புதன், 26 டிசம்பர், 2018

மொழிப்போரின் நாயகன் மா. இராஜாங்கம் தேவர் - MP/MLA


தேனி மாவட்டத்தில் கூடலூர் மிக உணர்வு மிக்க ஊர், சுமார் 70 சதவீதம் கள்ளர் குடியினர் வசிக்கும் பூமி. இங்கு கள்ளர் குடியில் பிறந்தவர் மொழிப்போரின் நாயகன், அண்ணாவின் போர்வாள் மாவீரர் ஐயா மா. ராஜாங்கம் தேவர். முல்லை பெரியாறு அணை புகழ் அண்ணல் பேயத்தேவரின் பேரனும் ஆவார். (பேயத்தேவர் பேத்தி வழி பேரன் ஆவார்).


25-2-65 ல் தமிழ் நாடெங்கும் உள்ள மாணவர்கள் இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்த்து கண்டண ஊர்வலம் நடத்தத் தொடங்கினர்கள். மதுரையிலும் அந்த ஊர்வல ஏற்பாடு இருந்தது, ஊர்வலம் வடக்குமாசி வீதிக்குள் வந்து கொண்டிருந்தபோது வழியில் இருந்த காங்கிரஸ் காரியாலயத்திற்குள்ளிருந்து சிலர் அரிவாள்களுடனும், கத்திகளுடனும் வெளிக்கிளம்பி மாணவர்களைத் தாக்கியும் வெட்டியும் கல்லெறிந்தும் அராஜகம் விளைவித்தார்கள். மாணவர்கள் காங்கிரஸ் ரவுடிகளால் தாக்கப்பட்டதை திட்டமிட்ட வெறிச் செயல் என்று தமிழ்நாட்டுப் பத்திரிகைகளெல்லாம் எழுதிக்குவித்தன.

இவைகளுக்கு மட்டுமா தீ. தங்களுக்குத்தானே தீ வைத்துக் கொண்டு சிலர் மாண்டு போனார்கள். கோடம்பாக்கத்தில் இருவர், கோவை மாவட்டத்தில் ஒருவர். திருச்சி மாவட்டத்தில் ஒருவர்-அவர் ஒரு தலைமை ஆசிரியர்! இந்தத் தியாகத் தீக்குளிப்புக் கேட்டு பிரதமர் லால்பகதூர் அதிர்ச்சியடைந்து விட்டதாக ரேடியோச் செய்தி அறிவித்தது.

ஒரு வாரம் தமிழகத்து அரசியல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஒடியது. ஆனல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் பஸ்கள் எல்லாம் மொழிக் கிளர்ச்சியின் காரணமாக நிறுத்தப்பட்டன. கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன.

தென்வியட்நாம் போராட்டத்தைப்போல், அரங்கநாதன், சிவலிங்கம் தீக்குளித்து விட்டார்கள். இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களைச் சிலர் தீக்குளிக்க வைத்து விட்டார்கள்.

கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. மதுரை மாவட்டம், கூடலூரிலும் நடைபெற்றது.

1965 ல் நடந்த இந்தி போரட்டத்தில் அன்றைய மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த டி.என்.சேஷன் தனது சுயசரிதையில்,

மா. ராஜாங்கம் தேவர் தலைமையில் போராட்டம் நடந்த போது கலெக்டர் சேஷன் சுட உத்தரவு கொடுத்தார். ஐந்து பேர் இறந்தனர். பத்து பேர் கை,கால்களை இழந்தனர். சுட்டவுடன் கூட்டம் ஓடி விடும் என்று நினைத்த சேஷன் அதிர்ச்சி அடைந்தார். அதற்கு பிறகு தான் போராட்டகாரர்கள் வெறி கொண்டு திருப்பி தாக்கி இரண்டு போலிஸ்காரர்களை கொன்று விட்டனர்.

ஐயா மா. ராஜாங்கம் தேவர் M.L.A. அவர்கள்தான் 13-2-65 கூடலூர் கிளர்ச்சிக்குக்காரணம் என்று போலீசார் கருதினர்கள். காயம்பட்டவர்களுக்கு முதல் உதவி அளித்துக்கொண்டிருந்த ராஜாங்கம் திடீரென்று கைதுசெய்யப் பட்டார். அதோடு மட்டுமல்ல, அவரை ஒரு அறையில் போட்டு முதுகில் மின் இயக்கத்தைச் சாடவைத்து போலீசார் வேதனைப்படுத்தினார்கள். மேலும் பல கொடுமைகள் செய்தனர்.

