சனி, 5 ஆகஸ்ட், 2023

ஜல்லிக்கட்டு வரலாறு / Jallikattu Varalaru In Tamil

ஏறு தழுவல் வரலாறு / மஞ்சுவிரட்டு வரலாறு / ஜல்லிக்கட்டு வரலாறு 


நாகரீக மனிதன் தன்னுடைய இனக்குழுவிற்கு தேவையான உணவு மற்றும் உணவு உற்பத்திக்காகவும், முதன் முதலாக முல்லை நிலத்தில்(காடுகளில்) உள்ள காளையை அடக்க முற்பட்டதே ஏறு தழுவுதலின் ஆரம்பம். ஆம் நாடோடியாக திரிந்த பண்டைய கால தமிழ் சமூகம் தன்னுடைய நிலையான வாழ்க்கைக்கும்,உணவு தேவைக்கும், உற்பத்திக்கும் மிகவும் அவசிய தேவையாக சுமார் 5000வருடமாக தேவைபட்டது காளைகளே.


முல்லையில்(காடு) உள்ள மாடுகளை பிடிக்க பண்டைய மக்கள், முதலில் அந்த கூட்டத்தில் உள்ள ஒரு காளையை அடக்கி அதனை உயிருடன் பிடித்து தங்களது இருப்பிடத்திற்கு கொண்டுவந்து அடைத்துவிடுவார்கள். பின்பு அந்த காளையை தேடி அதனை சார்ந்த பசுக்களும் அங்கு வரும் (பல பசுக்களுக்கு ஒரு காளை மட்டுமே இருக்கும்), ஆக மொத்தமாக அதனை அடைத்து ஒரு தொழுவமாக மாற்றிவிடுவார்கள்.

அதற்கடுத்த பரிணாமமாக அந்த காளைகளை வைத்து விவசாய உற்பத்தி அதிகரித்து நாகரீக வளர்ச்சி உச்சத்தை அடைகிறது. சங்க நூல்களில் காணப்பெறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே குறிப்பிடுகின்றது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன.



தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவரகள் சிந்துசமவெளி மக்கள் மேற்குதொடர்ச்சி மலை வழியே இடம்பெயர்ந்து இந்தியாவின் தென் பகுதிக்கு வருகையில் தங்கள் வாழ்வாதரத்திற்கு உறுதுணையாய் கால்நடைகளுடன் இடம் பெயந்ததாகவும் , அங்கு இருந்த பழக்கமே இன்று வரை தொடருவதாகவும் கருதுகிறார். இங்கே சொடுக்கவும் (click here)👉 சிந்து சமவெளி நாகரிகம்





காளையை அடக்கி மணம் முடித்த வரலாறும் உள்ளது. 

"கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆய மகள்."

கொல்லும் காளையின் கொம்புக்கு அஞ்சுபவனை, இப்பிறவியில் மட்டுமல்ல மறுபிறப்பிலும் மணக்கமாட்டாள் ஆயர் மகள்.

காதலும் வீரமும் தமிழா தம் இரு கண்களாக இணைந்து நிற்பன. இந்த இணைப்பை முல்லைக் கலியில் பெரிதும் காணலாம். “ஆயர்களின் வீரத்தையூம் அஞ்சாமையையூம் எடுத்துக்காட்டும் ஏறுதழுவல் என்னும் முல்லை நில வழக்கத்தை முல்லைக்கலி மட்டுமே விளக்கமாகக் கூறுகின்றது.

ஒருதிணைக்கண்ணே நிலத்துவாழும் மக்கட்பெயர் நிலப் பெயரும் தொழிற்பெயரும் என இருவகைப்படும். ஆயர் என்பது முல்லை நிலத்தில் வாழ்வாரைக் குறித்து வழங்கும் நிலப்பெயராகும். வேட்டுவரென்பது வேட்டைத் தொழில் செய்வாரைக் குறித்து வழங்குந் தொழிற் பெயராகும். ஆயர் என்ற சொல் இடையன் (கோனார்) சாதியினரை மட்டும் குறிக்கும் சொல்ல அல்ல.

