புதன், 31 மே, 2023

பல்லவராயர் வரலாறு - பல்லவராய மன்னர்கள் - பல்லவராயன்

பல்லவராயர் கள்ளர் சாதி 
(தமிழக அரசு)

பல்லவராயர் கள்ளர் மரபினராக, இன்றும் செல்வ செழிப்போடும், அதிகாரத்தோடும் தஞ்சை மற்றும் புதுக்கோட்டையில் வாழ்ந்து வருகின்றனர். 


பல்லவராயர்கள் ஆட்சி செய்த பெருங்களூர், போரம், வழுத்தூர் பல்லவராயர்கள் வழியினர் வாழும் ஊர்கள். இன்றும் வைத்தூர் (வழுத்தூர்) கோயில் திருவிழாவின்போது குதிரையில் வந்து முதல் மரியாதை பெறுபவர் பல்லவராயர்களின் சம்பந்தி சர்தார் மண்ணவேளார் மரபினர். 

பல்லவராயன் உலா


திருவரங்குளம் கோவிலில் சிவந்தெழுந்த திருமலராசா பல்லவராயன் என்பவன் வழுத்தூர் அரசனாக 1539 ஆண்டு கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறான். வல்லநாட்டு கள்ளர்கள் திருவரங்குளம் அரங்குளமுடையார் கோயிலில் கூடி சபைகளை நடத்துகின்றனர். இக்கோயிலில் தினசரி நடைபெறும் நிகழ்வுகளில் முக்கிய செலவுகளை ஏற்கின்றனர்.( Manual of pudukkottai state 1910).


பெருங்களூர் ஐந்துகரை நாட்டார்களாக கள்ளர்களே உள்ளனர். உருமநாதர் கோவிலில் வழுத்தூர் (வைத்திக்கோவில்) அரசரின் வழித்தோன்றலாக உள்ள போரம் பல்லவராயர்களே முதல்மரியாதை பெறுகின்றனர். 


தஞ்சாவூர் அய்யம்பேட்டை கிழக்கில் வழுத்தூர் என்ற கிராமம் உள்ளது. இரண்டு அக்ரகாரம் இருந்தாலும் முற்றிலும் இஸ்லாமியர்கள் வாழும் ஊர். இங்கே ஒரு பல்லவர் கால ஜேஷ்டா தேவி கற்சிலை உள்ளது. மாத்தூர். திருச்சோற்றுதுறை கோயில் கல்வெட்டுகளில் வழுத்தூர் பல்லவராயர் பெயர் காணப்படுகிறது. இரண்டு வழுத்தூருக்கும் தொடர்புகள் புலப்படவில்லை. 


பல்லவராயன்பட்டி:- 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டத்தில், கள்ளர் குல பல்லவராயர்கள் வாழும் சிற்றூர்.
 

பல்லவராயன்பத்தை:- 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில் பல்லவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

பல்லவராயன்பத்தை:- 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், முள்ளங்குறிச்சி ஊராட்சியில் பல்லவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். இது தெற்கு பல்லவராயன்பத்தை என அழைக்கப்படுகிறது.

பல்லவராயர் தெரு:- 


புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், காட்டாத்தி ஊராட்சியில் பல்லவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் ஊர்கள்.

மதுரை, தேனி பகுதியில் உள்ள பல்லவராயன்பட்டியில் கள்ளர் மரபினர் வாழ்கின்றனர். தேனிபல்லவராயன்பட்டி கிராமத்தில் ஏழைகாத்தம்மன், வல்லடிகார கோயில் அமைத்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கள்ளர் மரபினரால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்




பல்லவராயர்கள் பெருங்களூரை தலைமையிடமாக கொண்டு வாழ்ந்தனர். தங்களது கல்வெட்டுகளில் பெருங்களூர் அரசு என்றே குறித்துள்ளனர். கூழிப்பட்டி (பெருங்களூர்) வைத்தூருக்கு அருகில் உள்ளது. பெருங்களூர் கல்வெட்டு, இலக்கியங்களில் "கூழி" என அழைக்கப்படுகிறது. 


The Oxford History Of India (1958)


The Pallavas constitute one of the mysteries of Indian history. The conjecture that they were Pahlavas, that is to say Parthians or Persians from the north-west, was suggested solely by a superficial verbal similarity and may be summarily dismissed as baseless. Everything known about them indicates that they were a peninsular race, tribe, or clan, probably either identical or closely connected with the Kurumbas, an originally pastoral people, who play a prominent part in early Tamil tradition. The Pallavas are sometimes described as the ‘foresters’, and seem to have been of the same blood as the Kallars, who were reckoned as belonging to the formidable predatory classes, and were credited up to quite recent times with ‘bold, indomitable, and martial habits’. The Raja of Pudukottai, the small state which lay between the Trichinopoly, Tanjore, and Madura Districts, is a Kallar and claims the honour of descent from the Pallava princes.*


According to Srinivasa Aiyangar, who writes with ample local knowledge, the Pallavas belonged to the ancient Naga people, who included a primitive Negrito element of Australasian origin and a later mixed race. Their early habitat was the Tondai mandalam, the group of districts round Madras; Tanjore and Trichinopoly being later conquests. The Pallava army was recruited from the martial tribe of Pallis or Kurumbas. The Pallava chiefs were the hereditary enemies of the three Tamil kings, and were regarded as intruders in the southern districts. Hence the term Palava in Tamil has come to mean ‘a rogue’, while a section of the Pallava sub¬ jects who settled in the Chola and Pandya countries became known as Kallar or ‘thieves’. All these people doubtless belonged to the Naga race. Those statements support the view expressed in the text, as formulated many years ago. See JouveauDubreuil, The Pallavas^ Pondicherry, 1917.

பல்லவராயர்கள்







தமிழ் அகராதி - பல்லவராயர்

 

தமிழக அரசு - பல்லவராயர்




பல்லவராயர்கள்  சோழ மற்றும் பாண்டிய ஆட்சியில், குறு நில மன்னர்களாகவும், படைத்தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். கி. பி. 1171 இரண்டாம் இராசராச சோழனின் சிறந்த படைத்தலைவனாக விளங்கிய பெருமான் நம்பிப் பல்லவராயன் எனப்படுபவன் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஆமூர்க் கோட்டத்துக் காரிகைக் குளத்தூர் என்னும் ஊரவன். பல்லவராயன் பேட்டை என்னும் ஊர் மாயூரத்துக்கு அண்மையில் உள்ளது, இவ்வூர்க்குக் குளத்தூர் என்ற பெயர் இருந்தது. இக் குளத்தூர், பின்னர் இப்பல்லவராயன் பெயராலே பல்லவராயன் பேட்டை என்று வழங்கி வரலாயிற்று. இவ்வூரில் பல்லவராயன் தன் அரசன் பெயரால் இராசராசேச்சுரம் என்னும் கோயிலெடுப்பித்து, அதற்கு இறையிலியாக நிலமும் அளித்தான் என்று இரண்டாம் இராசராசனுடைய 10-ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 1156) க்குரிய கல்வெட்டுக் கூறுகிறது.

இரண்டாம் இராசராச சோழன் நோய்வாய்பட்டு இறக்கும் தறுவாயில், ஆட்சி உரிமை பற்றிக் கலகம் நிகழ்ந்திருத்தல், பல்லவராயன் பழையாறையில் இருந்த ஆயிரத்தளி படை வீட்டிலிருந்து இராசராசனுடைய குழந்தைகள் இருவரையும் இராசராசபுரத்திலே (தாரசுரத்தில்) காவல்மிக்க இடத்தில் இருக்கச் செய்து காப்பாற்றினான். இரண்டாம் இராசாதிராச சோழன் ஆட்சியிலும் பராக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியனுக்கும் போர் மூண்டது. குலசேகர பாண்டியன் இரண்டாம் இராசாதிராசனிடம் உதவி கேட்டான். இராசாதிராச சோழனும் திருச்சிற்றம்பல முடையான் பெருமான் நம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு படையை அனுப்பி, குலசேகர பாண்டியனை மதுரையில் ஆட்சி செய்து வருமாறு செய்தான். 

இவனுக்குப் பிறகு இரண்டாம் இராசாதிராச சோழனுக்குத் தலைமை அமைச்சனாக வந்தவன் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துப் பழையனூர் நாட்டுப் பழையனூர் உடையான் வேதவன முடையான் அம்மையப்பனரான அண்ணன் பல்லவராயன். 


பல்லவராயர்கள் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர், திருமயம், பெருங்களூர் மற்றும் வைத்தூர் ஆகிய ஊர்களை தலைமையாக கொண்டு புதுக்கோட்டையின் சில பகுதிகளை கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 17 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள்.



கிபி 1539 ஆம் ஆண்டை சேர்ந்த திருமலைராய சிவந்தெழுந்த பல்லவராயர் கல்வெட்டில் (புதுக்கோட்டை கல்வெட்டு 752), பாண்டியர் முடிக்காத்தவர் என தன்னை குறித்துள்ளார்.






