ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

கள்ளனிடம் களவாடப்பட்ட வீரவசனம் " வானம் பொழிகிறது; பூமி விளைகிறது"



" வானம் பொழிகிறது; பூமி விளைகிறது" என்ற வீரவசனம் கேட்டவுடன் அனைவருக்கும் நியாபத்திற்கு வருவது, கட்டபொம்மன் பிரிட்டிஸாருக்கு எதிரா பேசிய வீரவசனம் என்றே.

ஆனால் உண்மை வேறு மாதிரி உள்ளது, ஆங்கிலேயர் குறிப்பில் கட்டபொம்மன் அப்படி பேசினாரா என்று ஆய்வு செய்யும் பொது, இந்த வீரவசனம் பேசியவர்கள் யார் என்றால் இந்த தமிழ் மண்ணின் ஆதிக்குடியாகிய, யாருக்கும்  கட்டப்படாமல் தனரசாக ஆட்சி செய்து வாழ்ந்த கள்ளர்களே (பிரான்மலை கள்ளர்கள்).

1750களில் பிரிட்டிஸார் மதுரை மண்டலத்தில் வரி வசூல் செய்யும் உரிமையை பெற்று தன்னரசு கள்ளர் நாட்டிற்கு வந்த பொழுது பிரிட்டீஸார் கள்ளர் நாட்டாரிடம் வரி கேட்ட போது அவர்கள் அளித்த பதில் என்னவென்று பிரிட்டிஸாரே புத்தகம் எழுதியுள்ளனர்.

ராபர்ட் ஓர்ம், s.c ஹீல், எட்கர் தர்ட்சன் எழுதிய நூல்களில் பிரிட்டீஸ் அரசு தன்னரசு கள்ளர்களிடம் வரியை கேட்டது அதற்கு அவர்கள் அவமானம் அளிக்கும் வார்த்தைகளால் பதிலை அளித்தார்கள் என்று கூறுகிறார்கள்.

கள்ளர்களின் பதில்:

“வானம் பூமிக்கு மழையைத் தருகிறது, எங்கள் வயலை நாங்கள் உழுது பயிரிட்டு உழைக்கிறோம். அதனால் கிடைக்கும் பிரதிபலனை எங்கள் மக்கள் அனுபவிக்கிறார்கள். இதில் என்ன காரணம் உள்ளது நாங்கள் உங்களுக்கு கீழ்பணிந்து வரி செலுத்துவதற்கு?” 



மேலும் அந்த புத்தகத்தில் அவர்கள் அந்த பதிலுக்கு ஏற்றால் போல் எங்களிடம் சண்டையிட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.

இதை ஆங்கில ஆய்வாளர்கள் எழுதியதால் கொஞ்சம் நாகரீக வார்த்தைகளால் எழுதியுள்ளனர். 

இந்த சினிமாக்காரர்கள் இந்த வசனத்தை கட்டபொம்மன் பேசியது மாதிரி அதுவும் ஒரு கள்ளர் பெருமகனையே வைத்து நடிக்க வைத்து  மக்கள் மனதில் பதியவைத்துவிட்டார்கள். அதையே  இந்த அரசியல்வாதிகள் பாடப்புத்தகத்தில் கட்டபொம்மன் பேசினார் என்று போட்டுள்ளனர்.

ஆய்வு : உயர்திரு. சோழ பாண்டியன்

தகவல்:
The rebel commandant by S.C Hill
East india magazine by R.Alexander
Castes and Tribes of south India by Edger thurston

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்