சனி, 15 செப்டம்பர், 2018

தமிழகத்தின் போர்குடிகள் மற்றும் பழங்குடிகள்


தமிழகத்தின் போர்குடிகள்

கிபி1787ல் ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர் போர் செய்ய தாயராக இருந்தார்கள், அவர்கள் எந்த நாடு, என்ன குலம் என்பதை புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்



அதாவது கள்ளர் நாடுகளில் தொண்டமான், நத்தம், மதுரை, மேலூர் 30 முதல் 40000 கள்ளர்கள் ஆயுதங்களுடன் (சிவகங்கை கள்ளர்களை சேர்க்காமல்) பல கள்ளர் தலைவர்களின் கீழ் இருந்துள்ளார்கள் என்று குறிக்கிறார்கள்.


1891சென்செக்ஸ் ஆப் இந்தியாவில் கள்ளர்களின் மொத்த எண்ணிக்கையே 4,10,983 தான், அந்த கணக்கெடுப்புக்கு 104வருடங்களுக்கு முன்பு கள்ளர்களின் எண்ணிக்கை 3  லட்சங்கள் கூட இருக்காது.



மேலும் அதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பிரித்தால் 1லட்சம் கூட இருக்காது, ஆக அனைத்து கள்ளர் ஆண்மகன்கள் போர் தொழில் மட்டுமே செய்துவந்துள்ளனர் என்பதே இதில் சிறப்பு வாய்ந்தது.



எவ்வளவு போர் பாரம்பரியம் மிக்க போரை மட்டுமே தொழிலாக வைத்துள்ளார்கள் இந்த கள்ளர் பெருமக்கள்.







மறவர் மக்களும் போரை மட்டுமே தொழிலாக கொண்டிருந்திருக்கிறார்கள். இது போக ஆங்கிலேயருக்கு எதிராக இந்த மக்கள் செய்த உயிர் தியாகம் ஒரு யுகம் சொல்லி மாளாது, அதனால் தான் என்னவோ கள்ளர், மறவர், அகம்படியர்களை ஆங்கிலேயர்கள் MILITARY TRIBE என்று கூறி பிற்காலத்தில் குற்ற பழங்குடியினராக ஒடுக்கப்படுகிறார்கள்.







தமிழகத்தின் பழங்குடிகள் 
பிரான்சிஸ் ஹக்ஸ்லி என்ற இங்கிலாந்து மானிடவியலாளர் உலகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு 321 பழங்குடியினர்களின் வாழ்வியல்களை பற்றி தனது குறிப்பில் எழுதியுள்ளார் அதை கிபி1964ல் மேரி சிம்ஸ் மற்றும் மேரி கேமிட்ஜ் புத்தகமாக தொகுத்துள்ளனர்.



ஒரு பழங்குடியினர் அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் தங்களுக்கென்று தனி கலாச்சாரம்,பண்பாடு,வழிபாடு என மற்றவர்களிடம் இருந்து வேறுபட வேண்டும். மேலும் அதே கலாச்சாரம் உலகில் இன்னொரு பழங்குடி மரபோடு தொடர்புபட வேண்டும்.


அப்படி அந்த மானிடவியலாளர் வட இந்தியாவில் ஜாட்,ராஜ புத்திரர்கள்,கூர்க்கர்கள் எனவும் மத்திய இந்தியாவில் கோண்ட்ஸ் என்ற இனத்தவரையும்


தென்னிந்தியாவில் கள்ளர், மறவர், தோடர், ஊராளிகள் என்று ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் 8பேரை மட்டும் தான் குறித்துள்ளார்.


அதில் அந்த மானிடவியலாளர் கள்ளர், மறவரை பழங்குடியினராக அங்கீகரிக்க காரணம் அவர்களுடைய வீரம் தான், ஆம் அவர் கூற்றுப்படி காளையை அடக்குபவர்கள் மற்றும் காளையை வழிபடுகிறவர்கள் என்று குறிக்கிறார்.


அதுமட்டுமல்லாமல் கள்ளர்,மறவருடைய இந்த பண்பு மட்டும் கலாச்சாரம் சுமார் 3000 வருட பழமையான நாகரீகமான கிரேக்க மைசினாயியன் கலாச்சாரத்தில் நேரடி தொடர்பாக உள்ளது என்றும் அங்கும் சற்றும் மாறுபடாமல் காளை அடக்குவதும்,வழிபடுவதும் உள்ளது எனக் குறிக்கிறார்.

ஆனால் கிரேக்கத்தில் அந்த கலாச்சாரம் சுமார் 1500 வருடங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனால் நாம் இன்றும் அந்த கலாச்சாரத்தை கைவிடமால் அதை பேணிப் பாதுகாத்து வருகிறோம். சிந்து சமவெளி நாகரிகத்திலும் ஒரு வீரன் காளையை அடக்குவது போல் ஓவியம் உள்ளது.


இன்றும் அனைத்து கள்ளர் நாடுகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு என பாதுகாத்து வருகின்றனர் நம் மக்கள்.

ஆய்வு: உயர்திரு. சோழ பாண்டியன்

தகவல் : 

ENGLISH INTEREST IN INDIA 1767 by WILLIAM (Member of parliament) and late commander of southern army on the coast of coromandel

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்