செவ்வாய், 22 மே, 2018

வைத்திலிங்க தொண்டைமான்

225 வருடங்களுக்கு முன்பு கள்ளர்நாடான வல்லநாட்டு வைத்திலிங்க தொண்டைமான் சிலையை திருப்பத்தூர் கோட்டை கருப்பர் கோவிலுக்குள் சிலை நிறுவியவர் படமாத்தூர் கெளரி வல்லபதேவர். இதே போல பட்டமங்கலம் ஐயனார் கோவிலிலும் வைத்திலிங்க தொண்டைமானுக்கு சிலை உள்ளது.

சிவகங்கை சீமையில் உள்ள கள்ளர் நாடுகளுள் ஒன்றான பட்டமங்கல நாட்டார்களின் வரலாறு புதுக்கோட்டை யில் இருந்து தொடங்குகிறது. கிபி 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வல்லநாட்டில் இருந்து பட்டமங்கலத்தில் குடியேறி வாழத்தொடங்கினர்.

பட்டமங்கலத்தில் கிபி 18 ஆம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்தவர் சூரியத்தொண்டைமான். சிவகங்கை சீமை வரலாற்றில் புகழ்பெற்ற வைத்தியலிங்க தொண்டைமானின் தந்தையாவார்.சூரியத்தொண்டைமான் வளர்ந்தவுடன் தனது முன்னோரின் வரலாற்றை தெரிந்து கொண்டு, வல்லநாட்டில் உள்ள கருப்பரை தரிசித்து, கருப்பரின் நினைவாக சில ஆயுதங்களை பட்டமங்கலத்துக்கு எடுத்து சென்று கருப்பராக நினைத்து வழிபட்டார். இன்றும் அவர் வணங்கிய ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு தொடர்ந்து வழிபாடுகள் நடைபெறுகிறது. வல்லநாட்டு கருப்பர் கோயில் திருவிழாக்களிலும் இவரது வாரிசுகள் பங்கு கொள்கின்றனர்.

பாண்டியர் காலம் :

புதுக்கோட்டை கல்வெட்டு எண் 595, மாறவர்மன் வீரப்பாண்டியன் காலத்தை சேர்ந்தது (கிபி 1352) , அக்கல்வெட்டில் " வல்லநாட்டு பூவரசகுடி அரையர்களில் சூரியத்தொண்டைமான் " என தொண்டைமான் குல அரையரை குறிக்கிறது.வல்லநாட்டு கள்ளர்நாடாய் விளங்கியது என புதுக்கோட்டை கல்வெட்டு எண் 38, கூறுகிறது (வல்லநாட்டு கள்ளப்பால் நாடாய் இசைந்த நாடு). வல்லநாட்டில் தொண்டைமான்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்து அவர்களில் ஒரு பிரிவினர், பட்டமங்கலத்தில் குடியேறியது நிரூபணமாகிறது. பட்டமங்கல நாடு என்று அழைக்கபடும் நாடு சிவகங்கை ஜில்லா காளையார்கோவிலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் நாடு.


பட்டமங்கலத்தார் ஒலைசுவடிகள்:

பட்டமங்கலநாட்டில் இருந்து சிவகங்கை சமஸ்தானத்திற்கு அனுப்பட்ட ஒலைகளில் பட்டமங்கலத்தாரின் பூர்வீகம் பற்றிய வாசகங்களும் இணைந்துள்ளதை காணமுடிந்தது.
"கேரள சிங்கவள நாடு மேலதிருத்தி முட்டத்தூர் பட்டமங்கலம் அட்டமாசித்தி ஆண்டபிள்ளை நயினார் மதியாத கண்ட விநாயகர் நவயடி அழகு சௌந்தரி திருமணி முத்தாறு மாதவன் நயினா ரென்று பெயர் விளங்கிய கரும்பீசர சேதுவிராயர் வல்லநாட்டுக் கருப்பையா கிருவ கிடாச் சித்து நாடுல தேசி முதல் காசி வரையில் சிறந்த நாடு எங்கள் நாடு மங்கை நாடு".

