ஞாயிறு, 4 மார்ச், 2007

தியாகி. நா.சு.வீரைய்யா வாண்டையார்

சுதந்திர போராட்ட வீரர், தியாகி.
நா.சு.வீரைய்யா வாண்டையார்
குடும்பத்தினர்.

ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தின் பழம்பெரும் குடந்தை எனும் கும்பகோணம் மாநகரில் கடந்த 36 வருடங்களுக்கு முன்பு (1985ல்)அனைத்து உலகதர வசதிகளையும் கொண்ட பல்நோக்கு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை எங்களது பெரிய தகப்பனாரும் குடவாசல் வட்டம் நார்சிங்கம்பேட்டை மறைந்த தியாகி, பெருநிலகிழார்.NS.வீரைய்யா வாண்டையாரின் மூத்த புதல்வர் N.S.V.சாந்த மூர்த்தி அவர்கள் தன் கடும் உழைப்பினாலும்,பல உலக நாடுகளில் 15 வருடங்கள் பணிசெய்து தான் ஈட்டிய பொருளின் முக்கால் பகுதியினை தன் பகுதி மக்களின் நலத்திற்காகவும் ஏழை எளிய மக்களான அவர்கள் குறைந்த செலவில் உலகதரம் வாய்ந்த உயர் சிகிச்சையினை பெற்று,நலமுடன் வாழ்ந்திடவும்,அதனை தன் பகுதி மக்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமை என எண்ணியும் தனது அன்பு மனைவியின் பெயரில் (விமலா) விமல் மெடிக்கேர் சென்டர்(VMC) என தொடங்கினார்.அந்த மருத்துவமனை அன்றைய அகில இந்திய காங்கிரசின் தலைவர் அய்யா G.k.மூப்பனார் அவர்களால் திறக்கபட வேண்டியது.தவிர்க்கமுடியாத காரணத்தால் அவர் வர இயலவில்லை மாறாக அவரின் அன்பு தம்பி G.R.மூப்பனார் மற்றும் மத்திய MP.பக்கிர் முகமது அவர்களாலும் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசை கச்சேரியுடனும் சீறும் சிறப்புடனும் தொடங்கி வைக்கப்பட்டு கடந்த 2005 வரையில் மிகசிறந்த முறையில்  Dr.V.சாந்தமூர்த்தி அவர்களின் தலைமையில் மக்களுக்கு சேவையாற்றியதை கும்பகோணம் மக்கள் நன்கு அறிவர்.அந்த காலம் முதல் இன்றுதொட்டு அந்த பகுதியின் Landmark கும்,பேருந்து நிறுத்தமும் எங்களது மருத்துவமனைதான்.








இன்று அகர்வால் கண் மருத்துவமனை குழுமம் அதில் கண் மருத்துவமனை நடத்திக்கொண்டுள்ளனர்.அதேபோல் கடந்த 35 ஆண்டுகளாக ஞாயிற்று கிழமைகளில் ஏழை எளியோருக்கு இலவச மருத்துவத்தையும் புரிந்து இன்றளவும் தனது 76 வயதிலும் மருத்துவ சேவை இடையறாது செய்து வருகிறார் எங்கள் தந்தை.
அவரை தந்தையாக நாங்கள் அடைந்ததற்கு பெருமைபடுகிறோம்.அவரது மகன்களான முதல்வரான Dr.செந்தில் குமார் மேற்கிந்திய தீவின் Trindad லும்,இரண்டாமவர் Dr.செந்தில் மாறன் சவுதி அரேபியாவில் மருத்துவ சேவையும்,மூன்றாமவர் Er.செந்தில் மாலன் சென்னை Hyundai கம்பேனியில் AGM ஆகவும் தங்களது பணியையும் செய்து வருகின்றனர்.

அன்புடன் இரா. அருண் பாரி






1984 தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் குத்தாலம் தொகுதி நமது கழக வேட்பாளராக எனது தந்தை NS. வீர. ராஜேந்திரன். Bsc... கழக பொதுச்செயலாளர் உயர்திரு SD. சோமசுந்தரம் அவர்களுடன்...




அ. கிருஷ்ணசாமி வாண்டையார்




ராவ் பகதூர் வி. அப்பசாமி வாண்டையார் அவர்களின் மகன்கள் ராவ் பகதூர் அ. வீரயா வாண்டையார் மற்றும் அ. கிருஷ்ணசாமி வாண்டையார் ஆவார்கள்.

ஏழை எளிய மக்களுக்காக 1956 ஆம் ஆண்டில் 11 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுடன் அவரது இல்லத்தில் தொடங்கப்பட்ட ஸ்ரீ புஷ்பம் கல்லூரி.

ஐயா அ. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின் மகன்கள் ஐயா. துளசிஅய்யா வாண்டையார் மற்றும் ஐயா. அய்யாறு வாண்டையார்.


1967 ல் தஞ்சை பூக்கார தெருவில் உள்ள பரிசுத்த நாடார் இல்லத்தில் நடைபெற்ற உபசரிப்பு. அதில் காமராஜர், கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் மூப்பனார் அவர்கள். இவர்களுடன் அருகில் நிற்பது பரிசுத்த நாடார் (தஞ்சை MLA) அவர்கள்.

