புதன், 9 நவம்பர், 2022

முன்னாள் கொறடா துரை. கோவிந்தராஜன் காளிங்கராயர்

 



தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தைச் சேர்ந்த தமிழக அரசின் முன்னாள் கொறடா துரை. கோவிந்தராஜன்  காளிங்கராயர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்திலுள்ள வடக்கூரில் 1937 ஆம் ஆண்டில் பிறந்தார்.  திமுக உறுப்பினராக இருந்த இவர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, அக்கட்சியில் இணைந்த முக்கியமான நிர்வாகிகளில் இவரும் ஒருவர். இதையடுத்து இவர் 1977 ஆம் ஆண்டில் திருவோணம் தொகுதியிலும், 1984 ஆம் ஆண்டு தேர்தலில் திருவையாறு தொகுதியிலும் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் கொறடாவாக இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமமுகவில் இணைந்த இவர் அக்கட்சியின் விவசாய பிரிவு மாநிலச் செயலராகப் பொறுப்பு வகித்து வந்தார்.  இவரது மனைவி மீனாட்சி. இவருக்கு மகன்கள் துரை. கோ. கருணாநிதி, துரை. கோ. பாண்டியன், மகள் திராவிட னமணி ஆகியோர் உள்ளனர்.