பட்டமங்கல தொண்டமான்களின் முன்னோர் பற்றிய ஒலைச்சவடி தகவல்"ஆனந்த சித்திரை கேரளசிங்கவள நாடு மேலதிருத்தி முட்டத்தும் பட்டமங்கலம் அடைக்கலம் சாத்த நாடு பெரிய அம்பலம் சூரியத் தொண்டைமான், 1. வைத்தியலிங்க தொண்டமான் 2. ஆனைகாத்த தொண்டமான் 3. ரகுபதி தொண்டமான் 4. முத்தழகு தொண்டமான் 5. ராமசாமி தொண்டமான் 6. வெங்கடாசலத் தொண்டமான் 7. அரண்மனை அம்பலம் ஆறுமுகம் சேர்வை 8. பட்டமங்கலம் தேவாலயம் பிர்மாலயம் சிவாலயம் பொருந்திய மதியாத கண்ட விநாயகர் அட்டமாசித்தி நவயடிக் காளியாகிய அழகு சௌந்தரி அம்மன் அய்யனார் பந்தி கிராம தேவதைகள் விருந்தி பண்ணுகிற வழக்கம்”


பட்டமங்கல நாட்டை ஆளும் குறுநில அதிபர்களான அம்பலக்காரர்களுக்கு திருக்கோஷ்டியூர் தேர் திருவிழாக்களில் முதல் மரியாதைகள் தரப்படுகின்றன. இந்த பட்டமங்கல தொண்டைமான்களின் வரிசையில் வந்த வைத்தியலிங்க தொண்டைமான், சிவகங்கை சம்ஸ்தானத்துக்குட்பட்ட பாளையக்காரர். இவர் சிவகங்கை மன்னருக்கு நெருக்கமானவராக திகழ்ந்துள்ளனர். சிவகங்கைக்கு படைஉதவி செய்தவர். சிவகங்கை அரசகுடும்ப விசுவாசி.

ஒரு முறை சின்ன மருது காளையார்கோவிலின் கோபுரத்தை பெரிதாக கட்டியபோது இவரை அழைத்து கோபுரம் எப்படி என கேட்க இவர் சகஜமாக ஒரு பனைமரம் அளவே உள்ளது என வேடிக்கையாக கூறினார். அதற்க்கு மருது என்ன பனைமரம் அளவா எப்படி சொல்கிறீர்கள் என வினா எழுப்ப. ஒரு வளரியை வாங்கி தான் பனைமரம் அளவு வளரி வீசுவேன் என வைத்தியலிங்க தொண்டைமான் வளரியை கோபுரத்தின் மேல் வீசி அந்த கோபுரத்தை தாண்டி வீசி எறிந்து காட்டினார் என ஒரு சம்பவம் தெரிவிக்கின்றது.

ஒரு முறை காளையார்கோவிலில் தெப்பக்குளம் அமைத்த சின்ன மருது அந்த தெப்பக்குளத்தில் பல் நீரூற்றுகள் கிளம்பி அதன் தன்னீர் சமையத்தி அளவுக்கு அதிகமாக பெருக வைத்தியலிங்க தொண்டைமானை அழைத்து அதை சரி செய்ய யோசனை கேட்டார் எனவும். அதற்க்கு தொண்டைமான் அயிரைமீண்கள் பல வாங்கி விட்டால் இந்த தேவையில்லாத நீரூற்றுகளை சரி செய்யலாம் என யோசனை தெரிவித்திருந்தார்.சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத தேவரின் மறைவிர்க்கு பின் நடந்த வாரிசுரிமைபோட்டியில் படமாத்தூர் கௌரிவல்லபரை வளைத்த மருது அவரை சிறையில் அடைத்ததாகவும் அப்போது ஒரு நாட்டிய காரப் பெண்ணின் உதவியோடு கௌரிவல்லபரை தப்புவிக்க உதவிசெய்தவர். மருதுசகோதரர்களுக்கு எதிராக படமாத்தூர் கௌரி வல்லபதேவரை ஆதரித்தற்க்காக முன்பு நட்பாய் இருந்த மருது சகோதரர்களின் எதிர்ப்புக்கு ஆளானார்.

