புதன், 29 ஜனவரி, 2020

இரட்டைமலை ஒண்டி கருப்பண்ணசாமி / கருப்பசாமி



திருச்சி கோரையாற்றின் கரையில் உள்ள இரட்டை மலையில் ஒண்டி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. மலையின் மேல் பகுதியை குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைக்குள் செல்ல ஒன்றரை அடி நீளம், அகலத்தில் சிறிய நுழைவு வாயில் உள்ளது. இந்த வழியாக படுத்து ஊர்ந்தபடி 6 அடி தூரம் சென்றால், மற்றொரு அறை இருக்கும். கோயில் திருவிழாவின்போது பயன்படுத்தப்படும் ஐம்பொன், இட்டாலியம் மற்றும் உலோகங்களால் ஆன சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் இந்த அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஆடி திருவிழாவின்போது, சாமியிடம் உத்தரவு கேட்டு இவை வெளியே எடுக்கப்படும். உத்தரவு கிடைக்காமல் 3, 4 ஆண்டுகள்கூட இவற்றை எடுக்காமல் இருந்துள்ளனர். இந்த பொருட்களை நாகப்பாம்பு ஒன்று காவல் காப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி நாளை மறுநாள் கிடா வெட்டு, பொங்கல் நிகழ்ச்சி நடக்கிறது. குகைக்குள் இருந்த சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை வெளியே எடுப்பதற்காக நேற்று முன்தினம் குகைக்கு வெளியே பால், முட்டை வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். மலைக்காளி கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின், மருளாளிகள் தண்டபாணி, ஒண்டிமுத்து, பூசாரிகள் நாகராஜன், முத்து ஆகியோர் குகை வாசலில் சூடம் ஏற்றி வழிபட்டனர். பின்னர், குகை கதவை திறந்து படுத்தபடி ஒருவர் பின் ஒருவராக 4 பேர் உள்ளே சென்றனர். உள்ளே கிடந்த முட்டை ஓடுகள், பால் பாக்கெட்களை எடுத்து போட்டனர். குகைக்குள் விளக்கேற்றி வழிட்டனர். பின்னர் அங்கிருந்த சாமி சிலைகள் மற்றும் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே கொண்டு வந்தனர். குகைக்குள் இருந்து நாகப்பாம்பு வெளியே வரலாம் என்று பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால் வராததால் ஏமாற்றமடைந்தனர்.

மருளாளி தண்டபாணி கூறுகையில், ‘‘நவல்பட்டு கிராமத்தை சேர்ந்த காரைகாச்சி (கள்ளரில் காரையாட்சி / காரைக்காச்சி பட்டம் உடையவர்கள் ) கரையினர் மட்டுமே ஆடி துவக்கத்தில் இருந்து விரதமிருந்து, குகைக்குள் சென்று, சிலைகள் மற்றும் பொருட்களை எடுத்து வர முடியும். குகைக்குள் சென்றதும், சூடம் ஏற்றி வழிபடுவோம். அந்த வெளிச்சத்தில் நாகப்பாம்பு உள்ளதா என்பதை பார்த்துக் கொள்வோம்’’ என்றார்.

மாந்தாதா மரபில் வந்த மன்னன் கார்மன், காரைக்கோட்டை எனும் நகரத்தை இராசதானியாகக் கொண்டவன். காரைவாயில் (காராயில்), காரைமேடு(கழிப்பாழை), காரைக்காடு, காரைக்கால், காரைப்பாக்கம், காரைபட்டு, காரைப்பட்டி, காரைக்குடி, காரைப்பள்ளம், காரப்பன்காடு, காரைமங்கலம், என்ற ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் காரையாட்சி / காரைக்காச்சி என்ற  பட்டங்களை பெற்றனர் என்று தனது ஆய்வில் கிருபாகரன் ராசகண்டியர், இன்டர்நேஷனல் கள்ளர் பேரவை தலைவர் குறிப்பிடுகிறார்.

