ஆவூர் பசுபதீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். கோச்செங்கட் சோழன் திருப்பணி - மாடக் கோயில். சங்கப்புலவர்கள் ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் முதலிய சான்றோர்களைத் தந்த ஊர். கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது. இத் தலத்தின் கல்வெட்டுச் செய்தியில் "நித்தவிநோத வளநாட்டைச் சேர்ந்த ஆவூர்க் கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார் " என்று இறைவன் குறிக்கப்படுகிறார். இங்கு கள்ளர் மரபை சேர்ந்த அறங்காவலர் வி. ராமையா கொண்ணமுண்டார் இருக்கிறார்