வியாழன், 29 ஜூன், 2023

புதுக்கோட்டை தொண்டைமான்

தொண்டைமான்கள் தொண்டை மண்டலத்தில் இருந்து சோழநாட்டிற்கு இடம் பெயர்தல்




சிவந்தெழுந்த பல்லவரையர்

பாண்டிய மன்னன் உக்கிர வீர பாண்டியனால் ஏழு வருடம் காத்திருந்து புதுக்கோட்டைக்கு அழைத்து வரப்பட்ட வெங்கடாசல பல்லவராயர் தொண்டை மண்டலத்தில் இருந்து புதுக்கோட்டையில் குடியேறினார். அவரோடு தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவரும்தொண்டை மண்டலத்தில் இருந்து இடம்பெயர்ந்து அம்புநாட்டில் குடியேறினார். அங்கிருந்து இடம்பெயர்ந்த பல்லவராயரின் ஒரு குழுவினர் வைத்தூரில் குடியமர்ந்தனர். 

பல்லவராயன்காடவராயன்காடுவெட்டி ஆகிய கள்ளர் குழுக்கள் இன்றும் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வாழ்கின்றனர். (Manual of pudukkottai state 1920, P 732)(சிவந்தெழுந்த பல்லவராயன் உலா) (புதுக்கோட்டை சமஸ்தான செப்பேடு/General history of pudukkottai state 1916 p 98)







தொண்டைமண்டலமாகிய பல்லவ நாட்டினினறும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர்அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே விளங்கியிருந்தமை மேல் எடுத்தக் காட்டப்பட்டது. அம்புகோவிலில் தங்கி ஆண்டுகொண்டிருந்த தொண்டைமான் வழியினர் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர். 


புதுக்கோட்டை தொண்டைமான்கள் தொண்டைமண்டலத்தில் இருந்து புதுக்கோட்டை அம்புக்கோயில் பகுதியில் பல்லவராயருடன் குடியேறியதாக புதுக்கோட்டை வரலாற்று குறிப்பு கூறுகிறது. தெலுங்கில் காணப்படும் "தொண்டைமான் வம்சாவளி" எனும் கவிதைத் தொகுதியில் இவர்கள் இந்திர (கரிகாலன் சோழன் - இந்திரன் என்றும் அழைக்கப்பட்டார்வம்சத்தார் என்று குறிப்பிடுவதோடுஇதில் பச்சை தொண்டமானின் வாரிசான ஆவடை ரகுநாத ராய தொண்டைமானின் முன்னோர்களாக 15 பேரின் பெயர்கள் தொண்டைமான் வம்சாவளி எனும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.( General history of pudukkottai state 1916 P 114). இவர்கள் திருமலை தொண்டைமான் என்பவரின் மரபு வழியில் வந்தவர்கள். திருமலை தொண்டாமான் தொண்டை நாடு அல்லது தொண்டை மண்டலத்தில் இருந்த திருப்பதியில் இருந்து புதுக்கோட்டைப் பகுதியில் இருந்த கறம்பக்குடி எனும் பகுதியிலும் அம்புக்கோயில் எனும் பகுதியிலும் குடியேறினார்கள்.

பிற்கால புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும், கள்ளர்களின் அழும்புள்ளார் பட்டமும்



பழையாறையில் எப்படி பிற்கால சோழ ராஜ்யம் உருவானதோ அதைபோல் கள்வர் கோமான் புல்லி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்த வேங்கட மலையில் இருந்து, சோழ பாண்டிய நாடுகளின் எல்லையாக விளங்கிய, கள்ளர் படைபற்றுகளாக இருந்த புதுக்கோட்டையில் (கலசமங்கலம், சிங்கமங்கலம்) உள்ள அம்புக்கோயிலில், கள்ளர்களின் ஒரு பிரிவான தொண்டைமான் மன்னர்கள் குடியமர்ந்து பிற்கால தொண்டைமான் ராஜ்யத்தை உருவாக்கினர்.



அரையனாக இருந்த இவர்கள் அப்பகுதியில் வெற்றிபெற்ற மன்னர்களுக்கு போர் உதவி செய்தும், யானை படைகளுக்கு பயிற்சி அளிப்பதில் சிறந்தும் விளங்கினர். தங்களுக்கான சூழ்நிலை நோக்கி காத்திருந்து, தங்களுக்கான பிற்கால தொண்டைமான் ராஜ்யத்தை உருவாக்கினார்கள். 

அம்புக்கோயில்

புதுக்கோட்டை நாட்டிலுள்ள அம்புக் கோயில் என்பது ஆதியில் அழும்பில் என்னும் பெயர் பெற்றிருந்தது. கல்வெட்டுக்களிலும் பழந் தொகை நூல்களிலும் குறிக்கப்பட்டுள்ள இவ்வூரில் "மானவிறல் வேள்" என்னும் குறுநில மன்னன் அரசாண்டான் என்று மதுரைக்காஞ்சி கூறும். இவ்வூரில் எழுந்த சிவன் கோயில் அழும்பிற் கோயில் என வழங்கலாயிற்று. அழும்பிற் கோயில் அம்புக் கோயில் என மருவிற்று. நாளடைவில் கோயிற் பெயரே ஊர்ப் பெயராயிற்று.


