ஞாயிறு, 7 ஜூலை, 2019

கள்ளர் : சோழர் : தேவர் : இந்திரன் குலம் : சூரிய குலம் : காஸ்யப கோத்திரம் : அகலிகை கோத்திரம்



கள்ளர்கள் இந்திர குலமா அல்லது சூரிய குலமா?

கள்ளர்கள் இந்திரனுக்கும், அகலிகைக்கும் பிறந்தவர்களா?

கள்ளர்கள் சோழ, சேர, பாண்டிய, பல்லவர்கள் என்பதை விட இவர்களுக்கெல்லாம் முன்னோடியான நாகர்கள் என்பதே சரியாகயிருக்கும். ஐயா வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரத்தில், ஏறகுறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின்முன்பே இந்திரகுலம் என்னும் வழக்குண்மை வெளியாகின்றது. சாவக நாட்டிலே நாகபுரத்தில் இருந்து அரசு புரிந்த பூமி சந்திரன், புண்ணியராசன் என்னும் நாக அரசர்களை இந்திர குலத்தார் என மணிமேகலை கூறுகின்றது. சூரிய சந்திர வமிசங்களைக் காட்டு தற்கும் மணிமேகலையினும் பழமையான சான்று தமிழில் இல்லை. இங்ஙனம் மிகப் பழைய நாளிலே இந்திர குலத்தின ரெனப்பட்ட நாகரது வழியிலே அல்லது நாகராய பல்லவர் வழியிலே வந்தமையால் கள்ளர்கள் இந்திர குலத்தினரென்று வழங்கப்பட்டாராதல் வேண்டும் என்கிறார்.

கள்ளர்கள் சைவர்களாக குறிப்பிட்டிருந்தாலும், வைணவர்களாகவும் (திருமண் மட்டுமே இடும்) வாழ்ந்துவருகின்றனர். அதை போல் கள்ளர்கள் எல்லோரும் இந்திரகுலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளனரா என்றால், இல்லை என்றே சொல்லலாம். கள்ளர்களில் அறந்தாங்கி தொண்டைமான் தங்களை சூரியகுலம் என்றும், இந்திரன் ஏழடி கொண்டவன் என்றும் கூறிக்கொள்கின்றர். அறந்தாங்கி வணங்காமுடி தொண்டைமான் வழியினரே, பாளையவனம் குறுநிலமன்னர் வணங்காமுடி பண்டாரத்தார் ஆவார்கள். 


கள்ளர்கள் சூரியகுலம், இந்திரகுலம்

புதுக்கோட்டை மாவட்ட வரலாறு என்ற நூலில் தன்னுடைய கள ஆய்வில் டாகடர்‌ ராஜா முகமது புதுக்கோட்டை தொண்டைமான்‌ மன்னர்கள்‌ இந்திர குலத்தைச்‌ சேர்ந்தவர்களாக இருக்க, இப்பகுதியின்‌ ஏனைய கள்ளர்‌ மரபினர்‌ சூரிய குலத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ எனக்‌ குறிப்பிடப்படுகின்றனர்‌.


கள்ளர் குடியை சேர்ந்த வைணவர்களாக 
திருமண்  மட்டுமே இடும் 

விசாங்க நாடு 
அன்பில் கிராமத்து அம்பலகாரர் 

ஐயா. சுந்தரராஜன் சோழங்கதேவர்


கள்ளர் குடியை சேர்ந்த சூரியகுல அறந்தாங்கி தொண்டைமான்  




கள்ளர் குடியை சேர்ந்த சூரியகுல பாளையவனம் வணங்காமுடி பண்டாரத்தார்

epigraphia indica and record of the archæological survey of india vol. xxi




சூரிய குல பாலையவன பண்டாரத்தார்

சோழர்களின் அதிகாரிகளாக இப்பகுதியில் ஆட்சி செய்த அறந்தாங்கி தொண்டைமான்கள் வழிவந்த பாலையவன அரசர்கள் தங்களை சூரிய குலம் என்று குறித்துள்ளனர்.  அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்களின் கிளைக்குடியே , அறந்தாங்கியின் மேற்கு பகுதியை ஆட்சி செய்த பாலையவன சமீன்தார்கள்! 

