கல்வெட்டுகளில் கள்ளர்கள் என்ற நூல் தற்போது வெளிவந்துள்ளது. இதை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அருமை சகோதரர் சிவம் சோழ பாண்டியன் சேர்வைக்காரர் அவர்கள் கல்வெட்டுகளில் கள்ளர்கள் என்ற புத்தகத்தை அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார். கள்ளர் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அருமையான புத்தகம்.
🔥கள்ளன்🔥
பொ ஆ 1118
முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு.....
கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil
கள்ள சோழன்
ஊர்: தருமபரி கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு
பொ. ஆ. மு. 4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்
"கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்"
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி",
என்ற பாடலில் கள்ளர் தலைவன் புல்லி என்றும்,
"ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்"
என்ற பாடலில் கள்ளர் தலைவன் பாண்டியன் என்றும்,
சோழர் காலத்தைச் சேர்ந்த பொ. ஆ. ஆறாம் நூற்றாண்டளவில் தோன்றிய கொங்கு வேளிர் எழுதிய பெருங்கதை மகத காண்டம் - மேல்வீழ் வலித்தது பாடலில்
“ மள்ளரொடு புணர்ந்த மாண்பிற் றாகிக்
கள்ளரொடு புணர்ந்த கட்டரண் குறுகிப் ”
என்ற பாடலில் மாண்புடையதாய் கள்ளரோடு கூடிய காவலையுடைய அரண்களை எய்தி அவ்வரண்களிலுள்ள படைகளையுடைய மன்னர்கள் என்றும் கள்ளர்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அதே போல் கல்வெட்டுகளிலும், செப்பு பட்டயங்களிலிலும் கள்ளர் மரபினர் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
கள்ளர் என்றால் பண்டையர் என்றும், கள் + அர்: கருமையான மக்கள் என்றும் தமிழ் பேரகராதி விளக்கம் அளிக்கிறது. தமிழரின் ஆதிகுடிகளாகிய கள்ளர் மரபினரை பற்றிய கல்வெட்டுகளில் நேரடியாக கள்ளர் என்று வருவதும், மேலும் கள்ளர் பட்டங்கள் பற்றிய கல்வெட்டுகளும் உள்ளன.( கல்வெட்டில் குறிப்பிடப்படும் பட்டங்கள், கல்வெட்டு உள்ள அதே பகுதியில் இன்றும் அதே பட்டம் உடையவர் கள்ளர் மரபினரே வாழ்ந்து வருகின்றனர்)
"கள்ளர்", "கள்வன்", "கல்லன்", "கள்ளர் நாடு", "கள்ளகம்", " கள்ளப்பால்" "கள்ளர்பற்று" "கள்ளப்பத்து" என்று பல கல்வெட்டுகள் சோழ, சேர பாண்டிய, பல்லவ, தொண்டைமான், சுல்தான்கள், விஜயநகர், நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில் கிடைக்கின்றன. இதில் கள்ளர் என்ற கல்வெட்டுகள் கள்ளர் மரபினரை குறிப்பதாக உள்ளவை மட்டும் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர கல்லன் என்ற கல்வெட்டுகள் கள்ளர் மரபினரை மட்டும் குறிப்பான. கல்வெட்டுகளில் குறில் நெடில் என்பது சாதாரணமாக காணப்படுவது. உதரணமாக ராஜராஜ தேவர் என்பதை கல்வெட்டில் ராஜராஜ தெவர் என்று எழுதப்பட்டிருக்கும். அதை போல் கல்லன் என்பதற்கு தமிழ் அகராதியில் விளக்கம் இல்லை.
கள்வன் என்பதற்கு பல விளக்கங்கள் உள்ளன. கல்வெட்டுகளில் பயின்று வரும் கள்வன் என்பதற்கு கள்ளர் மரபினராக சில கல்வெட்டுகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது. கள்வன் என்று குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டுகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் கல்வெட்டு அகராதி
கள்வர் கள்வன் : கள்வரில் சிறந்த கள்வன்
கள்ளப் பற்று : கள்ளர் வீரருக்கு அடைத்த இடங்கள்
கள்ளப்பால் : கள்ளர் இனம் வாழும் நாட்டுக்கூறு
செந்தமிழ்ச் சொற்பிற்ப்பியல் பேரகரமுதலி : இரண்டாம் மடலம்-முதற்பாகம்
[கள் - கள்ளுதல், கவர்தல். கச் + அர் - கள்ளர் - பண்டையர்]
தமிழ் வேந்தர் காலத்தில் வெட்சிப்படை மறவருள் ஒரு பிரிவினர். இவர்கள் கொள்ளைக் காரர்களோ, கள்வர்களோ அல்லர். கள்ளர் முன்னர் வெட்சிப் படை மறவர்களாக இருந்து போர் தொடங்குமுன் பகையரசரின் ஆநிரைகளைக் கவர்ந்து வரும் தொழிலைச் செய்தவர்களாவர். வெட்சிப்பூச்சூடி இவர்கள் ஆநிரை கவர்ந்ததை “வெட்சி நிரை கவர்தல்” என்னும் செய்யுள் வரியும் நிறுவ வல்லது.
கள்ளர்தடி : கள்ளர் எறியும் வளைதடி ஆய்தம்.
கள்ளர்நாடு : கள்ளர் இன மக்கள் மிகுதியாய் வாழும் நாட்டுப்பகுதி
[கள்ளா - நாடு]
கள்ளர்பற்று: கள்ளர் வாழும் ஊர்;
[கள்ளா * பற்று (வளநாட்டின் உட்ப்பிரிவு )]
தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும்
கள்ளப்பத்து - கள்ளர்களின் பாளையப்பட்டு
சோழர்காலத்தில் கள்ளப்பற்று
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் கல்வெட்டு
கள்ளப்பற்று - கள்ளன்
ஊர்: மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் கல்வெட்டு
ஆண்டு : 11 ஆம் நூற்றாண்டு
மன்னர் : முதலாம்குலோத்துங்க சோழத்தேவர்
மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் அறங்காவலர்களாக கள்ளர் மரபை சேர்ந்த முனையதரையர் பட்டமுடையவர்களே உள்ளனர். திருமங்கையாழ்வார் வேடுபரியில் கள்ளர் மரபை சேர்ந்த ஆதித்தஉடையவர் பட்டமுடையவர்களே முதல்மரியாதை பெறுகின்றனர்.
மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் அறங்காவலர்
கதிவேல் முனையதிரியர்
மாமன்னர் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவரின் கள்ளர் பற்று.
காலம் : கிபி1032
அரசு : தெற்காசிய சோழப்பேரரசு
அரசர் :- தெற்காசிய சக்ரவர்த்தி ஶ்ரீராஜேந்திர சோழத்தேவர்
விளக்கம் :- கோவில் கொடையை பற்றி கூறும் இக்கல்வெட்டில், ராஜேந்திர சிங்கவள நாட்டு, மிழலை நாட்டு கள்ளர் பற்றின் ஆதித்தன் என்ற சோழ அரசு அதிகாரி குறிக்கப்பெறுகிறார்.
பாண்டியர் ஆட்சியில் கள்ளப்பற்று
புதுக்கோட்டை கோவிலூர் கல்வெட்டு
ஆண்டு : (1289) - 13 ஆம் நூற்றாண்டு
சுந்தர பாண்டிய தேவர் ஆட்சியில் கள்ளப்பற்று
ஊர்: புதுக்கோட்டை கல்வெட்டு
ஆண்டு : (1225) - 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் : சுந்தர பாண்டிய தேவர்
கள்ளர் பற்று
ஊர்: திருமயம் கல்வெட்டு
ஆண்டு : 12 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
அறந்தாங்கித் தொண்டைமான் ஆட்சியில் கள்ளப்பற்று
இடம் : ஆனப்பிறந்தான் பூமீசுரநாதர் கோயில் கருவறை வட புறச்சுவர்
அரசர் : ஏகப்பெருமான் தொண்டைமானார்
காலம் : 28.11.1482
செய்தி : தேவராயத் தொண்டை மானார் நாளில் நடந்தபடி. வரி வாங்கவும் நிதி செலுத்தவும் ஆணை.
பட்டுக்கோட்டை சீர்மையில் கள்ளப்பற்று என அறந்தாங்கியை
கிபி 1685 ல் குறித்துள்ளது.
அரசர் :தஞ்சாவூர் மராத்திய அமர்சிங் அல்லது ராமசாமி அமர்சிங் போன்சலே
கள்ளப்பற்று சீமையில் இருந்த ராமாசாமி பன்றிக்கொண்டாரின் பாளையப்பட்டு நெடுவாசல் மற்றும் சிலட்டூர் பாளையம் ஆகியவற்றின் தாயாதி( ஆதி) கிருஷ்ணன் பன்றிக்கொண்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளப்பற்று கண்டர்கோட்டை பாளையம் ( கிபி 1798)
கள்ளர் அரையர்கள்
வல்லநாட்டு கவிற்பா ( கவிர்பால்) - கள்ளர் அரையர்கள் - திருக்கட்டளை சிவன் கோயிலுக்கு அளித்த கொடை
கள்ளப்பால் - கள்ளன் - கற்குறிச்சி
ஊர்: புதுக்கோட்டை கல்வெட்டு
ஆண்டு : 9 ஆம் நூற்றாண்டு
மன்னர் : முதலாம் பராந்தக சோழன்
கள்ளப்பால் கவிற்பா இவ்வூர் கள்ளன் சேந்தன் குலோத்துங்கசோழ மங்கல நாடாள்வான்.
கள்ளப்பால் - கள்ளன் - கற்குறிச்சி
ஊர்: புதுக்கோட்டை கல்வெட்டு
ஆண்டு : 11 ஆம் நூற்றாண்டு
மன்னர் : குலோத்துங்க சோழத்தேவர்
கற்குறிச்சி (கைக்குறிச்சி)
இந்த ஊரில் இன்றும் கள்ளர் மரபினரே வாழ்ந்துவருகின்றனர்.
நாட்டாழ்வார் பட்டமுடைய கள்ளர் மரபினர்
ஸ்ரீரங்கம் தமிழ்ச்சாசனம்
கள்ளர் மரபை சேர்ந்த தஞ்சை, சீராளூர்
ராஜ மன்னார்சாமி நாடாழ்வார்
கள்ளர் மரபை சேர்ந்த பழநித் தல வரலாறும் திருக்கோயில் வழிபாடும் என்னும் நூலில் திருப்புகழ் , திருமுறை சைவ சித்தாந்த சபையின் உறுப்பினர்களில்
R. பாலசுப்பிரமண்ய துரைராஜ் நாட்டாள்வார் .
தஞ்சை, சீராளூர் ஶ்ரீமான், வள்ளல்
ரா.இராமலிங்கசுவாமி நாட்டாழ்வார் (ICS)
திருமண பத்திரிகையில் கள்ளர் மரபை சேர்ந்த நாட்டாள்வார்
புதுக்கோட்டை கல்வெட்டு
கள்ளரில் நாட்டாழ்வார்
முசிறி கல்வெட்டு
கள்ளர் மரபை சேர்ந்த
உமையாள்புரம் நாட்டாள்வார் தண்ணீர்ப்பந்தல்
மன்னார்குடி, ஜெயங்கொண்ட நாதர் கோயில்
1965 ஆம் ஆண்டு
கள்ளர் மரபை சேர்ந்த
சோமசுந்தர சக்கரைநாட்டார்
கள்ளர் மரபை சேர்ந்த
சுந்தரேச நாட்டரசர்
ஸ்ரீ விக்கிரம சோழதேவரிரன் கள்ளன் நாடாள்வான் கல்வெட்டு
அரசர் :- சோழ பேரரசு
மன்னர் :- ஸ்ரீ விக்ரம சோழதேவர்
காலம் :- கிபி1121
இடம் :- லால்குடி சப்தரீஷ்வரர் சிவன் கோவில்
செய்தி :- விக்ரம சோழதேவர் காலத்தில் பாண்டியகுலாசினி வள நாட்டில் உள்ள ஈஸ்வரருக்கு மீகோழை நாட்டு (லால்குடி) உறையூர் நாடாள்வரான துகவூர் கள்ளர் மகன் நம்பாலை ஆதித்தன் நக்கன்(தூய்மையானவன்) நாடாள்வான் அணுக்கநம்பி அகமுடையாள் (கள்ளர் மகனின் மனைவி) அவர்கள் சந்திரரும்,சூரியரும் இவ்வுலகில் உள்ளவரை அனையா விளக்கு எரிக்க அக்கோவில் சிவபிராமணர்களுக்கு 6காசுகள் கொடை அளித்துள்ளார்.
இக்கொடையானது குந்தவை நாச்சியார்,உலகமாதேவியார்,பஞ்சவன் மாதேவியார்களின் வரிசையில் ஒரு சோழ அரச மகளிரின் கொடைத்தன்மை கல்வெட்டாக சோழர் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
சோழர் ஆட்சி கால முத்தரையர் கல்வெட்டு.
காலம் : 1097
அரசு : சோழப் பேரரசு
அரசர் : கோவிராஜகேசரி ஶ்ரீ குலோத்துங்கசோழத் தேவர்
விளக்கம் : திருவெறும்பியூர் மலைமேல் தேவர் கோவிலுக்கு, அனையா சந்தி விளக்கு எரிக்க, திருவெறும்பியூர் திருமலகத்து நாட்டை ஆளும் நாடாழ்வாராகிய பாடிக்காவல் உடைய கள்ளன் ராஜேந்திர முத்தரையன் அளித்த கொடையை சொல்லும் கல்வெட்டு.
முத்தரையர் கள்ளர் இனத்தவர் என்பதற்கான கல்வெட்டுகளில், இக்கல்வெட்டானது ஒரு மைல் கல்லே!
மேலும் கள்ளரில் நாடாள்வார் என்ற 5 கல்வெட்டுகளோடு 6வது கல்வெட்டாக கிடைக்கப் பெறுகிறது என்பது கூடுதல் தகவல்.