அம்புநாட்டு சிவாலயத்தில் அம்புநாட்டு கள்ளர் அரையர் பல்லவராயர் 

அம்புநாட்டு சிவாலயத்தில் கள்ளர் மரபின் பன்றிகொண்டார் அளித்த பழமையான தேர் நன்கொடையில் உள்ளது

அலும்பில் தெற்காலூரில் காணியுடைய அரையர் பெருமக்கள் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் மரபினர்







அம்புக்கோவில் சீரி மிகு கட்டிட கலையுடன் சிவன் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வீர ராஜேந்திர சோழீஸ்வரமுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளதால் வீர ராஜேந்திர சோழ மன்னர் காலத்தில் கி.பி. 1062- 1069 ல் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இக்கோயிலுக்கு பலர் கொடை அளித்துள்ளனர். ஆணை தொண்டைமான் என்பவரும் , நெடுவாசல் நாட்டை ஆண்ட பாண்டி பெருமாள் மாவலி வானதிரையன் ஆகியோர் கொடை வழங்கியதாக இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 

இங்குள்ள சிவனிற்கு பக்தலலிதேஸ்வரர் என்று பெயர். தாயார் தயாபுரநாயகி . மிகவும் பழமையான சிவாலயமாக அமைந்துள்ளது. அருகில் வீரமாகாளி கோயில் உள்ளது. காளி மிகுந்த சக்தியுடன் உக்கிரமாக காட்சி தருகிறாள். புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தினரால் பக்தலலிதேஸ்வரர் சுவாமியும், வீரமாகாளியும் சிறப்புடன் வழிபாடு செய்யப்பட்டு வந்துள்ளது.

புதுக்கோட்டையில் ஒவ்வொரு மன்னரும் பதவி ஏற்கும் போது இங்குள்ள கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்த நீரையும் , சுவாமிக்கு சூடிய மாலையும் அணிந்து கொள்வது வழக்கமாக இருந்துள்ளது.



அருள்மிகு ஸ்ரீ தட்டாறப்பூசி கோவில்


மான விறல்வேள் அழும்புள்ளார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்புக்கோயில் என்று அழைக்கப்படும் அழும்பில் என்ற இடத்தை ஆண்டுவந்த விறல்வேள் என்பவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எதிர்த்துத் தன் நாட்டினை இழந்தார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியருக்குப் பின்னர் அழும்பில் சோழர் கைக்குச் சென்றது. அழும்பில் பெரும்பூண் சென்னி என்னும் சோழவேந்தனின் வளமையான ஊர்களில் ஒன்றானது.

பின்னாட்களில் விறல்வேள் மரபினர் தம்மை “அழும்பில்வேள்“ என்றும், அழும்பில்லார் என்றும் பின்னர் மருவி அழும்புள்ளார் என்றும் அழைக்கப்படுகின்றனர். அழும்புள்ளார், மன்னவேள், சென்னிராயர் பட்டங்கள் உடையவ கள்ளர்கள் இன்றும் வாழ்ந்துவருகின்றனர். அது போல கள்ளர்களின் கவிராயர் பட்டம் இங்குள்ள பழமையான கவிநாடு அரையர்களை குறிக்கும்.

பன்றியூர்

அம்புக்கோயில் ராசராச வளநாடு என்றழைக்கப்பட்டன. “ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. நெடுவாசல் ஜமீன்தார் கள்ளரின் பன்றி(யூர்)கொண்டார் பட்டம் உடையவர்கள், அம்புநாட்டில் இருந்து இடம்பெயர்ந்து நெடுவாசல் பகுதியில் ஆட்சி செலுத்தினர்.

தொண்டைநாடு

பல்லவருக்கு அடங்கிய மூன்றாம் கரிகாலனின் புதல்வனான நந்திவர்மச் சோழன் வேங்கடமலை பகுதி தொண்டமானாடு, காளத்தி, நெல்லூர், திருப்பதி, சித்தூர், பகுதிகளையும் ஆளத் தொடங்கினன். நந்திவரும சோழனுக்குப் பின் அவனின் புதல்வனான சிம்மவிஷ்ணு சோழன் பல்லவரை எதிர்த்துப் போரிட்டு மாண்டான். அவனையடுத்து, அவனது தம்பியரான சுந்தரானந்த சோழன் மற்றும் தனஞ்செய சோழன் ஆகியோர் பல்லவருக்கு அடங்கி ஆளத் தலைப்பட்டனர். இவர்கள் அரசநாட்டுச் சோழர்கள் (ரேனாட்டுச் சோழர்கள்) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர். இவர்கள் ஆட்சி பகுதியில் குப்பம் என்ற ஊர் உள்ளது. இங்கு தமிழ் பேசுவோரும் வாழ்கின்றனர். இங்கு திராவிடப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. குப்பத்தைச் சுற்றியுள்ள ஊர்களை இணைத்து குப்பம் மண்டலம் உருவாக்கப்பட்டது. தொண்டை பகுதியான செங்கற்பட்டு மும்முடிக் குப்பம் என்று அழைக்கப்டுகிறது. குடவூர் காடு,  வைகுந்த வள காடு, துய்யா நாடு, ஆற்றுர் காடு. இந்த நன்கு நாடுகளும் வேங்கடக் கோட்டத்தைச் சேர்ந்தவை. தமிழ் பகுதிகள் என்று சோழர்களின் தமிழ் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. குலோத்துங்கன் காலத்தில் (கி. பி. 1178-1218) கன்னூல் செய்த பவணந்தி முனிவர் தமிழக எல்லைகளைக் ‘குணகடல் குமரி குடகம் வேங்கடம் - எனுநான் கெல்லையில் இருந்தமிழ்க் கடலுள்"  எனவே, பிற்காலச் சோழர் காலத்திலும் வேங்கடமே தமிழகத்தின் வட எல்லை என்பதைப் புலவர் நன்குணர்ந்திருந்தனர் என்பது தெளிவாதல் காண்க.