காளைக்கொம்புக்கு அஞ்சுபவனை ஆயர்குலப் பெண் தழுவமாட்டாள். காளையை அடக்கிய ஆயருக்கு பெண்ணைக் கொடுப்பர். இந்த பழக்கம் கள்ளர்களிடம் மட்டுமே கடந்த நூற்றாண்டு வரை உள்ளதை மதுரை மேனுவல் தெளிவாக குறிப்பிடுகிறது. 

Madura district Gazetteer

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

வெட்சி மறவரானாலும், கரந்தை மறவரானாலும் ஆநிரைகளைக் காக்கும் பொருட்டு, போர்ப்பயிற்சி கொடுக்கப்பெற்ற ஏறுகளை அம்மன்றத்தில் உலவவிடுவர். அத்தகைய மன்றத்தைக் "கொல்ஏறு திரிதரு மன்றம்' (புறம்.309:4) எனப் புலவர் குறிப்பிடுவர். இவ் ஏறுகள், கொடும்புலிகளோடும் அஞ்சாது, சண்டையிடும் ஆற்றல் வாய்ந்தன.

ஆநிரைகளைக் கவர்ந்த வெட்சி மறவரானாலும், ஆநிரைகளை மீட்க விரும்பிய கரந்தை மறவரானாலும், இத்தகைய பயிற்சி பெற்ற ஏறுகளை அடக்கும் மறவலிமையை இயல்பிலேயே பெற்றிருந்தனர். 259ஆவது பாடலில் வெட்சி மறவர், ஏறுகளுடன் கூடிய ஆநிரைகளைக் கவர்ந்து சென்றமை குறிப்பிடப்பெற்றுள்ளது. இச்செயலையே ஆகோள் எனத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் தெரிவிக்கின்றன.

பிற்காலத்தில் மாடுகள் என்பது மிகப்பெரிய செல்வம் படைக்கும் காட்சியாக மாறுகிறது. திருவள்ளுவரே மாடு என்றால் செல்வம் என்றே குறித்துள்ளார். இந்த மையப்புள்ளியே உலகின் முதல் போர் தொழிலுக்கு வித்திட்டது. ஆம் பண்டைய சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் தங்களுடைய முதல் போர் முறையாக எதிரி நாட்டின் மாடுகளை களவு செய்து அதனை தங்களுடைய நாட்டிற்குரியதாக மாற்றி எதிர் நாட்டினை வீழ்த்துவார்கள்.

இந்த களவு தான் போர்குடிகளின் தோற்றமே. இந்த போர் முறை வெட்சி என்று அழைக்கப்பட்டது, ஆநிரை கவர்தல் போர் முறையே மிகவும் வலிமை மிக்கதாக கருதப்பட்டது. இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் இதனை அருமையாக விளக்குகிறது. தொல்காப்பியப் பார்வையில் புறத்திணைகளில் ஒன்றான வெட்சித்திணையானது அகத்திணையில் ஒன்றான குறிஞ்சித் திணையின் புறம் எனக் குறிப்பிடப்படுகிறது.

பின்பு இழந்த மாடுகளை மீட்க, எதிர் நாட்டின் ஆநிரை கவர்தல் வீரர்கள் வருவார்கள். இப்படியாக முல்லையில் ஆரம்பித்த ஏறு தழுவுதல், போர் முனை வரை நீண்டது. கிபி17ஆம் நூற்றாண்டு வரை இந்த ஆநிரை கவர்தல் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.