அரசு : சோழப் பேரரசு
அரசர் : மூன்றாம் இராஜேந்திர சோழத் தேவர்
காலம் : 1236
புதுக்குடியான ரா[ஜெ]ந்திர சொழமங்கலத்துக் காணி உடைய கள்ளரில் பெரும[£]ன் அழகனான மணவாள முத்தரயன்
கள்வர் கள்வன் பெரும்பிடுகு சுவரன் மாறன்
8 ஆம் நூற்றாண்டில் கிடைத்த புதுக்கோட்டை கல்வெட்டில் (IPS 236) ல் கள்வர் கள்வன் பெரும்பிடுகு சுவரன் மாறன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டை வெளியிட்ட தமிழக அரசு கள்வர் கள்வன் என்பது கள்ளர் மரபின் தலைவனான முத்தரயைரை குறிக்கிறது என அறிவித்துள்ளது.
இக்கல்வெட்டானது இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறனின் பட்டமான "கள்வர் கள்வன்", "சத்ருகேஸரி", "வாள்வரிவெங்கை" போன்ற பட்டத்தினை தாங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும் கண்டுபிடித்து அதனை பல இந்திய ஆராய்ச்சியாளர்களுடன் ஆராய்ந்து 30க்கும் மேற்பட்ட பாகங்களாக தொகுத்து வெளியிட்டனர். அதில் 13வது பாகத்தில் 139 பக்கத்தில் ஒரு கல்வெட்டிற்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.
இன்றும் செந்தலை, தஞ்சை பகுதிகளில் இதே முத்தரையர், தஞ்சரையர், செம்பிய முத்தரையர் என்ற பட்டம் கொண்ட பெரும்பான்மையராக கள்ளர் மக்கள் தஞ்சையில் வாழ்கின்றனர்.
கள்ளர்கள் காணி
ஊர்: சிவகங்கை அளகாபுரி அளகமணீஸ்வரர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு (1228)
மன்னர் : ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்
கள்ளர்நிலங்களைத் தவிர்த்து அனைத்து நிலங்களும் கிளிப்பற்றுடையாருக்கு தானமாக அளிக்கப்படுகிறது. கல்வெட்டில் கையெழுத்திட்டோர்
கள்ளரில்
அதளையூர் நாடாள்வார் / முனையத்தரையர் / விழுப்பரையர் / சேதிராயர் / பல்லவரையர் / கிளிகொண்டார்
கள்ளர் மரபை சேர்ந்த இந்திய விடுதலைப் போரில்
முனையத்தரையர்கள்
கள்ளர் மரபை சேர்ந்த
நற்றமிழ்ச் சங்கத்தின் தோற்றுநர்
பம்பையா சேதுராயர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோவில் கிள்ளனூரில் கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார் என்பவருக்கு சிலை வைத்து வணங்கி வருகின்றனர்
கிளிக்கொண்டார்
கள்ளர் மரபை சேர்ந்த
பல்லவரையர்
கள்ளர் வில்லிகள்
ஊர்: கரூர் பசுபதீஸ்வரர் கோயில்
ஆண்டு : 1256 / 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் : முதலாம் சடையவர்மன் சுந்தரப்பாண்டியன்
கன்னடர், தெலுங்கர், ஆரியர், கள்ளர் வில்லிகள் இனம் நாளுபேரும்,
கல்வெட்டில் கையெழுத்திட்டோர் கள்ளரில்
தொண்டைமான், களப்பாளர்
வன்னியர் வட்டமும்
கள்ளர் மரபை சேர்ந்த
களப்பாளர்கள் ,
கள்ளர் நாட்டின் ஒன்றான தென்னமநாட்டில்
மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ என்னும் பாடலை பாடல் முதன்முதலில் பாடியவர் கள்ளர் மரபை
இசைவாணர் கூடலூர் வே.இராமசாமி வன்னியர் .
கரூர் மாவட்டத்தில் , ஒவ்வொரு கள்ளர் நாட்டார் காவல் பொறுப்பிலும் 3 முதல் 10 கிராமங்கள் வரை இருந்துள்ளது.கரூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான கிராமங்களின் காவல் பொறுப்பு கள்ளர் சமூகத்தினரிடமே இருந்துள்ளது. ஆதார நூல்:- MADRAS DISTRICT GAZETTEERS - TRICHINOPOLY - VOLUME 1 - BOOK PAGE NUMBER 256.
கள்ளர் வில்லிகள்
ஊர்: புதுக்கோட்டை கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் : சுந்தர பாண்டிய தேவர்
கள்ளர் வில்லிகள்
ஊர்: உசிலம்பட்டி கல்வெட்டு
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
கள்ளர் வில்லிகள் , கள்ளரில் காடுவெட்டியார்.
தியாகராஜன் காடுவெட்டியார்கள்ளர்கள் காவல் வரி
ஊர்: திருப்புவனம் அளகமணீஸ்வரர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் : ஸ்ரீ ஜடாவர்ம பராக்கிரம பாண்டியதேவர்
குளமங்கலநாட்டார் கள்ளர்களுக்கு ஊர்க்காவல் வரி
ஸ்ரீ மென்னாண்டார் மூர்த்தி பிள்ளையார் கோவில் - மேல்நிலைப்பட்டி 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
வள்ளாளதேவர்
கள்ளர் மரபை சேர்ந்த இந்திய விடுதலைப் போரில் வீரர்கள்
வல்லாளதேவர் / வள்ளாளதேவர்
வல்லாளதேவர் நிலப்பத்திரம்
கள்ளர் நாடு
ஊர்: சேலம் கல்வெட்டு
ஆண்டு : 15 ஆம் நூற்றாண்டு
அரசு :
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளரைய பெரிய கரியப்பகவுண்டர்,
கள்ளரைய அண்ணியப்ப கவுண்டர்
வழங்கிய தானம்.
கள்ளர் மரபை சேர்ந்த
நாஞ்சிக்கோட்டை மண்ணையார்
ஊர்: தஞ்சாவூர் கல்வெட்டு
ஆண்டு : 1550 / 16 ஆம் நூற்றாண்டு
மன்னர் : செவப்பநாயக்கர்
1550 ஆண்டு ஐந்து நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் ஏழுவேலி நிலத்தை ஷம்ஸ்பீர் பள்ளிக்கு அளித்தனர். இந்த ஏழுவேலி நிலத்திற்கும் நான்கெல்லையும் குறிக்கப்பட்டுள்ளது.
கள்ளர் மரபை சேர்ந்த
நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள்
ஊர்: தஞ்சாவூர் கல்வெட்டு
ஆண்டு : 1741 / 18 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
திருப்பதியில் இருக்கும் நைனார் என்பவருக்கு வழங்கிய நிலம்
கள்ளர் மரபை சேர்ந்த
நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள்
ஊர்: தஞ்சாவூர் கல்வெட்டு
ஆண்டு : 1741 / 18 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
ஸ்ரீரங்க கோவில் தானம்
கள்ளர் மரபை சேர்ந்த
நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள்
மராட்டிய மன்னர் மோடி ஆவணத்தில்
( கிபி 1861)
.
கள்ளர் மரபை சேர்ந்த
நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள்
கள்ளரில் வாண்டையார் - வண்டார்
இடம் : பழங்கரை புராதனபுரீசுவரர் கோயில் வடபுறச்சுவர் அரசர் : அழகிய மணவாளப்பெருமாள் தொண்டைமானார்
காலம் : 1453
செய்தி : மகன் இலக்கண தெண்ணாயக்கத் தொண்டைமானார்க்குக் காணியாட்சி உரிமை கொடுத்தது.
வாண்டையார் கொண்ட நிலம்
வாண்டையார் வசத்தில் நீக்கின நிலத்துக்கு
அறந்தாங்கி தொண்டைமான் கல்வெட்டில் வாண்டையார்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பழங்கரை புராதனபுரீசுவரர் கோயில்
புதுக்கோட்டை 1453 ஆம் ஆண்டு வாண்டான், வாண்டையார் பற்றிய கல்வெட்டு
கள்ளர் மரபை சேர்ந்த
வாண்டையார்
கள்ளர் மரபை சேர்ந்த
புதுக்கோட்டை மாவட்டம்
வண்டார்
திருத்தங்கர் கல்வெட்டு
இடம்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், திருத்தங்கூர் நாகநாதசுவாமி கோயில் மற்றும் சொர்ணவல்லி அம்மன் கோயில் ஆகியவற்றிற்கிடையே உள்ள திருநிலைக் காலில் உள்ள கல்வெட்டு.
சிம்மதேவன் கொங்கதேவற்கா நிற்க [செரு] வாண்டைந் தொறு மீட்டு
தருமபுரி இ.பி. 1049 சோழர் ஊர்க் கல்வெட்டு
மன்னன் : இராஜாதிராஜன் 1 , இடம்: . பென்னாகரம் செல்லும் சாலையில், செல்லியம்மன் கோயில் அருகில் உள்ள நடுகல். குறிப்புரை; . இ.பி. 89ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புருஷவருமனின் வட்டெழுத்துக் கல்வெட்டு.தொறு மீட்டு என்ற சொல் காணப்படுவதால் இது நடுகற் கல்வெட்டு.
காலம்: 18ஆம் நூற்றாண்டு
செய்தி: பாடிகாவல் சுதந்திரம்
வாண்டையார் பற்றுக்கு
குமாரமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார்
17 ஆம் நூற்றாண்டு
சேலம் மாவட்டம், ஆறகழூர் அருகே வெள்ளிப்பாளையம் கிராமத்தில் உள்ள விளை நிலத்திலிருந்து புதிதாகக் கல்வெட்டு மற்றும் நவகண்ட சிற்பம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ மகாமண்டலேசுவரர் எனத் தொடங்கும் இக் கல்வெட்டானது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
‘மலாடாகிய ஜனநாத வளநாட்டு மகதை மண்டலத்து நரையூர் கூற்றத்து தென்கரை சீர்மையான ஆறகழூர்’ என்று குறிப்பிடுகிறது. இந்தப் பகுதியில் வாண்டையார்கள் பெயரில் கிடைத்திருக்கும் முதல் கல்வெட்டு இதுதான். இந்த வாண்டையார்கள், நாயக்க மன்னர்களின் கீழ் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள்.
ஆத்தூர் கூற்றத்தை சேர்ந்த பகுதி ஆறகழூர் ஆகும், ஆத்தூர், கள்ளக்குறிச்சி பகுதியில் 15 ஆம் நூற்றாண்டில் கள்ள அரையர்கள் கவுண்டர்கள் பட்டமுடைய கள்ளர்களினால், கள்ளர் நாடு மூலம் ஒரு ஊரை தானமாக வழங்கியதை நாம் அறிந்ததே. சேலம் கள்ள(ர்)குறிச்சி - கள்ளர் நாடு )
அதே போல் ஆறகழூர், காமநாத ஈஸ்வரர் கோவிலுக்கு, ஏழுகிளை கள்ளர் நாடான கப்பலூர் நாடு தலைவன் கணபதி நாடாள்வான் என்பவன் தானம் வழங்கியுள்ளான்.
குமாரமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார், ஆறகழூர் திருகாமீசுரமுடைய தம்பினார் கோயிலுக்குக் குமாரபாளையம் என்ற ஊரைத் தானமாகக் கொடுத்துள்ளார். அப்போது ஆறகழூரில் வசித்து வந்த நல்லகுடியைச் சேர்ந்த நாற்பத்தெண்ணாயிரம் என்பவர்களை குமாரபாளையத்தில் புதிய குடிகளாகக் குடியேற அனுமதி அளித்துள்ளனர். இந்த நாற்பத்தெண்ணாயிரவர் என்பவர்கள் வேளாண்மை மற்றும் வணிகம் செய்த குடிகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
வீடுகளில் துளையிட்டுத் திருடும் கன்னமிட்டவன், பயணத்தின்போது வழிமறித்துத் திருடும் வழிப்பறிச்சவன், மற்றவர்கள் பொருள்களை அபகரிக்கும் எடுப்பு எடுத்தவன் போன்ற குற்றச்செயல்களைச் செய்தவர்களை ஒரு போதும் குமாரபாளையத்தில் குடியேற்றக்கூடாது’ என ஆணையிட்டுள்ளனர். ‘அங்குக் குடியேறும் நற்குடியினர் எல்லா உரிமைகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள். இந்தத் தானத்தையும் கட்டளையையும் மீறுபவர்கள் ஒன்றுமில்லாமல் போவார்கள். இந்த தானத்தை அழிப்பவர்கள் கங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள்’ என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டுக்கு அருகே நவகண்ட சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. போரின்போது தனது உடலில் ஒன்பது இடங்களில் அரிந்து, படையல் இட்டுத் தன்னைத் தானே பலி கொடுத்துக்கொண்ட வீரனுக்காக வைக்கப்பட்ட நவகண்ட சிற்பம் இது. மேலும், வயல்வெளிகளில் கறுப்பு மற்றும் சிவப்பு நிறப் பானை ஓடுகள் காணப்படுகின்றன.
குப்பமுத்து வாண்டையார்
(1842 )
கருந்திட்டைக்குடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். முற்காலத்தில் கருந்திட்டைக்குடி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. தற்போது, கரந்தட்டாங்குடி என்றும் சுருக்கமாக கரந்தை என்றும் அழைக்கப்படுகிறது.
கரந்தை தமிழ்ச் சங்கம்", நினைவில் வாழும் திருவாளர்கள் குமாரசாமி பிள்ளை, அய்யாசாமி வாண்டையார் முதலானவர்களோடு திரு. உமாமகேசுவரனார் அவர்களும் இணைந்து 1918 ம் ஆண்டு உருவாக்கிய "கரந்தட்டாங்குடி திராவிட கூட்டுறவு வங்கி"போன்ற சரித்திர புகழ் பெற்ற அமைப்புகள் உள்ள பகுதியில் 1842 இல் மாரிமுத்து வாண்டையார் மகன் குப்பமுத்து வாண்டையார் யாசகம் (பிச்சை) பெற்று, அந்த மக்கள் உபயத்தில் வசிஷ்டேஸ்வர் கோவில் பெரிய பிரகாரத்தின் தளவரிசை வகையறா போட்டதை காட்டும் கல்வெட்டு. பிச்சை, யாசகம் எடுத்து கோவில் கட்டுவது சோழர் காலத்திலும் உள்ளது.
கள்ளரில் வாண்டையார்
ஊர்: தஞ்சாவூர் கல்வெட்டு
ஆண்டு : 19 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
வாண்டையார்
ஊர்: தஞ்சாவூர், அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை கல்வெட்டு.