( General history of pudukkottai state : S. Radhakrishna aiyar)  
கிபி 1916 - page 86



கள்ளர் குடியை சேர்ந்த குறுநிலமன்னர் விஜத்தேவர்கள் செப்பேடு 



தஞ்சையின் குறுநிலமன்னர் விஜத்தேவர்கள் தங்களின் செப்பேட்டில், தொண்டைமான் மன்னர்கள் போல இந்திரகுலம் என்று குறிப்பிடவில்லை.   

இந்திரகுலம் என்று தொண்டைமான் மன்னர்களும், அவரின் படை வீரர்களாக இருந்த பூண்டி வண்டையர்களும், மற்றும் திருமலை நாயக்கர் காலத்தில்  பிறமலை நாட்டு தலைவர் பின்னத்தேவரின் செப்புபட்டையத்திலும், பல கள்ளர் பத்திரங்களிலும் காணப்படுகிறது. 


சோழ இந்திரர்கள் வம்சம்


கள்ளர் குடியை சேர்ந்த வல்லாளதேவர் பட்டமுடைய  
கந்தசாமி வல்லாளதேவர்  
நிலப்பத்திரம் 

கள்ளர் குடியை சேர்ந்த -இந்திரகுலம் -புதுக்கோட்டை மன்னர் 


கள்ளர் குடியை சேர்ந்த - இந்திரகுலம் - முத்துக்கருப்பத்தேவர் 



கள்ளர் குடியை சேர்ந்த - இந்திரகுலம் 
பெரியகுளம்  மாயத்தேவர் 

கள்ளர் குடியை சேர்ந்த - இந்திரகுலம் 
மன்னார்குடி அப்பாசாமி   வாண்டையார் 



திருவிடைமருதூர் நெண்டி நாடகம்

18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட“திருவிடைமருதூர் நெண்டி நாடகம்” கதா நாயகன் அடங்கா வீரத்தில் இருக்கும் தீவிர சிவ பக்தர். சிவபக்தியில் மூழ்கி அதிலே இறுதி வரை வாழ்ந்தவரின் வாழ்வியலை பிரதிபளிப்பதாக இந்த நொண்டி நாடகம் உள்ளது.

அப்படிப்பட்ட இந்த நொண்டி நாடகத்தில் உள்ள சிவபக்த்தரின் முன்னுரை பாடலில்:-

“மேன்மையான விசங்க - நாடதின்

மிக்க கள்ளச் சாதி தக்கபுகழ்

பான்மை யுள்ள இந்திரகுலம் - மெத்தப்

பாங்குள்ளதே விருதாங்குள்ளதே

உள்ளதே புலிக் கொடியும் - வாகை

யுந்தண்ட மாலைவி சித்திரமுந்த்”

என கதையின் நாயகர் கள்ளர் நாடுகளில் ஒன்றான மேன்மைமிக்க விசங்க நாட்டை சேர்ந்த கள்ளர் சாதி, தகுந்த புகழ்களை உடைய இந்திர குலத்தில், சோழர்களின் கொடியான புலிக் கொடியை தாங்கியவன் என்று கூறப்படுகிறது.


இந்திர குலம், சூரிய குலம் என்பது வேறு வேறு குலங்களா?????

