண்மொழி வர்மனாக ஜெமினி கணேசன், வானதியாக பத்மினி என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஆட்களைத் தேர்வு செய்தவர் ஆதித்திய கரிகாலன் கதாபாத்திரத்துக்குத் தன்னைத் தேர்வு செய்திருந்ததை ஓ. ஏ. கே. தேவர் தன் நண்பர்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறார்.

மார்டன் தியேட்டரில் பணியாற்றும்போதே கலைஞர் மு.கருணாநிதி மீது தோழமை கொண்ட தேவர், கலைவாணரின் மறைவுக்குப் பிறகு அவருடன் மேலும் நெருக்கமானார். கலைஞர் கதை, வசனம் எழுதி வெற்றிபெற்ற ‘குறவஞ்சி’, ‘பூம்புகார்’ உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் ஓ.ஏ.கே. தேவர் நடித்தார். 1972 ல் தனது 48-வது வயதில் மறைந்த ஓ.ஏ.கே. தேவர், கடைசி வரை திமுகவின் மேடைகளில் பிரச்சார நட்சத்திரமாகவும் விளங்கினார். எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி கண்டாலும் எம்.ஜி.ஆர். மீது வைத்திருந்த நட்பை மாற்றிக்கொள்ளவில்லை. தேவர் இறந்தபோது அஞ்சலி செலுத்த முதலில் வந்தவர் எம்.ஜி.ஆர்.

தேவர் கடைசியாக நடித்த படங்கள் ‘வாழையடி வாழை’, ‘சிசுபாலன்’. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பாக்தாத் பேரழகி’. தந்தையின் வழியில் நின்று திரை நடிப்பைத் தொடர்ந்துவருகிறார் அவரது மகன்களில் ஒருவரான ஓ.ஏ.கே. சுந்தர்.


எதிர்பாராமல் சிவாஜியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிவாஜி நாடக மன்றத்திலிருந்து பிரிந்து ‘தேவர் நாடக மன்ற’த்தை தொடங்கினார் ஓ.ஏ.கே. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘அன்பு வழி’ ‘சந்தனச் சிலை’ ‘காட்டு வழி’ உட்பட பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தினார். சென்னையில் தனது சகோதரர்களுடன் தங்கி, திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார் இளையராஜா.

ஆனால் வாய்ப்பு அத்தனை சீக்கிரம் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஓ.ஏ.கே. தேவர் தனது நாடக மன்றத்தின் புதிய தயாரிப்பன ‘மாசற்ற மனம்' நாடகத்தைத் திருச்சியில் அரங்கேற்ற ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்துக்கு இசை அமைக்க தேவரிடம் ராசய்யாவை அறிமுகப்படுத்தினார் தேவர் நாடக மன்றத்தில் இருந்த சங்கிலி முருகன். பாவலர் சகோதர்களின் இசையை கம்யூனிஸ்ட் மேடைகளில் கேட்டிருந்த தேவர், உடனே சம்மதம் தெரிவித்தார். பாவலர் சகோதரர்களின் இசையுடன் அரங்கேறிய அந்த நாடகத்தின் பாடல்கள் பாராட்டுப் பெற்றன.

இந்த நாடகத்தில்தான் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்கள். பிற்காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களாகவும் ஆனார்கள்.

மாமன் மகள் படத்தின் மூலம் அறிமுகமானார். 
மூன்றெழுத்து, 
நீயும் நானும், 
மகேஸ்வரி, 
உத்தம புத்திரன், 
எதிர் நீச்சல், 
தங்கச்சுரங்கம், 
பொற்சிலை, 
வீரபாண்டிய கட்டபொம்மன், 
சாது மிரண்டால், 
புதிய பறவை, 
மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, 
வீரக்கனல், 
குறவஞ்சி, 
தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மகாதேவி, 
தாய்க்குப் பின் தாரம், 
உலகம் இவ்வளவு தான், 
வாழையடி வாழை, 
கர்ணன்,
ராமன் தேடிய சீதை, 
நான் ஆணையிட்டால், விக்கிரமாதித்தன்,
பறக்கும் பாவை, 
கண்ணன் என் காதலன்,
ராமு, 
பட்டத்து ராணி,
கங்கா கௌரி, 
கங்கா, 
பூக்காரி, 
அன்பு வழி , 
நான் யார் தெரியுமா, 
ஆதிபராசக்தி, 
பாக்தாத் பேரழகி [இவரது மரணத்திற்குப் பின் இப்படம் வெளிவந்தது.] 
இது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கனத்த சாரீரமும், பருத்த உடல்வாகும், வளமான உச்சரிப்பும் கொண்டவர். இவர் தனது 49-வது வயதில் காலமாகிவிட்டார். இவரது மனைவி செல்லம் என்பவரும் நடிகையாவார். இவரது மகன் ஓ.ஏ.கே.சுந்தர் தற்போது திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகின்றார்.

மார்டன் தியேட்டர்ஸ் சேலத்தில் நடந்த சில சுவாரசியமான தகவல்:

முத்தையா ( கண்ணதாசன்), முக்தா சினிவாசன், ஜலகண்டபுரம் கண்ணன்
முக்தா ராமசாமி சேதுமாதவ நாயர் எங்கள் எல்லோருக்கும் தங்குவதர்க்கு modern theatres சேலம் சீரங்கபாளையத்தில் ஒரு வீடு எடுத்து தங்க வைத்தார்கள்

பின்னாலில் கலைஞர் அங்கு தங்கி கதை வசனம் எழுதினார். இதை தவிர Comedian A கருணாநிதி KK சௌந்தர் கோவிந்தன் OAK தேவர் கம்பெனி நடிகர்கள் தங்கினார்கள்

A கருணாநிதி எப்பவுமே Spring முடி
சின்ன கண்ணாடி ய பார்த்து சுருட்டி விட்டு கொண்டிருப்பார். அது ஒரு முக்கா மணி நேரம் சுருட்டி கொண்டிருப்பார்; பின்னாடி யே OAK தேவர் வருவார். பின்மண்டையில் தட்டி " எந்திரிடா... சதா மயிர சுருட்டிண்டு" ஓடுவார்" அதற்கு" you Bad man.. கச்சா முச்சான்னு கத்தி கொண்டு துரத்துவார். பெரிய காம்பௌண்ட் னால Tom and jerry போல ஓடி கொண்டிருப்பார்கள். 

இது தான் அங்கே உள்ளவர்களுக்கு Entertainment. Ellis Dungan OAK தேவரிடம் "Weight போடனும் (அப்ப ரொம்ப ஒல்லி யாக இருப்பார்). அப்ப தான் ரோல் கரெக்ட ஆக இருக்கும்ன்னு சொல்ல. A கருணாநிதி தான் advisor; அவர் இவருக்கு வேப்பங் கொழுந்தோ அல்லது வேறு கொழுந்து கொடுத்து . Non Veg எருமை தயிர்சாதம் இப்படி சாப்பிட வைத்து. மதியம் தூங்க வைத்து வெயிட்டை ஏத்திட்டார். Ellis Dungan பயந்து போய் "Oh my god.. you have put on more weight. you look so fat. ..you have to reduce weight.. திருப்பி அனுப்பிட்டார் OAK தேவர் " அடப்பாவி கண்டத தின்ன வச்சு காரியத்தை கெடுத்துட்டியே " கைல குச்சி யோட கருணாநிதிய துறத்த அவர் ஓடி கொண்டிருந்தார். இருந்தாலும் அவர்கள் நட்பு மாறலை.

கொடும்பாளுர் இருக்குவேளிர் வம்சம்



சிலப்பதிகாரத்தின் காலத்திலிருந்தே கொடும்பாளுர் நகரம் ‘கொடும்பை’ என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்திருக்கிறது. இருக்குவேளிர் குலத்தின் முக்கிய நகரமாக இருந்த இது பழங்காலத்தில் ‘இருக்குவேளூர்’ என்ற பெயர் கொண்டிருந்திருக்கிறது. கொடும்புறார் மற்றும் இருக்குவேள் என்ற பட்டப்பெயர்களில் இன்றும் அந்தப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தோழர் என்.வெங்கடாசலம் கொடும்புறார் குறிப்பிடத்தக்கவர்.