ஆண்டு : 19 ஆம் நூற்றாண்டு (1876)
அரசு : ஆங்கிலேயர்
கள்ளர் மரபை சேர்ந்த
ராவ் பகதூர் வீரையா வாண்டையாரின் தாத்தா வீரையா வாண்டையர் செய்த கொடை.
வீரையா வாண்டையாரின் பேரன் சோழமண்டல கல்வி தந்தை
ராவ் பகதூர் வீரையா வாண்டையர்
கள்ளர் மரபை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள்
வாண்டையார், பசும்படியார், ஆவத்தியார்
வாண்டையார்
ஊர்: தஞ்சாவூர் கல்வெட்டு.
ஆண்டு : 20 ஆம் நூற்றாண்டு (1956)
அரசு : தமிழக அரசு
கள்ளர் மரபை சேர்ந்த
தஞ்சாவூர் நகர மன்ற தலைவர்
அய்யாசாமி வாண்டையார்.
கள்ளர் மரபை சேர்ந்த
அய்யாறு வாண்டையார்
ஊர்: தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி கல்வெட்டு.
ஆண்டு : 20 ஆம் நூற்றாண்டு (1982)
அரசு : தமிழக அரசு
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர்கள் / கள்ளரில் வன்னியன், தொண்டைமான்
ஊர்: சிவகங்கை கண்டதேவி
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு
மன்னர் : சுல்தான்
கிபி1369 கார்த்திகை மாதத்தில் காரணவர்கள் கண்டதேவி நாட்டு கூட்டத்தில் வன்னியர் (கள்ளர் தலைவர் - வன்னிய பட்டம்), கள்ளர்களும் ( கள்ளர் மக்களும்), புறத்தூர் பட்டர், வித்துவான்கள், பாடகர் மற்றும் காரணவர்களின் எதிரியான அறந்தாங்கியார் ( கள்ளர் அறந்தாங்கி தொண்டைமான்) மற்றும் அங்கு உள்ள மனிதர்கள் முன்னிலையில் வழிப்பறியில் ஈடுபட மாட்டோம் என சத்தியம் ஏற்கிறோம் என்று உறுதி மொழி ஏற்கிறார்கள்.
சூரக்கோட்டை வையாபுரி வன்னியர்
தொண்டைமான்
ஊர்: அறந்தாங்கி கல்வெட்டு
ஆண்டு : 15 ஆம் நூற்றாண்டு (1482)
மன்னர் : ஏகப்பெருமாள் தொண்டைமான்
கள்ளர் மரபை சேர்ந்த அறந்தாங்கி மன்னர் ஏகப்பெருமாள் தொண்டைமானார் நாட்டு மக்களுக்கு கொடுத்த சட்டதிட்டங்கள் குறித்த அறிவிப்பில், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் போது அவர்கள் கள்ளர் படை பற்றில் சரணடைந்து தங்களுக்கான நீதி பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறும் அரிய கல்வெட்டு.
கள்ளர் மரபை சேர்ந்த அறந்தாங்கி தொண்டைமான் வழிவந்த பாலையவனம் ஜமீன்தார்
ஶ்ரீமான் அ.துரையரசன் வணங்காமுடி பண்டாரத்தார்
கி.பி. 1687 ஆகும். இது பாலையவனம் பண்டாரத்தார் வரலாற்றை அறிய உதவும் ஓர் அரிய கல்வெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
1726 ஆம் ஆண்டு அறந்தாங்கி அரசு அருணாச்சல தொண்டைமான் காசிக்கு வழங்கிய கொடை
பாலையவனம் ஆண்டவராய வணங்காமுடி பண்டாரத்தின் மீது சிற்றம்பலக் கவிராயர் பாடிய இலக்கியங்களுக்காக அவரிடமிருந்து பரிசில்கள் பெற்றுள்ளார்.
ஊர்: புதுக்கோட்டை கல்வெட்டு
ஆண்டு : 15 ஆம் நூற்றாண்டு
அய்யாக்கண்ணு தொண்டைமான்
கள்ளரில் மழவராயர் / பல்லவராயர்
ஊர்: மன்னார்குடி கோட்டூர் கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் : கூன்பாண்டியன்
கள்ளரில் மழவராயர் அதே கோட்டூர் கோயில் 20 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில்
ஊர்: மன்னார்குடி கோட்டூர் கல்வெட்டு
ஆண்டு : 20 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
கள்ளர் மரபை சேர்ந்த
மழவராயர் / கனகம்பாடியார் / தென்கொண்டார்
ஶ்ரீ கள்வர் கள்வன் என பெரும்பிடுகு முத்தரையர் தன்னை குறித்துள்ள கல்வெட்டுள்ள கிள்ளுக்கோட்டையில்
ஶ்ரீ வனதுர்கை அம்மன் ஆலயத்தில் தொடரும்
கள்ளர் மரபை சேர்ந்த
மழவராயர்களின் அறப்பணிகள் :-
கள்ளர் மரபை சேர்ந்த
மழவராயர்
கள்ளர் மரபை சேர்ந்த
கொடை வள்ளல்
சந்திரகாசன் மழவராயர்
No. 53 (A. R. No. 31 of 1936-87).
IV PRAKARA, NORTH WALL.
The record is stated to belong to Ràjamahendrachaturvédimangalam
பல்லவராயர் மகள் , உலகுடையார் மகள் ,
வண்டார் மகள் , நவிலங்கியார் மகள், பழக்கொண்டார் மகள், சேதிராயர் மகள், அங்கராயர் மகள்
கங்கை கொண்டான், கடாரங்கொண்டான் என்ற பல பட்டங்கள் இரா ஜேந்திரனுடைய கல்வெட்டுகளில் காணப்பெறுகின் றன
கள்ளர் மரபை சேர்ந்த
கடராத்தலைவர்
ஊர்: பர்மா பீலிக்கான்
ஆண்டு : 19 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
1861 ல் பெ. ந. குப்புசாமி கடாரத்தலைவர் கட்டிய ஸ்ரீ முனீசுவரர் கோயில்
அருள்மிகு காரி அழகர் அய்யனார் ஆலயம்:- உபயதாரராக கள்ளர் மரபினரின் வன்னியர்
ஊர்: புதுக்கோட்டை கல்வெட்டு
ஆண்டு : 16 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
கள்ளர் மரபை சேர்ந்த
மழவராயர் , காங்கேயர், விசையராயர், வன்னியர்
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர்நாடான தந்தி நாட்டிலிருந்து முதன் முதலில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வான
திரு.M.M.சந்திரகாசன் காங்கேயர் (1922-2004).
கள்ளர் மரபை சேர்ந்த
விசையராயர் (விசுவராயர்) / வன்னியர்
மேலூர் நாட்டில் கள்ளர் மரபினரில் வன்னியன் கரை பிரிவு
கள்ளர் மரபை சேர்ந்த
நந்தியர் / சேண்டபிரியர் / தஞ்சிராயர் / வன்னியர்
ஊர்: மன்னார்குடி தலையாமங்கலம் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு
அரசு :
கள்ளர் மரபை சேர்ந்த
மாவீரர் முத்துசாமி நந்தியர்
கள்ளர் மரபை சேர்ந்த
தஞ்சிராயர்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, திடியன் ஊரில் உள்ள கைலாசநாதர் கோயிலின் நந்திமண்டபத் தூண்
கள்ளர் மரபை சேர்ந்த
பெரிய திம்மன் நல்லு மகனான பெரியணத் தேவரின் பிள்ளைகள் அறுவரால்
செய்து தரப்பட்டுள்ளது.
அந்தத் தூணிலேயே பெரியணத் தேவரின் சிற்பமும் உள்ளதாம்.
இடம்: கைலாசநாதர் கோயில், நந்தி மண்டபத் தூண்.
கள்ளர் மரபை சேர்ந்த
அம்பட்டையம்பட்டியில் இருக்கும் பெ.பெரியகுப்பத்தேவனின் மகன் நல்ல பெருமாள் தேவன் மனைவி கட்டகிடா மீனாட்சியின் பிள்ளைகள் நான்குபேர் செய்வித்த தூண்.
சோழங்கதேவர்
கந்தசாமி சோழங்கதேவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார்
கள்ளர் மரபை சேர்ந்த
பெரியணத் தேவரின் முழுப்பெயர் சாமியாறு பெரியண தேவன் என்று பயின்று வருகிறது. இது மற்றொரு தூணில் உள்ள சாசனம்.
கைலாசநாதர் கோயில் நந்தி மண்டபத் தூண்.
கள்ளர் மரபை சேர்ந்த
உச்சப்பட்டி கருப்பத்தேவன் மகனான வெள்ளை வெங்கித்தேவன் நினைவாக அவரது மக்கள் ஏழுபேர் வெள்ளை வெங்கித்தேவன் உருவத்துடன் கூடிய தூணைச் செய்து தந்துள்ளனர்.
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் / மாதுரா(ர்)ன்/ தொண்டமான் / முத்தரையன் / சேனாபதி
ஊர்: மன்னார்குடி தலையாமங்கலம் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 19 ஆம் நூற்றாண்டு (1831)
அரசு :
கள்ளர் மரபை சேர்ந்த
கவிஞர் கோ. வேணுகோபாலன் மாதுரார்
கள்ளர் மரபை சேர்ந்த
சேனாபதி
கள்ளர் மரபை சேர்ந்த
முகூர்த்த ஒலைப் பட்டயத்தில்
சேர்வை
பட்டயத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ் ஆண்டுக்கு சரியான ஆங்கில அண்டு, மாதம், நாள் 1924, செப்டம்பர், 5 ஆகும்.
பட்டயத்தில் நாள் நட்சத்திரம் குறிப்பிட்டுள்ள முறையே இன்றும் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. இக்குடும்பத்தின் இன்னொரு ஓலைப்பட்டயம் இவர்களை சேர்வை என பட்டப் பெயர் இட்டு, கள்ளர் சாதி சிவமதம் என்று குறிப்பிடுகிறது. ஆனால் இந்த முகூர்த்த ஒலைப் பட்டயத்தில் சாதி மத விபரங்கள் குறிப்பிடப்படாதது வியப்பாக உள்ளது.
தாலிகட்டுதல் (மாங்கல்யம் அணிவித்தல்) என்பதற்கு திருப்பூட்டல் என்ற நல்ல தமிழ்ச்சொல் பட்டயத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புற பகுதிகளில் இச்சொல் இன்றும் வழக்கிலிருப்பதைக் காணலாம். பாகனேரி கள்ளர் இனத்திருமணங்களில் இன்றும் இது போன்ற திருமண ஒப்பந்தம் (முறி) பனை ஓலையிலேயே எழுதப்படுவதாகவும், அதற்கு “முழுத்த ஒலை” அல்லது முகூர்த்த ஓலை எனப் பெயர் வழங்கி வருவதாகவும் தாலி கட்டுவதற்கு திருப்பூட்டல் எனப்பெயர் வழங்குவதாகவும் ஒரு ஆய்வாளர் தெரிவிக்கிறார்.”
கள்ளர் மரபை சேர்ந்த
சிவந்தெழுந்த பல்லவராயர்
ஊர்: புதுக்கோட்டை குளத்தூர் கல்வெட்டு.
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1681)
அரசு : பல்லவராயர்
கள்ளர் மரபை சேர்ந்த
ரெங்கம் பல்லவராயர்
ஊர்: புதுக்கோட்டை சுந்தரப்பட்டி கல்வெட்டு.
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
அரசு : தொண்டைமான்
ரெங்கம் பல்லவராயர் கட்டிய அணை
கள்ளர் மரபை சேர்ந்த
பெருங்களூர் அரசு விழித்துறங்கும் பெருமாள் பல்லவராயர்
ஊர்: புதுக்கோட்டை ஆலங்குடி கோவிலூர் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு (1387)
அரசு : தேவராயர்
வழுத்தூர் அரசு அச்சுத பல்லவராயர்
ஊர்: புதுக்கோட்டை ஆலங்குடி கோவிலூர் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 16 ஆம் நூற்றாண்டு (1511)
அரசு : பல்லவராயர் அரசு
கள்ளர் மரபை சேர்ந்த
ஆவுடைநாயனர் பல்லவராயர்
ஊர்: புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா , புல்வயல் , வன்னி ஆனந்தர் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1604)
அரசு : பல்லவராயர் அரசு
கள்ளர் மரபை சேர்ந்த
பெருங்களூர் ஆவுடைநாயனர் பல்லவராயர்
ஊர்: புதுக்கோட்டை ஆலங்குடி கோவிலூர் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
அரசு : பல்லவராயர் அரசுஆறுமுக பல்லவரார்
ஊர்: திருச்சி பத்தளம்பேட்டை , கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 20 ஆம் நூற்றாண்டு (1941)
அரசு : ஆங்கிலேய அரசு
கிபி 1898 முதல் 1928 வரையிலான காலகட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தான திவான் மற்றும் ரீஜன்ட் ஆகிய பதவிகளை வகித்த, மார்த்தாண்ட பைரவ பல்லவராயரின் சகோதரர்
விஜய ரகுநாத ராய பல்லவராயர்
கள்ளர் மரபை சேர்ந்த
புதுக்கோட்டை விஜயரகுநாத பல்லவராயர்
கள்ளர் மரபை சேர்ந்த
பல்லவராயர்
கள்ளர் மரபை சேர்ந்த
ராயமுண்டார்
கள்ளர் மரபை சேர்ந்த
பல்லவரார்
கள்ளர் மரபை சேர்ந்த
வளுத்தூர் கள்ளரில் ராங்கியர், வன்னியர்
கள்ளர் மரபை சேர்ந்த
பெருங்களூர் கள்ளரில் துரைகுமரப்பன் கூழியர்
கள்ளர் மரபை சேர்ந்த
நன்னியம்பலம்
நரசிங்கபட்டி மேலநாட்டு கள்ளர்களின் அம்பலகாரர்கள்
கள்ளர் மரபை சேர்ந்த
பதிநாலு தன்னரசு கள்ளர் நாடுகளில் வெள்ளலூர் நாட்டின் பெரிய அம்பலகாரர் A. வெள்ளைச்சாமி அம்பலகாரர் என்ற அழகம்பலகாரர்.