இப்குதியில் இருந்து வந்த  சோழ வழியினரான தொண்டைமான்கள், பல்லவராயர்கள் (வெங்கடாசல பல்லவராயர்) அம்புநாட்டை ஒன்பது குப்பங்களாக பிரித்தனர். 

வடதெரு குப்பம்
தென்தரு
வடக்களூர்
கள்ளக்கோட்டை
கரம்பக்குடி 
நெய்வேலி
அம்மானி
பந்துவக்கோட்டை
வெள்ளாள விடுதிக் குப்பம்

அதில் அம்புநாட்டில் அரையராக இருந்த தொண்டைமான்கள் அம்புநாட்டில் தெற்கு குப்பத்தில் வாழ்ந்துள்ளனர். இக்குப்பத்தில் ராங்கியர், பல்லவரயார், பன்றிகொன்றார் போன்றோருடன் வாழ்ந்து அந்த குப்பத்தினருடன் மட்டுமே மண உறவு கொண்டுள்ளனர்.



புதுக்கோட்டை அம்புக்கோயிலில் கிடைத்த கிபி 1110 ம் ஆண்டை சேர்ந்த ஸ்ரீ வல்லாள பாண்டிய தேவரின் கல்வெட்டில் (IPS 458) ஆனை தொண்டைமானார் என்பவர் அம்பு கோயிலில் வசித்ததையும், அவர் கோயிலுக்கு அளித்த கொடையையும், மேலும் இவருடன் குளந்தையராயர் என்பவரும் குறிக்கப்படுகிறார். இன்றும் அம்பு நாட்டில் குறந்தைராயர் எனும் பட்டம் கொண்ட கள்ளர் குழுவினர் வாழ்கின்றனர். (புதுக்கோட்டை க.வெ 458)



13 ஆம் நூற்றாண்டிற்குரிய அம்புக் கோவில் கல்வெட்டில் (522) அழும்பில் அஞ்சுக்குடி அரையர் எனும் குறிப்புக் காணப்படுகிறது. இங்கு அஞ்சுக்குடி அரையர் எனும் குறிப்பு அம்பு நாட்டு கள்ளர் சமூகத்தின ஐந்து உட்குழுக்களின் அரையர்களை குறிப்பதாகும். தொண்டைமான்கள் அம்புநாட்டில் குடியேறியபின் (மேலக்காரர், கண்டியர், பிச்சர், குருக்கள், அம்பட்டர்) ஆகிய அஞ்சு குடிகளை அங்கு குடியமர்த்தி அந்த ஊரின் அரையர்களாக இருந்துள்ளனர்.

அம்புநாட்டு கள்ளர்கள் மொத்தம் 9 குப்பங்களில் வாழ்கின்றனர்.

1. வடதெரு குப்பம் :- மாணிக்கராயர், பன்னிக்கொண்டார், ராசாளியார்,அருச்சிட்டியார், தொப்பையார், காடுவெட்டியார், வெள்ளாளவிடுதி தேவர், உஞ்சியவிடுதி ஜமீன்தார், கலியராய விடுதி ஜமீன், அக்கார வட்டம் மணியம்


2. தென்தெரு குப்பம் :-பல்லவராயர், தொண்டைமான், ராங்கியர், கலியரார், தேவர், தரஞ்சிரார், குறந்தைராயர், வலங்கொண்டார், ஆறார், வேட்டுவர், சம்பட்டியார், சேப்ளார், மாகாளியார், மறவராயர், நரங்கியார்