கொடும்பாளூர் வேளிர் குலத்தரசர்களான கள்ளர்கள் - Indian council of historical research


கொடும்பாளூர் ராயர் காலப்போக்கில் கொடும்புராயர், கொடும்புறார் ஆகிவிட்டது. வேளிர் என்பது இன்னாளில் வேளார் ஆகி இருக்கிறது. பேராவூரணி பக்கம் வேளார் பட்டமுடைய கள்ளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த இருக்குவேளிர் அரச வம்சம் பிற்கால பல்லவர் ஆட்சியின் தொடக்க காலத்திலும் கொடும்பாளுர் பகுதியை ஆட்சி புரிந்து வந்துள்ளனர். பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்த பொழுது கொடும்பாளுர் வம்சத்தை சேர்ந்த செம்பியன் வளவன் என்பவன் பல்லவனுக்கு உதவியாக போர்ப் புரிந்தான் என்ற குறிப்பு கல்கி குறிக்கிறார்.


எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளிள் பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களின் ஆதிக்க போட்டிகள் சோழ மண்டலத்தில் அதிகரித்தன. ஆகவே இருக்குவேளிர்கள் மெல்ல பலத்தை அதிகரித்துக் கொண்டுவந்த சோழர்களுடன் நட்புறவு கொண்டனர். ஒன்பதாம் நூற்றாண்டில் (880 AD) திருப்புறம்பியத்தில் நடைபெற்ற போரில் சோழர்கள் பல்லவர்கள் உதவியுடன் பாண்டியர்களை முறியடித்த பிறகு கொடும்பாளுர் அரசர்கள் சோழ அரசுடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.

முதலாம் பராந்தக சோழர் தான் பிற்கால சோழர் சாம்ராஜ்ஜியத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். ஏனென்றால் இவர் கிபி907ஆம் ஆண்டு மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனான வறகுண பாண்டியனை வீழ்த்தி சோழர்களின் புலிக் கொடியை கன்னியகுமரி வரை பறக்க விட்டர். மதுரைக்கு படையெடுத்து சென்று பாண்டியர்களை வீழ்த்தியது யாரென்றால் பராந்தக சோழரின் முதன்மை தளபதியான தென்னவன் இளங்கோவேள் தலைமையில் வறகுணபாண்டியனின் தலையை கொய்து புலிக்கோடியை குமரி வரை கோலோச்ச வித்திட்டவர். 

அதன்பிறகு கொடும்பாளுர் இருக்குவேளிர் வம்சம் திருமண உறவுகள் மூலம் சோழ அரசுடன் தமது உறவை வலுப்படுத்திக் கொண்டனர். கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கோவேள் என்பவரின் மகள் கள்ளன்ஆதிச்ச பிடாரி (கொற்றவையை குறிக்கும் சொல்) என்பவளைப் முதலாம் பராந்தகனின் மகன் அரிகுலகேசரி திருமணம் செய்து கொண்டார்.

அதற்கு பின்பு கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் சோழர்களுடன் முழுமையாக கரைந்து விட்டார்கள்.


இருக்குவேளிர் ஆதித்த முனையதிரியர்




கற்றளி பிராட்டியை நேரிடையாகவே கள்ளச்சினு குறித்துள்ளார்கள். "வெளத்துப் பெண்டாட்டி கள்ளச்சி உத்தம த..... றந்தான் ஆன ....பூதி பட்டலாகன் "







இவள் சுந்தரசோழனின் வேளத்தில் இருந்தவள். இம் மங்கை கற்றளிப் பிராட்டியார் என்பதற்கு சான்றாக இந்த கல்வெட்ட மேற்கோள் காட்டியுள்ளார்கள். விக்கிரமகேசரியின் மனைவி கற்றளி சுந்தரசோழனின் துணை என்று வேளத்து பெண்டாட்டியை மேற்கோள் காட்டுகின்றனர்





கள்ளன் அச்ச பிடாரி, கள்ளர் நங்கை, மும்முடிசோழன் இளங்கோவேளாயின ஆதித்தன் முனையத்தரையன்.
இங்கு ஆதித்த முனையத்தரையன் இருக்குவேளிராக வருகிறார். திருமங்கை ஆழ்வார் தன்னை முனையத்தரையர் என்று பதிவு செய்துள்ளார். முனையத்தரையர் பட்டம் இன்றும் கள்ளர் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

எகா: டிடிவி தினகரனுக்கு முனையத்தரையர் பட்டமே. அதுமட்டுமில்லாமல் இன்றும் கொடும்பாளூரை சுற்றியும், ஊரிலும் கொடும்புரார், இருங்களர், இருக்குவேள், முனையத்தரையர் பட்டத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.





கள்ளன் ஆச்சபிடாரி, கள்ளன் அச்சபிடாரி, கள்ள நங்கை, வேளத்தில் இருந்த இருக்குவேளிர் மங்கை, அந்த இருக்குவேளிர் மூலமாக வந்த வல்லாளத்தேவர். அவர் பெயரை இன்றும் தாங்கும் மேலூர் மற்றும் தஞ்சை கள்ளர்.













கொற்றம் பூதி 









கள்ளர் பட்டங்கள் 














நன்றி
சோழர்கள் வரலாறு போற்றுதலுக்குரிய ஐயா நீலகண்ட சாஸ்த்திரி
மற்றும் தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

தடகளப்போட்டியில் தங்கம் வென்ற திருமதி. திலகவதி செல்வராசு


அணைக்காடு கிராமத்தைச்சேர்ந்த ஆசிரியை திருமதி. திலகவதி செல்வராசு(72) அவர்கள் (21st Asian masters athletics championship, Malaysia) மலேசியாவில் ஆசிய தடகளப்போட்டியில் இந்தியாவிற்க்காக கலந்து கொண்டு (06/12/2019) 1 தங்கம் மற்றும் 2 வெண்கலப்பதக்கங்களை வென்றெடுத்து இந்தியாவிற்கு மட்டுமல்ல கள்ளர் இனத்திற்கும் பெருமைச்சேர்த்துள்ளார்.

சாதிப்பதற்கு வயது ஒரு காரணம் இல்லை என்பதை நிருபித்துள்ளார்.

இளைய தலைமுறையினருக்கும் குழந்தைகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக வயதை ஒரு பொருட்டாக நினைக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். 

சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீதும் ஆர்வம் கொண்ட இவர் தடை தாண்டும் தடகளப் போட்டி உட்பட தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், சாதனைகள் செய்வதற்கு வயது ஒரு தடையில்லை என நிரூபித்து வருகிறார்.

மலேசியா நாட்டில் குச்சிங்க் என்ற இடத்தில் மூத்தோர்களுக்கான 21-வது ஆசிய தடகளப்போட்டி நடைபெற்றது. கடந்த 2 -ம் தேதி தொடங்கிய இப்போட்டி 7 -ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திலகவதி 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும் 80 மற்றும் 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியிருக்கிறார். பதக்கங்களுடன் ஊர் திரும்பிய அவருக்குப் பலரும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.


விளையாட்டு மீது எனக்கு சிறுவயதிலிருந்தே ஆசை. அதற்கு ஏற்றாற்போல் உடற்கல்வி ஆசிரியராகப் பணி கிடைத்தது, எனக்கு இன்னும் வசதியாகப் போனது. பள்ளியில் படிக்கும்போது மாநில அளவிலான போட்டியில் நீளம் தாண்டுதல் உட்பட பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளேன். கடந்த 1965-ல் தேசிய அளவில் பாட்னாவில் நடந்த 100, 200 மீட்டர் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளேன்.