உலகிலே பழமையான கிரேக்க இதிகாசங்கள் இலியட், ஒடிசியில் கடவுள்களும் மிகப்பெரும் மன்னர்களும் ஆகோள் பூசலில் ஈடுபட்டத்தை மிக பெருமையாக பேசியிருப்பார் ஹோமர். கிரேக்கர்களின் பெரிய கடவுள் ஸுசின் மகன் ஹெர்மிஸ்( Messenger of Gods), தன் தகப்பனிடம் தோற்றுப்போன சூரிய கடவுள்களில் ஒருவரான ஹைப்பர்ரியானிடம் மிக லாவகமாக மாடு திருடினார் என்றிருக்கிறது. டிராய் போரில் ஈடுபட்ட அனைத்து கிரேக்க மன்னர்களும் டிராய் குடிகளிடம் ஆகோள் பூசலில் ஈடுபட்டார்கள். ஆடு மாடுகள் அபகரிப்பது திருடுவது மீட்பது என்பது ஆதி கால கடவுள்களுக்கும் கடவுள்களுக்கும் ஆதி போர்குடி சமூகங்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று. இந்நாட்களில் அது இகழ்வாக பார்க்க படுகிறது கற்கால நெறிமுறைகள் தெரியாத குடிகளால்.
கள்ளர்களும் கொண்டையங்கோட்டை மறவர்களும் ஆகோள் பூசலில் முழு மெட்ராஸ் ப்ரெசிடென்சியில், அதாவது ஆந்திர ஒடிசா எல்லை வரை அவர்களுக்கு நிகராக யாரும் இல்லை என்கிறார்கள் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர்கள். அது அவர்களுக்கு நீங்காத சந்தோஷத்தை கொடுத்தது என்கிறார்கள். அது புறநானுற்றில் சொல்லப்பட்ட போர்குடி பழக்கம் என்பதால் பிற்காலத்திலும் ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. முழு உலகிலும்
பழங்கால கடவுள்களுக்கும் , அரசர்களும் மாவீரர்களும் மட்டுமே உரித்தான ஒரு போர் நெறிமுறை ஆகோள் பூசல்.






போர் இல்லாத சூழலில், மாறா மறக்குணம் உடைய இளைஞர்களின் மனங்களை, உயிருக்கு அஞ்சாத இவ்வீர விளையாட்டு கவர்ந்திருக்கல வேண்டும்.


மாமனார் ராஜராஜன் சோழன் காலத்தில் தஞ்சையில் நடந்த ஏறுதழுவலில்  வீரமரணம் அடைந்த வீரனுக்கு மன்னர் ராஜராஜன் சோழன் வேண்டிய உதவிகளை செய்துள்ளார் என்பதை கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

இப்படிபட்ட ஏறுதழுவுதல் இன்று மஞ்சுவிரட்டு, ஜல்லிகட்டு, மாடு விளையாட்டு என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த தமிழரின் வீரமிக்க விளையாட்டு ஆதி தமிழ் பழங்குடியான கள்ளர் சமூக மக்கள் எந்த மாவட்டத்தில் அடர்த்தியாக வாழ்கிறார்களோ, அங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஜல்லி என்பது " சல்லி" என்பதைக் குறிக்கும். சல்லி என்பதற்கு காசு என்று ஒரு அர்த்தம் உண்டு. கட்டு என்பது சிறிய மூட்டையை குறிக்கும். இதன் அர்த்தம் மஞ்சள்பையில் கட்டப்பட்ட நாணயங்களைக் குறிக்கும். இது காளையின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும், மாட்டை அணைத்து பிடித்து இந்த பணப்பையை எடுக்க வேண்டும். சல்லிக்கட்டு என்பதுதான் நாளடைவில் ஜல்லிக்கட்டு என்று மருவியது. 

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் நாணயம் அம்மன் சல்லி ஆகும். 

வேலி ஜல்லிக்கட்டு:

வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது. பொதுவாக மூன்று கிலோமீட்டர் வரை மாடுகள் வயல் வரப்புகளை தாண்டி ஓடும். இதில் மாடுபிடி வீரர் கொம்பில் உள்ள வெள்ளை துண்டு கட்டப்பட்டதை அவிழ்க்கவேண்டும்,  மாட்டின் கழுத்து மணியை அவிழ்க்கவேண்டும். மாட்டின் கழுத்து மணியை கொண்டுவரும் வீரருக்கு பரிசு தரப்படும்.

வாடி மஞ்சுவிரட்டு (அல்லது) ஜல்லிக்கட்டு

 "வாடிவாசல்" எனும் வாயில் வழியாக காளை திறந்துவிடப்படும். திறந்தவுடன் சீறிக்கொண்டு ஓடும் காளையை வீரர் ஒருவர் மட்டும் தாவி அதன் திமிலை பிடித்து கோர்த்து குறிப்பிட்ட தூரம் செல்லவேண்டும் அப்படி சென்றால் அந்த வீரர் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் செல்வார். காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை என்றால் காளை வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்படும். காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை ஆகும்.