இதனை பற்றி சிவகங்கை பகுதியின் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறையில் இருந்த எஸ். எஸ். தென்னரசு தன்னுடைய "பெண்ணில்லாத ஊரிலே" என்ற தன் சுயசரிதையில் ஐயா மா. ராஜாங்கம் தேவர் பற்றி

ராஜாங்கம் வெறும் பிரஜைமட்டுமல்ல; ஒரு சட்டமன்ற உறுப்பினர். அவருக்கே இந்தக்கதி என்றால் மற்றவர்களைப்பற்றிக் கேட்க வேண்டுமா.

ஏண்டா ராஜாங்கம், நூறு வருஷம் போராடினலும் இந்தியை ஒழிக்கமுடியுமா உங்களால் போலீஸ் அதிகாரியின் கேள்வி இது.

ஆயிரம் ஆண்டுகளானலும் இந்தியை எதிர்த்தே சாவோமே தவிர அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்' இது ராஜாங்கத்தின் பதில். இப்படியும் வாக்குவாதம் நடந்திருக் கிறது.

இதுபோல் நூற்றுக்கணக்கானவரைபோலிசாரும் இராணு. வத்தினரும் தொல்லைப்படுத்தியிருக்கிருர்கள். ', தி.மு.க. தான் இந்தக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டது" என்று சொன்னல் விட்டு விடுவதாகப் போலீசார் அவர்களையெல்லாம் மிரட்டியிருக்கிருர்கள். ராஜாங்கம் என்ன சிறு பிள்ளையா? அடிக்குப் பயந்து புதிதாக எதையாவது சொல்லு வதற்கு?

இராஜாங்கத்தோடு கைதான 200-க்கு மேற்பட்டவர்கள் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார்கள். வலை பின்னியதுபோல் முதுகெல்லாம் பிரம்படி. சதை கயிறு கயிருகப் பிய்ந்திருந்தது. ராஜாங்கத்தின் அண்ணன் பாண்டித் தேவரும் கூடலூர் ஊராட்சித் தலைவர் கருப்பணத் தேவரும்கூடத் தாக்கப்பட்டிருந்தார்கள்.


ஊராட்சித்தலைவர் கைகளில் அணிந் திருந்த ஆறு மோதிரங்கள் போலீசாரால் கையாடப்பட்டன. விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று, காது கேட்பதற்காக வைத்துக்கொள்ளும் இயந்திரம் ஒன்று, விலை மதிப்பு ஆறு நூறு ரூபாய் - எல்லாம் உடைத்துத் தவிடாக்கப்பட்டுவிட்டன, எல்லோர்ையும் போலிசார் லாரியில் ஏற்றும்போது "போங்கடா வரும்போது கையோட முட்டைப்பூச்சி மருந்தும் வாங்கிவாங்க, இங்கே வந்ததும் உங்க பெண்சாதி புள்ளைகளைப் பார்த்ததும் நீங்க தற்கொலை பண்ணிக்கவேண்டியதுதான்' என்று போலீசார் கொக்கரித்து அனுப்பியிருக்கிருர்கள். அதை நினைத்து நினைத்து ஒவ்வொருவரும் கண்ணிர் வடித்தார்கள்.

ராஜாங்கத்தை தினசரி பார்ப்பேன். காலை "பெட் காபி' அவருக்கு என் அறையில்தான் தயாராகும். முரசொலி', 'நம்நாடு' இதழ்களும் இங்கிருந்து நான்தான் அனுப்புவேன். அவர் வெளிக் கொட்டடியில் இருந்தார், நான் உள்ளே இருந்தேன்.

கலைஞர் அவர்களுக்கு சிறையில் இடம் இல்லாததால், ராஜாங்கம் இருந்த இடத்தில் அடைக்க முடிவுசெய்து, சூப்ரெண்ட் உடனே ராஜாங்கம் இருந்த கொட்டடிக்குப் போய், என்ன மிஸ்டர் ராஜாங்கம் உங்களுக்கு தலைவலி என்றீர்களே. வேண்டு மானால் இன்று ஆஸ்பத்திரி வார்டில் படுத்துக்கொள்ளுங்கள்' என்று அன்பாகப் பேசுவதுபோல் அவரிடம் பேசி கோட்டைச் சுவர் ஒரமாக இருட்டில் ராஜாங்கத்தைச் ஒரு சந்து வழியாக பாதுகாப்புட்ன் ரகசியமாக சிறை மருத்துவ மனைக்கு அனுப்பிவிட்டு அந்த அறைக்கு கலைஞரை இன்னொரு முக்கிய வழியாக அழைத்துப் போனார்கள்.

காலை 7 மணிக்கு ராஜாங்கம் அவரது அறைக்கு வந்த பிறகுதான்-கலைஞர்அவர்கள் நேற்று இரவு மதுரை வந்தது, தனது அறையில்தங்கியது, அதற்காகத்தான் தன்னை மருத்துவ மனைக்கு வஞ்சகமாக அழைத்துப் போனது - எல்லாமே அவருக்குத் தெரிய வந்திருக்கின்றன.

புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். அவர்கள் நிறையப் பழங்கள் வாங்கி வந்தார். ராஜாங்கத்திற்குத் தைரியம் சொல்லுங்கள் என்றேன்".

- "ராஜாங்கத்திற்கு இது ஒரு நல்லகாலம். நல்லவர்களுக்கு வரும் துன்பம் அவர்களது வளர்ச்சிக்கு ஒரு முன்னறிவிப்பு. எனக்குக் கால் முறிந்த கட்டத்திற்குப் பிறகுதான் நல்லகாலம் தொடங்கியது. எப்போதுமே நியாயமும் உண்மையும் உள்ள வர்களுக்கு இப்படி ஒரு கட்டம் வந்தே தீரும். வந்தால்தான் அவர்களது வாழ்வு சிறக்கும்" என்ருர்,



மதுரை முத்து, இலட்சிய நடிகர் திரு. எஸ். எஸ். ஆர்., ராஜாங்கத்தை பலமுறை பார்த்து சென்றனர். இலட்சிய நடிகர் திரு. எஸ். எஸ். ஆர். அவர்களிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது. நண்பர் ராஜாங்கத்திற்கு அடிக்கடி தைரியம் கூறும்படி எழுதியிருந்தார்.


ராஜாங்கத்திற்கு தைரியம் கூறவேண்டும்? அவர் கலங்கா உள்ளத்தினர். எந்தத் துயரத்தையும் சிரித்துக்கொண்டே கழித்துப் பழக்கப்பட்ட்வர். எப்போதுமே அவர் குமிழ்ச் சிரிப் புடன்தான் காணப்படுவார். தி. மு. க. ஒரு தற்காப்புமிகுந்த இயக்கம். விரும்புவோரை அது அணைக்கும்; ஒதுங்குவோரைக் கண்டால் ஒதுக்கும். ஆனல் யாராவது அதை அழித்துவிட நினைத்தால் அவர்களை அது ஒழிக்காமல் விடாது.” என்று ராஜாங்கம் அடிக்கடி சொல்லுவார். ஆளுல் ராஜாங்கத்தை நான் எப்போதாவதுதான் மருத்துவ மனைக்கு வரும்போது சந்திப்பேன்.


MLA  வாக இருந்த இவர், பிறகு திண்டுக்கல் 1971-1973 MP...யாக இருக்கும் போது தான் இறந்தார். அப்போது அந்த இடை தேர்தலில் தான் மாயத்தேவர் (கள்ளர்) போட்டியிட்டு வென்று அதிமுக...விற்கு இரட்டை இலை சின்னம் வாங்கி கொடுத்தார். DMK மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.




இதில் இடது புறம் ராஜாங்கம் சமாதி. வலது புறம் அவரது அம்மா அங்கம்மாள் சமாதி (அங்கம்மா பேயத்தேவர் பேத்தி ஆவார்)




அங்கம்மா பேயத்தேவர் பேத்தி ஆவார். இது ராஜாங்கம் அம்மா கல்லறை கல்வெட்டு. பேயத்தேவர் மகன் வள்ளநாட்டுதேவர். வள்ளநாட்டுதேவர் மகள் அங்கம்மாள். அங்கம்மாள் என்பவரை மாயாண்டிதேவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள். மாயாண்டி தேவர், அங்கம்மாள் மகன் தான் மொழிப்போரின் நாயகன் மா. இராஜாங்கம் தேவர்.









மாவீரர் மா. ராஜாங்கம் தேவர் நினைவாக சிலை மற்றும் இராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் பள்ளி அமைத்தார்கள். வைகோ இந்த ஊருக்கு வந்தால் இவரது கல்லறை சென்று வணக்கி விட்டு தான் செல்வார்.



ராஜாங்கம் எம்பிக்கு வாரிசு இல்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாங்கம் மனைவி மிகவும் கஷ்டத்தில் இருந்தார். அதனால் அவர் தனது வீட்டை விற்று வாழ்க்கை நடத்தினார்.



1 ஏக்கர் நிலம் கொண்டது ராஜாங்கம் சமாதி நிலம். ராஜாங்கம் மனைவி கடைசி  கால காலத்தில் சமாதியில் 10 செண்ட் போக, மீதி 90 சென்ட் நிலத்தை தலித் கிருஸ்வர் சுடுகாட்டுகாக விற்றார், பின் சில மாதங்களில் இறந்து விட்டார்.



போராளிகள் இறந்த இடத்தில் அண்ணா பஸ் நிலையம், 


இரண்டு காவலர் இறந்த நினைவாக காவல்நிலையத்தில் அமைக்கப்பட்ட நினைவு சின்னம் இன்றும் உள்ளது.



ஆய்வு : திரு. செந்தில் - கூடலூர் தேனி

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்