எனக்கு வயதான பிறகும் விளையாட்டின் மீது இருந்த ஆர்வம் கொஞ்சம்கூட குறையவில்லை. சிலர், `மகள்களுக்குக் கல்யாணம் செய்து கொடுத்திட்ட.. பேரன் பேத்திகளைக் கொஞ்ச வேண்டிய வயதில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறேன் என அலைந்து கொண்டிருக்கிறாயே' எனக் கேட்பார்கள். அவர்களிடம், `இந்த விளையாட்டுகளில் கலந்து கொள்வதால்தான் எனக்கு உசுரே ஓடிக்கொண்டிருக்கிறது' எனக் கூறுவேன்.

மூத்தோர்களுக்கான போட்டி எங்க நடந்தாலும் நான் தவறாமல் கலந்து கொள்வேன். தற்போது, மலேசியாவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் இந்தியாவிலிருந்து 200 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன் பல பிரிவுகளில் நடந்த பல போட்டிகளில் விளையாடினோம். இதில், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கமும் 80 மற்றும் 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றேன். இதற்காக என்னைப் பலரும் பாராட்டி வாழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தது. ஊருக்கு வந்ததும் என் பேரப் புள்ளைங்க என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது எனக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது

கனடாவில் உலக அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறேன். எந்த நாட்டுக்குச் சென்றாலும் யார் துணையும் இல்லாமல் தனியாகவே சென்று போட்டியில் கலந்துகொண்டு வருகிறேன். சில வருடங்களுக்கு முன்பு எனக்கு விபத்து ஒன்றில் காலில் பலத்த அடிபட்டு விட்டது. அதற்கான சிகிச்சை இப்போதும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த நேரத்தில் இனி உன்னால் ஓடுவது சிரமம் எனச் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் நான் தன்னம்பிக்கையுடன் அதிலிருந்து மீண்டு போட்டிகளில் பங்கெடுத்து வருகிறேன். என் வீட்டைவிட கிரவுண்டை மிகவும் நேசிக்கிறேன்.

இளைய தலைமுறையினருக்கும் குழந்தைகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக வயதை ஒரு பொருட்டாக நினைக்காமல் ஓடி வருகிறேன். ஓடுவதால் எனக்கு உடலில் எந்த நோயும் இல்லை. கடைசி நேரத்திலேயும் நான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்க வேண்டும். என் மூச்சு கிரவுண்டில் இருக்கும் போதே பிரிய வேண்டும்” என்றார் உறுதியான குரலில்.

உடற்கல்வி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு வயது 72. கணவர் செல்வராஜ் சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சுஜாதா, அஜிதா என இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.









திங்கள், 9 டிசம்பர், 2019

தஞ்சை ப்ரகாஷ் கரைமீண்டார்


கரைமீண்டார்என்பது சோழர் கல்வெட்டுகளில் காணப்படும் போர்விரர்களின் பட்டம். கடாரம் போன்ற நாடுகளில் போர்புரிந்து வெற்றியோடு கரை மீண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் ஆகும். அப்படி புகழ் பெற்ற கரைமீண்டார் குடும்பத்தில் பிறந்தவர்தான் தஞ்சை ப்ரகாஷ்.



கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்! - வெ.நீலகண்டன்

தஞ்சை ப்ரகாஷ்! 1980-90களில் தமிழகத்தின் கிழக்கு மண்டலத்தில் இலக்கியம் எழுதவந்த அத்தனை பேருக்கும் ஆதர்சமாக இருந்த பெயர். வாட்டசாட்டமான உருவம், முன் வழுக்கை, நீண்டு பேணப்பட்ட தாடி, அடர் மீசை, அகன்று சுடர்விடும் கண்கள், வேட்டிக்குப் பொருத்தமற்ற சட்டை எனத் தஞ்சை ப்ரகாஷைப் பார்த்தவுடனே சிறிதானதொரு மிரட்சி தோன்றும். பேசத் தொடங்கிவிட்டால் அவருக்குள்ளிருக்கிற குழந்தைத்தனங்களும், அதற்கு நேரெதிரான அறிவாளுமையும் நம்மையறியாமல் அவருக்கு நெருக்கமாக்கி கட்டிப்போட்டுவிடும்.

படைப்பாளியாக, இதழாளராக, இசைக் கலைஞனாக, ஓவியனாக மட்டுமின்றி, ஒரு தீவிர இலக்கியச் செயல்பாட்டாளராகவும் இருந்த தஞ்சை ப்ரகாஷ், கரமுண்டார் வீட்டில் பிறந்தவர். அவருடைய பூர்வீகக் கிராமத்தின் பெயர் கரமுண்டார் கோட்டை. பெரும் மதில்கள்கொண்ட அந்த வீட்டில், ஊரின் கதைகளையெல்லாம் சுமந்துகொண்டு உலவித்திரிந்த அப்பாயிகளிடமிருந்து கேட்டுப்பெற்ற தன் தொன்ம உறவுகளின் ஆளுமைகளைத்தான் தன் அடர்மொழியில் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் எழுதிக் குவித்தார் ப்ரகாஷ்.

சர்க்கரை நோய், எலும்பு முறிவால் ஏற்பட்ட ஆஸ்டியோமைலட்டீஸ், சிறுநீரகக் கோளாறு என உடம்பில் பல்வேறு நோய்களைச் சுமந்துகொண்டு, ஒரு நொடியும் ஓய்வாக இருக்காமல் இலக்கியக் கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார் ப்ரகாஷ். ‘ஒளிவட்டம்’, ‘சும்மா இலக்கியக் கும்பல்’, ‘கதைசொல்லிகள்’, ‘தளி’, ‘தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை’, ‘தனிமுதலி’, ‘தாரி’, ‘கூடுசாலை’ என ஏராளமான இலக்கிய அமைப்புகளை நடத்தினார் ப்ரகாஷ். பத்து இலக்கியவாதிகள் கூடிவிட்டால், ராஜராஜ சோழன் சிலைக்குக் கீழே ஒரு கூட்டம் நடத்திவிடுவார். சினிமா, உலக இலக்கியம், புத்தக விமர்சனம், சிறுகதை வாசிப்பு என ராஜராஜனே மிரளும் அளவுக்கு அந்த இடம் இலக்கியத்தில் அரங்கேறியிருக்கிறது.

நல்லதொரு படைப்பைப் படித்துவிட்டால், எப்பாடுபட்டாகிலும் அந்தப் படைப்பாளியைப் பிடித்து நாலு வார்த்தை பாராட்டிப் பேசாமல் விட மாட்டார் ப்ரகாஷ். அதேநேரம், விமர்சனக் கூட்டங்களுக்கு அவரைக் கூப்பிடுவோர் ஒன்றுக்கு பத்துமுறை யோசித்துத்தான் அழைப்பார்கள். ‘சௌந்தர சுகன்’ என்ற இதழை நடத்தியவரான சுகனும் ப்ரகாஷூம் மிகவும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் இணைந்து பல இலக்கிய அமைப்புகளை உருவாக்கி நடத்தியிருக்கிறார்கள். அந்த சுகனின் கவிதைப் புத்தக வெளியீட்டு விழா... வாழ்த்திப் பேசத்தான் ப்ரகாஷை அழைத்தார்கள். மைக்கைப் பிடித்து, “இந்தத் தொகுப்பில் கவிதைகளே இல்லை... எல்லாம் குப்பைகள்” என்று விலாச, அரங்கம் கலகலத்துவிட்டது. பொதுவாகப் ப்ரகாஷ் பேசுகிற எல்லா மேடைகளும் இப்படித்தான் இருந்திருக்கிறது.

சொல்லிக்கொள்ளும்படி ப்ரகாஷுக்கு சம்பாத்தியம் ஏதுமில்லை. அம்மா, டாக்டர். அப்பா எல்.ஐ.சி-யில் இருந்தார். ‘வருமானத்திற்கு’ குறையில்லை. அவர்கள் இருக்கும் வரை ப்ரகாஷின் இலக்கியமெல்லாம் அவர்களது வருமானத்தில்தான். அவருக்குப் பிறகு மனைவி மங்கையற்கரசி... கம்யூனிட்டி ஹெல்த் நர்ஸாக இருந்தார். அவரது சம்பளமெல்லாம் க.நா.சு-வின் ‘பித்தப்பூ’வாகவும், சி.எம்.முத்துவின் ‘கறிச்சோறா’கவும், ‘வெசாஎ’-வாகவும் ‘குயுக்தமா’கவும் மாறிவிடுவதுண்டு.

