"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
வியாழன், 21 ஏப்ரல், 2022
அன்பழகன் கோபாலரின் குடும்பத்தினர் தந்த அரசு பள்ளி கட்டிடம் தந்
ஆம்பலாப்பட்டு வரலாறு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு வரலாறு
ஆம்பலப்பட்டு என்ற ஊர் வடக்கு, தெற்கு என இரண்டு ஊராட்சிகளாகச் செயல்படுகிற பெரிய அளவிலான கிராமம்.
ஆம்பல் வனம் காலத்தால் மருவி ஆம்பலாபட்டு என அழைக்கப்படுகிறது. ஆம்பல் மலர்கள் கொண்ட நீர்க் குளங்கள் நிறைந்த பகுதியாகையால் இபபெயர்.
ஆம்பலாப்பட்டு அரசர் மாதுரார்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பாப்பாகுடி நாடு என்ற பாப்பா நாட்டில் உள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தில் கி.பி.1831 ஆம் ஆண்டு காணியுடைய அரசர்களில் மாதிரான்(மாதுரார் ) என்ற கள்ளர் மரபை சேர்ந்த காணியுடை அரசர்களில் மாதுரார் நில விற்பனை செய்துள்ளார் . இதற்கு சாட்சியாக சேனாபதி , தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர்கள் கையெழுத்து இட்டுள்ளனர்.இந்த நில விற்பனை ஓலைச்சுவடி இன்றும் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவன ஓலைச்சுவடி நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆதாரம்:- தமிழகத் தொல்லியல் கழகம் வெளியிட்ட ஆவணம் இதழ் - 28(2017)- புத்தகம் பக்கம் எண் 165,166
இந்தியா, நானுறு ஆண்டுகளாக வெள்ளையனிடம் அடிமைப்பட்டு கிடந்த காலக்கட்டத்தில், ஆங்கில அரசு இந்தியாவில் கல்வி திட்டத்தை நிறுவியது. ஆனால், அது கிராமப்புறங்களில் முழுமையாக சென்றடையவில்லை. பல கிராமங்களில் கல்வி அறிவு இல்லாமல் பின்தங்கிய நிலையில் இருந்தனர். கிராம மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வை வளர்ப்பதற்காகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தன் முனைப்பால் பல கிராமங்களில் திண்ணைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. கற்றறிந்தவர்கள் தானே முன்வந்து கற்றுத்தந்தார்கள். அக்காலத்தில் தமிழ் மற்றும் கணிதம் மட்டுமே கற்பிக்கப்பட்டது.
வெளியில் வந்த நம் கிராமத்து தோழர்கள், நெ.து.சுந்தரவடிவேலு அய்யா அவர்களிடம் மிகப்பெரிய 16 தெருக்களை கொண்ட நம் கிராமத்தின் சுற்றுப்பரப்பளவு, மக்கள்த்தொகையை எடுத்து சொல்லி நம் கிராமத்திற்கு எப்படியாவது உயர்நிலை பள்ளி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஐந்து கல் தொலைவில் இரண்டு பள்ளிகள் இருக்கும் போது... என்று நெ.து.சுந்தரவடிவேலு அய்யா யோசிக்கவே, குழந்தைகள், ஐந்து கல் தொலைவை கடந்து செல்லும் பாதை, அதனால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்து சொல்லி, எங்கள் கிராமத்து குழந்தைகளுக்கு கல்வி கண்ணை திறந்து வைத்து அவர்களின் வாழ்கையில் ஒளியேற்றி வைக்கவும் என்று நம் முன்னோர்கள் கூறவே, சிந்தனை கலையாமல் சிரித்த முகத்துடன் மாலை 4 மணிக்கு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார். காலம் தாமதிக்காமல் மாலை 4 மணிக்கு நெ.து.சுந்தரவடிவேலு அய்யா அவர்களை சந்தித்த நம் தோழர்களிடம் நம் பள்ளிக்கான உத்தரவை கையில் கொடுத்தவர்,
அய்யனார் கோயில் (ஆம்பல் தெற்கு)
அய்யனார் கோயில் (ஆம்பல் தெற்கு)
கங்களார் கோயில் (கண்டியர் தெரு)
முருகன் கோயில் (கீழகோட்டை)
முருகன் கோயில் (கீழகோட்டை)
ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை
சுந்தரபாண்டிய மன்னன் போரில் வெற்றி பெற்ற தன் அடையாளமாக இக்கோவில் கட்டியதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில் உள்ளே கல் தூணில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
வான் பொய்பினும் தான் பொய்யா வற்றாத ஜீவநதியாம் காவிரி வடகாடு சங்கம கிளையின் தென்கரையோரம் கோவில் அமைந்துள்ளது. ஊருக்குள் நுழைந்தவுடனே வானை தொட்டுவிடும் விதத்தில் பிரம்மாண்டமாக 126 அடி உயரத்தில் 7 நிலை மாடங்களுடன் 500 க்கும் மேற்பட்ட சிற்பங்களுடன் கூடிய ராஜகோபுரம் நமது கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கிறது. உள்ளே அர்த்த மண்டபம், மகாமண்டபம் உள்ளன. கொடிமரம் முன்பு வீற்றிருக்கும் நந்தீஸ்வரரிடம் அனுமதி பெற்று சிவ தரிசனம் செய்ய செல்ல வேண்டும். கருவறையில் மூல லிங்கமாகிய அருள்மிகு அண்ணாமலையார் எழுந்தருளியுள்ளார். வாயிலில் துவார பாலகர்கள் உள்ளனர். அருள்மிகு அண்ணாமலையார் லிங்க வடிவில் சதுரபீடத்தில் சுயம்புலிங்கமாக விளங்குகிறார். இவரது சன்னதியின் வடபுறத்தில் அருள்மிகு உண்ணாமுலையம்மன் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகத் திகழ்வதைக் காணலாம்.