அல்-நிலா, எல்-சூரியன். மா அல்-மால்; திருமால். திருமால் முதலாக வந்ததே சந்திரவம்சம்;அதுவே வைணவம் ஆனது. திரு என்றால் திருமாலையும் திருமாலின் தேவி லச்சுமியையும் குறிக்கும். திருமாலுக்கு திருவன் என்னற பெயரும் உண்டு.(சிங்கமாய்க் கீண்ட திருவன் (திவ். இயற். 2,84).   வேள்வியின் நாயகன் என்றால் திருமால்; இந்திரன் என்று பொருள். லச்சுமிக்கு இந்திரை என்று பெயருண்டு. அதன்மூலம் முதல் இந்திரன் திருமால்; முதல் இந்திரை திருமகள் ஆவர். அவர்வம்சத்தில் வந்தபிறர் இந்திரன்-இந்திரானி என்றும்; வேந்தனென்றும் அழைக்கப்பட்டனர். அரபி மொழியில் அல் என்றால் திரு(மதிப்புமிக்க) என்றே பொருள். அங்குள்ள பிறை வணக்கம் ;அல்லா வழிபாட்டை திருமால் வழிபாட பார்க்க முடியும். சிந்துவெளி தமிழன் பண்பாடு (ஆதிமூலம்) யந்திர (இந்திர விழா) போற்றுதல் .  இந்திரகுலம் என்பது சந்திரகுலத்தையும் குறிக்கும்.


புராணம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் மணிமேகலையில் முதன்முதலில் வருகிறது. புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை கூறுவதாகும். புராணங்கள் இந்திரன், சூரியன் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போமானால் 

1) சூரியகுலம், இந்திரன் குலம் வேறு வேறு குலங்களாக அறியப்பட்டாலும் சப்தரிசிகளுள் ஒருவரான காசியபரின் 13 மனைவிகளில் மூத்த மனைவியான அதிதி பெற்ற மகனே இந்திரன் மற்றும் சூரியதேவன் (சூரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது). மற்றோரு மனைவியான கத்ரு பெற்ற மகன்களே நாகர்கள். சூரியன், ஐப்பசி மாதத்தில் இந்திரன் என்று பெயர் பெற்று ஆயிரத்து இருநூறு கதிர்களால் ஒளிரச் செய்கிறான் என்று புராணம் கூறுகிறது. இந்திரன், சூரியன் இருவரும் காசியபரின் (மகன்களே) குலமே, சூரியனின் முன்னோன் இந்திரனே. 

2) நான்கு வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதத்திலுள்ள சுலோகங்களில் காற்பங்குக்கு மேற்பட்டவை இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. அதில் இந்திரன் தேவர்களின் தலைவன். குபேரன், வாயு, வருணன், அக்னி, சூரியன் என அனைவரும் இவனுக்குள் அடக்கம்.  இந்திரன் எல்லாப் பொருள்களும் புலனாக சூரியனை வானிலே உயர்த்தினான். கதிர்களால் மலையை ஒளிப்படுத்தினான். தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவர் இந்திரனே.

3) இராமாயணத்தில் வாலியும், சுக்ரீவனும் சகோதர்கள், இதில் இந்திரனின் மகன் வாலி, சூரியனின் மகன் சுக்ரீவன் ஆவான்.  மகாபாரதத்தில் அர்ஜுனனும், கர்ணனும் சகோதர்கள், இதில் இந்திரனின் மகன் அர்ஜுனன், சூரியனின் மகன் கர்ணன் ஆவான்.


சோழர்கள் - காஸ்யப கோத்திரம்

தொண்டைமான் தங்களை காஸ்யப கோத்திரம் 


4) சோழ மன்னர்கள், தொண்டைமான் மன்னர்கள் காஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களுடைய செப்பேடுகளில் இருந்து அறியலாம். காச்யபர், அத்ரி ஆகிய இரண்டு ரிஷிகளின் பெயர்களும் அவர்களுடைய குடி முதல்வர்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. காசியபரின் மகன்களே இந்திரனும் சூரியனும் என்பதை நாம் அறிந்ததே.

சங்க இலக்கியத்தில் இந்திரன், சூரியன் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போமானால்

1) இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண தொல்காப்பியப் பொருளதிகாரப் பாடல், மாயோன் மேய என்று தொடங்கும் பாடலில் 'வேந்தன் மேய தீம்புனல் உலகம்' என்று மருதநிலத்தைக் குறிப்பிடுகிறது. வேந்தன் என்றால் இந்திரன் (தேவர் கோமான்) மற்றும் சூரியன் (சூடாமணி நிகண்டு 55, 56, 57) என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன.