(General history of pudukkottai state R aiyar 1916 p 98)/ 
Manual of pudukkottai state vol 2 part 1

இதனை உறுதி செய்யும் விதமாக, புதுக்கோட்டை இனாம் செட்டில்மெண்ட் ஆபிசில் கிடைத்த பழங்கால செப்பேட்டு தகவல் உள்ளது. அதில் உள்ள தகவலின்படி, உக்ர வீர பாண்டியன் தொண்டைமண்டலத்தில் 7 வருடங்கள் காத்திருந்து, வெங்கடாசல பல்லவராயர் என்பவரை, தெற்கு நோக்கி அழைத்து வந்ததாகவும், பல்லவராயர் மூலம் சேதுபதி நொண்டி மறவன் என்பவரை வீழத்தியதாகவும், அவரின் வீரத்தால் மகிழ்வுற்ற பாண்டிய மன்னர், பல்லவராயருக்கு தனது மருமகன் எனும் பட்டத்தை அளித்து, பொன்னமராவதி பக்கத்தில் பெருமளவான நிலங்கள், குதிரைகள், யானைகளை அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெங்கடாசல பல்லவராயரும் அவரை தொடரந்து வந்த தொண்டைமான் சக்கரவர்த்தியும் , புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள அம்புநாட்டில் குடியேறினார்கள். (General history of pudukkottai state R aiyar 1916 p 98)


சோழர்படையை வென்று கேரளசிங்கவளநாட்டு அரையராக பல்லவராயர் பாண்டிய மன்னரால் அமர்த்தப்படுகிறார் என்றும் குறிப்பிடப்படுகிறார்.




பாண்டிய மன்னருக்கு உதவியதால் புதுக்கோட்டை பகுதியில் கேரள சிங்கவளநாட்டில் பல்லவராயர் குடி அமர்ந்ததை 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிவந்தெழுந்த பல்லவராயன் உலா பாடுகிறது.

கி.பி.8ம் நூற்றாண்டில் மாறன் சடையன் என்ற பராந்தக பாண்டியன் காலத்தில் உறத்தூர் கூற்றத்தில் முதன்முதலாக பல்லவராயர் குறிக்கப்பட்டுள்ளார். அவர் உறத்தூர் கூற்றம், புதுக்குடி மயிலை திண்டன் என்று அழைக்கப்பட்ட அவந்திய கோப பல்லவராயர்.


மிழலைக் கூற்றம் என்பது திருப்பெருந்துறை, துஞ்சலூர், தண்டலை என்ற ஊர்கள் அடங்கிய பகுதியென்று இராவ்பகதூர் வி. வெங்கையர் அவர்கள் கூறுகின்றார்கள். அதனால் இப்பகுதி தஞ்சாவூர் மாவட்டமும் புதுக்கோட்டைத் தனி அரசும் சந்திக்கும் பகுதிகளில் உள்ள இடமாகலாம். அக்காலத்தில் ஊர், பேரூர், கூற்றம், கோட்டம், வளநாடு, நாடு என்று நாடுகளைப் பிரித்து ஆண்டார்கள். இக்காலத்தில் வழங்கும் தாலுக்கா, சில்லா அவைகளை மறையச் செய்துவிட்டன.

துஞ்சலூர் (மிழலைக்கூற்றம்) ஆட்சியராக, கூகூரின் ஆதித்தன் பிடாரன் என்ற மூவேந்த பல்லவராயர், தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோவில் தாலுக்காவில் இன்றளவும் இந்த ஊர் உள்ளது‌. குன்றாண்டார் கோவில் சிவன் கோவிலில் பல்லவராயருக்கு சிலை உள்ளது.


கள்ளர்நாடான வடமலை நாடாக (வீசங்கி நாடு) குன்றாண்டார் கோவில் உள்ளது. கிபி 12ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் சோழர்களை வெல்கையில்  அந்த படையை வழிநடத்தி, படைத்தளபதியாக செயல்பட்டவர் அண்ணா பல்லவராயர்.

தஞ்சையில் கள்ளர்கள் வாழும்பகுதிக்கு, வேங்கடமலையிலிருந்து இடம்பெயர்ந்த வந்த கள்ளர்கள் முதன்முதலில் அம்புநாட்டில் (அலும்பில்), கறம்பக்குடி பகுதிக்கு குடிபெயர்ந்ததாக கூறப்பட்டாலும், குன்றாண்டார் கோவில் பகுதிக்கு (விசங்கிநாட்டில்) குடிபெயர்ந்துள்ளனர். குன்றாண்டார் கோவில் என்பது விசங்கிநாடு அதாவது வடமலைநாடு, தென்மலைநாடு கள்ளர்களை உள்ளடக்கியது.




வேங்கடமலையிலிருந்து குடியேறிய கள்ளர்கள் முதலில் தற்போதைய புதுக்கோட்டையின் வடகிழக்கிலும், குன்னான்டார் கோவிலின் தெற்கு பகுதிக்கும் முதலில் வந்துள்ளனர். பின்பு தங்களுக்குள்ளே தலைவனை தேர்ந்தெடுத்து தன்னரசாக, பலமிக்கவர்களாக உருவாகியுள்ளனர். (நாராயணப்பர் அரசு மக்கள்,படைத்தலைவர், தன்றிமார், கர்தார்).


வேங்கடமலையிலிருந்து குடிபெயர்ந்து இன்றும் வாழ்ந்துவரும் உடையாளிப்பட்டி கள்ளர்கள் தங்களுடைய பூர்வீகமாக வேங்கடமலையை (திருப்பதி) குறிக்கிறார்கள். உடையாளிப்பட்டி முன்பு உடையாளிமங்கலம் (விசங்கிநாடு) என்று வழங்கப்பெற்றுள்ளது. இங்கு சன்னாசிகோவிலும் உள்ளது.

விசங்கிநாட்டின் சிதறல் நாடான வடமலைநாட்டுக்கள்ளர்களின் மையப்பகுதி உடையாளிப்பட்டி. உடையாளிப்பட்டி சன்னாசிகோவில் காணியாட்சிகொண்ட மங்களார் பட்டந்தாங்கிய கள்ளர்களுக்கு உரியது. மங்களார் பட்டமுடையவர்களின் பூர்வீகமும் உடையாளிப்பட்டிதான். மலேசியாவில் அமைச்சராகவும், தொழில்அதிபராகவும் உள்ளார்கள். ஆடி 28 ற்கு உலகம் முழுவதும் உள்ள மங்களார்கள் இங்கு கூடுகிறார்கள்.







விசங்கிநாட்டுக்கள்ளர்கள் தஞ்சைக் கள்ளர்களாக குறிக்கப்பட்டுள்ளனர். வடமலை, தென்மலை நாட்டுக்கள்ளர்கள் அடங்கியநாட்டுக்கூட்டம் அண்டக்குளத்தில் நடைபெறும்‌. வடமலை நாட்டு தெம்மாவூர் அம்பலக்காரர் (கள்ளர்) முதல் மரியாதை பெறுகிறார்.


பி 750 ல் இரண்டாம் நந்திவர்ம பல்லவர்காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோயிலில் எனும் ஊரில் உள்ளது.




குன்றான்டார்கோவில் சிவன்கோவிலில் கள்ளர்குல பல்லவராயர், சேனாதிபதியார், கள்ளர்நாட்டுவீரன், திருவுருவ சிலைகள் உள்ளன. இதுபோக கோவில்பாதுகாப்பில் உயிர்துறந்த வத்தனாக்குறிச்சி கொழுந்திரார் பட்டவர் சிலையும் குன்றான்டார் கோவிலில் இடம்பெற்றுள்ளது.





(கொழுந்திரார்)

கோவில்பாதுகாப்பு, குடிகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய கள்ளர்கள் (அரையர்கள்) பின்பு கலசமங்களம் (தற்போதைய புதுக்கோட்டையின் கிழக்கு) மற்றும் வடவாளம் பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.




விசங்கி நாட்டு கள்ளர் குல காடவரார் (உள்நாடு : வடமலைநாடு) 
குன்றாண்டார்கோயில், புதுக்கோட்டை.

காடவராயர்களை போல கள்ளர் மரபினரான பல்லவராயர்கள்:-

தொண்டைமான்,காடவராயன், பல்லவராயன், காடுவெட்டி ஆகிய பட்டங்கள் கள்ளர்களால் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது (Colas Vol.2. Prof.Sastri).


