கள்ளர்களை ஆங்கிலேயர்கள், சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந்த குற்றப் பரம்பரைச் சட்டத்தில் மற்ற பகுதி கள்ளர்களுக்கு விலக்கு அளித்து, அதில் பிறமலை கள்ளர், தஞ்சை பகுதியில் உள்ள ஈசநாட்டு கள்ளர்களில் சூரியூர், கந்தர்வகோட்டை பகுதி கள்ளர்களை மட்டும் கொண்டுவந்தனர்.
கள்ளர்கள் குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் கொண்டுவந்த அந்த காலக்கட்டத்தில் கள்ளர் மரபினர் ஜமீன்தார்களாவும், நில உடைமையாளர்களாகவும் இருந்தனர்.
சோழமண்டலத்தில் பதிமூன்று ஜமீன்தார்கலானா
பாப்பா நாடு ஜமீன் விஜயதேவர்,
கந்தர்வகோட்டை ஜமீன் அச்சுதப்பண்டாரத்தார்,
பாளையவனம் ஜமீன் வணங்கமுடிப் பண்டாரத்தார்,
சிங்கவனம் ஜமீன் மெய்க்கன் கோபாலர்,
புனல்வாசல் ஜமீன் மழவராய பண்டாரத்தார்,
நெடுவாசல் ஜமீன் பன்றிகொண்டார்,
பாதரங்கோட்டை ஜமீன் சிங்கப்புலியார்,
கல்லாகோட்டை ஜமீன் சிங்கப்புலியார்,
சில்லத்தூர் ஜமீன் பணிபூண்டார்,
மதுக்கூர் ஜமீன் கோபாலர்,
சேந்தங்குடி ஜமீன் வணங்காமுடி வகுவடையாரும் கள்ளர் மரபினரே,
பூண்டி வாண்டையார்,
உக்கடை தேவர்,
சாவடி நாயக்கர்,
செங்கிப்பட்டி மேற்க்கொண்டார்,
சீராளூர் நாட்டாழ்வார்,
நாஞ்சிக்கோட்டை மண்ணையார்,
அரித்துவாரமங்கலம் ராஜாளியார்,
புத்தூர் பாண்டியர்,
காங்கேயம்பட்டி காங்கேயர் போன்ற கள்ளர் மரபை சேர்ந்த பெரும் ஆயிரம் வேலிக்கு மேல் உள்ள நில உடைமையாளர்களும் இருந்தனர்.
தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னர் ஆட்சியும், பல்லவராயர், காடுவெட்டியார், கூழியார், கடாரதலைவர், காடவராயர் போன்ற கள்ளர் மரபை சேர்ந்த பெரும் நில உடைமையாளர்களும் இருந்தனர்.
சிவகங்கை பகுதியில் கள்ளர் மரபை சேர்ந்த பட்டமங்கல தொண்டைமான்களும், அம்பலக்காரர்களும் பெரும் நில உடைமையாளர்களும் இருந்தனர்.
மதுரை பகுதியில் கள்ளர் மரபை சேர்ந்த அம்பலக்காரர்களும், உசிலம்பட்டி தேவர்களும் பெரும் நில உடைமையாளர்களும் இருந்தனர். ஆனால் உசிலம்பட்டி தேவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் மதுரை காவல் உரிமையில் பல மோதல்கள் தொடர்ந்தன. அங்கிலேயர்களுக்கு உப்பு வணிகத்தில் தொல்லையாக இருந்த உப்பு குறவர்கள், காவல் பணியில் தொல்லையாக இருந்த பிறமலை கள்ளர்கள் மேல் குற்றப் பரம்பரைச் சட்டத்தினை கொண்டுவந்தனர்.
பிறமலை கள்ளர்கள் காவல் உரிமை 16 ஆம் நூற்றாண்டில் திருமலை நாயகக்கர் காலத்திலேயே செப்புப்பட்டயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1) கள்ளர்கள் வாழும் பகுதிகள்
குளித்தலை (குறைவாக),
திருச்சிராப்பள்ளி (சராசரியாக)
திருவெறும்பூர் (அதிகமாக)
லால்குடி (அதிகமாக)
முசிறி (சராசரியாக)
மணப்பாறை (குறைவாக)
ஸ்ரீரங்கம் (குறைவாக)
மண்ணச்சநல்லூர் (குறைவாக)
தஞ்சாவூர் (அதிகமாக)
திருவையாறு (அதிகமாக)
ஒரத்தநாடு (அதிகமாக)
பட்டுக்கோட்டை (சராசரியாக)
பேராவூரணி (குறைவாக)
கும்பகோணம் (குறைவாக)
பாபநாசம் (குறைவாக)
மன்னார்குடி (அதிகமாக)
திருவாரூர் (சராசரியாக)
நன்னிலம் (குறைவாக)
புதுக்கோட்டை (அதிகமாக)
கந்தர்வக்கோட்டை (அதிகமாக)
விராலிமலை (அதிகமாக)
திருமயம் (அதிகமாக)
ஆலங்குடி (சராசரியாக)
அறந்தாங்கி (சராசரியாக)
சிவகங்கை (அதிகமாக)
காரைக்குடி (சராசரியாக)
திருப்பத்தூர் (குறைவாக)
மானாமதுரை (குறைவாக)
மேலூர் (அதிகமாக)
உசிலம்பட்டி(அதிகமாக)
மதுரை (சராசரியாக)
சோழவந்தான் (சராசரியாக)
திருப்பரங்குன்றம் (சராசரியாக)
திருமங்கலம் (சராசரியாக)
கம்பம் உசிலம்பட்டி(அதிகமாக)
ஆண்டிபட்டி (சராசரியாக)
பெரியகுளம் (சராசரியாக)
போடிநாயக்கனூர் (சராசரியாக)
திருச்செந்தூர் (குறைவாக)
ஸ்ரீவைகுண்டம் (குறைவாக)
திண்டுக்கல் (சராசரியாக)
பழனி (குறைவாக)
ஆத்தூர் (குறைவாக)