கௌரிவல்லபர் மோதலில் விபரம் தெரிந்த சின்னமருது சந்திக்கவரச்சொல்கிறார். பரஸ்பரம் வாக்குவாதம் ஏற்பட்டு சின்னமருதுவின் ஆட்கள் இவரைபிடிக்கமுயல கத்தியால் குத்திக்கொன்டு தற்க்கொலை செய்து கொள்கிறார். இது திருப்பத்தூர் கோட்டை கருப்பர் கோவிலுக்கு அருகே நடந்தது. அதே இடத்தில் பின்பு பட்டமேற்ற கௌரிவல்லபத் தேவர் வைத்தியலிங்க தொண்டைமானின் தியாகத்தையும் உதவியையும் பாராட்டி அவருக்கு திருப்பத்தூர் கோட்டை கருப்பர்கோவிலுக்குள் ஒரு சிலை வைத்தார். இன்றும் அந்த கோவிலில் வைத்தியலிங்க தொண்டைமானின் சிலையை கானலாம்.

இலங்கையை சேர்ந்த தமிழ் அமைச்சரான சௌமிய மாதவ தொண்டைமான் வைத்தியலிங்க தொண்டைமானின் வம்சத்தை சார்ந்தவர் ஆவார். வைத்தியலிங்க தொண்டைமானின் வம்சாவளியினர் பட்டமங்கலத்திலும் இலங்கையிலும் நிறைபேர் வாழ்கின்றனர்.  அமைச்சராலும், T.புதூர் பங்காளிகளாலும் இச்சிலை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு புதுக்கோட்டை யில் பாண்டியர் காலத்தில் வாழந்து வந்த வல்லநாட்டு தொண்டைமான்கள் கிபி 18 ஆம் நூற்றாண்டில் சிவகங்கையில் குடியேறி பட்டமங்கல நாட்டு அம்பலங்களாக உயர்ந்து தங்களது வீரத்தால் சிவகங்கை சீமை மீட்பு போர்களில் தங்களது தீரத்தை காட்டி இன்றும் தொண்டை மன்னர்களின் பெருமை பேசும் விதமாக இலங்கை அமைச்சர்களாக சாதித்து வருகின்றனர்.

தொண்டைமான்கள் சென்ற இடமெங்கும் ஆளும் சிறப்பு பெற்றவர்கள். திருப்பதி முதல் திருக்கோஷ்டியூர் வரை, அறந்தை முதல் இலங்கை வரை.

ஆதாரம்: 

ஒலைச்சுவடிகள் மற்றும் பூர்வீகம் பற்றிய தகவல்கள்
பட்டமங்கலம் கும்பாபிஷேக மலர் வெளியீடு 1987
புதுக்கோட்டை கல்வெட்டுகள்


ஆய்வு : சியாம் குமார் சம்பட்டியார் 

புதன், 16 மே, 2018

பட்டுராசு களப்பாடியார்
அப்போதெல்லாம் ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் கீழத்தஞ்சை அறிவது இரண்டே சாதிகள்தான். சடங்காகக் காலையில் குளிக்கும் ஆண்டைகள். சேற்றிலிருந்து கரையேறி, உடம்பில் படிந்திருக்கும் சேடையைக் கழுவிக்கொள்ள அந்தியில் குளிக்கும் பண்ணையாட்கள்.

ஆண்டையை மிராசுதார் என்பார்கள். அவருக்குச் சில கிராமங்களே சொந்தமாக இருக்கலாம். அவர் குடும்பம் இருக்கும் கிராமம் உள்கிராமம். கிராமத்தில் இருக்கும் மற்றவர்கள் குடிபடைகள். வெண்ணாறு பகுதியில் மன்னார்குடிக்குக் கிழக்கே ஒரு மிராசுதாரருக்கு உள்கிராமம் மட்டும் மூவாயிரம் ஏக்கர் என்பார்கள். ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பாசனமுள்ள கோரையாறு எட்டே குடும்பத்துக்கு இருந்ததாகச் சொல்வ துண்டு. மூன்று ஏக்கரானாலும், மூவாயிரம் ஏக்கரானாலும் அவர் மிராசுதாரர்தான். மன்னனாகவே இருந்தாலும் தஞ்சையை ஆண்டவர்களை ராஜா மிராசுதார் என்று சொல்வதுண்டு.

