சனி, 19 பிப்ரவரி, 2022

திவான் பகதூர் சரவண பவானந்தம் பிள்ளை

திவான் பகதூர் சரவண பவானந்தம் பிள்ளை என்ற திவான் பகதூர் சரவண பவானந்தம் அமரக்கொண்டார்.



மன்னார்குடி விடுதலை போராட்ட வீரர் நடராஜபிள்ளை என்ற நடராஜ தென்கொண்டார், தமிழின் முதல் மருத்துவ அகராதியை தந்த மேதை "டி.வி.சாம்பசிவம் பிள்ளை என்ற டி.வி.சாம்பசிவம் மண்ணையார், நாகூர் தர்காவிற்கு பழனியாண்டி பிள்ளை சத்திரம் கட்டி தந்த பழனியாண்டி பிள்ளை என்ற பழனியாண்டி தொண்டைமான் வரிசையில் சரவண பவானந்தம் பிள்ளை என்ற திவான் பகதூர் சரவண பவானந்தம் அமரக்கொண்டார். தஞ்சையில் சில புகழ் பெற்ற கள்ளர்கள் சில 19 , 20 ஆம் நூற்றாண்டில் தங்கள் பட்டங்களை விடுத்து பிள்ளை என்று போட்டுக்கொண்டனர் . அதில் கரந்தட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் அதிகமா பிள்ளை பட்டத்தை பயன்படுத்தினர்.

தஞ்சை கரந்தட்டாங்குடியில் வாழ்ந்த திவான் பகதூர் சரவண பவானந்தம் பிள்ளையவர்களின் தந்தை முத்துசாமி பிள்ளை என்னும் முத்துசாமி அமரக்கொண்டார், தாய் சந்திரமதி. சிறு வயதிலேயே
நல்ல குணங்களுடன் வளர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கினார். உயர்கல்வி பயின்றார். வழக்கறிஞராக விரும்பி இங்கிலாந்து சென்று படிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் வைதிக மதப்பற்றுள்ளவராகிய இவரது அன்னையார் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. தாய் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் அயல் நாடு போகவில்லை.

அந்நாளில் நகரகாவற்படையின் உயர் அதிகாரி(போலீஸ் கமிஷனர்) கர்னல் டி.வெல்டன் ஸி.ஐ.இ என்பவர், கல்வியில் சிறந்த இவரை நகரகாவற்படையில் சேர்க்க விரும்பினார். போட்டி பரீட்சை ஒன்றை வைத்தார். அதில் எழுதியவர்களில் முதன்மையாய் தேறிய இவரை தாம் புதிகாக ஏற்படுத்திய குற்றவர்த்தமான விசாரணை வகுப்பில்(criminal intelligence department) தமது நேர்முக காரியஸ்தராக (உதவியாளராய்) நியமித்தார்.
பவானந்தம் பிள்ளை, தான் மேற் கொண்ட பணியில் பலரும் வியக்கும் வண்ணம் புகழ்பெற்றார்.அவர் தமது பணியில், மனம் தடுமாறாமை, நேர்பட ஒழுகல், நிர்வாக சாதுரியம் ஆகியபண்புகளுடன் விளங்கினார்.
இவர் சட்ட நூல்களை ஆராய்வதில் ஏற்பட்ட பெரும் விருப்பத்தால் அவற்றை நன்கு ஆய்ந்துணர்ந்த சட்ட அறிஞ்ராவர். சட்ட நூல்களை ஆராய்ந்து F.L ,B.L , சட்டப்பரீட்சை எழுதுபவர்களுக்காக 30 நூல்களை எழுதிப் பதிப்பித்துள்ளார்.

1904 ஆம் ஆண்டு முதல் 1912 வரை சென்னை நகரக் குற்ற வர்த்தமான விசாரணை வகுப்பு தலைவராக இருந்திருக்கிறார்.

வேல்ஸ் இளவரசரும், இளவரசியும் வந்தபோது மெய்காப்பாளராக இருந்து திறம்பட செயலாற்றியதால், விருது, பதக்கம் ஆகியவற்றை இளவரசரிடம் இருந்து பெற்றார். மிண்டோ பிரபுவும், ஹார்டிஞ்சு பிரபுவும் சென்னையில் தங்கியிருந்த போது அவர்களுக்கும் மெய்காப்பாளராய் இருந்து பாராட்டுப் பெற்று இருக்கிறார்.