வடம் ஜல்லிக்கட்டு 

வடம் என்றால் தமிழில் "கயிறு" என்று பொருள்படும். காளையை 15 மீட்டர் கயிற்றில் கட்டி அந்த விட்டத்துக்குள்ளே நடைபெறுவதுதான் வடம் மஞ்சுவிரட்டு. 7 அல்லது 8 பேர் கொண்ட அணி அந்த காளையை 30 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

கள்ளர் நாடுகள் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் சேலம் பகுதில் மட்டுமே பல ஆயிரம் ஆண்டுகளாக ஏறுதழுவுதல் நடைபெறுகிறது .


பழமையான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் வெள்ளலூர் நாட்டு உறங்கான்பட்டி மற்றும்  கரடிக்கல் ஆகும்  .


அனைத்து கள்ளர் நடுகளிலும் அம்பலங்கள், தேவர்கள், பட்டக்காரர்கள் தலைமையில் உயிர்ப்புடன் இன்றும் நடைபெற்று வருகிறது.

ஏறு தழுவுதல் அதிகமாக நடைபெறும் மாவட்டங்கள்:

புதுக்கோட்டை
மதுரை
தஞ்சை
சிவகங்கை
தேனி
திண்டுக்கல்
திருச்சி

மேற்கோள் காட்டிய மாவட்டங்களில் மட்டுமே ஏறு தழுவுதல் நடைபெற்றதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

கள்ளர் பெருங்குடிகள் அடர்த்தியாக வாழும் அனைத்து ஊர்களிலும் ஏறுதழுவுதல் நடைபெறுவது, அவர்களின் பண்டைய தமிழ் கலாச்சாரத்தின் சான்றாக விளங்குகிறது.

119 கள்ளர் நாட்டிலும் வாடி வாசல் உள்ளது

தேனி ஜல்லிக்கட்டு

வெள்ளளூர் நாட்டுக்கள்ளர் அம்பலகாரர் உறவின் முறைக்கு பாத்தியமான ஸ்ரீ வல்லடிகாரசாமி திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் புகழ்பெற்ற தேனி அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு மற்றும் , தேனி  பல்லவராயன்பட்டியில் கள்ளர்களால் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுகள்  மிகவும் புகழ் வாய்ந்த ஜல்லிக்கட்டுகள். 



தஞ்சாவூர் ஜல்லிக்கட்டு

தஞ்சாவூர் மாதாக்கோட்டை மற்றும் நந்தவனப்பட்டி ஜல்லிக்கட்டு,ரேக்ளா ரேஸ்கள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகின்றன.





ஈசநாட்டு கள்ளர்கள்

ஈசநாட்டு கள்ளர்கள் நாடான தஞ்சை, திருச்சி மண்டலங்களில் உள்ள கள்ளர் நாடுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள், பெரிய சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்றும். கூத்தாப்பாரில் பிப்ரவரி மாதத்தில் வரும் சிவன் இராத்திரி அன்றும். அன்பில், துவாக்குடி, நவல்பட்டு, பூதலூர் கோவில் பத்தில் மார்ச்சு,  மே மாதத்தில் நடக்கும்.

பெரிய சூரியூர்




திரு. பரத் இராமகிருஷ்ணன் கூழாக்கியார் - M.SC. (AG.) ENTOMOLOGY


சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த, கல்வராயன்மலை, கருமந்துறையில், ஏறுதழுவுதல் விழாவில், காளையை அடக்க முயன்ற சங்கன் இறந்தது குறித்து வைக்கப்பட்ட நடுகல் கிடைத்துள்ளது. இந்த பகுதி முன்பு கள்ளர் நாடுகள் இருந்த பகுதியாகவும். நாயக்க்கர், துலுக்கர் மற்றும் மராட்டிய படையெடுப்பால் கள்ளர் நாடுகள் இப்பொழுது துறையூர் வரை சுருங்கிவிட்டது.  இங்கே சொடுக்கவும் (click here)👉சேலம் கள்ள(ர்)குறிச்சி - கள்ளர் நாடு



கள்ளர் நாடுகளில் மட்டுமே உள்ளன ஜல்லிக்கட்டிற்கான உட்கட்டமைப்புகள். அக்காலத்தில் சிறந்த ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களாக திருமங்கலம் மற்றும் மேலூர் பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக கள்ளர் வாழும் கிராமங்களில், அதிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளர்களால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாக குறிக்கப்பட்டுள்ளது.