ப்ரகாஷ் நிறைய இதழ்களை நடத்தியிருக்கிறார். இதழ்களையும் ஓர் இயக்கம்போலவே நடத்துவார். இதழ்களின் செலவுக்கென எவரிடமும் போய் நிற்க மாட்டார். ‘குயுக்தம்’ இதழின் இரண்டாவது அட்டையில் கொட்டை எழுத்தில் இப்படி அறிவிப்பு இருக்கும்: “நீங்கள் துணிச்சல் மிகுந்த கலைஞரா? உங்கள் படைப்புகளை பத்திரிகைகள், புத்தக நிலையங்கள், பண்டித, புலவ, வித்வ சிரோன்மணிகள் மறுக்கின்றனரா? இதோ, குயுக்தம் அதற்கென வெளியிடக் காத்திருக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். யாருடைய எழுத்தும் எந்தப் புரட்சியையும் எந்தக் காலத்திலும் செய்ததில்லை. செய்வோம் நாம். மறுப்பவர்களை மறுப்பதே அடுத்த கட்டத்துக்கு நம்மைக் கொண்டுசெல்லும். மறுப்போம், எதிர்ப்போம். எந்தத் தலையாட்டி மாடுகளுக்கும் நாம் துணை அல்ல. குயுக்தமாய் தவறு செய்வதில்லை. ஜெயிப்போம்!”

வெங்கட் சாமிநாதனுக்காகவே ‘வெசாஎ’ என்ற இதழைக் கொண்டுவந்தார். ‘வெங்கட்சாமிநாதன் எழுதுகிறார்’ என்ற பதத்தின் சுருக்கமே ‘வெசாஎ’. அந்த இதழில் இரண்டாவது அட்டையைத் தவிர, 40 பக்கங்களிலும் ஒற்றை ஆளாக வெங்கட் சாமிநாதன் எழுதுவார். இரண்டாவது அட்டையில் ப்ரகாஷின் கடிதம் வரும். அந்த ஒற்றைப் பக்கத்தில் மேட்டிமை இலக்கியவாதிகளை வெளுத்து வாங்கிவிடுவார். மூன்றாவது இதழ் வருவதற்குள் ப்ரகாஷ் இறந்துவிட்டார். ‘பாலம்’, ‘சாளரம்’, ‘வைகை’ என்ற பெயர்களிலும் இதழ்களை நடத்தினார் ப்ரகாஷ். எல்லா இதழ்களுமே இரண்டோ மூன்றோதான் வந்திருக்கின்றன.

ப்ரகாஷின் அப்பா பெயர் கார்டன். அம்மா பெயர் கிரேஸ். தீவிரக் கிறிஸ்தவர்கள். ப்ரகாஷ் ஒரே பிள்ளை. ப்ரகாஷ் தமிழ் இலக்கியம் படித்தார். எந்தக் காலத்திலும் குடும்பத்தோடு ஒட்டுதலே இருந்ததில்லை அவருக்கு.

ரயில்வே, அஞ்சல் துறைத் தேர்வுகளை எழுதி, ஒரே நேரத்தில் இரண்டு துறைகளிலும் வேலை கிடைத்தது. ரயில்வேயைத் தேர்வு செய்தார் ப்ரகாஷ். காரணம், ஊர் சுற்றலாம். ரயில்வேயில் விபத்துப் பிரிவில் வேலை. பாலக்காட்டில் பணியாற்றினார். ஆனால், அவரது இயல்புக்கு அந்த வேலை பொருந்தவில்லை. அதிகாரிகளோடு பிரச்னை. திடீரென வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து நின்றார். அப்போது அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. கார்டனும் கிரேஸும் தங்கள் பிள்ளையின் செயலைக் கண்டு மிரண்டுவிட்டார்கள்.

அதன் பிறகு ப்ரகாஷ் பார்க்காத வேலை இல்லை. தஞ்சாவூர் பஸ்ஸ்டாண்டில் பால் கடை, பேப்பர் கடை வைத்தார்; வெங்காய வியாபாரம் செய்தார்; ஆந்திராவிலிருந்து கல்கத்தா வரைக்கும் போய் வியாபாரம் செய்வார். அந்தப் பயணங்களில்தான், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், உருது, ஒரியா, சம்ஸ்கிருத மொழிகளெல்லாம் அவருக்குக் கைவந்தது.

ஒரு கட்டத்திற்குப் பிறகு மதுரையில் நண்பரோடு சேர்ந்து பிரஸ் வைத்தார்.

பி.கே.புக்ஸ் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி சில புத்தகங்கங்களைப் பதிப்பித்தார். பின், மதுரையைக் காலி செய்துவிட்டு தஞ்சாவூருக்கு வந்து ஸ்கிரீன் பிரின்டிங், ரப்பர் ஸ்டாம்ப் கடை வைத்தார். எந்தத் தொழில் தொடங்கினாலும் அவை பகுதிநேரத் தொழிலாகவே இருந்தன. இலக்கியமே அவரது பிரதான பணி. கடையில் எப்போதும் பத்து இளைஞர்கள் இருப்பார்கள். வியாபார பேரத்தைவிட இலக்கிய விவாதங்களே கடையில் ஒலிக்கும். வாசிப்பு ஆர்வம், எழுத்து ஆர்வம்கொண்ட இளைஞர்களை ஓர் ஆசிரியராக இருந்து செம்மைப்படுத்தினார் ப்ரகாஷ். அதனால்தான் தஞ்சை வட்டார இளம் படைப்பாளிகள் அவரை ஆசான் என்று அழைத்தார்கள்.

படித்துக்கொண்டே, கற்றுக்கொண்டே இருந்தார் ப்ரகாஷ். பரீட்சார்த்த முயற்சிகளிலும் இறங்குவார். மெஸ்மரிசம் படித்தார். அங்கசாஸ்திரம் படித்தார். கிரிமினாலஜி படித்தார். ஓஷோவைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார். ரமணரை முழுவதுமாக வாசித்தார். வரலாற்றில் தீவிர ஆர்வம் உண்டு. கத்தைக்கத்தையாகக் கடிதங்கள் எழுதுவார். கடித இலக்கியம் என்றொரு வடிவத்தை முறைமைப்படுத்தி முகம் கொடுத்ததில் ப்ரகாஷின் பங்கு முக்கியமானது.

ப்ரகாஷ், பிப்ரவரி 2000-த்தில் காலமான பிறகு, ‘மிஷன் தெரு’ வீடு அமைதியில் உறைந்துகிடக்கிறது. ப்ரகாஷின் மனைவி மங்கையற்கரசி மட்டும் அந்த வீட்டில் இப்போது தனித்திருக்கிறார். அவ்வப்போது வந்துபோகிற சில உறவினர்களும், சில பூனைகளும் தவிர, பெரும்பாலான நேரங்களில் ப்ரகாஷின் வீடு அடைந்துதான் கிடைக்கிறது. வயதும், உடல் கோளாறுகளும் வதைக்க, மங்கையற்கரசிக்கு மிஞ்சியிருப்பவை எல்லாம் ப்ரகாஷ் பற்றிய நினைவுகள் மட்டும்தான்.

