ஞாயிறு, 25 மே, 2025

தமிழ்நாட்டின் வாலிபால் சிங்கம் கருஞ்சிறுத்தை அருச்சுனா விருது வென்ற ஏ. பழனிசாமி




தேவர் சமூகம் எண்ணிலடங்கா ராணுவ வீரர்களை இந்த தேசத்திற்கு கொடையாக அளித்தது போல , பல உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும்  இந்த தேசத்திற்கு தந்துள்ளது. அப்படி ஒருவர் தான், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் கல்லம்பட்டி அருகே தேவர் சமூகத்தின் - கள்ளர் பிரிவில் பிறந்த ஏ. பழனிசாமி அவர்கள். சிறு வயதிலிருந்தே விளையாட்டு மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அவர் வாலிபால் மைதானத்தில் காட்டிய பாய்ச்சலும் வேகமும் அவரை தனித்துவமாக்கின. பந்தை பாய்ச்சும் போது காற்றில் பறக்கும் சிறுத்தை புலி போலத் தோன்றியதால், ரசிகர்கள் அவரை அன்புடன் “பிளாக் பாந்தர்” என்று அழைத்தனர்.

பழனிச்சாமிக்கு சிறுவயதிலேயே கைப்பந்து விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டதால் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று வாலிபால் விளையாடி வந்தார்.

பொருளாதார சூழ்நிலை காரணமாக பனம் பழங்களை பந்தாகவும் தென்னை மரங்களை வாலிபால் போஸ்டாகவும் மாற்றி விளையாடி பயிற்சி எடுத்தவர். இப்படி கிராமத்து வீரராக விளையாடிய இவருக்கு பல்வேறு இடங்களில் விளையாட வாய்ப்புகள் வந்தன. ஒருமுறை மதுரை மெஜிரா கோர்ட்ஸ்ஸில் இவரது விளையாட்டைப் பார்த்த கைப்பந்தாட்ட ஆர்வலர் நெல்லை மாடசாமி, தென்னக ரயில்வே வாலிபால் அணிக்கு அவரை அழைத்துச் சென்றார்.

தொடர்ந்து மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்று தென்னக ரயில்வே அணிக்குப் பல வெற்றிகளைத் தேடித்தந்தார் பழனிசாமி. அங்கிருந்து தேசிய அளவிலான வாலிபால் போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினார். 1961-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஏசியன் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.



1950களில் இந்திய வாலிபால் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பழனிசாமி. தேசிய அணியில் இடம் பிடித்து, இந்தியாவை பல சர்வதேச போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவரது “ஸ்மாஷ்” மற்றும் துல்லியமான பாஸ் திறமைகள் எதிரணிகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. தன்னுடைய தலைமைத்திறன் காரணமாக சில போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு.




அவரது ஆட்ட திறமையை பாராட்டி, 1961 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் வழங்கும் உயரிய விளையாட்டு விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இது வாலிபால் துறையில் தமிழ்நாட்டிலிருந்து அர்ஜுனா விருது பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை அவருக்கு பெற்றுத் தந்தது. 1962 ஆம் ஆண்டின் ஆசியாவின் மிக சிறந்த வாலிபால் வீரர் எனவும் தேர்வு பெற்றார்.

ஒருமுறை மதுரை மெஜிரா கோர்ட்ஸ்ஸில் இவரது விளையாட்டைப் பார்த்த கைப்பந்தாட்ட ஆர்வலர் நெல்லை மாடசாமி, தென்னக ரயில்வே வாலிபால் அணிக்கு அவரை அழைத்துச் சென்றார். 

பழனிசாமி அவர்கள் இந்திய ரயில்வேயில் பணியாற்றியபோதும், விளையாட்டை ஒருபோதும் விட்டு வைக்கவில்லை. தன் பணியையும் விளையாட்டையும் சமநிலைப்படுத்திய அரிய நபராக அவர் விளங்கினார். பிறகு, அவர் பயிற்சியாளராக மாறி இளம் வீரர்களை உருவாக்கினார். தமிழ்நாடு மற்றும் இந்திய வாலிபாலின் வளர்ச்சியில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. “பிளாக் பாந்தர்” என்ற பெயர் ஒரு பட்டம் அல்ல — அது தன்னம்பிக்கை, ஒழுக்கம், நாட்டுப்பற்று ஆகியவற்றின் அடையாளம்.



வீர வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் அவர் தனது ஊரிலேயே அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார். ஆனால், 2007ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தபோது, வாலிபால் உலகமே துக்கத்தில் மூழ்கியது. அவரது மறைவால் இந்திய விளையாட்டுத் துறையில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டது.

இன்றும் வாலிபால் உலகில் அவரது பெயர் மதிப்புடன் நினைவுகூரப்படுகிறது. தமிழ்நாடு வாலிபாலின் அடித்தளத்தை அமைத்தவர், நாட்டின் பெருமையை உயர்த்திய வீரர், எப்போதும் நினைவில் நிற்கும் ஒரு நாயகன்



மதுரை மேலூர் கல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், ஏ.பழனிச்சாமி. பல்வேறு நாடுகளுக்குச் சென்று விளையாடிய இந்த வாலிபால் வீரரின் நினைவு தினத்தில் அகாடமி ஒன்றைத் திறந்து நினைவுகூர்ந்துள்ளனர் அவரின் குடும்பத்தினர்.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்