காலம் :15.7.1878 முதல் 14.1.1924
சோழர் கால கல்வெட்டு
சோழர் காலத்தில் கிராம ஊர்சபை கூடும் இடம் அம்பலம் என அழைக்கப்பட்டது. ஊர்சபையை ஆள்பவர்கள் அம்பலார், அம்பலம் ஆள்பவர் என அழைக்கப்படுவர். கிபி 10 ஆம் நூற்றாண்டில் முத்தூற்கூற்றம் கப்பலூர் நாட்டுப் பகுதியில் கள்ளம்பலதேவன் என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். இன்றும் கப்பலூர் கள்ளர் மரபினை சேர்ந்த கரியமாணிக்கம் அம்பலம் வழியினரால் ஆளப்படுகிறது. கள்ளர்களுக்கு அம்பலம் எனும் பட்டம் தொன்று தொட்டு வழங்கப்படுவதை இந்த கல்வெட்டு உரைக்கிறது.
கள்ளர் மரபை சேர்ந்த
சோழப்புரையர், அஞ்சாத கண்டப்புரையர், வணங்கனாத்தேவன், தொண்டைமான் அம்பலம், சொக்கட் டான் அம்பலம் என ஐந்து அம்பலகாரர்.
(ஆண்டு 1467)
கள்ளர் மரபை சேர்ந்த
நாட்டார் பட்டயம்
மல்லாக்கோட்டை பெரிய ஆவுடை அய்யர் கோயில் சன்னிதி வாசலிள் மல்லாகோட்டை அம்பலகாரர் முன்னுக்கு வெள்ளூர் அம்பலக்காரர் முன்னுக்கு
(ஆண்டு 1750)
கள்ளர் மரபை சேர்ந்த
பத்துக்கரை அம்பலகாரர்
காலம் : பொ.ஆ. 1783
செய்தி: கோட்டையூர் கைலாச அம்பலகாரர் சிவலோக பதவி அடைந்தமை
காலம் : பொ.ஆ. 1889
கள்ளர் மரபை சேர்ந்த
மகா வீரனான இளந்தரி அம்பலக்காரன்
(ஆண்டு 1730)
கள்ளர் மரபை சேர்ந்த
திருவையாற்றுச் சப்தஸ்தலப்பதிகம்
கூனம்பட்டி
அம்பலகாரர் மகா-ற--ஸ்ரீ குமாரசாமி மேற்கொண்டார்
(ஆண்டு 1902)
அவர்களால் இயற்றபெற்றது
கள்ளர் மரபை சேர்ந்த
கச்சமங்கலம் அகண்ட பரப்பிர்மமாகிய சொக்கனாதக்கடவுள் மீனாம்பிகை சுப்பிரமண்யக் கடவுள் தாண்மலர்கட்குத் திருக்கச்சமாலை
இயற்றமிழ்ச்சங்க அக்ராசனாதிபதி
ஸ்ரீமான் சொ. சிங்காரவடிவேல் வன்னிய முண்டார் அம்பலகாரர் அவர்களால் இயற்றியது.
(1911)
கள்ளர் மரபை சேர்ந்த
சிவசுப்பிரமணியர் பேரிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணு பேரிலும் பஜனைக் கீர்த்தனை
மதுரைஜில்லா மேலூர் தாலுகா உள்கடை மலம்பட்டி
மகா-ற--ஸ்ரீ கருப்பண அம்பலம் குமாரர் சின்னாத்தி அம்பலம்
அவர்களால் இயற்றபெற்றது
(1924)
கள்ளர் மரபை சேர்ந்த
14.5.1965ல் ஐயா சோ.கு.குப்பையன்அம்பலம்
சிறுகுடிநாடு சாத்தமங்கலம் கிராம அம்பலகாரராக அம்பலப்பட்டம் முடிசூட்டும்விழா அழைப்பிதழ்
கள்ளர் மரபை சேர்ந்த
உஞ்சனை இராம. இராமசாமி அம்பலகாரர்
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் ஆச்சப்பிடாரி
ஊர்: திருப்பழனம் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (921)
அரசு : முதலாம் பராந்தக சோழன்
திருப்பழனம் கல்வெட்டில் " கோனாட்டு கொடும்பாளூர் கள்ளன் ஆச்சப்பிடாரி" என்பவர் குறிப்பிடப்படுகிறார். இவர் புதுக்கோட்டை கொடும்பாளூரை ஆட்சி செய்த வேளிர் குல அரச மரபினர் ஆவார்.( கல்வெட்டு: 140/1928)
கள்ளர் ஆதித்தபடாரி
ஊர்: திருப்பழனம் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு
அரசு : முதலாம் பராந்தக சோழன்
திருப்பழனம் கல்வெட்டில் "கோனாட்டு உறத்தூர் கூற்றத்து கொடும்பாளூர் கள்ளன் ஆதித்தபடாரி " என கொடும்பாளூர் அரச குலத்தவர் குறிப்பிடப்படுகிறார். ( கல்வெட்டு 345/1902)
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளச்சி
ஊர்: புதுக்கோட்டை கொடும்பாளூர் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (956)
அரசு : சுந்தர சோழன்
கொடும்பாளூர் கல்வெட்டில் " மதுராந்தகன் சுந்தர சோழன் வேளத்து பெண்டாட்டி கள்ளச்சி உத்தம" என குறிப்பிடுகிறது.
கள்ளரில் பெரிய தேவன், சீராளத்தேவன், விழுப்பரையன்
ஊர்: தொடையூர்
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு (1222)
அரசு : மூன்றாம் இராஜராஜன்
கிபி 1222ல் மூன்றாம் இராசராச சோழர் காலத்தில் தொடையூரைச் சேர்ந்த நால்வர்களான கவுசியன் கண்ணன் பட்டன், கவுசியன் திருவரங்கமாளி பட்டன், சூரியதேவ பட்டன், வாச்சியன் என்போர் நத்த நிலங்களை 10,300 காசுக்கு, கள்ளன் சதுரநான மழை நாட்டு விழுப்பரைருக்கு விற்றுக் கொடுக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த ஒப்பந்த கல்வெட்டில் தனது கையெழுத்தாக “கள்ளன் சதிரனான மழை நாட்டு விழுப்பரையன்” என்றே குறிப்பிட்டுள்ளார்.
கல்லன் / கள்ளன் என்பது ஒன்றே. கல்வெட்டில் தேவர், தெவர் என்றும் சிங்களர் , சிங்கழர் என்று குடில் நெடில் மாறி வரும்
பத்மநாபன் பொன்னாப்பூண்டார்
வழங்கிய
பெருவுடையார் கோயில் மணி
தஞ்சாவூர் பெரிய கோவிலில், மூலவர் பெருவுடையார் சன்னிதிக்கு செல்லும் நுழைவு வாயில் முன், 100 ஆண்டுகள் பழமையான மணி இருந்தது. இந்த மணி பழுதடைந்ததால், புதிய மணி பொருத்த திட்டமிடப்பட்டது. தஞ்சாவூரைச் சேர்ந்த பத்மநாபன் பொன்னாப்பூண்டார் குடும்பத்தினர், 2 லட்சம் ரூபாய் மதிப்பில், தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அடுத்த நான்காம்கட்டளை கிராமத்தில், 362 கிலோ, 3.5 அடி உயரத்தில், செம்பு, காரீயம், வெண்கலம் கலந்து வடிவமைக்கப்பட்ட புதிய மணியை கோவிலுக்கு வழங்கினர்.
கள்ளர் மரபை சேர்ந்த
பாப்பாநாடு குறுநில மன்னர் விசயதேவர்
ஊர்: மதுரை அழகர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
கள்ளர் மரபை சேர்ந்த
பாப்பாநாடு குறுநில மன்னர் விசயதேவர்
ஊர்: மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு
மன்னர் : மரட்டிய மன்னர் பிரதாப் சிங் காலம்
இராமலிங்க விசையதேவர் அவர்கள் செயங்கொண்டநாதர் அர்த்தசாம பூசைக்காக 46 பொன் இராசகோபால சக்கரத்தை மூலப்பொருளாக வழங்கியிருக்கிறார்.
பாப்பாநாடு குறுநில மன்னர் விசயதேவர்
திருமாஞ்சோலைச் செப்பேடு
ஊர்: திருப்பனந்தாள்
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு (1736)
அரசு : விசயதேவர்
ராசஸ்ரீ இராமலிங்கம் விசையாத் தேவரவர்கள் காசியில் அன்னதானக் கட்டளைக்காகக் காசிமடத்து அதிபர் தில்லைநாயகத் தம்பிரான் அவர்களிடம் திருமாஞ்சோலை என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது.
கள்ளர் மரபை சேர்ந்த
பாப்பாநாடு குறுநில மன்னர் விசயதேவர்
ஊர்: பாப்பாநாடு
ஆண்டு : 20 ஆம் நூற்றாண்டு
அரசு : விசயதேவர்
கள்ளர் காவல்
ஊர்: கடத்தூர்
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு ( ஹிஜிரி 769)
அரசு : சுல்தான்கள்
மதுரை சுல்தான்கள் ஆட்சி காலத்தில் உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் உள்ள கடத்தூர் எனும் பகுதியில் காங்கயநாட்டு முத்தூர் கோயில் பிராமணர்கள் அனுப்பிய ஒலையில் இக்கட்டான அந்த காலத்தில் கோயிலை காக்க கள்ளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுல்தான்களின் கொடுங்கோல் ஆட்சியில் கோயில்களையும் மக்களையும் காக்க கள்ளர்களை மக்கள் சரணடைந்ததற்க்கு இந்த கல்வெட்டு ஒர் சிறந்த எடுத்துக்காட்டு.
கள்ளர் காவல்
ஊர்: திருக்குன்றக்குடி
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு (1377)
அரசு : விருப்பண்ண உடையார் காலம்
விசயநகர மன்னர் காலத்தில் , திருக்குன்றக்குடி மக்கள் " கள்ள வேளைக்காரர் " என்பவரிடத்தில் சரணடைந்து தங்களது ஊரை காத்து வருமாறு காவல் உரிமை அளித்து அவருக்கு சிறப்புகள் செய்துள்ளனர். அவருக்கு மக்கள் அளிக்க வேண்டிய சலுகைகள் பற்றியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளர் நிலம்
ஊர்: புதுக்கோட்டை, நெயவாசல்
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு (1222)
அரசு : வீரசுந்திரபாண்டிய தேவர.
வெண்ணெய்நல்லூரை சேர்ந்த கூத்தன் தில்லை நாயகன் என்பவன் திருத்தியூர் முட்டத்தாரான வண்டாங்குடி கள்ளர்களிடமிருந்து வண்டாங்குடியையும் அதன் சுற்றுபுறமுள்ள நிலங்களையும் காராண் கிழமையாய் விலைக்கு கொண்டுள்ளார்
கள்ளர் காவல் மரியாதை
ஊர்: மதுரை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1645)
அரசு : திருமலை நாயக்கர்
திருமலை பின்னத்தேவருக்கு வழங்க வேண்டிய மரியாதைகள்
கள்ளர் காவல் மரியாதை
ஊர்: மதுரை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1655)
அரசு : திருமலை நாயக்கர்
திருமலை பின்னத்தேவருக்கு வழங்க வேண்டிய மரியாதைகள்
கள்ளர் காவல் மரியாதை
ஊர்: மதுரை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1642)
அரசு : திருமலை நாயக்கர்
புலியை கொன்ற கள்ளருக்கு மரியாதை
ஊர்: மதுரை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
அரசு : திருமலை நாயக்கர்
புலியை கொன்ற ஆண்டிதேவருக்கும், போரில் வென்ற நல்லபிள்ளை தேவருக்கும் வழங்கிய மரியாதை
சிங்கவனம் குறுநில மன்னர் மெய்க்கண் கோபாலர்
ஊர்: மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு
மன்னர் : மரட்டிய மன்னர் பிரதாப் சிங் காலம்
ஸ்ரீசவாய் விஜயரகுநாத வாளாசி கிருஷ்ணக்கோபாலர்" மன்னார்குடி ஜெயங்கொண்டநாத ஸ்வாமி கோயிலுக்கு இறையிலியாக அக்கோயிலின் இறைவனுக்கு காலைச்சந்திக்கு நாள் ஒன்றிற்கு இரண்டு பணம் வீதம் ஆண்டிற்கு 720 பணம் என்ற கணக்கின் கீழ் 72 பொன் ராசகோபால சக்கரமும், வெள்ளிக்கிழமைகளில் வரும் சுக்கிரவாரகட்டளைக்காக மாதமொன்றிற்கு 6- பணம், 1-பொன், ஆகமொத்தம் வருடமொன்றிற்கு 19 பொன், இரண்டு பணமும் அளித்துள்ளார், இதே மன்னரின் மற்றொரு 1760 ஆம் ஆண்டைச் சேர்ந்த செப்பேட்டில் சாயரட்சை வழிபாட்டிற்காக {மாலைநேர பூஜை} ஆண்டிற்கு 40 பொன் வழங்கியமையையும் அறியமுடிகிறது
கள்ளர் மரபை சேர்ந்த
சிங்கவனம் குறுநில மன்னர் மெய்க்கண் கோபாலர்
ஊர்: திருவாவடுதுறை
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு ( 1729)
மன்னர் : மரட்டிய மன்னர் முதலாம் துளசா
ஆதீனச்செப்பேடு : சவ்வாய் விசைய ரகுநாத வாளாசி கிருட்டிண கோபாலர்" மிழலைக் கூற்றம் திருப்பெருந்துறை பவித்திர மாணிக்கச் சதுர்வேதி மங்கலம் ஆளுடைய பரம சுவாமிகளுக்கும், அம்மன் சிவயோக நாயகிக்கும் அளித்த நிலக்கொடை இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
"ஸ்ரீசவ்வாயி விசைய ரகுநாத வாளோசி கிருட்டிண கோபாலர்" அவர்களின் குடிக்காணியான கோயில்கோட்டை மாகாணத்தைச் சேர்ந்த சிறுபனையூரில் நிலம் கொடையாக அளிக்கப்பட்டது. அந்நிலத்திற்கு நான்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன
கள்ளர் மரபை சேர்ந்த
சிங்கவனம் குறுநில மன்னர் மெய்க்கண் கோபாலர்
ஊர்: சிங்கவனம்
ஆண்டு :
மன்னர் :
ராமர் கோயில் கல்வெட்டில் மெய்க்கண் கோபாலர்
கள்ளர் பற்று
ஊர்: தஞ்சாவூர் கல்வெட்டு
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
மன்னர் : இரண்டாம் மராட்டிய அரசர் சாசி
கள்ளர் பற்று
ஊர்: தஞ்சாவூர் மராட்டியர் கல்வெட்டு
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1685)
மன்னர் : மரட்டிய மன்னர் சாசி
கள்ளர் மரபை சேர்ந்த
சிங்கப்புலியார்
1483 திருமயம் நெய்வாசல் சிவன் கோயில் கல்வெட்டு படிக்காப்பளர்
ஸ்ரீ விஜய ரகுநாத திருமலை சிங்கப்புலியார்
கள்ளர் மரபை சேர்ந்த
சோழகர், செம்பியமுத்தரையர்
ஊர்: புதுக்கோட்டை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
அரசு : நாயக்கர்
கள்ளர் மரபை சேர்ந்த
சோழகர்
7 ஆம் நூற்றாண்டு
திண்டிவனத்தில் உள்ளஉள்களத்தை சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாறு என்பவர் செய்த விநாயகர் சிற்பம்
கள்வன் உலங்கண்
ஊர்: திருச்சி, திருநெடுங்களம் திருநெடுங்களநாதர் கோவில் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (926)
அரசு : முதலாம் பராந்தகச் சோழன்
திருநெடுங்களநாதர் கோவிலுக்கு பகல் விளக்கெரிக்க, குழித்தண்டலை வாச்சிய கோத்திரத்து முருகன் என்பவர் 45ஆடுகளை தருகிறார். அடிகளை ஏற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புதல் அளிப்பவர் எயில் நாட்டைச் சேர்ந்த அட்டுப்பள்ளி நியமத்து கள்வன் உலங்கண் ஆவார்.