ப்ரகாஷ் பயன்படுத்திய பேனாக்கள் மை வறண்டு; முனை முறிந்துபோய்க் கிடக்கின்றன. தீயில் எரிந்தும், தண்ணீர் பட்டும் அழிந்து கசங்கிச் சிதறிக்கிடக்கின்றன ப்ரகாஷின் கையெழுத்துப் பிரதிகள். ப்ரகாஷ் சேகரித்து வைத்திருந்த அரிய நூல்களை எல்லாம் ரோஜா முத்தையா நூலகத்துக்கு வழங்கிவிட்டார் மங்கையற்கரசி. ஒரு கசங்கிய ஃபைலில் ‘த்வம்சம்’, ‘முகமன்’, ‘கடைசி மாம்பழம்’ ஆகிய சிறுகதைகளின் கையெழுத்துப் பிரதிகளை வைத்திருக்கிறார். அந்தக் காகிதங்களும் மக்கி மடங்கியிருக்கின்றன. ப்ரகாஷின் நினைவாக வைத்திருந்த ஒரு சட்டையைக்கூட ஒரு வாசகர் விரும்பிக் கேட்டபோது, மறுக்க முடியாமல் கொடுத்துவிட்டார் மங்கையற்கரசி. அவரின் மூக்குக் கண்ணாடியையும், வாசிக்கும்போது அவர் பயன்படுத்தும் மெழுகு விளக்கையும் மட்டும் ப்ரகாஷின் நினைவாக அந்த வீட்டில் வைத்திருக்கிறார்.

மங்கையற்கரசி, ஒரத்தநாடு அருகில் உள்ள கீழக்கண்ணத்தங்குடியைச் சேர்ந்தவர். ஒருவகையில் ப்ரகாஷுக்கு உறவுக்காரர். ஏற்பாட்டுத் திருமணம்தான். வீட்டு நிர்வாகம் முழுவதும் மங்கையற்கரசிதான். திருமணத்துக்குப் பிறகு ப்ரகாஷ் முன்பைக்காட்டிலும் சுதந்திரமாக இலக்கியப் பணியாற்றத் தொடங்கிவிட, ஓரளவு வாசிப்புப் பழக்கம் இருந்ததால், ப்ரகாஷின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு ஒரு குழந்தையைப்போல அவரைப் பார்த்துக்கொண்டார் மங்கையற்கரசி.

“ப்ரகாஷ் ரொம்பவே வித்தியாசமான மனிதர். திருமணத்துக்கு முன்பே இவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். திருமணமான முதல்நாளே, ‘என்னுடைய சுதந்திரத்துல எந்தச் சூழ்நிலையிலையும் நீ தலையிடக் கூடாது. என் போக்கைத் தடுக்கக் கூடாது’னு சொல்லிட்டார். அப்போ மதுரையில் பிரஸ் வெச்சிருந்தார். அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போய்விடும். அதனால், பிரஸ்ஸை மூடிவிட்டு தஞ்சாவூருக்கே வந்துட்டார். அதன் பிறகு, தஞ்சாவூரிலேயே ஸ்கிரீன் பிரின்டிங் கடையை ஆரம்பித்தார்.

அவருடைய செயல்பாடுகள்ல யாரும் தலையிட முடியாது. கத்தைக்கத்தையா கடிதம் எழுதுவார். நிறையப் பேர் தேடி வருவாங்க. குறிப்பா இலங்கையில இருந்து நிறையப் பேர் வருவாங்க. மணிக்கணக்கில் பேசிக்கிட்டே இருப்பார். மாலை ஆரம்பிக்கிற பேச்சு மறுநாள் மதியம் வரைக்கெல்லாம் போகும்.

எங்கிட்ட கொஞ்சம் பொய் சொல்வார். ஒரு ரூபாய்கூட அவர் கையில நிக்காது. யாராவது பணம் கேட்டால் அல்லது புத்தகம் போடனும்னா, ‘முக்கியமான செலவு’னு பொய் சொல்லி பணம் வாங்குவார். சி.எம்.முத்துவோட ‘கறிச்சோறு’ நாவலை அச்சுக்குக் கொடுத்திருந்தாங்க. அச்சகத்துல இருந்து எடுக்கப் பணமில்லை. என்னோட வளையலை வாங்கிட்டுப் போய் அடகு வெச்சுட்டார். புத்தகத்தை வித்துட்டு அதன் மூலம் திருப்பித் தர்றேன்னார். கொஞ்சநாள் கழிச்சு, ‘புத்தகம் சரியா விக்கலே... நாமளே நகையைத் திருப்பிடுவோம்’னு என்கிட்ட பணம் வாங்கிட்டுப் போனார். அந்தப் பணத்தையும் ஏதோ ஒரு இலக்கிய வேலைக்குச் செலவு பண்ணிட்டார்.

இந்த வீடு கட்டும்போது, 30,000 கையில கொடுத்தேன். ரெண்டு வண்டி மணல்தான் வந்துச்சு. அதுக்கப்புறம் எந்த வேலையும் நடக்கலே. பார்த்தா, கொஞ்ச நாள்ல க.நா.சுவோட ‘பித்தப்பூ’ புத்தகக்
கட்டு வந்து இறங்குது. அந்தக் காசை வெச்சு புத்தகம் போட்டுட்டார்.

எங்களுக்கு எல்லையம்மன் கோயில் பக்கத்துல ஒரு வீடு இருந்துச்சு. அதுல இருந்த நிலை, ஜன்னலெல்லாம் பேத்து எடுத்து, அவரோட கடையில கொண்டுபோய் போட்டு வெச்சிருந்தோம். எல்லாம் தேக்கு. பதினைஞ்சாயிரத்துக்கு மேல போகும். ஒருநாள் நான் கடைக்குப்போய் பார்த்தேன். நிலையையையும் காணோம், ஜன்னலையும் காணோம். விசாரிச்சா, ‘கடைக்கு வர்ற நண்பர்களுக்கு காபி, டீ வாங்கிக் கொடுத்ததுல டீக்கடைக்காரருக்கு 2,000 ரூபாய் கடனாயிடுச்சு. அந்தப் பணத்துக்குப் பதிலா நிலையையும் ஜன்னலையும் தூக்கிக் கொடுத்திட்டேன்’ங்கிறார். 2,000-த்தைக் கையில கொடுத்து, ‘இதைக் கொடுத்துக் கடனை அடைச்சுட்டு நிலையைத் தூக்கிட்டு வாங்க’னு அனுப்பினேன். அதுக்குள்ள புதுசாக் கட்டுன வீட்டுல நிலையை வெச்சுப் பூசிட்டார் டீக்கடைக்காரர். நிலையும் போச்சு, அதை மீட்கக் கொடுத்த ரெண்டாயிரமும் போச்சு.

இலங்கை எழுத்தாளர் டேனியல், ‘பஞ்சமர்’ புத்தகத்தை அச்சடிச்சுத் தரச்சொல்லி இவர்கிட்ட வந்தார். அப்போ பிரஸ் பெரிய அளவுல இல்லை. இந்தப் புத்தகத்தை அச்சடிக்கிறதுக்காகவே, அவங்க அம்மாவோட வைரத் தோடை 11,000 ரூபாய்க்கு வித்துட்டு, பிரஸ்ஸுக்கு ஈய எழுத்து வாங்கினார். கடைசி வரைக்கும் அவருடைய அம்மாவுக்கு இவர் தோடை வித்தது தெரியாது.

டேனியல்கிட்ட, ‘இவ்வளவு செலவாகும்’னு சொல்லித்தான் வேலையை ஆரம்பிச்சார். ஆனா, திட்டமிட்டதைவிட செலவு அதிகமாயிடுச்சு. ஆனா, டேனியல் ஒப்புக்கலே. ‘நீ முதல்ல எவ்வளவு செலவாகும்னு சொன்னியோ அதை மட்டும்தான் தருவேன். நீ புத்தகத்தை அச்சிட்டுக் கொடுக்கணும்’னு உறுதியா சொல்லிட்டார். என்னோட ஆறு பவுன் செயினை வித்துட்டுதான் அந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்தார் ப்ரகாஷ்.

எந்த இழப்பும் அவரைப் பாதிக்காது. இந்த வீடு மட்டும்தான் மிச்சம். தொடக்கத்துல அவரைப் புரிஞ்சுக்கிறதே கஷ்டமா இருந்துச்சு. அதுக்கப்புறம் அவர் போக்குல விட்டுட்டேன்.

