மதுரையம்பதியில்
நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு
வழங்கி, மதுரையில் தங்குவதற்கு உதவினான். இதே போன்று சோழ மன்னன் சோழ நாட்டின் தலைநகரான
உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று
உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் இன்றும் இருக்கிறது. திருச்சி
நகரில், கோட்டை இரயிலடியில் கி.பி. 734 இல் (ஹிஜ்ரி 116ல்) கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம்
'கல்லுப்பள்ளி' என்றழைக்கப்படுகிறது. மாமன்னர் கிழவன் சேதுபதிக்கு முகமதியர் சீதக்காதி
மதியுரை அமைச்சர்போன்று விளங்கினார்.
15-ம்
நூற்றாண்டில் அருணகிரிநாதர் முருகனைப் புகழ்ந்து பாடும்போது ‘சூர்க்கொன்ற ராவுத்தனே’
என்றும் ‘மாமயிலேறும் ராவுத்தனே’ என்றும் பாடுகிறார். வைணவர்களுக்கு ஸ்ரீரங்கத்தில்
துலுக்க நாச்சியாரும், அய்யப்ப பக்தர்களுக்கு எருமேலியில் வாவர் சாமியும், வட மாவட்டங்களில்
திரௌபதி அம்மன் வழிபாட்டில் முத்தால ராவுத்தரும், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களின்,
காகம் கண்ணன் கூட்டத்தாரின் குலதெய்வமாக ராவுத்தரும் சிறு தெய்வங்களாக வழிபடப்பட்டு
வருகின்றனர்.
இப்படி
தமிழ் மக்களோடு கலந்து நின்ற முகமதியர்களோடு கள்ளர்கள் குடிக்கள்ளன் என்ற காவல் முறையை
கொண்டனர்.
கள்ளர்களுக்கும், தென்னிந்தியாவின் முகமதியர்களுக்கும் இடையே பல சுவாரஸ்யமான ஒற்றுமைகள் உள்ளன. முதலாவதாக, விருத்தசேதனம் இரு சமூகங்களிலும் நடைமுறையில் உள்ளது. இரண்டாவதாக, இரண்டிலும் குறிப்பிட்ட அளவு பலதார மணம் உள்ளது. மூன்றாவதாக, இரு சமூகங்களிலும் திருமணத்திற்கு மணமகன் குதிரையில் செல்லும் வழக்கம் உள்ளது. நான்காவதாக, இருவரிலும் ஒரே மாதிரியான திருமண விழாவிற்கு பெண்கள் முக்காடு போடப்படுகிறார்கள். ஐந்தாவது: கல்லாறு பெண்கள் முஸ்லீம் சின்னத்தைக் குறிக்கும் பிறை வடிவ பதக்கத்தை அணிவார்கள். ஆறாவது, இரு சமூகங்களிலும் பெண்கள் கருப்பு மணிகளை அணிவார்கள். ஏழாவதாக, கள்ளர்களிடையே “முஹம்மதியர்களை ‘தாத்தா,’ ‘மாமா’ அல்லது ‘பேரன்’ என்று பொருத்தமான சொற்களுடன் முகமதியர் பதிலளிக்கும் உறவின் சில வார்த்தைகளை அழைக்கும் வழக்கம் உள்ளது.
சு.சமுத்திரம்
எழுதிய, "எனது கதைகளின் கதைகள்' என்ற நூலில் இருந்து.
மதுரைக்கு
அருகே, கிடாரிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே நிலச்சீர்திருத்தச் சட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட
மிகுதி நில வினியோகம் பற்றி கண்டறிய, வானொலி சார்பாக சென்றபோது, ஒரு ரசமான செய்தி கிடைத்தது.
அந்த கிராமத்திலும், அதன் சுற்றுப்புற வட்டாரத்திலும், முக்குலத்தோரில், கள்ளர் பிரிவினர்
அதிகம். இதற்கு அடுத்தப்படியாக முஸ்லிம்கள் இடம் பெறுகின்றனர். நாடார்கள், மூப்பனார்கள்
ஆகியோரும் உள்ளனர்.
