புதன், 31 ஜனவரி, 2024

ஜல்லிக்கட்டு கள்ளர் வீரர்கள்


2024 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்  முதல் மூன்று பரிசையும் தட்டிச் சென்ற 

கள்ளிக்காட்டு புள்ளத்தாச்சி கள்ளன் பெற்ற வீரனும், ஜல்லிக்கட்டில் காளை முட்டி சரியும் குடலே மாலையாக இடும், போர்குடி கள்ளர் மரபின் அம்பலங்கள்

1 பரிசு கருப்பாயூரணி கார்த்தி அம்பலம் 

2 ஆம் பரிசு பூவந்தி அபிசித்தர் அம்பலம்

3 ஆம் பரிசு குன்னத்தூர் திவாகர் அம்பலம் 





மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து மகேந்திரா தார் கார் மற்றும் ஒரு லட்சம் ரொக்க பண தட்டிச் சென்றார் அபிசித்தர்_அம்பலம்  





அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாவீரன் சங்கங் கோட்டை ஸ்ரீதர் தேவர்



2020 கிள்ளனுர் ஜல்லிகட்டில் PK ஹரி சோழகர் முதல் பரிசு Bike பெற்றார்



2020 நாஞ்சிக்கோட்டை ஜல்லிக்கட்டுவில் மணி ஓணயர் அவர்கள் முதல் பரிசு பெற்ற தருணம்




2022 ஆண்டு தை மாதம் திருச்சியில் உள்ள கள்ளர் நாடான பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தென்னலூர் யோகேஷ் மழவராயர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.




2022 ஆம் ஆண்டு தை மாதம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி தமிழ்செல்வன் சாமந்தர் (சாமந்தர் - படைதலைவர்)   அவர்களுடைய காளை முதலிடம்




புதன், 24 ஜனவரி, 2024

தொ பரமசிவன் பார்வையில் கள்ளர்கள்




பண்பாட்டு அசைவுகள்  - தொ பரமசிவன்   


கள்ளரும்‌ அழகரும்‌ கள்ளழகரும்‌


அழகர்கோயிலில்‌ ஆண்டுதோறும்‌ சித்திரை மாதம்‌ ஒன்பது நாள்‌ நடைபெறும்‌ சித்திரைத்‌ திருவிழாவின்போது நான்காம்‌ திருநாளன்று அழகர்‌, கள்ளர்‌ திருக்கோலத்துடன்‌ மதுரைக்குப்‌ புறப்படுகிறார்‌. ஒன்பதாம்‌ திருநாளன்று இரவு கோயிலுக்குத்‌ திரும்பவும்‌ வந்து சேர்கிறார்‌.

“துர்வாச முனிவரால்‌ தவளையாகும்படி சபிக்கப்பட்ட சுதபஸ்‌ முனிவரின்‌ சாபவிமோசனத்தின்‌ நிமித்தமாகவும்‌, சுந்தரத்தோளுடையான்‌ என்று ஸ்ரீ ஆண்டாள்‌ மங்களாசாசனம்‌ செய்த சுந்தரத்‌ தோள்களுக்கு வருஷம்‌ ஒருமுறை ஆண்டாள்‌ சாற்றிக்‌ கொடுத்தத்‌ இருமாலையை ஏற்றுக்கொள்ளும்‌ பொருட்டும்‌ ஸ்ரீசுந்தரராஜன்‌ 'கள்ளழகர்‌' திருக்‌ கோலத்துடன்‌ மதுரைக்கு எழுந்தருளுகிறார்‌" என்று கோயில்‌ அழைப்பிதழ்‌, அழகர்‌ மதுரைக்கு வருவதன்‌ காரணத்தைக்‌ கூறுகிறது.'