வத்தனாக்குறிச்சியில் நெட்டையர் பட்டந்தாங்கிய ஒரே ஒரு கள்ளர்குடும்பம் மட்டுமே உள்ளது. வத்தனாக்கோட்டையில் கொழுந்திரார் பட்டந்தாங்கிய கள்ளர்கள் அடர்த்தியாக உள்ளனர். வடமலைநாடு குன்றான்டார் கோவிலில் உள்ள பட்டவன் கொழுந்திரார் வத்தனாக்கோட்டையைச்சார்ந்தவர் என கள ஆய்வில் உறுதிப்படுத்தப்படுகிறது.

விசங்கிநாட்டின் உட்பிரிவு நாடுகள்:-

தென்மலைநாடு
வடமலைநாடு
பிறம்புநாடு
ஏரிமங்கலநாடு (இராயமுண்டான்பட்டி)
திருமங்கலநாடு
சிறுவயல்நாடு
காசநாடு
கொற்கைநாடு (செங்கிப்பட்டி)
பைங்காநாடு
ஒரத்தநாடு
கோனூர்நாடு

செங்கிலிநாடு(கிழக்கு,மேற்கு)





அரையர்களாக பல்லவராயர்கள்:-

முடிமன்னர் காலத்தில் பாண்டியரின் தளபதிகளாக விளங்கிய பல்லவராயர்கள், முகாலயர் காலத்திற்குப்பின் அரையர்களாக இருந்துள்ளதை தேக்காட்டூர் ஒலைச்சுவடிகள் குறிப்பிடுகின்றது. அரையர்களாக வரி வசூல், காவல், நீதி பரிபாலனம் முதலியவற்றை செய்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் சிவந்தெழுந்த பல்லவராயர்( இவர் 14-15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு பல்லவராயர்) என்பவர் கலசமங்கலம், சிங்கமங்கல பகுதிகளின் அரையர்களாக இருந்துள்ளனர். 

புதுக்கோட்டையில் இருந்த செட்டியார்கள், இப்பகுதியில் இருந்த வாணாதிராய நிலச்சுவன்தார்களுக்கு கடன்களை அளித்து உதவியுள்ளனர். இதற்காக செட்டியார்கள் சில கிராமங்களை பெற்றுக்கொண்டனர். 

அரையர்களான பல்லவராயர்கள் செட்டியார்கள், நிலச்சுவன்தாரான வாணாதிராயருக்கு அளிக்க வேண்டிய தொகையை பெற்றுக்கொடுக்கும் பணியை பல்லவராயரே செய்துள்ளார்.
 

கோனாட்டு வெள்ளாழர்கள் பாண்டிய நாட்டு பகுதிகளையும், வாணாதிராய நிலக்கிழார்கள் சோழ நாட்டு பகுதிகளிலும் வசித்துவந்தனர். கோனாட்டு வெள்ளாழ தலைவர்கள், வாணாதிராயருக்கு எதிராக சச்சரவு செய்யும் பொழுது, வாணாதிராயருக்கு ஆதரவாக கள்ளர்கள் போரிடவும், இதற்கு கள்ளர்கள் பெற வேண்டிய பணம் ஆகியவற்றை ஒப்பந்தமாக நிறைவேற்றினார் பல்லவராயர். இக்கள்ளர்கள் தங்களை நாராயணப்பர் அரசு மக்கள் என்றும், படைத்தலைவர் அல்லது தந்திரிமார் என்றும் குறித்துள்ளனர்.




வாணாதிராயர் காலத்தில் குழந்தை பல்லவராயர் மற்றும் வணங்காமுடி பல்லவராயர்கள் அரையர்களாக இருந்ததாகவும், அப்பொழுது பாலையநாடு மற்றும் வல்லநாட்டு ஏரிகளில் அணைகள் கட்ட பல்லவராயர்கள் உதவியதற்கு 120 பொன் மற்றும் 100 கலம் நெல் வாணாதிராயர் அளித்ததாகவும் ஒலைச்சுவடி தகவல்கள் கூறுகின்றன. ((General history of pudukkottai state R aiyar 1916 p 99)


அம்புக்கோயில்

கிபி 13 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய தேவர் ஆட்சி காலத்தில் அம்புகோயிலில் பல்லவராயர்கள் குறிக்கப்படுகின்றனர் (புதுக்கோட்டை க.வெ 369)



கிபி 13 ஆம் நூற்றாண்டில் சுந்தர பாண்டிய தேவர் காலத்துல் அம்புகோயில் அஞ்சுகுடி அரையர்கள் என அம்புநாட்டு அரையர்கள் தங்களை குறித்துள்ளனர்( புதுக்கோட்டை க.வெ 522).








அம்புநாட்டில் குடியேறிய தொண்டைமான்கள் மற்றும் பல்லவராயர்கள் , (குருக்கள், பிச்சர், மேளக்காரர், அம்பட்டன், வண்ணான்) ஆகிய ஐந்து குடிகளை கொண்டுவந்து அமர்த்தி ஐந்து குடிகளுக்கும் அரையராக தங்களை குறித்துள்ளனர்General history of pudukkottai state R aiyar ) புதுக்கோட்டை தொண்டைமான்கள் தங்களது செப்பேடுகளில் அம்புநாட்டு காணியுடைய அரையர் மக்கள் என்றே குறித்துள்ளர்.( காடங்குடி செப்பேடு கிபி 1739)




பனங்காட்டு நாடு பெருங்களூர் அரசாக பல்லவராயர்கள் :-

கோனாட்டு வெள்ளாழ நிலக்கிழார்களுக்கும் வாணாதிராயர்களுக்கும் பல முறை கடுமையான மோதல்கள் நிகழ்ந்துள்ளது. கோனாட்டு வெள்ளாழர்களுக்கு ஆதரவாக பாண்டி நாட்டு கள்ளர்களும் மறவர்களும், வாணாதிராயருக்கு ஆதரவாக சோழ நாட்டு கள்ளர்களும் போரிட்டுள்ளனர். 

போரில் உயிரிழிந்த கள்ளர்களுக்கு வாணாதிராயர்கள் பழிக்காணியாக நிலங்களை அளித்துள்ளார். ஓரு சமயம் கோனாட்டார்களுக்கு எதிரான போரில் 50 கள்ளர்கள் உயிரிழந்ததாகவும், அச்சமயம் பழிக்காணியாக பாலையநாட்டு பகுதிகளை கள்ளர்கள் பெற்றுள்ளனர்.

மற்றொரு போரில் 50 கள்ளர்கள் இழந்ததற்கு மற்ற பல கிராமங்களை பெற்றுள்ளனர்.கீரனூர் தாலுகா கட்சேரி எனும் இடத்தில் கிடைத்த செப்பேடு கானாடு கோனாடு போரில் 80 கள்ளர்கள் உயிரிழந்ததாகவும், அதன்பின் பழிக்காணியாக பெருங்களூர் அருகே உள்ள பனங்காடு எனும் பகுதியை கள்ளர்கள் பெற்றுள்ளனர். பல்லவராய அரையர்கள் பனங்காடு பகுதிக்கு குடியேறினர்.(General history of pudukkottai state R aiyar 1916 p 67-68)



பல்லவராயர்கள் தங்களது கல்வெட்டுகளில் தென்பனங்காட்டு நாட்டு பெருங்களூர் அரசு என குறித்துள்ளனர். பனங்காட்டு பகுதி கள்ளர்களின் ஆதரவை கொண்டு பல்லவராய அரையர்கள் "பனங்காடு நாட்டு பெருங்களூர் அரசு" நிலைக்கு உயர்ந்துள்ளனர். ( புதுக்கோட்டை கல்வெட்டு 713,714)


பனங்காட்டுப்பகுதி கள்ளர் நாடுகளில் ஒன்றாக இருந்ததை புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூல் குறிப்பிடுகிறது.



ஓரு சமயத்தில் கோனாட்டு வெள்ளாழருக்கும், கானாட்டு வாணாதிராயருக்கும் ஏற்பட்ட பெரும் சண்டையில் வல்லநாடு, பாலையநாடு, பெருங்களூர் நாடு, செங்காட்டூர் நாடு, அம்பு நாடு, தானவநாடு ஆகிய நாடுகளை சேர்ந்த கள்ளர்கள் வாணாதிராயருக்கு ஆதரவாக போரிட்டனர். மேலும் உதவி தேவைப்பட்ட நிலையில் விசங்கி நாட்டை சேர்ந்த 12000 கள்ளர்கள் வாணதிராயருக்கு ஆதரவாக களமிறங்கி கோனாட்டு வெள்ளாழ ஆதரவு படையினரை வீழத்தி கோனாட்டு தலைவர்கள் சிவந்தெழுந்த பல்லவராயர் முன் நிறுத்தினார்கள். இப்போரில் வெற்றி பெற்றதற்காக கள்ளர்களுக்கு 550 பொன்னும், 530 களம் நெல்லும் வாணாதிராயர் அளிக்க வேண்டும் என சிவந்தெழுந்த பல்லவராயர் உத்தரவிட்டார். 

