திங்கள், 16 ஆகஸ்ட், 2021

அரசு காவக்காரர்

 



கிபி பதினேழாம் நூற்றாண்டில் பீஜப்பூர்்சுல்தான்கள் தமிழ் நாடு மீது படையெடுத்து வந்தனர். அவர்கள் மதுரையை தாக்க முற்பட்டனர் இதனை அறிந்த திருமலை நாயக்கர் படை உதவிக்காக அவ்விடத்திய ராஜாக்கள்,  ராமநாதபுர மன்னர்,  சிவகங்கை பகுதியை சேர்ந்த ஒரு ஆட்சியாளர் மற்றும் பாளையக்காரர்களின் உதவியை நாடினார்.

இவர்கள் தவிர தன்னரசு நாடு, மேல் நாடு(பிறமலை கள்ளர் நாடு), கீழ் நாடு , வெள்ளூர் நாடு மற்றும் நாலுக்கோட்டை நாட்டு கள்ளர்களின் உதவியையும் நாடினார். இந்த கள்ளர்கள் "மதுரை அரசிற்கு காவக்காரர் என்று பெயர்" என குறிப்பிடப்பட்டுள்ளது

அதே போல் கிபி 1772 ல் ஜெனரல் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலேய படை சிவகங்கையை தாக்கியது. இந்த போரில் மன்னர் முத்துவடுகநாதர் வஞ்சகமாக கொல்லப்பட்டார். முத்துவடுகநாதருக்காக படை உதவி அளித்த கள்ளர் நாடுகளை பற்றி குறிப்பிடும் போது "கள்ளற் சிலகுடியுங் காவலவ ராரும்" என கள்ளர் இனத்தை காவல்காரர்களாக குறிப்பிட்டுள்ளனர்.






ஆதாரம்:
1)கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம் புத்தகம் பக்கம் எண் 33

2) சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும் புத்தகம் பக்கம் எண் 122