மைசூர் பல்கலைக் கழகம், பங்களூர் : இதன்முதல் பேராசிரி யர், கன்னட நாட்டில் கன்னித்தமிழ் பரப்பியவர். சி ருத்திரபதி 24-10-1904-28-2.58 தஞ்சை பாபநாச வட்ட மேலச் செம்மங்குடு.. சிவசாமித் தென்கொண்டார் : தங்கத்தம்மாள். . பாபநாசம் ௨.ப, குடந்தைக் கல்லூரி எப்.ஏ , திருச்சி தேசியக் கல்லூரி பி.ஏ, அண்ணாமலை எம்.ஏ. (34). வறுமையில் மிக வாடியவர், அரசு உதவியால் பயின்று சிறந்தவர். 35-39 பங்களூர் இடைநிலைக்கல்லூரி, 40-43 மைசூர், 44-57 பங்களூர்.
இசைப் பெரியார் மூவர், உதயணன் சரிதம், கெளசாம்பி மன்னனும் கவி மதுரைப். பெருமானும், தமிழ் இலக்கணம். சுதந்திரத் தமிழ் வாசகம் 1-5 வகுப்புகட்கு, பஞ்ச தந்திரக் கதைகள், குறள், கம்பராமாயணம், திருவாசகத்தைக் கன்னட மொழியில் அறிமுகம். 48-56இல் இலங்கை சென்று சொற் பெருக்காற்றிப் பொன்னாடை போர்த்தப் பெற்றவர். தருமையாதனப் புலவர், திருவாவடுதுறை ஆதீனம் பொன் னாடை போர்த்தியது, மதுரை ஆதனம் ‘சைவத் தமிழ்மணி," பெங்களூர் சமரச வேத சன்மார்க்க சங்கம் 'வாசகமணி' எனப் பட்டம் சூட்டல்.
23இல் மணம், மனைவி சரசுவதி; மக்கள் சிவகாமி, திரு நாவுக்கரசு, மாணிக்க வாசகன். திருஞான சம்பந்தன், மங்கை யர்க்கரசி, அபிராமசுந்தரி. உலக பூபதியரின் சம்பந்தி. உயரிய
- குணத்தர், ஒழுக்கத்தின் உறைவிடம்.
இம்மாநிலத்தில் 95 லட்சம் தமிழர்கள் உளர். ஏறத்தாழ 25 கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நிஜலிங்கப்பா, சூசையப்பர், இருத்துவ, மகாராணி, ஊரிகம் முதனிலைக் கல்லூரிகள் குறிப்பிடத் தக்கன. இங்கு தண். கி. வெங்கடாசலம், டாக்டர் வ. பெருமாள் தமிழவன், ஆர் நடராசன்; சண்முக சுந்தரம், இளங்கோ (இராமர்), நாகம்மாள், செல்லப்பன் போன்றாரைக் குறிப்பிட வேண்டும் .