இந்த உலக நன்மைக்காக பக்தர்களை காத்து அருள்புரிய அவனியில் பூத்தவள். பூத்தவண்ணம் காத்து அருளாசி புரிந்து வருகிறாள். கோபுரவாசலில் சிம்ம பலிபீடம் உள்ளது. அம்பிகை கோயிலின் எதிரில் 54 அடி உயரத்தில் கோபுரம் அழகுற கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மகாதேவ்சன்னதி அம்மன் சன்னதி சந்திப்பில் மேற்கூரையில் பாண்டிய மன்னனின் சின்னமான மீன் வேப்பம்பூ சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை காணலாம். மேலும் இக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் கோயிலுக்கும் பாண்டிய மன்னருக்கும் இருந்த தொடர்புகள் தெரியவருகிறது.
கோவிலில் பிரகாரத்தை வலம் வரும் போது விநாயகர், தட்சணாமூர்த்தி, வள்ளி தெய்வானை சமேத முருகன், துர்க்கை, சொர்ணபைரவர், நவகிரகங்கள், சன்னதிகள் உள்ளன. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை அமர்ந்து இருக்கும் வரை மகா மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு கூறும் செயதி
திருவண்ணாமலையில் இரண்டாம பிரகாரத்திலும் தஞ்சை பெரிய கோயிலின் உள் பிரகாரத்திலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன் மண்டபத்திலும் ஆம்பல் வனத்தில் அண்ணாமலையாரின் மகிமையும் பாண்டியனின் பெருமையும் பாண்டியன் ஆற்றிய சைவத்தொண்டும் கல்வெட்டு கூறும் செய்தியாக அறியலாம்.
தன்னிகரில்லா தரும பூமியாம் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது இத்திருத்தலமாகும். திருவண்ணாமலை, ராமேஸ்வரம், திருச்செங்கோடு, வேதாரணியம் ஆகிய ஊர்களின் நடுவில் இக்கோவில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக அழகுற அமைக்கப்பட்ட அம்மன் சன்னதி, மடப்பள்ளி, சனீஸ்வரர், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவிலில் தனிச்சிறப்பாக கல்விக்கு அதிபதியாக விளங்குகிற ஞான சண்டிகேஸ்வரர் சன்னதி தனியாக உள்ளது. மேலும் செல்வ வளத்தை வாரி வழங்கக்கூடிய தேவியுடன் கூடிய சொர்ண ஆதர்ஷண பைரவர் சன்னதியும் தனியாக உள்ளது
திருவண்ணாமலையில் மேற்குத்திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்று உண்டு. அதன்கண் விரும்பி மூழ்கினால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செயயும் என்று சாஸ்திரம நூல்கள் கூறுகின்றன.
அதே போன்று தென் திருவண்ணாமலையில் மேற்கில் வருண தீர்த்தம உண்டு.திருவண்ணாமலையில் நான்கு குன்றுகள் உள்ளன. அதே போன்று தென் திருவண்ணாமலையிலும் நான்கு கமலாலயங்கள் உண்டு. ஆகையால் இதை தென் திருவண்ணாமலை என்று கூறுகின்றனர் ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள்.
வரலாற்று சிற்பபுமிக்க இராஜ கோபுரம் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மூன்று மாவட்டத்தில் இல்லாத பெருமையாக, அதி அற்புதமான திருப்பணி 126அடி உயரம் கொண்ட 7 நிலை இராஜகோபுரம் அமைக்கக்பப்டடு வருகிறது. இதில் இன்னொரு சிறப்பாக எங்குமே கண்டிராத ஒரு அற்புத காட்சியாக நீருக்கடியில் நவநாயகர்கள் (நவகிரகங்கள்) மற்றும் கைலாயம் அமைப்புகள் ஆகிய ஆகம விதிமீறாமல் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
கோவில் தல வரலாறு
சிவபெருமான் கட்டளைப்படி மன்னன் கூன்பாண்டியனால் கட்டப்பட்டது என்று கூறுகிறது. இங்குள்ள இறைவன் திருநாமம் அண்ணாமலையார். இறைவியின் பெயர் உண்ணாமுலையம்மன். பஞ்சபூத தலங்களில் ஒன்றான (நெருப்பு) திருவண்ணாமலைக்கு தென் திசையில் இந்தக் கோவில் அமைந்துள்ளதால் இது ‘தென் திருவண்ணாமலை’ என போற்றப்படுகிறது. அண்ணாமலையார் கோவில் மிகச்சிறந்த காலசர்பபதோஷ பரிகார தலமாக விளங்குகிறது.
தொன்மையான வரலாறு கொண்ட திருத்தலம் மதுரையை ஆண்டு வந்த கூன்பாண்டியன் சமணத்தைப் பேணிவந்தான் தம் மக்கள் யாவரையும் சைவத்திலிருந்து சமணர்களாக மாறுமபடி சமணர்கள் பல்வேறு வகையில் முயற்சி செய்து வந்தனர். மன்னனும் இதை கண்டும் காணாது இருந்து வந்தான்.
இந்நிலையில் தெய்வத்திருவுருவம் ஞானசம்பநதருக்கு இசசெய்தியை சொல்லி அனுப்பினார். மதுரை அரசி மங்கையற்கரசி, சைவத்திதல் நம்பிக்கை கொண்டவர் ஆதலால் ஞானசம்பந்தர் ஒருவரால் தான் இந்த இக்கட்டான சூழ்நிலையிலருந்து சைவத்தைக் காக்க முடியும் என எண்ணினார்.
அரசியின் வேண்டுகொளை ஏற்ற ஞானசம்பந்தர் மதுரையை வந்தடைந்தார். இதை அறிந்த சமணர்கள் சிலர் ஞானசம்பந்தர் தங்கியிருந்த கொட்டகைககு இரவில் தீவைத்து விடடனர். இறையருளாள் ஒரு துன்பமுமின்றி உயிர்தப்பிய திருஞானசம்பந்தர் சற்று கோபம் கொண்டு, என் இருப்பிடத்தை
எரிய செய்ததுபோல் இந்நாட்டு மன்னனின் மேனியும் வெப்பசூலை நோய் தாக்கிக எரியட்டும் என சாபமிட்டார்.