அய்யாவு வாண்டையார்



130 ஆண்டுகள் பழமையான தர்ம சத்திரம் கரம்பயத்தில் உள்ளது. இது கரம்பயம் கத்தரிக்கொல்லை சாவடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது. அய்யாவு வாண்டையார் அறக்கட்டளையின் சொத்தாக இது இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல ஏக்கர் விவசாய நிலங்களும் இந்த அறக்கட்டளைக்கு சொந்தமானதாக இருக்கிறது. ஐந்து தலைமுறைகளாக அய்யாவு வாண்டையார் குடும்பத்தார் இதை நிர்வகிக்கிறார்கள். அய்யாவு வாண்டையார் என்பவர் கரம்பயத்தில் ஆதியில் வாழ்ந்த ஒரு பெரு நிலக்கிழார் ஆவார். பல ஆலயங்களுக்கு அறப்பணி செய்யும் இந்த அறக்கட்டளை பழனி ஸ்ரீ முருகப்பெருமான் ஆலய மேம்பாட்டிற்கும் பல தலைமுறைகளாக உதவி வருகிறது. தற்போதும் பழனி தண்டாயுதபாணி கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் இந்த வாண்டையார் வம்சாவழியினருக்கு முதல் மரியாதை தரப்படுகிறது.




சிவலிங்கம் வாண்டையார்




பூர்வீகம்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா ரும்பிரான் கோட்டை . 

மலேசியா, உலக தேக்வாண்டோ போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்று சாதித்தவர் சிவலிங்கம் வாண்டையார்

மலேசியா விளையாட்டுத்துறையில் சத்தமில்லாமல் உலக ரீதியில் சாதனை படைத்துள்ள ஒருசிலர் இன்னமும் நம்மிடையே இலைமறைகாயாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன அவ்வகையில் சிவலிங்கம் வாண்டையார் உலக அளவில் 3 தங்கப்பதக்கம் வென்று சாதித்தவர்.

அனைத்துலக தேக்வோண்டா கூட்டமைப்பு (ITF) கிராண்ட்மாஸ்டரான தேக்வோண்டோ கிராண்ட்மாஸ்டரும் முன்னாள் தேசிய விளையாட்டு நிறுவனத்தின் (என்எஸ்ஐ) உளவியலாளருமான வி.சிவலிங்கம்   அவர் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் கோவிட் -19 தொற்றின் காரணமாக 59 வயதில் பலியானார்.

அவர் மூளை மற்றும் முதுகெலும்பில் உள்ள நரம்பு செல்களைத் தடுக்கும் ஒரு முற்போக்கான நரம்பு மண்டல நோயான amyotrophic lateral sclerosis (ALS) நோயால் அவதிப்பட்டார்.

மலேசிய தேக்வோண்டோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருவரை மறக்க முடியாததால் இந்த செய்தியை நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இது உண்மையிலேயே நமது தேசத்திற்கு பெரும் இழப்பாகும்” என்று மலேசியாவின் ஐடிஎஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் ITF தேக்வோண்டாவை ஊக்குவிப்பதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்.

சிவலிங்கம் இலகுரக பிரிவில் மூன்று உலக தேக்வோண்டோ சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றவர். அவர் 1990 (Montreal), 1992 (Pyongyang) மற்றும் 1994 (Kuala Terengganu) ஆகியவற்றில் வென்றார். கிள்ளான் பள்ளத்தாக்கில் டேக்வாண்டோ மற்றும் யோகா மையங்களை அமைப்பதற்கு அவர் பொறுப்பாக இருந்தார் மற்றும் என்எஸ்ஐ ஒரு உளவியலாளராக பணியமர்த்தப்பட்டார். அங்கு அவர் நயோகாவையும் அறிமுகப்படுத்தினார்.





நாராயண வாண்டையார்





நொச்சியம் ஆதிமூல வாண்டையார்



அய்யா சாமி வாண்டையார்


தஞ்சாவூர் நகரசபை சேர்மன் ஆக இருந்தவர் அய்யா சாமி வாண்டையார். பழைய பேருந்து நிலையத்தில் S . அய்யாசாமி வாண்டையார் பெயரில் வளைவு  (ஆர்ச்) உள்ளது.  இவர் காலத்தில் தஞ்சை கோட்டை தெற்கு அகழி தூர்க்கப்பட்டு புது (இப்போது பழைய) பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. 

இவர் நினைவாக அய்யா சாமி வாண்டையார் முனிசிபல் பஸ் ஸ்டாண்ட் என பெயர் சூட்டப்பட்டு முன் பகுதியில் இவரது மார்பளவு சிலை வைக்கப்பட்டது. சிலை வைத்தவர் அப்போது முனிசிபல் சேர்மனாக இருந்த திரு. பரிசுத்த நாடார் அவர்கள். சிலை திறப்பாளர் அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்கள்.











அகழியைத் தூர்த்து கட்டபட்ட அய்யாசாமி வாண்டையார் பழைய பேருந்து நிலையம்






வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்