3.வடக்களூர் குப்பம் :- சம்பட்டியார்


4. கல்லாக்கோட்டை குப்பம் :-சிங்கம்புலியார்


5.கறம்பக்குடி குப்பம் :- தென்னதிரையர், மறவராயர், வலங்கொண்டார், நரங்கியர்


6. நெய்வேலிக் குப்பம் :-மன்னவேளார், காளிரார், மறவராயர், மதியபிலியார்


7. அம்மனிப்பட்டு குப்பம் :- காலிங்கராயர், சுக்கிரர்


8.பத்துவக்கோட்டை குப்பம் :- தேவர், காலிங்கராயர், சுக்கிரர், மறவராயர்


9.வெள்ளாளவிடுதி குப்பம் :- சிங்கம்புலியார்,ஆர்சுத்தியார், முத்துப்பிள்ளை


அம்பு நாட்டின் பொது கோயில் :- பக்தலீதீஸ்வரர் கோயில், வீரமாகாளி கோயில்

பக்தலீதீஸ்வரர் கோயில் வீரராஜேந்திர சோழீஸ்வரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோயில் வீர ராஜேந்திர சோழர் காலத்தில்( 1062-1069) கட்டப்பட்டது. வெளிப்புற மண்டபங்கள் தொண்டைமான் காலத்தில் கட்டப்பட்டது. காளி கோயில் பிற்காலத்தில் கட்டப்பட்டது. தொண்டைமான் மன்னர்கள் பதவியேற்கும்பொழுது இவ்விரு கோயில்களிலும் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தம் மற்றும் பூக்களை பெறுவது வழக்கம்.

சிவன் கோயில்( சித்திரை) மற்றும் காளி கோயில் ( பங்குனி) திருவிழா காலங்களில் முதலில் அரண்மனை மரியாதை என புதுக்கோட்டை மன்னருக்கு அளிக்கப்படும். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அரண்மனை மரியாதை என புதுக்கோட்டை மன்னருக்கு முதல் மரியாதை உள்ளது. புதுக்கோட்டை மன்னருக்கு பிறகு அம்புநாட்டு 9 குப்பங்களின் முதன்மை அம்பலங்களும் மரியாதை பெறுகின்றனர். தென்தெரு குப்பத்தின் தலைமை அம்பலம் பல்லவராயர்.


புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மற்ற கோயில்களில் மரியாதை பெற மன்னர் வர இயலாத போது அம்புநாட்டை சேர்ந்த மற்ற கள்ளர்கள் மன்னரிடம் சார்பாக மரியாதை பெறும் உரிமை பெற்றவர்கள்.

அரையர்களாக இருந்த தொண்டைமான்கள்


1) திருமால் தொண்டைமான்

2) நமனா தொண்டைமான்

3) பச்சை தொண்டைமான்

4) தண்டகா தொண்டைமான்

5) நமணா தொண்டைமான்

6) திருமா தொண்டைமான்

7) நமனா தொண்டைமான்

8.) பச்சை தொண்டைமான்

9) நமனா தொண்டைமான்

10) பச்சை தொண்டைமான்

11) கிண்கிணி தொண்டைமான்

12) தண்டகா தொண்டைமான்

13) திருமா தொண்டைமான்

14) பச்சை தொண்டைமான்

15) ஆவுடைராயத் தொண்டைமான்

மன்னர்களாக இருந்த தொண்டைமான்கள்


16) இரகுநாத தொண்டைமான்

17) விஜயரகுநாதராய தொண்டைமான்

18) இராயரகுநாத தொண்டைமான்

19) ராஜா விஜயரகுநாத தொண்டைமான்

20) இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான்

21) இராஜா ரகுநாத தொண்டைமான்

22) ஸ்ரீபிரகதம்பாதாள் இராஜா ராமச்சந்திர தொண்டைமான்

23) ஸ்ரீபிரகதாம்பாதாள் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்

24) விஜயரகுநாத துரராஜ தொண்டைமான்

25) ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்

வீரத்திலும், வீரசாகசங்களில் சிறப்புப் பெற்றிருந்ததாலும், இப்பகுதியை ஆண்ட நாயக்க மன்னர்களின் அரசப் படைகளில் செல்வாக்கு பெற்று புகழுடன் விளங்கியதாலும், 17 ஆம் நூற்றாண்டில் இருந்து சேதுபதி மன்னர்களின் ஆதரவுடன் தொண்டைமான் பரம்பரையினர் தங்கள் ஆட்சிப்பகுதியை விரிவாக்கி, தற்போது புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், குளத்தூர், கந்தர்வக்கோட்டை ஆகிய வட்டங்களை உள்ளடக்கியப் பகுதிகளை, புதுக்கோட்டையை தலைநகராகக் கொண்டு 250 ஆண்டுகளுக்கு மேலாக மன்னர்களாக நீண்ட ஆட்சி செய்தனர். இவர்களே தமிழகத்தின் இறுதி மன்னர்கள்.

புதுக்கோட்டை மன்னர்களது தனியரசு "புதுக்கோட்டை சமஸ்தானம்" எனப்பட்டது.

ராய ரகுநாத ராய வஜ்ரிடு ராய மண்ணித ராய ஆவடை ரகுநாத தொண்டைமான் :


கள்வர் கோமான் புல்லியின் வேங்கடத்தில் இருந்து வந்த தொண்டைமான்களில் ஒரு பிரிவினர் அம்புநாட்டில் தங்கியிருத்தனர். கள்ளர் மரபினரின் பல்லவராய மன்னர்களின் பல்லவராயன் சீமை என்று அழைக்கப்பட்ட பகுதியில், இவர்கள் தங்களின் ஆட்சி அமைவதற்க்கான காலத்தை எதிர்நோக்கி, காத்திருந்தனர்.

ஏற்கனவே கள்ளர் மரபினரின் அறந்தாங்கி தொண்டைமான்கள் ஆட்சிசெய்துகொண்டிருந்தனர்.

