ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

கள்ளர் போர் குணம் மற்றும் உடல் அமைப்பு



கள்ளர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நீண்ட காது வளர்க்கும் பழக்கமுடையோர், வளரி ஆயுதத்தை பயன்படுத்துவது, ஏறுதழுவுதல் (இன்றும் ஏறுதழுவுதல் 70 சதவீதம் கள்ளர் நாட்டில் , கள்ளர் அம்பலகாரகளால் நடத்தப்படுவது), இரண்டாயிரம் சிறப்பு பட்டங்களையும் உடையவர்கள் என்ற சிறப்புகளை பெற்றவர்கள். 

ஆங்கிலேயர் ஆவணங்களில் கள்ளன் கள்ளச்சி ஓவியம்..!



One of thirty-six paintings of castes and occupations of South India showing a man and wife with the attributes of their trade. This one showing a Kallar couple of Mukkulathor/Thevar fraternity, this man holding a spear and valari.

Gouache type painting,Year 1770 AD.
Thanks -Victoria and Albert Museum, London.

நன்றி: jayamkondar.in


A rare oriental picture of a கள்ளர் வீரன் / Kallar Man / A collery / A soldier of Trichinopoly Nawab durbar who lived probably during 1791-1798 AD and this oriental series was released in the year 1806 AD.

The Oriental drawing of Charles Gold,
Captain, Royal Regiment of Artillery.

 தஞ்சை கள்ளரும், அவரது மனைவியின் புகைப்படமும், 

Dated approx 1830-1835 AD (British museum)

Courtesy
vijay Pandiya Thevar




யூசப்கான் பிரிட்டீஸ் பிரதி நிதியாக இருந்த வரை அவரால் கள்ளர் பெருங்குடிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படி ஒரு சமயம் தன்னால் அடக்கமுடியாத கள்ளர் பற்றை பற்றி அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் பிரபுவான LORD PIGOTக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் கள்ளர்கள் என்பவர்கள் மனிதர்களே கிடையாது அவர்கள் பிசாசுகள் என்று கூறுகிறார்.



தென்னகத்தின் இராஜங்க புத்திரர்களான கள்ளர்கள்



புல்லர்டோன் கள்ளர்கள் அரக்கத்தனம் மிக்கவர்கள் என்று குறிக்கிறார்.



ஆங்கிலேயர் வியந்த கள்ளர்களின் உடலமைப்பு. 

கிபி1927ல் இந்தியாவில் பிரிட்டீஸ் அரசின் சட்ட அமைப்புகள், மருத்துவமனை, பள்ளிக் கூடங்கள், பொதுப்பணி துறைகளின் செயல்பாடுகளை பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக லண்டன் பாராளுமன்றத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் Mr.Edward Cadogan அனுப்பபட்டார்.




அவர் இந்தியா முழுக்க பயணம் செய்து ஆய்வறிக்கை தயார் செய்யும் பணியை மேற்கொண்டு இறுதியாக தமிழ் நாட்டிற்கு வரும் போது உசிலம்பட்டிற்கு வருகை தறுகிறார்.

அப்போது அங்கு கூடியிருந்த 100கள்ளர் பெருமக்களை பார்த்து தனது புத்தகத்தில் அவர் சொன்ன வாசகம் என்னவென்றால்

“இந்த அற்புதமான கள்ளர் பழங்குடியினரின் மிகவும் அறிதான உடலைப்பு உலகில் எந்தவொரு மனிதருக்கும் இல்லை என்று குறிப்பிடுகிறார்”

கள்ளர் படைப் பற்றின் ஈட்டி

The war of coromandel. கிபி1755ல் மதுரை,திருச்சி மாண்டலத்தில் ஆங்கிலயேயர்களுக்கு எதிராக சண்டையிட்ட கள்ளர்களின் ஆயுதமான ஈட்டி 18அடி நீளம் கொண்டது மேலும் அதை பயன்படுத்துவதில் வல்லவர்கள் என்றும் பிரிட்டிஸார் குறிக்கின்றனர். 18அடி நீளம் கொண்ட அந்த ஈட்டியின் எடை எப்படி பார்த்தாலும் குறைந்தது 30கிலோ எடையாவது இருக்கும். அதை தூக்கி கொண்டு சரியாக எதிரியின் மார்பை குத்தி எறிவதற்கு அவர்களுக்கு எத்துணை எத்துணை பலம் வேண்டும்.





கடிவாளம் இல்லாமல் குதிரை ஓட்டுவதில் திறமையானவர்கள் 


ராக்கெட்டுகளை கொண்டு தாக்கிய கள்ளர்கள் ( கிபி 1756):-


9th sep 1756 ,  நவாபின் உறவினரான மபூஸ் கானிடம் இருந்து தென் தமிழகத்தின் வரி வசூலிக்கும் உரிமை பறிக்கப்பட்டு யூசுப் கானிடம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தனது ஆதரவாளர்கள் மற்றும் கள்ளர்களின் உதவியோடு மதுரை கோட்டையை மபூஸ் கான் கைப்பற்றினான். மதுரையை மீட்கும் போராட்டத்தில் இருந்த யூசுப் கான்,  வெள்ளையருக்கு எழுதிய கடிதத்தில், பின்வருவனவற்றை குறிப்பிட்டுள்ளான்." மபூஸ் கான் கோட்டைக்கு உள்ளே இருப்பதாகவும்,  இரவு நேரங்களில் கள்ளர்கள் ராக்கெட்டுகளை கொண்டு தங்களை தாக்குவதாகவும் , ஆநிரைகளை கவர்ந்து சூரையாடியதாகவும், பதில் தாக்குதலில் சில கள்ளர்கள் மடிந்ததாகவும்"  குறிப்பிட்டுள்ளார்.



கிபி 1761 ல் ரிச்சர்ட் ஒவன் எனும் ஆங்கிலேயர் Account of war in India எனும் புத்தகத்தில் கள்ளர்களை பற்றி எழுதிய குறிப்பில்

கள்ளர்கள் மிக ஆபத்தான குடியினர்.

எதிரிகளை தாக்கி சூரையாடுவதிலும், எதிரி படைகளின் குதிரைகளை கொள்ளை அடிப்பதிலும் வல்லவர்கள்

18 முதல் 20 அடி வரை நீளமுள்ள வேல்கம்புகளை தங்களிடம் எப்போதும் வைத்து இருக்கும் பழக்கம் உடையவர்கள்.

கள்ளர்கள் போர்களங்களில் விதவிதமான சத்தம் எழுப்பிக்கொண்டு தாக்குதல் நடத்துவார்கள்

காடுகள் நிறைந்த அவர்களது பகுதிகளில் கள்ளர்களிடம் போரிடுவது மிகுந்த அபாயகரமானது.




கள்ளர்கள் பொழுது போக்காக கொலை செயதார்கள், தனி ஆளாக போய் Robert Cliveக்கு நாமத்தை போட்டு மொத்த குதிரைகளையும் தூக்கி வந்தனர். ( இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர்) (பெண்கள், குழந்தைகள் & மறையவர்களை கொலை செய்து பெண்டிர் பண்டாரம் கவர்ந்து சென்றது சொல்லப்பட்டுள்ளது.சோழர்கள் பெண்களைக் கவர்ந்த முதல் நேரடிக் குறிப்பு அநேகமாக Rajaraja The Great காலத்தில் இருந்துதான் கிடைக்க ஆரம்பிக்கிறது.(Epigraphia indica vol.16,Page No.75))



Source:-
Yusuf Khan the rebel commandant


நன்றி. 
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. சோழபாண்டியன்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்