வேட்டை கருப்பர்

இரட்டமலையில் உள்ளது இந்நடுகல்சிலை. இந்நடுகல் வேட்டைக்கருப்பு என அழைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறார். இந்நடுகல் இரண்டு அடுக்காக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்தொகுதியில் வெட்டரிவாள், மழு, அம்பு, கொடுவாள், கத்தி, குத்தீட்டி என காட்டப்பட்டுள்ளது. கீழ்தொகுதியில் வீரன் ஒருவன் குதிரையை இழுத்து வரும் நிலையில் காட்டப்பட்டுள்ளான். அவன் அருகே பெரிதாக வெட்டரிவாள் காட்டப்பட்டுள்ளது. "பனையூர் வாழ்க்கை" எனும் இடத்தில் (இவ்வூர் பராந்தகன் கால திருச்செந்துறை கல்வெட்டிலும் வருகிறது) கன்றாப்பில் எனும் ஊரைச்சேர்ந்த, "வேட்டன் மதிரை" என்பவர் காவு(உயிர்ப்பலி) கொடுக்கிறார். அதனை காப்பாற்றுவோரின் பாதம் என் தலைமேல் என்கிறார்.என்ன காரணத்தினால் இதைசெய்தார் என குறிப்பில்லை. இதனை "காலமுக்கியங்குழு" என்ற குழுவின் ஆணைக்கிணங்க செயல்படுத்துகின்றனர். அநேகமாய் அவர்கள் பலியிட்டது குதிரையாய் இருக்கலாம். இவ்வாறு குதிரையை பலியிடும் முறை எங்கேயும் இல்லை.  எனவே அரிதாய் பலியிட்டதனால் இக்குதிரைக்கு "நினைவுக்கல்" எடுப்பித்திருக்கலாம்.






அன்று குதிரையை காவு கொடுத்த 'வேட்டன் மதிரை' என்று வேட்டைக்கருப்பாக வணங்கப்படுகிறார். இன்றும் இக்கோவிலில் நிறைய பலிகள் கொடுக்கப்பட்டு வரப்படுகிறது. இதுபோன்ற போர்க்கருவிகள் சூழ குதிரையுடன் கூடிய நடுகல் தமிழகத்தில் எங்கும் இல்லை. தகவல் : திரு. பார்த்தி கத்திக்காரர் 


காசினாதன் பாஸ்கரன் சிட்டாச்சியார்



தொழில்முறை இந்திய கபடி விளையாட்டு வீரராவார். இவர் சர்வதேச விளையாட்டுகளில் இந்திய தேசிய ஆண்கள் கபடி அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். கபடி பயிற்சியாளராக வழிகாட்டுகிறார். இவர் தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். இவர் சர்வதேச அணிகள் மற்றும் கபடி போட்டிக் குழுக்களின் உரிமையாளர்களுக்கு தொழில்முறை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் இந்திய தேசிய ஆண்கள் கபடி அணியின் பயிற்சியாளராகவும், புரோ கபடி உரிமையாளரான தமிழ் தலைவாசின் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்.

இவர் ஒரு தீவிர விளையாட்டு ஆர்வலர் மற்றும் ஒரு பயிற்சியாளராக இருப்பதைத் தவிர, இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகிறார்.



கே.பாஸ்கரன், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சையில் உள்ள சூலியகோட்டையில் பிறந்த காசிநாதன் சிட்டாச்சியார் - கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் நான்காவது குழந்தையாகா ஜூன் 28, 1968 ஆண்டு பிறந்தார் . இவர் அம்மாப்பேட்டை சாலியமங்கலம் சுலியக்கோட்டை அரசுப் பள்ளியில் படித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பெங்களூர் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் சிறப்பு பயிற்சியாளராக பட்டம் பெற்றார்.

இவர் 12 வயதில் கபடி விளையாடத் தொடங்கினார். இவர் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியபோது புகழ் பெற்றார். இந்தியன் புரோ கபடி குழுவுக்கு பயிற்சியாளராகவும், 2016 கபடி உலகக் கோப்பையில் பயிற்சியாளராகவும் இணைந்ததிலிருந்து ஊடகங்களின் கவனத்தைப் பெற்றார். 

கே. பாஸ்கிரன் பி. பிரபா என்பவரை மணந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: மகன் பி. சூர்யா, ஒரு வட்டெறிதல் தடகள வீரர் மற்றும் இரண்டு மகள்கள் பி. நீதா மற்றும் பி. நீராஜா இருவரும் கூடைப்பந்து விளையாடுகிறார்கள்.

