செவ்வாய், 30 அக்டோபர், 2018

பொ. ஆ 1745 இல் தஞ்சை கள்ளரிடம் இருந்து மாறுவேடத்தில் தப்பித்து ஒடிய மராட்டிய படையினர்



பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவாளனாகிய சந்தாசாகிபு கி.பி.1739  இல் தஞ்சாவூர் மீது படையெடுத்துச் சாகுஜியைக் கைது செய்து, துக்கோஜியின் ஐந்தாவது மகனாகிய பிரதாப் சிங் என்பவரைத் தஞ்சை அரியணையில் ஏற்றினான். பிரதாப் சிங் காலத்தில் தான் தஞ்சை உள் நாட்டு விவகாரத்தில் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுகாரர்கள் தலையிட ஆரம்பித்தார்கள்.

கிபி 1745 ல், மராத்தியரின் சதாரா இராச்சியத்தின் மன்னரின் படை தளபதி முராரி ராவ் தலைமையில் திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளை தாக்கியது. மராத்தியர்கள் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் புகுந்து தங்களது சூரையாடலை தொடங்கினர்.

கிபி 1745ல் மார்ச் மாதம், ஆவூரில் இருந்த பாதரியார்கள் மற்றும் கிறிஸ்தவ மத பரப்புரை செய்பவர்கள் மராத்தியரிடம் இருந்து தப்பித்து , தஞ்சையிலுள்ள குண்ணம்பட்டி கிராம கள்ளர்களிடம் சரணடைந்தனர்.



புதுக்கோட்டை சமஸ்தான எல்லையில் உள்ள மலையடிப்பட்டி கிராம மக்கள் தங்களது ஆடு மாடுகளுடன் நார்த்தாமலை பக்கம் சென்று விட்டனர்.

ஒரு மாதம் கழித்து திருச்சியில் இருந்த முகாலயர்கள், மராத்தியரை தாக்க தொடங்கினர். இதே சமயத்தில் கள்ளர்களும் மராத்தியபடையை தாக்கினர். மராத்திய படையின் படைபற்றுகளை சூரையாடினர்.

கிட்டதட்ட 3000 மராத்திய குதிரை படை வீரர்கள் கள்ளர்களின் தாக்குதலில் நிலைகுலைந்தனர். மராத்தியபடையின் போர்கருவிகள் கள்ளர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.

கள்ளர்களின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் தங்களது குதிரைகளை விற்றுவிட்டு , கள்ளர்களிடம் மீண்டும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மாறுவேடமிட்டு நடைபயணமாக தங்களது சதாரா நாட்டிற்கு தப்பி ஒடினர்  சதாரா இராச்சியத்தின் மராட்டியர்கள்.

மராட்டிய மன்னர் பிரதாப் சிங்  1758 - கள்ளர்கள் துணைக் கொண்டு பிரஞ்ச் கூட்டுப்படைகளை வெற்றிக்கொண்டதை நாம் அறிந்ததே 

நூல் : General history of Pudukkottai State R iyar pg 86

ஆய்வு : உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

திங்கள், 29 அக்டோபர், 2018

சம்புவராயர் மரபினர் / சம்புவரையர் வரலாறு


சம்புரான்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தில், சம்புவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

சோழப் பேரரசை உருவாக்குவதில் பெரும்பங்காற்றிய பல சிற்றரசுக் குடும்பங்களுள் சம்புவராயர் குடும்பமும் ஒன்றாகும்.

இராச நாராயண சம்புவரையன் 14ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற சம்புவரையர் வம்சத்தவன். சம்புவரையர் வம்சம் நெடுங்காலமாகத் தொடர்ந்து சிற்றரசாக இருந்து வந்துள்ளது. அவர்கள் வல்வில் ஓரியை தங்கள் முன்னோராக கூறிக் கொண்டார்கள்.



அதிராஜேந்திரன் (பொ.ஆ. 1070), மூன்றாம் இராஜராஜன் (பொ.ஆ. 1216-1257) காலம் வரையிலும் சோழர்களின் கீழ் அதிகாரிகளாகவும், படைத்தளபதிகளாகவும், காவல் செய்பவர்களாகவும், சிற்றரசர்களாகவும் விளங்கினர்.







சம்புவரையர் பல்லவர்களின் வழித்தோன்றல்களாக இருக்கலாம் என தி.வை. சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். இவர்கள் கல்வெட்டுகளில் சீயன், பல்லவாண்டான் போன்ற பட்டங்களும் (பல்லவவாண்டார் என்ற கள்ளர்களின் பட்டங்களில் ஒன்று, மேலும் சீயன் என்பது கள்ளர்கள் மட்டுமே தங்கள் தாத்தாவை அழைக்கும் ஒரு சொல்லாக இன்றும் இருப்பது குறிப்படத்தக்கது), ஏகாம்பர நாதர் உலாவில் பல்லவன் சம்பு குலப்பெருமாள் என்றும் குறிப்பிடுவது இவர்கள் பல்லவ மரபில் வந்தவர்களாக இருக்கலாம் என்ற கருத்து உள்ளது.






முதலாம் ஆதித்தனால் தொண்டைமண்டலம் கைப்பற்றப்பட்டு செயங்கொண்ட சோழமண்டலம் என்று பெயர் பெற்றது. இதில் ஒரு பிரிவான பல்குன்ற கோட்டத்தின் (வடாற்காடு சவ்வாது மலை) ஆட்சி தலைவராக நாடு காவல் புரிந்தவர்கள் சம்புவரையர்கள்.




 சம்புவராயரின் குலச்சின்னம் காளை.


சம்புவராயர் என்ற சொல், சம்பு + அரையர் என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது என்று கருதப்படுகிறது. சம்பு ஒரு குலத்தையோ அல்லது சிவனை, பெருமாளை குறிக்கும் பெயராகவும் இருக்கலாம். சம்புச்சயனம் என்பது பெருமாளின் படுக்கை குறிக்கும். அரையர் என்ற சொல் தலைவர் என்ற பொருளை தரும் ஒரு பட்டப்பெயர்.
சம்பு முனிவர் வழித்தோன்றல்கள் என்று பல கதைகள் கூறப்படுகின்றன.


ஆய்வாளர் டாக்டர். கோ. திருமாவளவன் முதலியார் 1989 ஆம் ஆண்டு ஆய்வு செய்து வெளியிட்ட சம்புவராயர் வரலாறு என்ற நூலில், சம்புவரையர் என்ற பெயர் கள்ளர் மரபினரில் ஒரு பிரிவினருக்கு உள்ளது என தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகிறது என்று கள்ளர்களை மட்டுமே சம்புவராயர்களோடு தொடர்புப்படுத்தி எழுதியுள்ளார்.


சம்புவராயர் என்ற பட்டமும், கள்ளர்களில் சம்புரார் என்ற பட்டம் வேறு உள்ளது. இவர்கள் புதுக்கோட்டை பகுதி சம்புரான்பட்டி, கல்லாலங்குடி என்ற ஊரில் உள்ளனர்.




மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் தனது நூல் ஆய்வில்



பள்ளிப்படைக் கோயில் சிற்பம்
பள்ளிப்படைக் கோயில் சிற்பம்

‘‘கேசவபுரம் கிராமத்தில், காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள சிற்பங்கள் வென்று மண்கொண்டானின் பள்ளிப்படை கோயில் சிற்பங்கள்தான். சிற்பத்தொகுதியில் மன்னனும், அவரது தேவியர்களும் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். சுமார் 2 அடி உயரம்; 3 அடி அகலம் கொண்ட கற்பலகையில் ஓர் அழகிய திருவாசி அலங்கரிக்க, அதன்கீழ் வென்று மண்கொண்டான் கம்பீரமாக சடைமுடித்த கொண்டையுடனும், முகத்தில் அழகான மீசையுடனுமாக அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் வலப்புறம் இருவரும், இடப்புறம் மூவருமாக 5 மகளிர் வணங்கிய நிலையில் உள்ளனர். இவர்கள் பட்டத்து ராணியும், துணைவியர்களுமாக இருக்கக்கூடும்.


இவர்களுக்கு மேற்புறமாக சாமரம் வீசியபடி ஒரு பணிப்பெண்ணும், அரசனுக்குரிய வெண்கொற்றக் குடையும் உள்ளன. மேலிரு விளிம்புகளில் வாள் மற்றும் உலகின் கண் மறையாத சூரியனும் இடம்பெற்றுள்ளது. மூலவர் அறைக்கு எதிரே, இச்சிற்பத்திற்கு எதிர் திசையில் மூவர் நிற்கும் நடுகல் சிற்பம் ஒன்றும் இருக்கிறது. இது, மன்னரை அரசியர்கள் வணங்குவதுபோல உள்ளது. இப்பள்ளிப்படை சிற்பத்தின் பின்னால், சுதையினால் காளிதேவியின் உருவம் அமைத்து, காளிகோயில் எனத் தற்போது அழைத்து வருகின்றனர். பள்ளிப்படைக் கோயில் என்பது மன்னன் மரணித்தபிறகு அவர்களைப் புதைத்த அல்லது எரித்த இடத்தின்மீது கட்டப்படுவதாகும்.

மண்கொண்டார்  கள்ளர்களின் பட்டங்களில் ஒன்று




சிற்பம்
சிற்பம்

வென்று மண்கொண்ட சம்புவராயர் படைவீட்டில் இயற்கை எய்தினார். அவரது உடல் கேசவபுரம் கிராமத்திற்கு அருகில் ஓடுகின்ற கமண்டல நதிக்கரையில் எரியூட்டப்பட்டது. இந்த எரிசாம்பலை கங்கை நதியில் கரைப்பதற்காக, அவரது மகன் ‘முதலாம் ராஜநாராயண சம்புவராயன்’ தமது அமைச்சர் மாதையனை அனுப்பிவைத்தார். அவர், அங்குசென்று எரிசாம்பலைக் கரைத்துவிட்டு திரும்பிய பின்னர், ஆரணிக்கு கிழக்கே ‘குட்டியம்’ என்ற ஊரில் பெருமளவில் நிலத்தைப் பரிசாக அளித்து, ‘கங்கையாடி மாதையன்’ என்ற பட்டத்தையும் தமது அமைச்சருக்கு வழங்கிச் சிறப்பித்திருக்கிறார் முதலாம் ராஜநாராயண சம்புவராயன்.


மாதையர், மாதயர் கள்ளர்களின் பட்டங்களில் ஒன்று


சம்புவராயர்கள் கல்வெட்டுகளில் காணப்படும் கள்ளர்களின் தொடர்பு உடைய கள்ளர் பட்டங்கள்:
1) சம்புவராயர்
2) சம்புரார்
3) சேதிராயர்
4) மண்கொண்டார்
5) விஞ்சிராயர்
6) பங்களராயர்
7) பல்லவாண்டார்
8) அதிகைமான்
9) நாட்டாள்வார்
10) வாணாதிராயர்
11) தென்னவராயர்
12)  தென்னதிரையன்
13) வன்னியர்

கச்சிராயர்

சம்புராயர்களின் தலைநகர் முதலில் விரிஞ்சிபுரம் (இங்கு கள்ளர்களின்  விஞ்சைராயர் என்ற பட்டம் குறிப்பிடத்தக்கதுபிறகு காஞ்சிபுரம் ஆகும். அவர்களது கோட்டை நகராக விளங்கி வலிமை சேர்த்தது மூன்று பக்கங்களிலும் மலைகளால் சூழப்பெற்ற இடை நிலத்தில் உள்ள படவேடு என்று அழைக்கப்படும் படைவீடு நகரமாகும். இந்த படைவீடு தொன்மையில் குறும்பர்கள் கீழ் இருந்தது. புகழ் பெற்ற இந்த படைவீடு இன்று சிறிய கிராமமாக தோற்றமளிக்கிறது.

சம்புவராயர்கள் கோட்டையின் அடிப்பகுதி, சுவர் பகுதிகள் கோட்டை மேடு என்ற இடத்தில் காணப்படுகின்றன.

சம்புகுலப்பெருமாளான இராசகம்பீரச் சம்புவராயர் எழுப்பப்பட்டதாக கூறப்படும் அம்மையப்பேச்சுரர் ஆலயம் படைவீடு பக்தியில் உள்ளது.

மூன்றாம் இராசராச சோழனின் இருபதாம் ஆண்டு கல்வெட்டொன்று வைகவூர்த் திருமலையிற் காணப்படுகிறது. அதில் சயங்கொண்ட சோழ மண்டலத்துத் தமனூர் நாட்டு விரன் பாக்கத்து இலாலப்பெருமாள் மகன் ஆண்டான்கள். பங்களராயர்க்குப் ( பங்களராயர் கள்ளர் பட்டங்களில் ஒன்று) பல்குன்றக்கோட்டத்துப் பங்கள் நாட்டு. நடுவில் .... க் குன்றத்தூரான ராசகம்பீர நல்லூர் இவர்க்குக். காணியாகக் கீழ் நோக்கின் கிணறும் மேனோக்கின மரமும். நாற்பாலெல்லையும் விற்றொற்றிப்பரிக்கிரயத்துக்கு வித்தாவ. தாகக் ..கொடுத்தோம். அத்தி மல்லன் சம்புகுலப்பெருமாளான. ராச கம்பீரச் சம்புவராயனேன்'' 11 என்று பொறிக்கப். பட்டுள்ளது பொறிக்கப். பட்டுள்ளது இதை ஆராய்ந்த திரு. பண்டாரத்தார் அவர்கள், இந்த ராச கம்பீரச் சம்புவராயனே மலைக்கோட்டை அமைத்து அதற்கு ராச கம்பீரபுரம், ராச கம்பீரமலை என்று அழைக்கப்பட்டது.