உகந்தரசு செட்டியார் என்பவர் வாணாதிராயருக்கு தேவையான பொற்காசுகளை கடனாக அளித்தார். சாதாரண அரையர்களாக இருந்த பல்லவராயர்கள் அரசு நிலைக்கு உயர்ந்து ஆதனக்கோட்டை முதல் கவிநாடு வரையும், குடுமியான்மலை முதல் குளவாயப்பட்டி முதலான் பகுதிகளை ஆளத்தொடங்கினர். தங்களை "ராஜ்யம் பண்ணியருளுகையில்"என மன்னர்களாக குறித்தனர். ( தேக்காட்டூர் ஒலைச்சுவடிகள், general history of pudukkottai state page 68-69) R aiyar.)

    




பல்லவராயர்கள் ஆட்சி:-


சிற்றம்பலக் கவிராயர் என்பவர் சிவந்தெழுந்த பல்லவராயர் என்பவர் மேல் சிவந்தெழுந்த பல்லவராயர் உலா எனும் நூலை பாடியுள்ளார். இவரது காலம் கிபி 1650 ஆகும். இந்த காலகட்டத்தில் சிவந்தெழுந்த பல்லவராயர் ஆட்சி செய்த பகுதிகளாக.

ஆலங்குடி நாடு,
 
அமராபதி நாடு (பொன்னமராவதி), 
கடவன்குடி நாடு, 
செங்காட்டூர் நாடு, 
திருப்பேரையூர் நாடு, 
வல்லநாடு, 
மெய்மலை நாடு (திருமயம்), 
சந்திரேக்க நாடு (அம்புலியூர்) , 
கொடுங்குன்றநாடு(பிரான்மலை), 
கோளக்குடி நாடு, 
கோனாடு 
ஆகிய பகுதிகள் குறிக்கப்படுகுறது.( Manual of pudukkottai state vol 2 part 1 733)




பல்லவராயர்கள் பெருங்களூரை தலைமையிடமாக கொண்டு வாழ்ந்தனர். தங்களது கல்வெட்டுகளில் பெருங்களூர் அரசு என்றே குறித்துள்ளனர். கூழிப்பட்டி (பெருங்களூர்) வைத்தூருக்கு அருகில் உள்ளது. பெருங்களூர் கல்வெட்டு, இலக்கியங்களில் "கூழி" என அழைக்கப்படுகிறது. இவர்கள் புலிக்கொடியை கொண்டிருந்ததாகவும், பல்லவன்படி எனும் பெயரில் கோயில்களில் வழிபாடுமுறை ஏற்படுத்தி அதற்கு கொடைகளை அளித்து வந்துள்ளனர். இவர்கள் தங்களது ஆட்சி காலத்தில், கள்ளப்பால் நாடு என குறிக்கப்பட்ட கவிநாட்டு திருக்கட்டளையை முக்கிய படைபற்றாக கொண்டிருந்தனர். 



பெருங்களூர் பல்லவராயர்கள்:-

கல்வெட்டுகளில் பெருங்களூர் பல்லவராயர்கள் தென்னதிரையன் பிள்ளை பல்லவராயர்(கிபி 1312) ஸ்ரீரங்க பல்லவராயர் (கிபி 1462) பெருமாள் பல்லவராயர் (கிபி 1481) மாலையிட்டான் பல்லவராயர் பிள்ளை பல்லவராயர் (கிபி 1466) வீரநரசிங்க நாயக்க பல்லவராயர் (கிபி 1510) நல்ல பெருமாள் பல்லவராயர் (கிபி 1526) சிவந்தெழுந்த திருமலைராய பல்லவராயர் (கிபி 1540) அச்சுதப்பல்லவராயர் (கிபி 1588)’ ஆவுடைய நாயனார் பல்லவராயர் (கிபி 1607) மல்லப்ப பல்லவராயர் (கிபி 1616) மல்லப்ப பல்லவராயர் மற்றும் சிவந்தெழுந்த பல்லவராயர் (கிபி 1621) ஆளுடைய நாயனார் பல்லவராயர் ( கிபி 1675) (Manual of pudu.state vol 2 part 1 page 734)

சுதந்திர ஆட்சி -

பல்லவராயர்கள் 14 ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் அரசர்களாக உயரந்த பல்லவராயர்கள் தொடக்கத்தில் கோனேரிராயர், காங்கேயர் மற்றும் விஜய நகர பேரரசுக்கு கட்டுப்பட்டு ஆட்சி புரிந்திருந்தாலும், இடைக்காலங்களில் தன்னாட்சி புரிந்ததற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளில் காணக்கிடைக்கிறது. புதுக்கோட்டை க.வெ 860(கிபி 1589) மற்றும் 864 (கிபி 1607) களில் முறையே அச்சுதப்பல்லவராயர் மற்றும் ஆவுடை நயினார் பல்லவராயர் தங்களது கல்வெட்டுகளில் எந்த மன்னரின் மேலாண்மையையும் குறிக்காமல் சுதந்திர ஆட்சி புரிந்துள்ளதை உணர்த்தியுள்ளனர்.


புதுக்கோட்டை கல்வெட்டு எண் 866 ( கிபி 1537) ல் அச்சுதப்பல்லவராயரின் மகன் மல்லப்ப பல்லவராயர் தன்னாட்சி புரிந்துள்ளதை விளக்குகிறது. புதுக்கோட்டை கல்வெட்டு எண் 968 மல்லப்ப பல்லவராயர் மற்றும் சிவந்தெழுந்த பல்லவராயர் தன்னாட்சி புரிந்ததையும், கொடை அளித்ததையும் விளக்குகிறது. புதுக்கோட்டை கல்வெட்டு எண் 958 பெருங்களூர் அரசு ஆளுடைய நாயினார் பிள்ளை பல்லவராயர் தன்னாட்சி புரிந்து அளித்த கொடையினை விளக்குகிறது.   





விஜய நகர அரசின் கட்டுப்பாட்டில் சில காலம் ஆட்சி புரிந்த பல்லவராயர்கள் பிற்காலத்தில் அவர்களின் மேலாண்மையை ஏற்க மறுத்துள்ளனர். அதற்கு ஆதாரமாக விளங்கும் ஒர் சம்பவம் :-




விஜயநகர அரசின் பிரதிநிதியான அக்கால ராசா என்பவன் விசங்கி நாட்டு கள்ளர்களை அடக்க புதுக்கோட்டையில் வந்து முகாமிட்டான். புதுக்கோட்டையிலுள்ள நார்த்தாமலை பகுதியில் கோட்டை கட்டி வாழ்ந்தான். விசங்கி நாட்டு கள்ளர்களை அடக்க வந்தவனை விரட்டி அடிக்க முடிவு செய்தார் பல்லவராயர் அரசி அக்காச்சி என்பவள்.

கச்சிராயன் பட்டம் கொண்ட கள்ளர் குல வீரன் ஒருவனை அனுப்பி, அக்கால ராசாவின் தலையை கொய்து வருமாறு ஆணையிட்டாள். அரசியின் ஆணைப்படி அக்காலராசாவின் தலையை கொய்து அரசி அக்காச்சியின் பாதத்தில் சமர்பித்தான் கள்ளர் குல கச்சிராயன்.

கணவனை இழந்த அக்காலராசாவின் 7 மனைவிகளும், நார்த்தாமலை நொச்சி கண்மாய் அருகில் கணவனுடன் தீப்பாயந்து உயிர் விட்டனர். பல்லவராய அரசி அக்காச்சியின் நினைவாக அக்காச்சியார் குளம் இன்றும் உள்ளது.கந்தர்வகோட்டை அடுத்த பகுதியில் அக்காச்சிப்பட்டி எனும் ஊர் இவரது அடையாளமாக உள்ளது. (General history of pudukottai state R aiyar. Appendix)

சிவந்தெழுந்த பல்லவராயர், தொண்டைமான்களிடம் ஆட்சியை இழப்பு :-





புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்றை எழுதிய ராதாகிருஷ்ணன் ஐயர், வெள்ளாற்றுக்கு வடக்கே ஆட்சி செய்த பல்லவராயர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் தனியாட்சி செலுத்தியதாகவும், வெள்ளாற்றுக்கு தெற்கே திருமயத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே சேதுபதியின் ஆதிக்கம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளைப்பற்றிய கல்வெட்டு / ஒலைச்சுவடி/ செப்பேடுகளில் சேதுபதிகளை பற்றிய எந்த குறிப்புமே இல்லை என அவர் தெரிவிக்கிறார்.
(General history of pudukkottai state R.aiyar 1916 page 134)