எப்பவும் இந்த வீட்டுல ஏதாவது ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருக்கும். அவர் இறந்த பிறகு என்னால இந்த அமைதியைத் தாங்க முடியலே...ரொம்பச் சிரமப்பட்டேன். காலப்போக்குல பழகிடுச்சு. பல நேரங்கள்ல வீட்டுல விளக்குகளைக்கூட போடத் தோணாது. இருட்டும் அமைதியும் பழகிடுச்சு. அவரோட மூக்குக் கண்ணாடியை மட்டும் எப்பவும் என் கைக்குப் பக்கத்துல வெச்சிருப்பேன். அவரே கூட இருக்கிற மாதிரி தோணும்.

அவர் இறந்ததுக்குப் பிறகு, அவரோட அச்சேறாத சில சிறுகதைகளைச் சேர்த்து மொத்தத் தொகுப்புகள் கொண்டுவந்தாங்க. ஒருமுறை வீட்டுல தீப்பிடிச்சதுல அவர் எழுதி வெச்சிருந்த பல கையெழுத்துப் பிரதிகள் எரிஞ்சிடுச்சு. பாதி எரிஞ்ச பிரதிகளைத்தான் மீட்க முடிஞ்சது. அப்போ தண்ணீர் அடிச்சதுல நிறையப் பிரதிகள் தண்ணியில ஊறி வீணாகிடுச்சு. ரெண்டோ, மூணோ, அவரோட கையெழுத்துக்காக எடுத்து வெச்சிருக்கேன்.

சிகரெட், தண்ணினு எந்தக் கெட்டப் பழக்கமும் அவருக்கு இல்லை. எந்தச் செலவும் பண்ணிக்க மாட்டார். நல்லா சமைப்பார். மீன் பிரியாணி, இறால் பிரியாணி ரொம்ப ருசியா செய்வார். உருண்டைக் குழம்பு பிரமாதமா வைப்பார். ஏதாவது ஸ்பெஷலா சமைச்சார்னா, நண்பர்களுக்கெல்லாம் டிபன் கேரியர்ல எடுத்துக்கிட்டுப் போய்க் கொடுப்பார். அவர் எழுதியதைவிட, அவருடைய கதைகளைப் பதிப்பித்ததைவிட, நண்பர்களை எழுதத் தூண்டி அவற்றை இவருடைய முனைப்பிலேயே புத்தகங்களாக்குவார். அதனால்தான் இன்றைக்கும் அவருடைய பெயரை எங்கோ, யாரோ உச்சரிச்சுக்கிட்டே இருக்காங்க...” என்று தன் கணவரைப் பற்றிய நினைவுகளைப் பல்வேறு உணர்வுகளினூடாகப் பகிர்ந்துகொண்டார் மங்கையற்கரசி.

இப்போது அரவமில்லாமல் இருக்கிற ‘மிஷன் தெரு’ வீடு, ஒருகாலத்தில் இலக்கிய மையமாக விளங்கியது. நண்பர்கள் முன்னறையில் உட்கார்ந்து இலக்கியம் பேச, உள்ளே நெய் ததும்பத் ததும்ப மைசூர்பாகு செய்துகொண்டிருப்பார் ப்ரகாஷ். கேக் மிகச் சிறப்பாகச் செய்வார். பட்டாணி வறுத்துத் தருவார். அதற்கெனவே பெரிய பெரிய பாத்திரங்களை எல்லாம் வாங்கி வைத்திருந்தார். அவை இப்போது பரணில் கிடக்கின்றன.

ஒருமுறை டூவிலரில் வந்தபோது ஒரு விபத்து. இடுப்பில் ஏற்பட்ட எலும்பு முறிவைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் ப்ரகாஷ். உள்ளேயே இருந்து இன்பெக்‌ஷன் ஆகிவிட்டது. ஊர் ஊருக்கு அலைந்ததில் கல்லீரலில் நோய்த்தொற்று வேறு உருவாகி, உடல் முழுவதும் பரவிவிட்டது. வயிற்று வலி, உடல் சோர்வு, மயக்கம் என்று பல்வேறு பிரச்னைகள் பீடித்தன. சர்க்கரையும் வந்துவிட்டது. எல்லாம் சேர்ந்து சிறுநீரகத்தைப் பதம் பார்த்தது.

அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கை குறைந்து இயற்கை வைத்தியத்தை நாடினார். ஆன்மிகத் தேடலும் ப்ரகாஷுக்கு உண்டு. பச்சைமலையில் உள்ள ஓர் ஆசிரமத்துக்குப் போவார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும், நோய் தீவிரமாகிவிட்டது. ப்ரகாஷ் இறந்தபோது அவருக்கு வயது 57.

சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம், கட்டுரை, இதழியல், பதிப்பு என எழுத்தின் எல்லாப் பரிமாணங்களிலும் ஆழமாகக் கால் பதித்தவர் ப்ரகாஷ். பல முன்முயற்சிகளைத் தொடங்கிவைத்தவர். உலக இலக்கியங்களை வாசித்தார். அவற்றோடு தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டு எழுதினார்; விமர்சித்தார். ஆள், பால் வேறுபாடில்லாமல் எவருடைய எழுத்தையும் கிழித்துத் தொங்கவிடுவார்.

தஞ்சை ப்ரகாஷின் எழுத்து தனித்துவமானது. உளவியல் தன்மையோடும், மனித உள்ளுணர்வுகளைச் சீண்டும் தன்மையோடும் அமைந்த அந்த எழுத்து, பலத்த விமர்சனத்துக்கும் உட்பட்டது. ஆண் - பெண் பாலியலை மட்டுமின்றி, பெண் - பெண் உறவுகளையும் அவரது நாவல்கள் நயமாகப் பேசின. பேசத் தயங்கும் ஆழ்மன எழுச்சியையும் அந்தரங்கங்களையும் நுட்பமாக அலசினார். அபத்தமாகிவிடும் வாய்ப்பை நூலிழையில் தவிர்த்து ரசமாக, கவிதாப்பூர்வமாக அதை மாற்றுவதுதான் ப்ரகாஷின் தனித்த யுத்தி.

‘கரமுண்டார் வூடு’ நாவல், அது வெளிவந்த காலகட்டத்தில் சூழலைப் பெரிதும் அதிர்வூட்டியது. இந்தியச் சமூகம் பெண்களைப் பாலியல் பயன்படுபொருளாக மட்டுமே பாதுகாத்து வருகிறது. பெரும்பாலான இந்தியப் பெண்கள் பாலியல் உச்சமென்றால் என்னவென்றே அறியாமல் தாம்பத்யத்தைக் கடந்துவிடுகிறார்கள். பெண்களின் வேட்கை, தாபம், விருப்பங்கள் எல்லாம் பெருமூச்சுகளிலேயே முடிந்துபோகின்றன. ‘கரமுண்டார் வூடு’ அம்மாதிரிப் பெண்களின் உளவியலையும் தேடலையும் வேட்கையையும் காதலையும் கவித்துவமாகப் பேசியது. ‘புளியமரத்தடியில் அப்பாயிகள் பேசிய ஊர்க்கதைகளின் ஒரு துளிதான் கரமுண்டார் வூடு’ என்கிறார் ப்ரகாஷ்.

‘கள்ளம்’ நாவலின் அடிநாதமும் ‘கட்டில்லாத காமம்’தான். தஞ்சை ஓவிய மரபில் வரும் கைதேர்ந்த ஓவியன் ஒருவனின் மகன்தான் இக்கதையின் மையம். காமம் என்பது உடல் சார்ந்ததா, மனம் சார்ந்ததா என்ற தேடலுக்கான முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்கிறது ‘கள்ளம்’. ஆண், பெண் உடல், கலவி, காதல் எனப் பல்வேறு இழைகளுக்கு மத்தியிலும், தஞ்சாவூர் கண்ணாடிச் சித்திரக் கலையின் நுட்பங்களையும் கலாபூர்வமாக உள்நுழைக்கிறார் ப்ரகாஷ்.