முதலாம் குலோத்துங்க சோழன் பதினைந்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் தான் (கி்.பி. 1085) செங்கேணி சாத்தன் சோழனான சேனாபதிகள் வாணராயன் என்பவரால் திருவேங்கடம் உடையாருக்கு எழுப்பிய ஆலையம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவனே சம்புவரையன் மரபின் முன்னோனாக கருதப்படுகிறான்.

கல்வெட்டுக்களில் சம்புவரையர் பெயர் முதலில் விக்கிரமசோழன் (1118-1136) ஆட்சியில் அம்மையப்பன் என்ற பெயருடைய இராசேந்திரசோழ சம்புவராயன் என்பவன் சீயமங்கலம் கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்தான் என்ற செய்தியும், அக்கோயில் கல்வெட்டில் செங்கேணி குடியில் பிறந்தவன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவனுடைய சகோதரன் புக்கதுறை வல்லவனான அகளங்க சம்புவரையன் மதுராந்தகம் கோயிலுக்கு ஆடுகள் வழங்கியுள்ளான்.

இரண்டாம் குலோத்துங்கச் சோழன் ஆட்சியில் காவல் தலைவராக இருந்தவன் செங்கேணி அம்மையப்பன் கண்ணுடைய பெருமாளான விக்கிரம சோழன் சம்புவரையன். இவன் விக்கிரம சோழன் ஆட்சியில் படை தலைவனாக இருந்த செங்கேணி அம்மையப்பன் நாலாயிரவன் என்பவனுடைய மகனாவான்.

இரண்டாம் இராசராச சோழன் (1146-1163) ஆட்சியில் காவல் அதிகாரியாக அம்மையப்பன் சீயன் பல்லவாண்டான் இராசநாராயண சம்புவரையன், மேலும் செங்கேணி அம்மையப்பன் எதிரிலிச் சோழ சம்புவரையன் என்ற படைதலைவன் கோயிலுக்கு நிலங்கள் அளித்தான்.

நித்த விநோத சம்புவரையர் மனைவி சோறுடையாள் பிரமதேசம் ஆலயத்திற்கு திருவிளக்கு, பசுக்கள் தானமாக அளித்துள்ளாள்.

தென்னாற்காடு பகுதியின் காவல் அதிகாரியாக அம்மையப்பன் பாண்டிய நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவரையன் இருந்துள்ளான்.

இரண்டாம் இராசாதிராசன் 11 ஆம் ஆண்டு கல்வெட்டு செங்கேணி குடும்பத்தின் பிரிவுகளுக்கு இடையே செங்கேணி அத்தியாண்டான் ராசேந்திர சோழ சம்புவராயன் மற்றும் செங்கேணி மிண்டன் சீயன் இடையே, அத்தியாண்டான் விக்கிரம சோழ சம்புவராயன் எதிராக ஏற்பட்ட அரசியல் ஒப்பந்தத்தை விவரிக்கிறது.

மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் செங்கேணி அத்திமல்லன் அம்மையப்பன் என்பவன், செங்கேணி வீரப்பெருமாள் அத்திமல்லன் எதிரிலி சோழச்சம்புவராயன் என்பவன் , செங்கேணி மிண்டன் அத்திமல்லன் சோழச்சம்புவராயன் என்பவன், செங்கேணி அம்மையப்பன் கண்ணுடைய பெருமாளான விக்கிரமச் சோழ சம்புவராயன் என்பவன், இவனுடைய மகன் செங்கேணி விராசனி அம்மையப்பன் தனி நின்று வென்றான் தன்வசி காட்டுவான் அழகிய சோழனான எதிரிலி சோழச்சம்புவராயன் என்பவன். தட்டைச்சேரி என்ற பகுதியை சேர்ந்த செங்கேணி அம்மையப்பன் அழகிய சோழனான எதிரிலி சோழச் சம்புவராயன் என்பவன், குலோத்துங்க சோழ சம்புவராயன் என்பவன் என பல சம்புவராயன் குறிக்கப்படுகின்றனர்.

செங்கேணி வீர சோழ அத்திமல்லனான குலோத்துங்க சோழ சம்புவராயன், கூடல் ஆளப்பிறந்தான் காடவராயனும், ஆளப்பிறந்தான் எதிரிலி சோழ சம்புவராயனும் யாதொரு தொடர்பும் கொள்வது இல்லை என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

செங்கம் பகுதியில் மலையன் வினையை வென்றானான கரிகாலசோழ ஆடையூர் நாடாள்வார், இராசராசதேவன் விடுகாதழகிய பெருமாளான இராசராச அதிகைமான், செங்கேணி அம்மையப்பன் அத்தி மல்லனான விக்கிரம சோழச்சம்புவராயன் மூவரும் தங்களுக்குள் ஒற்றுமை உடன்படிக்கை செய்துக்கொண்டனர். தங்கள் எதிரியான யாதவராயர், சீயகங்கன், குலோத்துங்க சோழசம்புவராயர் பிள்ளைகள் ஆகியோருடன் எந்த உறவும் கொள்ளுவது இல்லையென ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

மூன்றாம் ராசராசன் ஆட்சி காலத்தில் சோழ பேரரசில் குழப்பத்தை உருவாக்கி, பாண்டியர் கைப்படவும் காரணமாக இருந்தவர்கள் கோப்பெருசிங்கன் காடவராயன், மகதை நாடாண்ட வாணகோவரையனும் ஆவார்கள். இவர்கள் துணை நிற்க மாட்டோம் என்று குலோத்துங்க சோழ சம்புவராயர், ராஜேந்திர சோழ சம்புவராயர், பாண்டியநாடு கொண்டானான சம்புவராயர் உறுதிமொழி மேற்கொண்டுள்ளனர்.

மூன்றாம் ராசராசன் ஆட்சியில் சோழப்பேரரசு மாறவர்மன் சுந்தர பாண்டியனிடம் தோல்வி அடைந்து பெருமையை இழந்தது. கோப்பெருசிங்கன் காடவராயன் மூன்றாம் ராசராசனை சிறையில் அடைத்தான். கோப்பெருசிங்கன் தொண்டை பகுதியில் தனி ஆட்சி நடத்தினான், அவனுக்கு கீழ் சம்புவராயர் ஆட்சி தலைவராக மாற்றப்பட்டனர்.

மூன்றாம் ராசராசனை இரண்டாம் வல்லாளன் மீட்டான். மூன்றாம் ராசராசன் தன் மகன் மூன்றாம் ராஜேந்திரனை அரசனாக்கினான். மூன்றாம் ராஜேந்திரன் தன் திறமையால் பாண்டியரை வென்று தனி ஆட்சி செய்த காடவராயன், சேதிராயன், சம்புவராயன் ஆகியோரை தன் நண்பன் கண்ட கோபாலன் மூலம் வென்று ஆட்சி பொறுப்பை கண்ட கோபாலனிடம் ஒப்படைத்தான்.

கோபாலர்களின் கீழ் சம்புவராயர் ஆட்சி செய்ய தொடங்கினர். செங்கேணி வீரப்பெருமாள் கண்ட கோபாலன் குலோத்துங்க சோழ சம்புவராயன் கோயிலுக்கு நந்தா விளக்கு வைத்தான் ( 1250 -1280 ).