இத்திருவிழாவில்‌ அழகர்‌, கள்ளர்‌ திருக்கோலம்‌ பூண்டு வருகிறார்‌. 'நீ ஒருவர்க்கும்‌ மெய்யனல்லை என்று பெரியாழ்வாரும்‌, 'வஞ்சக்‌ கள்வன்‌ மாமாயன்‌' என்று நம்மாழ்வாரும்‌, இத்தலத்து இறைவனான - அழகரைப்‌ பாடியிருப்பதைக காட்டி: அதுகாரணமாகவே அழகர்‌, கள்ளா வேடம்‌ பூண்டு வருகிறார்‌ என்று புராணிகர்கள்‌ கூறுகின்றனர்‌. இக்கருத்து பொருத்த

கள்ளர்‌ என்ற சாதியாரில்‌ அழகர்மலைப்‌ பகுதியிலும்‌ மேலூர்‌ பகுதியிலும்‌ வாழ்கின்ற 'மேலநாட்டுக்‌ கள்ளர்‌' என்ற பிரிவினர்‌ போல அழகர்‌ வேடமிட்டு வருகிறார்‌. அச்சாதியினரின்‌ அசாரங்களுக்கேற்ற வேடத்தையே அழகர்‌ புனைந்து வருகிறார்‌ என்பது தெளிவு. கைக்கொன்றாக வளதடி எனப்படும்‌ வளரித்தடி, சாட்டை போன்ற கம்பு, மேலநாட்டுக்‌ கள்ளர்‌ சாதி ஆண்கள்‌ இடுகின்ற கொண்டை, தலையில்‌ உருமால்‌, அவர்கள்‌ பெரிதும்‌ விரும்பி அணியும்‌ வண்டிக்கடுக்கன்‌ - இவ்வாறு அமைகிறது கள்ளர்‌ வேடம்‌.











அறியப்படாத தமிழகம் - தொ பரமசிவன்

சங்கும்‌ சாமியும்‌ 

மதுரை மாவட்டம்‌ மேலூர்‌ கள்ளர்‌ சாதியினரில்‌ மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வரும்பொழுது மணமகனின்‌ சகோதரி துிருச்சங்கு ஊதி அழைத்து வருகிறாள்‌. இவை தமிழர்கள்‌ இடத்தில்‌ முச்சங்க வழக்கம்‌ இருந்ததற்கான எச்சங்களாகும்‌.





தெய்வம் என்பதோர் தொ பரமசிவன்

மரபும்‌ மீறலும்‌ -- சாதி சமய அரசியல்‌ பின்னணி

தேவகோட்டை, சிவகங்கைப்‌ பகுதிகளில்‌ கள்ளர்‌ சாதியினரின்‌ 'நாடு' அமைப்பு இன்னும்‌ இருந்து வருகிறது. இதன்‌ வழி எல்லாச்‌ சாதியினர்‌ மீதும்‌ அதிகாரம்‌ செலுத்த அவர்களால்‌ முடியும்‌. அண்மைக்‌ காலம்வரை அரசுக்குப்‌ போட்டியாகப்‌ பொதுவளங்களை அதாவது புறம்போக்கு மர ஏலம்‌, கண்மாய்‌, மீன்பாட்டம்‌, கள்ளச்‌ சாராயம்‌ காய்ச்சுதல்‌ ஆகியவற்றில்‌ பிற சாதியினர்மீது அவர்கள்‌ மேலாதிக்கம்‌ செலுத்திவந்தனர்‌.


1980இல்‌ தேவகோட்டை அருகே பாகனேரி பில்வ நாயகி அம்மன்‌ கோயிலில்‌ பிற்படுத்தப்பட்ட 'நாட்டார்‌ கள்ளர்‌' வகுப்பினரோடு போராடியே தாழ்த்தப்பட்ட மக்கள்‌ கோயில்‌ நுழைவு உரிமை பெற்றது இதற்கு ஒரு சான்றாகும்‌. ஆக, 1930களின்‌ இறுதியில்‌ முடிந்துபோனதாக அரசியல்‌ கட்சிகள்‌ கருதிய ஒரு சமூக உரிமைச்‌ சிக்கல்‌, நாடு விடுதலை பெற்று 50 ஆண்டுக்காலம்‌ கழித்துச்‌ சமூக அரசியல்‌ உரிமைச்‌ சிக்கலாகப்‌ புதிய வடிவம்‌ காட்டுகிறது.





நீராட்டும் ஆறாட்டும் தொ பரமசிவன்

குடும்பப்‌ பெயர்களை இடும்‌ வழக்கு நம்மிடம்‌ இல்லை. தஞ்சாவூர்‌ பகுதி கள்ளர்‌ மக்களிடையே மட்டுமே அந்த வழக்கு இருந்துவருகிறது.