அந்தக் கால மொழியில் சொல்வதானால், கீழத்தஞ்சை யின் வெண்ணாறு பகுதியில் முக்காலே மூணு வீசம் (பதினாறில் பதினைந்து) ஆட்கள் தாழ்த்தப்பட்டவர்கள். இந்த நிலைமையோடு பண்ணையாட்களாக இருந்ததும் சேர்ந்துகொண்டு அவர்களின் இன்னல் நமது அன்றைய சமுதாயத்தில் உச்சத்தை எட்டியது.


பண்ணையாட்களுக்கு நெல்லாகக் கூலி கிடைக்கும். நடவாட்கள் ஆண்டை வீட்டு மாட்டுக் கொட்டிலைப் பெருக்கிச் சாணி அள்ள வேண்டும். பண்ணைக்கு நடவு நட வேண்டும். நடுவது இடுப்பு ஒடியும் வேலை. நாள் முழுவதும் தண்ணீரிலும் சேற்றிலும் நிற்க வேண்டும். குனிந்த முதுகு சுட்டெரிக்கும் வெயிலில் கொப்பளித்துவிடும். பிறகு களையெடுக்க வேண்டும். வளர்ந்த பயிராக இருந்தால் குனியும்போது கண்ணைக் குத்தும்.

உடம்புக்கு வந்தால் மருத்துவம் கிடைக்காது. தவித்துத் தண்ணீர் கேட்டால் பிடித்துக் குடிக்கச் சொல்லிக் கையில் தண்ணீர் ஊற்றுவார்கள். அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றிக்கொண்டு ஆண்டை வீட்டுக் குழந்தைகளை நடவாளிடம் தருவார்கள். பிறந்த மேனிக்குக்குத் தீட்டு இல்லை; துணிக்குத்தான் தீட்டு என்பது சாதிய சமூகத்தின் நம்பிக்கை.

ஆட்கள் உட்கார்வதற்கு அங்கே நீளமாக மண்ணால் மேடை கட்டியிருக்கும். சுவரில் இருக்கும் சிறிய ஜன்னல் வழியாக டீ வாங்கிக்கொள்ளலாம். கடைக்கு உள்ளே ஆண்டைகள் உட்கார்வதற்கு மட்டும் விசுப்பலகையும் மேசையும் கிடக்கும். குளிக்கும் நேரம் போலவே, புழங்கும் பாண்டங்களும் வர்க்கத்தை அடையாளப் படுத்தியது. தண்ணீர் குடிக்க வாழை மட்டை, கணவன் மனைவி தகராறு என்றால் ஒருவர் சிறுநீரை மற்றவரை குடிக்க வைத்தல், இருவரையும் இரு தூண்களிலும் கட்டி வைத்து சவுக்கால் அடித்தல், பண்ணையார் நிலத்தில் நூற்றுக்கணக்கான தென்னம்பிள்ளை நடவேண்டும் என்றால் சேரியிலிருந்து ஒருவரை வரவழைத்து, அவர் எதிர்பார்க்காதபோது மூளை சிதறும் அளவிற்கு ஒரே அடியில் வீழ்த்தி குழியில் போட்டு தென்னம் பிள்ளை நடுதல், சாணிப்பால் கொடுத்தல், (சாணிப்பால் என்பது உடம்பை இளைத்து சுருக்கி, கொஞ்சம் கொஞ்சமாக உயிரை கொள்ளும் ஒன்றாகும்) தலைக்கு எண்ணை வைப்பதை அவர்கள் கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாது. கால்நடைகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர்.

பண்ணையாட்கள் ஆண்டைகளிடம் விசுவாசம் காட்டாமலில்லை. எப்போதாவது கோபம் வந்து விட்டால், பெயரோடு பட்டத்தையும் சேர்த்துக்கொண்டு, “இதெல்லாம் இந்த பிச்சை வாய்க்காரனிடம் பலிக்காது. எனக்கென்ன சுகந்தையா, சுதந்திரமா?” என்று குமுறிக் கொட்டிவிடுவதுண்டு. ‘சுதந்திரம்’ என்பது விடுதலையல்ல, அவர்களே நட்டு அறுவடை செய்துகொள்ளும்படி பண்ணை யாட்களிடம் விட்டுவைக்கும் நிலத்துக்குப் பெயர்தான் சுதந்திரம். தாங்களாகவே உரிமையோடு எடுத்துக்கொள்ளும் சில வரும்படிகளுக்கும் ‘சுதந்திரம்’ என்று பெயர். நாட்டின் விடுதலைப் போராட்டம் சுதந்திரத்தின் பொருளைச் சுருக்கிவிட்டது.

