கல்வெட்டில் இருங்கோளர் என்பது இருங்களார் என்று மருவி உள்ளது.
கோனாட்டுக் கொடும்பாளூர் இருங்களார் இருக்குவேள். ஈழத்துப்பட்ட சிறிய வேளான் மகளான வானதி(எ) வானவன் மாதேவியை இராஜராஜ சோழன் மணந்து கங்கையும் கடாரமும் கொண்ட மும்முடிச் சோழகன் பெற்ற களிறு என வரலாறு போற்றும். இராஜேந்திர சோழனைப் பெற்றெடுத்தார்...தந்தையும் மகனும் கங்கைக் கரை நாடுகளையும் முக்கடல்களுக்கு நடுவே உள்ள தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தையும் வென்று புலிக் கொடியின் கீழ் ஆட்சி செய்தனர்.
பூதிவிக்ரமகேசரியின் மகன் பராந்தகன். இவனே பராந்தகன் சிறிய வேளான் எனப் பெற்றான். இவனைப் பராந்தக இருங்கோளனாகிய சிறிய வேள் எனவும் பராந்தகன் இருங்கோளர் ஆதிய சிறிய வேள் எனவும் சிறிய வேளான் எனவும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இப்பராந்தகன் சிறிய வேள். இரண்டாம் பராந்தகனின் 9ஆம் ஆண்டில் இலங்கை மீது படை எடுத்துப் போரில் இறந்தான். இராசாதிச்சி என்னும் மனைவி வழியாகக் குஞ்சரமல்லி, வேளான் சுந்தரசோழன் என்னும் மக்களை உடையவன். சோழ அரசனின் சேனாபதி. பராந்தகன் சிறிய வேளாயின திருக்கற்றளிப் பிச்சன் என்பதும் இவன் பெயரே என அறிஞர் கருதுவர்.
கொடும்பாளூர் வேளிர் 'இருங்கோளர்' என்று கூறப்பட்டுள்ளனர். (South Indian Inscriptions Vol. lil Ins. No. 11920) இதனால் கொடும்பாளூர் வேளிர்களைக் குறிக்கும். பெயர்களுள் இருங்கோளன் என்பது ஒன்று என்பது உறுதி. கொடும்பாஞூர்க் குலத்தினரை, இருக்குவேள், இளங்கோ வேள் இருங்கோளர் என்ற பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.
இருங்கோளர் பிருதிபதி அமனி மல்லர் என்ற சிற்றரசரின் மனைவியும் பொத்தப்பிச்சோழர் சத்தியரையர் என்பவரின் மகளுமான மலையவ்வை தேவியார் என்பவர் திருமுதுகுன்ற முடைய மகாதேவர்ச்கு நந்தா விளக்கு எரிக்க 90 அடுகளும், நந்தவனம் வைக்கு மணலூர் கிராமத்தில் இரண்டு மா நிலமும் கொடுத்துள்ளார்,
பொத்தப்பிச்சோழர் கள்ளர் என்ற கல்வெட்டு
கள்ளந் சந்தனான கொத்தப்பிச்சோழன்