பாஸ்கரன் தனது பள்ளி நாட்களில் திரு. சுவாமிநாதன் மற்றும் திரு. சண்முகசுந்தரம் ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்டார். தமிழக கபடி வீரரும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணியாளருமான இராஜராஜேந்திரன் என்பவரால் கபடி விளையாடுவதற்கு இவர் ஈர்க்கப்பட்டார். குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற இவர் 1984-85ல் இரண்டாம் இடத்தையும் 1985-86ல் முதல் இடத்தையும் பிடித்தார். 1987 ஆம் ஆண்டில் இவருக்கு மதுரை பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டில் பணி நியமனம் வழங்கப்பட்டது. 1989-92 வரை, இவர் சென்னை ஐ.சி.எப்பிற்காக விளையாடினார். 1992-98 காலப்பகுதியில் இவர் ஒரு மதுரை மத்திய கலால் துறையில் காவல் ஆய்வாளராக பணி புரிந்தார். 2003-05 முதல் அவர் ஏர் இந்தியாவுக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடினார்.

2004 ஆம் ஆண்டில், பாஸ்கரன் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் ஒரு சிறப்பு பயிற்சியாளராக பட்டம் பெற்றார். 2009 ஆம் ஆண்டில் இளையோர் கபடிக் குழுவின் இந்திய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் சர்வதேச கவனத்திற்கு வந்த இவர் தாய்லாந்து தேசிய கபடி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் அவர் மலேசிய தேசிய கபடி அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவர் 2010 ஆசிய விளையாட்டுக்களுக்கான தயாரிப்பு மற்றும் தேர்வு செயல்முறைகளுடன் முக்கியமாக தொடர்புடையவர் ஆவார். 2014 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடைபெற்ற கடற்கரை ஆசிய விளையாட்டு 2014 க்கான இந்திய ஆண்கள் கபடி அணிக்கு வழிகாட்டினார். இந்த நிகழ்வில் அணி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.



புரோ கபடி போட்டிகள்

2014 ஆம் ஆண்டில் புரோ கபடி போடிகள் தொடங்கியது. கபடிக்கான விளையாட்டு நிகழ்வு இந்தியாவின் பல்வேறு கபடி உரிமையாளர்களிடையே விளையாடியது. தொடக்க நிகழ்வில் பிங்க் பாந்தர்ஸ் உரிமையை அதன் முதல் வெற்றிக்கு கே. பாஸ்கரன் வழிநடத்தினார். 2014 முதல் 2016 வரை பிங்க் பாந்தர்ஸ் பயிற்சியாளராக இருந்தார். இவர் 2016 முதல் புனேரி பால்டன்ஸ் உரிமையைப் பயிற்றுவிக்கத் தொடங்கினார். நான்காவது பருவத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். [3] [4] [5] புரோ கபடி 2017 இல் தமிழ் தலைவாசின் தலைமை பயிற்சியாளராக இருந்தார்.

புரோ கபடி கூட்டிணைவின் விசாக் வேர்ல்விண்ட்ஸின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார்.

சர்வதேச கபடி போட்டிகளில் இந்தியா மறுக்கமுடியாத வெற்றியை பெற்றுள்ளது. 2016 கபடி உலகக் கோப்பை பன்னிரெண்டு நாடுகளிடையே நடத்தப்பட்டது. இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக பாஸ்கரன் செயல்பட்டார். அந்த அணி இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றியாளாராக மாறியது.

சனி, 25 ஜனவரி, 2020

கோட்டூர் (திருக்கோட்டூர்)


திருத்துறைப்பூண்டி - மன்னார்குடிப் பேருந்து வழியில் கோட்டூர் உள்ளது. காவிரித் தென்கரைத் தலங்களுள் 111 ஆவது தலம் கோட்டூர் (திருக்கோட்டூர்) அருள்மிகு தேன்மொழிப்பாவை உடனுறை கொழுந்துநாதர். மரம்: வன்னி , குளம்: முள்ளியாறு . இறைவரின் திருப்பெயர்:- கொழுந்துநாதர். இச்செய்தி, ``கொந்துலாமலர் விரிபொழிற் கோட்டூர் நற்கொழுந்தினை`` என்னும் இக்கோயிலுக்குரிய திருஞானசம்பந்தரது தேவாரப் பகுதியால் விளங்குகின்றது. இறைவியாரின் திருப்பெயர்: தேன்மொழிப் பாவை.

