வியாழன், 29 மார்ச், 2018

கருமாணிக்கம் ரா. இராமசாமி அம்பலம்




காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவரும், காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருமாணிக்க தொண்டைமானின் வழிவந்த கே.ஆர். ராமசாமி அம்பலம்

க. ரா. இராமசாமி (ஆங்கிலம்: K. R. Ramasamy) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், மற்றும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 

இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, தொடர்ச்சியாக ஐந்துமுறை  இந்திய தேசிய காங்கிரசு மற்றும் த.மா.கா கட்சிகளின் சார்பாக திருவாடாணை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1989, 1991, 1996, 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2016 ஆவது ஆண்டில் நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.




இவர் தமிழ்நாடு பொது கணக்குக்குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவரது தந்தை கரியமாணிக்கம் அம்பலம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற இவர் காங்கிரசு கட்சியின் சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கே.ஆர். ராமசாமி 5 முறை திருவாடானை தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்த திருவாடானையை 2011 தேர்தலில் திமுக கைப்பற்றியது. இந்த தேர்தலில் அதிமுக கைப்பற்றி விட்டது.

கடந்த 2011 தேர்தலிலேயே காரைக்குடிக்கு மாறி விட்டார் ராமசாமி. அத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சித. சோழன் பழனிச்சாமியிடம் தோல்வியுற்றார். ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோவை வீழ்த்தி எம்.எல்.ஏவாகி விட்டார்.

மூத்த தலைவர் என்ற முறையிலும், காங்கிரஸ் தலைவர் முயற்சிகள் நடக்கிறது.