காலம் : மல்லிகார்ஜுனராயர், சக வருஷம் 1385, இ.பி. 1463.
இடம் : உஞ்சினி பெருவழியப்பர் ,கோயில் தர்மகர்த்தா திரு.சாமிநாத படையாச்சியிடம் உள்ள செப்புப்பட்டையம்.
செய்தி : வில்லவராயர் என்பவர் இப்பகுதியின் நிருவாக அதிகாரியாக இருந்த போது பஞ்சவராயர், வள்ளையார், அங்குராயர், பக்கமழகியார் ஆகிய நான்கு பேர்களுக்கு காணியாட் சியாக நிலம், வீட்டுமனைகள் கொடுக்கப்பட்டன. அவை சானைக்குறிச்சி, சென்னிவனம், இராச கம்பீரபுரம், உஞ்சினி ஆகிய ஊர்களில் இருந்தன. பெருவழியப்பார் கோயில் முதல் மரியாதை உள்ளிட்ட உரிமைகளும் கொடுக்கப் பட்டுள்ளதைத் தெரிவிக்கிறது.
மல்லிகார்ஜுனராயர் தன்னை இதில் வன்னிய குலகாலன் என்று குறிப்பிடுகிறார்.
வில்லவராயர், பஞ்சவராயர், வள்ளையார், அங்குராயர், பக்கமழகியார் என்ற கள்ளர் குடும்பங்கள் இன்றும் தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் பகுதியில் உள்ளனர்.
வில்லவராயர் பட்டமுடைய கள்ளர்கள் வாழும் திண்டுக்கல்
அங்கராயர் பட்டமுடைய கள்ளர்கள் வாழும் புதுக்கோட்டை வத்தனாக்கோட்டை அங்குராப்பட்டி
வள்ளையார் பட்டமுடைய கள்ளர்கள் - தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு வட்டாரத்தில் அமைந்துள்ளது கண்ணுகுடி மையம்
பஞ்சவராயர் பட்டமுடைய கள்ளர்கள் புதுக்கோட்டை பாலண்டாம்பட்டி