கண்களில் கருணையும், இதயத்தில் ஈரமும் கொண்டவர்கள் மகான்க்ள அனைவருமே என்றாலும, முற்றும் துற்நத முனிவரென்றாலும் முள் எடுத்துக்குத்தினால்…..வலிக்கத் தானே செய்யும், வினைக்கு எதிர்வினை வந்து தானே தீரும.மன்னன் கூன் பாண்டியன் கடுமையான வெப்ப சூலை நோயால் சொல்லொண்ணா துயரடைந்தான்.
மன்னனுக்கு அரண்மனை வைத்தியர்கள் ம்டடுமல்லாது யார்யாரோ வந்தார்கள்,வைத்தியங்கள் பலவிதங்களில் நடந்தன ஆனால் பயன் தான் ஒன்றுமில்லை நாளுக்கு ;நாள் நோயின் கடுமை கூடியதே தவிர குறைநதபாடில்லை.
தன் அருட்சக்ததியால் மன்னனின் நோயை தீர்ப்பதாகக்கூறி சமணர்கள் முய்னறார்க்ள இதிலும் பய்ன ஒன்றுமில்லை. இந்நிலையில்; அரசி மங்கையர் கரசியார் மன்னனிடம் ஞானசம்பந்தரின் அருட்திறத்தை எடுத்துக்கூறி அவரை அழைத்து வந்தால் நோய் நொடிப் பொழுதில் காணாமல் போகும் என்று கூறினார்.
ஒருவாறு இதையேற்ற பாண்டியன் திருஞானசம்பந்தரை பணிந்து நின்றான். சிவனடியார்களுககு அடியேன் என்ற பணிவுடன் கனிவும் கருணையும் கொண்ட ஞானசம்பந்தர் எல்லாம் வல்ல இறைவனான சிவனை மனதில் நிறுத்திதசிறிது திருநீற்றை கூன்பாண்டியன் உடலில் பூச உடலில் உள்ள வெப்ப நோயும் உள்ளத்தில் இருந்த அறியாமையும் ஒருசேர நீங்கப்பெற்றான்.
மன்னனுக்கு நோய் தீர்ந்தது என்றாலும் பூரண குணம் ஏற்பட வேண்டமானால் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனை தரிசனம் பெற்று வா என்று நல்லாசி வழங்கினார்.
குரு வாக்கை தெய்வ வாக்காக ஏற்றுக்கொண்ட மன்னன், சைவனாக மாறி சமணர்களின் தொடர்பை துண்டித்துக் கொண்டு படை சூழ திருவண்ணாமலை புறப்பட்டார். புறப்பட்ட இடத்திலிருந்து 241 கல் ;தொலைவு கடந்தவுடன் எழில் கொஞ்சும் ஓர் இடத்ததைக் கண்டான்
அவ்விடத்தை அடைந்தவுடன் இறைநினைவும் அமைதியும் அவன் மனதில் குடிகொண்டது. இயற்கை அன்னை அவ்விடத்தை தன் அழகிய கைகளால் எழில் மிக்க ஒரு சிற்பம் போல செதுக்கியிருந்தாள். பச்சைபசேலென வயல வெளிகள, கனிவகை தரும் நெடு மரங்கள் வற்றாத நீர் பெருக்கும் குளங்கள், வற்றாத வாய்க்கால்கள் ஆநிரை மேயும் வயல், புல், வெளிகள் எவ்விதையையும் ஏற்றுக் கொண்டு உயிர்கொடுக்கும் வளமான மண், என நஞ்சை , புஞ்சை, நெல், கரும்பு, சோளம், கம்பு என எல்லா பயிர்களும் விளையும் அற்புதமான பூமியாக அது இருந்தது.
இயற்கை வளமும், எழிலும் கொண்ட அவ்விடத்தின் பெயர் என்ன? எனவினவினான் மன்னன் ஆம்பல் வனம் என்றனர் அவ்வூர்வாசிகள்.(இ;னறு இது காலத்தால் மருவி ஆம்பலாபட்டு என அழைக்கப்படுகிறது)
அந்த இடத்தின் மகிமையை ஆம்பல் மலர்கள் கொண்ட நீர்க் குளங்கள் நிறைந்த பகுதியாகையால் இபபெயர் பெற்றதையும அறிந்து மகிழ்ந்தான். உண்ணாமுலையன்னையின் திருமுகத்தையும் அண்ணாமலையாரின் எல்லையில்லா கருணையையும் மென்மையும் நினைவுபடுத்தும் இவ்வாம்பல் வனத்தில் அண்ணாமலையாருக்கு ஓர் ஆலயம் அமைத்தால் என்ன என்று எண்ணினான் மன்னன். அதற்கு செயல் வடிவம் கொடுத்தான் இறைவன். அன்று இரவே கனவில் எல்லையில்லா கருணை கொண்டு அத்தெய்வம் எழுந்தருளி, ஆலயம் அமைக்க அருள்பளிக்க ஆணையிட்டது.
ஆண்டவனின் கருணையையே பெற்றுவிட்ட மன்னன் தன் எண்ணப்படி அருமையானதொரு ஆலயத்தை அமைத்தான் திருவண்ணாமலைக்கு ஈடாக கூறப்படும் இவ்விடத்தை ஆம்பல் வனத்தில் தென் திருவண்ணாமலையாக அமைத்தான் சமதளத்தில் இயற்கை சூழ்ந்த பரப்பில் இத்திருக்கோயில் திருவண்ணாமலையோ கடல் மட்டத்திலிருந்து 167.44மீ உயரத்தில் அமைந்துள்ளது.
ஆம்பலாபட்டு இலுப்பை மரங்கள் - கு.ராமகிருஷ்ணன்
'பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டி கட்டி
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு..’
-இந்தத் தாலாட்டுப் பாடலைப் பலரும் அறிந்திருப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், வலிமையான இலுப்பை மரத்தால் செய்த தொட்டிலில் படுக்க வைப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை. பால் வடியும் மரமான இலுப்பை மரத்தொட்டிலில் குழந்தையை உறங்க வைத்தால், தாய்க்கு வற்றாமல் பால் சுரக்கும் என்பதும் நம்பிக்கை.