கள்ளர் ஆநிரை கவர்தல்
ஊர்: வட ஆர்காடு சாணங்குப்பம் கல்வெட்டு
ஆண்டு : 9 ஆம் நூற்றாண்டு (899)
அரசு : கம்பவர்மன்
பல்லவர் காலத்தில் வெட்சி போரான,விண்டபாடி கள்ளர்கள் ஆநிரைகளை கவர்ந்து சென்றது.
கள்ளன் தாழன் ஆநிரை கவர்தல்
ஊர்: ஆனைமங்கலம் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (911)
அரசு : முதலாம் பராந்தக சோழர்
ஆநிரை கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்கச் சென்ற கரந்தை கள்ளருக்கு எழுப்பிய நடுகல்.
கள்ள திருமங்கையாழ்வார்
ஊர்: புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கல்வெட்டு
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
அரசு : தொண்டைமான்
கள்ளர் ஆநிரை கவர்தல்
ஊர்: வட ஆர்காடு செங்கம் தாழையுத்து கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (930)
அரசு : முதலாம் பராந்தக சோழர்
கள்ளர்கள் ஆநிரைகளை கவர்ந்து சென்றது
கள்ளரில் நாட்டாழ்வார், தொண்டைமான்
ஊர்: மன்னார்குடி அப்பரசம்பேட்டை ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு (1348)
அரசு : விக்கிரம பாண்டியர்
தென்பொதிகை / தென்பத்து கள்ளர் நாட்டின் தலைமை கிராமம். அப்பரசம்பேட்டை
வீரமுண்டார் முதல் கரை. இங்கு உள்ள கள்ளர் நாட்டில் தொண்டைமான் , நாட்டார்கள் வாழ்ந்து வருகின்றனர்.
"கலிநிருவ கள்வனாயின கோக்கண்டன்ரவி"
கி.பி.9 ம் நூற்றாண்டில் இறுதிவாக்கில் உள்ள ஒரு கல்வெட்டு கோயமுத்தூர் மாவட்டம் பொன்னிவாடியில் கிடைக்கப்பெற்றது. இக்கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இக்கல்வெட்டின் வாசகம் கீழ்வருமாறு காணப்படுகிறது.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ சந்த்ராதித்ய குல திலகன் சா
2. ர்வ பௌமன் கலிநிருவ (ப) கள்வனா இன கோ
3. க்கண்டனிரவி அடியாளாக மணியன் சேகெரி (ந)
4. ல்லூர்த் தான் வயக்கின நிலத்திற் பள்ளிப் போ
5. ழி(யி) ற் (நெற்) பெட்டுப் போழியின் வடக்கு மணி
6. யன் வயக்குக்குப் போந்த கவ (ரி) ன் மேக்கு நீர்மிணி வா
7. ய்க்(கா)லின் கிழக்கு செ(ங்)கந்(தி)டர்காக (க்) கவருபோழி உண்ணா
8. ழிகைப் புறமாக அட்டினேன்
9. மணியன் வய............"
இந்த கல்வெட்டில் கொக்கண்டன் ரவி எனும் மன்னன் தன்னை சேரனின் குலத்தவனாக "சந்த்ராதித்ய குல திலகன்" என்று தெளிவாகவே சொல்லிவிட்டான்.
மேலும் "கலிநிருவ கள்வனாயின கோக்கண்டன்ரவி" என்ற தொடரின் மூலம் தன்னை "கள்வர்" குலத்தினன் என்றும் தெரிவிக்கிறான்.
திருப்புத்தூர் பிள்ளையார்பட்டி கோவில் கல்வெட்டில்
மாதவராயர், இருங்களர், நீலகங்கரையர்
1284
கள்ளர் புதுக்கோட்டை ரகுநாதராய தொண்டமானார்
ஊர்: குடுமியான்மலை குகை கோயிலின் முன்மண்டபத்தில் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
அரசு : தொண்டைமான்
கள்ளரசியான
ஊர்: தஞ்சாவூர் திருச்சோற்றுத்துறை கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (916)
அரசு : முதலாம் பராந்தக சோழத்தேவர்
புவன கங்கராயன்
குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து ஆங்கிலேயரின் துப்பாக்கிக்கு பலியான
பெருங்காமநல்லூர் தியாகிகள்
(தேவர்கள்)
கிமு 2ம் நூற்றாண்டில் திடியன் கல்வெட்டு
(2200 years Before)
திடியன் கூட்டம்
குகைத்தளத்தின் மேல் பகுதியில் மற்றொரு தமிழ் பிராமி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. “சையஅளன் விந்தையூர் காவிய்” என சொல்லப்பட்டுள்ள கல்வெட்டும் கிமு முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாய் இருக்கக்கூடும். விந்தையூர் என்பது தற்கால வண்டியூரை குறிக்கிறது.
கிமு 1ம் நூற்றாண்டில் திடிகாத்தான் கல்வெட்டு
(2100 years Before)
திடிக்காத்தான் {ம}….னம் எய்…’ குகைத்தளத்தின் கற்படுக்கையில் காணப்படும் இக்கல்வெட்டு கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். திட்டியைக்காத்தான் என்பவன் செய்வித்து தந்த கற்படுகையாக இருக்கலாம். இக்கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது.
கிமு 1ம் நூற்றாண்டில் நாகபேரூர் (நாகமலை) கல்வெட்டு (2100 years before)
’நாகபேரூரதைய் முசிறிகோடன் எளமகன்’ சிறுகுகைத் தளத்தில் கற்படுக்கையின் மீது தலைகீழாக இடவலமாக காணப்படும் இக்கல்வெட்டு கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். நாகப்பேரூர் என்பது இப்பகுதியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையைக் குறிக்கும். முசிறி என்பது சேரர் துறைமுகப்பட்டிணத்தைக் குறிக்கும். இன்றைய கேரள மாநிலத்திலுள்ள முசிறியைச் சேர்ந்த இளமகன் கோடனும், நாகபேரூரின் தலைவரும் செய்துகொடுத்த கொடை எனப் பொருள் கொள்ளலாம்.
இளமன், இளமநாச்சி என்னும் பெயர்கள் கல்லம்பட்டி தெற்குதெரு கள்ளர் கிராமங்களில் அதிகம்.
பெரிய மூத்த பெண்ணிற்கு பெரிய இளமி என்றும் சின்ன இளைய பெண்ணிற்கு சின்ன இளமி என பெயர் வைக்கிறார்கள் கள்ளந்திரி கல்லம்பட்டியில் வகுத்தி என்னும் கள்ளர் கூட்டம்
கிபி 10ம் நூற்றாண்டில் தென்கல்லக நாடு பற்றிய கல்வெட்டு (1000 years before)
கிபி 10ம் நூற்றாண்டுகளில் தொடக்கத்தில் வாழ்ந்த சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் காலத்தில் தென்கல்லக நாடு என்கிற பெயரில் ஆணையூர் கல்வெட்டு குறிக்கப்பட்டுள்ளது.
கிபி 10ம் நூற்றாண்டில் இறுதியில் இராஜராஜ சோழன் பாண்டிய நாட்டை முழுமையாக தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். அப்போது தென்கல்லக நாட்டில் பல்வேறு தானங்களை செய்துள்ளார்.
கிபி 11ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்த இராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டிலும் தென்கல்லக நாடு பற்றி குறிப்பு உள்ளது.
இராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் தனது மகனான சுந்தர சோழனுக்கு பாண்டியன் என்ற பட்டத்தை சூட்டி மதுரையின் ஆட்சியாளராக அமர்த்தினார். அப்போதும் சுந்தர சோழ பாண்டியன் என்கிற பெயரில் தென்கல்லக நாட்டு ஆணையூரில் (திருக்குறுமுள்ளூர்) கல்வெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கிபி 13ம் நூற்றாண்டில் கருமாத்தூர் கல்வெட்டு
(700 years Before)
கிபி 1453ல் ஆட்சி புரிந்த மாவலி வாணாதிராயர் ஶ்ரீவில்லபுரத்தில் வெளியிட்ட கோவில் சாசனத்தில் திடியன் நாட்டை மையமாக கொண்டு தனது ஆட்சியின் நிலப்பரப்பை கூறினார். அதில் திடியன், வாராந்தூர், கருமாத்தூர், புத்தூர், வைரவன் பற்று , புளியஞ்சோலை முதலிய ஊர்கள் பற்றி குறிப்பு உள்ளது. இவை பிறமலைக்கள்ளர்களின் நாட்டமைப்பு கொண்ட ஊர்கள் என்பதை தெளிவாக அறியலாம்.
பிறமலை கள்ளர்கள் தொல்பழங்குடி மக்கள் என்பது அவர்களின் வாழ்விடமே சான்று. உசிலம்பட்டி வட்டார பகுதியில் கிடைத்த பாறை ஓவியங்கள் இதனை உறுதி செய்கிறது. குறிப்பாக காளை அடக்குதல் போன்ற சல்லிகட்டு ஓவியமும், யானையை அடக்குதல் போன்ற ஓவியங்களும் கள்ளர்களின் ஆதிகாலத்தை நினைவு படுத்துகிறது.
1) காளை அடக்குதல்
திமில் கொண்ட காளையை ஒருவர் அடக்குவது போன்ற ஓவியம் உள்ளது. இந்த ஓவியம் இன்றைய சல்லிகட்டை நினைவுபடுத்துகிறது.
2) குதிரை சவாரி
குதிரையில் ஒருவர் சவாரி செய்வது போல பாறை ஓவியம் வரையப்பட்டுள்ளது.
3) யானை அடக்குதல்
காட்டு யானையை ஒரு குழுவினர் சேர்ந்து அடக்குதல் அல்லது வேட்டை ஆடுதல் பற்றிய பாறை ஓவியம். கள்ளர்கள் யானை அடக்குவதில் சிறந்தவர்களாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4) காது வளர்த்தல்
இன்றும் கள்ளர் இன கிழவிகளும், கள்ளர் இன பூசாரிகளும் காது வளர்ப்பு செய்கின்றனர். இதனை ஆதி கால பாறை ஓவியம் தெளிவாக காட்டுகிறது. காது வளர்த்து அதனை தோல்பட்டையில் தொங்க விடுவதை உசிலம்பட்டி பகுதி கள்ளர்களிடம் காணலாம்.
இது போன்ற எண்ணற்ற ஓவியங்கள் உசிலம்பட்டி வட்டாரப்பகுதியில் கிடைக்கிறது. இவை இன்றை பிறமலை கள்ளர்களின் வாழ்வியலை எடுத்து காட்டுகிறது.
ஓவியம் உள்ள இடம் : உசிலம்பட்டி சித்ரகல் பொடவு, க.மேட்டுப்பட்டி
கள்ளர் மரபை சேர்ந்த
கச்சிராயர் , காவிரியார், அடக்காபச்சியார், வல்லடியார்
கள்ளர் மரபை சேர்ந்த
கதவாடியார்
கள்ளர் மரபை சேர்ந்த
சாளுவர், முனையதிரியர், தென்கொண்டார்
கள்ளரில் தொண்டைமான்
கள்ளர் மரபை சேர்ந்த
சவுளியார்
கள்ளர் மரபை சேர்ந்த
பல்லவராயர்
கள்ளரில் பணங்கொண்டார்
கள்ளர் மரபை சேர்ந்த
பாண்டியர்
கள்ளரில் பாண்டியர் , அஞ்சாதேவர், வாண்டையார்கள்ளர் மரபை சேர்ந்த
சேதுராயர், களத்தில்வென்றார், நாட்டார்
கள்ளர் மரபை சேர்ந்த
முட்டியார்
கள்ளரில் பீலிராயர்
கள்ளர் மரபை சேர்ந்த
தொண்டமான்
கள்ளர் மரபை சேர்ந்த
பாலாண்டார்
கள்ளர் மரபை சேர்ந்த
காசிநாத பாண்டியர்
புத்தூர் கோவிலில் 2011 ஆம் ஆண்டு திருப்பணிக்கு நன்கொடையளித்த சோழநாட்டு கள்ளர்பெருங்குடிகளின் பட்டங்கள்:-
பாண்டியர்
அஞ்சாத்தேவர்
வாண்டையார்
தில் உள்ள பாண்டிய பட்டம் உடைய கள்ளர்கள் பாண்டிய மன்னன் பராக்ரமா பாண்டியனின் அதிகாரிகளின் சந்ததியினர் ஆவார்கள்.
முதலாம் ராஜேந்திரன்-கரந்தை செப்பேடு (கி.பி.1020 ). புத்தூரில் கண்டுபிடிக்கப்பட்டது. கரந்தை தமிழ் சங்கத்தில் வைத்து பாதுகாத்தமையால் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. ஐம்பத்தியேழு இதழ்கள் கொண்டவை.