தேவர்களும், குச்சர இருடிகளும் பூசித்துப் பேறு எய்தினர். இச்செய்திகள் இவ்வூர்த்தேவாரத்திலும் குறிப்பிடப் பெற்றுள்ளன.

கோட்டூரில் மேற்கிலுள்ளதே இப்பாடல்பெற்ற தலமாகும். இவ்வூருக்குக் கிழக்கில் ஒரு கோயில் இருக்கிறது. இது கீழ்க்கோட்டூர் மணியம்பலமாகும். அது கருவூர்த்தேவர் திருவிசைப்பாப்பெற்றது. இது திருஞானசம்பந்தப் பெருமானாரால் பாடப்பெற்றது. அவருடைய பதிகம் ஒன்று இருக்கின்றது.

இக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் சோழர்களுடையன. இவைகளுள் விளக்குத்தானம், விளக்குப்பணதானம், கோயிலுக்கு நிலதானம், முதலியவைபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்றில் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூரில் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன் என்ற ஒரு பெருமகனார் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இதில் சேக்கிழார் தம்பியாரது பெயர் வருதல் காண்க. திருத்தருப்பூண்டி மடாதிபதி திருமாளிகைப் பிச்சர் பெயர் காணப்படுகிறது.




இத்திருக்கோயிலில் பெயர் குறிப்பிடப்பெறாத 

பரகேசரி வர்மன் காலத்தது ஒன்று, 

முதலாம் இராஜராஜ சோழன் காலத்தது ஒன்று, 

முதற்குலோத்துங்கசோழன் காலத்தன நான்கு, 

இரண்டாம் இராஜாதி ராஜன் காலத்தன ஐந்து, 

மூன்றாங் குலோத்துங்கன் காலத்தன நான்கு, 

மூன்றாம் இராஜராஜன் காலத்தன நான்கு, 


ஆக சோழமன்னர்களின் கல்வெட்டுக்கள் பத்தொன்பதும், ஒருவயலில் நட்டுவைத்துள்ள தஞ்சை மராட்டிய மன்னருடைய கல்வெட்டு ஒன்றும், மற்றொரு வயலில் நட்டு வைத்துள்ள தளவாய் அனந்தராயர் சாஹேப் கல்வெட்டு ஒன்றும் , ஒரு தோப்பில் நட்டு வைத்துள்ள தஞ்சை இரகுநாத நாயக்கர் காலத்தது ஒன்றும், மற்றொரு தோப்பில் நட்டு வைக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றும் ஆக மொத்தத்தில் 23 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர், இரண்டாம் இராஜாதிராஜன் கல்வெட்டில், கொழுந்தாண்டார் என்றும் மூன்றாம் இராஜராஜதேவன் காலத்தில் மூலஸ்தானம் உடையார் என்றும், தஞ்சை மராட்டிய மன்னர் (மகாராஜா சாஹேப்) கல்வெட்டில் கொழுந்தீசுவர சுவாமி என்றும் கூறப்பெற்றுள்ளனர்.

முதலாம் இராஜராஜ சோழதேவர் காலத்தில் இவ்வூர், அருண்மொழித் தேவவளநாட்டு நென்மலிநாட்டிலுள்ள கோட்டூர் எனவும் முதல் குலோத்துங்கன் கல்வெட்டில் இராஜேந்திர சோழவள நாட்டுத் நென்மலிநாட்டிலுள்ள கோட்டூர் எனவும் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே அருண்மொழித்தேவ வளநாடு என்றும் பெயர் பெற்ற செய்தி புலனாகின்று.

மேலும் இக்கோயிலிலுள்ள முதற் குலோத்துங்க சோழ மன்னனது 27-ஆம் ஆண்டுக்கல்வெட்டு, இவ்வூர், அருண்மொழித் தேவவள நாட்டிற்கு உட்பட்டிருந்ததையும், அம்மன்னனது 50ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு இவ்வூர் இராஜேந்திர சோழ வளநாட்டிற்கு உட்பட்டிருந்ததையும் உணர்த்துவதால் இராஜேந்திர சோழ வளநாடு என்னும் பெயர் முதற் குலோத்துங்க சோழனது ஆட்சி யின் பிற்பகுதியில் ஏற்பட்டது என்பது உறுதியாகும். (இராஜேந்திர சோழன் என்பது முதற் குலோத்துங்கனுடைய பெயர்களுள் ஒன்றாகும்.)