அதற்கான அடித்தளம் இட்டவரும், புதுக்கோட்டை தொண்டைமான் என்ற அரசமரபு உருவாவதற்கு வித்திட்டவரும், ராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா ஆவுடை ரகுநாத தொண்டைமானே ஆவார்.


ஆவடை ரகுநாத தொண்டைமானை பற்றிய நூல்கள் இந்திரகுலம், காசிப கோத்திரம், திருமங்கையாழ்வார் வழிவந்தர்வர்கள் என்றும், இவர்கள் மாலை “வாகை மாலை” என்றும் குறிப்பிடுகின்றனர். பல்லவர்களை போன்று சிங்கக் கொடியினை கொண்டவர்களாக இருந்தனர்.

இந்திரகுலம், காசிப கோத்திரம், வாகை மாலை பற்றிய விளக்கம் காண்போமானால்.

இந்திர குலம்: தொல்காப்பியமும் இந்திரனை போற்றுகிறது. வள்ளுவர் இவனை " இந்திரனே சாலும் கரி” இந்திரத்தைக் கட்டுப்படுத்தி வென்றதால் அவன் இந்திரன் என்று அழைக்கப்படுகிறான் என்கிறார். 

இந்திரன் என்பதற்கு தேவர்கோன், அரசன், சூரியன், நாக நாதன், கரியவன் என்று அகராதி விளக்கம் தருகிறது. மேலும் கரிகால சோழன் இந்திரன் என்றும் அழைக்கப்பட்டார்.

இந்திர குல வங்கிசன் என்பதற்கு இந்திரன் வம்சத்தை சேர்ந்தவர்கள் என்று பொருள். தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், இவன் கடைச் சங்கக் காலத்துக்கும் முற்பட்டவன் என்பர். இவனைச் சோழர்களில் முதன்மையானவன். தனது முன்னோனான இந்திரனுக்கு காவிரிப்பூம் பட்டினத்தில் முதன் முதலில்  28 நாட்கள் விழா எடுத்து சிறப்பித்தவன்.


கரிகாலரின் இமயப் படையெடுப்பை பராந்தகச் சோழனின் 25 ஆவது ஆட்சி ஆண்டு (பொ.யு.பி 932) வேளஞ்சேரி செப்பேட்டுச் சுலோகம் 8குறிப்பிடுகிறது. அதில் கரிகாலன் என்னும் சோழர் குல இந்திரன் பிறந்தான் என்று கூறுகிறது. சோழர்கள் இந்திர விழா எடுத்தும், போரின் வெற்றிக்கு இந்திரனை வணங்கினர். 

சோழர்களில் இந்திரனின் பெயரை கொண்டவர்களாகவும் சிலர் இருந்தனர்.

ஆதிராசேந்திரசோழன் (தொன்மச் சோழர்)
இரண்டாம் ஆதித்த பார்த்திவேந்திர கரிகாலன் (956 - 969)
முதலாம் இராசேந்திர சோழன் (1012-1044)
இராஜாதிராஜ சோழன் (பூபேந்திரச் சோழன்)(1012-1044)
இரண்டாம் இராசேந்திர சோழன் : (1051-1063)
இராஜ மகேந்திர சோழன் : கி.பி (1052-1064)
வீர ராசேந்திர சோழன் ( 1063–1070)
அதி ராசேந்திர சோழன் ( 1070)
குலோத்துங்க சோழன் ( இயற்பெயர் இராசேந்திரன்) : கி.பி.1070-1120
குலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். 
மூன்றாம் ராசேந்திர சோழன் (1246 - 1279)


தொண்டைமான்கள் இந்திர குலம் என்பதற்கு அரசகுலம் என்றும் பொருள் கொள்ள முடியும். மேலும் சோழர்களை போல இவர்களுக்கும் இந்திரனை தங்களின் முதன்மையானவனாகவே கருதுகின்றனர். அறந்தாங்கி தொண்டைமான் தங்களை சூரிய குலம், இந்திரன் ஏழடி கொண்டான் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

"நூறுபல் வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து ஈரிரண்டு ஏந்திய மருப்பின், எழில்நடை தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன்".

பொருள் : பலநூறு வேள்விகளை நடத்தியவனும் போர்களில் எதிரிகளைக் கொன்று பல வெற்றிகளைப் பெற்றவனும், நான்கு கொம்புகளையுடைய மகுடத்தைத் தரித்தவனும் எழிலான நடையும் நீண்ட கைகளும் உடையவனும், ஐராவதம் என்ற யானையில் வருகின்ற, செல்வம் நிரம்பிய செல்வனுமாகிய இந்திரன் என்று திருமுருகாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறார்  இந்திரன். 