இறுதிச் சடங்கின்போது, இறந்து போனவரின் தலையில் உறவினர்களெல்லாம் இலுப்பைப் பிண்ணாக்கு பொடித்து தயாரிக்கப்பட்ட அரப்பு வைத்து விடுவது இன்றளவும் தொடரும் ஒரு சடங்கு.
எண்ணெய், மருத்துவ உபயோகம், தின்பண்டம் என பல வழிகளில் பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழக மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரே மரம்... இலுப்பைதான். நிழல், காற்று, பூ, பழம், விதை என இன்னும் பல அற்புதங்களை அள்ளித் தந்து, அவர்களை நோய் நொடி இல்லாமல் வளமாக வாழ வைத்துக் கொண்டிருந்த பெருமைமிக்க இலுப்பை மரங்கள், இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன என்பதுதான் வேதனையான விஷயம். ஊர் ஊருக்கு இலுப்பைத் தோப்புகள் இருந்த காலம் போய், பல கிராமங்களில் ஒரேயரு இலுப்பை மரத்தைக் கூட பார்ப்பது அரிதாக இருக்கிறது. 'இலுப்பை மரமா... அது எப்படி இருக்கும்?' என்று இன்றைய தலைமுறை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி அழிவின் விளிம்பில் உள்ள இலுப்பை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் அப்பாங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை, விஜயன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட பெரியவர்கள் சிலர்.
இந்த ஊரிலுள்ள சிவன் கோயில், மாரியம்மன் கோயில், அய்யனார் கோயில்... ஆகியவற்றுக்குச் சொந்தமான இடத்தில் இலுப்பை மரங்களைப் பாதுகாத்து வருகிறார்கள். புதிதாக நடவு செய்தும் வருகிறார்கள். அதனால் இந்த கிராமம் 'இலுப்பைத் தோப்பு’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான இலுப்பை மரங்கள் ஏறத்தாழ 150 ஆண்டுகளைக் கடந்தவை என்பது ஆச்சரியமூட்டும் செய்தி. காலத்தை வென்று கம்பீரமாகக் காட்சி அளிக்கும் அந்த மரங்கள் ஒவ்வொன்றும் 40 அடி உயரத்தில் 12 அடி சுற்றளவு வரையுள்ளவையாக இருக்கின்றன.
இவ்வூரைச் சேர்ந்த 95 வயதைக் கடந்த முதியவர் ரெங்கசாமி சேனாதிபதி, இலுப்பையுடன் கலந்து தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
''சின்னப் புள்ளையா இருந்தப்ப இங்க நூத்துக்கணக்கான இலுப்பை மரங்கள் இருக்கும். பூவெடுக்குற சமயத்துல ஊரே இலுப்பைப் பூ வாசனையில் கமகமக்கும். சாயங்கால நேரத்துல ஏகாந்தமா இருக்கும். அந்தக் காத்தை சுவாசிச்சாலே நோய், நொடி அண்டாது.
வெளவால் தின்னு போடுற இலுப்பைக் கொட்டைகளை நாங்க பொறுக்கிட்டுப் போய் வெயில்ல காயவெச்சு உடைச்சு பருப்பெடுப்போம். அதை செக்குல கொடுத்து ஆட்டி எண்ணெய் எடுத்து கோயில், வீடுனு விளக்கேத்துறதுக்கு பயன்படுத்துவோம். இந்த எண்ணெயில வர்ற புகையை சுவாசிச்சா... உடம்புக்கு நல்லது.
ஒரு மரத்துல வருஷத்துக்கு 50 கிலோவுக்கு மேல பருப்பு கிடைக்கும். ஒரு கிலோ பருப்பை செக்குல கொடுத்து ஆட்டுனா... 300 மில்லி எண்ணெய் கிடைக்கும். இலுப்பைப் புண்ணாக்கு, இலை ரெண்டுமே நிலத்துக்கு உரமாவும் பயன்படும். சுமார் 30 வருஷத்துக்கு முன்ன வரை, இதையெல்லாம் பயன்படுத்திதான் மண்ணை வளமாக்கி, செழிப்பா விவசாயம் செய்தோம்'' என்று நினைவலைகளில் நீந்தினார்.
இதே கிராமத்தைச் சேர்ந்த மூலிகை மருத்துவர் கதிரேசன், ''இலுப்பை ஒரு மூலிகை மரம். அதுல நிறைய நோய்களுக்கான மருந்து இருக்கு. முன்ன இலுப்பை எண்ணெயைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவாங்க. அதுல செய்யுற பலகாரங்களும்., சாப்பாடும் அவ்வளவு ருசியா இருக்கும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், இடுப்புவலி, மூட்டுவலி, வாயுக் கோளாறு... மாதிரியான எல்லா பிரச்னைகளுக்கும் இலுப்பை எண்ணெய்தான் மருந்து. புண்ணைக்கூட இந்த எண்ணெய் ஆத்திடும். ஆடு, மாடுகளுக்குக்கூட புண் வந்தா, இதைத்தான் தடவுவாங்க.
வெளிர் மஞ்சள் நிறத்துல இருக்குற இலுப்பைப் பூ கூட அற்புதமான மருந்து. இதை மூணு நாள் காய வெச்சு, நரம்பை நீக்கி, மண் சட்டியில வறுத்து சாப்பிட்டா... தோல் சம்பந்தபட்ட வியாதி, விரைவாத நோய் எல்லாம் குணமாயிடும். இலுப்பைப் பூ, கருப்பட்டி, சீரகம், மிளகையெல்லாம் போட்டு இடிச்சு, உருண்டையாக்கி, குழந்தைகளுக்கு கொடுத்தா... கணை நோய் நீங்கிடும். இதய நோய், பாம்புக்கடி, அசதி, ஆண்மைக் குறைவு, வாந்தி, பித்தம், காய்ச்சல்னு பல நோய்களுக்கு இலுப்பைப் பூவுல மருந்து தயாரிக்கறாங்க.