இங்கு ஆண்டைகளாக இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் கள்ளர்கள் என்றாலும் அனைவருமே கொடுமைக்காரர்கள் அல்ல. பண்ணையாட்களை கொடுமை செய்த சிங்கலாந்தி அய்யர், நல்லாவூர் பண்ணையார் மகாலிங்க அய்யர், விளாத்தூர் கிராமத்தில் நிலப்பிரபு சுப்பிரமணிய அய்யர் போன்றவர்கள் தான் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனர்.

இந்த பண்ணையாட்கள் உரிமைக்காக, நிலவிய கொடுமைகளுக்கு எதிராக போராடி தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை மீட்டு தந்தவர்கள் இங்கு ஆண்டைகளாக கோலாச்சிய, அதே கள்ளர் குடியில் பிறந்த எல்.இராமலிங்கம் , வெங்கடேச சோழகர், பட்டுராசு களப்பாடியார் போன்றவர்கள் தான்.

பட்டுராசு களப்பாடியார் இந்தப் பகுதி இளைஞர்களில் ஒரு பகுதியினரைப் போலவே அவரும் சிங்கப்பூர் செல்கிறார். வட்டக்குடி இரணியன் சிங்கப்பூரில் ரௌடிகள் அழித்தொழிப்பு நடவடிக்கையிலும் நேரடியாக ஈடுபடுகிறார். அவருக்குப் பட்டுராசு களப்பாடியார், துரைசாமி போன்ற தீரமிக்க இளைஞர்கள் உதவியாக இருக்கின்றார்கள்.

இரணியன் துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் பதவியை உதறிவிட்டு வந்த பிறகு, வீரசேனன் தலைவராகவும் பட்டுராசு களப்பாடியார் காரியதரிசியாகவும் இருந்தார்கள். ஆங்கிலேயே அரசாங்கத்தின் நெருக்குதல் தாங்க முடியவில்லையாம். ஒருநாள் அதிகாரிகள் மீது குண்டு வீசியிருக்கிறார்கள். துறைமுகத் தொழிற்சங்கத்தைத் தடை செய்துவிட்டார்களாம். வீரசேனனும் பட்டுராசுவும் தப்பித்து மலேசியாவுக்கு ஓடிவிட்டார்களாம். வீரசேனன் திரும்ப சிஙகப்பூர் வரும்போது, பிடித்து, ஆங்கிலேயே அரசாங்கம் சுட்டுக்கொன்றுவிட்டது. பட்டுராசு களப்பாடியார் மாறுவேடத்தில் தப்பி இந்தியாவந்துவிட்டார்.

தமிழகத்தில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அந்த காலகட்டத்தில் போராடிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுடன் இணைந்து போராடத் தொடங்குகிறார்.


பட்டுராசு களப்பாடியார் தனது கிராமமான நெம்மேலியில் பள்ளிக்கூடம் ஆரம்பித்து அதில் தன்னுடன் சிங்கப்பூரில் வேலை செய்த தாழ்த்தப்பட்ட ஆசிரியர்களைப் பணியமர்த்தினார். அனைத்து மாணவர்களையும் ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச்சென்று அதிர்வை ஏற்படுத்தினார்.

இவர் 70-களில் நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதிக்கு பொதுவுடைமை கட்சி சார்பாக போட்டியிட்டு தோற்றவர்.

தியாகி பென்சனுக்காக கேட்டபோது மக்களுக்காக போராடியதற்காக கூலி வாங்குவது தவறு என அதை மறுத்தவர். புகழைக்கூட கூலியாக பெற விரும்பாதவர்.

அவரை மதிக்கும் விதமாக மன்னார்குடி-யை அடுத்த கீழநெம்மேலி என்ற கிராமத்தில் பறையர் வாழும் பகுதிக்கு கே.பி நகர் என்று அவர்களே பெயர் வைத்துள்ளனர்.