2) போகிப் பண்டிகை, சூரியனுக்கும் இந்திரனுக்கும் ஒரே நாளில் பண்டைய தமிழர்களினால் கொண்டாடப்பட்ட விழாவாகும். தைத்திருநாளன்று கதிரவனுக்குப் பொங்கல் வைத்து இன்று நாம் வழிபடுவதைப் போலவே இந்திரவிழாவின் போதும் இந்திரனுக்குப் பொங்கலைப் படைத்து பூவும் புகையும் காட்டி வழிபட்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. (“பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” - இந்திரவிழவூர் எடுத்த காதை: 69)

3) புறநானூற்றின் பாடல் 37, 39, 43, 46, 228 ஆகியவற்றில் சோழர்களின் முன்னோடியாக சிபிச் சக்ரவர்த்தி கூறப்படுகிறான். புராண, இதிஹாசங்களில் சிபிச் சக்ரவர்த்தி சூரிய குல மன்னனாகக் காட்டபடவில்லை. ஆனால் சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் உள்ள இலக்கியங்கள் அனைத்தும், கல்வெட்டுகள், மெய் கீர்த்திகள், செப்பேடுகள் அனைத்தும் சோழர்களின் சூரியகுலத்தைப் போற்றிப் புகழ்கின்றன. 

4) தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், இவன் கடைச் சங்கக் காலத்துக்கும் முற்பட்டவன் என்பர். இவனைச் சோழன் முன்னோர்களில் முதன்மையானவன் என்று புறநானூற்றுப் புலவர் மாற்றோக்கத்து நப்பசலையார் கூறுகிறார். அகத்திய முனிவரது கோரிக்கையை ஏற்று காவிரிப்பூம் பட்டினத்தில் முதன் முதலில் இந்திரனுக்கு 28 நாட்கள் விழா எடுத்து சிறப்பித்தவன். 

5) முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதமும் ஐவகை மன்றமும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது (5-65/67; 6-7/17)

6) புலி என கொடியில் இந்திரனை வைத்த அவனும் புணரி ஒன்றினிடை ஒன்று புகவிட்ட அவனும் - கலிங்கத்துப்பரணி (193) . இரண்டாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட கலிங்கத்துப்பரணி


7) ஆதித்திய சோழனின் பள்ளிப்படை கல்வெட்டில் 

பள்ளிப்படை கல்வெட்டில் இந்திர விழ பற்றிய செய்தியும் உள்ளது.

"ஏழுநாளைக்கும் உண்ண . . . . ண்காடி இருதூம்பு ஆழாக்கு இந்திரவிழாவினுக்குமாக விளக்[கினுக்கு] [நெ]ய் மேல்படி நாளைக்கு"

இந்திரன் என்ற சொல் சூரியனைக் குறிக்கும் என்பதற்கு, இந்திரதிசை என்ற கிழக்குத் திசையில் இருந்து தோன்றுவதால் சூரியனுக்கு இந்திரன் என்ற பெயர் ஏற்பட்ட்து. வானவில்லுக்கு இந்திரவில் அதாவது சூரியனுடைய வில் என்று பெயர். இந்து + இரியன் = இந்திரியன் --> இந்திரன் => (இருள்) + (அகற்றுபவன்) = சூரியன். 


இந்திரன் intiraṉ, n. < indra. (நாநார்த்த.): அகராதியில் தரும் விளக்கம்: 
1. The inner soul; அந்தரான்மா. 2. Sun; சூரியன்.

புராணம், சங்க இலக்கியம் மற்றும் அகராதிகள் மூலமாக தெளிவாக இந்திரன், சூரியன் என்ற இருபெயர்கள் பல இடங்களில் குறிப்பிடுவது ஒருவரையே என்பதையும், சூரியன் இந்திரனுக்குள் அடக்கமே என்பதையும் அறிய முடிகிறது. 