1277 கண்ட கோபாலர் ஆட்சியில் திருவோத்தூர் ஆலயத்தை சேர்ந்த தேவரடியாள் உண்ணாமுலையாள் மகள் சம்பா என்பவள் நாயனார் ஆளப்பிறந்தான் ராசராச சம்புவராயருக்கு விண்ணப்பம் செய்து பெற்ற திருமுகம் பற்றி கூறுகிறது. அத் திருமுகத்தை உறுதி செய்தவன் செங்கேணி விராகரன் ஆளப்பிறந்தான் ராசராச சம்புவராயன். செய்யாறு வட்டத்தில் ஆளப்பிறந்தான் என்ற ஊர் உள்ளது அதை போல் புதுக்கோட்டை பகுதியில் ஆளப்பிறந்தான் என்ற ஊர் உள்ளது. இது ஆளப்பிறந்தானான ராசராச சம்புவராயன் பெயரை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாடு, தொண்டை பகுதி, கண்ட கோபாலரின் நெல்லூர் எல்லாம் வெற்றிகொண்டார். அதற்கு பின் சம்புவராயர் பாண்டியர் கீழ் ஆட்சி தொடங்கினர். வீர சம்ப நாயனான் சம்புவராயன், மாறவர்மன் சுந்தரபாண்டியன் 12 வாது ஆட்சியில் ஆலயத்திற்கு இறையிலி அளித்துள்ளான்.

சடையவர்மன் வீரபாண்டியன் ஆட்சியில் ஸ்ரீ குலசேகர சம்புவராயன் பெயர் இடம்பெற்றுள்ளது. வீரபாண்டியன் 22 ஆம் ஆட்சி ஆண்டு வரை பாண்டிய அரசனின் மேலாட்சியை ஏற்றிருந்த குலசேகர சம்புவராயன் அதற்கு பிறகு தன்னாட்சி நடத்த தொடங்கினானான்.

மாறவர்மன் குலசேகர பாண்டியன் மகன்கள் இடையே ஏற்றப்பட்ட அதிகார மோதலால் பாண்டியர்கள் வலிமை இழந்தனர். இதனை பயன்படுத்தி வாணாதிராயர், சம்புவராயர், சேரன் ரவிவர்ம குலசேகரன் தனியாட்சி செய்யத்தொடங்கினர்.



வீரசம்பன் சம்புவரையர் தனியாட்சி செய்து, நாணயத்தை வெளியிட்டான். இவன் ஆட்சி செய்ய தொடங்கிய காலத்தில் முஸ்லீம் படையெடுப்பால், மாலிக்கப்பூர் அடித்த கொள்ளை, கொலை எதையும் இவன் தடுக்கவோ, எதிர்க்கவோ இல்லை, இவர்கள் தங்கள் மக்களை காத்துக்கொள்ள இக்கட்டான நிலையில் இருந்தனர்.

வீரசம்பன் சம்புவரையர் அடுத்து ஆட்சிக்கு வந்தவன் மண்கொண்டார் என்று அழைக்கப்பட்ட ஏகாம்பரநாத சம்புவராயர். இவனும் முஸ்லீம் படைகள் தடுத்து நிறுத்தமுடியவில்லை. இதனை இவனது 14 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. முஸ்லீம் படையடுப்பில் தென் பகுதி பாதிக்கப்பட்ட அளவில் வட தமிழ் பகுதிகள் பாதிக்கப்படவில்லை. இவன் இந்து மன்னர்களோடு சேராமல் தன் பகுதி காக்க முஸ்லீம் படையோடு அனுசரித்து போனதாக கூறப்படுகிறது.

பிறகு ஆட்சிக்கு வந்தவன் இராசநாராயண சம்புவராயர். இவன் விஜயநகர மன்னர் கீழ் ஆட்சி செய்தான்.

இவனுக்கு பின் வந்த இரண்டாம் மண்கொண்ட சம்புவராயர். இவன் விஜயநகர ஆட்சிக்கு எதிராக செயல்பட்டான் என்று விஜயநகர குமார கம்பணன் இவன் பகுதியை கைப்பற்றினான். இரண்டாம் மண்கொண்ட சம்புவராயர் போரில் குமார கம்பணனால் கொல்லப்பட்டார்

குறிப்பு:


1990 ஆம் ஆண்டு இல. தியாகராசன் மற்றும் கோ.தங்கவேலு என்பவர்கள் இணைந்து பள்ளி சாதிக்காக வெளியிட்ட சம்புவராயர் வரலாறு என்ற நூலில், சம்புவராயர் மன்னர்கள் பள்ளி இனத்தை சேர்ந்தவர்களாக எழுதியுள்ளனர். அதில் சம்புவராயர் கல்வெட்டில் காணப்படும் குடிப்பள்ளி என்பது பள்ளி இனத்தை குறிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள். குடிப்பள்ளி, கச்சிபள்ளி என்பவை இன்றும் ஊராக இருக்கும் போது அது குறிப்பிட்ட சாதியை குறிக்கும்

பிற்கால கல்வெட்டுகளில் " குடிப்பள்ளி" எனும் சொல் பட இடங்களில் வருகிறது. ஒர் ஊரை சேர்ந்த வாழுமிடத்தை குறிப்பிட குடிப்பள்ளி எனும் சொல் பயன்பட்டு  வந்துள்ளதை இந்திய கல்வெட்டு ஆவணங்கள் உணர்த்துகின்றன.


The former Maravarman Vira-Pandya, was the suzerain of a chief Kulasékhara Sambuvaraya, whose inscriptions ranging from his 11th to 22nd regnal years, come from Pallikondai in the present North Arcot District,











முதலாம் ராஜேந்திர சோழனின் கரந்தை செப்பேட்டில் " ஸ்ரீகரமங்கலமான கொட்டாரக் குடிப்பள்ளியும் புறக்குடியும் ஆக இவ்வூர்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.( ஏடு 11, வரி 482)
ராஜேந்திர சோழன் காலத்திலேயே குடிப்பள்ளி என்பது ஊரை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை இந்த செப்பேடு வரிகள் உணர்த்துகிறது.