சனி, 5 மே, 2018

கள்ளர் ஜல்லிக்கட்டு
கள்ளர் நாடுகளில் மட்டுமே உள்ளன ஜல்லிக்கட்டிற்கான உட்கட்டமைப்புகள். அக்காலத்தில் சிறந்த ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களாக திருமங்கலம் மற்றும் மேலூர் பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக கள்ளர் வாழும் கிராமங்களில், அதிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளர்களால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாக குறிக்கப்பட்டுள்ளது.


மஞ்சுவிரட்டு அல்லது ஜல்லிக்கட்டு அல்லது ஏர்தழுவுதல் கள்ளர் கிராமங்களில் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. காலை 8 மணியளவில் போட்டிகள் தொடங்கும், மாட்டின் கொம்பு அல்லது கழுத்தைச்சுற்றி துணிகளை கட்டியிருப்பார்கள். " டம் டம்" என ஒலி ஒலிக்க கூடியிருக்கும் மக்களின் சத்தம் அதிரவைக்க போட்டி துவங்கும். காளைகளை முரட்டுதனமாகவும் அதே சமயத்தில் சமயோசிதமாகவும் செயல்பட்டு அடக்கிப்பிடித்து, துணியை அவிழ்ப்போர். அவர் அந்த நாளின் நாயகனாக கொண்டாடப்படுவார் சன்மானமாக மாட்டின் கொம்பில் சுற்றி வைக்கப்பட்ட துணியில் உள்ள பணம் அன்பளிப்பாக தரப்படும். பொங்கல் நாளிலிருந்து இரண்டு மாதங்கள் அனைத்து கள்ளர்வாழும் பகுதிகளிலும் நடைபெறும். உடல் வழுவில்லாமல், போதிய அறிவில்லாதவர்களுக்கு இங்கு காயங்கள் பரிசாக தரப்பட்டுள்ளன காளைகளால். 

ஏழுகிளை கள்ளர் சீமையான தேவகோட்டை,கள்ளர் நாடான கண்டதேவியில் சிறுமருதூர் இராஜ்குமார் அம்பலகாரர் தலைமையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு. கீழே 
வடமாடு மஞ்சுவிரட்டு என்பது சாதாரண ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து வேறுபட்டது. செம்புலி ஆட்டிற்கு கிடைபோடுவதுபோல சுற்றி வட்டவடிவில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு காளை அதிகபட்சம் 25 நிமிடங்கள் களத்தில் விளையாடும். அதுபோல வீரர்களும் கபடி விளையாட்டை போல 7-10 நபர்கள் மட்டுமே ஒரு போட்டிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மிகவும் ஆக்ரோஷமாக நடைபெறும் இப்போட்டியில் பரிசுகளும் அதிகம். இரண்டாம் ஆண்டாக இப்போட்டியை நடத்தி சிறப்பித்துள்ளார்கள் கள்ளர்குல முத்துராமலிங்கம் அம்பலகாரர் வம்சத்தார்கள்.தஞ்சை ,திருச்சி மண்டலங்களில் உள்ள கள்ளர் நாடுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள். பெரிய சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்றும். கூத்தாப்பாரில் பிப்ரவரி மாதத்தில் வரும் சிவன் இராத்திரி அன்றும். அன்பில், துவாக்குடி, நவல்பட்டு, பூதலூர் கோவில் பத்தில் மார்ச்சு,  மே மாதத்தில் நடக்கும்.

புத்தகம் :மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு(ஆண்டு :2000), ஆசிரியர் : சிவக்கொழுந்து

பாரம்பரியமாக ஜல்லிக்கட்டுகள் நடைபெறுவது மதுரை கள்ளர் நாடுகளிலே. மேலூர், திருமங்கலம் போன்ற கள்ளர் நாட்டு பகுதிகளில் சிறந்த ஜல்லிக்கட்டுகள் நடந்தன். ஜல்லிக்கட்டுகள் கள்ளர்களால் மிக அதிகமான ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது ( Madurai manual nelson கிபி 1890)