மூன்றாங் குலோத்துங்க சோழதேவரின் இரண்டாம் ஆண்டில் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் பல்லவ அரையன் களப்பாளராயர் ஒரு நுந்தாவிளக்கினுக்குப் பணம் உதவி யுள்ளார். இரகுநாத நாயக்கர் பத்து வேலி நிலத்தைக் கொடுத்துள்ளார்.

இத்திருக்கோயிலில் திருஞானம் பெற்ற பிள்ளையாரை எழுந்தருளுவித்தவர் நாகமங்கலமுடையான் அம்பலங் கோயில் கொண்டவர் ஆவர். இச்செய்தி மூன்றாம் இராஜராஜசோழ தேவரின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் நிகழ்ந்ததாகும்.

இவ்வம்பலங் கோவில் கொண்டவர், இம்மன்னனது 18ஆம் ஆண்டில் இப்பிள்ளையார்க்குத் திருவமுது உள்ளிட்டவைகளுக்கு நிலம் அளித்துள்ளார். அதில் இப்பிள்ளையார், திருஞானம் பெற்ற ஆளுடைய பிள்ளையார் எனக்குறிக்கப் பெற்றுள்ளனர்.

இராஜேந்திரசோழ வளநாட்டு வெண்டாழை வேளிர்க் கூற்றத்துத் திருத்தருப்பூண்டியில், திருமாளிகைப் பிச்சர் என்ற மடபதியைப்பற்றி மூன்றாங் குலோத்துங்கசோழதேவரது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்பெற்றுள்ளது.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1913, page 52, 54; Inscription No. 443 - 465.)


கிபி 1800 - களிலேயே ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் (Tanjore Gazeeter, HemingWay-1906) கோட்டூர் ஶ்ரீ கொழுந்தாளை மாரியம்மனை தரிசிக்க.






திருப்பணி நன்கொடையாளர்கள் கள்ளர்களின் கனகம்பாடியார், தென்கொண்டார், மழவராயர்

புதன், 22 ஜனவரி, 2020

112 வயது வரை வாழ்ந்த வெங்கடாசலம் சிட்டாட்சியார்

பாபநாசம் அருகே 112 வயது வெங்கடாசலம் சிட்டாட்சியார் 18 மார்ச் 2015 ல் காலமானார்.

110 வயதுக்கும் மேல் வாழ்பவர்களைத்தான் Supercentenarians என அழைப்பார்கள். இவர்கள்குறித்தும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் UK ஆகிய நான்கு நாடுகளின் தகவல்களை இதற்காக எடுத்துக்கொண்டனர். 1968 முதல் 2006-ம் ஆண்டுக்கு இடையே வாழ்ந்த Supercentenarian-களை பட்டியலிட்டனர்.

1997-ம் ஆண்டில் 122 ஆண்டுகள் வரை வாழ்ந்த பிரெஞ்ச் பெண்ணான ஜீன் கால்மென்ட் என்பவர்தான் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்ந்தவர் எனக் கருதப்படுகிறார். நோய்த்தொற்றுகள் மற்றும் உடல்நலக்குறைபாடுகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதன்மூலம் முதியவர்களின் வாழ்நாளும் சராசரி வாழ்நாளை விடவும் அதிகமாகும். குறிப்பாக, வயதாகும் காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்க, தீர்வுகளைக் கண்டுபிடித்தால் முதியவர்களின் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த சாதனையில் கள்ளர் குடியில் பிறந்த தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே 112 வயது வெங்கடாசலம் சிட்டாட்சியார் ஒருவர்.

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் சூழியகோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் அப்பாவு சிட்டாச்சியார், இவரது மகன் வெங்கடாசலம் சிட்டாட்சியார்(112), இவர் விவசாய குடும்பத்தில் பிறந்து தனது 23 வது வயதில் ரூ.18 டிக்கெட் கட்டணத்தில் கப்பலில் சிங்கப்பூர் சென்று அங்கு 7 ஆண்டுகள் தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து தனது 30வது வயதில் சொந்த ஊருக்கு வந்து சொந்த ஊரில் வாழ்ந்து வந்த தனது மூத்த சகோதரியின் மகள் அலமேலு (90) என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர்கள் வழியில் 3 பேரன், 2 பேத்திகளும், அவர்கள் வழியில் 4 கொள்ளுப் பேரன் 2 கொள்ளுப் பேத்திகளும் உள்ளனர். இவர் தனது இளமை காலத்தில் சுபாஷ்சந்திரபோஸ் கொள்கைகையில் பற்று கொண்டவராக வாழ்ந்து வந்தார்.