கிபி 1120 ஆம் ஆண்டை சேர்ந்த விக்ரம சோழன் காலத்து திருவக்கரை கல்வெட்டில் " ஒய்மாநாடான விஜயராஜேந்திர வளநாட்டு முஞ்நூற்று குடிப்பள்ளி செங்கேணி அம்மையப்பன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 




இக்கல்வெட்டுக்கு விளக்கம் அளித்துள்ள இந்திய தொல்லியல் துறை முஞ்நூற்று குடிப்பள்ளி எனும் ஊரை சேர்ந்த செங்கேணி அம்மையப்பன் என குறிப்பிடுகிறது.  இக்கல்வெட்டில் குடிப்பள்ளி ஒர் இருப்பிடத்தை குறிப்பிடுவதாக அமைகிறது( ஆதாரம்: South Indian inscriptions vol 17 - கல்வெட்டு 201)




கிபி 1167 ஆம் ஆண்டை சேர்ந்த இரண்டாம் ராஜாதி ராஜ சோழனின் கல்வெட்டில் " எயில்நெடுங்கலநாட்டு நெடியத்துக் குடிப்பள்ளி அப்பன் சாத்தனும் " எனும் வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுக்கு விளக்கம் அளித்துள்ள இந்திய தொல்லியல் துறை " எயில்நெடுங்கல நாட்டின் நெடியம் எனும் ஊரில் உள்ள குடிப்பள்ளி எனும் பகுதியை சேர்ந்த சேந்த அப்பன் சாத்தன்" என குறிப்பிட்டுள்ளது.  குடிப்பள்ளி என்பது Hamlet எனும் வாழுமிடத்தை குறிப்பிடுவதாக தெளிவாக உணர்த்தியுள்ளனர்.(  ஆதாரம்: South Indian inscriptions vol 26 - கல்வெட்டு 373)

கிபி 1237 ஆம் ஆண்டை சேர்ந்த மூன்றாம் ராஜராஜன் கால திருக்கோயிலூர் கல்வெட்டு " பிரம்மதேயஞ் சிற்றிங்கூர் குடிப்பள்ளி பட்டன் சோழனான பெரிங்கூர்ப்பெரையன்" என குறிப்பிடுகிறது.

இக்கல்வெட்டில் பிரம்மதேயத்தை சேர்ந்த சிற்றிங்கூர் எனும் குடிப்பள்ளி( ஊரை)  சேர்ந்த பட்டன் பெரிங்கூர்ப்பெரையர் என்பவர் குறிப்பிடப்படுகிறார்.  

பிரம்மதேயம் என்பது பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதியாகும். இன்றைய அக்ரஹாரங்களே பிரம்மதேயங்கள் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பிராமணர்கள் வாழும் ஊரான சிற்றிங்கூர் குடிப்பள்ளியை  சேர்ந்த பட்டர் எனும் பிராமணர் இங்கு குறிப்பிடப்படுகிறார். 

கிபி 1244 ஆம் ஆண்டை சேர்ந்த ஈரோடு மாவட்ட பவானி வாகீசுவரர் கோயில் கல்வெட்டில் காணியுடைய பிராமணரில் மகாதேவ பட்டன் என்பவர் குறிப்பிடப்படுகிறார். 

இதன் மூலம் பிரம்மதேயத்தில் வாழும் பிராமணர்களின் ஊர் பகுதியும் குடிப்பள்ளி என வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. 

பதினோறாம் நூற்றாண்டை சேர்ந்த வீரராஜேந்திர சோழன் கால கல்வெட்டில்  " வேசாலி பிரம்மதேயத்து குடிப்பள்ளி பெருமான் மும்முடிசோழபெரியன்"  எனும் பிராமணர் குறிப்பிடப்படுகிறார். பிரம்மதேயத்தில் உள்ள சிற்றூர் குடிப்பள்ளி என குறிப்பிடப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.  


கிபி 1500 ஆம் ஆண்டில் இம்மடி நரசிங்கராயர் ஆட்சி காலத்தில் பெரிய குப்ப அய்யரும் சிறுதப்ப அய்யரும் மண்ணீஸ்வரமுடையார் கோயிலுக்கு நிலங்களை தானமாக அளித்தனர்.  தாங்கள் அளித்த நிலப்பகுதிகளின் பெயர்களை கல்வெட்டில் காட்டியுள்ளனர்.  இப்பிராமணர்கள் அளித்த நிலங்களின் பெயர்களில் "  குடிப்பள்ளி தடிக்குழி" யும் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே மேலே கொடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் பிராமணர்களில் வாழும் பிரம்ம தேயங்களில் குடிப்பள்ளி எனும் ஊர் குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டோம்.

சித்திரமேழி பெரிய நாட்டில் அமைந்த ஊர்களில் " குடிப்பள்ளியும்" ஒன்றாக அமைந்துள்ளது.

இன்றும் வேலூர் மாவட்டத்தில் குடிப்பள்ளி எனும் கிராமம் உள்ளது.  

ஆக மேலே கொடுக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் குடிப்பள்ளி எனும் சொல்லாடல் முந்தைய காலங்களில் சிற்றூரையும் வாழுமிடங்களையும் குறிக்க பயன்பட்டுள்ளதை அறியலாம்.










புதன், 24 அக்டோபர், 2018

மருது பாண்டியரும் கள்ளர் தலைவர்களும்



சின்ன மருதுவால் முன்னெடுக்கப்பட்ட தென்னிந்திய புரட்சி பிரிட்டீஸ் இந்தியாவால் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல இயலாது.


இந்த தென்னிந்திய புரட்சியின் தமிழ் நாட்டின் தலைமை இடமாக திகழ்ந்தது ஆனையூர்(கருமாத்தூர்) கள்ளர் நாடு என்பதை பிரிட்ஸார் மிகவும் ஆணித்தனமாக குறித்துள்ளனர்.

சிவகங்கை கள்ளர் நாட்டு தலைவர்கள், நெல்லை நாயக்க, மறவர் தலைவர்கள், இராமநாத மறவர் தலைவர்கள், திண்டுக்கல் நாயக்க தலைவர்கள் அனைவரும் ஆங்கிலேயருக்கெதிராக திட்டம் தீட்டி, செயல்பட்ட இடம் தான் ஆனையூர்(கருமாத்தூர்) கள்ளர் நாடு.


இந்த தென்னிந்திய புரட்சியை மேற்கோள் காட்டும் ஆங்கில வரலாற்று ஆய்வாளர்கள் “கள்ளர் பழங்குடிகளை ஆங்கிலேயரின் பரம்பரை எதிரிகள் என்றும் கள்ளர்களின் சுயாட்சி கொள்கையாலும், வீரியத்துடன் மார்பை காட்டி எதிர்த்து நிற்கும் குணத்தாலும், இடைவிடாத தாக்குதல் பண்பாலும் கள்ளர் பழங்குடிகளை கண்முடித்தனமாக ஆங்கிலேய தளபதிகள் கொலை செய்துள்ளனர் என குறிக்கின்றனர்.


இந்த வேங்கை சின்ன மருதுவின் தென்னிந்திய புரட்சியில் நாம் கடந்து செல்ல முடியாத ஊர்களில் மேலூர் கள்ளர் நாடும் மற்றும் திருமங்கலம்(ஆனையூர் நாட்டு பிரிவு) ஏனென்றால் இங்கு தான் மருது பாண்டியர்களின் ஆயுத தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. மேலும் இந்த ஆயுத தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை மேலூர் கள்ளர் நாட்டு காடுகளில் மண்ணில் புதைத்து வைத்து ஆங்கிலேயர்கள் வரும் போது திடீரென புதைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து கொரில்லா தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இந்த மேலூர் கள்ளர் நாட்டின் ஆயுத தொழிற்சாலையை புரட்சியின் இறுதிகாலத்தில் ஆங்கிலேயர்களால் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டது. இந்த தென்னிந்திய புரட்சியில் மிகவும் வீரியத்துடன் சண்டையிட்ட கருமாத்தூர் கள்ளர் தலைவர்கள் மூவரை பின்னாங் தீவிற்கு நாடு கடத்தப்பட்டு சொந்த நாட்டிற்காக போர் புரிந்த வீரர்கள் அன்னிய தேசத்தில் அடக்கமாயினர்.