மஞ்சுவிரட்டு அல்லது ஜல்லிக்கட்டு அல்லது ஏர்தழுவுதல் கள்ளர் கிராமங்களில் மட்டுமே அதிக அளவில் நடைபெற்றுள்ளது. 



130 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று குறிப்புகளில் (Manual of pudukkottai state vol 1 P 73) இந்த மாடுபிடி விளையாட்டு ஜல்லிக்கட்டு (இ) மஞ்சுவிரட்டு என அழைக்கபடுகிறது. ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முன் தப்பு அடிப்பவர்களால் அருகாமையிலுள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் தினமன்று காலை 8 மணி அளவில் மாட்டின் கொம்புகளிலும், கழுத்திலும் துணி கட்டப்பட்டு அதில் காசு முடியப்பட்டிருக்கும். ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளில், தப்பு அடிகப்பபட்டு, மக்கள் ஆரவாரத்துக்கு இடையே, காளைகள் விடப்படும். காளைகளை அடக்குபவர்கள் கொம்பிலுள்ள பண முடிப்பை எடுக்க முயற்சிப்பர், காளைகளை அடக்கியவர்கள் நாயகர்களாக கொண்டாடப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு பொங்கலுக்கு அடுத்த நாளில் இருந்து தொடங்கி 2 மாதங்கள் நடைபெறுகிறது. புதுக்கோட்டை யின் கள்ளர் வாழும் கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. 

(Manual of pudukkottai state vol 1 P 73)


மாமன்னர் ஸ்ரீ தொண்டைமான் புதுக்கோட்டை  கள்ளர்கள் 

தொண்டைமான் புதுக்கோட்டையில் தான் தமிழகத்தில் அதிக வாடிவாசல் உள்ளன. 194 வாடிவாசல்கள் உள்ளன .


ஏறு தழுவதலில் மிகவும் புகழ்பெற்ற காளையான புளியங்குளம் காளையை புதுக்கோட்டை தொண்டைமான் கள்ளர்கள் பாரம்பரியமாக அனைவரின் வீட்டில் கிபி1920வரை வளர்த்துள்ளனர். 
  

அறந்தாங்கி தொண்டைமான் வழித்தோன்றல் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் அவர்கள் இலங்கையில் இன்றும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து அதனை கப்பல் மூலம் தமிழக ஜல்லிகட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.


Trichinopoly manual (1890) ல் ஜல்லிக்கட்டு பற்றிய குறிப்புகள்

மதுரை மாவட்டம் புளிகுளத்தில் இருந்து கொண்டுவரப்படும் காளைகளை கொண்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை கள்ளர்களால் ஜல்லிக்கட்டு விளையாடப்பட்டது. கள்ளர்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவர்கள். இதில் இரண்டு வகை உண்டு. முதலாவது பொங்கல் அன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டில், அனைத்து சாதியினரும் பங்கு பெறுவர். இரண்டாவது வகை ஜல்லிக்கட்டுகள் கள்ளர்களால் தொடர்ந்து பயிற்சியளிக்கப்பட்ட காளைகளை கொண்டு அனைத்து கள்ளநாட்டு கிராமங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுழ இது மே வரை நடைபெறும். ராமநாதபுரம் மற்றும் மதுரை மறவர்கள் , கள்ளர்களை போலவே ஜல்லிக்கட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். 




விசங்கிநாட்டு கள்ளர்கள் ( விராலிமலை) ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விசங்கிநாட்டு கள்ளர் விஜயபாஸ்கர் மழவராயர்  அவர்களால் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்தியாவிலேயே மிகப்பெரிய ஜல்லிகட்டு போட்டியாகும்  விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1353 காளைகள், 424 காளையர் என பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. 