வெறும் புராணம் மட்டும் வரலாறு ஆகாது, இந்த புராணங்களை வைத்து தமிழர்களான சோழர்களை வலிந்து வடக்கேத்தள்ளப் பார்க்கிறார் சில வந்தேறி சாதிகள். புராண வரலாற்று இதிகாசங்களை வரலாற்றுத் தரவுகளாகக் கொண்டு இவ்வாறு கூறுகிறார்கள். குறிப்பாய் ஸ்ரீராமனை மையமாக்கி வாதிடுகிறார்கள்.


ஸ்ரீராமனது காலத்திற்கு வெகு முந்திய காலத்திலேயே தமிழனின் இருப்புக் குறித்து ஏராளமான சான்றுகள் உண்டு. இவர்களின்  புராண வழியிலேயே, புராண இதிகாசநிகழ்வுகளைக் கொண்டு தமிழனின் பழமையையும் பெருமையையும் தெளிவாக உணரலாம்..


இராமாயணம். கிஷ்கிந்தா காண்டம் .

4 / 41 / 18.. ஸ்லோகம்.

சீதையைத் தேடிச்செல்லும் வானரர்களிடம்

சுக்ரீவன் இவ்வாறு கூறுகிறார்.

"தடோ ஹேமாயம் திவ்யம் முக்த மனி விபுசிடம் யுக்தம் கவாடம் பாண்டியானாம் கடா த்ரக்சுயத வானராம்.."


நீங்கள் தென்திசை நோக்கிச்செல்லும் வழியில் , தங்கம் முத்து ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட பேரரசன் பாண்டியனின் கபாடபுரத்தை காண்பீர்கள்..


ஆக.. இராமாயண காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பாண்டியனது இருப்பு உறுதி செய்யப்படுகிறது.


அதாவது ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு முந்தைய குடி தமிழன். அப்பவே ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்சுவரையுடைய அரண்மனையில் வாசம் செய்த சங்கத்தமிழன் பாண்டிய அரசன் ..


இதை இராமயணமே உறுதி செய்கிறது.


ஸ்ரீராமரை சூரிய குலம் என்று போற்றுகிறோம்.


இந்த சூரியகுலம் என்பதை எங்கேயிருந்து எடுத்தார்கள். சோழர்களிடமிருந்து எடுத்தார்கள்.


எப்படி என்றால். பாண்டியர்களின் வம்சாவழி பற்றிய தரவுகள் திருவிளையாடல் புராணம் மற்றும் இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை ஆகியவற்றில் கிடைக்கிறது.


சிவபெருமானின் 64 திருவிளையாடல் புராணங்களை பரஞ்சோதி முனிவர் தொகுத்தார். இந்நூலில் பாண்டியர்களது வம்சாவழியைக் கூறுகிறார்.


படலம் 3 ல் குலசேகரபாண்டியன், படலம் 4 ல் மலையத்துவன் என்று தொடர்ந்து பட்டியல் வருகிறது. இந்த மலையத்துவ பாண்டியனின் மகள்தான் அன்னை மீனாட்சி. சிவனையே மணம் செய்தவர்.


பட்டியல் தொடர்கிறது.


1) சித்திரரதன்

2) சித்திரபூடணன்
3) சித்திரத்துவசன்
4) சித்திரவருமன்
5) சித்திரசேனன்
6) சித்திரவிக்கிரமன்
7) இராசமார்த்தாண்டன்
8) இராச சூடாமணி
9) இராச சார்த்தூலன்
10) துவிசராச குலோத்தமன்
11) ஆயோதனப் பிரவீணன்
12) இராச குஞ்சரன்
13) பரவிராச பயங்கரன்
14) உக்கிரசேனன்
15) சத்ருஞ்சயன் வீமரதன்
16) வீம பராக்கிரமன்
17) பிரதாப மார்த்தாண்டன்
18) விக்கிரம கஞ்சனன்
19) சமர கோலாகலன்
(20, 21…..??)
22) அதுல கீர்த்தி
கீர்த்திவீடணன்:

இந்த அதுல கீர்த்திவிடணன் காலத்தில்தான் கடல் பொங்கி பாண்டியர் தலைநகரத்தை அழிக்கிறது..


