ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

கள்ளர்களின் குலதெய்வம் ஒரு பார்வை





பாகனேரி நாட்டில் காணப்படும், யானைக்கட்டும் கல். இன்று முனிசாமியாக கும்பிடப்படுகிறது. இந்தப்பகுதியில் " மதமடக்கி" எனும் கள்ளர் பிரிவினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.


மன்னசிங்காரியர் அல்லது மன்னசிங்காரி :

கத்தகுறிச்சி ஊராட்சி (Kathakurichi Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்கு  மன்னசிங்காரி என்ற பட்டம் தாங்கிய கள்ளர்களின் குல தெய்வ கெடா வெட்டு ஆடி ஆவனி இரண்டு மாதம் முழுவதும் வெள்ளி கிழமை நடக்கும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கரைய சேர்ந்தவர்கள் ஆடு வெட்டி வழிபடுவர். ஆடு கருப்பாக மட்டுமே இருக்க வேண்டும் சிறு வென்புள்ளி கூட இருக்க கூடாது.

இங்கு மன்னசிங்காரி கள்ளர்களின் குல தெய்வம் பெரிய கருப்பு என்னும் பெரியய்யா நீல வன்ன கார்மேகம் என்றும் குறிப்பிடுகின்றனர்.



மேலும் குல தெய்வம் ராக்கு முத்து எனும் ராக்கம்மாள்.


ஐந்து வருடத்திற்க்கு ஒரு சிலை செய்கின்றனர் உடைந்த சிலைகளை எண்ணி பார்த்தாலே நூறுக்குமேல் உள்ளது. இந்த எண்ணிக்கையை வைத்து பார்த்தால் ௫௦௦ வருடங்களுக்கு முன்பு இருந்தே இங்கு வழிபாடு நடைபெறுகிறது என்பதை
அறியமுடிகிறது.



பத்திரகாளி தெய்வமும் இங்கு உள்ளது.


மன்னசிங்கரி யர் (எ) மன்னசிங்காரியர் என்பதற்கு

மன்னசிங்கரி = மன்ன (மன்னன்) + சிங்கரி ( சிங்கம்)

வைணவ மடத்தின் முதல் ஜீயருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு. நரசிம்மர் மற்றோரு பெயர் சிங்கரி.

மன்னசிங்காரியர் - மன்னரில் சிங்கம் போன்றவர்கள் என்று பொருள்


கூழாக்கியார்

விசாங்கநாடு செம்புலி கூழாக்கியார் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட பிலியடிகருப்பு கோவில்








அருள்மிகு ஐந்துகோவில் முத்தன் சுவாமி புரவி எடுப்பு

கள்ளர்களின் சீமையாம் கள்ளழகரின் சீமை கள்ளன்திரி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஐந்துகோவில் முத்தன் சுவாமி புரவி எடுப்பு விழா 













தகவல் : ஜெகதீஸ் அம்பலம்



புதுக்கோட்டை வாரைவளர் வாராப்பூர் நாட்டு மாசிமகம் திருவிழா



புதுக்கோட்டை வாரைவளர் வாராப்பூர் நாட்டு மாசிமகம் திருவிழாவிற்கான காப்புக்கட்டு  நாட்டின் முதல் கரை சம்பட்டியார் பூ போட்டு தொடங்கும்.














பாலையடிகருப்பருக்கு ( பெரியகருப்பு, சின்னக்கருப்பு, சங்கிலிக்கருப்பு, முத்துக்கருப்பு) சம்பட்டியார் முதல் மண்டகபடி நடக்கும். கருப்புக்கு பில்லிசோறு வீசுதல் நடைபெறும். இந்த கள்ளர்  நாட்டிற்கே உள்ள தனித்தன்மை பில்லிச்சோறு வீசுதலில் மனித இரத்ததில் வீசப்படும்.. பூசாரி தன் தொடையை தானே கிழித்து இரத்தம் எடுப்பார்.

வாய்ப்பு கிடைத்தால் இந்த திருவிழாவிற்கு போனால் வாராப்பூர் நாட்டை பற்றி சில விசயங்கள் கண்கூட தெரிந்துகொள்ளலாம்.

நன்றி : திரு. சுதாகர் சம்பட்டியார் 





கந்தர்வகோட்டை பகுதியில், கள்ளர் குல மட்டையர்களின் குல தெய்வ கோயில்

ஆதனக்கோட்டை- குன்றாண்டார் கோயில் வழிதடத்தில் உள்ள ஒரு காட்டுக்கோயில்-  அடைக்கலங்காத்தார், மட்டையர்கள் வழிபடும் கோயில்









மட்டையர் என்பதற்கு அகராதி தரும் விளக்கம் 





சோழர் கல்வெட்டில் 


நன்றி : திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்



அருள்மிகு ஸ்ரீ ஆதி அய்யனார் திருக்கோவில் 




வேப்பனூத்து நாடு, கள்ளபட்டியில் எழுந்தருளும் ஆதி வெள்ளபின்னத்தேவர் அவர்களின் வாரிசுகளுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ ஆதி அய்யனார் திருக்கோவிலின் (பெருங்கும்பிடு) கிடாவெட்டு 18.05.19 வைகாசி 4 ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.

பிறமலை கள்ளர் நாட்டில்  ஏழாவது நாடான வேப்பனூத்து கள்ளபட்டி நாட்டில் பெட்டி எடுத்து கிடா வெட்டி பெருங்கும்புடு விழா நடைபெற்றது. சுமார் 58 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறுகிறது. ஆதி அய்யனார் வணங்கும் அறுபத்தி ஒரு வீட்டு பங்காளிகள் கலந்துகொண்டு, பெட்டி கோவில் வந்தடைந்து இரவு பூஜைகள் நடைபெறும் மறுநாள் காலை கிடாவெட்டி சிறப்பாக நடைபெறும்.

















நன்றி . திரு. கருப்பு தேவன் (வெள்ளைப் பின்னத்தேவர் கூட்டம்)



இடங்கை முனியய்யா




ஆறாவயல் சண்முகநாதபுரத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது அருள்மிகு இடங்கை முனியய்யா கோயில்!

செம்பொன்மாரி நாட்டு அம்பலத்தின் (நாட்டாண்மை) குடும்பப் பெயர் இடங்கை. இக் குடும்பத்திற்கு உரிய கோயில் இது!




குச்சிராயர்களின் குலதெய்வம் கபிஸ்தலம் காத்தாயி அம்மன் 


  




நன்றி : தினேஷ் குச்சிராயர்


புதுக்கோட்டையில் உள்ள தொண்டைமான் பட்டம் உடைய கள்ளரில் சிலரின் குலதெய்வம் ஸ்ரீ காரி அழகர் 



தஞ்சையில் உள்ள வாணாதிராயர் பட்டமுடைய கள்ளர்களின் சிலரது குலதெய்வம் அத்தி பெரியசுவாமி




வேணுடையார் பட்டமுடைய கள்ளர்களின் சிலரது குலதெய்வம் கோவிலூர் நெல்லிதோப்பு அருள்மிகு காத்தாயி அம்மன், குழந்தை முனீஸ்வரர் 



தஞ்சையில் உள்ள நாட்டார் பட்டமுடைய கள்ளர்களின் சிலரது குலதெய்வம் ஆடிபுலியூர் அங்காளபரமேஸ்வரி



வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்