32 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமை பற்றி பத்திரிக்கையில் இவரை புகழ்ந்து இருக்கிறார்கள். 1908 இல் உதவி ஆணையராகவும் (A. C), 1918 இல் காவல்துறையின் சென்னைத் துணை ஆணையராகவும் (D. C.) பணியாற்றியவர். இவர்தம் கடமையுணர்வையும், ஒழுங்கினையும் போற்றி, ஆங்கிலவரசு இவருக்குத் "திவான் பகதூர்" என்ற பட்டத்தை வழங்கியது.

இவர் சென்னை ஷெரிப்பாயும் விளங்கினார். நாட்டுமக்களின் நலம் கருதி பற்பல தொண்டுகள் ஆற்றி இருக்கிறார். அதனால் அவரை ’பரோபகாரப் போலீஸ் உத்தியோகஸ்தர் “எனப்பாராட்டி இருக்கிறார்கள்.

தமிழறிவுடன் ஆங்கில அறிவும் பெற்றவர். வேப்பேரியில் தௌடன் பேருந்து நிலையம் அருகில் பவானந்தர் கழகம் (Bavanantham Academy) உருவாக்கியவர். இந்நூலகத்தில் நாற்பதாண்டுகளாக இவர் சேமித்த நூல்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப்படிகள் பாதுகாக்கப்படுகின்றன. சட்டத் தேர்வுக்குப் பயன்படும் வகையில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இதன் வளர்ச்சிக்காகவும், தொண்டுகளுக்காகவும் தாம் ஈட்டிய பொருளை உயில் எழுதி அர்ப்பணம் செய்து இருக்கிறார். இவர் ஏற்படுத்திய கழகத்தின் நோக்கம் பலதுறைகளில் ஆராய்ச்சியும், பொது ஜன நன்மைக்கான ஞானத்தையும், கல்வியையும், நீதிநெறியிலும், உடற்கூற்றுத் துறையிலும் மக்களிடையிற் பரப்புதலும் ஆகும்.

இவரால் நிறுவபட்ட நூல்நிலையத்தில் 40 ஆண்டுகளாய் (1941ல்)இவரால் தொகுக்கப்பெற்ற பல்லாயிரம் நூல்கள், ஏட்டு வடிவிலும் கையெழுத்திலும் அச்சிலும் அமைந்தவை.தமிழ் நூல்கள் பலவற்றை இவர் பல வகைக் குறிப்புகளுடனும் ஆராய்ச்சி முகவுரைகளுடனும் பதிப்பித்து வெளியிட்டு தமிழுலகத்திற்கு தொண்டாற்றியிருக்கிறார்.

தமிழிலக்கணங்களில் தொன்மை வாய்ந்தனவும், சிறந்தனவுமாகிய தொல்காப்பியம் பொருளதிகாரம், (நச்சினார்க்கினியர் பேராசிரியர் உரையுடன்), யாப்பருங்கல விருத்தியுரை, இறையனாரகப்பொருளுரை , பேரகத்தியத்திரட்டு, இராமானுச கவிராயர் சங்கர நமச்சிவாயப் புலவர், சிவஞான முனிவர் முதலிய உரையாசிரியர்களின் உரைகளைத் தழுவி எழுதப்பட்ட நன்னூல் காண்டிகையுரை முதலியவற்றை இவர் தம் பொருளைக் கொண்டு வெளியிட்டிருக்கின்றார்.