கிபி 1639 ல் ராய தொண்டைமான் விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயரின் துணை கொண்டு பல்லவராயர்களிடம் இருந்து புதுக்கோட்டையின் பெரும்பான்மையான பகுதிகளை பெற்றார். கிபி 1686 ல் கிழவன் சேதுபதி துணைக்கொண்டு சிவந்தெழுந்த பல்லவராயர் கொல்லப்பட்டு வெள்ளாற்றுக்கு தெற்கில் இருந்த பல்லவராயரின் பகுதிகள் இரகுநாதராய தொண்டைமான் வசம் வந்தது. அந்த நிகழ்வு இளந்தாரி அம்பலக்காரர் மேனுஸ்கிரிப்டில் விவரிக்கப்பட்டுள்ளது. "கண்டதேவியில் இருந்த பல்லவராயருக்கு தன்னை வந்து காணுமாறு தூது அனுப்பினார் சேதுபதி. ஆனால் பல்லவராயர் தொடர்ந்து சிவபூஜையில் ஈடுபட்டு இருந்தார். இதனால் கோபமடைந்த சேதுபதி தன் மகனை யானை மேல் அமர்த்தி பல்லவராயரை தண்டிக்குமாறு அனுப்பினார். சேதுபதியின் மகன் பல்லவராயரை கொன்றுவிடுகிறார். இதனை அடுத்து பல்லவராயரின் உதவியாளர்கள் சின்ன பங்காரு மற்றும் பெரிய பங்காரு ஈட்டியை எய்து சேதுபதியின் மகனை கொன்றுவிடுகிறார்கள். இதன்பின் புதுக்கோட்டை வெள்ளாற்றுக்கு தெற்கே உள்ள பகுதிகள் தொண்டைமான் வசம் வந்தது. பெருங்களூர் பல்லவராயர்கள் பிற்காலத்தில் புதுக்கோட்டை தொண்டைமான் படையில் முக்கிய தளபதிகளாக பணியாற்றினர். (General history of pudukkottai state R aiyar 1916 p 120-130/ இளந்தாரி அம்பலக்காரர் ஒலைச்சுவடி )



சிவந்தெழுந்த பல்லவராயர் இன்றைய புதுக்கோட்டை மாகாணத்தின் சோனாடு, கோனாடு, கபிலை நாடு, பெருவாசல் நாடு, பைங்காட்டு நாடு, குளமங்கல நாடு போண்ற பகுதிகளை புலிக்கொடி தாங்கி ஆட்சி செய்த மன்னர். தீவிர சிவபக்தர், இவரின் சிவ பக்தியை மெச்சி இவர் மீது ஒரு உலாவே பாடப்பட்டுள்ளது. கண்டதேவி சொர்ணமூர்த்தீர்ஸ்வரர் கோவிலில் தனது பொற்கையாலே சிவபெருமானை தினம்தோரும் பூஜிக்கும் சிவதொண்டர்

சிவந்தெழுந்த பல்லவராயர் புதுக்கோட்டை பல்லவராய மன்னர்களில் சிறந்தவராக கருதப்படுகிறார். அவர் மேல் 17 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட சிவந்தெழுந்த பல்லவராயர் உலா இவரது புகழை எடுத்துரைக்கிறது.இவர் பல்லவர் வழி வந்தவர் என்றும், பெரிய பெருமாள் பல்லவராயர் என்பவரின் மகனே சிவந்தெழுந்த பல்லவராயர். இவர் சிறந்த சிவபக்தர் என்றும், சோழனின் மருமகன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். (சிவந்தெழுந்த பல்லவராயர் உலா)



சிவந்தெழுந்த பல்லவராயர் திருக்கோகர்ணம் சிவபெருமானுக்கு பொற்கிரீடம் அளித்துள்ளார். திருக்கோகர்ணத்தில் பாரசங்கிலி மண்டபத்தை கட்டியுள்ளார். (சிவந்தெழுந்த பல்லவராயர் உலா). குடுமியான்மலை கோயிலில் உள்ள  அம்மன் சன்னதியில் தான் பல்லவராயர்கள் முடிசூட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதன்பின் தொண்டைமான் மன்னர்களும் இதே சன்னதியில் முடிசூட்டுவதை 18 ஆம் நூற்றாண்டுவரை பின்பற்றினர். 













கிபி 1681 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை கல்வெட்டு (968) , சிவந்தெழுந்த பல்லவராயர் ராச்சியம் பண்ணியருளுகையில் குடுமியான்மலை கோயிலுக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடுகிறது. இதுவே சிவந்தெழுந்த பல்லவராயர் பற்றி கிடைத்த கடைசி கல்வெட்டாகும்.

சிவந்தெழுந்த பல்லவராயர் அவரின் மரணத்தை தொடர்ந்து அவர்தம் மனைவி தீப்பாய்ந்து இறந்துவிடுகிறார். பல்லவராயர் இறப்பிற்கு பிறகு அவரின் ஆட்சிப்பகுதியை இளந்தாரி அம்பலம் வரையறுத்து, அங்கு அதே பகுதியில் விஜயரகு நாத தொண்டைமானரை அமர வைக்கிறார். பிற்காலங்களில் தொண்டைமானார் பல்லவராயரின் வகையறாக்களிடம் பெண் எடுத்துக்கொள்கிறார், இன்றும் பெருங்களூரில் பல்லவராயரின் வகையராக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.


சிவந்தெழுந்த பல்லவராயர் பிறகு சிறப்புடன் இருந்த பல்லவராயர்கள்





பல்லவராயர் சிற்பம் : வைத்தூர் திருப்பனங்காட்டு உடையார் கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது.

முதல் மரியாதை: இக்கோயிலில் முதல் மரியாதை பெறுபவர் கள்ளர் குல மண்ணவேளார் குடும்பத்தினர். செம்பட்டி எனும் ஊரில் வாழ்கின்றனர். சித்திரை திருவிழாவில் குதிரை மேல் அமர்ந்து மண்ணவேளார் முதல் மரியாதை பெறுவது வழக்கம். மண்ண வேளார் குடும்ப முன்னோர்கள் தொண்டைமான் படையில் தளபதிகளாக இருந்துள்ளனர். பெருங்களூர் பல்லவராயர்களோடு மண உறவில் இணைந்தவர்கள். 

மண்ணவேளார்கள் அம்பு நாட்டை சேர்ந்த கள்ளர்கள், தொண்டைமான் படையில் முக்கிய ரெஜிமண்ட் மண்ணவேளாருடையது. இவர்கள் தொண்டைமான்களுடன் தொடர்ச்சியான திருமண உறவில் இணைந்திருந்தனர்.

ஆண்டப்பன் ஊரணி. குடுமியான்மலை புதுக்கோட்டை சாலையில் ஊரை ஒட்டி. ஒருபர்லாங் தூரத்தில் சாலைக்கு வடக்காக ஒரு பழைய் இடி. பாடுற்ற தெப்பக்குளம் உள்ளது. தொண்டைமான்கள் காலத் தில் ஆண்டக்குளம் ஆண்டப்ப மன்னவேளார் என்று ஒருவர் இருந்துள்ளார். இவர் பெயரில் ஆண்டப்ப மன்ன வேளார். குறவஞ்சியும் உள்ளது. ஒருவேளை இவராலோ அல்லது. இவர்காலத்தில் கட்டியதாலோ இப்பெயர் ஏற்பட்டது. குளத்தின் மைய மண்டபத்தில் இரண்டு நாயக்கர் தலைவர். ( குடுமியான் மலை கல்வெட்டு பகுதில் உள்ளது )

பல்லவராயர்கள் அளித்த கொடைகள்:-

குடுமியான்மலை குடுமிநாதர் மேல் கொண்ட பக்தியினால், அக்கோயிலின் கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், பூங்கா, தேர் ஆகியவற்றை உருவாக்கினார்.    (சிவந்தெழுந்த பல்லவராயர் உலா/manual of pudukkottai state vol 2 part 1 )








தேரடிக்கு தெற்கில் பல்லவராயர் கட்டின பன்னீரண்டு கால் பிள்ளையார் மண்டபம்(( 1813ல் புதுக்கோட்டை கணக்காய்வு ஒலைச்சுவடிகள் ஒலை 972)

புதுக்கோட்டை மையத்திலும், பேரையூர், விளத்துப்பட்டி ஆகிய பகுதிகளிலும் பல்லவன் குளத்தை உருவாக்கினார். (manual of pudukkottai state vol 2 part 1 )




பாப்பான்வயல், பழிஞ்சி, சேந்தமங்கலம், சிவபுரம் ஆகிய கிராமங்களை பிராமணர்களுக்கு அளித்தார். (General history of pudukkottai state page R aiyar pg - 100-101)

தில்லையிலும், காவேரிபூம்பட்டினத்திலும் பல்லவனீச்வரம் எனும் கோயிலை கட்டியவர்கள். (சிவந்தெழுந்த பல்லவராயர் உலா)

கிபி 1312 ல் தென்னதிரையன் பிள்ளை பல்லவராயன் வழுத்தூர் கோயிலுக்கு பல்லவன் சந்தி எனும் வழிபாட்டுக்கு நிலங்களை தானமாக அளித்தார்

கிபி 1387 ல் பெருங்களூர் விழித்துறங்கும் பல்லவராயர் திருக்கோகர்ணம் கோயிலுக்கு, விளக்குடி எனும் ஊரிலுள்ள நிலங்களை அளித்தார்

கிபி 1462 ல் பெருங்களூர் ஸ்ரீரங்க பல்லவராயர் திருக்கட்டளை சிவன் கோயிலுக்கு பல்லவன் சந்தி வழிபாட்டுக்காக நிலங்களை அளித்தார்

கிபி 1466 ல் பெருங்களூர் மிலிச்சர் பிள்ளை பல்லவராயர் என்பவர் குளத்தூர் சிவன் கோயிலுக்கு கொடை அளித்துள்ளார்.