புத்தூர் பகுதியில் வாழ்ந்த ஐயா. சேவு பாண்டியர் என்பவரிடம் இருந்து கரத்தை செப்பேடு கிடைத்தன.
கரந்தை செப்பேடுகள் முதல் இராசேந்திர சோழனால் பிராமணருக்கு அளிக்கப்பட்ட கொடை ஊராகிய திருபுவனமாதேவி சதுர்வேதி மங்களத்தின் தலைமை ஊராகும். கரந்தை செப்பேடுகளில் எட்டாவது ஏட்டின் பத்தொன்பதாவது வரி குறித்திடும் " மூலகுடியாகிய திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்" என்பது இப்புத்துரேயாகும். இச்சதுர்வேதி மங்கலத்தின் ஊர்ச்சபையும் இவ்வூரிலேதான் இருந்துள்ளது. எனவே, இச்சாசனத்தொகுதி ஊர்ச்சபையாரால் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது புலனாகின்றது.
இச்செப்பேட்டினை வெளியிட்ட முதல் இராசேந்திர சோழனின் ஆட்சியாண்டு எட்டிலிருந்து ( கி பி 1020 ) இரண்டாம் சோழனின் ஆட்சியாண்டு இருபத்திரண்டு வரையில் ( கி. பி 1168 ) இவ்வூர்ச்சபை தொடர்ந்திருந்தற்குக் கல்வெட்டுச் சான்றுள்ளது.
இதனை,
"ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ
தேவற்குயாண்டு 22 ஆவது நித்த விநோத வளநாட்டு
வீரசோழ வளநாட்டு பேரமதேயம் ஸ்ரீபுத்தூரான
திருபுவனமாதேவிச் சருப்பேதி மங்கலத்துப் பெருங்குறி
மகாஸவையோம்"
என்னும் கல்வெட்டுத் தொடர்கள் உணர்த்துகின்றன.
கிபி 1320 அளவில் திருபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலத்திலமைந்த சோழநாட்டுப் பகுதிகளில் " பராக்ரம பாண்டியன்" என்பவன் ஆட்சி புரிந்துள்ளான். அவனது பாண்டியநாட்டரசியலதிகாரிகள் புரிந்த அதிகாரத்தின் விளைவாக இப்பகுதி மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. புத்தூருக்கு அருகில் வெட்டாற்றின் வடகரையிலமைந்த "பத்துரில்" அழிந்து புதைந்துள்ள சிவன் கோவில் கல்வெட்டு இதனைக் குறிக்கின்றது.
""ஸ்வஸ்திஸ்ரீ கோமாற பன்மரான திருபுவன சக்கர
வர்த்திகள் ஸ்ரீபராக்ரம பாண்டிய தேவருக்கு ...........
இவ்வூர் மேலை மங்கல வீதியில் வடதுண்டம் கீழ்
சிறகில் ஒரு மனையைப் பற்றி வழக்கு உண்டென்று
இரண்டு கோவிலிலும் பூசை முட்டிக்கிடந்த"
தொடர்ந்து கி. பி. 1325 இல் புத்தூரிற்கு நேர் மேற்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவிலமைந்த "திரிபுவன வீரபுரத்தில் பாண்டிய மன்னன் பராக்ரமா பாண்டியனின் அதிகாரிகள் இப்பகுதி மக்களிடத்தில் பாடிகாவல், மெய்க்காவல், மகமை ஆகிய உரிமை களைப் பெற முற்பட்டுள்ளனர். இந்நிலையில் நிலவுரிமையாளராகிய வைணவர்களோடு பூசல்கள் மிகுந்து, ஒருவரையொருவர் அழிக்கும் கொடுமைகளும், பொருழிவுகளும் நடந்திருக்கின்றன. வைணவர் சிலர் கொல்லப்பட்டதுடன் அவர்கட்குரிய விக்ரம சோழ விண்ணகரமும் அழிக்கப்பட்டுள்ளது.
திருமால் கோயில் கல்வெட்டுகள் கலகத்தின் முடிபாக அமைதிபெற்ற பாண்டி நாட்டத்திகரிகள் நடுக்காவல் பெற்று உறுதி செய்தமையைக் குறிக்கும் கல்வெட்டில்,
"திருக்கோயில் திருமுற்றத்திலுள்ளாரை நலிதல் அரங்க
வரை வெட்டுதல் செய்யக் கடவோமல்லமாகவும்
தங்கள் நாடு தந்தபடி இவ்வூர் பூர்ஷித்த நாள் முதல்
காவல் பேற்றுக்கு முற்பிலாண்டுகள் எங்கள் தேவரை
நோக்க ஒரு அன்னியாயம் அடுத்துச் செய்யமால்
காவற் சொற்படாமல் ........... கடவோமானமைக்குச்
சேனைப் பெருமாளான சோழ சோழமூவரையர்தம்
வாசலிலே பெறவும் படுவோமாக"
கள்ளர் மரபை சேர்ந்த
அங்கராயர் வம்சத்தினர்
அகராதி
கல்வெட்டு
கிளியூருடையான் தொங்கலாண்டான் நம்பியாழ்வானை அங்கராயர் திருவிளக்கு
நேமம், ஒண்டி பிலி அங்கராயர் வகையறா
கள்ளர் மரபை சேர்ந்த
சேண்டபிரியர் வம்சத்தினர்
கள்ளர் மரபை சேர்ந்த
விசாத்தேவர் வம்சத்தினர்
கள்ளர் மரபை சேர்ந்த
ஆஞ்சாததேவர் வம்சத்தினர்
கள்ளர் மரபை சேர்ந்த
தேவர்
கள்ளர் மரபை சேர்ந்த
வீசாதேவர் , சோழங்கதேவர் , கண்டியர் , பல்லவராயர்
கள்ளர் மரபை சேர்ந்த
பட்டமங்கல வைத்திலிங்கதொண்டமான்
225 வருடங்களுக்கு முன்பு கள்ளர்நாடான வல்லநாட்டு வைத்திலிங்க தொண்டைமான் சிலையை திருப்பத்தூர் கோட்டை கருப்பர் கோவிலுக்குள் சிலை நிறுவியவர் படமாத்தூர் கெளரி வல்லபதேவர். இதே போல பட்டமங்கலம் ஐயனார் கோவிலிலும் வைத்திலிங்க தொண்டைமானுக்கு சிலை உள்ளது.
புதுக்கோட்டை கல்வெட்டு எண் 595, மாறவர்மன் வீரப்பாண்டியன் காலத்தை சேர்ந்தது (கிபி 1352) , அக்கல்வெட்டில் " வல்லநாட்டு பூவரசகுடி அரையர்களில் சூரியத்தொண்டைமான் " என தொண்டைமான் குல அரையரை குறிக்கிறது.
பட்டமங்கல தொண்டமான்களின் முன்னோர் பற்றிய ஒலைச்சவடி தகவல்
"ஆனந்த சித்திரை கேரளசிங்கவள நாடு மேலதிருத்தி முட்டத்தும் பட்டமங்கலம் அடைக்கலம் சாத்த நாடு பெரிய அம்பலம் சூரியத் தொண்டைமான், 1. வைத்தியலிங்க தொண்டமான் 2. ஆனைகாத்த தொண்டமான் 3. ரகுபதி தொண்டமான் 4. முத்தழகு தொண்டமான் 5. ராமசாமி தொண்டமான் 6. வெங்கடாசலத் தொண்டமான் 7. அரண்மனை அம்பலம் ஆறுமுகம் சேர்வை 8. பட்டமங்கலம் தேவாலயம் பிர்மாலயம் சிவாலயம் பொருந்திய மதியாத கண்ட விநாயகர் அட்டமாசித்தி நவயடிக் காளியாகிய அழகு சௌந்தரி அம்மன் அய்யனார் பந்தி கிராம தேவதைகள் விருந்தி பண்ணுகிற வழக்கம்”
கள்ளர் மரபை சேர்ந்த
வாச்சார், நாட்டார், ராஜாளியார், வெட்டியார்
கள்ளர் மரபை சேர்ந்த
பனங்கொண்டார், பழங்கொண்டார்,
புதுக்கோட்டை
தென்னங்குடி நா.சுந்தரராச நாட்டார்
கள்ளர் மரபை சேர்ந்த
பஞ்சு தேவர்
கள்ளர் மரபை சேர்ந்த
மண்டையூர் முருகன் கோயில் திருப்பணிக்கு உதவிய
கள்ளர் மரபை சேர்ந்த
பனங்கொண்டார்கள் / நாட்டரையர் / பேதிரியார் / சோதிரியர்/ நாவளங்கியர் / தேவர்/ சோழங்கதேவர் / அரசாண்டார் / தாளதியார்/ ராங்கிப்பிரியர் / கண்டியர்/ கரடியார் / பாலுண்டார் / தனுஞ்சுரார்
மண்டையூர் ஐயனார் கோவில்
சோழத்தரையர் / தாளதியார் / பேத்தரையர் / பனங்கொண்டார் / தனஞ்சிறார்
நடுகல்லில் கள்ளர்
கன்னியம்பட்டு நடுகல்
உசிலம்பட்டி -திருமங்கலம் வழியில் இந்த ஊர் உள்ளது. இவ்வூரில் குதிரையில் அமர்ந்தபடி வலதுகையில் கத்தியும் இடதுகையில் கடிவாளத்தையும் பிடித்திருக்க, பணியாளர் குடைபிடிக்க எதிரில் ஒரு பெண் உள்ளார். குதிரையில் இருந்தபடியே இக்கள்ளர் மாண்டார் போலும். இந்நடுகல் அருகேயே மற்றோர் நடுகல்லில் குதிரையில் வீரனும், அவன் தலைக்குமேல் குடையும் வலது-இடமாக இரு பெண்களும் உள்ளனர் அவர்கள் இவனின் மனைவியராவர். மக்கள் அச்சிற்பத்தை "கள்ளக்காமன்"என்று வழிபடுகின்றனர்.
பட்டவன் சாமி நடுகல்
சொக்கத்தேவன்பட்டி பகுதியில் 7 நடுகற்கள் கள்ளர்களால் வணங்கப்படுகின்றன. அருகிலுள்ள தோட்டப்பநாயக்கனூர் பட்டவன்சாமி நடுகல்லும் கள்ளர்களால் வணங்கப்படுகிறது. போருக்கு சென்றால் எனக்கு என்ன கிடைக்கும்? என அவன் கேட்க ,. அதற்கு மக்கள் உன்னை தெய்வமாக வழிபடுவார்கள் என அரசனின் பதிலுரையை ஏற்று "பட்டவன்"சாமியானான் என்று இந்நடுகல் பற்றி அங்கே சொல்லப்படுகிறது.
குமரக்கோவில் நடுகற்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு தென்கிழக்கே குமரக்கோவில் எனும் ஊருள்ளது. இவ்வூரில் குருநாதன் கோயிலில் நான்கு நடுகற்கள் காணப்படுகின்றன. நடுகற்களின் மேற்பகுதியில் திருவாசி போன்ற அமைப்பு சிங்கமுகத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இவற்றை புத்தூர் மற்றும் நல்லூர்த்தேவன்பட்டியிலுள்ள கள்ளர் சமூகத்தவர் வழிபடுகிறார்கள்.
மலைப்பட்டி நடுகற்கள்
உசிலம்பட்டிக்கு தென்கிழக்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் மலைப்பட்டி என்ற ஊரில் திரு. சிவனாண்டித்தேவர் அவர்களின் பரம்பரை சொத்தான ஒரு தோட்டத்தில் மூன்று நடுகற்கள் காணப்படுகின்றன. மூன்று நடுகற்களிலும் வீரர்கள் குதிரை மீதமர்ந்திருக்க பணியாளர்கள் குடைபிடிக்க இச்சிற்பங்கள் உள்ளது. இவற்றை அவர் தமது முன்னோர்களின் சிற்பமாக வழிபட்டுவருகிறார்.
புதுப்பட்டி நடுகல்
புதுப்பட்டி எனும் ஊரில் உள்ள நடுகல் ஒன்று உச்சியில் சிங்கமுகத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பாயும் குதிரையின் மீது வீரன் வலக்கையில் வாள் மற்றும் இடக்கையில் கடிவாளம் பிடித்தபடி இருக்க, பணியாளன் குடைபிடிக்க இரு பெண்களுடன் காணப்படுகிறான். வாலாந்தூர் மற்றும் பாப்பாபட்டி மக்களுக்கிடையே உயிர் விட்ட கள்ளராக அவனை வழிபடுகின்றனர்.
கண்ணனூர் நடுகற்கள்
உசிலம்பட்டிக்குகிழக்கே 21கி.மீ.தொலைவில் செக்கானூரணி உள்ளது. இவ்வூருக்கு 3கி.மீ தூரத்தில் "பட்டசாமி" என்ற பெயரில் இரண்டு நடுகற்கள் உள்ளன. ஒருவீரன் வலக்கையில் குறுவாளினை ஏந்த, இடக்கை மார்பின் மீதுள்ளது. இரண்டாவது நடுகல்லில் வீரன் உயரம் குறைந்தவனாக உள்ளான். வலக்கையில் குறுவாளினையும்,இடக்கையில் வேலேந்தியும் உள்ளான். இரண்டு நாய்களின் உருவங்களுமுள்ளன. கொலையுண்ட சகோதரர்களாக இவர்கள் அப்பகுதி மக்களால் குறிப்பிடப்படுகின்றனர். தேவர் சமூகத்தவர் வழிபடுகின்றனர்.
குதிரைக்களவு
ஆநிரைக்களவு, மறித்தொறுக்களவு,எருமைத்தொறுக்களவு போல 17-18 ம் நூற்றாண்டில் குதிரைக்களவை பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களுக்கெதிராக தெற்கத்திக்கள்ளர்கள் செய்துள்ளனர். ஒருசில கள்ளர்கள் குதிரைக்களவின்போது பீரங்கி துப்பாக்கி குண்டுகளால் தங்கள் உடலுறுப்புகளை இழந்தனர். இதனை நொண்டி நாடக இலக்கியம் குறிப்பிடுகிறது.