1. ஆண்டியப்ப தேவர்
2. சடை மாயன்
3. கொன்றி மாயத் தேவர்

மேலும் புரட்சி மேலோங்கி இருந்த காரணத்தாலும், திண்டுக்கல்லை பிரிட்டிசார் கைப்பற்றியதாலும். கோபால நாயக்கர் ஆனையூர் கள்ளர் நாட்டுக்கு பொன்னித்தேவர் (கள்ளப்பட்டி அதாவது செல்லம்பட்டிக்கு அருகில்) உதவியால் தப்பிச்செல்கிறார், இந்த சம்பத்தில் பொன்னித்தேவர் பிரிட்டிஸ் படையால் கொல்லப்படுகிறார்.

பிறகு கோபால நாயக்கர் ஆரிப்பட்டி,கருமாத்தூர், நமணூர் நாட்டில் உள்ள கள்ளர் தலைவர்களுடன் சேர்ந்து மறு தாக்குதல் செய்கிறார்.

இந்த தென்னிந்திய புரட்யில் மேலூர், வெள்ளலூர் நாட்டு கள்ளர்கள் திருப்பரங்குன்ற மலையில் இருந்து ஆங்கிலப்படைகள் மதுரையிலிருந்து சிவங்கை செல்லவிடாமல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த புரட்சி இறுதியில் ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியர்களை வீழ்த்த மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு உள்ளனர்.

அதாவது முதலில் ஆனையூர் நாட்டு பிறமலைக்கள்ளர்களை தொடர் தாக்குதல் நடத்தி அவர்களின் ஆயுதங்களை முற்றிலுமாக அழிக்கின்றனர்.

பின்பு மேலூர்,வெள்ளலூர், திருப்பத்தூர் (அம்பலம்) நாட்டு கள்ளர்களை தொடர் தாக்குதல் நடத்தி அவர்களின் இரண்டு தொழிற்சாலைகளை தரைமட்டமாக்கி ஆங்கிலேய படை சிவங்கையை நோக்கி சிறுவயலுக்கு முன்னேறுகிறது.

சிவங்கை நாட்டு எல்லையில் நுழைந்த ஆங்கிலேய படைகளுக்கு அதிர்ச்சி வைத்தியமாக கண்டதேவி, தேர்போகி (ஏழுகிளை கள்ளர் நாடு (அம்பலம், சேர்வை) நாட்டு கள்ளர்கள் மிகவும் வீரம் செரிந்து போரிட்டனர்.

தேர்போகி நாட்டு கிளைவழி கள்ளர்கள் மிகவும் வீரத்துடனும் சண்டையிட்டுள்ளனர் மேலும் புரட்சியாளர்களின் தளபதிகளுக்கு மிகவும் தோளுக்கு தோளாக நின்றுள்ளனர்.


இவர்களின் தாக்குதலை தவிர்க்க பிரிட்டீஸார் மருது பாண்டியர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் எனவும், தேர்போகி நாட்டு கள்ளர்களுக்கு போர் மன்னிப்பு கொடுக்கிறோம் என்று பிரிட்ஸ் தளபதி பிளாக் பர்ன் பரிந்துரைக்கிறார். ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்து விட்டனர்.


புரட்சியில் தோல்வியால் இந்த தேர்போகி நாட்டு கள்ளர்களும் கருவறுக்கப்பட்டனர். கண்டதேவி கள்ளர் நாட்டில் 3000 வீரர்களை திரட்டி ஆங்கில தளபதி பிளாக் பர்னுக்கு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியுள்ளனர். இதனால் தளபதி அறந்தாங்கிற்கு மறு தாக்குதல் நடத்த செல்கிறார்.



அதே போல் பாலை நாட்டு கள்ளர்களும் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் பிரிட்டீஸாருக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த கிளை வழி கள்ளர் நாட்டை முழுவதுமாக வீழ்த்தி ஆங்கிலேயர்கள் சிவகங்கை உள்ளே நுழைகின்றனர்.

அங்கு தான் நம்முடைய தென் பாண்டி சிங்கம் பாகனேரி நாட்டு பட்ட அம்பலக்காரர் வாளுக்கு வேலி அம்பலம் எல்லை சாமியாக நின்று துரோகத்தால் வீழ்த்தப்பட்டார் என்பது தனித்த காவிய வரலாறு. இந்த ஒட்டு மொத்த கள்ளர் நாட்டு தலைவர்களை வீழ்த்திய பின்பு தான் மருது பாண்டியர்களை ஆங்கிலேயர்கள் தூக்கில் இட்டுள்ளனர்.

மருது சகோதரர்களை வீழ்த்த வேண்டுமாயின் கள்ளர் நாட்டு தளபதிகளை வீழ்த்த வேண்டும் என்று பிரிட்டீஸார் நன்கு புரிந்து அதை செயல்படுத்தியும் உள்ளார்கள்.


இதுபோக தூத்துக்குடி பரதவ மக்கள் அவர்களுடைய பரத குலத்தலைவன் பின்னால் அணிவகுத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்துள்ளனர்.

மருதுபாண்டியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள்

1) மதுரை கிழக்கு மற்றும் மேற்கு நாட்டு கள்ளர்கள்

2) களக்காடு மறவர்கள்

3) நாங்குனேரி மறவர்கள்

4) மருதுபாண்டியர்கள் கிழக்கு நாட்டு கள்ளர்களது {அம்பலகாரர்கள் } ஆதரவை பெற்றிருந்தனர்.

5) மல்லா கோட்டை நாடு கள்ளரான கருவாபாண்டியன் சேர்வை அவர்களின் விசுவாச மிக்க தளபதியாக செயல்பட்டார்.

6) கிழக்கு நாட்டு {மேலூர் } கள்ளர்களது தலைவர்களான சேதுபதி அம்பலமும் -சண்முகபதி அம்பலமும் மருதுபாண்டியர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். மருதுபாண்டியர்களின் உற்ற நண்பர்களாக விளங்கிய கள்ளர் நாடுகளின் தலைவர்கள் சேதுபதி அம்பலம் அபிராமம் என்ற இடத்திலும் சண்முகபதி அம்பலம் அவருடைய சொந்த கிராமத்திலும் தூக்கிலிட்டு கொல்லப் பட்டனர்.

