புதன், 19 டிசம்பர், 2018

பொ. ஆ 1674–1710 இல் கள்ளர் நாடு ஆறாவயல் - மாவீரர் செம்பொன்மாரி ஆறாலதேவன்


ஒவ்வொரு ஊருக்கும் பெயர்க்காரணம் இருக்கும். கள்ளர் நாடு ஆறாவயலுக்கும் இருக்கிறது.


ஆற்றங் கரையில் 
உள்ள கருப்பர்
ஆற்றங்கரைக் கருப்பர்!
ஆலமரத்தடியில்
உள்ள கருப்பர்
ஆலடிக் கருப்பர்!

ஆற்றங் கரையில்
ஆலமரத்தடியில்
உள்ள கருப்பர்
ஆறாலங் கருப்பர்!


தேனாற்றங் கரையில் ஆலடியில் இருந்த ஆறாலங் கருப்பர் கோயில் இப்போது மராபதிக் கண்மாய்க் கரையில் உள்ளது.

ஆறாலங் கருப்பரை குலதெய்வமாகக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர் செம்பொன்மாரி ஆறால தேவன்!

மன்னர் கிழவன் சேதுபதியின் தளபதிகளில் ஒருவரான ஆறாலதேவன் திருமயம், கீழாநிலை சோனார் கோட்டைகளின் பொறுப்பாளராகப் பணியாற்றியவர்.

ஆறால தேவனின் வீரமரணத்திற்குப் பிறகு உருவாக்கப் பட்டதே ஆறாவயல் கிராமம். ஆறாவயலை ஆராவயல் என்று எழுதுவது தவறு.

தமிழத்தில் மற்ற கிராமங்களில் கேள்விப்பட்டிராத வீட்டுப் பொங்கல் மரபு, நான் பிறந்த ஆறாவயலில், மேலவீட்டாரிடம் உண்டு. இது பதினோரு தலைமுறைகளாகத் தொடரரும் மரபு.

ஆறாவயலில் மேல வீடுகள் (மேற்கு)
கீழவீடுகள் (கிழக்கு)
வைரம் வீடுகள், மற்றும்
கோனார் வீடுகள் (பூசாரிகள்)
என நான்கு கரைகள் உண்டு.


பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தளபதி ஆறால தேவனுக்கு (குலதெய்வம் :ஆற்று +ஆலங்+கருப்பர்), மூன்று மனைவியர்.

முதல் மனைவி செல்லாயி வயிற்றுச் சந்ததிகளே மேல வீட்டார். மேல விடுகளில் இப்போது நாற்பத்தி ஏழு புள்ளிகள்.

மற்ற கிராமங்களில் தை முதல் நாள் காலையில் சூரியனுக்கே வீட்டுப் பொங்கல் வைக்கிறார்கள்.

ஆறாவயலில் மேலவீட்டார் தை முதல்நாள் முன்னிரவில் செல்லாயி அம்மனுக்கு வீட்டுப் பொங்கல் வைக்கிறார்கள்.

நாற்பத்தி ஆறு புள்ளிகளிடம் பெற்ற அரிசியை கோயில்வீட்டு வாசல் அடுப்பில் ஏற்றிய ஒரே பானையில் போட்டு நாற்பத்தி ஆறு புள்ளிகளிடம் பெற்ற வரியில் வாங்கிய ஏலம் சுக்கு வெல்லம் இதர பொருட்களைப் பயன்படுத்தி பொங்கல் வைத்து இறக்கி செல்லாயிக்குப் படைத்து அத்தனை குடும்பத்தினரும் அங்கேயே சாப்பிட்டு, பாத்திரத்திலும் வீட்டுக்கு கொண்டு செல்வர்.

செல்லாயி கோயில் திருநீறும் குங்குமமும் பிரசாதங்களும் மேல வீட்டாருக்கு மட்டுமே. மணமான பிறந்த மக்கள் ஆயுள் முழுக்க கணவருடன் வந்து செல்லாயி பிரசாதம் பெறஉரிமை உடையோர்.


மேல வீடுகளில் யார் வீட்டிலாவது மரணம் ஏற்பட்டால் அந்த உயிர் கைலாயமோ, வைகுண்டமோ இந்திரலோகமோ செல்வதில்லை. அந்த உயிர் அப்பத்தாள் செல்லாயியுடன் சங்கமிக்கிறது.

ஆறாவயல் மேல வீட்டார் வீட்டுப் பொங்கலை தங்கள் மூதாதையருக்கே வைக்கின்றனர். அதனால் தான் செல்லாயி கோயில் வீட்டில் சிலையேதும் வைக்கவில்லை. தீப சோதியே செல்லாயி.

நிலம் நீர் தீ வளி விசும்பிற்கு நன்றி பாராட்டும் பொருட்டும், கால்நடைகளுக்கு ஊட்டும் பொருட்டும் வேளாண் கருவிகளுக்கு படைக்கும் பொருட்டும் மற்ற கிராமங்களைப் போன்றே ஆறாவயலிலும் மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறோம்.

கிழக்கு நோக்கிய செல்லாயி கோயில்வீட்டு வாசலில் தெற்கு வடக்காக சிறிய வாய்க்காலென, நாற்பதடி நீளத்தில் வெட்டிய அடுப்பில் வெண் பொங்கலுக்கு ஒன்று சர்க்கரைப் பொங்கலுக்கு ஒன்றென வீட்டுக்கு இரண்டு கோலப் பானைகளை ஏற்றுவர். பால் பொங்கியதும் சங்கின் ஓலி முழங்கும். பொங்கல் அமைந்ததும் இறக்கிமூன்றடுக்குத் திட்டிச் சதுக்கத்தில் வைப்பர்.

முனியய்யா கோயில்

மாவிலையால் தெளிக்கும் மந்திரநீர் மரக்காலோடும், திட்டிப் பாடலோடும், உரத்த குரலோன் முன்நடக்க, தீச் சட்டியோடும் மணியோசையோடும் வழியோர் ஒட்டி நடக்க பூண்பூட்டிய தலைக்கோல்களை உயர்த்தியபடி ஆண்கள் பெண்கள் சிறார்கள் பின்தொடர திட்டியுலாத் தொடங்கும்.


உயர்திரு. ஆறாவயல் பெரியய்யா ( Aaravayal Periyaiah )

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்