ஜல்லிக்கட்டு ---- 130 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று குறிப்புகளில் (Manual of pudukkottai state vol 1 P 73) இந்த மாடுபிடி விளையாட்டு ஜல்லிக்கட்டு (இ) மஞ்சுவிரட்டு என அழைக்கபடுகிறது. ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முன் தப்பு அடிப்பவர்களால் அருகாமையிலுள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் தினமன்று காலை 8 மணி அளவில் மாட்டின் கொம்புகளிலும், கழுத்திலும் துணி கட்டப்பட்டு அதில் காசு முடியப்பட்டிருக்கும். ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளில், தப்பு அடிகப்பபட்டு, மக்கள் ஆரவாரத்துக்கு இடையே, காளைகள் விடப்படும். காளைகளை அடக்குபவர்கள் கொம்பிலுள்ள பண முடிப்பை எடுக்க முயற்சிப்பர், காளைகளை அடக்கியவர்கள் நாயகர்களாக கொண்டாடப்பட்டனர்.


ஜல்லிக்கட்டு விளையாட்டு பொங்கலுக்கு அடுத்த நாளில் இருந்து தொடங்கி 2 மாதங்கள் நடைபெறுகிறது. புதுக்கோட்டை யின் கள்ளர் வாழும் கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு பற்றிய குறிப்புகள் 6 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கலித்தொகையில் காணப்படுகின்றன.


திண்டுக்கல்லில் நடைபெறும் ஜல்லிக்கட்டின்போது கள்ளர்களே பூசாரியாக செயல்பட்டு அங்குள்ள தெய்வத்திடம் குறிகேட்கும் உரிமை உடையவர்கள்.இச்சமயத்தில் அவர்கள் உரோமானிய வேளாண்மை தெய்வத்தின் பூசாரிகளை போல பிராமணர்களை விட உயர்ந்தவர்களாக தங்களை கருதி ஆணவம் கொள்வர்.


திண்டுக்கல் சல்லிக்கட்டு விளையாட்டில் தீரமிக்க சாதியாளர்கள் கள்ளர்களே. அதிக ஈடுபாட்டை இவ்விளையாட்டிற்கு காட்டுகின்றனர். பல ஊர்களில் தனியே இதற்காகவென்றே சாதிக்காளைகளை வளர்க்கின்றனர்.

கள்ளர்கள் வாழும் பகுதியான திருமங்கலத்திலேயே மிகச்சிறந்த  ஜல்லிக்கட்டை காணலாம். இதற்கு அடுத்தபடியாக மேலூரில் நடைபெறுவதை கூறலாம். இதன்மூலம் அலங்காநல்லூர்,பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் எல்லாம் தற்காலத்தில் சிறப்படைந்தவை என கொள்ளலாம்.

கவர்னர் பிரமலை நாட்டில் சுற்றுப்பயணம் செயதார். கவர்னர் சிந்துபட்டிக்கு வருகிறபோது அந்தப்பகுதியில் வழக்கமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு செய்து, அதில் கள்ளர் சமூகத்தினர் மாடுபிடிப்பதை கவர்னர் பார்க்கும்படி ஏற்பாடு செய்திருந்தனர். சீறிப்பாய்கின்ற முரட்டுக்காளைகளை முரட்டுத்தனமாகப் பாய்ந்து காளைகளை அடக்கும் கள்ளர் சமூகத்தினரை கவர்னர் பார்த்தால், இப்படி முரட்டுத்தனமாக உள்ள ஒரு சமூகத்தினரை அடக்க சி..டி.ஆக்ட் போன்ற கடுமையான சட்டம் தேவைதான் என்று கவர்னர் முடிவெடுத்துவிடுவார். அதன்மூலம் சி.டி.ஆக்ட்டை ரத்து செய்யாமல் தடுத்துவிடலாம் என்று சூதுமதிகொண்டவர்கள் இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்த சதியைப்புரிந்துகொண்ட தேவர் திருமகன், உள்ளங்கை அளவுள்ள(1 x 16 சைஸ்) ஒரு துண்டுப் பிரசுரத்தில்,”சிந்துபட்டிக்கு கவர்னர் வரும்போது நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு யாரும் மாடுகொண்டு போகவோ , மாடுபிடிக்கப்போகவோ கூடாது. அப்படியாரேனும்போனால், அவன்தான் இனதுரோகி” என்று குறிப்பிட்டார். அவ்வளவுதான். கவர்னர் வருகிற அன்று செக்கானூரனியிலிருந்து உசிலம்பட்டி வரை யாருமே சாலையில் நடமாடவில்லை. கவர்னர் சிந்துபட்டி ஊருக்குள் நுழைந்ததும் ஊரே மயான அமைதியாக காட்சி தந்தது. கவர்னர் திகைத்துப்போய், “என்னமோ விழா என்றீர்கள். ஊரில் ஒரு காக்கை குருவியைக்கூட காணவில்லை. ஊரில் ஆள் அரவம் அற்று காட்சி அளிக்கிறதே ஏன்?” என்று கேட்டார். அப்போது மதுரை கலெக்டர் தேவர் வெளியிட்ட கையகல நோட்டீஸைக்காட்டி “தேவர் ஜல்லிக்கட்டைப் பகிஷ்கரிக்கும்படி விடுத்த அறிக்கையால்தான் மக்கள் யாரும் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல. தங்கள் வருகையையும் பகிஷ்கரித்துவிட்டனர்” என்று கூறினார். அப்போது கவர்னர் மூக்கிலே விரலைவைத்து, “ஒரு கையகல நோட்டீஸில் ஒரு நாட்டையே கட்டுப்படுத்தக்கூடிய அவ்வளவு செல்வாக்கு படைத்த தலைவரா தேவர்?” என்று ஆச்சரியப்பட்டார்.