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

"சொல்வேந்தன்" கம்பம் செல்வேந்திரன் தேவர்



தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் கம்பம் செல்வேந்திரன். பிரமலை கள்ளரில் பூசலபுரம் கோயில் கும்பிடுபவர்.

1984-ல் அதிமுக சார்பாக போட்டியிட்டு பெரியகுளம் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சியிலும் "மாநில கொள்கை பரப்பு செயலாளராக" இருந்தவர். திமுகவில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்தவர்.

தன்னை அதிமுகவில் இருந்து விலக்க காரணமாக இருந்த "சேடபட்டி முத்தையா" அரசியல் அனாதையாக இருந்த போது கலைஞரிடம் முறையிட்டு திமுகவில் சேர்த்த நல் உள்ளம் கொண்டவர்.

"நீட் தேர்வு" பிரச்சனையால் அனிதா இறந்த போது பாஜ தமிழிசை சௌந்திரராஜன் +2வில் வெறும் 800 மார்க் தான் எடுத்தார். கலைஞர் அவர்கள் முதல்வர் கோட்டாவில் தமிழிசைக்கு மருத்துவ சீட் கொடுத்தார் என்ற உண்மையை உடைத்தார்.

அரசியல் உலகம் செல்லாமல் திரை உலகம் சென்று இருந்தால் "வைரமுத்துவிற்கு" இணையாக உயரும் அளவிற்கு இலக்கிய அறிவு கொண்டவர்.

2006-ல் தேர்தலில் கலைஞர் மற்றும் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது இவர் வென்றால் "கல்வி அமைச்சர்" என்று வெளிப்படையாகவே கூறினார்கள்.

ஆனால் சாதி சார்பற்ற இவரை 1986-ல் கள்ளர் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் நடந்த கலவரத்தை மையபடுத்தி இவரை 1800 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற செய்தார்கள்.

ஒரு வேளை அன்று இவர் வெற்றி பெற்று இருந்தால் எங்கள் ஏரியாவில் புதிய பள்ளி மற்றும் கல்லூரி தோன்றி இருக்கும்.

அப்படி இருந்தும் 2006-ல் கிடைத்த "டெல்லி சிறப்பு பிரதிநிதியை" வைத்து எங்கள் ஏரியாவில் சாதி பார்க்காமல் பல நல்ல காரியங்கள் செய்தார்.

தற்போது திமுகவில் உயர் மட்ட குழு உறுப்பினராக உள்ளார்.

அடுத்த ராஜ்யசபா தேர்தலில் இவருக்கு திமுக ராஜ்யசபா எம்பி வழங்கினால் பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டின் சிறந்த குரல் ஒன்று ஒலிக்கும்.

அன்புடன்: கூடலூர் செந்தில் தேவர்

சனி, 18 ஜனவரி, 2020

கட்டபொம்மன் என்னும் கொள்ளைக்காரன் - Kattaboman ennum kollaikaran என்ற நூல்

வீரபாண்டிய கட்டபொம்மனை “கொள்ளைக்காரன்” என்று பழி சுமத்துகிறார்கள்”, என வேதனைப்படுகிறார் எழுத்தாளர் வே. மாணிக்கம் என்று பிபிசி தமிழ் செய்தித்தாளில் (16 அக்டோபர் 2023) வந்துள்ளது. 

தமிழ்வாணன் செட்டியார் எழுதியது கட்டபொம்மன் என்னும் கொள்ளைக்காரன் நூல், இது எதற்க்காக எழுதினார் என்று அதில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் இப்பொழுது சாதாரணமாக பொதுவெளியில் கிடைக்கின்றன. இது நீதிமன்றத்தின் மூலமாக அல்லது தமிழக அரசோ தடை செய்ததாக தெரியவில்லை.  

