சனி, 9 நவம்பர், 2024

இருங்கோளர்‌ / இருங்களார்‌ வரலாறு ( Irungular History In Tamil)

 


கல்வெட்டில் இருங்கோளர்‌ என்பது  இருங்களார்‌ என்று மருவி உள்ளது. 



கோனாட்டுக் கொடும்பாளூர் இருங்களார் இருக்குவேள். ஈழத்துப்பட்ட சிறிய வேளான் மகளான வானதி(எ) வானவன் மாதேவியை இராஜராஜ சோழன் மணந்து கங்கையும் கடாரமும் கொண்ட மும்முடிச் சோழகன் பெற்ற களிறு என வரலாறு போற்றும். இராஜேந்திர சோழனைப் பெற்றெடுத்தார்...தந்தையும் மகனும்  கங்கைக் கரை நாடுகளையும்  முக்கடல்களுக்கு நடுவே உள்ள தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தையும் வென்று புலிக் கொடியின் கீழ் ஆட்சி செய்தனர்.

பூதிவிக்ரமகேசரியின்‌ மகன்‌ பராந்தகன்‌. இவனே பராந்தகன்‌ சிறிய வேளான்‌ எனப்‌ பெற்றான்‌. இவனைப்‌ பராந்தக இருங்கோளனாகிய சிறிய வேள்‌ எனவும்‌ பராந்தகன்‌ இருங்கோளர்‌ ஆதிய சிறிய வேள்‌ எனவும்‌ சிறிய வேளான்‌ எனவும்‌ கல்வெட்டுக்கள்‌ குறிப்பிடுகின்றன. இப்பராந்தகன்‌ சிறிய வேள்‌. இரண்டாம்‌ பராந்தகனின்‌ 9ஆம்‌ ஆண்டில்‌ இலங்கை மீது படை எடுத்துப்‌ போரில்‌ இறந்தான்‌. இராசாதிச்சி என்னும்‌ மனைவி வழியாகக்‌ குஞ்சரமல்லி, வேளான்‌ சுந்தரசோழன்‌ என்னும்‌ மக்களை உடையவன்‌. சோழ அரசனின்‌ சேனாபதி. பராந்தகன்‌ சிறிய வேளாயின திருக்கற்றளிப்‌ பிச்சன்‌ என்பதும்‌ இவன்‌ பெயரே என அறிஞர்‌ கருதுவர்‌.

கொடும்பாளூர்‌ வேளிர்‌ 'இருங்கோளர்‌' என்று கூறப்பட்டுள்ளனர்‌. (South Indian Inscriptions Vol. lil Ins. No. 11920) இதனால்‌ கொடும்பாளூர்‌ வேளிர்களைக்‌ குறிக்கும்‌. பெயர்களுள்‌ இருங்கோளன்‌ என்பது ஒன்று என்பது உறுதி. கொடும்பாஞூர்க்‌ குலத்தினரை, இருக்குவேள்‌, இளங்கோ வேள்‌ இருங்கோளர்‌ என்ற பெயர்கள்‌ குறிப்பிடப்படுகின்றன.


 





இருங்கோளர்‌ பிருதிபதி அமனி மல்லர்‌ என்ற சிற்றரசரின்‌ மனைவியும்‌ பொத்தப்பிச்சோழர்‌ சத்தியரையர்‌ என்பவரின்‌ மகளுமான மலையவ்வை தேவியார்‌ என்பவர்‌ திருமுதுகுன்ற முடைய மகாதேவர்ச்கு நந்தா விளக்கு எரிக்க 90 அடுகளும்‌, நந்தவனம்‌ வைக்கு மணலூர்‌ கிராமத்தில்‌ இரண்டு மா நிலமும்‌ கொடுத்துள்ளார்‌,



பொத்தப்பிச்சோழர்‌ கள்ளர் என்ற கல்வெட்டு  

கள்ளந் சந்தனான கொத்தப்பிச்சோழன்




பிள்ளையார்பட்டி கல்வெட்டில் இருங்கோளர்‌



வீரராசேந்திரனின்‌ 10ஆம்‌ ஆட்சி ஆண்டில்‌ கீரனூரில்‌ வரகீசுவரர்‌ கோயிலில்‌ குலோத்‌.துங்க சோழ இருங்கோளர்‌ என்பவர்‌ நட்டுவ  புறமாக நிலம்‌ வழங்கியதாகத்‌ தெரிகிறது.


வைய்குந்த நாடாழ்வார்‌ என்பவர்‌ ஒரு பூசலில்‌ இருங்கோளர்‌ என்ற குறுநிலத்தலைவர்‌ மற்றும்‌ அவர்‌ ஏவல்‌ வீரர்களால்‌ சுற்றி வளைக்கப்பட்டு உயிருக்குப்‌ போராடிக்‌ கொண்டிருந்த நேரத்தில்‌ உய்யக்கொண்டார்‌ படை போய்ச்‌ சண்டையிட்டு அந்நாடாழ்வாரைக்‌ காப்பாற்




ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற்‌ கோட்டத்து புரிசை நாட்டு சிவபுரத்திலுள்ள ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடைய மஹாதேவர்‌ கோயிலில்‌ திருநந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு அமணிவல்லவன்‌ ராஜராஜனான ராஜேந்திரசோழ இருங்கோளர்‌ தேவியார்‌ தேவன்‌ பொன்னாலியார்‌ என்பவள்‌ கொடையளித்த தொண்ணூறு ஆடுகளைப்‌ பெற்றுக்‌ கொண்ட திருவுண்ணாழிகை உடையார்களும்‌ சிவ பண்டாரிகளும்‌ 




மழபாடி தென்னவன்‌ மாதேவியார்‌, இருங்கோளர்‌ மகளார்‌ வானவன்‌ மகாதேவியார்‌, விழுப்பரையர்‌ மகளார்‌, பழுவேட்டரையர்‌ மகளார்‌ ஆகிய ஐவரும்‌, உத்தம சோழரின்‌ தாயாரான செம்பியன்‌ மாதேவியார்‌ பிறந்த நாளான சித்திரைக்‌ கேட்டை நாளில்‌, ஸ்ரீ கைலாசமுடையார்‌ கோயில்‌ சாசனபந்தச்‌ சதுர்வேதிபட்ட தானப்பெருமக்களிடம்‌, 905 கழஞ்சுப்‌ பொன்னை அளித்து பிராமணர்‌ உணவுண்ணச்‌ செய்த ஏற்பாட்டினைக்‌ குறிப்பிடுகிறது.


வீரராசேந்திர இருங்கோளர்‌ மனைக்கிழத்தி


கள்ளர் இருங்கோளர்‌ இந்திய சுதந்திரவிடுதலைப் போராளிகள்


சிவாஜி மனைவி களத்தூர் இருங்களார் மகள்












வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்