தருமபுரி நடுகல்
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பாலவாடி எனும் ஊரில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (நடு. பக்.227)
ஸ்ரீ புருச பருமற்கு யா / ண்டு பத்தாவது பெரும்(பா) / ண முத்தரைசர் கங்கரை(சா)ள்ப் பாகற்றூர்த் தொறு "அருங்கள்வர்" கொண்ட ஞான் / று மீட்டுப் பட்டார் நொ / ச்சி சாத்தன் க(ல்)
கட்டாணை எனும் ஸ்ரீ புருசனுடைய பத்தாவது ஆட்சி ஆண்டில் முத்தரையரான பெரும் பாண கங்க அரைசர் ஆளும் பாகற்றூர் ஆநிரைகளை அருங்கள்வர் எனும் கூட்டத்தார் கவர்ந்து கொண்ட போது அவற்றை மீட்டு வீரசாவடைந்த நொச்சி சாத்தன் நினைவில் நட்ட நடுகல் இது. நொசசி சாத்தன் எவ் ஊரன், எந் நாடன், எவருடைய படைஆள் போன்ற செய்திகள் கல்வெட்டில் இல்லை.
நடுகல் கல்வெட்டு சொல்லும் வாண்டையார்!
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் காட்டேரி என்ற ஊரில் அமைந்த 10 ஆம் நூற்றாண்டு நடுகல் இக்கால் வேலூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. (நடு. பக். 245)
ஸ்வஸ்தி ஸ்ரீ கோவீர பாண்டியனை / முடித்தலை கொண்ட / கோப்பரகேசரி பருமற்கு / யாண்டு நாலாவது பானைச் சுணையைப் பூத்து வாண்டை வந்தழித்த விடத்து ஒந் / டப்படுத்து எதிரே பத்தரம் மு / ருவிப் பட்டினத்துப் பட்டா / ன் தோவி டென்.
ஒண்ட - பதுங்கி, மறைந்து,ஒளிந்து; பத்திரம் - குற்றுவாள், அம்பு; பட்டினம் - கடற்கரை ஊர், காவிரிப் பூம்பட்டினம்.
சோழன் ஆதித்த கரிகாலன் உடைய நான்காம் ஆட்சி ஆண்டில் (கி.பி.954) சோழனுக்குப் படைத் தலைவனாய் இருந்த பூத்து வாண்டை என்பவன் பானைச் சுணை எனும் ஊர் மேல் படை கொண்டு வந்து அழித்த இடத்தில் மண்ணோடு மண்ணாகப் பதுங்கிப்படுத்து கொண்டிருந்த தோவிடன் என்ற படைஆள் வாண்டைப் படை தனக்கு அருகே வந்ததும் திடீரென்று எழுந்து திகைப்புற எதிரே தோன்றி குற்றுவாளை உருவிப் போரிட்டு கடற்கரை ஊரான காவிரிப்பூம்பட்டினத்தில் வீர சாவடைந்தான்.
கள்ளர்குலத்தில்வாண்டையார் என்ற பெயருடையோர் இன்றும் உள்ளனர். இவர்களுடைய முன்னோர் சோழப் பேரரசில் படைத்தலைவராய் பொறுப்பில் இருந்து உள்ளனர். காவிரி கடலில் கலக்கும் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது கடற்கரை ஊரான காவிரிப் பூம்பட்டினம். அத்து என்ற சாரியை பூம்புகாரில் என்று பொருள் தருவதால் கடல் கொண்ட பின் சிற்றூராகிப் போன புகாரின் ஒரு அண்டைப் பகுதியில் பானைச் சுணை என்ற ஊர் இருந்து உள்ளது எனலாம். எனவே போர் சோழ நாட்டில் நடைபெற்று உள்ளது. ஆனால் மாண்ட தோவிடன் வாணியம்பாடி வட்டம் காட்டேரி ஊரைச் சேர்ந்தவன் என்பதால் அவன் நினைவில் இந் நடுகல் அவன் உறவினரால் அங்கு நடப்பட்டது. எனினும் தோவிடன் யார் சார்பில் போரிட்டான் என்ற செய்தி கல்வெட்டில் குறிக்கப்படவில்லை.
திருவண்ணாமலை மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டம்
கள்ளர் மரபை சேர்ந்த
வீரத்தேவன் (எ) பட்டவன் சாமி
கிபி1311ல் பாண்டியர்களை வீழ்த்த டெல்லி சுல்தானாகிய அலவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்கபூர் மதுரைக்கு பெரும்படையுடன் வருகிறார்.
அப்படி மாலிக்கபூர் மதுரைக்குள் நுழையும் முன் எல்லையில் கள்ளர்குல தளபதிகளான வீரத்தேவர்,கழுவத்தேவர் இருவரும் மாலிக்கபூர் படையுடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர்.
அப்படி உயிர் தியாகம் செய்த இருவருக்கும், போரில் பட்டு இறந்ததால் பட்டவன் என்கிற பெயரில் அந்த வட்டாரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களும் நடுகல் எடுத்து கடவுளாக வணங்கி வருகின்றனர்.
அந்த நடுகல்லில் வீரத்தேவர்,கழுவத்தேவருக்கு வலது கையில் வாளும்,இடது கையில் வளரியும் வைத்துள்ளனர்.
இன்றும் மதுரை கீழக்குயில்குடி சென்றால் அங்குள்ள மலையடி அய்யனார்,கருப்பு கோவிலில் இவர்களுடைய நடுகல்லை பார்க்கலாம்.
இதில் இன்னொரு கவனிக்ககூடிய விடையம் என்னவென்றால் கோவிலில் பாண்டிய மன்னனின் பழமையான சிலையை அந்த ஊரில் பாண்டியராஜன் சாமி என்று பூசை செய்து வணங்கி வருகின்றனர்.
கள்ளர் நாடான கீழக்குயில்குடியில் கள்ளருக்கு சொந்தமான பழமையான பாண்டியர் கோவிலில் இருக்கும் மன்னன் பாண்டியராஜனும் அவன் மகன் உக்கிரபாண்டியனும்
திருச்சி ஆலம்பாக்கம் நடுகல்
தந்திநாட்டில் உள்ள ஆலம்பாக்கம் எனும் ஊரில் உள்ள சிவன்கோவில் கி.பி.10 ம் நூற்றாண்டு முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டுக்களின்படி இவ்வூர் தந்திவர்ம மங்கலம் என்றும் கோவிலின்பெயர் அமரேஸ்வரப்பெருமாள் கோயில் எனக்கூறுகிறது.
கள்ளர் பட்டையர்கள்;
சாய்ன சேமர்
முக்குடி சேப்ளார்
சேனப்ப சேப்ளயார்
காவேரியார்
கச்சராயர்
காவேரியார்
வல்லடியார்
அடக்கப்பாச்சியார்
வாண்டையார்...
புல்லி வம்ச நடுகல்
புல்லி வம்சத்தினன் இறந்ததை கூறுகிறது (பட்ட கல்), மதுரை மேலூர் சூரக்குண்டில் கள்ளரில் புல்லி வம்சத்தினர் என்ற ஒரு பிரிவினர் இன்றும் உள்ளனர். புல்லிகார் என்னும் பெருங்குடும்பம் கள்ளந்திரியில் உண்டு.
காலத்தால் முற்பட்ட கூடலூர் தமிழிக் கல்வெட்டு
வரலாற்றுச் சிறப்புமிக்க புலிமான் கோம்பை கல்வெட்டுகளைச் சமீபத்தில் காண நேர்ந்தது. இக்கல்வெட்டுகளைக் கண்டெடுக்கும் வரையில் முதல் தமிழிக் கல்வெட்டாக சங்ககாலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்தைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டைக் கருதி வந்தனர். ஆனால் 2006 ல் தேனிமாவட்டத்திலுள்ள புலிமான்கோம்பை (புள்ளிமான் கோம்பை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டுகள் பொஆமு 4 ம் நூற்றாண்டு வரை பழமையானது என கருதப்படுகிறது.
'கல்
பேடு தீயன் அந்தவன்
கூடல் ஊர் ஆகோள்'
என்றுள்ளதுகல்வெட்டு. சங்கப்பாடலில் வரும் ஆநிரை கவர்தலே இங்கு 'ஆகோள்' என்று சுட்டப்படுகிறது. கூடலூரில் நடந்த இவ்வாநிரை கவர்தல் போரில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவன் என்ற வீரனுக்கு எடுப்பித்த நடுகல் இது. இக்கல்வெட்டுகள் இன்று தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கல்வெட்டியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளன.
தேனீ கூடலூர் என்பது கள்ளர்கள் மட்டும் வாழும் ஊர். இந்த பகுதி கள்ளர்கள் பண்டைய காலம்முதல் ஆநிரை கவர்தலில் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர் நகராட்சி பேயத்தேவர் பேரன் குபேந்திரன் தேவர் இலவசமாக வழங்கியது
கீழக்கோட்டை குப்பான் அம்பலகாரரின் நடுகல்
குண்ணன்டார் கோயில் அரிகண்டம் நடுகல்
குண்ணன்டார் கோயில் வடமலை மற்றும் தென்மலை நாட்டு கள்ளர்கள் வாழும் முக்கிய ஊர் எனவும், இந்த கோயிலில் தான் நாட்டுக்கூட்டங்கள் நடைபெறுவதாகவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு கூறுகிறது. கிபி 8 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட குடைவரை கோயில் உள்ளது.இக்கோயிலின் வலது புறம் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் ஒரு அரிகண்டம் நடுகல் உள்ளது. ''வீரர்கள், போரில் தன் அரசனுக்கு வெற்றி கிடைக்கவும், தன் தலைவன் உடல் நலம் பெறவும், ஊரின் நன்மைக்காகவும் காளி, கொற்றவை போன்ற தெய்வங்களை வேண்டிக்கொண்டு, அக்கோயில் முன்பு வாளால் தங்கள் தலையை தாங்களே அறுத்து அத்தெய்வங்களுக்கு காணிக்கையாகக் கொடுப்பர். இதனை கல்வெட்டுகள் 'தூங்குதலை குடுத்தல்' என்கின்றன. இந்தகைய வழிபாடு தலைப்பலி, அரிகண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. சிற்பத்தில் ஒரு வீரன் தனது கழுத்தை தானே அறுத்துக்கொள்வதை போன்று செதுக்கப்பட்டுள்ளது. வீரன் இடுப்பில் போர் வாள் உள்ளது. தற்காலத்தில் வழிபாடுகள் நடைபெறுவதாக தெரியவில்லை.
தும்மக்குண்டு நடுகற்கள்
தும்மக்குண்டு கள்ளர் நாட்டில் வாள்,வேல், வளரியுடன் இருக்கும் கள்ளர் வீரர், வீராங்கனைகள்.
காவல் தெய்வம் மாவீரர் வங்காருதேவர்
16 ஆம் நூற்றாண்டில் பிறமலை நாட்டில் இருக்கும் பாப்பாபட்டி நாட்டில் பத்துதேவர் வகையாறவின் ஒன்பதாவது தேவா் கீரிதேவா் வகையாறவில் முத்த மகன் வங்காருதேவர்.இன்றும் கீரிப்பட்டியில் கோவில் கட்டி வணங்கி வருகிறார்கள் அவரது வகைறாக்கள். இவர் வளரி வீசுவதில் வல்லவராக திகழ்ந்தவர். இவர் கன்னிவாடி சண்டையில் வளரி வீசியதாக வழக்கு கதைகள் கூறுகின்றன.
மாவீரர் செம்பொன்மாரி ஆறாலதேவன்
மன்னர் கிழவன் சேதுபதியின் தளபதிகளில் ஒருவரான ஆறாலதேவன் திருமயம், கீழாநிலை சோனார் கோட்டைகளின் பொறுப்பாளராகப் பணியாற்றியவர்.ஆறாலங் கருப்பரை குலதெய்வமாகக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர் செம்பொன்மாரி ஆறால தேவன்!
வாடிவாசல் வீரன் அழகாத் தேவன்
சொரிக்காம்பட்டி கிராம எல்லையில் தோட்டி மாயாண்டி காவல் நிற்க... அழகாத்தேவன் கருவறையில் காளையோடு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்.
கீழக்குயில்குடி தொட்டையத்தேவன்
தன்னுடைய நேர்மைக்காக வீழ்த்தப்பட்டு விதைக்கப்பட்ட ஒரு வீரனின் வரலாறு
வீரணன் அம்பலகாரர்
திருவெறும்பூர் குவளக்குடி நடுகற்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா குவளக்குடி ஊராட்சி வீதிவடங்கம் கிராமத்தில் உள்ளது அரசாயி அம்மன் கோவில் சமேத இளங்காபுரி கருப்பணசாமி கோவில், இவ்வூரில் மூன்று நடுகல் உள்ளது. இங்கு மொத்தம் 3 நடுகற்கள் காணப்படுகிறது,இவற்றை ஊரார் பட்டவன் சாமி என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். இவற்றில் இரண்டு நடுகற்கள் 2 அடி உயரத்திலும் மற்றொரு நடுகல் 3,½ அடி உயரத்திலும் காணப்படுகிறது.
நடுகல் அமைப்பு
முதல் நடுகல்
வலதுகையில் வாளும்,இடதுகையில் கேடயம் ஏந்தியும்,இடையில் அரையாடை,காலில் கழல் அணிந்தும்,அள்ளி முடிந்த கூந்தலை வலதுபுறம் சாய்த்தவாறு உள்ளார். கள்ளர் காது வளர்த்து அதில் பத்ரகுண்டலங்கள் அணிந்துள்ளார்,
இரண்டாம் நடுகல்
இடதுகையில் வில்லினை பிடித்து வலதுகையில் உள்ள அம்பினை தொடுக்கும் ஓடுநிற்கை எனும் ஆலீடாசன நிலையில் உள்ளார்.தலைமுடியை அள்ளி முடிந்து மேல்நோக்கிய கொண்டையாய் காட்டியுள்ளனர், கள்ளர் காது வளர்த்த நிலையில் உள்ளார்.
இவ்விரு வீரர்களும் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரராகலாம்.
மூன்றாம் நடுகல்
கோவில் வளாகத்திற்கு சற்று வெளியே இந்நடுகல் உள்ளது. இடதுகையில் கட்டாரியும், வலதுகையில் வாளினையும் கொண்டு முன்னோக்கிச் செல்லும் ஓடுநிற்கை எனும் ஆலீடாசனத்தில் இவ்வீரர் உள்ளார். மற்ற இரு நடுகற்களை விட இவர் சற்று காலத்தால் மூத்தவராக உள்ளார். கள்ளர் காதுவளர்த்த நிலையில், தலைமுடியை மேல்நோக்கிய கொண்டையாய் அமைத்துள்ளனர்.