இலுப்பை இலை, பட்டையை வெந்நீரில் போட்டு குளிச்சாலும், தோல் நோய்கள் ஓடிடும். இலுப்பைப் பிண்ணாக்கைத் தலையில தேய்ச்சுக் குளிச்சா பேன், பொடுகெல்லாம் காணாம போயிடும். முடி கொட்டுறது நின்னுடும். இதை, சர்வரோக நிவாரணினே சொல்லலாம்'' என்று இலுப்பை புகழ் பாடினார்.
மர மீட்புக்குழுவைச் சேர்ந்த அண்ணாமலை, ''முன்ன கோயில் நிலங்கள்லதான் இலுப்பை மரங்கள் அதிகமா இருக்கும். அதனால அதை வெட்டுனா... தெய்வக் குத்தமாயிடும்னு பயம் இருந்துச்சு. அதனால, மரங்கள் பாதுகாப்பா இருந்துச்சு. காலப்போக்குல கோயில் நிலத்தையெல்லாம் ஆளாளுக்கு ஆக்கிரமிச்சுட்டாங்க. அதோட, அரசாங்கமும் பலவிதமான பயன்பாட்டுக்கு கோயில் நிலத்தைப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டதால, அதுல இருந்த மரங்களையெல்லாம் வெட்டுனதுல இலுப்பை அழிஞ்சு போச்சு. மிச்சமிருக்குற மரங்களையாவது பாதுகாக்கணும்றதுக்காக 'இலுப்பை மரங்களை வெட்டக் கூடாது’னு ஊர்ல முடிவெடுத்திருக்கோம்.
வெளவால் மாதிரியான ஜீவன்கள் சாப்பிட்டு போடற கொட்டைகள் மூலமாவும் மரங்கள் முளைக்கத் தொடங்கியிருக்கு. ஊராட்சி மன்றத் தலைவர் அப்பாங்கத்தோட முயற்சியால கோயில், பள்ளிக்கூடம், கல்யாண மண்டபம்னு பல இடங்கள்ல இலுப்பைக் கன்னுங்கள நடவு பண்ணி, வளர்த்துக்கிட்டு இருக்கோம். ஆர்வத்தோடு வர்றவங்களுக்கு விதைகளை இலவசமா கொடுக்க தயாரா இருக்கோம்'' என்றார் ஆவல் பொங்க.
சிவனும் இலுப்பையும் !
'சித்திரையில் மழை பெய்தால்... சிவனுக்கு ஆகாது!’ என்றொரு பழமொழி உண்டு. அதாவது, 'இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால்தான் சிவபெருமானுக்கு மனம் குளிரும்’ என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில்தான் இலுப்பை மரத்தில் பூக்கள் பூக்கும். அந்த சமயத்தில் மழை பெய்தால், பூக்கள் உதிர்ந்து விதைகள் உருவாகாமல் போய் விடும். சிவபெருமானுக்கு தீபம் ஏற்றுவதற்கான இலுப்பை எண்ணெய்க்குத் தட்டுப்பாடு வந்துவிடும் என்பதால்தான் இப்படியரு பழமொழி.
இன்றும் ஆம்பலாபட்டு கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் இலுப்பை எண்ணெயில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. அதைப் பற்றி பேசிய கோயில் பூசாரி முருகையன், 'இந்த எண்ணெயில தீபம் ஏத்தினா, ரொம்ப நேரத்துக்கு நின்னு விளக்கு எரியும். இப்போ ஒரு லிட்டர் இலுப்பை எண்ணெய் 180 ரூபாய் வரை விலை போகுது'' என்றார்.
கோயிலுக்கும் இலுப்பைக்கும் உள்ள தொடர்பு எண்ணெயோடு நின்று விடவில்லை.... கோயிலின் கதவுகள், தூண்கள், உத்தரம், தேர் என்று பல்வேறு உபயோகங்களுக்கும் இலுப்பைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதைப் பற்றி தேர்கள் செய்வதில் ஈடுபட்டிருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்தபதி சிவநேசன் கூறும்பொழுது, ''தேக்கு போலவே இதுவும் வலிமையான மரம். பால்சத்து நிறைந்த இந்த மரத்தை கரையான் அரிக்காது. அப்படியே அரித்தாலும், கடைசியில் மண்ணாக மிஞ்சும் துகள்கள் மீது தண்ணீர் தெளித்தால், அதில்கூட பால் சத்து தங்கியிருக்கும். இதுதான் இலுப்பையின் அதிசய குணம்.
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இலுப்பை மரத்தால் செய்யப்பட்ட தேர்கள்கூட, இன்றளவும் தமிழகக் கோயில்களில் திடமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக சோழமண்டலத்தில் இருக்கும் கோயில்களுக்கு இந்த மரத்தை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். இந்தப் பகுதியில இலுப்பை மரங்கள் நிறைய இருந்ததுதான் காரணம்.
தேரில் உள்ள சிம்மாசனம், தேவாசனம், நடவாசனம், உருதலம், பூதப்பார் உள்ளிட்ட பெரும்பாலான பாகங்களை இன்றைக்கும் இலுப்பையில்தான் செய்கிறோம். சுமார் 60 வருடங்களை கடந்த மரங்களைத்தான் இதற்குப் பயன்படுத்துகிறோம். அதுபோன்ற மரங்களில்தான் முழுமையாக வைரம் பாய்ந்திருக்கும். ஒரு கன அடி இலுப்பை மரம் 900 முதல் 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. படகு செய்யவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். உப்புத் தண்ணீரிலும் இது தாக்குப் பிடிக்கும் என்பதுதான் காரணம்'' என்று இலுப்பை பற்றி புகழ்ந்தார்.
தஞ்சை பெரியக் கோயிலில் அமைந்திருக்கும் அம்மன் சந்நிதியின் வாயிற் கதவுகள், இலுப்பை மரத்தால் செய்யப்பட்டவை... இன்றைக்கும் பொலிவோடு திகழ்கின்றன. இவை உருவாக்கப்பட்டு சுமார் 400 வருடங்கள் இருக்கலாம் என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்
ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மாதுரார்
1943ல் ஆம்பலாப்பட்டில் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டது. புண்ணியம் கதிரேசன் (மாதுரார்) தலைமையில் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞரான ஆறுமுகம் (மாதுரார்) தன்னையும் இணைத்துக்கொண்டு செயல்ப்பட்டார். ஆம்பலாப்பட்டு மதுக்கூர் ஜமீனுக்கு உட்பட்ட கிராமமாகும்.