கிபி 1481 ல் பெருங்களூர் விழித்துறங்கும் பிள்ளை பல்லவராயர் திருக்கட்டளை சிவன் கோயிலுக்கு ஆட்டங்குடி எனும் ஊரிலுள்ள நிலங்களை கொடையாக அளித்தார்.

கிபி 1539 ல் சிவந்தெழுந்த திருமலைராய பல்லவராயர் திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு நிலங்களை அளித்துள்ளார்.

கிபி 1615 ல் அச்சுத பல்லவராயர் மற்றும் மல்லப்ப பல்லவராயர் குடுமியான்மலை அருகே பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர்.

மல்லப்ப பல்லவராயர் குடுமியான்மலை கோயிலில் பணிப்பெண்ணாக இருந்த பல்லவராய மாணிக்கத்தாள் என்பவருக்கு நிலங்களை தானமாக அளித்துள்ளார்.

பெருங்களூர் கோனேரிராய பல்லவராயர் என்பவர் குண்ணன்டார் கோயிலில் உள்ள கோயில்களுக்கு கொடைகள் அளித்துள்ளார்.

பெருங்களூர் ஆவுடை நயினார் பல்லவராயர் கீழக்குடியில் உள்ள கோயிலுக்கு நிலக்கொடை அளித்துள்ளார். (General history of pudukkottai state page R aiyar pg - 100-101)

கிபி 1767 ல் கண்ட பல்லவராயர் குடுமியான்மலை அருகில் உள்ள கூடலூர் எனும் ஊரை குடுமிநாதர் கோயிலுக்கு கொடையாக அளித்தார். அதற்கு பின் கூடலூர் கண்ட பல்லவராயர் பூபாலபுரம் என அழைக்கப்பட்டது.( manual of pudukkottai state vol 2- part 2 page 1029)


கிபி 1829 ல் ரங்கன் பல்லவராயர், தொண்டைமானாரின் ஆணைக்கு ஏற்ப இலுப்பூர் வட்டம் சுந்தரப்பட்டியில் அணை கட்டியுள்ளார். (கல்வெட்டு 24, புதுக்கோட்டை கல்வெட்டுகள், பனையூர் ராஜேந்திரன்)





போர்களில் புதுக்கோட்டை பல்லவராயர்கள் :-

வாரைப்பதி ,அழும்பில், சூரக்குடி ஆகியவற்றை போர்களில் வெற்றி கண்டவர்கள்

பாண்டிய மன்னர்களுக்கு போரில் உதவிய காரணத்தால் பெறப்பட்ட வழுதி மானங்காத்தான் எனும் பட்டத்தை கொண்டவர்கள்.

18 வன்னியர்களை போரில் வென்றவர்கள்.

சாளுவர்களுக்கு போர் உதவி செய்ததால் சாளுவர் மானங்காத்தான் எனும் பட்டத்தை பெற்றனர்.

கிபி 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களுக்குள் ஏற்பட்ட வாரிசுரிமை போரில் குலசேகர பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டனர்.

அறந்தாங்கி தொண்டைமானை எதிர்த்து போரிட்டு வென்றுள்ளனர். (சிவந்தெழுந்த பல்லவராயன் உலா)

கோனாட்டு வெள்ளாழ தலைவர்களுக்கும் கானாட்டு வெள்ளாழ தலைவர்களுக்கு ஏற்பட்ட சண்டையில், கோனாட்டு வெள்ளாழ தலைவர் வேண்டுகோளுக்கு இணங்க 8000 கள்ளர் போர்வீரர்களை அனுப்பி கோனாட்டு தலைவர்கள் வெற்றி பெற உதவினார். (தேக்காட்டூர் ஒலைச்சுவடிகள், General history of pudukkottai state page 68-69) R aiyar.)

சிவந்தெழுந்த திருமலைராய பல்லவராயர் களபத்தை(யானை) வென்றவர் என போற்றப்படுகிறார்.(சிவந்தெழுந்த பல்லவராயன் உலா)

ஈரப்ப நாயக்க ஐயன் எனும் விஜய நகர தளபதிக்கு போர் உதவி அளித்ததால் கிடைத்த பகுதிகளை சிவந்தெழுந்த திருமலைராய பல்லவராயர் திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு தானமாக அளித்தார்.(General history of pudukkottai state page 100-101) R aiyar.) 

விஜய ரகுநாதராய தொண்டைமான்( 1730-1769) ஆட்சி காலத்தில் பெருங்களூர் ஊராட்சியில் உள்ள போரத்தில் ராய பல்லவராயர் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் தலைமையில் 722 பேர் கொண்ட படையானது பல்லவராயர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. மன்னரின் ஆணைக்கு ஏற்ப பல போர்களில் வீர தீரம் காட்டி உள்ளனர். (General history of pudukkottai state 1916 page 240-243) • இவர்களுக்கு பல சலுகைகள் மற்றும் நிலங்கள் அளிக்கப்பட்டு இருந்தது • இவர்களிடம் வாள், கத்தி, துப்பாக்கி, வளரி ஆகியவற்றை கையாளும் திறனுடைய மிகப்பெரிய படை இருந்துள்ளது ( General history of pudukkottai state 1916 page 243)
              






கிபி 1781ல் ஐதர் அலியால் பிடிக்கப்பட்ட கீழாநிலை, அறந்தாங்கி ஆகிய பகுதிகளை மீட்க தொண்டைமான் மன்னரின் ஆணைக்கேற்ப, போரம்( பெருங்களூர்) பல்லவராயர் தலைமையில், ராமசாமி ராங்கியர், சுப்ரமணிய முதலியார் முதலியோர் உதவியுடன் பெரும்படை சென்று ஐதர் அலியின் படையை விரட்டியடித்து, அறந்தாங்கி, கீழாநிலை கோட்டைகளை மீட்டது. (General history of pudukkottai state 1916 page 270) 




ராஜா விஜய ரகுநாத தொண்டைமான் ஆட்சி காலத்தில், கிபி 1797 ல் விசங்கி நாட்டு கள்ளர்கள் செய்த கிளர்ச்சிகளை அடக்க 700 பேர் கொண்ட படையானது போரம் ( பெருங்களூர்) ராய பல்லவராயர் தலைமையில் அனுப்பப்பட்டது. (General history of pudukkottai state 1916 page 296)


பல்லவராயர்கள் மண உறவு- உயர் பதிவிகள்:-

கிபி 1728 ல் புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் பல்லவராயர்களுக்கு நிலங்களை கொடையாக அளித்துள்ளதை தென்னங்குடி கோயில் கல்வெட்டு கூறுகிறது.(General history of pudukkottai state 1916 page 175)  


மன்னர் விஜய ரகுநாதராய தொண்டைமான் (1769-1789) தனது மகளான அம்மாள் ஆயியை, மாப்பிள்ளை பல்லவராயருக்கு மணம் முடித்து கொடுத்தார்




கிபி 1807-1814 காலகட்டத்தில் மாப்பிள்ளை பல்லவராயர் என்பவர் புதுக்கோட்டை சமஸ்தான தலைமை மேலாளராக இருந்தார்.





மாப்பிள்ளை பல்லவராயர் இறந்தபின், அம்மாள் ஆயி, பல்லவராயரின் தம்பியான ரங்கன் பல்லவராயர் என்பவரை தனது வாரிசாக தத்தெடுத்துக்கொண்டார்.(General history of pudukkottai state 1916 page 382)

கிபி 1828 ல் புதுக்கோட்டை மன்னர் ரகுநாத தொண்டைமான் தனது மகளை ஜாகிர்தாரான ரங்கன் பல்லவராயர் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்தார்.(General history of pudukkottai state 1916 page 382)

ராமச்சந்திர தொண்டைமானின் முதல் மனைவி போரம் பல்லவராயர் வழி வந்தவர்.