அதன்பிறகு சந்திர குலத்தில் பாண்டியனும், சூரியகுலத்தில் சோழனும், அக்னி குலத்தில் சேரனும் தோன்றுகிறார்கள். இக்காலத்திற்கு பிறகுதான் இராமாயனம், அப்போதுதான் ஸ்ரீராமன் தன்னை சூரியகுலம் என்கிறார். அதாவது சங்கத்தமிழன் சோழரின் சூரியகுல பட்டத்தைத்தான் இராமன் சூடுகிறார். அதாவது ஸ்ரீராமருக்கும் மூத்தகுடி சோழர்குடி..



ஆக புராண இதிகாச நிகழ்வுகளுக்கெல்லாம் முன் தோன்றிய மூத்தக்குடிதான் தமிழ்க் குடி என்பதை சான்றுகளுடன் அடுக்கிக் கொண்டே போகலாம் என்று தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகிறார் திரு மா.மாரிராஜன்.

சூரியகுல கள்ளர் சரித்திரம் பக்கம் 213 இல் குறிப்பிடப்படுவது

1) ஆதியில் சோழர்கள் வழிபட்ட இந்திரவிழா, இன்று சூரியனை வணங்கும் விழாவாக மாறிப்போனதுபோல், 13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் கீழ் சோழர்கள் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர் அதன் பிறகு 14 ஆம் நூற்றாண்டில் வடுகர் படையெடுப்பின் போது இராசேந்திர சோழனின் வம்சத்தில் தோன்றிய கோனேரி மேல்கொண்டான் (கோனேரிராசன்) கி.பி 1377 விஜய சாம்ராஜய அதிபதியான ஹரிஹரர்-2 அவர்களின் இரண்டாவது மகனான கருநட தேசத்தரனாகிய விருப்பன்ன உடையார் என்பானுடன் போர் செய்து தோல்வியுற்று நாடும் இழந்தான். இவன் தன் பரிவாரங்களுடன் இராசாளிவிடுதி, பன்னிகொண்டான்விடுதி, உஞ்சிவிடுதி, சென்னிவிடுதி, சிறுவாவிடுதி போன்ற இடங்களில் மறைந்து வாழ்ந்தான். இக்கால கட்டத்தில் இராசேந்திர குலத்தவரென்று சொல்வத்ற்கு அஞ்சி இராசு என்ற பதத்தை மறைத்து இந்திரகுலத்தவரென்று மாற்றிக்கொள்ளுமளவுக்கு கள்ளர்கள் உந்தப்பட்டனர்.

சூரியகுலம் இராசேந்திர குலமாகி முதற்குறை பெற்று இறுதியில் இந்திரகுலமாகிய வராலாறு இதுவாகும். 


கள்ளர்கள் இந்திரனுக்கும், அகலிகைக்கும் பிறந்தவர்களா?


புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள், இந்திரகுலத்தார் என வழங்கப்படுதற்கும் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளக்கு முற்பட்ட ஆதரவுகள் கிடைக்கின்றன. தேவேந்திரன் ஒரு நாள் பூமியிற் சுற்றி வந்தானென்றும், அப்போது ஒரு கன்னிகையை மணந்தா னென்றும், அவள் அநேக பிள்ளைகளைப் பெற்றனளென்றும், அவர்களில் ஒருவன் அரசனானானென்றும் 172 ஆண்டுகளின் முன் எழுதப்பெற்ற தொண்டைமான் வமிசாவளி என்னும் நூலிற் கூறியிருப்பது. இந்த நூலில்அகலிகைக்கு பிறந்ததாக இந்த குறிப்பும் இல்லை.