ஆம்பலாப்பட்டு முதல் வெண்குழி வரையிலான மதுக்கூர் ஜமீன்தாருக்கு சொந்தமான 12 கிராமங்களில் நிலவிய நிலவுடைமைக் கொடுமைகளை எதிர்த்து ஆறுமுகம் போராடினார். விவசாயி களை மிரட்ட பயன்படுத்தப்பட்ட ஜமீனின் பிரம்சேரி நோட்டுகளை தீவைத்துக் கொளுத்தும் போராட்டத்தில் முன்னணியாக இருந்தவர் ஆறுமுகம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் (கம்யூனிஸ்ட்) டாக்டர் வே.துரைமாணிக்கம் அவர்கள் ச.சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் 'ஆம்பல் ஆறுமுகம்' என்ற புத்தகத்திற்கு கீழ்வருவன போல் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
'கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் ஏ.கே.கோபாலன்,மணலி கந்தசாமி, பி.இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தலைமறைவாக உள்ளனர்.அவர்களை காட்டிகொடுக்க செம்பாளூரை சார்ந்த மிராஸ்தார் ஒருவர் முயற்சி எடுத்தார். அவரின் முயற்சியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை கடுமையான வழக்காக மாற்றப்பட்டது .அதுதான் செம்பாளுர் வழக்கு.அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆம்பலாப்பட்ட சேர்ந்த வெ.அ.சுப்பையன், எஸ்.ஏ.முருகையன், டி.காசிநாதன், வாட்டாகுடி இரணியன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர். தேடுதல் வேட்டையில் இரணியனும், ஆறுமுகமும் வடசேரி என்ற ஊரில்காவல் துறையினரிடம் சம்பந்தம் என்கின்ற சதிகாரன் காட்டிகொடுத்ததால் அகப்பட்டுகொண்டார்கள். 05.05.1950 அன்று அதிகாலை சவுக்கு தோப்பில் மரத்தில் கட்டி வைத்து இரணியனை சுட்டு வீழ்த்தினார்கள். ஆறுமுகத்தை பார்த்து, மணலி கந்தசாமி இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு ஒடித் தப்பிதுகொள். உன் மீது வழக்கு இல்லை என்று ஏமாற்றுகிறார்கள். காக்கி சட்டைகாரர்களின் வஞ்சக எண்ணத்தை புரிந்து கொண்ட ஆறுமுகம், என்னை ஒடச்சொல்லி முதுகில் சுடப்பார்கிறாயா? ஓடினான் சுட்டேன் என்று கதை கட்டிவிட பார்க்கிறாயா? என் தலைவனை காட்டிக் கொடுக்கவும் மாட்டேன், முதுகு காட்டி ஓடவு மாட்டேன்.முதுகில் சூடுபட்டு சாக நான் கோழையல்ல.எனது கட்சிக்கும்,லட்சியத்திற்க்கும் நான் ஏற்றிருக்கும் மார்க்சிய,லெலினிய தத்துவத்திற்கும் இழக்கு ஏற்பட எள் முனையளவும் இடம் தரமாட்டேன்.கூலிப் பட்டாளமே எனது நெஞ்சில் சுடு என்று நெஞ்சை நிமிர்த்து காட்டினார்.துப்பாக்கி குண்டுகள்
நெஞ்சை துலைத்தன. திருமணமாகாத 22 வயதே நிரம்பிய அந்த புறட்சியாளன்,புரட்சி ஓங்குக! என்ற முழக்கத்துடன் பிணமானார்.அவரது உயிர் பிரிக்கபட்டது.அவரது உடல் அழிக்கபட்டது.அவரது லட்சியம் அழியவில்லை
வடசேரி கிராம சவுக்குத் தோப்பில் இரணியனும், ஆறுமுகமும் சந்தித்து விவாதித்தபோது துரோகியால் காட்டிக் கொடுக் கப்பட்டு ஆறுமுகமும், இரணியனும் போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட சிவராமன், இரணியன், ஆறுமுகம் ஆகியோரின் உடல் களை அவர்களது உறவினர்களிடம் ஒப்ப டைக்க மறுத்து 1950ம் ஆண்டு மே 5ம் தேதி பட்டுக்கோட்டை ரயில்வே கேட் அருகிலுள்ள மைதானத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர். அந்த தியாகிகள் விதைக்கப் பட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால்அவர்களது தியாகம் இன்றும் ஜொலிக்கிறது. செங்கொடி இயக்கத்தின் மகத்தான தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.
தியாக சீலர் தோழர் எஸ்.ஏ.முருகையன் மாதுரார்
(கே ஜீவபாரதி அவர்களின் நேர்காணல் கட்டுரை)
ஒட்ட வெட்டிய தலைமுடி... உருவத் தோற்றத்திற்குக் கம்பீரத்தைக் கூட்டும் சிவப்புத் துண்டு... ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருக்கான தோற்றம்... இதுதான் தோழர் எஸ்.ஏ.முருகையன். எண்பது வயதானவர் என்று எண்ண முடியாத அளவுக்குப் பேச்சும் செயலும். இதோ! ஆம்பலாப்பட்டில் பிறந்த அக்கினிக் குஞ்சுகளில் ஒருவரான தோழர் எஸ்.ஏ. முருகையன் என் வினாக்களை நேர் கொண்டு விடை தருகிறார்.
நீங்கள் பொதுவாழ்க்கைக்கு வந்த பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...
இந்த ஊரில் பிறந்து சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்த மு.அ.குழந் தையன் சேனாதிபதியும், அய்யாவுத் தேவரும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த புண்ணிய கதிரேசன் மாதுராரும் 1937 ஆம் ஆண்டில் இந்த ஆம்பலாப்பட்டுக்கு வந்தனர்.