மன்னர் ராமசந்திர தொண்டைமான் தனது மகளை அம்புநாட்டை சேர்ந்த குழந்தை பல்லவராயர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களது மகனான மார்தாண்ட பைரவ பல்லவராயரை தனது அரசியல் வாரிசாக தத்தெடுத்தார் தொண்டைமான்.(manual of pudukkottai state vol 2 part 1 pg 854)


கிபி 1898 முதல் 1928 வரையிலான காலகட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தான திவான் மற்றும் ரீஜன்ட் ஆகிய பதவிகளை, மார்த்தாண்ட பைரவ பல்லவராயரின் சகோதரர் விஜய ரகுநாத ராய பல்லவராயர் வகித்து சிறப்பித்தார். (manual of pudukkottai state vol 2 part 1 949-950)





1935 ல் எழுதப்பட்ட கடிதத்தில் போரம் பல்லவராயர் வழிவந்த ராமசாமி பல்லவராயர் தன்னை புதுக்கோட்டை மன்னருக்கு முதல் மாமன் என குறிப்பிடப்பட்டுள்ளார்.



பெருங்களூரில் படைபற்றை உருவாக்கி பல போர்களில் பங்கேற்ற போரம் பல்லவராயர்கள் 18 ஆம் நூற்றாண்டில், தொண்டைமான் மன்னரால் நார்த்தாமலை பகுதியில் உள்ள ஆவாரங்குடிப்பட்டி கிராமத்துக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் அளிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு அளிக்கப்பட்ட கிராமங்களில் பல்லவராயர் பெயர்களில் குளங்கள் இருந்ததை புதுக்கோட்டை சமஸ்தான ஒலைச்சுவடிகள் குறிப்பிடுகிறது. நீர்பழனி மாகாணத்தில் அவையாப்பட்டி எனும் ஊரில் சிவந்தி பல்லவராயன் குளம், அழகப்பன் பல்லவராயன் குளம், சொக்கநாத பல்லவராயர் குளம் முதலிய குளங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவையாப்பட்டி உட்பட 10 க்கும் மேற்ப்பட்ட கிராமங்கள் போரம் பல்லவராயர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. (1813ல் புதுக்கோட்டை கணக்காய்வு ஒலைச்சுவடிகள் ஒலை 153)




நார்த்தாமலை மாகாணத்தில் உள்ள பரம்பூரில் அரண்மனைத்தோப்பு, ரா ரா ஸ்ரீ பல்லவரார் தோப்பு முதலியவை ஒலைச்சுவடி குறிப்புகளில் உள்ளது .( 1813ல் புதுக்கோட்டை கணக்காய்வு ஒலைச்சுவடிகள் ஒலை 1072)




பிலாக்குடி விடுதி மாகாணத்தில் பல்லவராயன்பத்தை கிராமம் அம்புநாட்டு பல்லவராயர்கள் வாழும் ஒர் கிராமம்.(( 1813ல் புதுக்கோட்டை கணக்காய்வு ஒலைச்சுவடிகள் ஒலை 1426)



இன்றும் போரம் பல்லவராயர்களுக்கு பெருங்களூரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அவர்களின் பெயரில் உள்ளது.

 புதுக்கோட்டை மன்னராக மீண்டும் பல்லவராயர்:-



ராமசந்திர தொண்டைமானின் மகள் வயிற்று பேரனான மாரத்தாண்டை பைரவ பல்லவராயர்






மே 2, 1886 ல் மார்ததாண்ட பைரவ பல்லவராயர்(1886-1928) புதுக்கோட்டை மன்னராக பொறுப்பேற்றார். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் , பிரகதாம்பாள் சன்னதியின் முன்னிலையில் பட்டாபிஷேகம் நடந்தது.




புதுக்கோட்டையை ஆட்சி செய்த பல்லவராயர்களின் பங்காளிகளான இவர்கள் அம்புநாட்டின் தெற்கலூரை சேர்ந்தவர்கள். * இவரது காலத்தில் புதுக்கோட்டை நகரம் பொலிவு பெற்று விளங்கியது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய அருங்காட்சியமான புதுக்கோட்டை அருங்காட்சியகம் இவரது காலத்தில் உருவாக்கப்பட்டது.




கிபி 1899 ல் மன்னர் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டு திரும்பியதன் நினைவாக புதுக்கோட்டை டவுன் ஹால் கட்டடம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.




புகழ்பெற்ற புதுக்கோட்டை மன்னர் கல்லூரி இவரது காலத்தில் தொடங்கப்பட்டது



மன்னரது முயற்சியால் அக்காலத்தில் முதல் பெண்ணாக மன்னர் கல்லூரில் சேர்ந்து படித்த, முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக உயரந்ததும் இம்மன்னரின் காலமே. அக்காலத்தில் ஒரு பெண்ணை கல்லூரியில் அனுமதிக்க பலத்த எதிர்ப்பு எழுந்தபோதும் மாரத்தாண்ட பைரவ பல்லவராயர் தனது ஆதரவு கரத்தை நீட்டி முத்துலட்சுமி ரெட்டியை கல்லூரியில் சேர்த்து,  இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக அவர் உருவாக முக்கிய காரணமாக இருந்தார்.








புதுக்கோட்டை நகரத்திற்கு கம்பீர தோற்றத்தை அளிக்கு பொது அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டது இவரது காலத்தில்தான். புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் புதுக்கோட்டை அரண்மனை( இன்றைய ஆட்சியர் அலுவலகம்) இவரது காலத்தில் கட்டப்பட்டதே.









மன்னராட்சியில் மக்களாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் சபை அமைக்கப்பட்டு , அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கும் விதமாக தேர்தலும் நடத்தப்பட்டது.

கிபி 1902 ல் மகளிர் மற்றும் குழந்தைகளுக்காக ராணியார் மருத்துவமனை தொடங்கப்பட்டது.

முதன்முதலில் விவசாயத்தை ஊக்குவிக்க விவசாய பள்ளிகள் தொடங்கப்பட்டது.

ஆஸ்திரேலிய பயணத்தின் போது ஆஸ்திரேலிய பெண் ஒருவரை மணந்தார். மக்களின் எதிரப்பை அடுத்து, தனது காதலியே முக்கியம் என பாரீசில் குடியேறி வாழ்ந்து , கிபி 1928 ல் மரணித்தார். இவரது உடல் லண்டனில் வைதீக முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. (manual of pudukkottai state vol 2 part 1 873-890)

மரியாதைகள்:-

அம்புநாட்டில், தெற்கலூரில் வாழும் பல்லவராயர்கள் , முதன்மையான வம்சமாக உள்ளனர். பல்லவராயர்களுக்கு அடுத்த இடத்தில்தான் தொண்டைமான்கள்.(Hollow crown :Ethinohistory of small kingdom : nicholas dirks 1987)

அம்புநாட்டில் அரண்மனை மரியாதை ராஜாவான தொண்டைமான்களுக்கு அளிக்கப்பட்டாலும், இனமரியாதை பல்லவராயர்களுக்கே முதன்மையாக அளிக்கப்படுகிறது. அதாவது புதுக்கோட்டை மன்னருக்கு புதுக்கோட்டையிலுள்ள அனைத்து கோயில்களிலும் முதல் மரியாதை உண்டு. அதன்படியே அம்புகோயில் அம்மன் கோயிலிலும் அரண்மனை மரியாதை அளிக்கப்பட்டு, பிறகு தென்தெரு குப்பத்தில் வாழும் பல்லவராயர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. தொண்டைமான்களுக்கு முன் புதுக்கோட்டையை ஆட்சி செய்தவர்கள் எனும் அடிப்படையில் பல்லவராயர்களுக்கு இங்கு முதன்மை அளிக்கப்படுகிறது.Hollow crown :Ethinohistory of small kingdom : nicholas dirks 1987)





போரம் ( பெருங்களூரில்) 722 பேர் கொண்ட படைபற்றை நிர்வகித்த பல்லவராயர்கள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நார்த்தாமலை பகுதியில் ஆவாரங்குடிப்பட்டிக்கு இடம் மாற்றப்பட்டனர். இவர்களுக்கு இங்கு ஒர் அரண்மனை இருந்துள்ளது.




போரம் பல்லவராயர்களுக்கு விழா நாட்களில் புதுக்கோட்டை அரண்மனையில் இருந்து மரியாதைகள் வந்துள்ளது.

பல்லவராயர்களும் அரண்மனை சென்று மன்னரை சந்தித்து வாழத்துக்கள் கூறி வருவது வழக்கம்.

