திங்கள், 16 ஆகஸ்ட், 2021

மாவீரர் நாராயணன் வாணாதிராயர்

 


INA_Guerrilla_Regiment


நேதாஜியின் முதன்மை பிரிவான S.S Groupக்கிற்கு அடுத்தபடியாக ஐஎன்ஏவின் கொரில்லா ரெஜிமெண்ட் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இயற்கையாகவே நல்ல உடல் அமைப்பும்,அறிவுத்திறனும் கொண்ட கள்ளர்கள், சிறுவயதிலேயே களரி,அடிமுறை,ஆயுதப்பயிற்சி எடுப்பவர்கள். மேலும் ஆங்கில அரசுக்கெதிராக 100 வருடங்களாக தொடர்ந்து நேர்முகமாகவும், கொரில்லா தாக்குதல் மூலமாகவும் போர் செய்திருந்திருந்தனர். ஆகையால் அவர்களுக்கு கொரில்லா ரெஜிமெண்ட்டில் சேவை செய்வது மிகவும் எளிமாக அறியப்பட்டது.

கொரில்லா தாக்குதல் என்பது எதிரிகளின் படை மற்றும் ஆயுதக்கிடங்குகளை திட்டம்தீட்டி, எதிரிகள் கண் இமைக்கும் நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தி, எதிரிகள நிலைகொலையச் செய்து வெற்றி பெறுவதாகவும்.

பெயர்                  : நாராயணன் வாணாதிராயர்
ஊர்                      : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அத்திவெட்டி,
பியரிங் நம்பர்      : 63543
ரெஜிமெண்ட்       : 7th கொரில்லா ரெஜிமெண்ட்

பழந்தமிழ் வாணர் மரபில் உதித்த நாரயணன் வாணாதிரியாருக்கு பல மிஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து வந்துள்ளார். சுமார் இரண்டு வருடங்களாக பல்வேறு கொரில்லா தாக்குதலை நடத்தி, பிரிட்டிஸ் இராணுவத்தை அச்சுருத்தி வந்த வாணாதிராயர்.

கிபி1945ல் பிரிட்டிஸ் படையை  கொரில்லா தாக்குதல் நடத்திவிட்டு வரும் வழியில் பிரிட்டிஸ் அரசின் துப்பாக்கி சூட்டில் மார்பில் குண்டடிபட்டு உயிரிழந்தார்.