மு.அ.குழந்தையன் சேனாதிபதியும், அய்யாவுத் தேவரும் சிங்கப்பூரில் வாழ்ந்தபோதே பகுத்தறிவுச் சிந்தனை யாளர்களாகவும், தந்தை பெரியார்மீது பற்றுக் கொண்டவர்களாகவும் இருந் திருக்கின்றனர். அதே பற்றுடன் அவர் கள் இருவரும் ஆம்பலாப்பட்டுக்கு வந்தனர்.
இலங்கையிலிருந்து இந்த ஊருக்கு வந்த புண்ணிய கதிரேசன் மாதுரார் ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை மிக்கவராகவும், அறிவாற்றல் மிக்க வராகவும் திகழ்ந்தார்.
1938 - ல் புண்ணிய கதிரேசன் மாதுரா ருக்கும் தைலம்மைக்கும் பகுத்தறிவு முறைப்படி திருமணம் நடந்தது. தாலி கட்டாமல் மணமக்கள் மாலை மட்டும் மாற்றிக் கொண்டனர். ஆம்பலாப்பட்டு கிராமத்தில் நடந்த முதல் பகுத்தறிவுத் திருமணம் இதுதான். அப்போது எனக்கு வயது 12. இந்தச் சம்பவம் என் சிறு வயதிலேயே ஆழமாகப் பதிந்து விட்டது.
குழந்தையன் சேனாதிபதி, புண்ணிய கதிரேசன் மாதுரார், பூவணம் என்ற கிராமத்தில் பிறந்து ஆம்பலாப்பட்டில் இருந்த தன்னுடைய அக்காள் வீட்டில் தங்கியிருந்த முத்துக்காமாட்சி, அய்யாவுத் தேவர் ஆகியோர் 1939 - ல் ஆம்ப லாப்பட்டில் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினர். அப்போது 16 பேர் காங் கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். அதில் நானும் ஒருவன். இப்படித்தான் என்னு டைய பொதுவாழ்க்கை தொடங்கியது.
பட்டுக்கோட்டை ஜமீன் ஒழிப்பு மாநாடு பற்றி...
1943 - ல் ஒரே சமயத்தில் இந்த ஊரில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையும், விவ சாய சங்கமும் அமைக்கப்பட்டது. இரண்டிற்கும் புண்ணிய கதிரேசன் மாதுரார் செயலாளராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். செயலாளர் பொறுப்பேற்ற தும் 'புண்ணிய' என்ற அடைமொழியும், 'மாதுரார்' என்ற சாதிப் பெயரும் நீக்கப் பட்டு 'தோழர் சி.கதிரேசன்' என்று அழைக்கப்பட்டார்.
1946 - ல் பட்டுக்கோட்டையில் ஜமீன் இனாம் ஒழிப்பு மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பாப்பாநாடு ஜமீன் தார், மதுக்கூர் ஜமீன்தார், அத்திவெட்டி ஜமீன்தார், சேத்தன்குடி ஜமீன்தார், பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளை ஆகியோருடன் காங்கிரஸ்காரர்களும், நில உரிமையாளர்களும் இணைந்து பட்டுக்கோட்டை ஜமீன் இனாம் ஒழிப்பு மாநாட்டைத் தடுக்கப் பெரும் முயற்சி எடுத்தனர். இதை அறிந்த நாங்கள் ஆம்பலாப்பட்டு மக்களைத் திரட்டிக் கொண்டு, கரம்பயம் மக்களையும் இணைத்துக் கொண்டு மாநாட்டிற்குச் சென்றோம்.
பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் ஆயிரக் கணக்கான மக்கள் ஆர்வத் துடன் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பெண்களும் எழுச்சி யுடன் கலந்துகொண்டது எதிரிகளை குலை நடுங்கச் செய்தது. எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து மிகச் சிறப்பாக பட்டுக்கோட்டை ஜமீன் இனாம் ஒழிப்பு மாநாடு நடந்து முடிந் தது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட முதல் தீர்மானம் 'வெள்ளையனே வெளியேறு' என்பதாகும். இந்த மாநாட்டின்போது ஆம்பலாப்பட்டு, கரம்பயம் மக்களால் பட்டுக்கோட்டை நகரம் முழு வதுமாக முற்றுகையிடப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
சாதியக் கொடுமைகளை எப்படி எதிர்கொண்டீர்கள்?
சாணிப்பால், சவுக்கடி கொடுமைகள் ஆம்பலாப்பட்டில் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. ஆனால் தீண்டாமை போன்ற இழிநிலைகள் இங்கும் இருந் தன. மணநாளன்று மணமகன் குதிரை யில் வலம் வருவது இந்த ஊர் வழக் கம். இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு இந்த ஊரில் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து நம் கட்சியும், விவசாய சங்க மும் போராடி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மணமகனும் குதிரையில் மண நாளன்று ஊர்வலம் வர அனுமதி வாங்கித்தந்தது.
பட்டுக்கோட்டை தாலுகா தாழ்த்தப்பட்டோர் லீகின் செயலாளராக 1947 ஆம் ஆண்டில் பொறுப்பு வகித்த ஆம்பலாப் பட்டு தோழர் பி. கோவிந்தசாமியைக் கொண்டு, அந்த அமைப்பின் மாநாட்டை ஆம்பலாப்பட்டு குடிக்காட்டில் நடத்த முடிவு செய்தது. இந்த மாநாட்டில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆறுமுகம், சி.கதிரேசன், ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன். இதை விரும்பாதவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியை வெறுப்பவர் களும், சாதிப்பித்துக் கொண்டவர் களும் ஒன்றிணைந்து தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்ட எங்களை ஊர்க் கட்டுப்பாடு என்ற போர்வையில் ஒதுக்கி வைக்க முயன் றனர். நம் கட்சிக்கும், விவசாய சங்கத் திற்கும் அன்று இருந்த செல்வாக்கால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையின்போது பிற சாதியினர் வீடுகளில் அடுப்பு தயார் செய்து கொடுத்தல், குப்பை கூளங் களைச் சுத்தம் செய்தல் போன்ற பணி களில் தாழ்த்தப்பட்டவர்கள் ஈடுபடுத் தப்பட்டனர். அத்தகைய பணிகளைச் செய்த அவர்களுக்குச் சோறு மட்டும் தான் கூலியாகக் கொடுக்கப்பட்டது. டீ கடைகளில் தனி டம்ளர் முறை இருந் தது. கோயில்களுக்குள் அரிஜன மக்கள் நுழைவதற்குத் தடையும் இருந் தது. இவை அனைத்தையும் நம் கட்சி யும் விவசாய சங்கமும் எதிர்த்துப் போராடி தலித் மக்களுக்குச் சம உரிமையை வாங்கித் தந்தது.