அமைச்சர் விஜயபாஸ்கர் மழவராயர்




ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே இங்கு அதிகமான காளைகள் கலந்துகொள்ள உள்ளதால் இந்த ஜல்லிக்கட்டை உலக சாதனையில் இடம்பெறச் செய்வதற்காக கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டுக் குழு வருகை தந்திருந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய இந்த போட்டி மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.  ஒரே நாளில்  1353 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை உலக சாதனையாக கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது. கின்னல் சாதனை ஆங்கீகாரக்குழு நிர்வாகிகள் மெலடியோ, மார்க் ஆகியோர் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை போட்டியின் இறுதியில் வழங்கினர்.



கிளை வழி கள்ளர்கள் 
கிளை வழி கள்ளர்கள் நாடான ஏழுகிளை கள்ளர் சீமையான தேவகோட்டை, கண்டதேவியில் சிறுமருதூர் இராஜ்குமார் அம்பலகாரர் தலைமையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு. 





வடமாடு மஞ்சுவிரட்டு என்பது சாதாரண ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து வேறுபட்டது. செம்புலி ஆட்டிற்கு கிடைபோடுவதுபோல சுற்றி வட்டவடிவில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு காளை அதிகபட்சம் 25 நிமிடங்கள் களத்தில் விளையாடும். அதுபோல வீரர்களும் கபடி விளையாட்டை போல 7-10 நபர்கள் மட்டுமே ஒரு போட்டிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மிகவும் ஆக்ரோஷமாக நடைபெறும் இப்போட்டியில் பரிசுகளும் அதிகம். இப்போட்டியை நடத்தி சிறப்பித்துள்ளார்கள் கள்ளர்குல முத்துராமலிங்கம் அம்பலகாரர் வம்சத்தார்கள்.






அம்பல கள்ளர் & பிறமலைக் கள்ளர்கள்

அம்பலக்கள்ளர் மற்றும் பிறமலைக்கள்ளர்கள் நாடான மதுரை மண்டலங்களில் உள்ள கள்ளர் நாடுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள்

பாரம்பரியமாக ஜல்லிக்கட்டுகள் நடைபெறுவது மதுரை கள்ளர் நாடுகளிலே. மேலூர், திருமங்கலம் போன்ற கள்ளர் நாட்டு பகுதிகளில் சிறந்த ஜல்லிக்கட்டுகள் நடந்தன். ஜல்லிக்கட்டுகள் கள்ளர்களால் மிக அதிகமான ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது.

( Madurai manual nelson கிபி 1890)

புத்தகம் :மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு(ஆண்டு :2000), ஆசிரியர் : சிவக்கொழுந்து




திண்டுக்கல்லில் நடைபெறும் ஜல்லிக்கட்டின்போது கள்ளர்களே பூசாரியாக செயல்பட்டு அங்குள்ள தெய்வத்திடம் குறிகேட்கும் உரிமை உடையவர்கள்.இச்சமயத்தில் அவர்கள் உரோமானிய வேளாண்மை தெய்வத்தின் பூசாரிகளை போல பிராமணர்களை விட உயர்ந்தவர்களாக தங்களை கருதி ஆணவம் கொள்வர்.


திண்டுக்கல் சல்லிக்கட்டு விளையாட்டில் தீரமிக்க சாதியாளர்கள் கள்ளர்களே. அதிக ஈடுபாட்டை இவ்விளையாட்டிற்கு காட்டுகின்றனர். பல ஊர்களில் தனியே இதற்காகவென்றே சாதிக்காளைகளை வளர்க்கின்றனர்.

