பொய்யுண்டார்குடிக்காடு கிராமத்தை பூர்வீகமாக கொண்ட சுஷாந்திகா விஜயதேவர் ஓமானிய பெண்கள் கிரிக்கெட் அணியில் சாதனைப் படைத்து வருகிறார்.
அசோக் விஜயதேவர், இவரது குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு பொய்யுண்டார்குடிக்காடு கிராமத்தில் இருந்து மன்னார்குடிக்கு புலம்பெயர்ந்து சென்றுவிட்டது. அசோக் விஜயதேவர் தற்போது குடும்பத்துடன் ஓமானில் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள். அவரது இளைய மகளான சுஷாந்திகா அவர்கள் தற்போது ஓமானிய மகளிர் கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். சமீபத்தில் அரபு நாடுகளுக்கு இடையே நடந்த மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்த ஓமானிய பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டாம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தனது திறன் வாய்ந்த ஆட்டத்தால் அரபு உலகை தன் பக்கம் திருப்பி இருக்கிறார் சுஷாந்திகா. பொய்யுண்டார்குடிக்காடு கிராமத்தை விட்டு சென்றாலும் அசோக் அவர்களின் குடும்பத்தார் வருடா வருடம் இங்குள்ள குலதெய்வ கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வ கோவிலில் ஒரு குதிரை சிலை வைத்து அதனருகே உள்ள ஒரு சிலையின் கைகளில் கிரிக்கெட் பந்து இருப்பது போல அழகிய ஒரு கட்டுமானத்தை அவர்கள் சார்பாக எழுப்பி இருக்கிறார்கள்.
எமது மண்ணுக்கு பெருமை சேர்க்கும் அசோக் விஜயதேவர் மற்றும் சுஷாந்திகா விஜயதேவர் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.