அடக்குமுறை காலத்தில் நீங்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றி...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்தி யாவில் தடை செய்யப்பட்டதும், தலை வர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். ஆம்பலாப்பட்டிற்கு அருகில் இருக்கும் செம்பாளூர்க் காடு களில் கட்சி ஊழியர்களுக்கு அரசியல் வகுப்பும், போராட்டப் பயிற்சியும் தலை வர்களால் கொடுக்கப்பட்டது.
இதை அறிந்த செம்பாளூர் நிலச்சு வான்தாரும், காங்கிரஸ் கட்சிக்காரரு மான சாம்பசிவ ஐயர் கம்யூனிஸ்டு களைக் காட்டிக் கொடுக்க முயன்றார். தோழர்கள் இரணியன், ஆறுமுகம், ரகுநாத வன்னியர் ஆகியோருடன் இணைந்து சாம்பசிவ ஐயரின் முயற் சியை முறியடிக்க நினைத்தோம். இந்தக் காலகட்டத்தில் தோழர்கள் ஏ.கே.கோபாலன், அனந்த நம்பியார், பி.இராமமூர்த்தி, எம்.வி.சுந்தரம், மணலி கந்தசாமி, பி.சீனிவாசராவ், எம்.காத்தமுத்து, எம்.மாசிலாமணி ஏ.வி.ராமசாமி, கே.பி.நடராசன், ஏ.எம்.
கோபு போன்ற மத்திய, மாநில, மாவட்ட கட்சித் தலைவர்கள் எங்களுக்கு வழி காட்டினர்.
போலீசுக்கு கம்யூனிஸ்டுகளைக் காட்டிக் கொடுக்க முயன்ற சாம்பசிவ ஐயரின் வீடு தாக்கப்பட்டது. இதைக் காரணமாகக் கொண்டு தன்னைக் கொலை செய்ய முயன்றதாகவும், வீட்டுப் பொருட்களைக் கொள்ளையடிக்க முயன்றதாகவும், அரசுக்கு எதி ராகச் செயல்படத் திட்டமிடுவதாகவும் ஆம்பலாப்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்த 68 பேர்மீது சாம்பசிவ ஐயர் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு அரசு வழக் காக மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர் களைக் கைது செய்வதற்காக சிறப்புக் காவல்படை ஆம்பலாப்பட்டை முற்று கையிட்டது. போலீசார் ஊருக்குள் புகுந்து மிருகத்தனமாக அடக்குமுறை களைச் செய்தனர்.
தோழர்கள் இரணியன், ஆறுமுகம், வெ.அ.சுப்பையன், டி.காசிநாதன் ஆகியோருடன் நானும் தலைமறைவானேன். இராணியன், ஆறுமுகம், மணலி கந்தசாமி ஆகியோருடன் நானும் ஆம்பலாப்பட்டில்தான் தலை மறைவாக இருப்பதாக நினைத்து எங்களை உயிருடனோ பிணமாகவோ பிடிக்கப் போலீசார் முயன்றனர். இதைச் செய்பவர்களுக்கு ரூபாய் 500 பரிசளிப்பதாகவும் அறிவித்தனர். தோழர்கள் வெ.அ.சுப்பையன் டி. காசி நாதன் ஆகியோர் வீட்டையும், என் வீட்டையும் போலீசார் தாக்கி இடித்துத் தள்ளினர்.
கரம்பயம், கீழக்கோட்டை ஆகிய பகுதி களில் தலைமறைவாக இருந்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் சிங்கார வேலரின் 'மார்க்சிய மெஞ்ஞானம்' என்ற நூலைப் படித்துத் தெளிவு பெற் றேன். தலைமறைவாக இருந்த என்னை என் தந்தை வந்து சந்தித்து என்னை மனமாற்றம் செய்ய முயன் றார். "எனக்குச் சேரவேண்டிய சொத்து களை தங்கைக்குக் கொடுத்து விடுங் கள். நான் உயிரோடு மீண்டு வந்தால் உங்களைச் சந்திக்கிறேன்" என்று சொல்லி என் தந்தையை அனுப்பி வைத்தேன். ஆம்பலாப்பட்டுப் பகுதி
யிலிருந்து தலைமறைவாக சென்னைக்குச் சென்றேன். இங்கு தான் தோழர்கள் வெங்கடேச சோழகர், மதனகோபால், மங்களசாமி பி.சீனி வாசராவ் ஆகியோர் தொடர்பு எனக்கு ஏற்பட்டது.
மூன்றரை ஆண்டு தலைமறைவு வாழ்க்கை முடிந்து 1953 பிப்ரவரி 23 அன்று தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜரா னேன். ஒருவாரம் விசாரணை நடந் தது. நான் ஆளான மூன்றாம் நாள் என் தந்தை இறந்தார். 37 - வது நாள் சென்னை உயர்நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது.
வரலாற்று பக்கங்கள் - II
வளரி வரலாறு 👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- கள்ளர் நாடுகள் (32)
- தொண்டைமான் மன்னர்கள் (20)
- தொண்டைமான் (14)
- பல்லவராயர் (10)
- மழவராயர் (8)
- சோழர் (3)
- கள்ளர் (1)
- பல்லவர்கள் (1)
என்னைப் பற்றி
- கள்ளர் குல வரலாறு
- Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)