கள்ளர் நாடு அறக்கட்டளை தலைவர் திரு. ராஜேஷ் வல்லாளதேவர்  - காளையுடன்

 இந்திய ராணுவவீரர் திரு. கு. சுந்தரபாண்டி தேவர் - காளையுடன் பயிற்சி 

கள்ளர்கள் வாழும் பகுதியான திருமங்கலத்திலேயே மிகச்சிறந்த  ஜல்லிக்கட்டை காணலாம். இதற்கு அடுத்தபடியாக மேலூரில் நடைபெறுவதை கூறலாம். இதன்மூலம் அலங்காநல்லூர்,பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் எல்லாம் தற்காலத்தில் சிறப்படைந்தவை என கொள்ளலாம்.
மதுரை கலெக்டர் இந்த விளையாட்டை பார்த்து அதனை தடை செய்ய முற்படுகிறார்.ஆனால் அந்த விளையாட்டில் காளைகளை ஒரு இடத்தில் கூட துன்புறத்தவில்லையாம், மேலும் காளையை அடக்க முற்பட்ட கள்ளர்கள் மட்டுமே அடிபடுவதும்,வீர மரணம் அடைவதை பார்த்து, காளைகள் மீது அவர்கள் வைத்திருக்கும் அந்த அன்பிற்கும்,அவர்களுடைய வீரத்திற்கும் அந்த கலெக்டர் தடையை நீக்கியுள்ளார்.





கிபி1911ல் மதுரை ஏறுதழுதல் நிகழ்வில் ஒரு வீரருக்கு பின்புறம் பலமாக காளை தாக்கியது, ஆனால் அதை பொருட்படுத்தாமல்,அவரோ தனது நண்பர்களுடன் சந்தோசமாக வீடு திரும்பியுள்ளார்.


பிரான்சிஸ் ஹக்ஸ்லி என்ற இங்கிலாந்து மானிடவியலாளர் உலகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு 321 பழங்குடியினர்களின் வாழ்வியல்களை பற்றி தனது குறிப்பில் எழுதியுள்ளார் அதை கிபி1964ல் மேரி சிம்ஸ் மற்றும் மேரி கேமிட்ஜ் புத்தகமாக தொகுத்துள்ளனர். அதில் அந்த மானிடவியலாளர் கள்ளர்,மறவரை பழங்குடியினராக அங்கீகரிக்க காரணம் அவர்களுடைய வீரம் தான், ஆம் அவர் கூற்றுப்படி காளையை அடக்குபவர்கள் மற்றும் காளையை வழிபடுகிறவர்கள் என்று குறிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் கள்ளர்,மறவருடைய இந்த பண்பு மட்டும் கலாச்சாரம் சுமார் 3000 வருட பழமையான நாகரீகமான கிரேக்க மைசினாயியன் கலாச்சாரத்தில் நேரடி தொடர்பாக உள்ளது என்றும் அங்கும் சற்றும் மாறுபடாமல் காளை அடக்குவதும், வழிபடுவதும் உள்ளது எனக் குறிக்கிறார்.


ஆனால் கிரேக்கத்தில் அந்த கலாச்சாரம் சுமார் 1500 வருடங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனால் நாம் இன்றும் அந்த கலாச்சாரத்தை கைவிடமால் அதை பேணிப் பாதுகாத்து வருகிறோம். சிந்து சமவெளி நாகரிகத்திலும் ஒரு வீரன் காளையை அடக்குவது போல் ஓவியம் உள்ளது.

ள்ளர் நாட்டு பெரிய சூரியூர் 

செங்குறிச்சி சத்யா மழவராயர் காளை


புதுக்கோட்டை, பெருங்களூர் நாட்டை சேர்ந்த வாராப்பூர் ஊராச்சி மாரியப்பன் உத்தமுண்டார், அனுராதா அவர்களின் காளை.


இன்றும் அனைத்து கள்ளர் நாடுகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு, ரேக்லா ரேஸ் என பாதுகாத்து வருகின்றனர் நம் மக்கள்.