தஞ்சை ப்ரகாஷ் நாவல்களின் அடிநாதமாக இருப்பது, நாட்டுப்புறத்தன்மை. பாத்திரங்கள், வர்ணிப்புகள் வாயிலாக அக்காலகட்டத்தின் வட்டார வரலாற்றை நிரப்புகிறார் ப்ரகாஷ். சிறுகதைகளிலும் பெரும்பாலும் மிகையுணர்ச்சியற்ற காமத்தைத்தான் பேசுகிறார் ப்ரகாஷ். தஞ்சை வட்டார மொழி என்று வகைப்படுத்தவியலா தனித்த மொழிக்கட்டு ப்ரகாஷுக்கு வாய்த்திருந்தது.

ப்ரகாஷ் சிருஷ்டிக்கும் பாத்திரங்கள் அனைத்துமே, வயிற்றுப் பசி, உடற்பசி எனப் பசிக்காக அலைபவையாகவே இருக்கின்றன. தனது புனைவுலகை அவர் பேசாப்பொருள் களிலிருந்தே திறக்கிறார். ‘பசி: சரித்திரம் - காமம்: இலக்கியம்’ என்று பகுக்கிறார். தனது எல்லாப் படைப்புகளிலும் அவற்றையே நிலை நிறுத்துகிறார்.

‘ப்ரகாஷின் பாலியல் கற்பனைகள், பொய்யானவை. வெறும் சுயமைதுனக் கதைகள்’ என்ற விமர்சனமும் அவரது படைப்புகள்மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாகவே பல பெரிய ஆளுமைகள் அவரை அங்கீகரிக்கவில்லை. பெரிய அளவிலான வாசகர் வட்டமும் அவருக்கு இல்லை. ஆனாலும், அவர் தன் போக்கில் செயல்பட்டுக்கொண்டே இருந்தார். அவரது மொழிக்கட்டின் மீதும், வடிவத்தின் மீதும் வைக்கப்பட்ட எந்த விமர்சனத்துக்கும் அவர் செவி கொடுக்கவில்லை.

‘புறா ஷோக்கு’ என்ற நாவலை எழுதி வந்தார். உடல்நிலை மோசமான நிலையிலும் அந்த நாவலை நிறைவு செய்துவிடும் தீவிரத்தில் தன்னைப் பார்க்க வருவோரிடம் சொல்லிச் சொல்லி எழுதச் செய்தார். ஆனால், நாவல் நிறைவடையும் முன்பே அவர் நிறைவடைந்தார்.

ப்ரகாஷின் வாழ்க்கையே பூடகமான ஒரு நாவல் மாதிரிதான் இருக்கிறது!

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

சூரக்கோட்டை வையாபுரி வன்னியர்


சூரக்கோட்டையின் அடையாளம் சூரக்கோட்டை வையாபுரி வன்னியர் 



கீழ்வேங்கை நாட்டை சேர்ந்த சூரக்கோட்டை பகுதியின் அம்பலமாக இருப்பவர்கள் கள்ளர்களின் வன்னியர் பட்டம் உடையவர்கள். 

இங்கு உள்ள கள்ளர் பட்டங்கள்


  1. வன்னியர் 
  2. தேவர்
  3. தொண்டைமார் 
  4. வாண்டையார் 
  5. சேனைகொண்டார் 
  6. ராஜப்பிரியர்
  7. முதலியார் 
  8. கோட்டையாண்டார் 
  9. மழவராயர் 
  10. தஞ்சிராயர் 

சூரக்கோட்டை சிவாஜி கணேசன் மன்றாயர்  பண்ணை கோவில். அழகான இயற்கை சூழலில் அமைந்துள்ள இயற்கை கோவில்



தஞ்சை சூரக்கோட்டை பாலத்தை கடந்து செல்லும் காவிரி நீர்




அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில் சூரக்கோட்டை தஞ்சாவூர்





மூலவர் : பரமநாத அய்யனார்
அம்மன்/தாயார் : பூரணை-புஷ்கலை
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : சூரக்கோட்டை



திருவிழா:

ஆடித் திருவிழா, ஐப்பசி மாத உத்திராட நட்சத்திரத்தில் கிடாவெட்டு மற்றும் சிறப்பு பூஜை,

தல சிறப்பு:

பவுர்ணமியில் அய்யனாருக்கும் தேவியருக்கும் சந்தனக் காப்பு, அமாவாசையின் போது விபூதிக் காப்பு என அலங்கரிப்பர். அப்போது தரிசித்தால் மண்ணும் பொன்னாகும்; மங்கலம் யாவும் சேரும் என்பது நம்பிக்கை.


ஐயப்பன், வாபர், முனியாண்டவர், பேச்சியம்மன், பொம்மி-வெள்ளையம்மாள் சமேதராக மதுரைவீரன், கன்னிமூல கணபதி, வடிவழகி அம்மன் ஆகியோரை இங்கு தரிசிக்கலாம்.


குழந்தைகளை தீயசக்தி அண்டாமல் இருக்க பேச்சியம்மனையும், கோரிக்கைகள் நிறைவேற மதுரை வீரனையும், நினைத்தது நிறைவேற கன்னிமூல கணபதியையும் வழிபடுகின்றனர்.

பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் பக்தர்கள் அய்யனாருக்கு நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 108 கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து கணபதியை வழிபடுகின்றனர்.

தலபெருமை:

பொங்கல் திருநாளில் சூரக்கோட்டை, ஒரத்த நாடு என சுற்றுவட்டார ஊர்களில் இருந்து குடும்பம் குடும்பமாக பொங்கலிடுவார்கள். சிலர் ஆடு-கோழிகளை பலியிடுகின்றனர். அதே போல் பவுர்ணமியில் அய்யனாருக்கும் தேவியருக்கும் சந்தனக் காப்பு, அமாவாசையின் போது விபூதிக் காப்பு என அலங்கரிப்பர். அப்போது தரிசித்தால் மண்ணும் பொன்னாகும்; மங்கலம் யாவும் சேரும் என்கின்றனர் பக்தர்கள்.


ஒரு நாள் விவசாயி ஒருவர் நிலத்தில் ஏர் பூட்டி வேலை செய்யும் போது, ஏர்க்கலப்பையில் கல் ஒன்று தட்டுப்பட்டது. அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார் விவசாயி, அந்தக் கல்லில் காட்சி தந்தருளியவர் அய்யனார். இங்கே கோயில் கட்டி என்னைக் கும்பிட்டா, உங்க மொத்த ஊரையும் மக்களையும் நான் காப்பாத்தறேன் என்று அய்யனார் சுவாமி அருள, அவருக்கு சிலை வைத்து சின்னதாகக் கோயில் கட்டி வழிபட்டனர். சுமார் 80 வருடங்களுக்கு முன்பு கேரளச் சித்தர் ஒருவர், இந்த ஊரில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு வந்து, அங்கேயே சில காலம் தங்கினார். அவரைப் பிள்ளையார் கோயில் சாமியார் என்றே அழைத்தனர். பிறகு, பரமநாத அய்யனார் கோயிலுக்கு அருகில் குடிசை அமைத்துத் தங்கினார். அவர் மிளகு, கண்டந்திப்பிலி மாதிரியான பொருட்களை மண்பானையில் இட்டுக் கஷாயம் தயாரித்து, அதையே உணவாக அருந்துவார் அந்த சாமியார். அய்யனாரை தரிசிக்க வந்தவர்கள், சாமியாரையும் வணங்க அவர்களுக்கு கஷாயத்தை தீர்த்தமாகத் தருவார். பிறகு, அவர் ஒரு மண்டலம் கடும் விரதமிருந்து, வேள்வியெல்லாம் செய்து, அய்யனார் சுவாமிக்கு சக்தியேற்ற...அய்யனார் சுவாமியின் புகழ் வெளியூர்களுக்கும் பரவியது என கூறப்படுகிறது.