கள்ளர்,மறவர், அகம்படியர் என்ற மூன்று வகுப்பினரும் ஒரேயினத்தவரென்றும், இவர்களெல்லாரும் இந்திர குலத்தினரென்றும் பலர் சொல்லியும், எழுதியும் வந்திருக்கினறனர். பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியும் கொதமர் பத்தினியும் ஆகிய அகலிகையைத் தேவேந்திரன் கரவிற் புணர்ந்த காலத்து மூன்று மக்கள் பிறந்தனரென்றும், முனிவர் மனைக்குத் திரும்பியபொழுது மறைந்தவன் கள்ளனென்றும், மரத்திலேறியவன் மரவனென்றும், அகங்காரத்துடன் நின்றவன் அகம்படியனென்றும் பெயர்பெற்றனரென்றும் கதை கூறுவர்.

இக்கதையை களஆய்வு எதுவும் செய்யாமல் ரங்காச்சாரி என்பவருடன் இணைந்து எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston, 1855-1935) எழுதிய தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளான். எட்கர் தர்ஸ்டன்1907 ஆம் ஆண்டில் தென்னிந்திய இனவரைவியல் குறிப்புக்கள் (Ethnographic Notes on Southern India) என்னும் தலைப்பிலான நூலொன்றை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். 1909 ஆம் ஆண்டில், தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளும் (Castes andTribes of South India) என்ற நூல் 7 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.

பிறமலை கள்ளர்கள் வாழ்வினை ஆய்வு செய்த லூயிஸ் டுமென்ட் (Louis Dumont 1911 – 1998), அவர்கள் A South Indian Subcaste (1986 ) என்ற நூலில் அகலிகையைத் தேவேந்திரன் கரவிற் புணர்ந்த காலத்து நான்கு மக்கள் பிறந்தனரென்றும், முனிவர் மனைக்குத் திரும்பியபொழுது கல்லின் பின் மறைந்து நின்றவன் கல்லனென்றும், மரத்தின் பின் மறைந்து நின்றவன் மரவனென்றும், அடுக்களை அகத்தில் பின் மறைந்து நின்றவன் அகம்படியனென்றும், வெளிய போனவன் வெள்ளாளன் பெயர்பெற்றன ரென்றும் கதை கூறுவர். கள்ளன் என்பவன் தேவன் அல்லது இந்திரன் மகனாவான் என்று குறிப்பிடுகிறார்.

தமிழறிஞர். சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்த வேங்கடசாமி நாட்டார் எழுதிய 'கள்ளர் சரித்திரம் நூலில் (1923 ) இதனை பற்றிய கருத்தாக "இக்கதையைப் படைத்தவன் எவ்வளவு அறிவிலியாயிருக்க வேண்டுமென்பது புலப்படும். இது போலும் அறிவிலார் கூற்றுக்களை ஆராயாதே ஆங்கிலத்தில் எழுதிச் சரித்திரமாகக் காட்டிவிடும் பெரியோர்கள் இன்னமும் இவ்வுலகத்தில் இருக்கின்றனர்" என்று குறிப்பிடுகிறார்.

(குற்றப்பரம்பரை சட்டத்தில் இருந்து தஞ்சை பகுதி கள்ளர்களை காத்துக்கொள்ள வேங்கடசாமி நாட்டார் அவர்கள் கள்ளர் சரித்திரம் என்ற நூல் எழுதியாக சில அறிவிலிகள் எழுதியுள்ளனர். ஆனால் இந்த நூல் வருவதற்கு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே, 1911-ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப் பேசி குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து தஞ்சைப் பகுதி கள்ளர்களை கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் மீட்டிருக்கிறார்)