கவர்னர் பிரமலை நாட்டில் சுற்றுப்பயணம் செயதார். கவர்னர் சிந்துபட்டிக்கு வருகிறபோது அந்தப்பகுதியில் வழக்கமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு செய்து, அதில் கள்ளர் சமூகத்தினர் மாடுபிடிப்பதை கவர்னர் பார்க்கும்படி ஏற்பாடு செய்திருந்தனர். சீறிப்பாய்கின்ற முரட்டுக்காளைகளை முரட்டுத்தனமாகப் பாய்ந்து காளைகளை அடக்கும் கள்ளர் சமூகத்தினரை கவர்னர் பார்த்தால், இப்படி முரட்டுத்தனமாக உள்ள ஒரு சமூகத்தினரை அடக்க சி..டி.ஆக்ட் போன்ற கடுமையான சட்டம் தேவைதான் என்று கவர்னர் முடிவெடுத்துவிடுவார். அதன்மூலம் சி.டி.ஆக்ட்டை ரத்து செய்யாமல் தடுத்துவிடலாம் என்று சூதுமதிகொண்டவர்கள் இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்த சதியைப்புரிந்துகொண்ட தேவர் திருமகன், உள்ளங்கை அளவுள்ள(1 x 16 சைஸ்) ஒரு துண்டுப் பிரசுரத்தில்,”சிந்துபட்டிக்கு கவர்னர் வரும்போது நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு யாரும் மாடுகொண்டு போகவோ , மாடுபிடிக்கப்போகவோ கூடாது. அப்படியாரேனும்போனால், அவன்தான் இனதுரோகி” என்று குறிப்பிட்டார். அவ்வளவுதான். கவர்னர் வருகிற அன்று செக்கானூரனியிலிருந்து உசிலம்பட்டி வரை யாருமே சாலையில் நடமாடவில்லை. கவர்னர் சிந்துபட்டி ஊருக்குள் நுழைந்ததும் ஊரே மயான அமைதியாக காட்சி தந்தது. கவர்னர் திகைத்துப்போய், “என்னமோ விழா என்றீர்கள். ஊரில் ஒரு காக்கை குருவியைக்கூட காணவில்லை. ஊரில் ஆள் அரவம் அற்று காட்சி அளிக்கிறதே ஏன்?” என்று கேட்டார். அப்போது மதுரை கலெக்டர் தேவர் வெளியிட்ட கையகல நோட்டீஸைக்காட்டி “தேவர் ஜல்லிக்கட்டைப் பகிஷ்கரிக்கும்படி விடுத்த அறிக்கையால்தான் மக்கள் யாரும் ஜல்லிக்கட்டுக்கு வரவில்லை என்றார் 


5வருடத்திற்கு முன்பு வரை காளைகளின் கொம்பில் துண்டை கட்டி களம் இறக்குவர், காளையை அடக்குபவர்கள் அந்த காளையை மடக்கி கீழே சாய்த்து அதன் கொம்பில் சுற்றியுள்ள துண்டை உருகினால் மட்டுமே மாட்டை அடக்குவதாக ஏற்பர். ஆனால் இன்று திமிலை பிடித்து 3சுத்து சுத்துனாலே அடக்கிவுட்டார்கள் என்கிறார்கள்.




காரி,செவலை,மயிலை என ரகங்கள் இறக்கப்படும். இதில் உள்ள காரி மாடுகளை தான் நமது கள்ளர் குடியை சேர்ந்த தமிழ் நாடு ஜல்லிகட்டு தலைவர் ஐயா இராஜசேகர் அம்பலம் அவர்கள் பாரம்பரியமாக வளர்த்து வருகிறார். இங்கே சொடுக்கவும் (click here)👉ஜல்லிக்கட்டு நாயகன் பி. ராஜசேகர் அம்பலம்


பர்மாவில் கள்ளர்கள் நடத்தும் ஏறு தழுவல் 

இங்கே சொடுக்கவும் (click here)👉பெ.ந. குப்புசாமி கடாரத்தலைவர் கட்டிய பர்மா பீலிக்கான் அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் திருக்கோயில்






கள்ளர் பெருமக்கள் இருக்கும் வரை இந்த ஏறுதழுவுதல் வீரம் என்றும் மறையாது.

நன்றி

Saints,goddess and kingdom
A manual of Pudukottai state
Madura A Tourist Illustrated Guide
The Madura country A manual
Madura district Gazetteer
Gazetteer of Pudukottai state


திரு. சோழபாண்டியன் -ஏழுகோட்டை நாடு
திரு. சியம் சுந்தர் சம்பட்டியார்