அதிசயத்தின் அடிப்படையில்: பவுர்ணமியில் அய்யனாருக்கும் தேவியருக்கும் சந்தனக் காப்பு, அமாவாசையின் போது விபூதிக் காப்பு என அலங்கரிப்பர். அப்போது தரிசித்தால் மண்ணும் பொன்னாகும்; மங்கலம் யாவும் சேரும்








மேலக்கால் பட்டவன்கோவில்




வலது கையில் நீண்டவாள்; இடக்கையில் கேடயம்! கொண்டை; இடுப்பில் உறைகத்தி, இருபெண்கள் கையிலும் ஆயுதங்கள்; சிறுவனின் கையிலும் கத்தி.


இங்கு வளரி அதிகமாக வைத்து வணங்கப்படுகின்றன.

தொந்தித்தேவன் பன்னியர் ; கும்பன் வகையறாவிற்கு பாத்தியப்பட்டது பட்டவன்கோவில்.

இடம்: எட்டுநாடுகள், 24 உபகிராமங்கள் -   மேலக்கால்,மதுரை.

செவ்வாய், 3 டிசம்பர், 2019

கரிமேடு கருவாயன் வரலாறு (கருவாயத்தேவர்)



சோழவந்தான் பகுதியில் எடுக்கப்பட்டு, நடிகர் திரு.விஜயகாந்த் நடிப்பில் 1986ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கரிமேட்டு கருவாயன். கருமாத்தூர் மூனு சாமியை குலதெய்வமாக கொண்டவர் கரிமேட்டு கருவாயத்தேவர்.  கவட்டை (கவண்) பயன்படுத்துவதில் வல்லவர்.



சோழவந்தானில்,  தற்போது தெற்குத்தெருவில் அரசஞ்சண்முகனார் நூலகத்தின் அருகில் உள்ள சந்தில் நுழைந்து பழைய கீரைத்தோட்டம் அருகில் பாலன் தியேட்டரில் பிடித்ததாகவும், பிறகு போலீசார் அங்கேயே சுட்டு கொன்றார்கள்.  அவர் இருந்து வந்த தென்னந்தோப்பு, கிணறு ஆகியன இன்றும் தென்கரை (கருவாயன் தோப்பு) மற்றும் RC பள்ளி பகுதியில் உள்ளன. 

திரைப்படங்களாக வெளிவந்த மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன் போன்றவர்களின் வாழ்க்கை அந்தப் படங்களில் இடம்பெற்ற ஒரே பாடலின் மூலம் நாம் அறிந்துகொள்ளும் நிலையில் பாடப்பட்டிருக்கிறது.

திரை இசையமைப்பாளர் இளையராஜா கிட்டத்தட்ட ‘கொலைச்சிந்துப்’ பாடல் முறையிலேயே அந்தப் பாடலுக்கு இசைக்கோர்வை செய்திருக்கிறார். கரிமேடு கருவாயன் திரைப்படத்தில்,

கதகேளு கதகேளு

கரிமேட்டுக் கருவாயன்

கதகேளு கதகேளடி ……

………உண்மையில அவங்கள்ளனில்ல

மதுரஜில்லாவுக்கே அவன் செல்லப்புள்ள

………………………………………..

சர்க்காரு சொன்னாங்க அவனோ கொலயாளி

சனங்கள்ளா சொன்னாங்க அவனே கொடையாளி

அவனே தேடித்தேடி தினமும் பாடிப்பாடி

வாய்க்காலா ஓடுதாம் வைகை நதி ………

என்று கரிமேடு கருவாயனது வாழ்க்கையைக் ‘கொலைச்சிந்துப்’ பாடல் போலவே பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



அடி கத கேளு கத கேளு... ( இசை )

கருவாயன் கத கேளு...

இசை பல்லவி

அடி கத கேளு கத கேளு
கரிமேட்டுக் கருவாயன்  கத கேளு கத கேளடி
கரிமேட்டுக் கருவாயன்  கத போல
இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி
கட்டுக் கதை இல்ல ஒட்டுக் கதை இல்ல
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு
வைகை நதிக் கர ஓரத்துல
அன்று வாழ்ந்து செயிச்சவன் வரலாறு

கத கேளு கத கேளு
கரிமேட்டுக் கருவாயன்  கத கேளு கத கேளடி

இசை சரணம் - 1

உண்மையில அவன் கள்ளனில்ல...
யா யா யா ஆ
உண்மையில அவன் கள்ளனில்ல
மருத சில்லாவுக்கே அவன் செல்லப் பிள்ள
சொந்தம் ஒரு ஆள் இல்ல பந்தம் அது தான் இல்ல
மலையும் மரமும் தவிர யாரும் இல்ல
தங்கச்சிய பண்ண கற்பழிச்சான்
அவன் ரத்தத்துல இவன் கொப்பளிச்சான்
இன்னும் பழி வாங்காது கண்ணில் இம காயாது
எனவே இவனே சிவனா ஆரம்பிச்சான்
சட்டத்தில் சொன்னாங்க அவனோ கொலையாளி
சனங்கெள்ளாம் சொன்னாங்க அவனோ ஒடையாளி
அவனத் தேடித் தேடி வனத்தில் ஓடி ஓடி
புண்ணாகிப் படுத்திச்சாம் போலீஸ் பூலு

கத கேளு கத கேளு... கத கேளு கத கேளு
கரிமேட்டுக் கருவாயன்  கத கேளு கத கேளடி

இசை சரணம் - 2

தென்ன மரத்துல படுத்திருப்பான்
ஆனா பூமியில கண்ண வெச்சிருப்பான்
கவட்ட வில்லும் உண்டு கையில் ஒரு வில்லுண்டு
வில்லால் அடிச்சு எதையும் விழுக வெப்பான்
கன்னி கழியாத காளியம்மா
இந்தக் கருவாயன் மேல தான் காதலம்மா
மாலை எதும் சூடாம தாலி எதும் இல்லாம
கடைசி வரையில் இருந்தா சாவியம்மா
சுகம் ஏதும் காணாம வெயிலில் சருகானாள்
இல்லாத ஊருக்கு இவளே வழி ஆனாள்
இன்னும் சொல்லப் போனா இளம வீணா போனா
கருவாயன் கட்டைக்கு வெறகா போனா

கத கேளு கத கேளு... கத கேளு கத கேளு
கரிமேட்டுக் கருவாயன்  கத கேளு கத கேளடி

இசை சரணம் - 2

நன்ம செஞ்சா ஊரில் யாவருக்கும்
அந்தப் பாற மனசுல நீர் இருக்கும்
ஆகான்னு கருவாயன் பேர யார் சொன்னாலும்
கருவில் இருக்கும் பிள்ள கையெடுக்கும்
பாவிப் பயல்கள வேரழிச்சான்
அந்தப் பண்ண குடும்பத்தில் நீர் தெளிச்சான்
மானம் பிரதானம் தான் நானும் கரிகாலன் தான்
இவனே சிங்கம் என்றே பேரெடுத்தான்
தெக்கத்துச் சீமைக்கு அவனே அதிகாரி
தென்பாண்டி மன்னன் தான் வந்தான் உரு மாறி
அவனை எண்ணிக் கொண்டு
நெஞ்சில் சோகம் கொண்டு
வாய்க்காலா போகுது வைகை நதி

கத கேளு கத கேளு... கத கேளு கத கேளு
கரிமேட்டுக் கருவாயன்  கத கேளு கத கேளடி
அந்த கரிமேட்டுக் கருவாயன்  கத போல
இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி
கட்டுக் கதை இல்ல ஒட்டுக் கதை இல்ல
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு
அந்த வைகை நதிக் கர ஓரத்துல
அன்று வாழ்ந்து செயிச்சவன் வரலாறு

கத கேளு கத கேளு
கரிமேட்டுக் கருவாயன்  கத கேளு கத கேளடி


மதுரை கரிமேடு அருள்மிகு கல்கத்தா காளியம்மன் திருக்கோவில் 85 ம் ஆண்டு உற்சவ திருவிழா





கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்