கட்டபொம்மன் தப்பியதை அறிந்த பானர்மேன், அவரை மிக பெரிய தேசத் துரோகியாக சித்தரித்து எல்லா பாளையக்காரர்களுக்கும், 'கட்டபொம்மன் உடன் உள்ள ஊமத்துரை, தானாதிபதி மற்றும் அவனிடம் உள்ளவர்களுக்கு அடைக்கலமோ, உதவியோ கொடுக்க கூடாது. மேலும் கட்டபொம்மனை பிடிக்க பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செய்ய வேண்டும். அதற்கு தக்க சன்மானம் வழங்கப்படும். மீறினால் அடைக்கலம் கொடுத்த பாளையக்காரரும், அவர் பாளையமும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகும்,' என்று எழுதினான்.

எட்டப்பன் செயலும் தப்பிய கட்டபொம்மனும், மற்றவர்களும், கோல்வார்பட்டியில் உள்ள அரண்மனையில் தங்கியுள்ளனர் என்ற செய்தியை அறிந்த எட்டப்பன், பானர்மேனிடம் தனக்கு சில ஆங்கிலேய சிப்பாய்களின் உதவியை வேண்டினார். பானர்மேனும் எட்டப்பனுடன் சிப்பாய்களை அனுப்பினார்.

அவர்கள் துணையுடன் கோல்வார்பட்டி கோட்டையை எட்டப்பன் தாக்க, தானாதிபதி மட்டும் பிடிபட மற்றவர்கள் தப்பி சென்றனர். தானாதிபதி கைதை எட்டப்பன் பானர்மேனுக்கு தெரிவிக்க, பானர்மேன் விருப்பப்படி நாகலாபுரம் கடை வீதிக்கு தெற்கில் உள்ள கணேசர் கோவில் அருகில் உள்ள ஒரு வேப்பமரத்தில் துாக்கிலிட்டான். தானாதிபதியின் தலையை துண்டித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் மக்கள் பார்வை படும்படி எட்டப்பன் வைத்தார்.

தொண்டைமானின் முன்னோர்கள், கட்டபொம்மனின் முன்னோர்களுக்கும் ஆங்கிலயேர்களுக்கும் பலமுறை மத்தியஸ்தர்களாக இருந்து பிரச்னையை தீர்த்து வைத்துள்ளதாக பல வரலாற்று தரவுகள் உள்ளது. அந்த அடிப்படையில் பயமின்றி திருக்களம்பூர் காட்டுப்பகுதிக்கு சென்றதாகவும், ஆனால் அவர் துரோகம் செய்துவிட்டதாகவும் ஊமைத்துரை சரபோஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் பிரிட்டீஸாருக்கு தொண்டைமான் எழுதிய கடிதத்தில், கஷ்டப்பட்டு தேடிக்கண்டு பிடித்ததாகவே சொல்கிறார். 

தொண்டைமான் ஆங்கிலேயருக்கு நண்பனாக இர்ருந்தார். அந்த  ஆங்கிலேயரில் WILLIAM HOWARD RUSSELL என்ற ஒருவன் தொண்டைமான் பற்றி இழிவாக எழுதியும், கட்டபொம்மனை உயர்வாக எழுதியுள்ளதாக குறிப்பு உள்ளது.  எட்வர்டு டைரி குறிப்பை வைத்து WILLIAM HOWARD RUSSELL தனது சொந்த கற்பனையில் எழுதியது. போர் பற்றிய தனது கட்டுரையில், பொய் கதைகள் எழுதி, அவரது கதையை மேம்படுத்த முயற்சிப்பதற்காக , WILLIAM HOWARD RUSSELL மீது குற்றச்சாட்டு உள்ளது.

அந்த புத்தகத்தில் பல ஆய்வாளர்கள் பெயர் குறிப்பிட்டு, அவர்கள் எழுதியதை குறிப்பு கொண்டு எழுதியுள்ளார். கள்ளர்கள் பற்றி அவர் ((called “ Colleries" by Orme). போன்றவர்கள் எழுதியதை எல்லாம் படித்து எழுதிய ஒரு கதை.



கட்டபொம்மன் சொந்த மகனை வெள்ளக்காரன் கிட்ட பணையாக கொடுத்து 








தமிழ்வாணன் செட்டியார் எழுதியது


































































































































பல்லவராயர் வரலாறு - பல்லவராய மன்னர்கள் - பல்லவராயன்

பல்லவராயர்கள் புதுக்கோட்டை மாவட்டம்   குளத்தூர், திருமயம்,   பெருங்களூர்  மற்றும்  வைத்தூர்  ஆகிய ஊர்களை தலைமையாக கொண்டு புதுக்கோட்டையின...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்