வியாழன், 21 ஏப்ரல், 2022

ந. இராமசாமி பெருங்கொண்டார்



நல்லக்குட்டி பெருங்கொண்டாரின் தந்தை இராமசாமி பெருங்கொண்டார் இலங்கையில் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தியத்தலாவை பஹலகதுருகமுவ என்ற கிராமத்தில் 1882 ம் ஆண்டளவில் காணிகளை வாங்கி அவற்றில் தேயிலை பயிரிட்டார். அன்றைய காலகட்டத்தில் வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடைபெற்ற போதிலும் அவர் Ross A Wyllie என்ற ஸ்கொட்லாந்து வெள்ளைக்காரர் ஒருவருடன் சேர்ந்து தேயிலை பயிரிட்டுள்ளார். N.R.M . Nallacooty Peruncondar என அறியப்பட்ட அவர் பின்னர் அந்த தேயிலை தோட்டத்தின் -Kapuwatta tea estate - கப்புவத்த தோட்டம் - (பின்னர்  Ganesh land கணேஷ் லேன்ட் என்றும் அழைக்கப்பட்டது) தனி உரிமையாளராக இருந்துள்ளார்.( History of Ceylon tea) இலங்கையில் 1800 களில் காணிகளை வாங்கிய இராமசாமி பெருங்கொண்டார் இலங்கை ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை நகரில் கதிர்வேலாயுத சுவாமி கோயிலை 1905 ம் ஆண்டளவில் கட்டி முடித்துள்ளார்.

இராமசாமி பெருங்கொண்டார் அவருக்கு பின்னர் நல்லக்குட்டி பெருங்கொண்டார் அவருக்கு பின்னர் இராமசாமி பெருங்கொண்டார். இராமசாமி பெருங்கொண்டார் நல்லக்குட்டி பெருங்கொண்டார் என்ற இரண்டு பெயர்களும் மாறி மாறி (பாட்டனின் பெயர் பேரனுக்கு என.) பேரன்களுக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இலங்கையை வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலத்தில் அவர்களுக்கு இணையாக  தேயிலை தோட்டங்களை உருவாக்கிய ஒருசில தமிழர்களில் இராமசாமி பெருங்கொண்டார் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்


நல்லக்குட்டி பெருங்கொண்டார், சிந்தாமணி அம்மையார் அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகளுக்கு பின் பிறந்தவர்.

1952 ஆம் ஆண்டிலேயே வாரனாசியில் கல்வி பயின்று இளங்கலை பட்டம் பெற்றவர். இந்தி, சிங்களம் உள்பட ஆறு மொழிகள்  கற்றுத் தேர்ந்தவர் ஆவார்.




இலங்கையில் இரண்டு தேயிலை எஸ்டேட் , இந்தியாவில் 150 ஏக்கர் நஞ்சை , புஞ்சை நிலங்கள் ,பல மனைக்கட்டுகள் என வாழ்வாங்கு வாழ்ந்து  R. சிந்தாமணி கருப்பையா, "R.கோமலா பிரியதர்ஷினி, R. துவாரகா சுபாஷிணி, R.கார்த்திகேயன் என்ற மகன்களும் மற்றும் மகள்களும் உள்ளனர்.

K.புவனேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி,
K.செந்தில் குமார் என்ற பேர குழந்தைகள்,

K.பிரகாஷ், K.கௌரி பிரியதர்ஷினி , K.S.சரவணன், K.S.பிரபாகரன்,
K.S.ராம் பிரசாத் என்ற கொள்ளுப் பேர குழந்தைகளும் உள்ளனர்.






இலங்கை அப்புத்தளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் திருக்கார்த்திகை தீபம்










வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்