சர்தார் போரம் பல்லவராயரின் குமாரர் மலையப்ப பல்லவராயர் மற்றும் அண்ணாசாமி பல்லவராயரின் குமாரர் ராமசாமி பல்லவராயர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மரியாதைகளாக:-குதிரை, கத்தி, இரட்டை தீவட்டி, வாள், குடை, ஈட்டி, கேடயம் , பல்லக்கு, பயல், சவுரி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.( புதுக்கோட்டை கேசட் 1917 பக்கம் 87) (Structure of social and political relations in little kingdom: Nicholas dirks)

பெருங்களூர் உருமநாதர் கோயில் திருவிழா பெருங்களூர் நாட்டு கள்ளர் நாட்டார்களால் நடத்தப்படுகிறது.இவர்கள் ஐந்துகரை நாட்டார்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஐந்துகரை என்பது ஐந்து கள்ளர் குழுமங்களை கொண்டு பிரிக்கப்பட்டதாகும். சிந்துரார், கொம்பியார், கூழியர், சேப்பிளார், பம்பாளியார் ஆகிய ஐந்து பட்டங்களை கொண்ட கள்ளர்களின் தலைமையில் ஐந்து கரை பிரிக்கப்பட்டுள்ளது.பல்லவராயர் மரியாதை பெற்ற பின் நாட்டார்களுக்கு இக்கோயிலில் மரியாதை அளிக்கப்படுகிறது.சித்திரை திருவிழாவின் போது நாட்டார்களுக்கு கச்சை கட்டப்படுகிறது. உருமநாதர் கோயில் புதுப்பிக்க திருப்பணி தலைவராக துரை குமரப்பன் கூழியர் செயல்பட்டார். இவர் கூழியர் பட்டம் கொண்ட நாட்டார். (பெருங்களூர் உருமநாதர் கோயில் ஸ்தல வரலாறு சுவடிகள்)









போரம் பல்லவராயர்களின் குல தெய்வம் பெருங்களூரில் உள்ள உருமநாதர் கோயில். பெருங்களூரில் உள்ள புகழ்பெற்ற உருமநாதர் கோயிலில், சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் போரம் பல்லவராயர்களுக்கே முதல் மரியாதை. திருவிழாவின்போது முதல் திருநீர் , பொங்கலுக்கு முதல் பானை, கெடா வெட்டில் முதல் கிடா அனைத்தும் பல்லவராயர்களுக்கே. பெருங்களூரில் உள்ள சோழர்கால சிவன் கோயில், மலைய மருங்கனார் கோயில் என அனைத்து கோயில்களிலும் போரம் பல்லவராயர்களுக்கே முதல் மரியாதை. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உருமநாதர் கோயிலில் மூலவரை நோக்கியவாரு நேர்கோட்டில் யானை மற்றும் குதிரை சிலைகளை வைக்கும் உரிமை பல்லவராயர்களுக்கே உண்டு.( மன்னர் காலத்தில் வைக்கப்பட்ட பழைய சிலைகள் சிதிலமடைந்து விட்டது) யானை மற்றும் குதிரைகளை கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. கம்மங்காடு எனும் ஊரில் பல்லவராயர் காளி எனும் ஒரு காளியையும் பல்லவராயர்கள் வழிபட்டு வருகின்றனர்.( பெருங்களூர் உருமநாதர் கோயில் தலைமை பூசாரி :- மணி அய்யர், 23 தலைமுறைகளாக உருமநாதர் கோயிலில் பூசாரிகளாக இருப்பவர்கள்)




               





பெருங்களூரில் இருந்து நார்த்தாமலை அடுத்த ஆவாரங்குடிப்பட்டியை சுற்றியுள்ள 10 கிராமங்கள் இவர்களுக்கு தொண்டைமானால் அளிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் படை தளவாடங்களுடன் அங்கு குடியேறினர். நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயிலில், இன்றும் பெருங்களூர் பல்லவராயர்களுக்கே முதல் மரியாதை. நார்த்தாமலை அம்மன் கோயிலில் ஆறாம் மண்டகப்படி பல்லவராயர்களுக்கு உரியதாகும். ஆறாம் மண்டகப்படியின் போது மட்டுமே, காளை வாகனம் தேரில் வைத்து கோயிலை சுற்றி இழுத்து வரப்படுகிறது. ஆகாச ஊரணி எனும் இடத்தில் இருந்து சாமி கொண்டுவரப்பட்டு ஆறாம் மண்டகப்படி அன்றும் கோயிலை சுற்றி வலம் வரும் . (சர்தார் முத்துக்குமார் பல்லவராயர் : லெக்கணாப்பட்டி தலைவர், ஆவாரங்குடிப்பட்டி)

இது தவிர இலுப்பக்குடிப்பட்டியில் உள்ள குளவாய் கருப்பர் கோயிலிலும் பல்லவராயர்களே முதல் மரியாதை பெறுகின்றனர். (சர்தார் முத்துக்குமார் பல்லவராயர் : லெக்கணாப்பட்டி தலைவர், ஆவாரங்குடிப்பட்டி)

போரம் பல்லவராயர்கள் சர்தாராக இருந்தபோது, தொண்டைமான் மன்னர் காலத்தில் அவர்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டு இருந்தது. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக, குற்ற வழக்குகளில் ஒருவேளை பல்லவராயர்கள் குற்றம் சாட்டப்பட்டால் நீதி விசாரணையின் போதோ, நீதிமன்றங்களிலோ இவர்கள் உட்கார அனுமதிக்கப்படுவர். நிற்க வேண்டிய அவசியமில்லை. அக்காலங்களில் இது மிகப்பெரிய மரியாதையாகும்.(803/1916) pudukkottai darbar letter




கிபி 1839 ல் ரங்கன் பல்லவராயர் வசம் 11 கிராமங்கள் இருந்துள்ளது( Gazettee of pudukkottai district by Gandhi 1983)




பல்லவராயர்கள் வழிவந்த விஜய ரகுநாத பல்லவராயர் கறம்பக்குடி சேர்மனாக போட்டியின்றி தேர்நதெடுக்கப்பட்டு , தன்னலமின்றி பல சேவை செய்துள்ளார். அவரது பொது நலத்தொண்டால் பலனடைந்த குடும்பங்கள் தங்களது சொந்த செலவிலேயே பல்லவராயருக்கு சிலை வைத்து வருடா வருடம் அவரது பிறந்தநாளில் விழா எடுத்து வருகின்றனர்.





காமராஜருக்கு வலது புறம் கறம்பக்குடி முன்னாள் சேர்மன் விஜய ரகுநாத பல்லவராயர்,  இடப்புறம் புதுக்கோட்டை முன்னாள் MLA (இருமுறை) ,   இளைய மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் (மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி)






காஞ்சியில் இருந்து புதுக்கோட்டை பகுதிக்கு குடியேறிய பல்லவராயர்கள் தனி ராஜ்ஜியத்தை உருவாக்கி ஆண்டுள்ளனர். நாட்டுக்கும் மக்களுக்கும் ஆபத்து வரும்போதெல்லாம் போர்களத்தில் வீர தீரம் காட்டியுள்ளனர். தங்களது முடியாட்சி முடிவடைந்த பின்பும், பெரிய படைபற்றை உருவாக்கி தொடர்ந்து போர்களங்கள் கண்டுள்ளனர். பல்லவராயர்களின் வரலாறு இன்றி புதுக்கோட்டையின் வரலாறு எழுத இயலாது. போற்றுவோம் பல்லவராயர்களின் புகழை!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் அய்யம்பாளையம் இராமலிங்க நாடாவி என்பவர் மிகச் சிறந்த பத்திர எழுத்தாளர். இவரது பெயரில் பஸ் ஸ்டான்ட்டிற்கு பின்புறம் இராமலிங்க நகர் என்ற ஒரு தெருவே உள்ளது. அய்யம்பாளையம் ராமலிங்க நாடாவி அவர்களின் மகள் பெருமாள் அம்மாளின் கணவர் அமரர் கிருஷ்ண சாமி பல்லவராயர் என்பவர் ஃபார்வார்டு பிளாக் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு இந்த ஊரில் முதன் முதலாக நடந்த பஞ்சாயத்து போர்டு தேர்தலில் வெற்றி பெற்று அய்யம்பாளையம் பஞ்சாயத்து போர்டில் துணைத் தலைவராக ஆனார். பின்னர் சிலகாலம் தலைவராகவும் இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த பட்டிவீரன்பட்டி என்ற கிராமத்தில் காங்கிரஸ் கட்சி கொடியை அகற்றி அதே கம்பத்தில் ஃபார்வார்டு பிளாக் கட்சி கொடியை ஏற்றி பரபரப்பு ஏற்படுத்தியவர்.

கொப்பாட்டி ஈசுவரி அம்மன் கோவில் அய்யம்பாளையம் கள்ளர் தெருவில் உள்ளது. இதன் பரம்பரை பரம்பரையாக பல்லவராயர் பங்காளிகள் வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோவிலின் பரம்பரை ட்ரஸ்ட்டி அசோகன் பல்லவராயர் அவர்களது முயற்சியால் தற்போதுள்ள கோவில் கட்டி முடிக்கப்பட்டது.





புதுக்கோட்டை ஆவணம் 
பல்லவராயர் - கள்ளர்

தொகுப்பு :-  சியாம் சுந்தர் சம்பட்டியார்.
களஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்

நன்றி:
சோழபாண்டியன்
தேனி அஜித் தேவர்