காசிப கோத்திரம்: காசிப கோத்திரம் காசிபர் ரிசியை குறிக்கும். காசிபர், மரீசி முனிவரின் மகன் ஆவார். காசிபருக்கு இந்திரன், திருமால் (வாமனர்), அக்கினி, நாகர்கள் என்று பல மகன்கள் உண்டு.  கரிகாற் சோழனுடைய பரம்பரையைச் சேர்ந்த இரேணாட்டுச் சோழன், கடப்பை மாவட்டம் ஜம்மல் மடுகு தாலுகாவில் கோசினெ பள்ளி கிராமத்தில் கருங்கற்றூண் தூணில் தெலுங்கு எழுத்தில் உள்ள சாசனம் "சோழ மகாராசன் என்னும் அரசன், கரிகாற் சோழனுடைய பரம்பரையில் சூரிய குலத்தில் காசிப கோத்திரத்தில் பிறந்தவன் என்று தன்னைக் கூறிக்கொள்கிறான் (408 டிக 1904). இதே வேங்கடத்தில் இருந்து வந்த தொண்டைமான் மன்னர்களும் தங்களை காசிப கோத்திரம் என்று கூறிக்கொள்கின்றனர்.

சோழ மன்னர்கள் காஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களுடைய செப்பேடுகளில் இருந்து அறியலாம். காச்யபர், அத்ரி ஆகிய இரண்டு ரிஷிகளின் பெயர்களும் அவர்களுடைய குடி முதல்வர்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.








வாகை மாலை: வெற்றி பெறும் செயலில் மேம்பட்டு அரசர்களுடன் போரிட்டுப் போர்த் தொழில்களில் வெற்றி பெற்றபின் மணமுடைய வாகைமாலை சூடி, தோற்ற அரசர்களின் வளம் பொருந்திய நாடுகளைக் கைக்கொண்டார்கள், அரசர்க்கு உரிய முடி நீங்கலாக ஏனைய அரசர்க்குரிய செல்வங்கள் எல்லாவற்றையும் உடையவரானார். தொண்டைமான்களும் வாகை மாலை சூடி இந்திய தேசம் உருவான பின்னும் இவர்கள் மட்டும் இந்த மண்ணை தனி ராஜ்யமாக ஆண்டார்கள்.

திருமங்கையாழ்வார்: சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்த 'காராளர் கற்பகம்’ எனப்பட்ட திருமங்கையாழ்வார் வழி வந்தவர்களாக தொண்டைமான்கள் குறிப்பிடுவதற்கு ஏற்ப, இவர்கள் பூர்விக பகுதியான திருப்பதியை அடுத்த திருச்சானூர் எனும் அலர்மேல் மங்கைபுரக் கோவில் (இளங்கோவில்) சோழர் காலத்தில் பெரிய நாட்டவர் ’திருமங்கையாழ்வார்க்கு நாட் பூசை செய்து வந்ததை மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்து (19-ஆம் ஆட்சி ஆண்டு)க் கல்வெட்டுக் கூறுகிறது.





மிகவும் பழமை வாய்ந்த தொண்டைமான் பரம்பரையில் வந்த தொண்டைமான்களில் ஆவுடை ரகுநாத தொண்டைமான், விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கராயவுக்கு ராணுவ சேவை செய்துவந்தார் (1640 – 1661). "அனுராகமாலை" என்னும் நூல் "இந்நிலமன் சீரங்கராயருக்கு ராயத்தொண்டை மன்னன் பிடித்தனுப்பும் மால்யானை" என்று கூறுகிறது.


புதுக்கோட்டை தொண்டைமான் யானைக்கான தொடர்பு, பண்டைய தொண்டைமான் இளந்திரையன் பற்றிய பாடல் நமக்கு உணர்த்தும். “வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு, ஓங்குவெள் ளருவி வேங்கடம்” (அகம். 213).


விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயர் ராமேஸ்வரம் செல்லும்போது, அவரது யானைகளில் ஒன்றுக்கு மதம் பிடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் ஆவுடை ரகுநாத தொண்டைமான் தீரத்துடன் போராடி யானையை அடக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.


தொண்டைமானின் வீரத்தை கண்டு மெச்சிய ஸ்ரீரங்கராயர், தொண்டைமானுக்கு "ராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா" எனும் பட்டத்தை அளித்தார்.

இவற்றோடு

1) நிலங்களையும்
2) அம்பாரி யானை
3) முரசு யானை
4) சிங்கமுகபல்லக்கு
5) பெரிய மேளங்கள்
6) உலா வரும்போது கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை
7) "கண்டபெருண்டா (யானையை ஒரு பறவை வேட்டை ஆடுவது போல்)" எனும் உருவம் பதித்த பதாகைகளை தனக்கு முன் எடுத்துசெல்லும் உரிமை
8) பகல் நேரங்களில் தனக்கு முன்னும் பின்னும் விளக்குகளை எடுத்து செல்லும் உரிமை
9) இவரது புகழை பாடிச்செல்ல கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை
10) சிங்கக்கொடி, மீன் கொடி, கருடக்கொடி, ஹனுமர்கொடி பயன்படுத்தும் உரிமை
11) குதிரைகள் படைசூழ செல்லும் உரிமை
12) வெண்குற்ற குடை உயபோகப்படுத்தும் உரிமை

என பல உரிமைகள் ஆவுடை ரகுநாத தொண்டைமானர்க்கு அளிக்கப்பட்டது.

விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட வெங்கடராயர் (1630 முதல் 1642 வரை) காலத்தில் அவருடைய உதவியுடன்  ஆவடை ரகுநாத தொண்டைமான்  தொண்டைமான் தனது ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறார். விஜய நகர சாம்ராஜ்யம் ஒரு பலம் பொருந்திய இந்து சாம்ராஜ்யமாக உருவெடுத்த காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானமும் தொண்டைமான்கள் தலைமையில் ஒரு பலம் பொருந்திய சாம்ராஜ்யமாக உருவாகியது. 


No:15 1920-1921 அரசால் ஆவணப்படுத்தப்பட்ட செப்பேட்டில் கிபி1641லே புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரிடம் ஜெயங்கொண்ட நாடும், அதனுடைய 16 பிரிவை கொண்ட பாப்பாகுடி நாடு மற்றும் மாகாணம், நாடு,கூற்றம்,கிராமங்கள் இருந்ததாக குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் இந்த நிலப்பரப்பு தஞ்சை மராட்டிய படையெடுப்புக்கு பின்பு மராத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது.

திருமலை சேதுபதி காலத்தில் அவரின் வருகையின் போது புதுக்கோட்டை தொண்டைமான் மரியாதை அளித்ததாக " மறவர் சாதி வர்ணம்" எனும் ஒலைச்சுவடிகள் கூறுகிறது. இவரது ஆட்சி காலம் ( கிபி 1645-1670) . ( Mackenzie manuscript : madras journal of literature and science பக்கம்:347, கிபி,1836).

திருமலை நாயக்கர் ஒலைச்சுவடி ஒன்றில், அவரது காலத்தில் இருந்த சமஸ்தானமாக புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானம் குறிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்கர் கால 72 பாளையங்களில் குளத்தூர் தொண்டைமான் பாளையமும் குறிக்கப்பட்டுள்ளது.



கிபி 1639 ல் விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயரின் உதவியோடு வெள்ளாற்றின் வடக்கே உள்ள பல்லவராயர் பகுதிகளை தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது. (கிபி 1819 ல் எழுதப்பட்ட அரண்மனை குறிப்பு)

இந்த பகுதியில் திருப்பெருந்துறை ஆவுடையார் திருநாமத்தை தாங்கிய ஆவுடை ரகுநாத தொண்டைமான் தனது வலிமையால், தனக்கு கிடைத்த பகுதியில், ஸ்ரீரங்கராயரின் உதவியோடு அரையராக ஆட்சி செய்து வந்தார்.

திருமலை நாயக்கர் ஒலைச்சுவடி ஒன்றில், அவரது காலத்தில் இருந்த சமஸ்தானமாக புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானம் குறிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்கர் கால 72 பாளையங்களில் குளத்தூர் தொண்டைமான் பாளையமும் குறிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்கரின் காலம் கிபி (1623-1659) ஆகும் (oriental historical manuscripts in tamil language vol 2 பக் 161 கிபி 1835)

மன்னர் இரகுநாத சேதுபதி (1647-1672) மீது பாசம்கொண்டவர் ஆவுடை ரகுநாத தொண்டைமான், அதனால் தனது முதல் மகனுக்கு ரகுநாத ராய தொண்டைமான் என்று பெயரிட்டார்.

பாண்டிய மன்னர்களுக்குப் பிறகு முதன் முறையாக இரண்ய கற்ப வேள்வி நடத்தி இரண்ய கற்ப யாஜி என்ற பெயரைப் பெற்றவர் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் காலத்திலேயே அதாவது கிபி 1645- 1672 ல் புதுக்கோட்டை பாளையத்தின் தலைவராக தொண்டைமான் குறிக்கப்படுகிறார். (மெகன்சி சுவடிகள்).



வெள்ளாற்றின் வடக்கில் இருந்து ஜெயங்கொண்டான் நாடு வரை புதுக்கோட்டை தொண்டைமான்களின் நிலப்பரப்பு கிபி1641லே இருந்தது என்பது வரலாற்றில் தவிர்க்க முடியாத உன்மையே. இந்த செப்பேட்டில் குறிக்கப்பெற்ற பாப்பா நாடு கள்ளர் குடியின் விசையாத்தேவரவர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகிக்கும். ("ராஜேந்திரசோழவளநாடு பொய்யூர் கூற்றத்துப் பாப்பாக்குடி நாடு, சிறுநெல்லிக்கோட்டை நென்மேலி வாடியிலிருக்கும் நல்லவன் விசையாத்தேவரவர்கள் குமாரர் ராமலிங்க விசையாத்தேவரவர்கள் பாப்பானாட்டவர்களுக்கு காணியாக இருக்கும் செயங்கொண்டநாத சுவாமி".)




கிபி1655ஆம் ஆண்டு திருமலை நாயக்கரின் முதன்மை தளபதியான பின்னத்தேவருக்கு, பெத்தபிள்ளை திருமலை பின்னத்தேவன் என்று பட்டம் கட்டி, ஆயிரம் கோனார் சமூகத்தை திருநெல்வேலி பாளையக்காரரிடம் இருந்து மீட்டு மதுரையில் குடியேற்றம் செய்ததற்கு திருமலை பின்னத்தேவருக்கு கோனார் சமூகம் என்னனென்ன மரியாதைகள் செய்ய வேண்டும் என்பதை செப்பேட்டில் குறிக்கிறார்.