வியாழன், 3 மே, 2018

கள்ளர் குல மாமன்னர் தொண்டைமான் ராஜ்ஜியம்
Maharajah Bhairavar Thondaiman and Raja Gopala Thondaiman
Esme Mary Sorrett Fink (15 September 1894 – 20 November 1967), popularly known as Molly Fink was an Australian socialite and wife of Martanda Bhairava Tondaiman, the Raja of the princely state of Pudukkottai.

1858 இல் எடுத்த புதுக்கோட்டை அரண்மனை புகைப்படம்.


H H Raja Rajagopala Thondaiman


 H H மார்த்தாண்ட பைரவர் தொண்டமானன் மோலி பிங்க் உடன்

 H H Marthanda Bhairava Thondaiman - Maharaja of Pdukkottai Ramachandra Thondaiman Bhadur - Maharaja of pudukkottai


 Martanda Sydney Tondaiman Martanda Bhairava Tondaiman's son Martanda Sydney Tondaiman was the son and only child of Martanda Bhairava Tondaiman, Raja of Pudukkottai and his Australian wife Molly Fink. Wikipedia Born: July 22, 1916, Sydney, Australia Died: January 20, 1984, Florence, Italy Resting place: Golders Green Crematorium Parents: Martanda Bhairava Tondaiman, Molly Fink

புதிய அரண்மனை கட்டும் போது , புதுக்கோட்டை

 Shri.Radhakrishna Thondaiman Maharajkumar of Pudukkottai in 1948H H yeswanth Rao Gorbade Maharaja of Sandur (lying down ) with H H Rajagopala Thondaiman Maharaja of Pudukkottai in 1950

 At new palace Pudukkottai now its collectorate Maharajkumar Radhakrishna Thondaiman With his Family


 H H Marthanda Varma with his wife and Maharajkumar Radhakrishna Thondaiman at Trivandram in 1950
 Maharajkumar Radhakrishna Thondaiman in 1948
Rani Ramadevi of Pudukkottai with Nadigarthilagam

 H H Marthanda Varma's wife piloting the boat to Edappalayam House with H H Rajagopala Thondaiman Maharaja of Pudukkottai 

 H H Rajagopala Thondaiman - Maharaja of Pudukkottai in 1940

 Sabarimala Temple in 1939 Photograph by H H Marthanda VarmaH H Maharaja of Pudukkottai (middle) with his brothers Maharajkumar Radhakrishna Thondaiman (left with camera ) and Maharajkumar Vijayaragunatha Thondaiman 

 H H Rajagopala Thondaiman - Maharaja of Pudukkottai 

H H Rajagopala Thondaiman - Maharaja of Pudukkottai in 1952வெள்ளையர் ஆட்சியில் திருட்டு முதலிய குற்றம் புரிந்த சாதிகள்

புதுக்கோட்டை சமஸ்தானம் ----------------------------------------------------- * புதுக்கோட்டை யில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சாதிகள்,...