7)  திண்டுக்கல் கோபால நாயக்கர் - திண்டுக்கல் விருப்பாச்சி கோபால நாயக்கர் புறமலை கள்ளர்களின் ஆதரவை வேண்டி 1799 ஆனை யூர் நாட்டிலுள்ள கள்ளபட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னிதேவரிடம் தஞ்சமடைந்தார் இதனால் உற்சாகம் அடைந்த கருமாத்தூர் ஆரியபட்டி நாமனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பல்லாயிரகணக்கான கள்ளர்கள் வெள்ளையரை தாக்குவதற்கு தயாராயினர் இதனை கேள்விப்பட்ட மதுரை கலெக்டர் இன்ச் என்பவன் 1799 மே 4ம் தேதி பெரும்படையை வைத்து மக்களை சிதறடித்து பொன்னிதேவரை கொலைசெய்து கோபால நாயகரை சிறைபிடித்து சென்றான்.

8) சிவகங்கை இளவரசி வெள்ளச்சி நாச்சியாரை மணந்த சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர்.

9) ஊமத்துரை

10) துரைசாமி சேர்வை ( சின்ன மருதுவின் இளைய மகன்- நாடு கடத்தப்பட்டவர்)

11) பொம்மநாயக்கர் (வராப்பூர் பாளையக்காரர்)(நாடுகடத்தப்பட்டார்)

12) புரட்சியில் பங்கேற்று உயிர் துறந்த நூற்றுக்கணக்கான முகமறியா போராளிகள்

13) பினாங்கு நாட்டுக்கு கடத்தப்பட்டு அந்நிய தேசத்தில் மாண்ட எழுபதுக்கும் மேற்பட்ட தியாகிகள்.





நாட்டார் நட்பு 





நன்றி :

உயர்திரு. சுந்தர வந்திய தேவன் - பிறமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும் - நூலாசிரியர்

உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
உயர்திரு. சோழ பாண்டியன்

South Indian Rebellion - By Dr. Rajayyan
Historical dictionary of the Tamils - By Mrs.Vijaya Ramaswamy



ஞாயிறு, 21 அக்டோபர், 2018

குடிகள்ளன்



மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கி, மதுரையில் தங்குவதற்கு உதவினான். இதே போன்று சோழ மன்னன் சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் இன்றும் இருக்கிறது. திருச்சி நகரில், கோட்டை இரயிலடியில் கி.பி. 734 இல் (ஹிஜ்ரி 116ல்) கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம் 'கல்லுப்பள்ளி' என்றழைக்கப்படுகிறது. மாமன்னர் கிழவன் சேதுபதிக்கு முகமதியர் சீதக்காதி மதியுரை அமைச்சர்போன்று விளங்கினார்.



15-ம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் முருகனைப் புகழ்ந்து பாடும்போது ‘சூர்க்கொன்ற ராவுத்தனே’ என்றும் ‘மாமயிலேறும் ராவுத்தனே’ என்றும் பாடுகிறார். வைணவர்களுக்கு ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியாரும், அய்யப்ப பக்தர்களுக்கு எருமேலியில் வாவர் சாமியும், வட மாவட்டங்களில் திரௌபதி அம்மன் வழிபாட்டில் முத்தால ராவுத்தரும், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களின், காகம் கண்ணன் கூட்டத்தாரின் குலதெய்வமாக ராவுத்தரும் சிறு தெய்வங்களாக வழிபடப்பட்டு வருகின்றனர்.

இப்படி தமிழ் மக்களோடு கலந்து நின்ற முகமதியர்களோடு கள்ளர்கள் குடிக்கள்ளன் என்ற காவல் முறையை கொண்டனர்.




கள்ளர்களுக்கும், தென்னிந்தியாவின் முகமதியர்களுக்கும் இடையே பல சுவாரஸ்யமான ஒற்றுமைகள் உள்ளன. முதலாவதாக, விருத்தசேதனம் இரு சமூகங்களிலும் நடைமுறையில் உள்ளது. இரண்டாவதாக, இரண்டிலும் குறிப்பிட்ட அளவு பலதார மணம் உள்ளது. மூன்றாவதாக, இரு சமூகங்களிலும் திருமணத்திற்கு மணமகன் குதிரையில் செல்லும் வழக்கம் உள்ளது. நான்காவதாக, இருவரிலும் ஒரே மாதிரியான திருமண விழாவிற்கு பெண்கள் முக்காடு போடப்படுகிறார்கள். ஐந்தாவது: கல்லாறு பெண்கள் முஸ்லீம் சின்னத்தைக் குறிக்கும் பிறை வடிவ பதக்கத்தை அணிவார்கள். ஆறாவது, இரு சமூகங்களிலும் பெண்கள் கருப்பு மணிகளை அணிவார்கள். ஏழாவதாக, கள்ளர்களிடையே “முஹம்மதியர்களை ‘தாத்தா,’ ‘மாமா’ அல்லது ‘பேரன்’ என்று பொருத்தமான சொற்களுடன் முகமதியர் பதிலளிக்கும் உறவின் சில வார்த்தைகளை அழைக்கும் வழக்கம் உள்ளது.



சு.சமுத்திரம் எழுதிய, "எனது கதைகளின் கதைகள்' என்ற நூலில் இருந்து.


மதுரைக்கு அருகே, கிடாரிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே நிலச்சீர்திருத்தச் சட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மிகுதி நில வினியோகம் பற்றி கண்டறிய, வானொலி சார்பாக சென்றபோது, ஒரு ரசமான செய்தி கிடைத்தது. அந்த கிராமத்திலும், அதன் சுற்றுப்புற வட்டாரத்திலும், முக்குலத்தோரில், கள்ளர் பிரிவினர் அதிகம். இதற்கு அடுத்தப்படியாக முஸ்லிம்கள் இடம் பெறுகின்றனர். நாடார்கள், மூப்பனார்கள் ஆகியோரும் உள்ளனர்.

பொதுவாக, இந்த பகுதியில் ஜாதிச்சண்டை கிடையாது; சமயச் சண்டையும் கிடையாது; அதுவும் இந்து - முஸ்லிம் என்ற பேதமே எள்ளளவும் இல்லை. இதற்குக் காரணம், "குடிகள்ளன்' என்ற ஒரு முறைமை, அந்தப் பக்கம் இன்னமும் புழக்கத்தில் இருக்கிறது.

அதாவது, சிறுபான்மையினரான ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திற்கும், ஒரு கள்ளர் குடும்பம், அதன் நல்லது, கெட்டதுகளை கவனித்துக் கொள்ளும். இதற்குக் குடிகள்ளன் குடும்பம் என்று பெயர். இந்தக் குடும்பத்திற்கும், சம்பந்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்திற்கும் சகோதர பந்தம் உண்டு. இந்த முறை, இத்தகைய இரு குடும்பங்களுக்கிடையே காலங்காலமாக இருந்து வருகிறது.

உதாரணமாக, ஒரு முஸ்லிம் குடும்பத்து பெண்ணை, வெளியூரில் கட்டிக் கொடுத்து, அங்கே அவள் பல இன்னல்களுக்கு ஆளானபோது, அவளுடைய சொந்த ஊர் குடிகள்ளன், தன் சகாக்களோடு அவளது புகுந்த வீட்டிற்குப் போய், அவளை துன்புறுத்தியவர்களை மரத்தில் கட்டி வைத்து விட்டார்.