பவானந்தர் கழகம் சார்பில் பேரகத்திய விருத்தி, தொல்காப்பியம் – பேராசிரியர், நச்சினார்க்கினியர் உரை, யாப்ருங்கல விருத்தியுரை, பழைய உரைகளைத் தழுவி நன்னூலுக்கு உரை, வீரசோழியம், நம்பியகப்பொருள், இறையனார் களவியல் உரை ஆகிய நூல்கள் தரமான அச்சில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியில் பவானந்தருக்கு உற்றுழி உதவும் அறிஞர் குழு துணைசெய்துள்ளமையை இங்கு நினைத்தல் தகும். கா.ரா.கோவிந்தராச முதலியார், மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை உள்ளிட்டோர் இம்முயற்சியில் துணைநின்றுள்ளனர். நாடகவியல் விளக்கம், பரதசாத்திர விளக்கம், வேதாந்த சித்தாந்த தத்துவ ஞானம், நீதிக் கவித்திரட்டு முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். அரிச்சந்திரன், காணாமற் போன கணையாழி, பாதுகாப் பட்டாபிசேகம், சகுந்தலை உள்ளிட்ட நூல்களும் இவர்தம் படைப்புகள் என்று அறியமுடிகின்றது (வாழ்வியற் களஞ்சியம்,தொகுதி:12, பக்கம் 191). தமிழ் ஆங்கில அகராதி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இவரால் இயற்றப்பட்ட நாடகங்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் பல. இவர் இயற்றிய நாடகங்கள் இலண்டன் மாநகரத்தில் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி, மேரி மகாராணியார் முன்னிலையில் நடித்துக் காட்டப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழக்த் திராவிட வாசக சங்கத்திற்குத் தலைவராயும் பல்கலைக் கழக அதிகாரிகளால் நியமிக்கப் பட்ட திராவிடச் சொற்றொடராக்கச் சங்கத்தின் அங்கத்தினாராயும் இருந்திருக்கிறார். தென்னிந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் சபாநாயகருக்குப் பிரதிநிதியாய் இருந்திருக்கிறார். இவர் இயற்றிய நூல்களில் பல பல்கலைக் கழகச் சார்பில் நடைபெறும் கல்லூரிகளின் மாணவர்களுக்கும் உயர்தரப் பாடசாலைகளிற் பயிலும் மாணவர்களுக்கும் பாட புத்தகங்களாக இருந்தன.. இவர் இயற்றிய வாசக பாடங்கள் இளஞ்சிறார்களுக்கு பயன்பட்டு வருகின்றன.

இவர் தலைவராயும், அங்கம் வகித்து தொண்டாற்றிய கலைக் கழகங்களும் சபைகளும் பலவாகும். இவருடைய பக்திமிகுந்த பரிசுத்தமான பிரம்மசரிய வாழ்க்கையும், இனிய குணமும், சிறந்த கலையுணர்வும், வசீகரத்தோற்றமும்,, வணங்கிய வாக்கும், நுணங்கிய கேள்வியும், இவரை எவரும் விரும்பிப் பாராட்டும் பண்புகளாயிருந்தன.’கற்றோருடன் கலந்துரையாடி மகிழ்வதிலும் பேரின்பம் வேறில்லை; என்னும் கருத்துடன் இப்பெரியார் வாழ்ந்து வந்தமையின் , புலவருங் கவிஞரும் போற்ற வாழ்ந்தவர்,

அறிஞர் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை பவானந்தம்பிள்ளையைப் போற்றிப் பாடிய பாடல்:-
கண்டவர் வியக்கும் கவினுறு வடிவும்
கலைதெரி புலமையும் சீர்சால்
தண்டமிழ் மொழியில் ஆர்வமும் அதனைத்
தழைத்திடச் செய்தலின் விருப்பும்
கொண்டநற் பெரியோய்! சரவண பவானந்
தன்னெனும் கோதிலாய்! கருத்தின்
எண்டகு மிந்நூற் பதிப்பினை யீந்தேன்
ஏன்றருள் உரிமையா இனிதே.

தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பவானந்தம் பிள்ளை,1932-ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி இம்மண்ணுலகிலிருந்து மறைந்தார்.




தமிழின் முதல் மருத்துவ அகராதியை தந்த மேதை "டி.வி.சாம்பசிவம் மன்னையார், துரைக்கண்ணு அம்மையாரை மணம் செய்து கொண்டார். துரைக்கண்ணு அம்மையாரின் தாய்மாமன் சென்னை நகரப் போலீஸ் துணை ஆணையாளராக விளங்கிய ச. பவானந்தம் பிள்ளை ஆவார். இவர் மூலம் சென்னை நகரக் காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்கமர்ந்த சாம்பசிவம் மன்னையார், 1907இல் துணை ஆய்வாளராக்கப்பட்டார்.

(பாரதியின் 'இந்தியா' பத்திரிகைக்கு எதிரான வழக்கையும் விசாரணையையும் நடத்தியவர் இவர்.)

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்