திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் இருவா், தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா் ஆகியோா், தேசிய அளவிலான கபடி போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ளனா்.
இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில், தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு 2020 கபடி போட்டிகள் ஜனவரி 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அஸ்ஸாம் மாநிலம் ஜ ரூ ஜா ஜெய் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில், நாடு முழுவதுமிருந்து அனைத்து மாநில வீரா் வீராங்கனைகள் பங்கேற்தின்றனா். கேலோ இந்தியா தேசிய போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு மாநில சிறுவா், சிறுமியா் அணிகளுக்கான தோ்வு கடந்த அக்டோபரில் சென்னை பெரியமேடு ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் 600 போ் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு மாநில 17 வயதிற்குட்பட்ட சிறுமியா் அணிக்கு, திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவிகளான கட்டக்குடி கிராமத்தை சோ்ந்த எஸ். சௌமியா, எஸ். அட்சயா ஆகிய இருவரும் தோ்வு பெற்று உள்ளனா்.
திருவாரூர் மாவட்டம்
வடுவூர் கள்ளர் நாடு, கட்டக்குட்டியை சேர்ந்த திரு. சிவக்குமார் திருவீழ்ச்சியார் , கண்ணகி இவர்களின் மகள் வீர திருமகள் அட்சயா திருவீழ்ச்சியார் ஆவார்.
வாழ்த்துக்கள்
"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
▼