பொதுவாக,
இந்த பகுதியில் ஜாதிச்சண்டை கிடையாது; சமயச் சண்டையும் கிடையாது; அதுவும் இந்து - முஸ்லிம்
என்ற பேதமே எள்ளளவும் இல்லை. இதற்குக் காரணம், "குடிகள்ளன்' என்ற ஒரு முறைமை,
அந்தப் பக்கம் இன்னமும் புழக்கத்தில் இருக்கிறது.
அதாவது,
சிறுபான்மையினரான ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திற்கும், ஒரு கள்ளர் குடும்பம், அதன்
நல்லது, கெட்டதுகளை கவனித்துக் கொள்ளும். இதற்குக் குடிகள்ளன் குடும்பம் என்று பெயர்.
இந்தக் குடும்பத்திற்கும், சம்பந்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்திற்கும் சகோதர பந்தம்
உண்டு. இந்த முறை, இத்தகைய இரு குடும்பங்களுக்கிடையே காலங்காலமாக இருந்து வருகிறது.
உதாரணமாக,
ஒரு முஸ்லிம் குடும்பத்து பெண்ணை, வெளியூரில் கட்டிக் கொடுத்து, அங்கே அவள் பல இன்னல்களுக்கு
ஆளானபோது, அவளுடைய சொந்த ஊர் குடிகள்ளன், தன் சகாக்களோடு அவளது புகுந்த வீட்டிற்குப்
போய், அவளை துன்புறுத்தியவர்களை மரத்தில் கட்டி வைத்து விட்டார்.
ஒரு
முஸ்லிமிற்கும், ஒரு கள்ளருக்கும் ஏதோ தகராறு வந்தால், முஸ்லிம் பக்கமே நிற்பார் இந்த
குடிகள்ளன். இவருடைய கல்யாணத்தில், அந்த முஸ்லிம் வீட்டிற்கு முதல் வெற்றிலை; அந்த
முஸ்லிம் வீட்டுக் கல்யாணத்தில் இவருக்கு முதல் பாக்கு.
இந்த
செய்தி, தமிழகத்தில் பெரும்பாலோருக்கு, குறிப்பாக, நம் எழுத்தாளர்களுக்கு நிச்சயம்
தெரியாது.
குடிகள்ளன் - உடையார் :
கள்ளர்களுக்கும் உடையார் பட்டமாக உள்ளது. கள்ளர்களின் அரசுக்குடையார், அன்னமுடையார், உலகுடையார், உழுவுடையார், பனையுடையார், பசையுடையார், வேணுடையார் போன்ற பட்டங்கள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் செருகடம்பூர் ஊரில் உடையார் பட்டம் உள்ள கள்ளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் இன்று உடையார் என்று தனி சதியாகவும் உள்ளனர்.
புதுகோட்டை குன்னாண்டார் கோவில் உடையாளிபட்டி பஞ்சாயத்து புதுக்கோட்டை மாவட்டதில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் வாழும் உடையார்கள் தங்களுக்கென்று தனியான பஞ்சாயத்து முறை பின்பற்றுவதில்லை தங்களுக்குள்ளோ அல்லது வேறு பிற சாதி மக்களால் ஏன் கள்ளர்களால் கூட எழும் எந்த பிரச்சனையானாலும் முதலில் கள்ளர்களை நாடுவார்கள் அல்லது அதன் பிறகே நீதிமன்றம் செல்வார்கள்.
இங்கு முன்பு நடைமுறையில் இருந்த இந்த குடிகள்ளர் வழக்கம் உடையார்கள் எந்த ஒரு சர்ச்சை பிரச்சனை என்றாலும் கள்ளர்களை நாடுவர் கள்ளர்கள் முன்நின்று அதை தீர்த்துவைப்பர் அதாவது இந்த குடிகள்ளன் முறை தற்போது வழக்கில் இல்லை என்றாலும் இன்றும் கள்ளர் உடையார் மக்களிடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அது தொடர்பான சடங்குகளும் நடைமுறையில் உண்டு.