ஒரு முஸ்லிமிற்கும், ஒரு கள்ளருக்கும் ஏதோ தகராறு வந்தால், முஸ்லிம் பக்கமே நிற்பார் இந்த குடிகள்ளன். இவருடைய கல்யாணத்தில், அந்த முஸ்லிம் வீட்டிற்கு முதல் வெற்றிலை; அந்த முஸ்லிம் வீட்டுக் கல்யாணத்தில் இவருக்கு முதல் பாக்கு.

இந்த செய்தி, தமிழகத்தில் பெரும்பாலோருக்கு, குறிப்பாக, நம் எழுத்தாளர்களுக்கு நிச்சயம் தெரியாது.

குடிகள்ளன் - உடையார் :

கள்ளர்களுக்கும் உடையார் பட்டமாக உள்ளது. கள்ளர்களின் அரசுக்குடையார், அன்னமுடையார், உலகுடையார், உழுவுடையார், பனையுடையார், பசையுடையார், வேணுடையார் போன்ற பட்டங்கள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டம்  செருகடம்பூர் ஊரில் உடையார் பட்டம் உள்ள கள்ளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் இன்று உடையார் என்று தனி சதியாகவும் உள்ளனர்.

புதுகோட்டை குன்னாண்டார் கோவில் உடையாளிபட்டி பஞ்சாயத்து புதுக்கோட்டை மாவட்டதில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் வாழும் உடையார்கள் தங்களுக்கென்று தனியான பஞ்சாயத்து முறை பின்பற்றுவதில்லை தங்களுக்குள்ளோ அல்லது வேறு பிற சாதி மக்களால் ஏன் கள்ளர்களால் கூட எழும் எந்த பிரச்சனையானாலும் முதலில் கள்ளர்களை நாடுவார்கள் அல்லது அதன் பிறகே நீதிமன்றம் செல்வார்கள்.

இங்கு முன்பு நடைமுறையில் இருந்த இந்த குடிகள்ளர் வழக்கம் உடையார்கள் எந்த ஒரு சர்ச்சை பிரச்சனை என்றாலும் கள்ளர்களை நாடுவர் கள்ளர்கள் முன்நின்று அதை தீர்த்துவைப்பர் அதாவது இந்த குடிகள்ளன் முறை தற்போது வழக்கில் இல்லை என்றாலும் இன்றும் கள்ளர் உடையார் மக்களிடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அது தொடர்பான சடங்குகளும் நடைமுறையில் உண்டு.


ஒவ்வொரு உடையார் குடும்பத்திற்கும், ஒரு கள்ளர் அல்லது கள்ளர் கூட்டம் குடிகாவல் செய்வர் அவர்கள் உயிர், உடைமைகளை காப்பது இவர்கள் கடைமையாகும். தமது குடிகள்ளர்க்கு ஏதும் பொருளாதார பிரச்சனை என்றால் அந்த உடையார் உதவி செய்வார் அதற்க்கு பதிலாக அவரது குடும்பத்தையும் உடைமைகளையும் பிற கள்ளர் குழுக்களால் ஏதும் பாதிப்பு வராமல் காப்பாற்றுவார்,. உடையார்கள் உரிமையாக "எங்க கள்ளவீட்டு ஆளுக" என்று சொல்வார்கள். ஒரு பிரச்சனை என்றால் உடையார் தனது அங்காளி பங்காளி மாமன் மச்சான கூட நம்ம மாட்டார்கள் சம்பந்தமுடைய குடிகள்ளர்களிடம் தான் முதலில் முறையிடுவர்.

இதற்க்கு மற்றொரு காரணமும் உண்டு உடையார்களுக்குள் பொறாமை குணம் அதிகம் தனது சாதிகாரனை நம்புவதில்லை என களஆய்வில் ஒரு உடையார் இன பெரியவர் கூறியுள்ளார். ஒரு உடையாருக்கும் கள்ளருக்கும் பிரச்சனை வரும்போது இந்த குடிகள்ளன் உடையார் பக்கமே இருப்பார்.

கள்ளர் சரித்திரதில் ஐயா வேங்கடசாமி நாட்டார் அவர்கள் கள்ளார்களின் தலைகாவல் முறி பட்டயங்கள் சிலவற்றை சொல்லியுள்ளார் அதில் கூட ரெட்டியார்கள், உடையார்கள் அவர்களுக்கு சொந்தமான நிலங்கள், கிராமங்கள் என கள்ளர்கள் காவல் செய்த பல கிராமங்கள் பற்றி அறியலாம்.


குடிகள்ளன்  - இடையர் :


ஆயிரம் வீட்டிடையர்களின் காப்பாளன் திருமலை பின்னத்தேவன் என்று இடையர்களை காத்த கள்ளர் வரலாறும் இன்றும் தென்மாவட்டங்களில் கோனார்களுக்கும் தேவர்களுக்கும் இடையே உள்ள உறவு பரவலாக அணைத்து சமுதாயமும் அறிந்திருந்ததே, 



இதே குடிகாவல் முறை தென்மாவட்டங்களில் மட்டும்மல்லாது புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை என அணைத்து கள்ளர்நாடுகளிலும் இந்த காவல் முறை குடிகாவல் இருந்ததற்க்கு இது ஒரு உதாரணம்.

புதுக்கோட்டை ஆழ்வான்பட்டியில் ஒரு சிறிய கிராமம் இங்கு முப்பதிற்க்கும் மேற்ப்பட்ட கோனார்களும் கள்ளரில் மட்டையர் பட்டம் உள்ளவர்களும் உள்ளனர், இங்குள்ள கோனார்களும் உடையார்களை போலவே கள்ளர்கள் போல வழுவான நாடு, நிர்வாக அமைப்போ பஞ்சாயத்து முறையோ இல்லாதவர்கள், அதனால் அவர்கள் எதும் பிரச்சனை என்றால் கூடியவரை அவர்களுக்குள் தீர்க்க முற்ப்படுவர் இல்லை என்றால் கள்ளர்களிடமே முறையிடுவர்.



ஆங்கிலேயர்களின் தூண்டுதலில் குடிகாவல்(குடிகள்ளன்) முறைக்கு எதிராக நடத்தப்பட்ட பண்டு கலவரத்தின் முடிவில் நீதி விசாரனையின் போது செட்டியார்களும், உடையார்களும் கள்ளர்களையே ஆதரித்தனர் என்பது பதிவாகியுள்ளது.


ஜமீன்களை மீட்ட குடி கள்ளர்கள் 



1790 களில் நவாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள செய்தியில் வரி பாக்கியை கட்ட தவறியதால் அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஜமீன்களை திருச்சி சிறையிலும் பின்னர் அவர்கள் சொந்த ஊரிலும் சிறையில் அடைக்கப்பட்டபோது பத்தாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட உடையாரின்(ஜமீன்களின்) கள்ளர்கள் சுவரில் துளையிட்டு கோட்டைக்குள் புகுந்து ஜமீன்களை மீட்டு நவாப்பின் ஆட்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

https://books.google.co.in/books…

நன்றி : உயர்திரு. கார்த்திக் காலிங்கராயர்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்