இந்திரனுக்கும் அகலியைக்கும் பிறந்தார் என்பதில் ஓர் குறைவு இருப்பதாகக் கருதி இங்ஙனம் கூறுககின்றே மல்லேம். உலகத்தின் படைப்பையும், சூரிய சந்திர வமிசங்களின் தோற்றத்தையும், வசிட்டராதி முனிவர்களின் பிறப்பையும் நோக்குங்கால் அவையாவும் இழிவுள்ளனவாகவே நமக்குத் தோற்றுதல் கூடும். தமிழர்களாய இவர்களை இந்திரனுக்கும் அகலியைக்கும் பிறந்தவர்களென்று கூறுவது சிறிதும் சரித்திர இயல்படையதாகா தென்பதே நம் கருத்து. அகலியை வரலாறு கூறும் இராமாயணம் முதலியவற்றில் கள்ளர் முதலியோரின் பிறப்புக் கூறப்பட்டிருக்குமேல் அது சரித்திர மாகாவிடினும் ஒருவாறு மதிப்பிற்குரியதாகும். அங்ஙனமின்றி யாரோ அறிவிலார் கட்டிவிடுவதெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ளத்தகும்?

இனி, இம்மூன்று வகுப்பையும் குறித்துப் பூவிந்திர புராணம், கள்ளகேசரி புராணம் என்ற தமிழிலே புராணங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் பிரமாண்ட புராணம் முதலியவற்றைச் சேர்ந்தனவாம். சிவபிரான் உமாதேவிக்கும், அகத்தியர் புலத்தியர்க்கும், சூதபுராணிகர் நைமிசவன முனிவர் கட்கும் கூறியனவாம். இவற்றின் சிறப்பையும் மதிப்பையும் இங்கெடுத்துக் கூறுதல் மிகை. இந்திரன் அகலியைபால் விருப்பங்கொண்டதை யறிந்த இந்திராணி தன் சாயையால் அகலியை போலும் அழகுடைய மோகனாங்கி என்பாளைப் படைத்திட, இந்திரன் அவளைச் சேர்ந்து கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் பூவிந்திரர் மூவரைப் பெற்றனனென்றும், அவர்கள் தமிழ்நாடு மூன்றுக்கும் அரசராயினார்கள் என்றும் அப்புராணங்கள் கூறும். இவையும் இந்திர குலம் என்னும் பெயர் வழக்கிலிருந்து தோன்றியவையென்பது கூறவேண்டியதில்லை. இவைகளிலிருந்து, நெருங்கிய சம்பந்தமுடையராய், இந்திர குலத்தினரென வழங்கப் பெற்று வந்திருக்கின்றனர். என்ற அளவு உண்மையெனக் கொள்ளலாகும்.

சோழர்களே இந்திரன் வழியினரென்பது ஒரு சாரார் கொள்கை. இந்திரன் ஆரியர் வழபட்ட கடவுள் என வடமொழி நூல்களிற் பெறப்படுமேனும், தமிழரது தெய்வம் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் தம் குல முதல்வனாகிய வேந்தனைத் தெய்வமாகக்கொண்டு வழிபட்டு வந்தன ரென்றும் கூறுவர். பழைய நாளில் சோழர்கள் இந்திரனுக்குப் பெருஞ் சிறப்புடன் திருவிழாச் செய்து போந்தமை சிலப்பதிகாரம் முதலியவற்றால் வெளிப்படை, ‘சுராதி ராசன் முதலாகவரு சோழன்” எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. இவ்வற்றிலிருந்து சோழர் இந்திர குலத்தாரென்பது பெறப்படுமேல் அவர் வழியினராகிய கள்ளர் இந்திர குலத்தினர் எனப்படுவது அதனானே அமையும்.




இந்து தொன்மவியலில் பஞ்சகன்னிகைகள் என்று அகலிகை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி அழைக்கப்பெறுகின்றார்கள். இவர்களே மிகச்சிறந்த தர்மப்பத்தினிகளாகவும், இல்லற வழிகாட்டிகளாகவும் குறிக்கப்பெறுகிறார்கள்.


அகலிகைக்குப் பெண்ணாய்ப் பிறந்தாள் அஞ்சனை மேலும் வாமதேவ முனிவர், நோதாஸ், சதானந்தர் என்ற புதல்வர்கள் இருந்தனர். அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் ஆவார்.
நன்றி : 

திரு. சியம் சுந்தர் சம்பட்டியார் 

திரு. சோழபாண்டியன் - ஏழுகோட்டை நாடு

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்