ஒவ்வொரு உடையார் குடும்பத்திற்கும், ஒரு கள்ளர் அல்லது கள்ளர் கூட்டம் குடிகாவல் செய்வர் அவர்கள் உயிர், உடைமைகளை காப்பது இவர்கள் கடைமையாகும். தமது குடிகள்ளர்க்கு ஏதும் பொருளாதார பிரச்சனை என்றால் அந்த உடையார் உதவி செய்வார் அதற்க்கு பதிலாக அவரது குடும்பத்தையும் உடைமைகளையும் பிற கள்ளர் குழுக்களால் ஏதும் பாதிப்பு வராமல் காப்பாற்றுவார்,. உடையார்கள் உரிமையாக "எங்க கள்ளவீட்டு ஆளுக" என்று சொல்வார்கள். ஒரு பிரச்சனை என்றால் உடையார் தனது அங்காளி பங்காளி மாமன் மச்சான கூட நம்ம மாட்டார்கள் சம்பந்தமுடைய குடிகள்ளர்களிடம் தான் முதலில் முறையிடுவர்.
இதற்க்கு மற்றொரு காரணமும் உண்டு உடையார்களுக்குள் பொறாமை குணம் அதிகம் தனது சாதிகாரனை நம்புவதில்லை என களஆய்வில் ஒரு உடையார் இன பெரியவர் கூறியுள்ளார். ஒரு உடையாருக்கும் கள்ளருக்கும் பிரச்சனை வரும்போது இந்த குடிகள்ளன் உடையார் பக்கமே இருப்பார்.
கள்ளர் சரித்திரதில் ஐயா வேங்கடசாமி நாட்டார் அவர்கள் கள்ளார்களின் தலைகாவல் முறி பட்டயங்கள் சிலவற்றை சொல்லியுள்ளார் அதில் கூட ரெட்டியார்கள், உடையார்கள் அவர்களுக்கு சொந்தமான நிலங்கள், கிராமங்கள் என கள்ளர்கள் காவல் செய்த பல கிராமங்கள் பற்றி அறியலாம்.
குடிகள்ளன் - இடையர் :
ஆயிரம் வீட்டிடையர்களின் காப்பாளன் திருமலை பின்னத்தேவன் என்று இடையர்களை காத்த கள்ளர் வரலாறும் இன்றும் தென்மாவட்டங்களில் கோனார்களுக்கும் தேவர்களுக்கும் இடையே உள்ள உறவு பரவலாக அணைத்து சமுதாயமும் அறிந்திருந்ததே,
இதே குடிகாவல் முறை தென்மாவட்டங்களில் மட்டும்மல்லாது புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை என அணைத்து கள்ளர்நாடுகளிலும் இந்த காவல் முறை குடிகாவல் இருந்ததற்க்கு இது ஒரு உதாரணம்.
புதுக்கோட்டை ஆழ்வான்பட்டியில் ஒரு சிறிய கிராமம் இங்கு முப்பதிற்க்கும் மேற்ப்பட்ட கோனார்களும் கள்ளரில் மட்டையர் பட்டம் உள்ளவர்களும் உள்ளனர், இங்குள்ள கோனார்களும் உடையார்களை போலவே கள்ளர்கள் போல வழுவான நாடு, நிர்வாக அமைப்போ பஞ்சாயத்து முறையோ இல்லாதவர்கள், அதனால் அவர்கள் எதும் பிரச்சனை என்றால் கூடியவரை அவர்களுக்குள் தீர்க்க முற்ப்படுவர் இல்லை என்றால் கள்ளர்களிடமே முறையிடுவர்.
ஆங்கிலேயர்களின் தூண்டுதலில் குடிகாவல்(குடிகள்ளன்) முறைக்கு எதிராக நடத்தப்பட்ட பண்டு கலவரத்தின் முடிவில் நீதி விசாரனையின் போது செட்டியார்களும், உடையார்களும் கள்ளர்களையே ஆதரித்தனர் என்பது பதிவாகியுள்ளது.
ஜமீன்களை மீட்ட குடி கள்ளர்கள்
1790 களில் நவாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள செய்தியில் வரி பாக்கியை கட்ட தவறியதால் அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஜமீன்களை திருச்சி சிறையிலும் பின்னர் அவர்கள் சொந்த ஊரிலும் சிறையில் அடைக்கப்பட்டபோது பத்தாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட உடையாரின்(ஜமீன்களின்) கள்ளர்கள் சுவரில் துளையிட்டு கோட்டைக்குள் புகுந்து ஜமீன்களை மீட்டு நவாப்பின் ஆட்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
https://books.google.co.in/books…
நன்றி : உயர்திரு. கார்த்திக் காலிங்கராயர்