இந்த செப்பேட்டிற்கு சாட்சியாக 

சிவகங்கை மன்னர் (சிவசங்கு ராசா என உள்ளது, சிவகங்கையாக இருக்கலாம், அல்லது மற்ற ஊராகவும் இருக்கலாம்)

புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான்

கருமாத்தூர் கள்ளர் தலைவர் கொன்றி மாயத்தேவரும் கையொப்பம் மிட்டுள்ளனர்.

பட்டயத்திற்கு கீழே சொக்கலிங்கம் மீனம்மாள் துனை, மூணுசாமி துனை என்றும் உள்ளது.

விசயநகர அரசர் ஸ்ரீரங்கராயர் உதவியுடன் வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பல்லவராயர் பகுதிகளை கைப்பற்றுதல்:-

"In a palace document, dated 1819AD, it is said that 180 years before that date " the pallavarayars were ruling at pudukkottai and raya tondaiman with the consent of sriranga raya of anagundi( vijayanagar) conquered it" (General history of pudukkottai state R.aiyar 1916 page 120)

கிபி 1819 ல் எழுதப்பட்ட அரண்மனை குறிப்பில், கிபி 1639 ல் விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயரின் உதவியோடு புதுக்கோட்டை பல்லவராயர் பகுதிகள் ராய தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக  தொண்டைமான் மன்னர்கள் வெளியிட்ட 24 செப்பேடுகளிலும் ஸ்ரீரங்கராயரின் மேலாண்மையை மட்டுமே குறித்துள்ளனர்.

கிபி 1655 ல் திருமலை நாயக்கர் பிறமலை நாட்டு பின்னத்தேவருக்கு அளித்த செப்பேட்டில், சாட்சியாக தொண்டைமான் புதுக்கோட்டை என குறிப்பிடப்பட்டுள்ளது.(பிறமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும் பக்கம் 493)


திருமலை நாயக்கரின் காலம் கிபி (1623-1659) ஆகும் (oriental historical manuscripts in tamil language vol 2 பக் 161 கிபி 1835). இவற்றின் முலம் புதுக்கோட்டையின் பெரும்பான்மையான பகுதிகள் கிபி 1686 க்கு முன்பே அதாவது கிபி 1639 ல் தொண்டைமான் வசம் வந்துவிட்டதை அறியலாம். 

ஆவடை ரகுநாத தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் கிருஷ்ணா முத்து வீரப்ப நமன தொண்டைமான். இந்த ஆவுடை தொண்டைமானின் மகனான இரகுநாத தொண்டைமான், பிற்காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை தோற்றுவித்தார்.

ஆவுடை ரகுநாத தொண்டைமான் மகன்கள் மற்றும் மகள்

1) ராஜா ஸ்ரீ ரகுநாத ராய தொண்டைமான், 
2) ராஜா ஸ்ரீ கிருஷ்ணா முத்து வீரப்ப நமன தொண்டைமான், 
3) ராய பச்சை தொண்டைமான் சாஹிப், 
4) ராய பிரம்ம தொண்டைமான் சாஹிப், 
5) ஸ்ரீமதி காதலி அம்மாள் ஆயி சாஹிப்

ராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா ஆவுடை ரகுநாத தொண்டைமான் 1661 இல் காலமானார்.

ஆவுடைய தொண்டைமான் தன்னுடைய வலிமையால் அரையர் நிலைக்கு உயர்ந்தவர், சோழ கல்வெட்டுகளில் காணப்படும் "கள்ளப்பற்று" என்பது எத்தனை வலிமை உள்ள வீரர்கள் வாழ்ந்த பகுதி என்று நடுநிலையான ஆய்வாளர்கள் அறிவார்கள் ஆனால் இராமநாதபுரம் வரலாறு என்ற நூலில் எஸ். எம் கமால் என்ற ஆய்வாளர், கள்ளர்கள் திருட்டை மட்டுமே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்ததாகவும், மதுரை நாயக்கர் ஆட்சியில் கள்ளர்கள் மக்களை மிகவும் கொடுமை செய்ததாகவும் அவர்களை கிழவன் சேதுபதி மன்னர் வந்தே அடக்கி, திருத்தி காவல் தொழில் தந்ததாகவும், பல கள்ளர்களை கொன்றதாகவும் அதில் ஆவுடைய தொண்டைமான் மகன் ரகுநாத தொண்டைமானை தனது படையில் சேர்த்துக் கொண்டதாகவும், மற்ற கள்ளர்கள் திருந்தி விவசாயம் செய்தார்கள் என்று எந்த அடிப்படையான ஆதாரம் இல்லாமல், ஒரு வன்மொதோடு எழுதி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது

காமராஜருக்கு வலது புறம் கறம்பக்குடி முன்னாள் சேர்மன் விஜய ரகுநாத பல்லவராயர், இடப்புறம் புதுக்கோட்டை முன்னாள் MLA  இளைய மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான்( மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி)






நன்றி : 
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. சோழபாண்டியன்
திரு. பரத் கூழாக்கியார்