இவ்வீரர் நடுகல் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம்.
இம்மூன்று வீரர் நடுகற்களும் இப்பகுதியில் நிகழ்ந்த பூசலில் இறந்துபட்டவர்களுக்கு எழுப்பட்டிருக்கக்கூடும்
காதலி நாச்சியாரவர்கள்
கிழவன் சேதுபதியின் களத்தூர் செப்பேடு கிபி 1709 ல் வெளியிடப்பட்டது. இச்செப்பேட்டில் " ரெகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் தர்மபத்நியான ராய தொண்டைமானார் புத்ரி ரெகுநாத ராய தொண்டைமானார் சகோதரியான காதலி நாச்சியாரவர்கள் " இராணியார் என குறிக்கப்படுகிறார்.
கிபி 1709ல் தேர்போகி நாட்டிலுள்ள களத்தூருக்கு " ரெகுநாத காதலி ஆயிபுரம்" என்று பெயர் மாற்றி 55 பாகங்களாக பிரித்து 55 அந்தணர்களை குடியேற்றி கொடையளித்த செய்த இந்த செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. *இவ்வூர் இக்காலத்தில் டி.களத்தூர் என அழைக்கப்படுகிறது. (தொண்டைமான் செப்பேடுகள் - பக் 31. த.தொ.து.வெ)
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் கல்வெட்டில்
திருமங்கையாழ்வார்
கல்வெட்டுகளில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் தங்களை கள்ள திருமங்கையாழ்வார் மந்திரியினுடைய (சோழனின் மந்திரியாகிய) வங்குஷம் என்றும், இந்திர குல வங்குஷம் என்று கூறுகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் கோயில் தல வரலாறு நூலில் கள்ளர் பட்டங்கள் . 1967 ஆம் ஆண்டு.
பங்கு உத்திர திருவிழாக்குழுவினர்
கள்ளர் மரபை சேர்ந்த
நாட்டார், சோழகர், மங்களார், சேதிராயர், நாட்டார், சென்னான்டார், அங்கராயர், சோழங்கத் தேவர், கட்டவெட்டியார், நாட்டரையர்
புதுவிடுதி கோவிந்தராஜ் காடுவெட்டியார்
கள்ளர்_பட்டப்_பெயர்களும்_அரச_மரபினரும்
கிபி1920 ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று, பாப்பா நாடு மன்னர் ராவ் பகதூர் சுவாமிநாத விஜயதேவர் ஒருங்கினைபில், அவருடைய மகன் இளைய மன்னர் ராவ் பகதூர் ராஜப்பா விஜயதேவர் அவர்களின் பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டது.
குற்றப்பரம்பரை சட்டம் உச்சம் திட்ட கால கட்டத்தில், சோழர் காலம் தொட்டு உரிய ஆவணம் சமர்பிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட சங்கமாக திகழ்ந்தது.
100 வருடங்களுக்கு முன்பே, ஆதாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இதன் நிர்வாகிகளும், அவர்தம் சோழர் பட்டங்களையும் காணலாம்:-
1. மேன்மை தாங்கிய புதுக்கோட்டை அரசர் இராஜாஶ்ரீமார்தாண்ட பைரவ பல்லவராய தொண்டைமான்
2. மேன்மைதாங்கிய புதுக்கோட்டை இளைய மன்னர் இராவ் பகதூர் துரை ராஜ தொண்டைமான்
3. மாகாராஜ ராஜாஶ்ரீ ராவ் பகதூர் சுவாமிநாத விஜயதேவர் (Royal family of pappanad)
4. மகாராஜ ராஜாஶ்ரீ ராவ் பகதூர் அய்யாசாமி வாண்டையார் MLC (Royal family of Poondi)
5. மகாராஜ ராஜாஶ்ரீ ராவ் பகதூர் அண்ணாசாமி தேவர் (Royal family of Ukkadai Thevar)
6. மகாராஜ ராஜாஶ்ரீ இராஜப்பா விஜயதேவர் (Royal family of pappanad)
7. மாகாராஜ ராஜாஶ்ரீ வீரைய்யா வாண்டையார் (royal family of Poondi)
8. மகாராஜ ராஜாஶ்ரீ குமாரசாமி மேற்கொண்டார் (Royal family of kunampatti)
9. மகாராஜ ராஜாஶ்ரீ சவ்வாஜி விஜயரகு நாத கிருஷ்ணசாமி மெய்க்கண் கோபாலர் (Royal family of singavanam)
10. உயர்திரு.பொண்ணன் களத்தில் வென்றார்
11. உயர்திரு. பாலகோதண்டபானி சேதுராயர் (இளங்காடு)
12. உயர்திரு. சுந்தர்ராஜ கண்டியர்
13. உயர்திரு. நல்லமுத்து நாட்டார்
15. உயர்திரு. நாரயணசாமி தென்கொண்டார்
16. உயர்திரு. கனகசபை சக்கரப்பா நாட்டார்
17. உயர்திரு. கந்தசாமி காங்கேயர்
18. உயர்திரு. அன்னைய்யா விஜயதேவர்
19. உயர்திரு. வெங்கடாசல தேவர்
20. உயர்திரு. சிங்காரவடிவேலு வன்னியமுண்டார்
21. உயர்திரு. ஆதிமூல வாண்டையார்
22. உயர்திரு. சிங்காரவேலு நாட்டார்
23.. உயர்திரு. அன்புநாத பிள்ளை
24. உயர்திரு. அப்புராஜா பிறையர்
25. உயர்திரு. குப்புசாமி வாண்டையார்
26. உயர்திரு. முத்துசாமி வல்லத்தரசு
27. உயர்திரு. வஜ்ரவேலு கோட்டையாண்டார்
28. உயர்திரு. முத்துச்சாமி வல்லத்தரசு
29. உயர்திரு. திருவேங்கட பன்றிகொண்டார்
30. உயர்திரு. கணபதி சேதுராயர்
31. உயர்திரு. சிங்காரவேல் அங்குராயர்
32. உயர்திரு. அய்யாவு சேதுராயர்
33. உயர்திரு. மருதப்பா சேதுராயர்
34. உயர்திரு. கிருஷ்ணசாமி சேதுராயர்
35. உயர்திரு. சுப்ரமணிய சேதுராயர்
36. உயர்திரு. செளமிய பிரகாஷ சேதுராயர்
37. உயர்திரு. முருகய்யா சேதுராயர்
38. உயர்திரு. பால சுப்ரமணிய சேதுராயர்
39. உயர்திரு. நடராஜ மாணிக்க நாட்டார்
40. உயர்திரு. சதாசிவ சேதுராயர்
41. உயர்திரு. முத்துக்குமார் சேதுராயர்
42. உயர்திரு. கிருஷ்ணசாமி சேதுராயர்
43. உயர்திரு. ராஜகோபால் லெக்கய்ய கொல்லத்தரையர்
44. உயர்திரு. துரையய்யா சேதுராயர்
45. உயர்திரு. முத்துசேவுக சேதுராயர்
46. உயர்திரு. அய்யாவு சோழகர்
47. உயர்திரு. நாரயணசுவாமி நாட்டார்
48. உயர்திரு. வைய்யாபுரி சேதுராயர்
49. உயர்திரு. பொன்னுசாமி கோட்டைத்திரியர்
50. உயர்திரு. நல்லு கோட்டைத்திரியர்
51. உயர்திரு. முத்து கூழாக்கியார்
52. உயர்திரு. அருணாச்சல பாப்புரெட்டியார்
53. உயர்திரு. முருகய்யா நாட்டார்
54. உயர்திரு. கருப்பையா நாடாள்வார்
55. உயர்திரு. மாரிமுத்து களத்தில் வென்றார்
56. உயர்திரு. நாராயணசாமி கொல்லத்தரையர்
57. உயர்திரு. முத்துகருப்ப கொல்லத்தரையர்
58. உயர்திரு. முத்துவேலு கொல்லத்தரையர்
59. உயர்திரு. கந்தர் நாடர்
60. உயர்திரு. விரு சேதுராயர்
61. உயர்திரு. முருகய்யா கொடும்புராயர்
62. உயர்திரு. செளமிய பிரகாஷ நாட்டார்
63. உயர்திரு. சிங்காரவேலு நாட்டார்
64. உயர்திரு. தியாகராஜ நாட்டார்
65. உயர்திரு. சிங்காரவேலு வன்னியமுண்டார்
66. உயர்திரு. ஆறுமுக நாட்டார்
67. உயர்திரு. திருஞானசம்பந்த வீரமுண்டார்
68. உயர்திரு. அமிர்தலிங்க விசுவராயர்
69. உயர்திரு. கோபால்சாமி குருகொண்டார்
70. உயர்திரு. இராமநாத மேற்கொண்டார்
71. உயர்திரு. செல்லபெருமாள் நாடர்
72. உயர்திரு. ஆரோக்கியசாமி பிள்ளை
73. உயர்திரு. திருமேனி வாண்டையார்
74. உயர்திரு. துரைசாமி சோழகர்
75. உயர்திரு. கோவிந்தசாமி ஆதித்ய நெடுவாண்டார்
76. உயர்திரு. சண்முகசுந்தர நாயகர்
77. உயர்திரு. மனுவேல் வாண்டையார்
78. உயர்திரு. வெங்கடஜல தேவர்
79. உயர்திரு. அழகியமாஷ் நாட்டார்
80. உயர்திரு. தேவாசீர்வாதம் மழவராயர்
81. உயர்திரு. சாலமன் தென்கொண்டார்
82. உயர்திரு. அருளானந்தம் பிள்ளை
83. உயர்திரு. அபிஷேக நாதன் மூவரையர்
84. உயர்திரு. சின்னப்பன் வாணாதிராயர்
85. உயர்திரு. சாமுவேல் கண்டபிரியர்
86. உயர்திரு. அன்புநாத வாணாதிராயர்
87. உயர்திரு. மகாலிங்க வாண்டையார்
88. உயர்திரு. சங்கலிங்க சோழகர்
89. உயர்திரு. வைத்தியலிங்க சோழகர்
90. உயர்திரு. மாணிக்க சோழகர்
91. உயர்திரு. ஆறுமுக விஜயதேவர்
92. உயர்திரு. இராமசாமி விஜயதேவர்
93. உயர்திரு. கன்னுசாமி சோழகர்
94. உயர்திரு. குமரப்ப சோழகர்
95. உயர்திரு. திருமேனி சோழகர்
96. உயர்திரு. விஸ்வலிங்க பொய்யுண்டார்
97. உயர்திரு. சுவாமி நாத விஜயதேவர்
98. உயர்திரு. அண்ணாசாமி பன்றிகொண்டார்
99. உயர்திரு. சதாசிவ வேந்தர்
100. அற்புதம் அப்பாஜி மண்கொண்டார்
101. உயர்திரு. வெங்கட்ராம நந்தியர்
கல்வெட்டில் கள்ளர் பட்டங்கள்
பட்டம் : காடவராயர்
பட்டம்: சிங்களராயர் சிங்களர், சிங்களார் என்ற பட்டமுடைய கள்ளர் மரபினர்
பட்டம் : அமரகொண்டார்
பட்டம் :கொங்கரயர்
பட்டம் :கிடாதிரையர்
பட்டம் :காளிங்கராயர்
பட்டம் : வாணதிரையர், வாணதிரியர், வாணாதிரியர் வாணாதிராயர் வாணரையர்
பட்டம் :விசயராயர், விசையராயர், விசராயர், விசுவராயர், விசுவரார்
பட்டம் :சேதிராயர்
பட்டம் :காங்கேயன்
இவ்வூர் காவலுடைய செனைப்பெருமாளான
குலொத்துங்க சோழ மூவரையர்
பட்டம் :சனவராயர் , சனகராயர்
பட்டம் : பாண்டுராயர் , பாண்டியர்
பட்டம் : குச்சிராயர்
தமிழ்ச் சுவடிகளின் நடராச குச்சிராயர் விளக்கம
சிங்கவள நாட்டு புன்னைநல்லூர் மாரியம்மன்
மரகதவள்ளி மாணிக்க குச்சிராயர்
பட்டம் : அங்கராயர்
பட்டம் : காடுவெட்டியார்
பட்டம் : நாட்டாழ்வார்
பட்டம் :பல்லவராயன்
பட்டம் :தொண்டைமான்
பட்டம் :கச்சிராயன்
பட்டம் : பல்லவாண்டார்
பட்டம் :ஈழத்தரையன்
திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் கல்வெட்டில் ஈழத்தரையர்
முனைவர் கல்பனா ஈழம்கொண்டார்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முனைவர் கல்பனா ஈழம்கொண்டார் அவர்கள் ஐயா செல்வம் ஈழம்கொண்டார் , திலகவதி அம்மையார் மகள் ஆவார். கணவர் மருத்துவர் சேக்கிழார் ஆவார்,
பட்டம் :மங்கலராயர் மங்கலர், மங்கலார் மங்கலண்டார் மங்கலாளர்
பட்டம் :கொழுந்தராயர் கொழந்தைராயர், கொழந்தராயர், கொழுந்தைராயர், கொளந்தைராயர்
பட்டம் :விருதுளார்
நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலிலும் வல்லநாட்டு கள்ளர்களின் நாட்டம்பலம் அதிகாரி என்ற பட்டமுடைய குடும்பம் மற்றும் வல்லநாடு பூவரசகுடி அம்பலம் குடும்பத்திற்கும் சிறப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.
பட்டம் :வல்லநாடு நாட்டரையார்
பட்டம் :மழவராயபண்டாரத்தார்
புனல்வாசல் ஜமீன் மழவராய பண்டாரத்தார்
பட்டம் :வல்லநாடு வல்லத்தரசு
பட்டம் :சோமாசியார்
வளரி ஆயுதம்
கள்ளர்களின் பெயராலேயே
“கள்ளர் தடி”
என்றே அழைக்கப்பட்டது. (தமிழ் அகராதி)
பட்டசாமி கோயில்
👇
கள்ளர் மரபை சேர்ந்த தொண்டைமான் மன்னர்கள் பயன்படுத்திய வளரி
👇