சனி, 13 ஜனவரி, 2024

நீ. மந்தன்‌ தென்கொண்டார்‌

கே வெண்ணுக்குடி திரு. நீ. மந்தன்‌ தென்கொண்டார்‌ அவர்கள்‌ பொருளுதவியால்‌ ஶ்ரீ பாரத சார வெண்பா இயற்றப்பட்ட

 



சி. ருத்திரபதி தென்கொண்டார்‌


மைசூர்‌ பல்கலைக்‌ கழகம்‌, பங்களூர்‌ : இதன்முதல்‌ பேராசிரி யர்‌, கன்னட நாட்டில்‌ கன்னித்தமிழ்‌ பரப்பியவர்‌. சி ருத்திரபதி 24-10-1904-28-2.58 தஞ்சை பாபநாச வட்ட மேலச்‌ செம்மங்குடு.. சிவசாமித்‌ தென்கொண்டார்‌ : தங்கத்தம்மாள்‌. . பாபநாசம்‌ ௨.ப, குடந்தைக்‌ கல்லூரி எப்‌.ஏ , திருச்சி தேசியக்‌ கல்லூரி பி.ஏ, அண்ணாமலை எம்‌.ஏ. (34). வறுமையில்‌ மிக வாடியவர்‌, அரசு உதவியால்‌ பயின்று சிறந்தவர்‌. 35-39 பங்களூர்‌ இடைநிலைக்கல்லூரி, 40-43 மைசூர்‌, 44-57 பங்களூர்‌.


இசைப்‌ பெரியார்‌ மூவர்‌, உதயணன்‌ சரிதம்‌, கெளசாம்பி மன்னனும்‌ கவி மதுரைப்‌. பெருமானும்‌, தமிழ்‌ இலக்கணம்‌. சுதந்திரத்‌ தமிழ்‌ வாசகம்‌ 1-5 வகுப்புகட்கு, பஞ்ச தந்திரக்‌ கதைகள்‌, குறள்‌, கம்பராமாயணம்‌, திருவாசகத்தைக்‌ கன்னட மொழியில்‌ அறிமுகம்‌. 48-56இல்‌ இலங்கை சென்று சொற்‌ பெருக்காற்றிப்‌ பொன்னாடை போர்த்தப்‌ பெற்றவர்‌. தருமையாதனப்‌ புலவர்‌, திருவாவடுதுறை ஆதீனம்‌ பொன்‌ னாடை போர்த்தியது, மதுரை ஆதனம்‌ ‘சைவத்‌ தமிழ்மணி," பெங்களூர்‌ சமரச வேத சன்மார்க்க சங்கம்‌ 'வாசகமணி' எனப்‌ பட்டம்‌ சூட்டல்‌.


23இல்‌ மணம்‌, மனைவி சரசுவதி; மக்கள்‌ சிவகாமி, திரு நாவுக்கரசு, மாணிக்க வாசகன்‌. திருஞான சம்பந்தன்‌, மங்கை யர்க்கரசி, அபிராமசுந்தரி. உலக பூபதியரின்‌ சம்பந்தி. உயரிய


- குணத்தர்‌, ஒழுக்கத்தின்‌ உறைவிடம்‌.


இம்மாநிலத்தில்‌ 95 லட்சம்‌ தமிழர்கள்‌ உளர்‌. ஏறத்தாழ 25 கல்லூரிகளில்‌ தமிழ்‌ கற்பிக்கப்படுகிறது. நிஜலிங்கப்பா, சூசையப்பர்‌, இருத்துவ, மகாராணி, ஊரிகம்‌ முதனிலைக்‌ கல்லூரிகள்‌ குறிப்பிடத்‌ தக்கன. இங்கு தண்‌. கி. வெங்கடாசலம்‌, டாக்டர்‌ வ. பெருமாள்‌ தமிழவன்‌, ஆர்‌ நடராசன்‌; சண்முக சுந்தரம்‌, இளங்கோ (இராமர்‌), நாகம்மாள்‌, செல்லப்பன்‌ போன்றாரைக்‌ குறிப்பிட வேண்டும் .




வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்